ஓர் குட்டிக் கதை
==============
குருடர்கள் எவ்வளவு?
===============
ஒரு நாள், மன்னர் அக்பர் ஒரு ஐயத்தை எழுப்பினார். உலகத்தில் குருடர்கள் தொகை எவ்வளவு?”இந்த வினாவுக்குச் சபைலிருந்தவர்களுள் பெரும் பகுதியினர், உலத்தில் குருடர்களின் தொகை எவ்வளவு என்பதைத் துல்லியமாகக் கூறுவது கடினம். ஆனால், கண் பார்வை உள்ளவர்களைவிட கண்பார்வையற்றவர்கள் தொகை மிகமிகக் குறைவாகத்தான் இருக்கும் என்னும் கருத்தைத் தெரிவித்தனர்.
அக்பர், ”பீர்பால் ! உம் கருத்து என்ன?” எனக் கேட்டார்.
பீர்பால் எழுந்து, ”மன்னர் பெருமானே ! இப்போது இங்கு சொல்லப்பட்ட கருத்தே குருட்டுத்தனமானதாகும். உலகத்தில் கண்பார்வையற்ற குருடர்களின் தொகைதான் மிகமிக அதிகம். குறிப்பாகச் சொல்வதானால், இந்த உலகத்தில் பெரும்பகுதியினர் குருடர்கள்தாம்” என்றார்.
”பீர்பால்! உமது கருத்து விநோதமாய் இருக்கிறதே ! உம் கருத்துப்படி இந்தச்சபையில் இருப்பவர்களுள் பெரும் பகுதியினர் குருடர்கள் தாம் என்று கூறுவீர் போலிருக்கிறதே?” என்றார் அக்பர்.
“அதிலென்ன சந்தேகம்?” என்றார் பீர்பால்”அப்படியானால் நானும் ஒரு குருடானா?” என்றார் அக்பர்.அதற்கு, ”பொதுவாக ஒரு மனிதனை என்ன காரணத்தைக்கொண்டு குருடன் என்று கூறுகிறோம்?” என்று வினா எழுப்பினார் பீர்பால்.
”ஒரு பொருளை, அது இன்ன பொருள்தான் என்று சரியாக அடையாளம் கண்டு கொள்ள முடியாதவனைப் பொதுவாகக் குருடன் என்று கூறுகிறோம் ” என அக்பர் மறுமொழி சொன்னார்.
”இப்போது ஒரு சோதனை செய்து பார்ப்போம் ” என்று கூறி
ஒரு துணியை எடுத்து, “மன்னர் அவர்களே ! இது என்ன?” என்று கேட்டார்.
அது ஒரு துண்டுத் துணி!” எனறார் மன்னர்.பீர்பால்.
அதே துணியைத் தமது தலையில் ஒழுங்காகச் சுற்றிக் கட்டிக்கொண்டு, ”இது என்ன ?” என்று கேட்டார்
''அது ஒரு தலைப்பாகை !” என்றார் மன்னர்.
பீர்பால் அதே துணியைக் கழுத்தில் தொங்க விட்டுக்கொண்டு, ” இப்போது இது என்ன?” என்றார்.
அது ''கழுத்துக்குட்டை அல்லது சவுக்கம்” என்றார் அக்பர்.பீர்பால்.
கழுத்துத் துணியை எடுத்து இடுப்பில் சுற்றிக் கட்டிக் கொண்டார்.
இப்போது இது என்ன துணி” என்றார் பீர்பால்.
இப்போது அது லுங்கி அல்லது வேஷ்டி என்று கூறலாம் என கூறினார்.
பீர்பால் அக்பரை நோக்கிப் பணிவான குரலில், ” மன்னர் பெருமானே! என் கையில் இருக்கும் இந்தத் துண்டுத் துணியைப் பற்றி உங்களால் ஒரே மாதிரியான கருத்தைக் கூற முடியவில்லை. கண்களால் இதனை நன்றாகப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ஒரு பொருளைப் பற்றிப்பலவிதமான கருத்துக்களைக் கூறினீர்கள்.
