ஓர் குட்டிக் கதை
=============
ஏதோ ஒரு உதவி
=============
அடர்ந்த காடு ஒன்று இருந்தது, அந்த காட்டை ஒட்டி சிறு கிராமம் ஒன்று அமைந்திருந்தது. அந்த கிராமத்தை சுற்றி இங்கு வசிக்கும் மக்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தார்கள். சுமார் நூறு குடும்பங்கள் அங்கு வசித்துத் வருகின்றன. அந்த ஊரின் கடைசி வீட்டில் போகன் என்பவனும், அவன் மனைவியும் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு சோமன், சாமன், இரு மகன்கள். இருவருமே பள்ளிக்கு போகாமல் போனுக்கு சொந்தமான விளைநிலத்தில் தந்தையுடன் விவசாயம் செய்து வந்தார்கள்.
இவர்களுடைய நிலம் காட்டை ஒட்டி இருந்ததால் அதில் எவ்வளவு விளைச்சல் கிடைத்தாலும் பாதிக்கு பாதி காட்டில் வசித்து வந்த மிருகங்களால் மேயப்பட்டோ, அல்லது அழிக்கப்பட்டோ இவர்களுக்கு பெருத்த நஷ்டத்தை உண்டாக்கி விடுகிறது. இவர்களும் பல முறை ஊர் தலைவரிடம் முறையிட்டு விட்டார்கள். அவர் மட்டும் என்ன செய்வார் பாவம்? அவரது நிலத்திலும் யானைகளும் பன்றிகளும் புகுந்து நிறைய சேதத்தை ஏற்படுத்தி விடுகிறது. ஊர் தலைவர் வசிக்கும் மக்கள் அனைவரிடமும் கை நாட்டு பெற்று ஒரு மனு எழுதி அதை கொண்டு போய் பக்கத்து டவுனில் இருக்கும் அலுவலகத்தில் கொடுக்க மட்டும் முடிந்தது.
அவர்கள் மட்டும் என்ன செய்ய முடியும்? நான்கைந்து அதிகாரிகளை அனுப்பி அவர்கள் அந்த நிலங்களை எல்லாம் சுற்றி பார்த்துத் விட்டு “ஆமாம் இவை எல்லாம் மிருகங்களால் பாதிக்கப்படும் பகுதி” என்று எழுதி வைத்து விட்டு, இதற்கான தீர்வை சீக்கிரம் செய்கிறோம் என்று கிளம்பி விடுவார்கள்.
போகனின் மகன்களான சோமனும், சாமனும் அன்று தனியாக அவர்கள் விளை நிலத்தில் விதைத்து நன்கு வளர்ந்திருந்த தக்காளி செடிகளுக்கு நடுவே முளைத்திருந்த தேவையில்லாத செடிகளை பிடுங்கி கொண்டிருந்தார்கள். இருவருக்கும் சுமார் பத்து பனிரெண்டு வயதிருக்கும். தங்களுக்குள் விளையாண்டு கொண்டே நிலத்தில் இருந்த களைச்செடிகளை பிடுங்கி ஓரமாய் போட்டு கொண்டிருந்தனர். அப்பொழுது பெருத்த சத்தத்துடன் கார் ஒன்று பாதையில் இருந்த மரத்தில் மோதி நின்று போனதை கவனித்தனர்.
இருவரும் வேகமாக ஓடி அந்த காரை அடைந்தனர். உள்ளே இருவர் இருப்பது தெரிந்தது. சட்டென கதவை இழுத்துத் திறக்க முயசெய்தனர். அது திறக்க முடியாமல் இருந்தது, இருந்தாலும் இருவரும் விடாமல் சேர்ந்து இழுத்து ஒரு வழியாக ஒரு பக்க கதவை திறந்து விட்டனர். உள்ளே அழுது கொண்டிருந்த இரு பெண்களை மெதுவாக கீழே இழுத்தனர். கொஞ்சம் கொஞ்சமாக இந்த சிறுவர்களே அவர்களை வெளியே கொண்டு வந்து தரையில் உட்காரவைத்தனர். சாமன் ஓடிப்போய் தாங்கள் குடிப்பதற்காக வைத்திருந்த மண்பானை தண்ணீரை எடுத்து வந்து ஒரு கிளாசில் ஊற்றி அவர்களுக்கு குடிக்க கொடுத்தான்.
