Type Here to Get Search Results !

Psalm 72-75 | சங்கீதக்காரனாகிய ஆசாப் | ENDURING LOVE OF GOD | சங்கீதம் 72-75 வேத ஆராய்ச்சி | Jesus Sam



சங்கீதம்: 72-75

💐💐💐💐💐💐💐

*தேவனே, ராஜாவுக்கு உம்முடைய நியாயத்தீர்ப்புகளையும், ராஜாவின் குமாரனுக்கு உம்முடைய நீதியையும் கொடுத்தருளும்*.

*அவர் உம்முடைய ஜனங்களை நீதியோடும், உம்முடைய ஏழைகளை நியாயத்தோடும் விசாரிப்பார்*.

*பர்வதங்கள் ஜனத்திற்குச் சமாதானத்தைத் தரும் , மேடுகள் நீதியின் விளைவோடிருக்கும்*.

*ஜனத்தில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து, ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார்*.

(சங்கீதம்: 72: 1-4)

★ இந்த ஜெபம் ஒரு தகப்பன் தன்னுடைய மகனுக்காக ஜெபிக்கும் ஜெபமாகும்.

★தாவீது மரணப்படுக்கையில் இருக்கையில், தன்னுடைய மகன் சாலொமோனுக்கு தன்னுடைய ஆசீர்வாதத்தைச் சொல்கிறார்.

★தாவீது தன்னுடைய ஆட்சி காலத்தில் இஸ்ரவேல் ஜனங்களை நீதியோடும் நியாயத்தோடும் நேர்மையோடும் ஆட்சி செய்தார். அது போல தன் மகனும் ஆட்சி செய்ய வேண்டும் என்று வாஞ்சித்து ஜெபிக்கிறார்.

★ நீதியும் நியாயமும் சமாதானமும் ஏழைகளுக்கு உதவுதலும் இடுக்கண் செய்கிறவர்களைத் தண்டித்தலும் உள்ள ஆட்சியே சிறந்த ஆட்சி.

★இக்காலத்தில் உள்ள ஆட்சிகள் இவ்வாறு அமையும் படி ஜெபிப்பது நமது கடமை.

★நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம் பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் ஏறெடுக்க வேண்டும்.

*ஆமென்*🧎
✍️ பவானி ஜீஜா தேவராஜ், சென்னை.


🌹🌹🌹🌹🌹.

"நீர் கோடை மற்றும் குளிர்காலத்தை உருவாக்கியுள்ளீர்.".

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

எங்கள் ஆத்துமாக்கள் உம்மிடம் இருந்து ஆரம்பிக்கிறது.

ஆண்டவரே நீர் உமது வார்த்தையில் உண்மையுள்ளவர்.

நீர் எல்லாவற்றையும் செய்கிறீர.

எனவே நாங்கள் முறுமுறுக்க முடியாது.

இழப்புகள், சிலுவைகள், சுமைகள், வியாதிகள், வறுமை, இன்னும் ஆயிரம் நோய்களை நீர் அனுப்புகிறீர்.

எல்லாவற்றையும் ஞானமாக வடிவமைப்பவர் நீரே .

. ஒவ்வொரு துன்ப நேரத்திலும் ஆறுதல் தரும் உம்மை போற்றுகிறோம்.

நாங்கள் உம்மிடம் நெருங்கி வருகிறோம்,.

விசுவாசத்தில் மகிழ்ச்சியையும் அமைதியையும் காண்கிறோம்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

மேபி சுந்தர்.சென்னை.இந்தியா



*சங்கீதம் 72- 75*
*கர்த்தரை நம்புவோம்*..
சங்கீதக்காரனாகிய ஆசாப்

ஒரு பரிசுத்தவான்.. அவன் கர்த்தரையே நம்பியிருந்தவன்... சுத்த இருதயம் உள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்குத் தேவன் நல்லவராகவே இருக்கிறார் என்பது ஆசாபின் அசைக்க முடியாத நம்பிக்கையே..

( சங்.73 : 1 )




ஆனால், ஆசாப் இஸ்ரவேலரைச் சுற்றி வாழ்ந்த புறஜாதி மக்களைப் பார்த்தபோது ..

துன்மார்க்கரான அந்த ஜனங்கள்.. இஸ்ரவேலரை விட சந்தோசமாக ..செழிப்பாக இருந்தார்கள்.

அவர்களுக்கு வியாதி இல்லை, வருத்தமில்லை,

வேதனையில்லை..

அதனால் அவர்கள் பெருமையாக நடந்தார்கள்.. அதைப் பார்த்த ஆசாபுக்கு..

தேவன் துன்மார்க்கரை ஏன்

செழிப்பாக வாழவிடுகிறார்

என்ற குழப்பம் உண்டானது. நான் ஒவ்வொரு நாளும் பரிசுத்தமாய் வாழ முயற்சிப்பதினால் எனக்கு என்ன பயன் என்ற கேள்வியுடன்.. ஆசாபுக்கு துன்மார்க்கரின் பேரில் பொறாமையும் உண்டானது.

( சங். 73 : 3 -14)




பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் அநேகருக்கு இதே சந்தேகம் வந்ததுண்டு...




*யோபு* …

*நான் பாவியாய் இராததினால்* (*நல்லவனாயிருப்பதினால்*) *எனக்குப் பிரயோஜனமென்ன*..?

( யோபு 35 : 3 )




*எரேமியா*..

*கர்த்தாவே ஆகாதவர்களின்* *வழி வாய்க்கிறதென்ன*? *துரோகஞ்செய்து*

*வருகிற அனைவரும்* *சுகித்திருக்கிறதென்ன*..?. (எரே. 12:1)




*ஆபகூக்*…

*தீமையைப் பார்க்கமாட்டாத* *சுத்தக்கண்ணனே*….

*துரோகிகளை நீர் நோக்கிக்* *கொண்டிருக்கிறதென்ன*…?

