====================
முன்னோடி மிஷனெரிகளின் வாழ்க்கை சரிதை
பிரான்சிஸ் சேவியர் (1506-1552)
==================
பிரான்சிஸ் சேவியர் அவர்கள் ஸ்பெயின் நாட்டில் 1506 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ம் நாள் இராஜ குடும்பத்தில் அங்குள்ள அரன்மனையில் பிறந்தார். பிரான்சிஸ் 9 வயதாக இருக்கும்போது அவருடைய தகப்பனார் இறந்துபோகவே அவருடைய தாயார் கிறிஸ்துவின் மீதான பக்தியிலும், ஒழுக்கத்திலும் வளர்த்து வந்தார். மேலும் தன் மகனை ஊழியத்திற்கு அற்பணித்தார். அதை எப்போதும் நினைவூட்டி வந்தார்.
பிரான்சிஸ் அவர்களின் இளமை பருவத்திலேயே பெரிய சாதனையாளராக விளங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததினால் ஓட்டம், குதிரை சவாரி, நீச்சல், மல்யுத்தம் போன்ற விளையாட்டுகளிலும் படிப்பிலும் சிறந்து விளங்கினார். 1525 ம் ஆண்டு கல்லூரி படிப்பிற்காக பிரான்ஸ் தேசத்தில் பாரீஸ் நகருக்கு சென்றார். அங்குள்ள St. Barbe கல்லூரியில் தத்துவம் மற்றும் கலைத்துறையில் முதுகலை பட்டம் பெற்று 1530 முதல் 1534 வரை விரிவுரையாளராக பணியாற்றினார். பின்னர் இயேசு கிறிஸ்துவின் நற்செய்திபணி அறிவிக்க அற்பணித்து 1534 ஆண்டு முதல் 1536 வரை இறையியல் கற்றுக்கொண்டார்.
இந்நிலையில் பிரான்சிஸ் சேவியர் அவர்களை நற்செய்திபணி செய்து கொண்டிருந்த இக்னேசியஸ் லயோலா என்பவர் சந்தித்தார். மேலும் பிரான்சிஸ் சேவியரிடம் நற்செய்திபணி செய்யும் ஆவலை தூண்டி, நற்செய்திபணியை இணைந்து செய்வோம் என்று கூறினார். ஆகவே 1534 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15 ம் நாள் அவர்களின் 5 நண்பர்களோடு பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் என்ற இடத்தில் யேசு சபை அல்லது சொசைட்டி ஆப் ஜீசஸ் (Society of Jesus) என்ற மிஷனெரி ஸ்தாபனத்தை ஏற்படுத்தி அதன் மூலம் நற்செய்திபணி அறிவிக்க முடிவு செய்தார்கள். இந்த அமைப்பினை கத்தோலிக்க போப் அவர்கள் ஏற்றுக்கொண்டதால் 1537 ம் ஆண்டு ஜுன் மாதம் 24 ம் நாள் அவர்கள் எல்லோரும் திருநிலைபடுத்தப்பட்டு திருச்சபையின் குருவானவர்களாக நியமிக்கப்பட்டார்கள்.
இந்நிலையில் போர்ச்சுக்கல் மன்னர் மூன்றாம் ஜாண் இந்தியாவில் போர்த்துகீசியர்களுக்கு இறைப்பணி செய்யவும் இந்தியாவிலுள்ள மக்களுக்கு நற்செய்திபணி அறிவிக்கவும் பிரான்சிஸ் சேவியரை கேட்டுக்கொண்டார்.
ஆகவே பிரான்சிஸ் சேவியர் லிஸ்பன் துறைமுகம் மூலம் பயணப்பட்டு, ஓராண்டு கடல் பயணத்தை நிறைவு செய்து 1542 ம் ஆண்டு மே மாதம் 6 ம் நாள் இந்தியாவில் போர்த்துகீசிய காலனியான கோவா வந்திரங்கினார்.
