=============
ஓர் குட்டிக் கதை
உழைப்பின் அருமை
===========
ஒரு செல்வந்தர் தனது மகனுக்கு தொழில் மற்றும் படிப்பினை பெற்று கொள்வதற்காக
தனது நண்பரின் நிறுவனம் ஒன்றில் பணிசெய்ய தனது மகனை 6 மாத காலத்திற்கு அனுப்பிவைத்தாா்
அவர் மகனோ எந்த வேலையும் செய்ய வில்லை ஆனாலும் தனது நண்பா் மகன் என்பதால் அவரும் கண்டுகொள்ளாமல் 6 மாதம் கடந்தவுடன் ஒரு தங்க நாணயத்தை கூலியாக கொடுத்து அனுப்பினார்
அந்த நாணயத்தை தனது அப்பாவிடம் மகன் கொண்டு வந்து கொடுத்தான் அதனை வாங்கிய அப்பா அதனை தூக்கி தூர எறிந்தாா். அதை கண்ட மகனோ ஒன்றும் கண்டு கொள்ளாமல் தனது படுக்கை அறைக்கு சென்று விட்டான்
மீண்டும் இன்னொரு தெரிந்த நண்பரிடம் மூன்று மாதத்திற்கு வேலைக்கு அனுப்பினார் அங்கும் இப்படித்தான் எந்த வேலையும் செய்யாமல் மூன்று மாதம் கடத்தினான்
ஆனாலும்தனது நண்பர் மகன் என்பதால் அவரும் இரண்டு தங்க நாணயங்கள் கொடுத்து அனுப்பினார் அதையும் அப்பாவிடமே கொண்டு வந்து கொடுத்தான்.
முன்பு போலவே அந்த இரண்டு நாணயங்களையும் தூக்கி தூர எறிந்தார் அப்போதும் கண்டு கொள்ளாமல் மாடிக்கு சென்று விட்டான்
To Get Daily Story In What's App contact +917904957814
சிறிது காலம் கழித்து அறிமுகம் இல்லாத ஒருவர் இடத்தில் வேலைக்கு சேர்த்து விட்டார் அங்கு மூன்று மாதம் வேலை செய்து விட்டு ஒன்றரை தங்க நாணயத்தை ஊதியமாக கொண்டு வந்து கொடுத்தான்.
முன்புபோலவே அதையும் தூர தூக்கி எறிந்தார் ஆனால் இம் முறை அவனுக்கு மிக பெரிய அளவில் கோபம் வந்தது விட்டது
இது என்ன தெரியுமா??
எனது வேர்வை??
எனது உழைப்பு ???
மூன்று
மாதம் தூங்கமால் உழைத்து இருக்கிறேன் அதற்கான கூலி !!!!
இவளது அலச்சியமாக தூக்கி எறிந்து விட்டாய்நீ எல்லாம் ஒரு மனிதனா???
ஈசி சேரில் படுத்து கிடக்கும் உனக்கு உழைப்பின் வலிமை தெரிய விலைதெரிந்தால் இதை எறிந்து இருப்பாயா என்று கோபமாக கத்தினான்.
அபொழுது
அப்பா சொன்னார் இதைத்தான் உன்னிடம் நான் எதிர்பார்த்தேன் முன்பு நீ உழைக்காமல் கொண்டு வந்து கொடுத்த தங்க நாணயத்தை நான் தூர எறிந்த பொழுது உனக்கு கோபம் வரவில்லை .
காரணம்
அப்போது உனக்கு உழைப்பின் அருமை தெரிய வில்லை இப்போது நீ உழைத்து கொண்டு வந்த இந்த தங்க நாணயத்தை நான் எறிந்த பொழுது உனக்கு இவளது கோபம் வருகிறது.
காரணம்
நீ கஷ்ட்ட பட்டு உழைத்து பெற்று வந்ததால் உழைப்பின் வலிமை உனக்கு தெரிகிறது இதைத்தான் நான் உன்னிடம் எதிர் பார்த்தேன் என்று சொல்லி மகனையும் அந்த ஒன்றரை பவுன் தங்க நாணயத்தையும் மாறி மாறி முத்தம் இட்டார்
உழைக்காமல் எது கிடைத்தாலும் நிலைக்காது அதனின் அருமை தெரியாது.உழைத்து பெற்ற பொருளை ஒருபோதும் மனம் இழக்க நினைக்காது
தகப்பனாக இருந்தாலும் மனம் தட்டி கேட்க்க தயங்காது
என் அன்பு வாசகரே,
உங்கள் வாழ்வில் கடின உழைப்பு இருக்கும் போது உங்களைறியாமல் சந்தோஷமும், சமாதானமும் உங்கள் மனதிற்கு சாதாரணமாக வரும். நீங்கள் சரீரத்தில் எந்த நோய்களும் இல்லாமல் இருப்பீா்கள்.
தன்வேலையில் அசதியாயிருப்பவன் அழிம்பனுக்குச் சகோதரன்.நீதிமொழிகள் 18:9
தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.
நீதிமொழிகள் 22 :29
புத்தியுள்ள வேலைக்காரன் இலச்சசையுண்டாக்குகிற புத்திரனை ஆண்டு, சகோதரருக்குள்ள சுதந்திரத்தில் பங்கடைவான்.