(ஆபகூக் 1 : 13)




ஆசாப் , இத்தகைய சஞ்சலத்தோடு.. கர்த்தருடைய ஆலயத்துக்குக் கடந்து சென்றான். அங்கே அவனது விசுவாசக் கண்கள் திறந்தன,

துன்மார்க்கரின் வாழ்வின் முடிவிலே அவர்களுக்கென்று வைக்கப்பட்டிருக்கும் காரியத்தை அப்பொழுதுதான் அவன் புரிந்துகொண்டான்.

நான் காரியம் அறியாத மூடனென்று தன்னையே கடிந்துகொண்டான்..

( சங்.73 :16-22)




மனுக்குலத்தின் இந்தச் சந்தேகத்திற்கான விளக்கத்தை இயேசு கிறிஸ்து கூறின ஐசுவரியவான்.. லாசரு

உவமையில் நாம் காணமுடியும். ஐசுவரியவானை அடக்கம் செய்த.. சமயத் தலைவர்கள், ஐசுவரியவான் பரலோகத்தில் சிறப்பான இடத்தில் இருப்பான் என்றே கூறியிருப்பார்கள். ஆனால் அவன் என்றென்றும் மாறாத வேதனை நிறைந்த இடத்திற்கே சென்றிருந்தான். ஏழையான மனிதனுக்குக் கல்லறையில் கூட இடம் கிடைத்திருக்காது..ஆனால் அவனுக்காகத் தேவதூதர்கள் காத்திருந்தார்கள்.

அவனை எடுத்துச் சென்று.. ஆபிரகாம் மடியிலே அமரச் செய்தார்கள்.

இந்த உலகிலே சம்பிரமாய் வாழ்ந்த ஐசுவரியவான்.. அங்கே ஏழை லாசருவைப் பார்த்துப் பொறாமை கொண்டான்.




பிரியமானவர்களே ..

நமக்குள் எழும்பும் கேள்விகளுக்கெல்லாம்.. கர்த்தர் உடனே நமக்குப் பதில் கொடுப்பதில்லை..

அவர் சொல்வதெல்லாம்…. “*என்னை நம்பு..* “

“*என்னைப்பற்றிக்கொள்*"..

"*என்னோடு நட*”

என்பதே.

ஆசாபின் குழப்பத்திற்கு.. அவன் ஆலயத்திற்குச் சென்றபோது பதில் கிடைத்தது போல, அவருடைய பிரசன்னத்திற்குள் கடந்து செல்லும் ஒரு நாளிலே ..அவர் நமக்கு எல்லாவற்றையும் விளக்கிக் காட்டுவார். அப்பொழுது அவர் செய்தது சிறந்தது என்பதை நாம் புரிந்து கொள்வோம்.




*இன்று நாம் செய்யவேண்டியது*..

*சந்தேகங்கள்..குழப்பங்கள்* *மத்தியிலே..கர்த்தரையே* *நம்புவோம்*..

*தேவனே..உம்முடைய* *ஆலோசனையின்படி என்னை* *நீர் நடத்தி முடிவிலே என்னை* *மகிமையிலே ஏற்றுக்* *கொள்ளுமென்று அவரிடம்* *நம்மை அர்ப்பணிப்போம்*. *எனக்கோ தேவனை அண்டிக்* *கொண்டிருப்பதே நலம் என்று..* *மகிழ்ந்து களிகூருவோம்*.. ஆமென்.🙏

(சங்கீதம் 73 :24 ,28 )

மாலா டேவிட்



பர்வதங்கள் ( mountain ), மேடுகள் ( hills )
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~




சங்கீதம் 72: 3, 16.




1. *பர்வதங்கள் ஜனத்திற்கு சமாதானம் தரும்*




பர்வதங்கள் அதாவது மலைகள் என்பது உயர்ந்த இடம். இது அமைதியான, குளிர்ச்சியான, மேகங்களால் சூழப்பட்ட இடம். இந்த மலைகள் தேவபிரசன்னத்தை குறிக்கிறது.




*அரராத்* மலையில் பேழை பாதுகாப்பாய் தங்கினது. *மோரியா* மலையில் ஆபிரகாம் ஈசாக்கை பலியிட கட்டளை பெற்றார். *சீனாய்* மலையில் மோசே பத்து கற்பனைகளை பெற்றார். *கர்மேல்* மலையில் எலியா கர்த்தரே தெய்வம் என நிரூபித்தார். *இயேசுவும்* மலையிலே ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் கடை பிடிக்க வேண்டியவைகளை உபதேசித்தார். *ஒலிவ மலையிலே* சென்று ஜெபித்து வந்தார். *மறுரூப மலையில்* மறுரூபமானார். *கொல்கதா மலையில்* நமக்காக சிலுவையில் அறையப்பட்டு ஜீவனை விட்டார். இன்று *இயேசுவே நம்முடைய கன்மலையாக* இருக்கிறார்.




ஆம், *இந்த பர்வதங்கள், அதாவது பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய தேவன் நமக்கு சமாதானத்தை தருவார்.* அமைதியற்ற, ஆறுதலற்ற , சமாதானமற்ற இந்த உலகில் இயேசுவே நம் சமாதான பிரபு, சமாதான காரணர், எகோவா

ஷாலோம்.




ஆம், *கர்த்தருடைய வார்த்தைகளை, சுவிசேஷத்தை, சத்தியத்தை பிரசித்தப்படுத்தும் சுவிசேஷகனுடைய பாதங்கள் இந்த மலைகளில் ( தேவ பிரசன்னத்தில்) அழகாயிருக்கிறது*. ஏசாயா 52: 7. *இவர்கள் பாதங்களில் சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையை தொடுத்து கொள்ள வேண்டும்*. எபேசியர் 6: 15.




ஆனால் இந்த பர்வதத்தில் ஏற நம் *முயற்சி, தீர்மானம், தியாகம்* தேவை. காலேப் 85 வயதிலும் மலைநாட்டை எனக்கு தாரும் என கேட்டு பெற்றுக் கொண்டார். நாமும் கூட இந்த தேவ பிரசன்னத்தை நாடி, உன்னதத்தின் ஆசீர்வாதங்களை, சமாதானத்தை கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்.




