Type Here to Get Search Results !

Psalm 76-78 | தேவனுடைய உண்மையுள்ள இருதயம் | ROLE OF GODLY PARENTS | ஆழமான பிரசங்க குறிப்புகள் | சங்கீதம் 76-78 | Jesus Sam

சங்கீதம் 76-78

🌟 *கர்த்தருடைய செயல்களை நினைவுகூருவேன்* 🌟




☄️ *“ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருஷங்களை நினைவுகூருவேன். கர்த்தருடைய செயல்களை நினைவுகூருவேன், உம்முடைய பூர்வகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்; உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன்.”* (சங்கீதம் 77:10-12).




💥 சங்கீதம் 77 ஆசாபின் சங்கீதம் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. *துக்கத்தில் நிலைத்திருப்பது, மனமுடைந்து சோர்வடைய வழிவகுக்கும்* என்ற கருத்தை இந்த சங்கீதம் தெரிவிக்கிறது. இருப்பினும், *கலக்கமடைந்துள்ள ஒரு இருதயம் தேவனுடைய மகத்தான செயல்களை நினைவுகூரும்போது, அது நம்பிக்கையுடன் பலப்படும்* என்று சங்கீதக்காரன் வலியுறுத்துகிறான்.




💥 அவனது ஆழ்ந்த விரக்தியின் மத்தியில், சங்கீதக்காரன் தேவனுடைய தயவையோ, அவருடைய இரக்கத்தையோ அல்லது அவருடைய வாக்குறுதி தன் வாழ்வில் நிறைவேற்றப்படுவதையோ தான் மீண்டும் அனுபவிக்க முடியாது என்று பயப்படுகிறான். இந்நிலையில் அவனுடைய தீர்மானங்கள் அவனுடைய வேதனையை நம்பிக்கையாக மாற்றுகின்றன: (i) *உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருஷங்களை நினைவு கூருவேன்,* (ii) *கர்த்தருடைய அதிசயமான செயல்களை நினைவுகூருவேன்,* (iii) *கர்த்தருடைய கிரியைகளையெல்லாம் தியானிப்பேன்,*




❇️ *உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருஷங்களை நினைவு கூருவேன்*




💥 தேவனுடைய வலதுகரம் அவருடைய வல்லமையைக் குறிக்கிறது. சங்கீதக்காரன் *தேவனுடைய வல்லமையை அனுபவித்த கடந்த ஆண்டுகளை நினைவுகூர்கிறான்.* அது அவனுக்கு *எதிர்காலத்திற்கான நம்பிக்கையைத் தருகிறது.* தேவன் தனக்காக என்ன செய்தார் என்பதை நினைவில் கொள்ள முடியாததால்தான், அவன் விரக்தியில் இருந்தான். இஸ்ரவேலரின் தோல்விக்கான முக்கிய காரணத்தை வேதம் விளக்குகிறது: *"இஸ்ரவேல் புத்திரர் தங்களைச் சுற்றிலுமிருந்த தங்கள் எல்லாச் சத்துருக்களின் கையினின்றும் தங்களை இரட்சித்த தங்கள் தேவனாகிய கர்த்தரை நினைக்கவில்லை."* (நியாயாதிபதிகள் 8:34). எனவே, நாம் விரக்திமிக்க சூழ்நிலைகளை சந்திக்கும்போது, *தேவன் நமக்குச் செய்த ஆற்றல்மிக்க செயல்களை நினைவில் கொள்ள வேண்டும்.*