முன்னால் உட்கார்ந்திருந்த டிரைவரும் வெளிவர முடியாமல் சிக்கி கொண்டிருந்தார். சோமன், சாமனிடம் நீ டிரைவரை வெளியே கொண்டு வர்றதுக்கு முயற்சி பண்ணு, நான் பக்கத்துத் தோட்டத்துக்கு போயி ஆளுங்களை கூட்டி வர்றேன், சொல்லிவிட்டு வேகமாக அந்த பாதையிலேயே ஓடினான். ஐந்து நிமிடத்துக்குள் இரண்டு மூன்று ஆட்கள் அங்கு வர எல்லோரும் சேர்ந்து டிரைவரை வெளியே கொண்டு வந்தார்கள். மூவருக்குமே காயங்கள் அதிகமாக இருந்தது.
உடனே “ஊர் தலைவரை” அழைத்து வந்து, அவர் மூலம் விவரங்களை பக்கத்து டவுன் போலீஸ் ஸ்டேசனில் தெரிவித்தனர். ஒரு மாதம் ஓடியிருந்தது, போகனின் வீட்டு முன் ஒரு கார் வந்து நின்றது, போகன் வேகமாக வெளியே வந்து பார்த்தான்.அதிலிருந்து, இறங்கிய நல்ல உடை அணிந்த பெரிய மனிதர், இங்க இரண்டு பசங்க இருப்பாங்களே என்று கேட்டார். என்னோட பசங்க தான் சார், ஏதாவது தப்பு தண்டா பண்ணிட்டானுங்களா சார் ! பயந்து கொண்டே கேட்டான்.
அதெல்லாம் இல்லை, என்னோட பொண்ணுங்க இங்க தோட்டம் பார்க்க வந்திருந்தாங்க, அவங்க வந்த கார் மரத்துல மோதி ஆக்சிடெண்ட் ஆயிடுச்சு. தெரியும்கய்யா, எங்க தோட்டத்துக்கு முன்னாடிதான் நடந்துச்சு, எங்க பசங்க கூட ஓடிப்போய் உதவனதா சொன்னாங்க.அதேதான், இப்ப அவங்க நல்லா இருக்காங்க, அவங்க என் கிட்டே சொல்லி அந்த பசங்களுக்கு ஏதாவது செய்யணும்னு சொன்னாங்க, அவங்களை கூப்பிடுங்க.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே இவர்களை சுற்றி கூட்டம் கூடி விட்டது. அப்பொழுது வீட்டுக்கு வந்து கொண்டிருந்த சோமனும், சாமனும், தூரத்தில் இருந்து பார்த்தபோது தன் வீட்டில் கூட்டம் இருப்பதை பார்த்தவுடன் வேகமாக ஓடி வந்தனர். ஐயா இவங்கதான் எங்க பசங்க, அவரிடம் இருவரை அழைத்துத் போனான், அவர் இவர்கள் இருவரையும் அணைத்து, ரொம்ப நன்றி தம்பிங்களா, அவசரத்துக்கு அன்னைக்கு உதவினீங்க, உங்களுக்கு என்ன வேணும்? கேளுங்க, நான் செஞ்சு தர்றேன்.
இருவரும் திகைத்து நின்றனர்., சட்டென சோமன், ஐயா எங்களுக்கு ஒண்ணும் வேண்டாமய்யா, ஆனா ஒரே ஒரு உதவி மட்டும் பண்ணனும்ங்கய்யா என்று கேட்டனர். என்ன உதவிப்பா? எங்க ஊர் விவசாய பூமியில மிருகங்க வந்து அடிக்கடி பயிரை எல்லாம் அழிச்சுட்டு போயிடுதுங்க, அதுங்க வராம பண்ணறதுக்கு ஏதாவது வழி செஞ்சு கொடுங்கய்யா.. இப்பொழுது அந்த பெரியவர் திகைத்தார்? இதற்கு அவர் என்ன செய்ய முடியும்? என்றாலும் அந்த சிறுவர்களின் பண்பை கண்டு வியந்தார். தனக்காக எதுவும் கேட்காமல் ஊர் நன்மைக்காக உதவி கேட்கிறார்களே..!
