சங்கீதம் 50 - 55
🤍 *சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும்* 🤍
☄️ *“தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்."* (சங்கீதம் 51:10-11).
🔸 தாவீது உரியாவின் மனைவியான பத்சேபாளுடன் விபச்சாரம் செய்து, உரியாவைத் தந்திரமாகக் கொன்று, அவனது மனைவியைத் தனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டு கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதை செய்தான். எல்லா ஜனங்களிடமிருந்தும் இவற்றை மறைப்பதில் வெற்றி பெற்று விட்டதாகவும், தேவனுடைய பார்வையிலிருந்தும் மறைத்துவிட்டதாகவும் எண்ணிக் கொண்டிருந்தான். அதை எப்படித் தேவனிடம் மறைக்க முடியும்? *தேவன் நாத்தானை தாவீதிடம் மிகுந்த கண்டனங்களுடனும் சாபங்களுடனும் அனுப்பினார்* (2 சாமுவேல் 12:1-12). தாவீது நாத்தான் மூலம் தேவனின் வார்த்தைகளைக் கேட்டவுடன், அவன் தனது பாவங்களை மறைக்க முயற்சிக்காமல், நொறுங்குண்ட இருதயத்துடன் மனந்திரும்பினான்.
🔸 தேவனால் பலமாகப் பயன்படுத்தப்படும் ஒரு மனிதனும்கூட துணிந்து பாவம் செய்ய முடியும் என்பதற்கு சிம்சோன் சரியான உதாரணம். *மனந்திரும்பும் இருதயம் அவனிடம் இல்லை.* அவன் தனது செயல்களால் தேவனுடைய ஆவியை துக்கப்படுத்திக்கொண்டே இருந்ததால், *தேவனுடைய ஆவி இறுதியாக அவனை விட்டு விலகினார்.* சிம்சோன் தனது விசேஷித்த வலிமையை இழந்து அவமானப்படுத்தப்பட்டான்.
🔸 ஆனால் தாவீதோ ஒரு *ஆழ்ந்த மனந்திரும்புதலை* கொண்டிருந்தான். அவன் மனந்திரும்பியபோது தேவன் அவனுடைய இருதயத்தை அறிந்திருந்தார். இந்தச் சூழ்நிலையில் தாவீது சங்கீதம் 51ஐ எழுதினான். இது அவனுடைய உள்ளார்ந்த எண்ணங்களைப் பற்றிய நுண்ணறிவை நமக்குத் தருகிறது.
🔸 *நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை தேவன் தள்ளமாட்டார்* என்பதால், தேவனின் இரக்கத்தை அவன் சார்ந்திருப்பதை தெரிவித்தான் (சங்கீதம் 51:17). *தேவன் தீமையைக் காண மாட்டார்* என்பதை அவன் அறிந்திருந்தபடியால், தனது பாவங்களைப் பாராதபடிக்கு தமது முகத்தை மறைக்க அவரிடம் வேண்டினான் (சங்கீதம் 51:9). அனைத்திற்கும் மூலகாரணம் தனது இருதயம் என்பதை ஒப்புக்கொண்டு, *தனக்குப் புதிய இருதயத்தைத் தருமாறு தேவனிடம் மன்றாடினான்* (சங்கீதம் 51:10). பாவம் ஒருவரை தனது இரட்சிப்பையும் அதன் மகிழ்ச்சியையும் இழக்கச் செய்யும். எனவே, தாவீது *தேவனின் இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் தருமாறு ஜெபித்தான்* (சங்கீதம் 51:12).
🔸 *தான் மாறினால் பலரை மாற்றமுடியும்* என்று தாவீது நம்பிக்கை கொண்டிருந்தான் (சங்கீதம் 51:13). அவனுடைய பாவங்கள் கர்த்தருடைய நாமம் தூஷிக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தன. அவனுடைய மனந்திரும்புதல் அநேகர் கர்த்தரிடம் மனந்திரும்புவதற்கு வழிவகுத்து அவருக்கு மகிமையைக் கொண்டுவரும். இதுவே *அனைத்து விசுவாசிகளின் விருப்பமாகவும் அர்ப்பணிப்பாகவும் இருக்க வேண்டும்.*
🔸 தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் கேடுள்ள இருதயம் இல்லாதபடிக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். *“எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?”* (எரேமியா 17:9). அதை அறியத்தக்கவன் யார்? உண்மையாய் மனந்திரும்பும் ஆத்துமா அதை அறிந்து கொள்ளும். தாவீது, பத்சேபாளுடன் செய்த பாவத்திற்காக மனந்திரும்பி, தேவனிடம் ஜெபித்தான்: *"தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும்,* நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.” (சங்கீதம் 51:10).