நீதிமொழிகள் 17 :21
கடினமான உழைப்பு செல்வத்தை உங்களுக்குப் பெற்று தரும். எனவே சோம்பற்கையால் வேலை செய்யாமல் சுறுசுறுப்புடனும், முழு உத்வேகத்தோடும் வேலை செய்யுங்கள்.
உழைப்பின் அருமையை உங்கள் வாழ்விலும், எதிர்கால வாழ்விலும் உணர்ந்து அனுபவிப்பீா்கள்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் !!!
==============
ஓர் குட்டிக் கதை
தெளிந்த புத்தி
==============
ஒரு காட்டில் சிங்கம் ஒற்று வாழ்ந்து வந்தது. அது மிகவும் பலசாலியானதால் கர்வத்துடனும் வாழ்ந்து வந்தது. அது கண்ணில் தென்படும் அனைத்து மிருகங்களையும் உணவுக்காகவும் விளையாட்டுக்காகவும் வேட்டையாடி விடுகிறது.
காட்டில் உள்ள எல்லா மிருகங்களும் மிகவும் கவலை அடைந்ததது. அனைத்தும் சேர்ந்து ஒரு கூட்டம் போட்டு சிங்கத்திடம் பேசவேண்டும் என் தீர்மானம் போட்டது.
சிங்கத்திடம் எல்லா மிருகங்களும் சென்றன. நீங்கள் எல்லா மிருகங்களையும் கொல்வது சரியான நியதி கிடையாது.
எனவே நங்கள் ஒரு முடிவெடுத்து உள்ளோம். நீங்கள் யாரையும் இனி வேட்டையாடக்கூடாது, நாங்களே தினமும் ஒருவரை அனுப்பி வைப்போம் என் கூறியது.
சிங்கமும் சரி என் கூறியது.
தினமும் ஒவ்வொரு மிருகமாக சிங்கத்திருக்கு உணவாக சென்றது. அன்று முயலின் முறை அது உணவாக சிங்கத்திடம் செல்லவேண்டும். மிகுந்த கவலையுடன் சென்று கொண்டிருக்கும் போது ஒரு கிணற்றை பார்த்தது.
ஒரு முடிவுக்கு வந்த முயல் பிறகு கொஞ்சம் நேரம் விளையாடி விட்டு சிங்கராஜவிடம் சென்றது.
சிங்கராஜவே என்னை மன்னியுங்கள். நான் தாமதமாக வந்துவிட்டேன் என தலைதாழ்த்தி நின்றது.
சிங்கமும் காரணம் கேட்டது,
அதற்க்கு முயல்
"சிங்கராஜவே நான் வரும்
வழியில் ஒரு சிங்கத்தை பார்த்தேன் அது என்னை எங்கு செல்கிறாய் என் கேட்ட்டது. நான் சொன்னேன் எங்கள் சிங்க ராஜாவுக்கு உணவாக செல்கிறேன் என்று"
அதற்க்கு அந்த சிங்கமோ, இந்த காட்டில் நான் மட்டுமே ராஜா வேறு யாரும் இல்லை, இங்கு இருக்கும் எல்லா மிருகமும் எனக்கே சொந்தம் என்றது " என கூறியது
இதனை கேட்ட சிங்கராஜவுக்கு மிகுந்த கோபம் வந்தது முயலுடன் அந்த சிங்கத்தை காண சென்றது
To Get Daily Story In What's App contact +917904957814
முயலும் அந்த கிணற்றை காட்டியது, சிங்கம் அதனை எட்டி பார்க்க அதன் உருவம் உள்ளே தெரிய, அது நம் உருவம் என அதுக்கு தெரியாமல் கர்ஜித்தது, கர்ஜனை எதிரொலித்ததும் சிங்கம் கிணற்றுக்குள் பாய்ந்தது, சிங்கம்தண்ணீாில் மூழ்கி இறந்தது.
என் அன்பு வாசகரே,
முயலின் தெளிந்த புத்தி காட்டிலிருக்கும் அத்தனை மிருகங்களுக்கும் சாவு பயம் நீங்கி மகிழ்ச்சியடைய காரணமாயிருந்தது.,
பைபிள் சொல்கிறது..
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள். ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள். உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே. 1 பேதுரு 5:9
சிலுவையில் பாடுகளை இயேசு ஏற்றுகொண்டதால் பாடுகளின் வாழ்க்கை இல்லை. பாடுகள் வேறு கிறிஸ்துவினிமித்தம் உள்ள பாடுகள் வேறு ..
(இது எல்லாருக்கும் இல்லை. நியமிக்கப்பட்ட சிலருக்குதான்.. இதை நான் இங்கு சொல்லவில்லை).
கொ்ச்சிக்கிற சிங்கம் போல சுற்றித் திாிகிற பிசாசு உங்கள் வாழ்க்கையில் பலவிதமான பாடுகளை கொண்டு வரும்போது வேதவசனங்கள் உங்களை தெளிவுப்படுத்துகிறது. சில முக்கியமான வசனங்களை சுட்டிக் காட்டுகிறேன்.