❇️ *கர்த்தருடைய அதிசயமான செயல்களை நினைவுகூருவேன்*




💥 தேவன் தம் பிள்ளைகளிடம் மிகவும் இரக்கமுள்ளவராயிருந்து, தமது அதிசயமான செயல்களின் மூலம் அவர்களை ஆசீர்வதிக்கிறார். ஆனால், நாம் அவைகளை நினைவில் கொள்ளத் தவறுகிறோம். தாவீது, கர்த்தர் தனக்குச் செய்த அனைத்து அதிசயமான செயல்களுக்காகவும், அவருக்கு நன்றி செலுத்தி அறிவிக்கும் வார்த்தைகள்: *"நீர் எங்கள் நிமித்தஞ்செய்த உம்முடைய அதிசயங்கள் எண்ணிக்கைக்கு மேலானவைகள்."* (சங்கீதம் 40:5). தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற தாவீது கூறும் அறிவுரை: *"அவர் செய்த அதிசயங்களையும் அவருடைய அற்புதங்களையும் அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூறுங்கள்."* (1 நாளாகமம் 16:13). அவருடைய வல்லமையையும் அன்பையும் நாம் புரிந்துகொள்ள, *அவர் நமக்காகச் செய்த அதிசயங்களை நாம் நினைவுகூர வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.*




❇️ *கர்த்தருடைய கிரியைகளையெல்லாம் தியானிப்பேன்*




💥 நமக்காக தேவன் செய்த அதிசயமான செயல்களை நினைவுகூருவது மட்டும் போதாது; அவருடைய கிரியைகளையெல்லாம் நாம் தியானிக்க வேண்டும். தேவனுடைய கிரியைகளின் தன்மைகளை வேதம் நமக்கு விளக்குகிறது.

▪️ *"அவருடைய கிரியைகள் மகத்துவமானவைகள்."* (சங்கீதம் 92:5).

▪️ "*அவருடைய செய்கைகள் பெரியவைகள்."* (சங்கீதம்111:2).

▪️ *"அவருடைய கிரியைகளெல்லாம் அவரைத் துதிக்கும்."* (சங்கீதம் 145:10). அவருடைய கிரியைகள் அவருக்கு மகிமையைச் சேர்க்கும்.

▪️ *"அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியம்"* (தானியேல் 4:37).

தேவனுடைய கிரியைகளையெல்லாம் நாம் தியானிக்கும்போது, *அவை எவ்வளவு மகத்துவமானவைகள், எவ்வளவு பெரியவைகள், எவ்வளவு மகிமையுள்ளவைகள், எவ்வளவு சத்தியமுள்ளவைகள்* என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.




💥 நாம் கர்த்தருடைய செயல்களை நினைவுகூர்ந்து தியானிக்கும்போது, அவற்றைப் பிறருக்கு அறிவிக்காமல் இருக்க முடியாது, ஏனெனில் *அவருடைய கிரியைகள் அவரைக்குறித்துச் சாட்சிகொடுக்கின்றன* (யோவான் 10:25). *தேவனுடைய செய்கைகளை வந்து பாருங்கள்* (சங்கீதம் 66:5) என்று நாம் அனைவரையும் அழைக்க வேண்டும்.




🔹 *தேவனுடைய கிரியைகளையெல்லாம் எவ்வளவு மகத்துவமானவைகள், எவ்வளவு பெரியவைகள், எவ்வளவு மகிமையுள்ளவைகள், எவ்வளவு சத்தியமுள்ளவைகள் என்பதை அறிவிக்க நாம் அவற்றைப் பற்றித் தியானிக்கிறோமா?*




✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:




1️⃣ *நாம் விரக்திமிக்க சூழ்நிலைகளை சந்திக்கும்போது, தேவன் நமக்குச் செய்த ஆற்றல்மிக்க செயல்களை நினைவில் கொள்ள வேண்டும்.*

2️⃣ *அவருடைய வல்லமையையும் அன்பையும் நாம் புரிந்துகொள்ள, அவர் நமக்காகச் செய்த அதிசயங்களை நாம் நினைவுகூர வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.*

3️⃣ *தேவனுடைய கிரியைகளையெல்லாம் நாம் தியானிக்கும்போது, அவை எவ்வளவு மகத்துவமானவைகள், எவ்வளவு பெரியவைகள், எவ்வளவு மகிமையுள்ளவைகள், எவ்வளவு சத்தியமுள்ளவைகள் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.*

4️⃣ *நாம் கர்த்தருடைய செயல்களை நினைவுகூர்ந்து தியானிக்கும்போது, அவருடைய கிரியைகள் அவருக்கு சாட்சியாக இருப்பதால், அவற்றைப் பிறருக்கு அறிவிக்காமல் இருக்க முடியாது.*

Dr. எஸ். செல்வன்

சென்னை



சங்கீதம் 76-78

"முடிந்தது" என்ற நமது மீட்பரின் மகிமையான கூக்குரல், வில்லின் அம்புகள், கேடயம் மற்றும் வாள் மற்றும் போரின் கூற்றை முறித்துவிட்டன.