ஒரு குருடனின் நிலையும் இதுதானே. தனக்கு பார்வையில்லாத காரணத்தால், ஒரு பொருளைப் பற்றித் தெளிவான கருத்தை அவனால் கூற முடியவில்லை. இப்போது தங்கள் நிலையும் அதுவாகத்தானே இருக்கிறது ? பார்வையுள்ளவர்கள் என்று கர்வப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் – என்னையும் சேர்த்துத்தான் கூறுகிறேன். கண் இருந்தும் குருடர்களாத்தான் இருக்கிறோம்
இந்தக்கண்ணோட்டப்படி பார்த்தால், குருடர்களைவிடக் கண் பார்வையுள்ள குருடர்களின் தொகை மிகவும் அதிகம் என்று நாம் கருதலாமல்லவா?” என்று கூறினார்.ஆழ்ந்த சிந்தனை வளத்துடன் கூடிய, உண்மைகள் நிறைந்த பீர்பாலின் அந்தச் சொற்களைக் கேட்டு, மிகவும் பாராட்டினார் அக்பர்.
என் அன்பு வாசகர்களே,
கண்கள் நம் அவயவங்களில் மிகச் சிறந்த ஒன்று. அவற்றின் பயன்பாடு மிக அதிகம். அவற்றைக் கொண்டு தான் எல்லாவற்றையும் பார்க்கிறோம், அனுபவிக்கிறோம். முற்காலத்தில் படிக்காதவர்கள் முகத்தில் இரண்டும் புண்ணுடையவர்கள் என்ற வாக்கை கேட்டிருப்போம்.
இக்காலத்தில் எல்லோரும் நன்றாக படித்து நல்ல நிலையில் வந்து விட்டனர், ஆனாலும் தங்கள் கண்கள் இருளடைந்து தான் காணப்படுகின்றனர். நாம் ஒரு காரியத்தை ஒரு விதமாய் பார்த்தால் மற்றவர்கள் அதை வேறு விதமாய் பார்க்கின்றனர். அதற்கு உதாரணமாக வேதத்தில், மோசே கானான் தேசத்தை வேவு பார்க்க பத்து பேரை அனுப்பினான். அவர்கள் அனைவரும் தேசத்தை வேவு பார்த்து எட்டு பேர் தங்கள் கண்கள் இருளடைந்ததால் இஸ்ரவேல் ஜனங்களை கலங்கப்பண்ணும்படியான வார்த்தைகளை சொன்னார்கள்.
To get daily story and prayer requests in whats app contact +917904957814
அவர்களில் மீந்த இரண்டு பேரின் கண்கள் தெளிவாய் இருந்தபடியால் அவர்களே அந்த தேசத்தை சுதந்தரித்தார்கள்.
நம் சரீரத்தின் விளக்காய் விளங்குவது கண்கள் தான். நாம் பார்க்கின்ற விதம் தான் நம் கண்கள் தெளிவானதா அல்லது இருளடைந்து விட்டதா என்பதை தெளிவுபடுத்தும். தெளிவான கண்களும், தொளிவான இருதயமும் இருக்கும்போது நம் வாழ்வு எப்பொழுதும் வெளிச்சமாக தான் இருக்கும். எப்பொழுது நாம் பார்க்கின்ற விதம் மாறுபடுகிறதோ அப்போது தான் நம் கண்கள் இருளடைய ஆரம்பிக்கிறது. பிறரை ஏளனமாக பார்ப்பது, உயர்வு தாழ்வு பார்ப்பது, எரிச்சலுடன் பார்ப்பது, கோபத்துடன் பார்ப்பது என பல்வேறு கோணங்களில் பார்வை மாறும்போது கண்கள் இருளடைகிறது. வேதம் சொல்கிறது,
லூக்கா 11:34,35
34. கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது, உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும், உன் கண் கெட்டதாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்.
35. ஆகையால் உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.
எனவே நம் கண்களை அநேகருக்கு வெளிச்சம் கொடுக்கிற கண்களாய் மாற்றும் போது உலகத்திற்கு வெளிச்சமாய் இருப்போம்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!
ஓர் குட்டிக் கதை
=============
தன்வினை தன்னைச் சுடும்!
=============
சகோதர சிநேகம் என்பது இன்றியமையாத ஒன்று. சகோதர சிநேகம் இல்லாத காரணத்தினால் தான் அநேக தகராறு ஏற்படுகிறது. திருமணம் வரை ஏதோ சில சிநேகம் இருக்கும் ஆனால் திருமணத்திற்கு பின்னர் அநேகர் தங்கள் சிநேகத்தை மறந்து விடுகின்றனர். காரணம் அவர்கள் மனைவிகளே. சிலரோ சொத்து அவர்கள் வசம் இருக்கும் வரை அன்பு செலுத்துகின்றனர், சொத்து அவர்கள் வசம் சென்றதும் அந்த அன்பு மாறுபடுகிறது.