🔸 தேவன்வாக்குத்தத்தம் அளித்திருக்கிறார்: *“உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.”* (எசேக்கியேல்36:26). எவ்வளவு பெரிய வாக்குத்தத்தம்! இந்த வாக்குத்தத்தத்தைப் பற்றிக் கொண்டு, சதையான நவமான இருதயத்துடன் நம்மை எப்பொழுதும் புதுப்பிப்பதன் மூலம், உள்ளான மனிதனில் நம்மைப் பலப்படுத்தும்படி நாம் தேவனிடம் கேட்க வேண்டும். அத்தகைய இருதயம் தேவனுக்குக் கீழ்ப்படிவதற்கு, நம்மில் உள்ள பரிசுத்த ஆவியின் குரலை உணரும்.
🔸 தாவீது தேவனுடைய ஆவியை இழக்கும் ஒரு பயங்கரமான சூழ்நிலையில் தான் இருப்பதை உணர்ந்துகொண்டதால், *பரிசுத்த ஆவியை தன்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமல் இருக்க வேண்டும்* என்று தேவனிடம் சரியான முறையில் வேண்டிக்கொண்டான். பவுல் விசுவாசிகளுக்கு எழுதுகிறான்: *"ஆவியை அவித்துப்போடாதிருங்கள்."* (1 தெசலோனிக்கேயர் 5:19). *"நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்."* (எபேசியர் 4:30).
🔹 *நம் ஆவிக்குரிய வாழ்க்கையில் பலத்துடன் இருக்க பரிசுத்த ஆவியை அவித்துப்போடவோ துக்கப்படுத்தவோ கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை தேவன் தள்ளமாட்டார்.*
2️⃣ *சதையான நவமான இருதயத்துடன் நம்மை எப்பொழுதும் புதுப்பிக்கும்படி நாம் தேவனிடம் கேட்க வேண்டும்.*
3️⃣ *மனந்திரும்பிய அனைத்து விசுவாசிகளும் பலரை இயேசுவிடம் கொண்டு வர வேண்டும்.*
4️⃣ *நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் பலத்துடன் இருக்க பரிசுத்த ஆவியை அவித்துப்போடவோ துக்கப்படுத்தவோ கூடாது.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
*சங்கீதம் 50-55*
*சங்கீதம் 51* ..*ஓர் உன்னதமான* *பாவ அறிக்கையின் ஜெபமாகும்*.
தாவீது தன் பாவங்களின் ஆழத்தைப் புரிந்துகொண்டான்..
அவனுக்குள் மெய் மனஸ்தாபம் உண்டானது..
தனது பாவங்களை அருவருத்தான்..தன்னையே வெறுத்தான்..அதனால் எத்தனை நாட்கள் அழுதானோ தெரியவில்லை..
அவன் தனது பாவங்களை அறிக்கை செய்தபோது..
தனது *அக்கிரமம்*, தனது *மீறுதல்*, தனது *பொல்லாங்கு* என அவற்றை விவரமாகக் கூறினான்..
தேவனுடைய கிருபைக்காக.. இரக்கத்திற்காகக் கெஞ்சினான்.
தாவீது, தனது விண்ணப்பத்திலே..தேவனே என்னுடைய பாவத்தினிமித்தம்.. என் கிரீடத்தை என்னை விட்டு எடுத்துப்போடாதேயும்,
என் தேசத்திலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும் என்று கெஞ்சவில்லை..
உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாதிரும்…
உமது பரிசுத்த ஆவியை என்னை விட்டு எடுத்துப்போடாதேயும்..
நான் இனிமேல் பாவஞ்செய்யாமலிருக்க..