சிலுவையைச் சுத்தியலாகப் பயன்படுத்திய கொல்கதாவின் நாயகனை நாம் பார்க்கலாம்.

நம்முடைய பாவத்தின் தண்டனை கிறிஸ்துவால் சுமக்கப்பட்டது.

நம்முடைய எல்லா அக்கிரமங்களுக்கும் நமது ஆசீர்வதிக்கப்பட்ட பதிலாள் மற்றும் உத்தரவாதமுடையவரால் ஒரு முழு பரிகாரம் செய்யப்பட்டது.

யாரும் குற்றம் சொல்ல முடியாது.

யாராலும் கண்டிக்க முடியாது.

கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்தார்.

இயேசு கோபத்தின் ஒவ்வொரு அம்புகளின் தலையையும் உடைத்துவிட்டார்.

பாவம் நம் மீது ஆதிக்கம் செலுத்துவதில்லை.

இயேசு அதற்கு முற்றுப்புள்ளி வைத்து, அதை என்றென்றும் தள்ளிவிட்டார்.

கர்த்தருடைய எல்லா அதிசயங்களையும் பற்றி பேசுவோம்.

எங்கள் ஆத்துமாவே ஆண்டவரை துதியுங்கள்.

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

மேபி சுந்தர்.சென்னை.இந்தியா


*சங்கீதம் 76-78*




*தேவபக்தியுள்ள சந்ததியை*

*உருவாக்குவோம்*..




சங்கீதக்காரனாகிய ஆசாப்,

78 ஆம் சங்கீதத்தில்.. இஸ்ரவேலரின் வரலாற்றை.. இஸ்ரவேலர்..எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்தது முதல் ..தாவீதின் ஆட்சி வரை உள்ள சம்பவங்களைக் கூறியுள்ளார்.

இஸ்ரவேலரின் கீழ்ப்படியாமையின் மத்தியிலும்.. கர்த்தர் அவர்கள் மீது எத்தனை

கிருபையுள்ளவராய்

இருந்தார் என்பதை அவர்களுக்கு நினைப்பூட்டினார்.

( சங்.78 : 12- 72 )




*அந்த தேவன் இன்றும்* *மாறாதவராகவே இருக்கிறார்*.




இயேசு கிறிஸ்து உவமைகளால் போதிப்பார் என்பதையும்.. ஆசாப் இதிலே தீர்க்கதரிசனமாகக் கூறியுள்ளார்...

( சங். 78 : 2 )




ஆசாப், தன் போதகத்தைக் கேட்கும்படி, எல்லா மக்களுக்கும் ஓர் அழைப்பைக் கொடுத்தார்... நான் கற்றுத் தரப்போகும் காரியத்தை.. நீங்கள் கட்டாயம் கவனித்துக் கேட்கவேண்டும்.

இந்தக் காரியத்தை, எங்கள் முற்பிதாக்கள் எங்களுக்குச் சொன்னார்கள். அதை நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறோம். நீங்கள் அதை உங்கள் சந்ததிக்குச் சொல்லவேண்டும் என்று.. தலைமுறை தலைமுறையாகக் கைக்கொள்ள வேண்டிய ஒரு கட்டளையை..அங்கே ஆசாப் மக்களுக்கு வலியுறுத்திச் சொன்னார்..

( சங். 78 : 1-4 )




இது அருமையான ஒரு தேவ திட்டமாகும்..