2. *பூமியிலே பர்வதங்களின் உச்சியில் ஒரு பிடி தானியம் விதைக்கப்பட்டிருக்கும்*




ஆம், *இந்த பர்வதங்களின் உச்சியில் தானியம் விதைக்கப்படும். அதின் விளைவோ லீபனோனை போல செழிப்பாயிருக்கும். அப்படியானால் அவ்வளவு செழிப்பாய் மிகுந்த தானியத்தை விளைவிக்கும். ஏனென்றால் இந்த பர்வதங்கள் மேல் தண்ணீர்,(வசனம், ஆவியானவரின் அசைவாடுதல் ) நிற்கும்*. சங்கீதம் 104:6.




இந்த தானியம் நம்மையும் பிறரையும், சரீரத்தையும், ஆத்துமாவையும் போஷிக்கும்.




3. *மேடுகள் ( hills ) நீதியின் விளைவோடிருக்கும்*




ஆம், மேடுகளில் நீதி விளையுமாம். நீதி என்பது நம்மில் விளைய வேண்டிய மிக முக்கியமான கனி.




*விசுவாசம் ஆபிரகாமை நீதிமானாக மாற்றிற்று*. ஆதியாகமம் 15: 6.




*நீதி நாம் செலுத்த வேண்டிய பலி* சங்கீதம் 4: 5.




*நீதி நம்மிலிருக்க வேண்டிய கனி* யாக்கோபு 3: 18.




*நீதி நம்முடைய மார்க்கவசம்* எபேசியர் 6: 14.




*நீதியின் விளைச்சல்* 2கொரிந்தியர் 9: 10.




*பர்வதங்கள் திராட்சரசத்தை பொழியும்.மலைகள் பாலாய் ஓடும்.* யோவேல் 3: 18.




ஆம், பர்வதங்கள், மேடுகள் என்பது தேவ சமூகத்தை, அவருடைய வசனத்தை, சத்தியத்தை,உடன்படிக்கையை நமக்கு உன்னதத்தின் ஆசீர்வாதங்களை *சமாதானத்தை, நீதியை* நம்மில் தந்து பரலோக இராஜ்யத்திற்கு தகுதிப்படுத்தும். கர்த்தர் தாமே இந்த ஆசீர்வாதங்களை நமக்கு தருவாராக. ஆமென், அல்லேலூயா.

*Dr.Padmini Seĺvyn*


💠 *இஸ்ரவேலருக்கு தேவன் நல்லவராகவே இருக்கிறார்* 💠




☄️ *"சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்கு தேவன் நல்லவராகவே இருக்கிறார்."* (சங்கீதம் 73:1).




🔹 சங்கீதம் 73 ஒரு ஞான சங்கீதம். இது *நன்மை தீமை பற்றிய கேள்விகளை எழுப்புகிறது.* இந்த சங்கீதத்தின் தலைப்பு, இது தாவீது ராஜாவின் ஆட்சியின் போது வாழ்ந்த ஒரு சிறந்த பாடகனும் இசைக்கலைஞனுமான ஆசாப் என்பவனால் இயற்றப்பட்டது என்பதை வெளிப்படுத்துகிறது (1 நாளாகமம் 16:4-5). அவனது இசைப் படைப்புகளில், ஆசாப் தாவீதைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியாக இருந்தான் (2 நாளாகமம் 29:30).




🔹 இந்த சங்கீதத்தில், சங்கீதக்காரன் *பக்தியில்லாதவர்களின் வெளியரங்கமான ஆசீர்வாதங்களைக் கண்டு* குழம்பி நிற்கிறான் (சங்கீதம் 73:2-14). பின்பு, *அவர்களுக்கு வரப்போகிற நியாயத்தீர்ப்பைக்* குறித்து புரிந்துகொள்கிறான் (சங்கீதம் 73:15-28).




🔹 *சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்கு தேவன் நல்லவராகவே இருக்கிறார்* (சங்கீதம் 73:1) என்று முதல் வசனத்திலேயே தன்னுடைய இறுதி முடிவைக் குறிப்பிடுகிறான்.




🔹 துன்மார்க்கனுக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்களைக் காணும்போது அவன் மிகவும் குழப்பமடைகிறான். *தன் இருதயத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளவும், பாவத்தை தவிர்க்கவும் அவன் எடுத்த முயற்சிகள் எல்லாம் வீணாகிவிட்டதே* என்று வருந்துகிறான் (சங்கீதம் 73:13). இந்த எண்ணம் *தவறானது.* ஏனென்றால், அவன் துன்மார்க்கருக்கு கிடைக்கும் தற்காலிகமான ஆசிர்வாதங்களையே கவனித்துள்ளான். *ஒருவருடைய இருதயத்தைத் தூய்மையாக வைத்திருப்பது வீண் போகாது; தாமதமாக இருந்தாலும், சந்தேகத்திற்கு இடமின்றி உரிய வெகுமதியைக் கொண்டுவரும்.*




🔹 இத்தகைய அநீதிக்கான காரணத்தைப் புரிந்துகொள்ள சங்கீதக்காரன் முயற்சிக்கிறான். அவன் உண்மையைப் புரிந்துகொள்வதற்கு தேவனுடைய பிரசன்னத்தைத் தவிர வேறு எங்கு செல்ல முடியும்? அவன் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்திற்குள் செல்லும்போது, *துன்மார்க்கரின் இறுதி முடிவைக் குறித்துப் புரிந்துகொள்கிறான்.* பிறகு, *தன் மனம் கசப்படைவதையும், தன் இருதயம் துக்கப்படுவதையும்* அவன் உணர்கிறான் (சங்கீதம் 73:21). எனவே, உண்மையைப் புரிந்துகொள்வதற்கு முன்பு தன்னிடம் இருந்த *அறியாமையை கர்த்தருக்கு முன்பாக ஒப்புக்கொள்கிறான்.* இது, தான் எடுத்த தவறான முடிவுக்காகக் காட்டும் உண்மையான மனந்திரும்புதல்.