பிரான்சிஸ் அவர்கள் முதலில் சிறைச்சாலைகளுக்கும், ஏழைகள் இருக்கும் இடத்தை தேடி சென்றும், தொழுநோயாளிகள் தங்கி இருக்கும் இடத்திற்கும் மற்றும் குஷ்டரோகிககள் இருக்கும் இடம் சென்று இயேசு கிறிஸ்துவின் அன்பை சுமார் ஆறு மாதம் செய்து இந்திய மொழிகளை கற்றுக்கொண்டார்.
பின்னர் பிரான்சிஸ் அவர்கள் நற்செய்திபணி அறிவிப்பதற்காக தெருக்களின் வழியாக மணி அடித்துக்கொண்டு சிறுபிள்ளைகளை அழைத்து இயேசுவை பற்றி கதைகள் மூலம் நற்செய்தி அறிவித்தார். பிள்ளைகளுக்கு நன்றாக ஜெபிக்க கற்றுக்கொடுத்தார். மாலை நேரங்களில் தெருக்களிலும் மக்கள் கூடும் இடங்களிலும் இயேசுவைப்பற்றி போதித்தார். இவருடைய போதனையை கேட்ட அநேகர் ங்கள் பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு மனம்திரும்பினார்கள்.
இரவு நேரங்களில் பிரான்சிஸ் அவர்கள் இயேசுவிடம் அவரை அறியாமலும் நேசியாமலும் இருக்கும் இந்திய மக்களுக்காக ஜெபித்துக்கொண்டே இருப்பார். இப்படியாக சில மாதங்களில் கோவாவில் 10,000 த்திற்கும் அதிகமான மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். அங்கே சிறிய ஆலங்களும் கட்டப்பட்டது.
இந்தியாவின் முதல் ஜெசுட் மிஷனெரி என்றமுறையில் பிரான்சிஸ் சேவியர் அவர்களின் நற்செய்திபணி தாழ்ந்த ஜாதி மக்கள் மத்தியில் நல்ல ஆத்தும அறுவடை கொடுத்தது. ஆனால் உயர்ஜாதி பிராமணர்களிடம் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. மாறாக நற்செய்தி எதிர்ப்பாளர்களின் தூண்டுதலின் பேரில் தாழ்த்தப்பட் கிறிஸ்தவ மக்கள் பலமுறை தாக்கப்பட்டார்கள். மேலும் ஒருமுறை பிரான்சிஸ் சேவியர் அவர்களும் விஷம் தடவிய அம்பு மூலம் குத்தப்பட்டார். இதனால் கிறிஸ்தவர்களை பாதுகாக்க போர்த்துகீசிய இராணுவம் நற்செய்தி எதிர்பாளர்களை கடுமையாக தாக்கியது.
1543 ம் ஆண்டு பிரான்சிஸ் சேவியர் அவர்கள் தமிழ்நாட்டில் நற்செய்திபணி செய்வதற்கு புறப்பட்டு மணப்பாடு, உவரி, குளச்சல், இடிந்தகரை, கூடங்குளம் கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி, நாகப்பட்டினம் வழியாக மன்னார் வளைகுடா தீவு வரை உள்ள கடற்கரை பகுதிகளில் வசித்துவந்த மீனவர்கள் மத்தியில் நற்செய்திபணி அறிவித்தார். இங்கிருந்த பரத குல மக்கள் முத்து குளிப்பதில் சிறந்து விளங்கினார்கள். சுமார் 15 மாதங்கள் கிராமங்கள் தோறும் மணியடித்தபடி சென்று அங்கு ஆட்கள் கூடியதும் அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நற்செய்திபணியை அறிவித்தார். இதனால் அநேகர் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார்கள். ஆகவே அங்கு ஆலயங்கள் நிறுவப்பட்டன.