ஏசாயா 53:4-5-ல் வாசிக்கிறோம்.
மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார், நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.
நம்முடைய
மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது,
அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் மத்தேயு 8:17
நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்.
அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.
சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்தீர்கள். இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள். (1 பேதுரு 2:24-25)
இந்த வசனங்களில் .
பாடுகளையும் பெலவீனங்களையும் ஏற்றுகொண்டு ..
துக்கங்களை...நோய்களை...பாவங்களை ..
சிலுவையில் சுமந்து தீா்த்தாா்.. அதனால் உங்களுக்கு..
இனிமேல்
வியாதி இல்லை. நோய்கள் இல்லை. பெலவீனங்கள் இல்லை.
பலவிதமான விஷயங்களுக்காக துக்கப்படட வேண்டியதில்லை. இயேசுவின் பாடுகளின் தழும்புகளினால் குணமானீா்கள். சந்தோஷம், சமாதானம், சகல ஆசீா்வாதங்களுக்குள்ளாக உங்களை வைத்திருக்கிறார்.
அதுமட்டுமல்ல நீங்கள் இயேசுவின்
கண்காணிப்புக்குள் இருக்கிறீா்கள். உங்களை யாரும், எந்த பிசாசின் கிாியைகளும் தொட முடியாது.
என்ற இந்த தெளிந்தபுத்தி மட்டும் உங்களுக்கு
இருந்தால் ...சாத்தான் எந்தவிதமான பாடுகளையும்,லஉபவத்திரத்தையும்
வியாதியையும் நோய்களையும், கொண்டுவர முடியாது. என்ற தைாியத்துடனும், தெளிவோடும் இருங்கள்.💙🌷
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் !!!
===============
ஓர் குட்டிக் கதை
உறுதியாய் பற்றி கொள்ளும் மனது
==============
ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது?
இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது...
நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருவர் ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது.
அடுத்தவன் பார்த்தான். நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா என்று எதிர்பார்த்தான்.
இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான்.
இந்த மனிதனை இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை, திணறியது. ஒரு கட்டத்தில் நாய், ‘வாள்... வாள்’ என்று கத்த ஆரம்பித்து விட்டது.
To Get Daily Story In What's App Contact +917904957814
விளைவு...! இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க் கொண்டிருக்கிறார். அவர்கள் போக வேண்டிய திசை வேறு. போய்க் கொண்டிருக்கிற திசை வேறு.
என் அன்பு வாசகரே,
கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது. சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள். சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள். சிலர் நாயின் வாலைப் பற்றிக் கொள்கிறார்கள்.
பைபிள் சொல்கிறது.
உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்ட மனதை உடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர். ஏசாயா 26:3
நான் வீணாக ஓடினதும் வீணாகபபிரயாசப்பட்டதுமில்லையென்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு, ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள்,
பிலிப்பியர் 2:14
நீங்கள்
உங்கள் இலக்கை அடைவதற்கு உங்களுக்கு எதிராக தடையாயிருக்கும் எதுவாயிருந்தாலும் அதை அகற்றி விட நாய் வாலைப்போல இருக்கும் உங்கள் சுய ஞானத்தையோ, அல்லது நம்பிக்கையானவா் என நினைப்பவர்களையோ
நம்பாமல் ..
தேவனை
உறுதியாக பற்றிக் கொள்ளும் மனதோடு கூட இருங்கள். அதுமட்டுமல்லாமல் ஜீவ வசனத்தை உறுதியாக பிடித்து கொண்டு அறிக்கை செய்யுங்கள்.
அப்போது
தேவனுக்கும், தேவனுடையவாா்த்தைகளுக்கும் உள்ள வல்லமையானது எல்லாவிதமான தடைகளையும் உடைத்தெறிந்து விடும். இதற்கு மாறின சக்தி இவ்வுலகத்தில் வேறெதுவுமில்லை.
மோசே
சிவந்த சமுத்திற்கு நேராய் கோலை நீட்டினான். அப்போது தேவன் என்ன செய்தாா்?
இந்த வசனம் இப்படி சொல்கிறது..
அவர் சிவந்த சமுத்திரத்தை அதட்டினார், அது வற்றிப்போயிற்று, வெட்டாந்தரையில் நடக்கிறதுபோல அவர்களை ஆழங்களில் நடந்துபோகப்பண்ணினார். சங்கீதம் 106:9
ஜளங்கள் அக்கரை சோ்ந்தாா்கள்.
அதேபோல இயேசுவும் சீஷா்களும் படவில் அக்கரைக்கு செல்லும்பொது சுழல் காற்று
படகை கவிழ்க்குமபடி வந்தது. இயேசு அதை அதட்டி அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று. அக்கரை போய் சோ்ந்தனா்.
மாற்கு 4:35-39
உங்கள் நாய் வால் போன்ற காாியங்களை அகற்றி தேவனையும், தேவனுடைய வாா்த்தைகளையும் பற்றி பிடித்துகொண்டு அக்கரையான உங்கள் இலக்கை அடையுங்கள்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் !!!
Thanks for using my website. Post your comments on this