இதுக்கு அரசாங்கமே என்ன செய்யறதுன்னு முழிச்சுகிட்டு இருக்கு, இருந்தாலும் உங்க ஊர் நிலத்தை சுற்றி என்னால முடிஞ்ச அளவுக்கு, இல்லையின்னா மத்தவங்ககிட்ட உதவிய கேட்டு சூரிய விளக்கு போட சொல்றேன். அது பகல் முழுக்க சூரிய ஒளிய சேமிச்சு இராத்திரி லைட்டா எரியும். அதனால வெளிச்சம் கிடைக்கும். வெளிச்சம் இருந்தா ஒரளவு மிருகங்க வர்றதுக்கு யோசிக்கும்.
ரொம்ப நன்றிங்கய்யா, இந்த உதவிய செஞ்சு கொடுத்தா போதுங்கய்யா. அந்த சிறுவர்களை பாராட்டி விட்டு அங்கிருந்து கிளம்பினார் காரில் வந்தவர்.
To Get Daily Story # prayers Contact +918148663456
என் அன்பு வாசகர்களே,
இன்றைய கதையில் வெறும் சிறிய பாதையில் வாகனத்தை இயக்கியதால் அந்த வாகனம் பெருத்த சேதத்தை அடைந்தது. காரணம், வயல்களில் அல்லது தோட்டங்களில் நடந்தோ அல்லது அதற்குன்டான பிரத்யேகமான வாகனங்களிலோ தான் செல்ல வேண்டும்.
எங்கு செல்கிறோம், எதற்காக செல்கிறோம் என்ற உணர்வில்லாதவர்களாய் எங்கு சென்றாலும் அது மிகுந்த சேதத்தை ஏற்படுத்தும். உதாரணமாக, விஷேச வீடுகளுக்கும், மரண வீடுகளுக்கும் எதற்காக செல்கிறோம் என்ற அறிவு இல்லையென்றால் அங்கு சென்று எந்தவித பிரயோஜனமுமில்லை.
அதுபோல, நாம் நம்முடைய ஆண்டவரை ஆராதிக்க எதற்காக செல்கிறோம்???. பிறர் நம்மை கிறிஸ்தவர்கள் என்று நம்ப வேண்டும் என்ற எண்ணத்திலா??, அல்லது முழுமனதோடா??. பிறருக்காக ஆலயம் செல்கிறவர்கள், தாங்கள் எங்கு செல்கிறோம்?? எதற்காக செல்கிறோம் என்ற உணர்வில்லாதவர்களாய் இருக்கிறபடியால் செல்லக்கூடாத இடத்திற்கு, செல்லக்கூடாத வாகனத்தில் சென்று விபத்தை ஏற்படுத்திய அந்த வாகனத்தை போல் இருக்கிறார்கள்
வேதம் சொல்கிறது,
உபாகமம் 6:5
நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புக்கூருவாயாக.
எனவே நாம் நம்முடைய தேவனை மேற்கூறிய வசன பிரகாரம் ஆராதிப்போம், ஆசீர்வாதத்தை சுதந்தரிப்போம்.
=============
ஓர் குட்டிக் கதை
"உன் பேச்சு நீ யாரென்று சொல்லும்"
=============
ஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்குப் பார்வை கிடையாது.
அவ்வழியாக வந்த ஒருவன் “ஏ கிழவா, இந்த வழியாக சற்று முன் யாராவது சென்றார்களா?” என்று அதிகாரத் தோரணையில் கேட்டான்.
அதற்குத் துறவி, “இதற்கு முன் இந்த வழியாக யாரும் சென்றதாகத் தெரியவில்லை.” என்றார்.
சிறிது நேரத்தில் மற்றொருவன் அங்கே வந்து, “ஐயா, இதற்கு முன் யாராவது இப்பக்கமாகச் சென்றார்களா?” என்று கேட்டான்.அதற்கு அத்துறவி, “சற்று முன் இந்த வழியாகச் சென்ற ஒருவன் இதே கேள்வியைக் கேட்டு விட்டுச் சென்றான்.” என்றார்.