பிரான்சிஸ் சேவியர் அவர்கள் கால்நடையாய் நடந்து சென்று நற்செய்திபணி அறிவித்து கிறிஸ்தவர்களானவர்களுக்கு நிசேயா விசுவாச பிரமாணம், 10 கற்பனைகள், பொதுவான பாவ அறிக்கை ஜெபம் மற்றும் கர்த்தர் கற்றுக்கொடுத்த ஜெபத்தை கற்றுக்கொடுத்தார். நன்றாக மனப்பாடம் செய்த சிறுவர்கள் மூலம் அவர்கள் பெற்றோருக்கு நற்செய்திபணி அறிவிக்க செய்து அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவை பற்றி இரண்டு ஆண்டுகள் நற்செய்திபணி செய்தார். அறிமுகம் செய்தார். இதனால் அநேக பரத குல மக்கள் 20,000 த்திற்கும் அதிகமானோர் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள். ஆகவே அநேக ஆலயங்கள் நிறுவப்பட்டன.
பிரான்சிஸ் அவர்களிடம் ஆதிகால அப்போஸ்தலத்தின் உற்சாகமும், ஆர்வமும் அதிகமாக கானப்பட்டது. எத்தகைய இன்னல்கள், மற்றும் இடையூறுகள் வந்தாலும் அதை தேவ பலத்தோடு மேற்கொண்டார்.
பின்னர் பிரான்சிஸ் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் கடற்கரை கிராமங்களில் களி மண்ணினாலும் ஒலை கூறைகளினாலும் சிறிய ஜெப கூடாரங்களை அமைத்து அதில் சபை ஊழியர்களை உறுவாக்கி அவர்கள் மூலம் அந்த கிராமத்து மக்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நற்செய்திபணியை அறிவித்தார். தேவையிலூள்ள மக்களுக்கு உதவி செய்து, அகதிகளாக வருவோர்க்கு மறுவாழ்வு கொடுத்து, அமைதியற்ற கிராமங்களில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கும் நற்செய்திபணி செய்தார். இவருடைய ஜெபத்தினால் அநேகர் குணமாக்கப்பட்டார்கள். பலருக்கு விடுதலை கிடைத்தது.
1544 ம் ஆண்டின் இறுதியில் 10,000 த்திற்கும் அதிகமான மக்கள் பிரான்சிஸ் சேவியர் மூலம் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்கராக ஏற்றுக்கொண்டார்கள். ஆகவே கடற்கரை ஓர கிராமங்களில் மீனவர்கள் மத்தியில் கிறிஸ்தவம் வளர்ந்து பெருகியது.
பின்னர் 1544 ம் ஆண்டின் இறுதியில் பிரான்சிஸ் சேவியர் திருவாங்கூர் சமஸ்தானம் சென்றடைந்தார். அங்கு இரண்டு ஆண்டுகள் தங்கி இருந்து நற்செய்திபணி செய்தார். இவருடைய முன் மாதிரியான வாழ்க்கையினாலும் அநேக அற்புதங்களை கர்த்தர் இவர் மூலமாக நடப்பித்ததால் 18,000 த்திற்கும் அதிகமான மக்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றார்கள். இதனால் நாகர்கோவில், கோட்டாறு, கன்னியாகுமரு பகுதிகளில் ஆலயங்கள் கட்டப்பட்டது.
பிரான்சிஸ் சேவியர் அவர்கள் உலக பற்று இல்லாதவராக வாழ்ந்து, தன்னை தேடி அநேக வசதியான வாழ்க்கை மற்றும் வசதிகள் வந்தபோதிலும் அவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்தார். தனிமை பலமுறை அவரைவாட்டி எடுத்த போதும் இயேசு கிறிஸ்துவின் ஐக்கியம் ஒன்றே இவருக்கு பக்க பலமாய் இருந்தது. எப்படிப்பட்ட துன்பகளையும் ஏற்றுக்கொள்ளும் மனம் படைத்தவராக இருந்தார். நீண்ட கடல் பயணத்தையும், மிகவும் மோசமான சூழ்நிலைகளையும் அனுபவித்தார். கடுங்குளிரையும், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நற்செய்திபணியை செய்தார்.