இணைபிரியாத நண்பர்களை கூட பிரித்து விடலாம் ஆனால் இரத்த சம்பந்தப்பட்ட சிநேகத்தை பிரிப்பது என்பது லேசான காரியம் அல்ல. என்ன தான் வெளிப்படையாக சிநேகத்தை மறைத்தாலும் தன் உள்ளத்தில் என்றும் நிரந்தர சிநேகம் இருக்கும் ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள்.
சகோதர சிநேகத்தின் முக்கியத்துவத்தை இக்கதையின் மூலம் காண்போம்.
ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி இருந்தார். அவருக்கு இரண்டு புதல்வர்கள். மூத்தவன் கெட்டிக்காரன். அடுத்தவனோ கள்ளம் கபடு அறியாத பால்மனம் கொண்டவன்.
மூத்தவனுக்குத் திருமணம் ஆகிவிட்டிருந்தது. இளையவனுக்குத் திருமணம் முடியவில்லை.
விவசாயி மனைவி பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்.
அதனால் மூத்த மருமகளின் அதிகாரம் அந்த வீட்டில் அதிகமாக இருந்தது.
விவசாயிக்கு இருபது ஏக்கர் நிலம் இருந்தது. பத்து ஏக்கர் நிலம், காவிரி ஆறு ஓடும் அருகில் நல்ல நீர்ப்பாசனம் இருக்கும் இடத்தில் அமைந்திருந்தது. ஆனால் அடுத்த பத்து ஏக்கரோ, மண் இறுகிக் கெட்டியாகி பாறைகள் நிறைந்திருக்கும் இடத்தில் அமைந்திருந்தது.
அந்த நிலத்தில் விவசாயி எந்த சாகுபடியும் செய்வதில்லை. ஆனால் பரம்பரை பரம்பரையாக வரும் முன்னோர் நிலம் என்பதால் அதை விற்காமல் போற்றிப் பாதுகாத்து வந்தார்.
ஆற்றுப் பாசனம் அருகில் இருக்கும் இடத்தில் ஆண்டுக்கு மூன்று போகம் சாகுபடி செய்து சாமர்த்தியமாக சம்பாதித்துக் கொண்டிருந்தார்.
ஒருநாள் அவருக்குக் கடும் நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே பெரியவனும் சின்னவனும் சேர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் நன்கு பரிசோதித்துவிட்டு இன்னும் 72 மணி நேரம் தாண்டினால்தான் தங்களால் எதுவும் சொல்ல முடியும் என்று கூறினர். பிள்ளைகள் இருவரும் சோர்ந்து போயினர்.
விவசாயி தனக்கு ஏற்பட இருக்கும் சாவை நினைத்து அச்சம் கொண்டார். தன் உடல் நிலையை நினைத்து நிச்சயம் தான் உயிருடன் இருக்க மாட்டோம் என்று தீர்மானித்தார்.
எனவே இரண்டு மகன்களையும் அழைத்தார். அப்போதுதான் சின்னவன் அவருக்கு உணவு எடுத்து வருவதற்காக வீட்டுக்குச் சென்றிருந்தான். பெரியவன் மட்டுமே அவரது அருகில் இருந்தான். கைகட்டி வாய்பொத்தி அப்பா அருகில் நின்று கொண்டிருந்தான்.
அவனை அருகில் அழைத்த விவசாயி, இளையவன் எங்கே என்று சைகையால் கேட்டார்.
அவனும் விவரமாகக் கூறினான். அதற்குள் அவருக்கு வியர்க்க ஆரம்பித்தது. மார்பு வலி மீண்டும் ஏற்பட்டிருப்பதை உணர்ந்தார்.
உடனே தனது சக்தியை எல்லாம் திரட்டி, “”பெரிய தம்பி, இனி நான் பிழைக்கப் போவதில்லை. அதனால் என் சொத்துக்களை உங்களுக்கு எப்படிப் பங்கிட்டுக் கொள்வது என்று சொல்லி விடுகிறேன். இப்போது சின்னவன் இல்லை. நான் சொத்தை எப்படிப் பிரித்தேன் என்பதை நீயே அவனிடம் சொல்லிவிடு. இருவரும் சண்டை போட்டுக் கொள்ளாமல் ஒற்றுமையுடனும் அன்புடனும் வாழ வேண்டும். உன் தம்பிக்கு நீயே நல்ல இடத்தில் பெண் பார்த்துத் திருமணம் செய்து வைக்க வேண்டும்..