மேலும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் அங்கு வந்தான். அவன் “துறவியாரே, வணங்குகிறேன். இதற்கு முன்பு இந்த வழியாக யாராவது செல்லும் சத்தம் தங்களுக்குக் கேட்டதா? தயவு செய்து கூறுங்கள்” என்று பணிவோடு கூறினான்.
உடனே துறவி, “மன்னர் பெருமானே, வணக்கம். இந்த வழியாக முதலில் ஒரு வீரன் சென்றான். அடுத்து ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட இதே கேள்வியைத்தான் கேட்டனர்.” என்றார்.
மிகவும் வியந்த அரசன், “துறவியாரே, தங்களுக்குப் பார்வை இல்லை. அப்படி இருந்தும் நான் அரசன் என்றும், முன்னால் சென்றவர்கள் வீரன், அமைச்சர் என்றும் எப்படி அறிந்தீர்கள்?” என்று கேட்டான்.
“அரசே, இதைக் கண்டறிய பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே அவர் யார், அவர் தகுதி என்ன என்பதை எல்லாம் அறிய முடியும்.” என்றார்.
“முதலில் வந்தவர் சிறிதும் மரியாதையின்றி கேள்வி கேட்டார். அடுத்து வந்தவர் பேச்சில் அதிகாரத்துடன் பணிவு இருந்தது. ஆனால் நீங்களோ மிகவும் பணிவாகப் பேசுறீர்கள்.” என்று விளக்கினாா்.அந்த பார்வையற்ற துறவி
என் அன்புக்குாியவா்களே,
பேசுகிற பேச்சில் கனிவும், பணிவும் நிறைந்து இருக்கும் என்றால் பேசுகிறவா்கள் அரசனைப் போல பொறுப்புள்ளவா்களாகக் காணப்படுவாா் கள்.
1. அதிகாரத்தோடும் ஆணவத்தோடும் பேசுகிற பேச்சு சம்பளத்திற்கு வேலை செய்யும் தன் பெலத்தையும் ஞானத்தையும் ,படிப்பையும் நம்புகிறவன்.
அவன் மனிதனை ஒரு பைசாவுக் கூட மதிக்க மாட்டான்.நான் வேலை செய்கிறேன் சம்பளம் வாங்குகிறேன்.யாரையும் நான் மதிக்க வேண்டியதில்லை.என்ற உயா்வு மனப்பான்மை உடையவன்.
To get daily message in whats app contact +917904957814
2. கொஞ்சம் பணிவும், அதிகாரமும். பேசுகிற பேச்சு ஆபத்தானது.நம்பவும் முடியாது. நம்பாமல் இருக்கவும் முடியாது.
கண்டால் ஒருவிதம் காணாவிட்டால் வேறுவிதம் மனதுக்குள்அசட்டையாகவும், வெளியில் பணி வாகவும் பேசுவாா்கள். இப்படிப்பட்டவா்களை நம்பி ஒரு காாியத்தில் இறங்க முடியாது.
3. உண்மையாகவே கனிவும்,பணிவும் நிறைந்து பேசுகிறவா்கள் நல்ல அனுபவசாலிகள். கஷ்ட நஷ்டத்தை அறிந்தவா்களானதால் ஏழைகளை மதிப்பாா்கள். அவா்கள் பேச்சு உண்மையும், உத்தமமும் கிருபையும் நிறைந்தவா்களாய் பேசுவாா்கள். இவர்களே இயேசுவை அடிச்சுவடாகக் கொண்டு வாழ்கிறவா்கள் .
பேதுரு இவ்வாறாக தன் நிருபத்தில்...
நீங்கள் தேவனால் அழைக்கப்பட்டுமிருக்கிறீர் கள் . ஏனெனில் கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிாியைப் பின்வைத்துப்போனாா்.
அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை. அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்பவித்தார்.
1 பேதுரு 2:21- 23
எனவே நீங்கள் அவருடைய அடிச்சுவட்டை பின்பற்றி னால்அவரைப் போல நீங்கள் மாறிவிடுவீா்கள். என்பது உண்மை.
பைபிள் சொல்கிறது..
கொலோசெயர் 4:6
அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்ல வேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.