பிரான்சிஸ் அவர்கள் ஒவ்வொரு திருத்தலங்களிலும் பல ஜெபக்குழுக்களையும் கெபிகளையும் உறுவாக்கி இந்தியாவில் ரோமன் கத்தோலிக்க திருச்சபைகள் அநேக இடங்களில் செழித்து வளர காரணமாக இருந்தார். திருவிதாங்கூரில் (கன்னியாகுமரி மாவட்டம்) மட்டும் 45 திருச்சபைகளை ஏற்படுத்தினார்.
பிரான்சிஸ் சேவியர் அவர்கள் எல்லா மனிதர்களும் இயேசுவை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக மலேசியா மூலமாக ஜப்பான் சென்று நற்செய்திபணி விரும்பினார். ஆகவே 1546 ம் ஆண்டு ஜனவரி மாதம் மலேசியா சென்றார். அங்கிருந்து மோரோ தீவுகளுக்கு சென்று நற்செய்திபணி செய்ய விரும்பினார். அந்த தீவுகளில் வசித்தவர்களில் அநேகர் மிகவும் குரூரமானவர்கள். அவர்களுடைய கைதிகளை சர்வசாதாரனமாக கொலை செய்து, அவர்களை புசித்தனர். பிரான்சிஸ் அங்கு புறப்படும் சமயம் அவருடைய நண்பர்கள் இத்தகைய ஆபத்தான இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று கெஞ்சி கேட்டுக்கொண்டார்கள். ஆனால் கிறிஸ்துவுக்காக உயிர்விட மகிழ்ச்சியடைவேன் என்று பிரான்சிஸ் பதிலுரைத்தார்.
பின்னர் மோரோ தீவுகளை அடைந்ததும் உயர்ந்த மலைகளில் வாழும் மக்களை பிரான்சிஸ் தேடி அலைந்தார். அவர் முட்செடிகள், கரடு முரடான பாதைகள் மற்றும் கூர்மையான கற்கள் வழியாக நடந்து சென்று அம்மக்களுக்கு கிறிஸ்துவின் நற்செய்திபணியை சில மாதங்கள் தங்கி இருந்து அறிவித்தார். இதனால் அநேகர் இயேசுவை ஏற்றுக்கொண்டதால் அவர்களுடைய கொடூர குணங்கள் மறைந்து கிறிஸ்துவின் சீஷர்கள் ஆனார்கள்.
1548 ம் ஆண்டு பிரான்சிஸ் சேவியர் அவர்கள் மலேசியாவில் இருந்து இந்தியா திரும்பி வந்தார். அப்போது கோவா வில் நற்செய்தி பணி செய்ய வந்திருந்த பல ஜெசுட் மிஷனெரிகளோடு சேர்ந்து கோவாவில் St. Paul Seminary என்ற இறையியல் கல்லூரி ஒன்றை நிறுவி அதன் மூலமாக இந்தியாவில் நற்செய்திபணி செய்ய இந்திய ஊழியர்களை உறுவாக்கினார்கள். இங்கு பயிற்ச்சி பெற்றவர்கள் தமிழ்நாடு மற்றும் கேரளா பகுதிகளில் ஸ்தாபிக்கப்பட்ட திருச்சபைகளுக்கு போதகர்களாக அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
1949 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15 ம் நாள் பிரான்சிஸ் சேவியர் அவர்கள் ஜப்பான் சென்று அங்கிருந்த மன்னர்களில் ஒருவரை ஜெபத்தோடு சந்தித்து இயேசு கிறிஸ்துவின் நற்செய்திபணி அறிவிக்க அனுமதி கோரினார். அந்த மன்னரும் சந்தோஷமாக அனுமதித்ததால் அங்கு தெருக்களிலும் பின்னர் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று நற்செய்திபணியை இரண்டு ஆண்டுகள் தங்கி இருந்து ஜப்பானிய நண்பர் மூலமாக அறிவித்தார். இப்படி 2,000 த்திற்கும் அதிகமான மக்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்தினார். பின்னர் இந்தியா திரும்பினார்.