நமக்கு மொத்தம் இருபது ஏக்கர் நிலம் உள்ளது. அதில் பத்து ஏக்கர் நல்ல ஆற்றுப்பாசனம் கொண்டது. அடுத்த பத்து ஏக்கரோ விவசாயம் செய்ய தகுதியற்றது. ஆனால் அது நம் முன்னோர்களின் பரம்பரை சொத்து. ஆகவே அதை விற்றுவிடாதீர்கள். ஆற்றுப்பாசனம் கொண்ட நிலத்தை ஆளுக்கு ஐந்து ஏக்கராகவும் பாறை நிலத்தை ஆளுக்கு 5 ஏக்கராகவும் பிரித்துக் கொள்ளுங்கள். இதுவே எனது ஆசை. இதை நீ நிறைவேற்ற வேண்டும்” என்று கூறிவிட்டு உயிர் விட்டார் அந்த விவசாயி.
அந்தச் சமயம் பார்த்து மூத்தவனின் மனைவி தனது மாமனாரைப் பார்ப்பதற்காக அங்கே வந்தாள். தந்தை சொத்தைப் பிரிக்கும் விவரத்தைத் தன்னிடம் கூறியிருப்பதாக மனைவியிடம் கூறினான் பெரியவன்.
“”அதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றாள் அவனது மனைவி.
அப்போது இளையவன் சாப்பாட்டுடன் அங்கே வந்து சேர்ந்தான்.
“”ஏம்ப்பா, சோறு கட்டிக் கொடுத்துவிட்டு நானே விரைவாக வந்து விட்டேன். ஆனால் நீ வருவதற்கு ஏன் இவ்வளவு நேரம்? உன் அப்பா உன்னை அழைத்தார். நான் அப்பவே சோறு கொடுத்து அனுப்பிவிட்டதாகக் கூறினேன். நீ எங்காவது யாரிடமாவது பேசிக் கொண்டிருப்பாய் என்று நினைத்தவர் பொறுப்பற்றவன் என்று உன்னைத் திட்டினார். பின் அவரிடம் உள்ள சொத்துக்களை எப்படி இருவரும் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கும்போதே அவருக்கு நா குழற ஆரம்பித்துவிட்டது. கை மட்டும் வயிற்றைக் காட்டி பசி, பசி என்று கூறுவது போலத் தெரிந்தது. நாங்கள் உன்னைத் திட்டிக் கொண்டிருந்தோம். அடுத்த சில விநாடிகளில் அவருடைய உயிர் பிரிந்துவிட்டது. இப்போது மருத்துவரிடம் சொல்லப் போகிறோம்” என்று கூறிவிட்டுப் பொய்யாக அழுதுவிட்டுத் தனது கணவனைக் கூட்டிக் கொண்டு சென்றாள் அந்தப் பெண்.
இளையவன் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான்.
“”அப்பா, என்னை மன்னித்துவிடுங்கள். என் சைக்கிள் டயர் பஞ்சர் ஆகிவிட்டதால் அதைச் சரிசெய்து கொண்டு வருவதற்கு நேரமாகிவிட்டது. என்னை மன்னியுங்கள்…” என்று அவரைக் கட்டிக் கொண்டு அழுதான் இளையவன்.
பின்னர் டாக்டர் வந்து செய்யவேண்டியவற்றை எல்லாம் செய்தார்.
நாட்கள் ஓடின… ஒரு பத்திரத்தை எடுத்து வந்து இளையவன் முன் நீட்டினான் பெரியவன்.
“”என்ன அண்ணா இது?” என்று கேட்டான் இளையவன்.