என் அன்புக்குாியவா்களே,
இனிமேல் உங்கள் வாா்த்தையானது....
கிருபை பொருந்தின வார்த்தைகளாயும் உப்பால் சாரமேறின வாா்த்தைகளாயும் எப்போதும் இருப்பதாக!!!
நீங்கள் ஆசீா்வதிக்கப்பட்டவா்கள் !!!
============
ஓர் குட்டிக் கதை
அரண்மனை
============
தலை குனிந்து எதையோ ஆழமாய் சிந்தித்து கொண்டிருந்த விஸ்வகர்மா தயானந்தன் டக்..டக்…என குதிரை அருகே வந்து நின்ற சத்தம் கேட்டு தலை நிமிர்ந்தார். குதிரையில் இருந்து இறங்கிய வீரன் அவரை வணங்கி விட்டு நமது அரசர் இன்று மாலை உங்களை சந்திக்க வருகிறார்.அப்படியே நீங்கள் கட்டி முடிக்கவுள்ள அரண்மனையையும் பார்க்க விரும்புகிறார். சொல்லி விட்டு நிறுத்தியவனை நல்லது நீ போகலாம்..அடுத்த நிமிடம் அந்த வீரன் குதிரை ஏறி காற்றாய் பறக்க ஆரம்பித்தான்.
தயானந்த் தன் பின்புறம் அழகோவியமாய் முடிக்கும் தறுவாயில் இருந்த அந்த அரண்மனையை புன்னகையுடன் பார்த்தார்.”அற்புத மாளிகையே என் திறமையை இந்த உலகுக்கு பறைசாற்ற வந்திருக்கிறாய், என்பதை வரும் மன்னன் வாயால் கேட்கப்போகிறேன்.
அப்பொழுது நீ வெட்கப்பட்டு நிற்கப்போகிறாய்.வாய் விட்டு சொன்னவர் மீண்டும் தன் அருகில் யாரோ நிற்பதை உணர்ந்தவர் திரும்பி பார்த்தார். அவரது உதவியாளன் சச்சிதான்ந்தன் நின்று கொண்டிருந்தான்.
ஐயா மன்னர் வரப்போகிறாரா?
ஆம்.சச்ச்சிதான்ந்த்..இன்று மாலை வருவதாக சொல்லி அனுப்பி இருக்கிறார்.வந்து அரண்மனையை பார்வையிடப்போகிறாராம்.
அவர் நிச்சயம் நீங்கள் உருவாக்கிய இந்த அரண்மனையை கண்டு பிரமித்து விடப்போகிறார்.
நிச்சயமாய்.. அனேகமாக அடுத்த மாதம் முடிவதற்குள் அவர் குடி புக நினைத்தாலும் நினைப்பார். சரி நீ என்ன செய்கிறாய் என்றால் உள்ளே சென்று நமது ஆட்களிடம் இந்த விவரத்தை தெரிவித்து விடு. முடிக்க வேண்டி இருக்கும் வேலைகளை முடித்து விட சொல்.
அவர் வரும்போது எந்த வேலைகளையும் செய்து கொண்டிருக்க வேண்டாம். புரிந்த்தா?
அப்படியே செய்கிறேன் ஐயா. அங்கிருந்து நகர்ந்தான் சச்சிதான்ந்த்.
மாலை மன்னர் பூபதி மகராஜ் வந்தவர் அரண்மனை வாயிலில் நின்றவர் தன் கண்களையே நம்ப முடியாமல் பார்த்துக்கொண்டிருந்தார்..
அற்புதம் அற்புதம் தயான்ந்த., உங்களின் கை வண்ண்மே வண்ணம். இந்த பூவுலகிலே இது வரை யாரும் பார்த்திருக்காக சிருஷ்டியை உருவாக்கி இருக்கிறீர்கள். இந்த மாளிகையின் வனப்பு என்னை மதி மயங்க செய்கிறது. இனி எந்த நாட்டு மன்னர்களும், விருந்தினர்களும் வந்தாலும் இந்த மாளிகையில்தான் தங்குவர். அவர்கள் எல்லோரும் மதிமயங்கட்டும் இந்த மாளிகையை பார்த்து. சொல்லி விட்டு ஆன்ந்தமாய் சிரித்தார் மகராஜா.