தேவனுடைய வேதமும்.. அவருடைய மகத்துவமும் ஒவ்வொரு தலைமுறை யினருக்கும்.. தவறாமல் சொல்லிக் கொடுக்கப்பட வேண்டியது மிக மிக அவசியமானதாகும்..




இன்று, நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகளை…உன் பிள்ளை களுக்குக் கருத்தாய்ப் போதித்து.. (உபா. 6:6-7)




பிதாக்களே, நீங்கள் உங்கள் பிள்ளைகளை..கர்த்தருக்கேற்ற சிட்சையிலும், போதனையிலும் வளர்ப்பீர்களாக (எபே .6:4 )

என்று வேதமும்.. தேவனுடைய ஜனங்களுக்குக் கட்டளையிடுவதைப் பார்க்கிறோம்.




பிரியமானவர்களே..நம்முடைய பிள்ளைகள், தேவனை மறந்து விடாதபடிக்கு…நாமும் அவர்களுக்கு..தேவனுடைய மகத்துவங்களை, அவருடைய அதிசயமான கிரியைகளை.. அவருடைய வார்த்தைகளைக் கட்டாயம் கற்றுக்கொடுக்க வேண்டும்.

அத்தோடு நாமும் ..நான் உனக்குப் போதிப்பது போல.. நீ உன் சந்ததிக்குப்

போதிக்கவேண்டும், உன் சந்ததியினர் அவர்களது சந்ததிக்குப் போதிக்கவேண்டும் என்றும் கற்பிக்கவேண்டும்.




*தேவபக்தியானது*..*தலைமுறை* *தலைமுறையாகக்* *கடந்து செல்லவேண்டுமென்பதில்.. நாம் கவனமுள்ளவர்களாக இருக்கவேண்டும்*.




தேவன் நமக்குக் கொடுத்துள்ள கட்டளைக்கு.. நாம் கீழ்ப்படியா விட்டால்.. எதிர்காலத்தில் நமது சந்ததி ,தேவபக்தியற்ற சந்ததியாக மாறிவிடும்.




ஒரு காலத்திலே, நம் நாட்டிற்கு மிஷனெரிகளை அனுப்பின மேல்நாட்டுத் தேசங்களின் ஆலயங்களெல்லாம்.. கேளிக்கை விடுதிகளாக.. வணிகவளாகங்களாக.. ஏன் பிற மதத்தினரின் தொழுகைக் கூடங்களாக மாறிவருகின்றன.. நற்செய்தியானது.. ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படாததே இதற்குக்

காரணம்..




*இன்று போட்டிகள் நிறைந்த*, *அழுத்தங்கள் நிறைந்த* *உலகத்திலே நாம் வாழ்ந்து* *வருகிறோம் ..நம் பிள்ளைகளை..* *சிறு வயதிலிருந்தே இசைக்* *கருவிகள்.. கணினி.. மற்றும்* *விளையாட்டுகளிலே* *பயிற்றுவிக்க ஆரம்பிக்கிறோம்*..

*நிச்சயமாக, எல்லா முயற்சிகளும்* *நல்லதுதான்..ஆனால்* *முதலாவது..நாம்* *பிள்ளைகளுக்குக் கற்றுக்* *கொடுக்கவேண்டியது*, *வேதமும்..அவர்களில் நாம்* *உருவாக்கவேண்டியது*, *தேவபக்தியுமே*.




*தானியேலின் ,தேவபக்தி*..

*வேத* *ஞானம் ..அவனை பாபிலோன்* *தேசத்திலே உயர்ந்த நிலைக்கு* *வழிநடத்தியது*.




*இன்று நீங்களும் ,உங்கள்* *பிள்ளைகளுக்குச் சிறு* *வயதிலேயே இயேசு* *கிறிஸ்துவைச் சார்ந்திருக்கக்*

*கற்றுக்கொடுத்தால்*..

*அவர்கள் உலகத்திலே எங்கு* *சென்றாலும்* ..

*அங்கே அவர்கள்* *உயர்வடைவார்கள்*..

*அவர்கள் வாழ்வு*..

*தேவனை மகிமைப்படுத்தும்*..