“”நம் அப்பா சாகும்போது கூறியபடி, உனக்குப் பாறையாக இருந்த பத்து ஏக்கரையும் இதில் எழுதிக் கொடுத்திருக்கிறேன். அப்பா படுத்த படுக்கையாக இருந்தபோது நீ சாப்பாடு கொண்டு வரத் தாமதம் செய்ததால் உன்மேல் கோபம் கொண்டு, இறுகிய மண் உள்ள பத்து ஏக்கர் நிலத்தையே உனக்குக் கொடுக்கச் சொல்லிவிட்டார். இந்த விஷயத்தில் தான் எடுத்த முடிவை ஒருபோதும் மாற்றக்கூடாது என்றும் அப்படி மாற்றினால் தனது ஆன்மா சாந்தி அடையாது என்றும் இப்படிச் செய்தால்தான் உனக்குப் பொறுப்பு வந்து அவரை மாதிரி உழைத்து முன்னுக்கு வருவாய் என்று கூறி என்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்டு உயிரைவிட்டார் அப்பா!” என்றான் பெரியவன், தனது மனைவி சொல்லிக் கொடுத்தபடி.
இளையவன் அந்தப் பத்திரத்தை எடுத்துத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டான்.
“”அப்பா உங்கள் அறிவுரை வீண் போகாது. நான் அதே பாறை நிலத்தில் எனது முழு உழைப்பையும் திறமையையும் காட்டி நீங்கள் நினைத்ததுபோல முன்னேறுவேன். இது சத்தியம்!” என்று அழுதபடி, அவரது படத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.
அவன் ஏதாவது பிரச்னை பண்ணி விடுவானோ என்று பயந்து கொண்டிருந்த பெரியவனும் அவனது மனைவியும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
பெரியவனின் நிலம் நல்ல ஆற்றுப்பாசனம் என்பதால் அவனுக்கு விளைச்சல் நன்றாக இருந்தது.
சின்னவன் தன் தந்தையின் படத்தைத் தனது நிலத்தில் வைத்து அதற்குப் பூமாலை ஒன்றைப் போட்டு வணங்கிவிட்டு நிலத்தை உழ ஆரம்பித்தான். ஆனால், அவனால் அந்த நிலத்தைக் கொஞ்சம்கூட உழ முடியவில்லை.
வெகுநேரம் கஷ்டப்பட்டுவிட்டு, ஒரு கோடரியை எடுத்து அந்தப் பாறைகளை உடைக்க முயற்சித்தான்.
அப்போது, ஏதோ வழுவழுப்பான் பழுப்பு நிறம் கொண்ட கல் ஒன்று சிதறி உடைவது அவனுக்குத் தெரிந்தது. அட, என்ன இது? இங்கே உள்ள பாறை வித்தியாசமாக வழுவழுப்பாக இருக்கிறதே! இது என்ன பாறை? என்று வியந்து கொண்டே மேலும் வெட்டிப் பார்த்தான். என்ன ஆச்சரியம்! எங்கு பார்த்தாலும் ஒரே பளபளக்கும் வழுவழு கற்களாக இருந்தது. சூரிய வெளிச்சத்தில் அந்தப் பாறைகள் மின்னி அவனது கண்களைக் கூசச் செய்தன.
இது பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக, கட்டிடக்கலை தெரிந்த தனது நண்பனைச் சந்திக்க ஓடினான். அவனிடம் விவரம் கூறினான். அவனும் உடனே கிளம்பி அந்த நிலம் இருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான்.
அந்த வழுவழு பாறைகளைப் பார்த்ததும் அவனுக்கு நா எழவில்லை.
Daily what's app ithu pontu mes venum endral sent your name to +917904957814
“”நண்பா, இனி நீ ஒரு மகாராஜாவுக்குச் சமமான பணக்காரன். ஆம்! இந்தக் கற்கள் எல்லாம் சாதாரணக் கற்கள் அல்ல! இவை அத்தனையும் வீடு கட்ட உதவும் வண்ண கிரானைட் கற்கள். இப்போதெல்லாம் இதை வைத்துத்தான் வீட்டை எல்லோரும் அழகுபடுத்துகிறார்கள். உன் நிலம் சாதாரண நிலமல்ல! விலையுயர்ந்த கற்களைக் கொண்ட சுரங்கம்” என்றான் தனது நண்பனைக் கட்டிக் கொண்டு.
இளைய மகன் சந்தோஷம் தாங்க முடியாமல் தனது தந்தையின் படத்துக்கு அருகே சென்று மீண்டும் அவரை வணங்கி ஆனந்தக் கண்ணீர் விட்டான்.