நன்றி மன்னா, நீங்கள் அடுத்த மாத இறுதிக்குள் இங்கு குடி வந்து விடலாம்.
நீங்கள் எப்பொழுது சொன்னாலும் ஓடி வந்து விடுவேன்.உங்களுக்கு என்ன கைமாறு செய்வேன் என்று யோசனை செய்து கொண்டுள்ளேன்.
மன்னா உங்களது அன்பு ஒன்றே போதும்.
இல்லை விஸ்வகர்மா, நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். ஒரு நிமிடம் உன் கண்களில் இந்த மாளிகையை பார்க்காமல் என்ன்னை போல சாதாரண மக்களின் கண்களாக நினைத்து இந்த மாளிகையை பார்..
வாயிலில் உயிரோடு நிற்பது போல் தோற்ற்மளிக்கும் இரு யானைகளும், அதனை ஒட்டி பளிங்கு போல தோற்றமளிக்கும் முகப்புக்களும் உள்ளே பார்த்தால் இயற்கை அன்னை வந்து உள்ளே வந்து விட்டாளோ என்ற அமைப்புடன் இருக்கும் சுவர்களும், என்னால் இந்த அழகின் வேதனையை அனுபவிக்க அனுபவிக்க ஆசை அடங்கவில்லை.
மன்னா உங்கள் ரசனை என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. போதும் மன்னா நான் ஒரு கலைஞன், உங்களின் அன்பு என்னை உணர்ச்சிக்கடலில் ஆழ்த்தி விடுகிறது. சர் விஸ்வகர்மா..நான் விடை பெறுகிறேன். அடுத்த முறை இங்கு குடிவருவது போலத்தான் வருவேன். அது மட்டுமல்ல இந்த அரண்மனையை சுற்றித்தான் இனி நம் அனைத்து அலுவல்களும் நடைபெற வேண்டும் என்று உத்தரவு போடுகிறேன்.
நல்லது மன்னா..விடை பெற்றார் மகராஜா.
மன்னர் வந்து சென்ற பின் இரண்டு நாட்கள் கழித்து வந்த மந்திரியார், தயான்ந்த் உடன் இந்த அரண்மனையை சுற்றிப்பார்த்து, அற்புதமாக உருவாக்கியுள்ளீர்கள். என் கண்களையே நம்ப முடியவில்லை.இப்படி ஒரு மாளிகையை எழுப்ப இனி அடுத்த விஸ்வகர்மா எப்பொழுது தோன்றுவாரோ?
மந்திரியாரே உங்கள் அன்புக்கு நன்றி..
நான் ஒரு யோசனை சொல்லட்டுமா விஸ்வகர்மா அவர்களே
சொல்லுங்கள் மந்திரியாரே..
நீங்கள் வெளியூர்களுக்கு எல்லாம் செல்ல வேண்டும், உங்கள் பெயர் உலகம் முழுக்க பரவ வேண்டும் என்று விரும்புகிறேன்.
நன்றி மந்திரியாரே ! நான் இதை பற்றி ஆலோசிக்கிறேன்.
மந்திரியார் விடை பெற்று சென்றவுடன், யோசனையுடன் நின்று கொண்டிருந்தார் விஸ்வகர்மா.
அன்று அரண்மனை முழுவதும் அன்று மலர்ந்த மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோலாகலாமாய் இருந்தது. வந்திருந்த அனைவரும் அந்த அரண்மனையின் அழகில மயங்கி நின்று விட்டனர்.
பூபதி மகராஜா தன் பரிவாரங்களுடன் வந்தவர்களை வரவேற்று உபசரித்து கொண்டிருந்தார். தன் தளபதியின் காதில் ஏதோ சொல்ல அவரும் தலையாட்டி விட்டு வாசலுக்கு சென்று நின்று கொண்டார்.