சுத்த இருதயத்தை என்னிலே
சிருஷ்டியும் என்றுதான் கெஞ்சினான்.
( சங் . 51 : 10,11 )
இதிலிருந்து,தாவீதிற்கு இந்த உலகமும்.. அதன் மேன்மையுமல்ல.. தேவனுடைய பிரசன்னமும், தேவ உறவுமே முதன்மையானது
முக்கியமானது என்பது தெரிகிறது..
இந்த உலகிலே எந்த ஒரு மனிதனும்..தேவனிடத்தில் தான் அறிக்கை செய்த பாவங்களை..
மற்றவர்களுக்கு
மறைத்துவிடுவான்..
ஆனால் தாவீதோ, தனது பாவ அறிக்கையைப் பாடலாகப் பாடி..தன்னைப் போலப் பாவஞ்செய்தவர்கள்..
மனந்திரும்பி தேவனண்டை மீண்டும் நெருங்கிச் சேருவதற்கு ஏதுகரமாக...
அதை விட்டுச்
சென்றிருக்கிறான்..
இது அவனது தாழ்மையின்
சிந்தையை வெளிப்படுத்தியது..
அதுவே அவனைத் தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவனாக மாற்றியது
*இன்று நாமும் நமது* *பாவங்களைக் குறித்து* *அக்கறையற்றவர்களாக*
*இருக்கக்கூடாது*..
*வேதத்தின் வெளிச்சத்திலே* *நம்மை நாமே*
*ஆராய்ந்துபார்த்து*..
*மனஸ்தாபப்பட்டு..பாவ அறிக்கைசெய்து*..
*அதை விட்டுவிடுவது மிக மிக*
*அவசியம்*..
பாவத்தில் வாழ்ந்த
அகஸ்டின்..தன் தாய் மோனிக்காவின் ஜெபத்தினால்,
மனந்திரும்பி தேவனண்டை வந்து..தனது பாவங்களை அறிக்கை செய்தபோது..புது சிருஷ்டியாய் மாறினார்..கிறிஸ்தவ உலகின் சிறந்த தத்துவ ஞானிகளில் ஒருவரானார்..
மட்டுமல்ல தூய அகஸ்டின் என்றும் அழைக்கப்படுகிறார்..
*பாவ அறிக்கை*..
*நம்மைப் பரிசுத்தத்திற்கு* *வழிநடத்துகிறது*..
*தேவசாயலை நம்மிலே*
*உருவாக்குகிறது*..
*தேவனுக்கேற்றவர்களாய்*
*நம்மை மாற்றுகிறது*..
*எனவே ஒவ்வொரு நாள்* *இரவிலும்..மறவாமல்*
*பாவ அறிக்கை*
*செய்வோம்*..
*நாளுக்கு நாள் பரிசுத்தத்திலே*
*வளருவோம்*..
ஆமென்..🙏
மாலா டேவிட்
பலியினாலே கர்த்தரோடு செய்யும் உடன்படிக்கை*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சங்கீதம் 50: 5, 8. *பலியினாலே என்னோடே உடன்படிக்கை பண்ணின என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள்.*
*உன் பலிகளினிமித்தம் உன்னை கடிந்து கொள்ளேன் .*
1. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து திரும்ப வருவார். அப்போது *ஜனத்தை நியாயம் தீர்க்க அவர் பூமியையும் வானத்தையும் கூப்பிடுவாராம்.* சங்கீதம் 50: 4.
அப்போது *பலியினாலே கர்த்தரோடு உடன்படிக்கை பண்ணின பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள்* என்பார். அப்படியானால்
1. *நாம் பலி செலுத்தும் போது நாம் கர்த்தரோடு உடன்படிக்கை பண்ணுகிறோம்* என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
2. *பலி செலுத்தும் நம்மை பரிசுத்தவான்கள்* என கர்த்தர் அழைக்கிறார்.
3. *உன் பலிகள் நிமித்தம் உன்னை கடிந்து கொள்ளேன்*.
4. *உன் தகனபலிகள் எப்போதும் கர்த்தருக்கு முன்பாக இருக்கிறது*.