பிரான்சிஸ் சேவியர் அவர்கள் 1551 ம் ஆண்டில் சீன தேசத்திற்கு எப்படியும் கிறிஸ்துவின் நற்செய்திபணியை கொண்டு செல்ல வேண்டும் என்ற வாஞ்சை அதிகமாக இருந்தது. ஆகவே நெடும் கடல் பயணத்தின் மூலமாக சீனாவுக்கு சென்று கொண்டிருந்தபோது கொடிய விஷ காய்ச்சல் இவரை தாக்கியது. மேலும் சீனாவிற்குள் நுழையும் அனுமதியும் மறுக்கப்பட்டது. ஆகவே சீனாவுக்கு 40 மைல் கிழக்கே சான்சியன் என்ற தீவில் இறக்கப்பட்டார்.
நோயின் கொடுரத்தில் அங்குள்ள ஒரு குடிசையில் கையிலே ஒரு சிலுவையை வைத்துக்கொண்டு, விளிகள் ஒளியிழந்தாலும் வாய் மட்டும் இயேசுவின் நாமத்தை உச்சரித்துக்கொண்டிருக்க தன் ஆவியை இயேசுவின் கரங்களில் கொடுத்துக்கொண்டிருந்தார். பின்னர் பிரான்சிஸ் சேவியர் 1552 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ம் நாள் தன்னுடைய 46 ம் வயதில் சீனாவின் சான்சியன் தீவில் நித்திய இளைப்பாறுதலுக்கு கடந்து சென்றார். பின்னர் மரித்துபோன இவருடைய சரீரம் கோவாவிற்கு கொண்டு வரப்பட்டது. அவருடைய சரீரம் கொண்டுரப்படும் நேரத்தில் இந்தியாவில் கொடிய காலரா நோய் பரவி அநேக மக்களை காவுவாங்கியது. ஆனால் பிரான்சிஸ் சேவியர் அவர்களின் சரீரம் எந்தெந்த வழியாக வந்ததோ, அந்தந்த இடங்களில் காலரா கொள்ளை நோய் நீங்கிப்போயிற்று என்று திருச்சபை சரித்திரம் கூறுகின்றது.
கடந்த 475 ஆண்டுகளாக இவருடைய சரீரத்தை அங்குள்ள (Basilica of Bom Jesuch, Goa) தேவாலயத்தில் வைத்து பாதுகாத்து வரருகின்றார்கள். இவருடைய சரீரம் அவ்வப்போது பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப் படுகின்றது.
பிரான்சிஸ் சேவியர் அவர்கள் இறுதி நாட்கள் வரை இயேசு கிறிஸ்துவின் நள்செய்திபணியை சோர்வடையாமல் செய்து வந்தார். மக்கள் இயேசுவை அறிந்து நேசிக்க வேண்டும் என்பதற்காக அதிகமாக உழைத்தார்.
ஜப்பான் நாட்டில் முதன் முதலாக நற்செய்திபணி அறிவித்த பெருமைக்குறியவர். ஆகவே இவர் ஜப்பானின் அப்போஸ்தலன் என்று அழைக்கப்படுகின்றார்.
பிரான்சிஸ் சேவியரின் புகழ்பெற்ற வாக்கியம் தங்களது சிறுசிறு குறிக்கோளை விட்டு கிழக்கு நோக்கி கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்திட உங்கள் மாணவருக்கு சொல்லுங்கள் என்பதாகும்.