🔹 சங்கீதக்காரன் *பரலோகத்தில் தேவனையல்லாமல் தனக்கு வேறு யாரும் இல்லை என்றும், பூலோகத்தில் தேவனைத் தவிர தனக்கு வேறே விருப்பமில்லை* என்றும் அறிவிக்கிறான் (சங்கீதம் 73:25). *தேவனுக்காகவும் நித்தியத்திற்காகவும் ஏங்கும் இருதயம்* என்பதற்கு இது ஒரு சிறந்த சான்று. அவன் தேவனை பரலோக நம்பிக்கையாகவும் பூமிக்குரிய விருப்பமாகவும் பார்க்கிறான். *தேவனுக்காக ஏங்கும் இருதயம் கொண்ட ஒரு மனிதன் தேவனையே தன் பரலோக ஆஸ்தியாகவும், பூலோக லட்சியமாகவும் கொண்டிருக்கிறான்.*




🔹 சங்கீதக்காரன் இறுதியாக, *அவனுடைய மாம்சமும் அவனுடைய இருதயமும் பலவீனமுள்ளது; தேவனே என்றென்றைக்கும் அவன் இருதயத்தின் கன்மலையும் அவன் பங்குமாயிருக்கிறார்.* (சங்கீதம் 73:26) என்று அறிவிக்கிறான். அவன் தன்னுடைய பலவீனத்தையும், தேவனுடைய வல்லமையையும் புரிந்துகொள்கிறான்; அத்துடன் தேவனுடைய வல்லமை நித்தியமானது என்பதையும் அறிக்கை செய்கிறான்.




🔹 சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்கு தேவன் நல்லவராகவே இருக்கிறார் என்று சங்கீதக்காரன் முடிவு செய்கிறான். *ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள் யாரென்றால், சுத்த இருதயமுள்ளவர்களும், கிறிஸ்துவின் இரத்தத்தால் பாவத்தின் கறைகளிலிருந்து கழுவப்பட்டவர்களும், தேவனுடைய மகிமைக்கு தங்களை முழுவதுமாக அர்ப்பணித்தவர்களுமே ஆவார்கள்.*




🔹 சங்கீதக்காரன், *"தேவரீர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாயிருக்கிறீர்."* (சங்கீதம் 119:68) என்று கர்த்தரைப் போற்றுகிறான். அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற அவருடைய மக்களால் மட்டுமே இதை அனுபவிக்க முடியும். தாவீது கூறுகிறான்: *“கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்."* (சங்கீதம் 34:8). *கர்த்தரை நம்புகிறவர்கள் மட்டுமே சுத்த இருதயத்தைப் பெற முடியும், அவர்களால் மட்டுமே கர்த்தர் நல்லவர் என்று ருசித்து சாட்சி சொல்ல முடியும்.*




🔸 *தேவன் நல்லவரும், நன்மை செய்கிறவருமாயிருக்கிறார் என்று சாட்சியமளிக்கும் வகையில் நாம் சுத்த இருதயமுள்ளவர்களா?*




✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:




1️⃣ *நம்முடைய இருதயத்தைத் தூய்மையாக வைத்திருப்பது வீண் போகாது; தாமதமாக இருந்தாலும், சந்தேகத்திற்கு இடமின்றி உரிய வெகுமதியைக் கொண்டுவரும்.*

2️⃣ *தேவனுக்காக ஏங்கும் இருதயம் கொண்ட ஒரு மனிதன் தேவனையே தன் பரலோக ஆஸ்தியாகவும், பூலோக லட்சியமாகவும் கொண்டிருக்கிறான்.*

3️⃣ *கர்த்தரை நம்புகிறவர்கள் மட்டுமே சுத்த இருதயத்தைப் பெற முடியும், அவர்களால் மட்டுமே கர்த்தர் நல்லவர் என்று ருசித்து சாட்சி சொல்ல முடியும்.*

Dr. எஸ். செல்வன். சென்னை


*🐛சிப்பிக்குள் முத்து🐛*




இன்றைய வேத

வாசிப்பு பகுதி -

*சங் : 72 - 75*




*🌴முத்துச்சிதறல் : 175*




🤍🤍🤍🤍

*சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்கு தேவன் நல்லவராகவே இருக்கிறார்.*

(73 : 1)

🤍🤍🤍🤍




*✍️இறைவன் படைத்திருந்த படைப்புகளில் சுத்தமுள்ளவைகளும், அசுத்தமுள்ளவைகளும் அடங்கி இருந்தன.*

( ஆதி - 7 : 2) அவைகளில் சுத்தமுள்ளவை மாத்திரமே இறைவனுக்கு உகந்தவையாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. இஸ்ரவேலரின் வாழ்வில்..... *"சுத்தத்திற்கும், அசுத்ததிற்குமுறிய வேறுபாட்டினை"* இறைவன் தமது நியாயபிரமாணத்தின் வாயிலாக அவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தார்.

*(லேவி - 20 : 25)* அசுத்தமானவை என்று இறைவன் அவர்களுக்கு அடையாளங்காட்டியிருந்த அனைத்தும் தீட்டாக எண்ணப்படும்படி அறிவுரையும் வழங்கப்பட்டு, அவர்கள் தங்களை காத்துக் கொண்டு, *"கர்த்தருக்கேற்ற பரிசுத்தர்களாக வாழும்படி"* இறைவனால் எதிர்பார்க்க பட்டு நடத்தப்பட்டிருந்தனர். *அவர்களை சுற்றிலுமிருந்த புறவின ஜனங்களின் செயல்பாடுகளுக்கும் இவர்களுக்கும் ஒரு வேற்றுமை இருக்கவேண்டி,* அவர்களின் பல அருவருப்புகளை இந்த இஸ்ரவேலருக்கு இறைவன் வெளிச்சம் போட்டு காண்பித்து, *ஓர் தனித்த மக்களினமாக, கூட்டமாக"* அவர்களை பயிற்றுவித்து வழிநடத்தி இருந்தார். இதில் அவர்கள் கீழ்படியாமை காண்பித்து, முரட்டாட்டம் செய்த போது அதற்குரிய தண்டனைகளை அவர்கள் அறுக்கும்படி விட்டுவிடப்பட்டு, இறைவனால் அவர்கள் ஒழுங்கு படுத்தப்பட்டு, / கட்டுப்படுத்தப்பட்டு வந்தனர்.