*உங்களையும்* *மகிழ்ச்சிப்படுத்தும்..*

ஆமென்.🙏

மாலா டேவிட்



தமது மந்தையை மேய்ப்பதற்காக தெரிந்து கொண்டார், தொழுவங்களிலிருந்து எடுத்தார், அழைத்து கொண்டு வந்தார்*

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~




சங்கீதம் 78: 70-72.




1. ஆம், தமது தாசனாகிய தாவீதை கர்த்தர் தெரிந்து கொண்டார். எங்கிருந்து தெரிந்து கொண்டார்? *ஆட்டு தொழுவங்களிலிருந்து. அப்படியானால் ஆட்டு மந்தையை மேய்த்துக் கொண்டிருந்த, கறவலாடுகளின் பின்னாக திரிந்த தாவீதை தொழுவத்திலிருந்து, தெரிந்தெடுத்து, அவனை எடுத்துக் கொண்டார்.*




இன்று நாமும் நம் குடும்பமாகிய மந்தை, சபையாகிய மந்தையின் கறவலாடுகளை போன்ற விலையேறப்பெற்ற ஆத்துமாக்களை மேய்த்து, அதாவது, பாதுகாத்து, போஷித்து, வழிநடத்தி கொண்டிருக்கலாம். நம்மையும் கர்த்தர் இதற்காக தெரிந்து கொண்டார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.




2. *தாவீதை கர்த்தர் அழைத்து கொண்டு வந்தார்.* எதற்காக? தமது ஜனமாகிய யாக்கோபையும், தனது சுதந்தரமாகிய இஸ்ரவேலையும் மேய்ப்பதற்காக. ஆம், மந்தையின் ஆடுகளை வசனமாகிய புல்வெளி வழியாய், அமர்ந்த தண்ணீராகிய பரிசுத்த ஆவியினால் போஷிக்க, போதிக்க ராஜாவாய் ஆண்டு நடத்த, ஓநாய்களிடமிருந்து மந்தையை காப்பாற்றும் படியாய் அழைத்து கொண்டு வந்தார்.




இன்று *நாம்மையும் ஆசாரியர்களாய், ராஜாக்களாய், கர்த்தருடைய மந்தையை நம் ஜெபத்தினால் நடத்த கூடிய மேய்ப்பராய் தெரிந்து கொண்டார்*.




3.*தாவீது அவர்களை தன் இருதயத்தின் உண்மையின் படியே மேய்த்தார். தன் கைகளின் திறமையினால் நடத்தினார்.*




நாமும் கூட நம் குடும்பம், சபையிலுள்ள ஆத்துமாக்களுக்காக இருதயத்தின் *உண்மையாய் ஜெபிக்கிற ஜெபத்தாலும்* மேய்க்க வேண்டும். *நம் கையின் கிரியைகளின் திறமையினால் ஆத்துமாக்களை மேய்த்து, நடத்தி, காத்துக் கொள்ள வேண்டும்*.




*வயல் வெளியிலே தங்கி, இராத்திரியிலே மந்தையை காத்துக் கொண்டிருந்த மேய்ப்பர்களுக்கு கர்த்தருடைய மகிமை பிரகாசித்தது. எல்லா ஜனத்திற்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டு பண்ணும் நற்செய்தி அறிவிக்கப்பட்டது*. லூக்கா 2: 9, 10.




நாமும் கூட *இரவு வேளைகளில் ஜெபத்தினால் நம் ஆடுகளுக்காக, ஆத்துமாக்களுக்காக ஜெபிக்கும் போது நம்முடைய வாழ்க்கையிலும் தேவ மகிமை பிரகாசிக்கும். அவருடைய வார்த்தை, சமாதானத்தின் நற்செய்தி கொடுக்கப்படும்.*




ஆம், கர்த்தர் நம்மை ஆடுகளின் மேய்ப்பர்களாக, தெரிந்து கொண்டார். அழைத்துமிருக்கிறார். ஆமென். அல்லேலூயா.