பிரான்சிஸ் சேவியர் அவர்களின் 10 ஆண்டுகள் நற்செய்திபணி மூலமாக 50 நாடுகளுக்கும் அதிகமான இடங்களுக்கு சென்று சுவிசேஷ தீபத்தை ஏற்றினார். இவர் மூலமாக 60,0000 த்திற்கும் அதிகமானோர் கிறிஸ்துவின் மந்தையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
பிரான்சிஸ் சேவியர் அவர்கள் கீழ் திசை நாடுகளின் திருத்தூதர் என்று அழைக்கப்படுகின்றார். புதிய ஏற்பாட்டு வரலாற்றுக்கு பின்வந்தவர்களில் அதிகமான மக்களுக்கு நற்செய்திபணி அறிவித்தவர் என்ற பெருமை இவருக்கு சேரும். இவருடைய நற்செய்திபணியை கனம் பண்ணும்படி 1622 ம் ஆண்டு கத்தோலிக்கா போப் கிரகோரி அவர்கள் பிரான்சிஸ் சேவியரை புனிதராக அறிவித்து திருநிலைபடுத்தினார்.
இதை வாசிக்கும் அன்பர்களே நீங்கள் கிறிஸ்துவின் நற்செய்திபணி அறிவிக்க எத்தனை இடங்களுக்கு சென்றுள்ளீர்கள்? என்ற கேள்வியோடு நிறைவு செய்கின்றேன்.
இதை வாசிக்கின்ற அன்பு தம்பி மற்றும் தங்கையே இன்று நீ கல்வியிலும், சமுதாய அந்தஸ்திலும் உயர்ந்து இருப்பதற்கு, உனக்காக மற்றும் உன்னுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அழைப்பை ஏற்று, தன்னுடைய வாழ்க்கை, குடும்ப உறவுகள், சொத்து சுகங்கள் யாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, உன்னுடைய கிராமத்திற்கு வந்து, நற்செய்திபணியையும், சமுதாய நற்பணிகளையும் செய்த பல மிஷனெரிகளை அனுப்பி வைத்த அந்த ஆண்டவருக்கு நீ என்ன செய்ய போகின்றாய்?...நீ வா...நாம் எல்லோரும் சேர்ந்து நம்முடைய தலைமுறையில் இந்திய தேசத்தை ஆண்டவருக்கு சொந்தமாக்குவோம்.
இந்த மிஷனெரி சரித்திரத்தை வாசிக்கின்ற அன்பு தாய்மார்களே! தகப்பன்மார்களே! உங்கள் பிள்ளைகளை நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்தை கட்டும் இந்த கனமான ஊழியத்தை செய்ய ஒரு கல்வி மிஷனெரியாக, சமுதாய முன்னேற்ற மிஷனெரியாக, மருத்துவ மிஷனெரியாக, சுவிசேஷ மிஷனெரியாக இயேசு கிறிஸ்துவுக்கு சேவை செய்ய அற்பணிப்பீர்களா? ஊக்கப்படுத்துவீர்களா? தேவ இராஜ்யம் உங்கள் மூலமாய் தேவை நிறைந்த இந்திய தேசத்தில் கட்டப்படுவதாக. ஆமென்.
கிறிஸ்துவவில் அன்பானவர்களே!.இந்த மிஷனெரிகள் சரித்திரம் சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான மக்களால் வாசிக்கப்படுகின்றது. ஆகவே இந்த சரித்திர குழுவின் இனைப்பை உங்கள் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் யாவருக்கும் அனுப்பு வைக்கும்போது, அவர்களும் உங்களைப்போல மிஷனெரி தரிசனத்தை பெற்றுக்கொள்வார்கள். நன்றி.
================
The Gospel Pioneers
St. Francis Xavier (1506-1552)
=================
On April 7, 1506, Francis Xavier was born in Spain. He was a member of a noble family, had a privileged childhood—however, it was disrupted by his father's death, as well as by outside efforts to take control of Navarre. In 1525, Xavier went to study at the University of Paris. There, he encountered Ignatius of Loyola, who had experienced a religious conversion while recovering from a war wound. As was often the case with younger sons of the nobility, he was destined for an Pastoral career, and in 1525 he journeyed to begin his studies. With encouragement from his friend Ignatius of Loyola, Xavier devoted himself to religious service and became one of the founders of the Jesuit order.