இப்போது, ஊரின் பெரும் பணக்காரர்களில் பெரும் பணக்காரன் அந்த இளைய மகன். சொந்தமாகத் தனக்கென வியாபாரம் ஆரம்பித்து, கற்களை வெட்டி எடுக்கவும் விற்கவும் பல தொழிலாளிகளை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு நல்ல சம்பளமும் கொடுத்தான்.
நல்ல பெண் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டு உயர்ந்த வாழ்க்கை வாழ ஆரம்பித்தான்.
மூத்தவனும் அவனது மனைவியும் தாங்கள் செய்த தவறை எண்ணி வருந்தினர்.
என் அன்பு வாசகர்களே,
சகோதர சிநேகம் இல்லாவிட்டால் நம் சகோதரரால் எந்த ஒரு காரியத்தையும் பெற்றுக்கொள்ள முடியாது என்பதே இக்கதையின் கருத்து.
முதலாமவன் சகோதர சிநேகத்தில் நிலைத்திருந்தால் அவனும் அந்த ஆசீர்வாதத்தை அனுபவித்திருக்கலாம். ஆனால் தன் மனைவியின் பேச்சை கேட்டு ஆசீர்வாதத்தை இழந்துவிட்டான்.
சகோதர சிநேகம் மனுஷரால் போதிக்கப்பட்டதல்ல தேவனே அதை குறித்து போதிக்கிறார்
1 தெசலோனிக்கேயர் 4:9
சகோதர சிநேகத்தைக்குறித்து நான் உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை. நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படிக்குத் தேவனாலே போதிக்கப்பட்டவர்களாயிருக்கிறீர்களே.
1 பேதுரு 1:22
ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்.
எனவே நாம் சுத்த இருதயத்தோடு அன்பு கூர்ந்து நமது அன்பை மாயமற்ற சிநேகமாய் மாற்றுவோம்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!
===========
ஓர் குட்டிக் கதை
நீங்கள் அசாதரணமானவா்கள்
============
விஞ்ஞானி ஒருவர்.. தன் காரில் பயணம் செய்து கொண்டு இருந்தார்… வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது.. கடை ஏதும் இல்லை.. கடை குறைந்தது ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கிறது..கூட யாரும் வராததால் அவரே டயரை மாற்ற ஆரம்பித்தார்.. அனைத்து போல்ட்டையும் கழட்டி விட்டு ஸ்டெப்னி எடுக்க போகும் போது கால் இடறி கீழே விழுந்தார்.. கையில் வைத்திருந்த போல்ட்கள் ஒரு குட்டையில் விழுந்து விட்டது.. இப்பொழுது என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருந்தார்..
அப்பொழுது கிழிந்த ஆடையோடு ஒரு வழிப்போக்கன் அந்த வழியாக வந்தான்.. அந்த வழிப்போக்கன், இவரைப்பார்த்து ஐயா என்ன ஆச்சு.. என்றான். இவரோ இவனிடம் சொல்லி என்ன ஆக போகிறது என்று எண்ணிய விஞ்ஞானி ஒன்றும் இல்லை நீங்கள் போகலாம்..என்றார். அந்த வழிப்போக்கன் கிளம்ப எத்தனித்தான்.. அந்த விஞ்ஞானிக்கு அப்பொழுது ஒரு எண்ணம் தோன்றியது.. இந்த சாக்கடை குட்டையில் இவனை விட்டால் யாரும் இறங்க மாட்டார்கள், அதனால் இவனை இறங்க சொல்லலாம் என்று எண்ணி அவனிடம், நான் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன், அந்த குட்டையில் விழுந்த என்னுடைய போல்ட்டை எடுத்து தாருங்கள் என்றார்..
ஒ.. இது தான் உங்கள் பிரச்சனையா..? ..நான் அந்த குட்டையில் இறங்கி எடுத்து தர ஆட்சேபனை ஏதும் இல்லை.. ஆனால் அதை விட ஒரு சுலப வழி இருக்கிறது.. மூன்று சக்கரங்களில் இருந்து தலா ஒரு போல்ட்களை கழட்டி இந்த சக்கரத்தை மாட்டி, அருகில் உள்ள மெக்கானிக் கடையில் 4 போல்ட்டுகள் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டி கொள்ளுங்கள் என்று சொன்னார். தான் இத்தனை பெரிய விஞ்ஞானியாக இருந்தும் நமக்கு இந்த சுலப வழி தெரியாமல் போய் விட்டதே என்றும்.. இவருக்கு மூளை இல்லை என்றும் தப்பாக நினைத்ததற்கு வெட்கி தலை குனிந்தான்..