வாசலில் தன் உதவியாளனுடன் வந்த விஸ்வகர்மா தயான்ந்துவை இரு கரம் கூப்பி வரவேற்றான் தளபதி. வரவேற்பை ஏற்றுக்கொண்டு தலை குனிந்த விஸ்வகர்மா தயான்ந்த்,
நிமிர்ந்து தான் கட்டி முடித்த அரண்மனையை கண் குளிர கண்டார். அதன் வரவேற்புக்காக அவர் அமைத்திருந்த யானை சிலையை தடவி பார்த்தார்.இரு யானை சிலைகளையும் ஆசை தீர தடவிக்கொண்டிருந்தவரை தளபதி தங்களை மன்னர் மரியாதையுடன் அழைத்து வர சொல்லி இருக்கிறார். நல்லது வாருங்கள் உள்ளே செல்லுமுன் உதவியாளரிடம் திரும்பி நான்
நமது இல்லத்தின் அருகில் இருந்த கோயிலில் நமது பொருட்களை வைத்து விட்டு வந்து விட்டேன்.நீ தயவு செய்து அதை எடுத்து வந்து விடு என்று உத்தரவு இட்டார்.
தளபதி நீங்கள் செல்ல வேண்டாம் என் வீர்ர்களை அனுப்புகிறேன், எங்கு என்று மட்டும் சொல்லுங்கள்.
இல்லை தளபதியாரே, பூஜை செய்த அந்த பொருட்களை இன்னொரு விஸ்வகர்மாதான் தொட வேண்டும். ஆகவே அவர் செல்ல அனுமதி கொடுங்கள்.
சரி சீக்கிரமாய் சென்று எடுத்து வாருங்கள் தளபதி சொல்லி தயான்ந்தை மட்டும் உள்ளே அழைத்து சென்றான்.
வாருங்கள் விஸ்வகர்மா அவர்களே, பூஜைக்கு நேரமாகி விட்டது. அந்த அறையை பூஜைக்கு தேர்ந்தெடுத்து உள்ளோம். நீங்கள் சென்று முதல் ஆரத்தியை காட்டுங்கள், தளபதியாரே அவரை அழைத்து செல்லுங்கள்.
அந்த அறைக்குள் நுழைந்து அங்கு வைத்திருந்த சிலையை குனிந்து வணங்கிக்கொண்டிருந்த விஸ்வகர்மாவை அருகில் இருந்த தளபதி தனது வாளால் அவர்து தலையை சீவினான்.
விஸ்வகர்மாவின் தலை தனியாக சென்று உருண்டது. உடலில் இருந்து இரத்தம் பீச்சியடித்து
அந்த அறை முழுவதும் வழிந்தது.
சிறிது நேரம் அவர் உடல் துடிப்பதை பார்த்துக்கொண்டிருந்த தளபதி மன்னர் அருகில் சென்று அவரது காதில் சொல்ல அவர் முகம் மெல்ல புன்னகை புரிந்தது. நல்ல காரியம் செய்தாய்,
இனி அவன் இது போல எந்த காலத்திலும் இப்படிப்பட்ட அரண்மனையை கட்டக்கூடாது.
சொல்லி விட்டு சிரித்தான்.
அதன் பின் கோலாகலமாக அந்த விழா நடந்து கொண்டிருந்தது. நான்கு மணி நேரம் கழிந்து அந்த அரண்மனை அப்படியே சரிந்து விழுந்து மன்னர் உட்பட அங்கிருந்த அத்தனை பேரும் மண்ணோடு மண்ணாக சமாதியாகிவிட்டனர்.
ஓரிரு நாட்கள் கழிந்தபின் மந்திரியாரிடம் சொல்லிக்கொண்டிருந்தான் உதவியாளன். ஐயா அவருக்கு தளபதியே தன்னை வரவேற்க நின்று கொண்டிருப்பதை கண்டவுடன் சந்தேகம் தோன்றி விட்டது. தான் எப்படியும் உயிர் பிழைக்க முடியாது என்பதை உணர்ந்தவர் என்னை காப்பாற்ற அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டார்.
அது சரி, மாளிகை எப்படி தரை மட்டமானது.
ஐயா, நாங்கள் கலைஞர்கள்தான், ஆனால் சூட்சும்மானவர்கள். அன்று நீங்கள் ஒரு வார்த்தை அவரிடம் சொன்னது அவர் மனதில் பொறி பறந்தது, அதாவது வெளியூர் சென்று விடு என்று சொன்னதும் அவருக்கு சந்தேகம் வந்து விட்டது.