அப்படியானால் நாம் பலி செலுத்த வேண்டியதன் அவசியத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
2. *நாம் செலுத்தும் பலி பழுதற்றதாய் இருக்க வேண்டும். முழு இரத்தமும் சிந்தப்பட்டு மரிக்க வேண்டும். ஆம், கிறிஸ்து தம்மை தாமே பழுதற்ற பலியாக நம்மை இரட்சிக்கும் படி ஒப்புக் கொடுத்தார்*. ஆம், இன்று நாம் கர்த்தருக்கு பழுதற்ற, பாவமில்லாத பலிகளை செலுத்துகிறோமா? நம்மை நாமே ஆராய்வோம்.
3. *இன்று நாம் செலுத்த வேண்டிய பலிகள் எவை?*
1. *ஜீவ பலி.* ரோமர் 12: 1.
2. *ஸ்தோத்திர பலி.* சங்கீதம் 50: 23
3. *நொறுங்குண்ட ஆவியாகிய பலி.* சங்கீதம் 51: 17.
4. *நீதியின் பலி.* சங்கீதம் 4: 5.
5. *விசுவாசமாகிய பலி* . பிலிப்பியர் 2: 17.
6. *நன்மை செய்வதும், தான தர்மம் செய்வதுமான பலி.* எபிரேயர் 13: 16.
4. ஆனால், இந்த பலியை விட மேன்மையானதையும், நாம் கட்டாயமாய் செய்ய வேண்டியதுமுண்டு.
1 *பலியை பார்க்கிலும் கீழ்ப்படிதலே உத்தமம்*. 1 சாமுவேல் 15: 22.
2.*பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்.* மத்தேயு 12: 7.
3. *கர்த்தரிடத்திலும், பிறனிடத்திலும் அன்புகூருவது சர்வாங்க தகனபலிகளை பார்க்கிலும் முக்கியமானது* மாற்கு 12: 33
ஆம், இயேசு வருகிறார். அவரோடு உடன்படிக்கையாகிய பலிகளை செலுத்துவோம். பலிகளை விட மேன்மையானவைகளையும் செய்வோம். ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
*🥗சிப்பிக்குள் முத்து🥗*
இன்றைய வேத
வாசிப்பு பகுதி -
*சங் : 50 - 55*
*🥙முத்துச்சிதறல் : 171*
🍒🍒🍒🍒
*🌏பூமியும் அதன் நிறைவும் என்னுடையவைகளே.*
(50:12)🌍
🍒🍒🍒🍒
*சங்கீதம் - 50*
*✍️இந்த 50ம் சங்கீதம்.....ஆசாப் என்னும் பாடகன் இயற்றியது.*
இதில் இறைவன் பூமியை கூப்பிடுவதாக..... அதாவது ஆங்கிலத்தில்.... *பூமிக்கு...."சம்மன்"* (SUMMON)....
*சுருங்க கூறின்.... நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அதிகாரபூர்வமான ஒரு உத்தரவை /* அல்லது
*"பலரை ஒன்று திரட்டும்" ஒரு நிகழ்வை ஆண்டவர் ஏற்படுத்த முனைகிறார்.*
இதை தான் நாம் *"சம்மன்"* என்கிறோம்.
இங்கு கர்த்தரிடம் இருந்து பூமிக்கு என்றால்....
*பூமியில் உள்ளோரை தமக்கு முன் வந்து நிற்கும்படி ஓர் அழைப்பினை அரைக்கூவி அழைக்கிறார்.* அவரே நியாயாதிபதியாகவும் தம்மை நிலை நிறுத்திக் கொண்டு இந்த அழைப்பினை விடுப்பதாக *வசனங்கள் 1-6 விவரிக்கிறது.*
🫛🫛🌻🫛🫛
*🌎இறைவன் இங்கு தாம் உண்டாக்கிய தம்முடைய ஜனத்தை நியாயந்தீர்க்க தனது வார்த்தையாலும், கரங்களாலும் படைக்கப்பட்ட வானம் மற்றும் பூமியை*
(எபி - 11 : 3 :, ஏசா - 45 : 12 :, 48 : 13)
*தாம் தீர்க்கப்போகும் தீர்பிற்கு சாட்சியாக வரும்படி அழைப்பதாக இருக்கிறது.*
🍒நாம் சிறுவர்களாக இருக்கையில் ஒருவேளை கண்டிப்புள்ள பெற்றோரால் வளர்க்கப்பட்டிருப்போமாகில்.... *அவர்கள் எம்மை பெயர் சொல்லி.... இங்கு வா !* என்று கூப்பிட்டாலே ஒரு நடுக்கம் நம்மில் ஏற்படும். அதைப்போலவே இங்கு வானங்களும், பூமியும் கூட.....