யாரையும் குறைவாக எண்ணக்கூடாது.
என் அன்புக்குாியவா்களே..
உயிருள்ள பறவைக்கு எறும்பு உணவு உயிரற்ற பறவையோ எறும்புகளுக்கு உணவு. ஒரு மரத்தில் பல்லாயிரம் தீக்குச்சிகளை உருவாக்கலாம். ஆனால் அதே ஒரு தீக்குச்சியினால் பல்லாயிரம் மரங்களை அழிக்கலாம். நேரமும், சூழ்நிலையும் எப்பொழுதும் மாறலாம் எனவே யாரையும் குறைவாக எண்ண வேண்டாம். வெளித்தோற்றத்தைப் பார்த்து ஒருவரையும் சாதாரணமாக எண்ணிவிடக்கூடாது.
சவுலின் பார்வை..
தாவீதின் வயதையும் தோற்றத்தையும் பார்த்து. கோலியாத் கூட யுத்தம் பண்ண இவனால் முடியாது. இவ்ளோ பெரிய ராஜாவாகிய நானே பயந்து உட்காா்ந்திருக்கிறேன் ..இவன் அவனை கொன்று விடுவானா??? என்ன பைத்தியக்காரத்தனம். என்று மனதில் நினைத்து. சவுல் இராஜா இவ்வாறாகக் கூறினான்.
1 சாமுவேல் 17:3
நீ இந்தப் பெலிஸ்தனோடே எதிர்த்து யுத்தம் பண்ண உன்னால் ஆகாது. நீ இளைஞன், அவனோ தன் சிறுவயது முதல் யுத்தவீரன் என்றான். -
தாவீது சவுலைப் பார்த்து:
உம்முடைய அடியான் என் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறபோது,
ஒருவிசை ஒரு சிங்கமும், ஒருவிசை ஒரு கரடியும் வந்து, மந்தையிலிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்துக்கொண்டது. நான் அதைத் தொடர்ந்துபோய், அதை அடித்து, அதை அதின் வாய்க்குத் தப்புவித்தேன். அது என்மேல் பாய்ந்தபோது, நான் அதின் தாடியைப் பிடித்து,அதை அடித்துக் கொன்றுபோட்டேன். அந்தச் சிங்கத்தையும் அந்தக் கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன். விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப் போல இருப்பான். அவன் ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்தித்தானே என்றான்.
பின்னும் தாவீது:
என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடிலின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான். அப்பொழுது சவுல் தாவீதைப் பார்த்து: போ. கர்த்தர் உன்னுடனேகூட இருப்பாராக என்றான். - 1 சாமுவேல் 17:32-37
கோலியாத்தின் பார்வை பெலிஸ்தன் சுற்றிப்பார்த்து: தாவீதைக் கண்டு, அவன் இளைஞனும் சவுந்தரிய ரூபமான சிவந்த மேனியுள்ளவனுமாயிருந்தபடியினால், அவனை அசட்டைபண்ணினான். பெலிஸ்தன் தாவீதைப் பார்த்து: நீ தடிகளோடே என்னிடத்தில் வர நான் நாயா என்று சொல்லி, அவன் தன் தேவா்களைக் கொண்டு தாவீதைச் சபித்தான். பின்னும் அந்தப் பெலிஸ்தன் தாவீதைப் பார்த்து: என்னிடத்தில் வா. நான் உன் மாம்சத்தை ஆகா யத்துப்பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக் கும் கொடுப்பேன்.. 1 சாமுவேல்17: 41-44
கா்த்தாின் பார்வை கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம். நான் இவனைப் புறக்கணித்தேன். மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன். மனுஷன் முகத்தைப் பார்ப்பான். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றாா். இப்படி ஈசாய் தன் குமாரரில் ஏழுபேரை சாமுவேலுக்கு முன்பாகக் கடந்து போகப்பண்ணினான். பின்பு சாமுவேல் ஈசாயைப் பார்த்து: கா்த்தா் இவர்களில் ஒருவனையும் தொிந்து கொள்ளவில்லை என்று சொல்லி, உன் பிள்ளைகள் இவ்வளவுதானா என்று ஈசாயைக் கேட்டான். அதற்கு அவன்: இன்னும் எல்லாருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான். அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான் என்றான்.