🌻🌻🫛🌻🌻




*🌹பிற்காலத்தில் இந்த நிலை மாறி, வெவ்வேறு விதமாக....*

🍒சரீர சுத்தம்,

🍒இட சுத்தம்,

🍒பொருள் சுத்தம்,

🍒கைகளின் சுத்தம்,

🍒சொற் சுத்தம்,

🍒வழி சுத்தம்,

🍒பாளைய சுத்தம்,

🍒தேசிய சுத்தம்,

🍒வஸ்திர சுத்தம், *🍒"இதய சுத்தம்"* என.......

வெவ்வேறு பரிணாமங்களை கொண்ட நிலையாக அவை மாறியது/ மாறி போனது.




பிற்காலத்தில்.....

இறைவன் அனைத்தையும் சுத்தமாக்கி விட்டதாக (ஆவிக்குரிய ரீதியில்... மனிதர்கள் எவரையும் நாம் தீட்டுள்ளோர் என பட்டம் கட்டி ஒதுக்கி விடாதிருக்க) கூறி அப். பேதுருவை தெளிவு படுத்தினார்.

*(அப் - 10 : 9 - 16)*




அதே போல....

ஆண்டவர் படைத்த அனைத்தும் சுத்தமுள்ளவை என்றும்....

*ஒரு பொருளும் தன்னிலே தீட்டுள்ளதல்ல வென்று பவுலடியார் கர்த்தருக்குள் நிச்சயித்து கொண்டு....*

அந்த தனது தனிப்பட்ட விசுவாசத்தினை காத்து கொண்டவராக,

அதே வேளை..... *கூட்டு விசுவாச வாழ்வுக்கு பங்கம் ஏதும் வராதபடி* அவரவர் நடந்து கொள்ள கர்த்தருடைய ஆவியானவரின் துணை கொண்டு.... கர்த்தரின் மந்தைக்கு அறிவுரை வழங்கினார்.

*(1 கொரி - 8 :, ரோ - 14, 15 : 1 - 3)*

கிறிஸ்துவை இரட்சராக ஏற்று, அவர் ஒருவருக்கு மட்டுமே தன்னை ஒப்புவித்து வாழும் மற்ற எம் சகோதரருக்கு நாம் எவ்விதத்திலும் இடறல் உண்டாக்கு பவர்களாக இல்லாதபடி நடந்து கொள்ள அறிவுறுத்தினார்.




🌿🌿🍎🌿🌿




*இரட்சிக்க படாத யூதர்கள், வெளிப்புறமான சுத்தத்தினை மாத்திரமே அவர்களால் சிந்திக்கவும், புரியவும் இயன்றதே தவிர,* 🍇"உள்ளான நிலையில் சுத்தம்" *என்னும் உயரிய தன்மையின் தாற்பரியம் அறியாதோராகவே இருந்தனர்.*




இந்த வெளிப்புற சுத்தத்திற்காக தண்ணீர் அதிகமாக பயன்படுத்த பட்டது.

சுத்திகரிக்கபடாதவை, மற்றும் தீட்டென்று அடையாளங் காண்பிக்கப்பட்டு போதிக்கப்பட்டவை யாவையும் அவர்கள் *"அருவருப்பு, மற்றும் தீட்டு"* என்னும் பட்டியலில் வைத்து நோக்கினார்கள், நம்பினார்கள்.




ஆனாலும் சிலருக்கு இந்த *"இருதய சுத்தம்"* குறித்த தனிப்பட்ட வெளிப்பாடுகள் (புரிதல்கள்) உண்டாகி இருந்தன. ஆகையால், தாவீது போன்ற தேவ மனிதர்கள்

📌என்னை சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன் என்றும்,

📌என்னை கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாகுவேன் என்பதாக தங்கள் *"இதயம் /ஆத்துமாவை" குறித்து விண்ணப்பித்தனர்.*

சுத்த இருதயம் தங்களில் புதிதாக உருவாக்கபடும்படி ஆசிக்கவும் ஜெபிக்கவும் செய்தனர்.

*(சங் - 51 : 7, 11)*




💠💠🍉💠💠




வெளிப்புறமான இந்த சுத்திகரிப்பு வெறும் போலித்தனமாக இராதபடி *"உட்பறமான சுத்திகரிப்பின்" மேன்மையை* கிறிஸ்து அவர்களுக்கு விளக்கி காண்பிக்க வேண்டியதாயிற்று.




ஆம் இறைவன் சொல்ல வந்ததின் *"ஆழ்ந்த கருத்தினை அறியக்கூடாதபடி, அவர்கள் இதயங்கள் கடினப்பட்டு இருந்தன."*




ஆகையால், உனது *உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு"*

என்று இயேசு கிறிஸ்து அவர்களுக்கு போதித்து, ஒரு முழுமைக்குள் / முழுமையான சத்தியத்திற்குள் அவர்களை வழிநடத்தினார்.

*(மத் - 23 : 25, 26)*




அதே வேளை......

*தமது உபதேசத்தினால், அதை கேட்டதினால், அவரது சீஷர்களும், சீஷிகளும் ஏற்கனவே சுத்தமாக இருப்பதாக சான்றும் அளித்தார்.*

(யோ - 15 : 2 , 3)




அவர் சுத்தமுள்ளவர் என்பதால், அவரை பின்பற்றுபவரும், *"அவரை போலவே தன்னையும் / தனது இதயத்தையும் சுத்திகரித்து கொள்ளுகிறான்."*

(1யோ - 3 : 3)




🎈🎈🔰🎈🎈




ஆகையால் இந்த *"இதய சுத்தம் என்பது"*

ஒரு விசுவாசிக்கு / தேவன் தெரிந்துக் கொண்ட நபர்களுக்கு இருக்குமானால், அவர்களுக்கு ஆண்டவர் என்றுமே நல்லவராகவே இருக்கிறவாராக விளங்குகிறார்.