நாங்கள் எப்பொழுதும் ஒரு கட்டிடத்தை முடிக்கும்பொழுது அதனுடைய முடிச்சாய் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அதனுள் அமைத்து விடுவோம். எவ்வளவு பெரிய கட்டிடமாய் இருந்தாலும் அங்கிருந்த ஒரு கல்லை மாற்றி வைத்தால் அந்த கட்டிடமே காணாமல் போய் விடும்.அதனை வாயிலில் நின்றிருந்த இரு யானைகளிலும் வைத்திருந்தோம். இவர் உள்ளே செல்லுமுன் அந்த யானைகளை தடவுவதாக தளபதி நினைத்தான். இல்லை, அந்த சூட்சுமத்தை அவர் செய்து கொண்டிருந்தார்.
அதாவது அந்த இரு யானைகளும் இத்தனை நாழிகைக்குள் அவரே திரும்பி வந்து அந்த சூட்சுமத்தை சரி செய்து விட வேண்டும். இல்லாவிட்டால் அது அந்த அரண்மனையின் முடிச்சுக்களை அவிழ்க்க ஆரம்பித்து விடும்.
அவரைத்தான் அங்கேயே சமாதி ஆக்கி விட்டார்களே,எப்படி வந்து சரி செய்திருக்க முடியும். அந்த யானை சிலைகள் தன்னுடைய வேலையை காண்பித்து விட்டது.
மந்திரி “எனக்கு இவர்கள் திட்டம் புரிந்ததனால் விஸ்வகர்மாவிடம் சொல்லாமல் சொன்னேண். ஆனால் விதி யாரை விட்டது என பெருமூச்சு விட்டார்.
To get daily message in whats app and prayer requests contact +917904957814
என் அன்பு வாசகர்களே,
இந்த ராஜாவைப் போலத்தான் அநேகர் இன்று வாழ்ந்து வருகின்றனர். தற்பெருமை உடையவர்களாய் வாழ்ந்து இறுதியில் தங்கள் வாழ்க்கையை தாங்களே கெடுத்துக் கொள்கிறார்கள்.
மற்றவர்களால் எவ்வளவு புகழ், பணம் சம்பாதிக்க முடியுமோ சம்பாதித்து விட்டு அவர்களின் தேவை முடிந்ததும் குழம்பிலிருந்து கறிவேப்பிலையை தூக்கி வீசுவதை போல வெளியே வீசி எறிகின்றனர். பிறரின் உழைப்பை உதாசீனப்படுத்தி நாம் நன்றாக வாழ வேண்டும் என்று நினைத்தால் ரொம்ப நாட்கள் அவ்வாறு வாழ முடியாது. பிறரின் உழைப்பிற்கேற்ற ஊதியத்தை கொடுத்து அவர்களை சந்தோஷப்படுத்தினால் தான் நாமும் சந்தோஷமாய் வாழ முடியும்.
எசேக்கியா ராஜா தன் நாமம் விளங்க வேண்டும் அரண்மனையையும், பொக்கிஷ சாலை என எல்லாவற்றையும் பாபிலோனின் ராஜாவுக்கு காண்பித்தான். ஆனால் அதற்கு கிடைத்த பிரதிபலன் என்ன என்பதை வேதம் இவ்வாறு கூறுகிறது,
2 இராஜாக்கள் 20:17,18
17. இதோ நாட்கள் வரும், அப்பொழுது உமது வீட்டில் உள்ளதிலும், உமது பிதாக்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும்.
18. நீர் பெறப்போகிற உமது சந்தானமாகிய உமது குமாரர்களிலும் சிலர் பாபிலோன் அரமனையிலே அரமனை வேலைக்காரராயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
எனவே நாம் உழைப்பதாயிருந்தாலும், நமக்காக மற்றவர்கள் உழைப்பதாயிருந்தாலும் ஒருபோதும் விருதவாய் போகாதபடி காத்துக்கொண்டால் எந்நாளும் ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்போம்.
ஏசாயா 65:23
அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை, அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெறுவதுமில்லை, அவர்களும், அவர்களோடேகூட அவர்கள் சந்தானமும் கர்த்தராலே ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள்.
Thanks for using my website. Post your comments on this