*Dr.Padmini Seĺvyn*



ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👩‍👩‍👧‍👧


*சங்கீதம் 78:1-8*




*தேவபக்தியுள்ள பெற்றோரின் பங்கு*




*ROLE OF GODLY PARENTS*




📝 *"அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம். எங்கள் பிதாக்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள். பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம்.."* (வ 3-4)




📝 *"... இனிப் பிறக்கும் பிள்ளைகளாகிய பின்சந்ததியார் அதை அறிந்து கொண்டு, அவர்கள் எழும்பித் தங்கள் பிள்ளைகளுக்கு அவைகளைச் சொல்வார்கள்"* (வ. 6)




📝 இந்த சங்கீதத்தின் முதல் வரி: *"என் ஜனங்களே, என் உபதேசத்தைக் கேளுங்கள்; என் வாயின் வசனங்களுக்கு உங்கள் செவிகளைச் சாயுங்கள்"* என்பது, இந்த சங்கீதம் ஜனங்களுக்கு போதிப்பதை குறிக்கிறது. *பெற்றோர் வளர்ப்பு* என்பதன் கீழ் நாம் அதை வடிவமைக்கலாம்.




📍 அன்பான நபரின் மனப்பான்மையில் மூன்று கூறுகள் உள்ளன:

1️⃣ அன்பான நபர் நம்மை நாம் இருப்பதைப் போலவே பார்க்கிறார்.

2️⃣ அவர் நம்முடன் ஒன்றாக நிற்கிறார்.

3️⃣ நாம் சிறப்பாக மாற வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.




*இந்த விளக்கம் குழந்தை மீதான பெற்றோரின் அன்புக்கு சரியாகப் பொருந்தும்* :

🙋‍♂️🙋‍♀️ குழந்தைகள் தங்களைப் பார்ப்பதை விட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மிகவும் தெளிவாகப் பார்க்கிறார்கள்.

🙋‍♂️🙋‍♀️ அன்பான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை, அவர்களின் ஆழ்ந்த பிரச்சனைகளில் கூட கைவிடுவதில்லை.

🙋‍♂️🙋‍♀️ பிள்ளைகள் வாலிப வயதினரை விட குழந்தை பருவத்தில் மிகவும் அழகாகவும் அடக்கமாகவும் இருந்தாலும், தங்கள் குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்க வேண்டும் என்பதில் அவர்களுக்கு திருப்தி இல்லை.

🙋‍♂️🙋‍♀️ *பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வளர்ந்து முதிர்ச்சியடைய வேண்டும் என்று விரும்புகிறார்கள்* (லூக்கா 2:52)




📍 *"கர்த்தர் இஸ்ரவேலைத் தேர்ந்தெடுத்து, எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தம்முடைய வல்லமையான செயல்களால் அவர்களைக் காப்பாற்றினார். அவர் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார்; அவர்களை வழிநடத்தினார், அவர்களைப் பாதுகாத்தார், வனாந்தரத்தில் அவர்களுக்கு உணவு/தண்ணீர் அளித்தார். வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கு அவர்களை அழைத்து வந்தார்"* .

🙋‍♂️மேற்கூறிய கதையை மீண்டும் கூறுவதன் மூலம், சங்கீதக்காரன் தம் ஜனங்களின் சார்பாக தேவன் செய்யும் அற்புதமான செயல்களைப் பற்றிய அறிவை தங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி உறுதி செய்ய விரும்பினார் ( *வ 4* )

📍 தேவனின் அற்புதமான செயல்களையும் அவருடைய வார்த்தைகளையும் ( *அவருடைய கட்டளைகள்*) பின்வரும் சந்ததியாருக்கு சொல்வது இஸ்ரவேலருக்கு கர்த்தர் கொடுத்த கட்டளை (வ. 5-7; உபா 6:4-9)

📍 *மேலே உள்ள கதையைச் சொல்வதன் மூலம், சங்கீதக்காரன் தன்னைக் கேட்பவர்களும் அதே தவறுகளைச் செய்யாமல் தடுப்பதாக நம்புகிறார்*.