*இந்த இதய சுத்தமில்லாதோர், இறைவனை குறை காண்போராக இருப்பதால்,* இவர்கள் வாழ்வில் பல இன்னல்களை சந்திக்கையில் அவரை குராய்ந்துக் கொண்டே இருக்கும் இதயமுடையோராக பழகி பழகி தங்கள் வாழ்வில் அவரது நன்மைகளை ருசிக்க இயலாதோராகி போய் இருப்பதால், *"ஆண்டவர் நல்லவரல்ல, தீது செய்பவர்"?*

என்னும் கண்ணோட்டத்தில் தாங்களும் இருந்து.... பிறரையும் அவவிதம் யோசிக்க வைத்து.... அவர்களது இதயத்தை / ஆத்துமாவை கெடுத்து போட்டு விடுகின்றனர்.




*🎋இறைவன் என்றுமே எல்லோருக்கும் நல்லவராகவே இருக்க விரும்பினாலும்,* மனுமக்கள் தங்களது சிந்தைகளினால் அவருக்கு பிரியமற்றவைகளை யோசித்து, அந்த வழியில் நடக்கையில்... அவர்களை அவர் *"வீணர்கள் பட்டியலில்"* அதாவது லாயகற்றோர் பட்டியலில் வைத்து விடுகிறார்.

*அந்த வீணர்கள் வாழ்வில் நன்மையை கண்டடைவது என்பது கிறிஸ்துவை விசுவாசிப்பதால் மட்டுமே நிகழும்.*




*🍂சுத்த இருதயம் உடையொருக்கு, அவர்கள் வாழ்வில் நடைபெறும் சகலமும் நன்மைக்கு ஏதுவாக முடிவதால்.... "கர்த்தர் நல்லவர்", என்பதை ருசித்து (அனுபவித்து) பார்க்கும் சிலாக்கியம் கிட்டியோராய் ஆண்டவரிடம் அவர்கள் அழியாத அன்புடனே அன்பு கூறுவோராக திகழ நேர்கிறது.*

(எபே - 6 : 24)




🐟சுத்த இதயமுள்ளோராக இருப்போம், *இறைவன் நல்லவர் தான் என்பதை*

அனுபவ ரீதியாக அறுவடை செய்வோம். துன்மார்க்கரின் செழுமை வாழ்வினை கண்டு பொறாமை கொண்டு, அவர்களை கண்ணோக்காமல் , அவர்களின் முடிவை கவனிப்பதும், எமது முடிவையும் குறித்து தெளிவோடு பயணம் செய்து,

*"காரியம் அறிந்த ஞானவான்களாக"* திகழ்வோம்.




*சுத்த இருத்தயத்துடனே கர்த்தரை தொழுகை செய்வோம்.*

(2தீமோ - 2 : 22)




*இறைவன் என்பவர் தாம் படைத்துள்ள படைப்பாகிய மனிதனுக்கு..... அவரவர் இருதய நிலைக்கு தக்கதாக..... அவர்களுக்கு நல்லவர், அவ்வளவே !
*🔥Sis. Martha Lazar*

*NJC, KodaiRoad*



ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👨‍👩‍👦‍👦




🙋‍♂️🙋‍♀️ படித்து தியானம் செய்யலாம்

*சங்கீதம் 73:3-12*




*செல்வந்தர் மீது பொறாமை*




*ENVY OF WEALTHY*




🙋‍♂️🙋‍♀️ நாம் சங்கீதங்களின் புத்தகம் III இல் இருக்கிறோம் ( *73 - 89* ). இது *17* இல் *11* சங்கீதங்களின் தொகுப்புடன் தொடங்குகிறது, இது ஆசாப்புடன் தொடர்புடையது மற்றும் *அசாபின் சங்கீதங்கள்* (73-83) என்று அழைக்கப்படலாம்.

சுவாரஸ்யமாக, சங்கீதம் 73 மற்றும் 74, ஒவ்வொரு தலைமுறையிலும் நிலவும் பொதுவான கேள்விகளை நமக்குத் தருகிறது:

📌 *கெட்டவர்களுக்கு நல்லது நடக்கும்* ( சங் 73 )

📌 *நல்லவர்களுக்கு கெட்ட விஷயங்கள் நடக்கும்* ( சங் 74 )



📝 *சங்கீதம் 73* இல், சங்கீதக்காரன் தன்னுடைய தனிப்பட்ட அனுபவத்தை கேட்பவர்களுக்கு ஒரு முக்கியமான பாடத்தை கற்பிப்பதற்காக விவரிக்கிறார்.




🙋‍♂️ சங்கீதக்காரன் எழுதுகிறார், *"துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள் மேல் பொறாமை கொண்டேன்"*.

*".. இவர்கள் துன்மார்க்கர் : இவர்கள் என்றும் சுகஜீவிகளாயிருந்து, ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறார்கள்."* (வ. 3,12)




🙋‍♂️ சங்கீதக்காரன் தன்னை *வழுக்கும் நிலத்தில்* கண்டான், அவன் தேவன் மற்றும் நித்திய சத்தியத்தின் பெரிய சித்திரத்தின் மீது கவனம் செலுத்தாமல், தங்களுடைய தேர்வுகள் எவ்வளவு தீயதாக இருந்தாலும் தங்க வாழ்க்கை வாழ்வது போல் தோன்றியவர்கள் மீது கவனம் செலுத்தினான்.

☑️ அவர்கள் செல்வத்தில் செழிக்கிறார்கள் ( *வ 3* )

☑️ அவர்களுக்கு எந்தப் போராட்டமும் இல்லை ( *வ 4* )

☑️ அவர்கள் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் உள்ளனர் ( *வ 4*)

☑️ அவர்கள் சுமைகளிலிருந்து விடுபட்டவர்கள் ( *வ 5* )

☑️ அவர்கள் நோயினால் பாதிக்கப்படுவதில்லை ( *வ 5* )

☑️ அவர்களின் இருதயம் தீமையால் நிறைந்துள்ளது ( *வ 7* )

☑️ அவர்கள் பெருமை மற்றும் இறுமாப்பாய் பேசுகிறார்கள் ( *வ 6, 8* )

☑️ அவர்கள் தேவனுடைய தார்மீக சட்டங்களையும் அதிகாரத்தையும் புறக்கணிக்கிறார்கள் ( *வ 11* )

☑️ அவர்கள் சுக ஜீவிகளாயிருந்து, ஆஸ்தியை பெருகப்பண்ணுகிறார்கள். ( *வ 12* ) .