அவர் முன் நடுங்கும் தன்மையோடு வர போகிறது.
அவைகளுக்கு ஓர் நடுக்கம் தான் உருவாக போகிறது.
இறைவன் பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் அவரது சொந்த ஜனமாக அழைத்துக் கொண்ட, அறிந்துக் கொண்ட ஆவிக்குரிய மற்றும் மாம்சீக இஸ்ரவேலர்களை அவர்களது அக்கிரமங்களினிமித்தம் அவர்களை தண்டிப்பாராம். *(ஆமோஸ் - 3: 2)*
*தனது சொந்த ஜனங்களாக எவர்களையெல்லாம் இறைவன் அழைத்துள்ளாரோ அவர்கள் தவறுகளை அவர் கண்டுக்காமல் பொறுத்துக்கொண்டு இருக்க மாட்டாராம்.*
🎈🎈💠🎈🎈
*🌍ஆண்டவர் சொல்ல வருவதென்னவென்றால்....*
நான் சிருஷ்டித்த...... 🥏காளைகள்,
🥏ஆட்டுக்கடாக்கள்,
🥏காட்டு ஜீவன்கள்,
மற்றும்
🥏ஆயிரமாயிரம் மிருகங்கள்.....
*யாவும் ஏற்கனவே என்னுடையவைகள் தானே தவிர, அதை நீ உன்னுடையதாக எண்ணி எனக்கு கொண்டுவர வேண்டாம் என்கிறார்.*
நான்தான் அவைகளை உனக்கென்று வழங்கியுள்ளேன் என்பதை மறவாதே ! *"பூமி முழுவதும்.... அதில் உள்ள நில புலங்களோ, செடி கொடிகளோ, மர மட்டைகளோ, தாது பொருட்களோ, ஆகாரம் அருளும் எவ்வகையனவோ... யாவுமே..... ஆம் யாவும்... என்னுடையவைகள் என்கிறார்.*
அதனை இறைவன் தமக்குரியவை என...*அவர் உரிமை கொண்டாடுகிறார்.*
*🌍அப்படியென்றால் 🤔 அவர் என்னத்தை தான் எம்மிடம் எதிர்ப்பார்ப்பதாக ஆசாப் மூலம் இங்கு கர்த்தர் கூற வருகின்றார்❓🤔*
*🍀1) நீ தேவனுக்கு ஸ்தோத்திர பலியிடு.*
*🍀2) உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளை செலுத்து.*
*🍀3) ஆபத்து காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு.*
*🍀4) நான் உன்னை விடுவிப்பேன்.*
*🍀5) நீ என்னை மகிமை படுத்துவாய்.*
இதுதான் எம்மிடம் அவர் எதிர்பார்ப்பது.
🌳🌳🔥🌳🌳
*❣️ஸ்தோத்திர பலிகள்,*
*❣️பொருத்தனை பலிகள்,*
*❣️துதியின் பலிகள்,*
*❣️நன்றி பலிகள்,* போன்றவற்றை....
*அவர் எம்மிடம் எதிர்பார்க்கிறார்.*
🛍️🛍️📌🛍️🛍️
*🌎துன்மார்க்கர் ஆண்டவருக்கு.... அவர் விரும்பும் எந்த விதமான பலிகளையும் செலுத்துவதில்லை.*
மாறாக.....
*🌿அவன் தன் சகோதரனுக்கு விரோதமாக பேசுவதும்,*
*🌿அவனை அவதூறு செய்வதையும் மட்டுமே தன்....*
*🍒"குல தொழில் போல"....*
செய்து கொண்டு வருகிறவனாம். எத்தனை உண்மையான வார்த்தைகள் ! ஆகையால்.....