On August 15, 1534, Xavier, Loyola and five others pledged themselves to the Society of Jesus (the Jesuits). Francis was ordained as a priest on June 24, 1537. Meanwhile, as a result of their preaching and care of the sick throughout central Italy, they had become so popular that many Catholic princes sought their services. Francis was Impressed by the King of Portugal who desired diligent priests to minister to the Christians and to evangelize the peoples in India. Francis disembarked in Goa, the centre of Portuguese activity in the East, on May 6, 1542. He came to be admired in that country for his ability to live and work side by side with the poor. Xavier adapted to local mores and arranged for the translation of religious texts.
Xavier spent five months preaching and ministering to the hospitalized. He walked the streets with a bell, inviting children to church. Once he had enough Portuguese children, he taught them the catechism and gave them instructions to share what they learned with their parents. Eventually the adults themselves, originally unreceptive to the missionary were flocking to hear him preach. These steps helped him reach more converts. Much of the next three years he spent on the southeastern coast of Tamil Nadu among the simple, poor pearl fishers, the Paravas. He went to Manapadu, Titucurin and Kanyakumari to spread the gospel of Christ. About 20,000 Indians were baptized. .
However, India's caste system created another block to sincere conversion. Many members of the lower castes sought conversion mostly as a means of social advancement. Higher castes saw the religion as subversive to the social order. Xavier and his followers were often persecuted, and Xavier himself was once shot with arrows. To make matters worse, reputedly Christian Portuguese soldiers were setting horrible examples for the new converts. Using a small Catechism, he had translated into the native Tamil with the help of interpreters. Francis travelled tirelessly from village to village instructing and confirming them in their faith. He baptized 10,000 of them in the last months of 1544.
In 1548 he returned to Goa, and founded the college of Holy Faith, and began to develop it into a centre for the education of native priests and catechists for the diocese of Goa. He insisted that missionaries adapt to many of the customs, and most certainly the language, of the culture they wish to evangelize. And unlike later missionaries, Xavier supported an educated native clergy. He always provided for the continuing pastoral care of the communities he found and did not abandon them after baptism.
Seeking more converts, Xavier continued to travel for many countries and much of his life was spent tending to missions. His next focus for missionary work was China, but was not able to access the mainland because borders had been closed to foreigners. Before he could find a way inside the country, illness incapacitated Xavier. He died on the island on December 3, 1552, at the age of 46. His body was then taken to Goa.
Before he could find a way inside the country, illness incapacitated Xavier. He died on the island on December 3, 1552, at the age of 46. His body was then taken to Goa. While his body was brought to India, there was epidemic and Colera in many parts of India. While his body passed that area, the epidemic was stopped.
He was the greatest Roman Catholic Missionary of modern times who was instrumental in the establishment of Christianity in India. Though he passed away at a relatively young age, Xavier had accomplished much in his life. Xavier was beatified by Pope Paul V in 1619, and canonized by Pope Gregory XV in 1622. A famed missionary himself, he is now the patron saint of missionaries.
Dear brothers and sisters, today you have received good education, health and better life styles, it is because of many Christian missionaries who sacrificed their life for you in the past. Have you ever thought of the guiding hands behind it? Yes, it is none other than God himself who prepared missionaries and send to your village and gave the burden to uplift your life. In return, what shall you offer to God as thanksgiving? Think about it.
My dear parents will you encourage and dedicate your children to do God's work as educational missionary or medical missionary or Cross Cultural missionary for our Nation?
The Gospel came to India 2000 years back but still we are 2.8% of Indian population. The harvest is plenty but the labourers are few. So come...let's together build the Kingdom of God in our Nation and let's evangelize our Nation in Christ in our Generation.
Thanks for using my website. Post your comments on this