🙋‍♂️ *சங்கீதக்காரன் தன் நம்பிக்கையும், தன் இருதயத்தை தூய்மையாக வைத்திருக்கும் போராட்டமும் வீணாகிவிட்டதாக உணர்கிறான்* (வ. 13-14),

📍வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சங்கீதக்காரன் கேள்வி எழுப்புகிறார், " *சுத்த இருதயமுள்ளவர்களுக்கு தேவன் நல்லவர் என்று எப்படி நம்ப முடியும்*" (வ. 1)

📍பதிலைப் பெற, சங்கீதக்காரன் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கிறார் ( *வ 17* ) :

✅ தேவனுடைய கண்ணோட்டத்தில் துன்மார்க்கரைப் பார்க்கும்போது, ​​சங்கீதக்காரன் அவனுடைய முந்தைய மனப்பான்மை அர்த்தமற்றது என்று ஒப்புக்கொள்கிறார் ( *வ. 21-22*)

✅ இப்போது சங்கீதக்காரன் தேவனுடைய பிரசன்னத்தை உணர்கிறான், அவன் அவரைத் தன் வலது கையால் பிடித்துக் கொள்கிறான் ( *வ. 23* )

✅துன்மார்க்கன் எந்த நேரத்திலும் அழிவுக்குத் தள்ளப்படலாம் என்பதை சங்கீதக்காரன் அங்கீகரிக்கிறார். துன்மார்க்கர்கள் செழிப்பதாகத் தோன்றினாலும், தேவன் அவர்களின் நிலையை ஆபத்தானதாக ஆக்கினார், மேலும் அவர்கள் பயங்கரங்களால் அழிந்து நிர்மூலமாவார்கள். *(வ. 18-20*)




🙋‍♂️ *தேவன் நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் போதுமானவர் என்பதை சங்கீதக்காரன் உறுதிப்படுத்துகிறார்* (வ. 24-26)

🙋‍♂️ *சங்கீதக்காரன் இனி சந்தேகங்களை வெளிப்படுத்த மாட்டார்* (வ. 15) *ஆனால் தேவனுடைய எல்லா கிரியைகளையெல்லாம் சொல்வதாக சபதம் செய்கிறார்* (வ. 15, 28)




💞 அன்பான திருச்சபையே, துன்பங்களை எதிர்கொள்வதற்கான பலத்தை தேவன் ஒருவரே நமக்குத் தர முடியும்.

*தேவனின் நன்மை என்பது பொருள் செழிப்பைக் குறிக்காது, ஆனால் தேவன் நம் அருகில் இருப்பதையும் அவரது பாதுகாப்பையும் அனுபவிப்பதில் உள்ள மகிழ்ச்சியாகும்*.

🙋‍♂️ சங்கீதக்காரன் தான் பலவீனமாகவும் பாதுகாப்பற்றவனாகவும், வழுக்கும் தரையில் நின்றுகொண்டிருந்ததாகவும் உணர்கிறான் ( *வ 1-3* ) அதேசமயம் துன்மார்க்கர்கள் பலமாகவும் பாதுகாப்பாகவும் இருந்தனர் ( *வ 4-12* ). ஆனால் நாளின் முடிவில், துன்மார்க்கர்கள் வழுக்கும் தரையில் மட்டுமே நிற்கிறார்கள் என்பதை அவர் உணர்கிறார் ( *வ. 18* ) .




🙋‍♂️🙋‍♀️ *உங்களிடம் இருப்பதில் திருப்தியடையுங்கள், வழுக்கும் தரையில் அல்ல, பாறையில் மேல் நில்லுங்கள்*




தேவனுக்கே மகிமை 🙌

✍🏻 *மார்க் போஜே*

அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳




தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்

[06/10, 18:54] +91 6381 380 447: *நாள் 175: சங்கீதம் 72 - 75*




*தேவன் வடக்கிலிருந்து ஆட்சி செய்கிறார்*




*சங்கீதம் 75:6-7* -> _*கிழக்கிலும், மேற்கிலும்* வனாந்தர திசையிலிருந்து ஜெயம் வராது._ _தேவனே நியாயாதிபதி: ஒருவனைத் தாழ்த்தி, ஒருவளை உயர்த்துகிறார்._




அவர் சபையை ஏற்றுக்கொண்டு நேர்மையாக நியாயந்தீர்க்கும் *தேவனுடைய சிங்காசனம்* *வடக்கில்* உள்ளது என்பது இங்கே மறைமுகமாக உள்ளது. அது கிழக்கிலோ, மேற்கிலோ, தெற்கிலோ இல்லாததால், அது வடக்கே இருக்க வேண்டும்.




வேதத்தில் உள்ள பல குறிப்புகள் *தேவனுடைய சிங்காசனம்* தொடர்பாக *வடக்கு* திசையைப் பற்றி பேசுகின்றன.




_*யேகோவாவின் மகிமை* *எசேக்கியேல்*_ தீர்க்கதரிசியை சந்தித்தபோது, _*வடக்கேயிருந்து* *புசல் காற்றுடன்* வந்தது_ [எசே 1:4].




*தாவீது சீயோன் பர்வதம்* *வடதிசையில்* இருப்பதாக பாடுகிறார் [சங் 48:2].




*எலிகூ* தேவனின் மகத்துவத்தைப் பற்றிப் பேசுகிறார்: _*வடக்கேயிருந்து* பொன்மயமான காந்தி வருகிறபோது, தேவனிடத்திலோ பயங்கரமான மகத்துவமுண்டு_ [யோபு 37:22].




பலிபீடத்தின் *வடபுறத்தில்* *பலிகள்* செலுத்தப்பட்டன: _கர்த்தருக்கு முன்பாக பலிபீடத்தின் *வடபுறத்தில்* அதைக் கொல்லக்கடவன் ..._ [லேவி 1:11].




*சாத்தான்* வானத்தின் *வடபகுதிக்கு* ஏற விரும்பினான்:

_... நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; *வடபுறங்களிலுள்ள* ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன்_ [ஏசா 14:13] என்றான்




பூமியின் புவியியல் மற்றும் காந்த துருவங்கள் எப்போதும் *வடக்கேயுள்ளது!* என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது.