🙋‍♂️🙋‍♀️ அன்பான திருச்சபையே, விசுவாசமான பெற்றோர் வளர்ப்பில் சிறந்து விளங்குவதற்கு, இன்றைய பத்தியிலிருந்து நாமும் கற்றுக்கொள்ளலாம்: *"இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பின் அறிவை நம் குழந்தைகளுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் கடத்தும் பொறுப்பை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்"*

தேவனுக்கே மகிமை 🙌

✍️ *மார்க் போஜே*

அருணாச்சல பிரதேசம், இந்தியா 

தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்



❤️THE FAITHFUL HEART OF GOD❤️*

*❤️தேவனுடைய உண்மையுள்ள இருதயம்❤️*



[நாள் - 176] சங்கீதம் 76-78




☄️சங்கீதம் 76-78, தேவனுடைய குணாதிசயங்கள் மற்றும் அவரது மக்களின் பதிலளிக்கக்கூடிய இருதயங்களைப் பற்றிய விலைமதிப்பற்ற நுண்ணறிவுகளை நமக்கு வழங்குகிறது.




1️⃣ *சங்கீதம் 76: வல்லமை மற்றும் விடுதலையின் தேவன்*




🔹சங்கீதம் 76, தேவனுடைய வல்லமை மற்றும் ஒரு மீட்பராக அவருடைய பங்கைப் பற்றிய சக்திவாய்ந்த விளக்கத்துடன் தொடங்குகிறது.

🔹எதிரிகளில் வலிமையானவர்களை அமைதிப்படுத்த தேவனுடைய பிரசன்னம் மட்டுமே போதுமானது என்பதை சங்கீதக்காரன் ஒப்புக்கொள்கிறார்.

🔹நம்முடைய தேவன் ஒரு செயலற்ற பார்வையாளர் அல்ல, ஆனால் அவருடைய மக்கள் சார்பாக தீவிரமாக தலையிடுகிறார் என்பதை இந்த சங்கீதம் நமக்கு நினைவூட்டுகிறது.

🔹ஆபத்தான நிலையிலும் கூட, தேவனுடைய வல்லமையிலும் இறையாண்மையிலும் நாம் அடைக்கலம் பெற முடியும் என்பதை உணர இது நம்மை அழைக்கிறது.




2️⃣ *சங்கீதம் 77: தேவனுடைய உண்மையின் நினைவில் ஆறுதல் தேடுதல்*




🔸சங்கீதம் 77 சந்தேகம் மற்றும் விரக்தியின் கருப்பொருளை ஆராய்கிறது, மனித இதயத்திற்குள் எழக்கூடிய போராட்டங்களை எடுத்துக்காட்டுகிறது.

🔸அவர் கைவிடப்பட்ட உணர்வுகளுடன் போராடுகிறார் மற்றும் தேவனுடைய உண்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறார்.

🔸இருப்பினும், அவன் மனவேதனையின் நடுவே, தேவனின் கடந்த கால செயல்களை வேண்டுமென்றே நினைவு கூறுகிறான்.

🔸இதன் மூலம், தேவனுடைய உண்மை இருண்ட தருணங்களிலும் நிலைத்திருக்கும் என்பதை சங்கீதக்காரன் உணர்கிறான்.




3️⃣ *சங்கீதம் 78: தேவனுடைய கடந்தகால பராமரிப்பிலிருந்து கற்றல்*




🔺சங்கீதம் 78 இஸ்ரவேலின் வளமான வரலாற்றையும் தேவனுடனான அவர்களின் உறவையும் விவரிக்கிறது.

🔺தேவனுடைய உண்மைத்தன்மையின் கதைகளை வருங்கால சந்ததியினருக்கு கடத்துவதன் முக்கியத்துவத்தை சங்கீதக்காரர் வலியுறுத்துகிறார்.

🔺கடந்த கால நிகழ்வுகளை நினைவுகூருவதன் மூலம், சங்கீதக்காரன் தேவனுடைய பராமரிப்பையும், அவருடைய மக்கள் மீதான நிலையான அன்பையும் எடுத்துரைக்கிறார்.