அப்பொழுது சாமுவேல் ஈசாயை நோக்கி: ஆள் அனுப்பி அவனை அழைப்பி....ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தான். அவன் சிவந்தமேனியும், அழகிய கண்களும் நல்ல ரூபமுள்ளவனுமாயிருந்தான். அப்பொழுது கர்த்தர்: இவன்தான், நீ எழுந்து இவனை அபிஷேகம்பண்ணு என்றார். (1 சாமுவேல் 16: 7-12)
குடும்பத்தால் அட்டைப் பண்ணப் பண்ணவனும், ஆடு மேய்க்கிறவனுமான ஒருவனை கா்த்தா் ராஜ அபிஷேகத்தைக் கெடுத்து தாவீதை கா்த்தா் கனப்படுத்தினாா். கடைசியில் யுத்தத்தில் ஜெயித்தது யாா்? ...
பெலிஸ்தனாகிய கோலியாத் எழும்பி,
தாவீதுக்கு எதிராகக் கிட்டிவருகையில்,
தாவீது தீவிரமாய் அந்தச் சேனைக்கும் அந்தப் பெலிஸ்தனுக்கும் எதிராக ஓடி,
தன் கையை அடைப்பத்திலே போட்டு, அதிலிருந்து ஒரு கல்லை எடுத்து, கவணிலே வைத்துச் சுழற்றி, பெலிஸ்தனுடைய நெற்றியில் பட எறிந்தான்.
அந்தக் கல் அவன் நெற்றியில் பதிந்து போனதினால், அவன் தரையிலே முகங்குப்புற விழுந்தான்.
இவ்விதமாகத் தாவீது ஒரு கவணினாலும் ஒரு கல்லினாலும் பெலிஸ்தனை மேற்கொண்டு, அவனை மடங்கடித்து, அவனைக் கொன்று போட்டான்.
தாவீதின் கையில் பட்டயம் இல்லாதிருந்தது.
ஆகையால் தாவீது பெலிஸ்தனண்டையில் ஓடி அவன்மேல் நின்று, அவன் பட்டயத்தை எடுத்து, அதை அதின் உறையிலிருந்து உருவி, அவனைக் கொன்று, அதினாலே அவன் தலையை வெட்டிப்போட்டான்.
அப்பொழுது தங்கள் வீரன் செத்துப்போனான் என்று பெலிஸ் தர் கண்டு, ஓடிப்போனார்கள். - 1 சாமு. 17:48-51
என்_அன்புக்குாியவா்களே, ..
தோற்றத்தையும், வயதையும் பாா்த்து
யாரையும் குறைவாக எண்ணிவிட வேண்டாம்.
கா்த்தா் ஒவ்வொருவா் மேலேயும் பலப்பல திட்டங்களை வைத்திருக்கிறார்.
ஏன் நீங்கள் கூட மற்றவர்களால் அசட்டை பண்ணப்பட்டிருக்கலாம். சோர்ந்து போகாதீா்கள்.
அட்டைப் பண்ணப்பட்டவா்கள் மத்தியில் கா்த்தா் உங்களை கொண்டு செய்கிற காாியம் பயங்கரமானதாகவும் யாரும் செய்யக் கூடாததா கவும் இருக்கும்.
To get daily story and prayer help contact +917904957814
உங்களை அசட்டை பண்ணி அவமானப்படுத்தி னவா்கள் வாயடைத்து திகைத்து போவாகள். கா்த்தா் உங்கள் மேல் வைத்துள்ள திட்டத்தை யாா் மாற்ற முடியும்.
கா்த்தா் உங்கள் மேல் திட்டங்களை வைத்துள்ளாா் என் பதை முதலாவது நீங்கள் நம்ப வேண்டும்.அவா் சித்தம் நடை பெற உங்களை ஆவியானவா் கைகளில் அா்பணிக்க வேண்டும். அப்போது ஆவியானவா் உங்கள் மேலுள்ள தேவ சித்தத்தை நிறை வேற்றுவாா்.
நீங்கள் சாதாரணமானவா்களல்ல. ....கா்த்தா் சித்ததைச் செய்யும் அசாதரணமானவா்கள் !!
நீங்கள்_ஆசீா்வதிக்கப்பட்டவா்கள் !!
Thanks for using my website. Post your comments on this