*நட்சத்திரங்கள், விண்மீன் திரள்கள் மற்றும் விண்மீன் கூட்டங்களுக்கு மேலாக, மூன்றாவது வானத்தின் வடக்கு திசையில் தேவனுடைய சிங்காசனம் அமைந்துள்ளது என்று வேதம் வெளிப்படுத்தியதிலிருந்து நாம் கூறலாம்!*

- செர்ரி செரியன், கொச்சி, இந்தியா

தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்


💝ENDURING LOVE OF GOD💝*

*💝 தாங்கும் தேவ அன்பு💝*




[நாள் - 175] சங்கீதம் 72-75




☄️சங்கீதம் 72-75 அரசாட்சி, நீதி மற்றும் துதியின் கருப்பொருள்களின் ஆழமான நுண்ணறிவுகளை வழங்குகிறது.




1️⃣ *சங்கீதம் 72: நீதியுள்ள ராஜாவுக்கான பிரார்த்தனை*




🔹சங்கீதம் 72, நமது தலைவர்களை ஞானமாக தேர்ந்தெடுக்கும் பொறுப்பை நமக்கு நினைவூட்டுகிறது.

🔹தம்மைப் பின்பற்றுபவர்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும், சமூக நீதியை நோக்கிச் செயல்படும் மற்றும் தார்மீக ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தும் நபர்களைத் தேட இது நம்மைத் தூண்டுகிறது.

🔹இந்த சங்கீதம், நமது சமூகங்களில் தலைவர்களாக நமது சொந்த பாத்திரங்களை ஆராய தூண்டி, நமது எல்லா முயற்சிகளிலும் நீதி, இரக்கம் மற்றும் நேர்மை போன்ற பண்புகளை பின்பற்றும்படி வலியுறுத்துகிறது.




2️⃣ *சங்கீதம் 73: தீமையின் பிரச்சனையுடன் போராட்டம்*




🔸நம் சொந்த வாழ்க்கையில், நம்முடைய நம்பிக்கைக்கும் புரிதலுக்கும் சவால் விடும் சூழ்நிலைகளை நாம் அடிக்கடி சந்திக்கிறோம்.

🔸சங்கீதம் 73, நமது மனித வரம்புகளை ஒப்புக்கொண்டு, இந்த சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுடன் நேர்மையாக போராட ஊக்குவிக்கிறது.

🔸இறுதியில், தெய்வீக நீதி வெல்லும் என்று நம்பி, தேவனுடைய ஞானத்தையும் கண்ணோட்டத்தையும் தேடுவதில் ஆறுதல் தேட இது நமக்கு நினைவூட்டுகிறது.

🔸தற்காலிக சோதனைகளை எதிர்கொண்டு நித்திய கண்ணோட்டத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை இந்த சங்கீதம் நமக்குக் கற்பிக்கிறது.




3️⃣ *சங்கீதம் 74: மறுசீரமைப்புக்காக புலம்பலும் அழுகையும்*




🔺சங்கீதம் 74, துயரத்தின் போது புலம்பல் மற்றும் உருக்கமான ஜெபத்தின் முக்கியத்துவத்தை நமக்கு நினைவூட்டுகிறது.

🔺நம் துக்கங்களையும் உடைப்புகளையும் தேவனுக்கு முன்பாகக் கொண்டுவர கற்றுக்கொடுக்கிறது, அவருடைய உண்மையில் நம்பிக்கை, மறுசீரமைப்பையும் குணப்படுத்துதலையும் கொண்டுவருகிறது.

🔺இந்த சங்கீதம், நமது வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை மதிக்கவும் பாதுகாக்கவும் நம்மை ஊக்குவிக்கிறது, தேவனுடனான நமது உறவையும், சமூக உணர்வையும் வளர்ப்பதில் அவற்றின் பங்கை அங்கீகரிக்கிறது.




4️⃣ *சங்கீதம் 75: தேவனுடைய இறையாண்மை*




◾️சங்கீதம் 75 அனைத்து நாடுகளின் மீதும் இறுதி நீதிபதியாகவும் ஆட்சியாளராகவும் தேவனுடைய இறையாண்மையை அறிவிக்கிறது.

◾️தேவனுடைய சக்தி மற்றும் அதிகாரத்தின் தன்மையைப் பற்றி சிந்திக்க இது நம்மை அழைக்கிறது. தேவனுடைய இறையாண்மையை அங்கீகரிப்பதிலும், அதற்கு அடிபணிவதிலும்தான் உண்மையான மகத்துவம் அடங்கியிருக்கிறது என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது.

◾️இந்தச் சங்கீதம், மனத்தாழ்மையையும் நன்றியுணர்வையும் வளர்த்துக்கொள்ள நமக்கு சவால் விடும் வகையில், நம்முடைய சொந்த இதயங்களை ஆராயத் தூண்டுகிறது.

◾️தேவனுக்கு தொடர்ந்து துதியையும் நன்றியையும் தெரிவிக்க இது நம்மை ஊக்குவிக்கிறது, நம் வாழ்வில் அவருடைய நீதியான தீர்ப்பையும், மாறாத அன்பையும் அங்கீகரிக்கிறது.




*❤️வாழ்க்கை பாடங்கள்*




💥 சங்கீதம் 72-75 நியாயம் மற்றும் நீதி, தேவனுடைய இறையாண்மை மற்றும் விடுதலை ஆகியவற்றின் அங்கீகாரம் மற்றும் தேவனுடைய தாங்கும் தன்மை ஆகியவற்றை வலியுறுத்துகிறது.

💥தேவனுடைய நீதியை நம்பவும், அவருடைய வழிகாட்டுதலையும் ஞானத்தையும் தேடவும், அவருடைய உண்மைத்தன்மை மற்றும் அன்பிற்காக அவரைப் போற்றவும் அவை நமக்குக் கற்பிக்கின்றன.

*‼️தேவனுடைய உறுதியான அன்பில் நம்பிக்கை வைப்போம்‼️*

பிரின்சஸ் ஹட்சன்

தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.