🔺இந்த சங்கீதம் நம்முடைய சொந்த ஆன்மீக வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கவும், நமக்கு முன் சென்றவர்களின் தவறுகள் மற்றும் வெற்றிகளிலிருந்து கற்றுக்கொள்ளவும் தூண்டுகிறது.

🔺தேவனுடைய உண்மைத்தன்மை மற்றும் அவரது மக்களுடன் உறவு கொள்வதற்கான அவரது விருப்பத்தைப் பற்றி வருங்கால சந்ததியினருக்கு கற்பிப்பதன் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது.




♥️ *வாழ்க்கை பாடங்கள்*




💥சங்கீதம் 76-78 தேவனுடைய வல்லமை, உண்மை மற்றும் அவருடைய நன்மையை நமக்கு நினைவூட்டுகிறது.

💥சோதனைகளுக்கு மத்தியில் ஆறுதலையும் வலிமையையும் கண்டடையவும், எதிர்கால சந்ததியினருக்கு அவருடைய பராமரிப்பின் கதைகளை கடத்தவும் அவை நம்மை ஊக்குவிக்கின்றன.




*‼️தேவனுடைய குணத்தைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெறவும், நன்றியுடன் பதிலளிக்கவும் பாடுபடுவோம்‼️*
பிரின்சஸ் ஹட்சன்

தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை



Mrs. Jasmine Samuel

Chennai




வேத பகுதி

சங்கீதம் 77 : 14

💦 சிந்தனைத் துளிகள்

💦கர்த்தர் அதிசயங்களைச்

செய்கிறவர்




🔆(77:14)

அதிசயங்களைக் செய்கிறவர் நீரே

ஜனங்களுக்குள்ளே உம்முடைய

வல்லமையை விளங்கப் பண்ணினீர்




யோபு 9:10

🔆 . கர்த்தர் எண்ணி முடியாத

அதிசயங்களைச் செய்கிறார்




🔆நாம்.ஆராதிக்கும் கர்த்தர்

அதிசயமானவர்




🔆அற்புதங்கள் செய்கிறவர்




🔆 இஸ்ரவேல் ஜனங்களை வனாந்திரத்திலே

செழிப்பாய் வழி நடத்தியவர்

⛅ பகலிலே --- மேகஸ்தம்பம்

🔥இரவிலே --- அக்கினி ஸ்தம்பம்

🍔 உணவு - - - தூதர்களின் அப்பமாகிய மன்னா

🌊 செங்கடலைப் பிளந்தவர்

⚡⚡ எரிகோவை தகர்த்தவர்

🌊 யோர்தானைப் பின்னிடப் பண்ணினவர்

🏝️🏝️🏞️வாக்களிக்கப்பட்ட கானானைக் கொடுத்தவர்




🙋‍♂️இன்றைக்கும் கர்த்தர் அதிசயங்களைக்

செய்கிறவராய் நம்மோடு இருக்கிறார்




🙋‍♂️ கானாவூர் திருமணத்தில் குறைவை

நிறைவாக்கியவர்




🙋‍♂️மரித்த லாசவை உயிரோடு எழுப்பியவர்




🔆இதோ உலகத்தின் முடிவு பரியந்தமும்

நம்மோடு இருப்பேன் என்ற

கர்த்தர் ......

அதிசயமானவர்




🙇‍♀️சிந்தனைக்கு




🙋‍♀️கர்த்தருடைய செயல்களை

நினைவு கூருவோம் (77:11)




🙋‍♀️கர்த்தருடைய கிரியைகளைத்

தியானிப்போம் ( 77 : 12)




🙋‍♀️கர்த்தருடைய அதிசயங்களை

அறிவிப்போம் (71 : 17)




🙋‍♀️கர்த்தருடைய அதிசயங்களை

விவரிப்போம் (9:1)




🔆நம் வாழ்விலும் கர்த்தர்

நிச்சயமாகவே அதிசயங்களைச்

செய்வார்

ஆமென்🙏

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.