*இப்படி செய்வோரை இறைவன் தாம் நியமித்த ஒரு நாளில் கடிந்துக் கொள்ளுவாராம். அவர்களுக்கான ஒரு காலத்தில்... நியாயம் விசாரிக்கப்படும் நாளில்... அவற்றை ஒவ்வொன்றாக அவர்கள் முன் நிறுத்துவாராம்.*
(சங் - 50 : 16 - 21)
🍇🍇✅🍇🍇
*🌏தேவனுக்கு அஞ்சி நடப்போம்.*
ஏன் என்றால்...
*"பூமியும் அதன் நிறைவும்" அவருடையது.*
💊எல்லாம் அவருடையது என்பதை அறிக்கையிட்டார் தாவீதரசர்.
*உம்மிடத்தில் இருந்து பெற்று.... உமக்கே கொடுத்தோம் என்கிறார்.*
(1நாளா - 29 : 11 - 16) *"எல்லாம் உம்முடையது / அவருடையது"* என்பதே.....
*தாவீதரசரின் வாக்குமூலமாகவும் இருந்தது.*
அத்தனை தன்னை தாழ்த்தி கொண்டார் அந்த மா பெரும் சக்ரவர்த்தி.
*🌴என் சுயபெலத்தால் இவ்வாற்றையெல்லாம் சாம்பாதித்தேன் என்று சொல்லாதே ! நீ உழைக்க தக்க தேவையான சரீர ஆரோக்கியத்தினை உன் தேவனாகிய கர்த்தரே உனக்கு வழங்கினார் என்கிறார் இறைவன்.*
(உபா - 8 : 10 - 18)
எத்தனை உண்மையான வார்த்தைகள் / *சத்தியம் !*
*🐟அன்னாள் பொருத்தனை செய்து ஜெபித்தார்கள். ஒரு குழந்தையை பெற தனக்கு கர்த்தர் உதவி அருளியதை.... அவருக்கே கொடுத்து விட்டார்கள்.*
(1சாமு - 1 : 11 & 28)
என்னால் இது உண்டாக வில்லை. நீரே அருளியதால்.... அது உமக்கே அர்ப்பணம் என்பதே அண்ணாளின் கோட்பாடு.
*🐛ஆம், எதுவும் எம்முடையது கிடையாது.*
எல்லாமே அவருடையது.
*"நாம் அனுபவிக்கும் படி" அவ்வற்றை எமக்கு சிறிது நாளுக்காக கொடுக்கிறார் அவ்வளவே.* கொடுக்கவும் அவருக்கு அதிகாரம் உண்டு. எம்மிடம் இருந்து எதையும் பறித்துக் கொள்ளவும் அவருக்கு அதிகாரம் உண்டு.
ஆகையால் தான் எந்நேரமும்.... *"ஸ்தோத்திரம் மாத்திரமே சொல்லு",*
அதுவே நான் கேட்கும் பலி என்று கூறுகிறார்.
*🦚இந்த ஸ்தோத்திரம் சொல்லுதல் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வரவேண்டுமே தவிர உதட்டளவில் சொல்லப்பட கூடாது.*
*யோபு* எல்லாவற்றையும் இழந்து நின்றப் போது, *உள்ளத்தின் ஆழத்தில் இருந்து* இந்த *ஸ்தோத்திர பலியை தான் செலுத்தினார்.*
(யோபு - 1:21) இறைவன் அவரை பிற்காலத்தில் இரட்டத்தனையாய் ஆசீர்வதித்தார்.
ஏன் என்றால் அவரே கொடுக்கிறவர், அவரே எடுத்துக் கொள்ள உரிமையும், அதிகாரமும் உள்ளவர் என்ற தெளிவு *அவரது (யோபுவின்) ஆன்மீகத்தில் வெளிப்பட்டது.*
🍏🍏👍🍏🍏
ஆம்.....பூமியும் அதன் நிறைவும்
*கர்த்தருடையவைகளாக இருப்பதால்,* ஸ்தோத்திர பலியினை மனப்பபூர்வமாக, அந்த குணமான சமாரிய குஷ்டரோகியை போல....
*(லூக் - 17 : 12 - 19)* குணமாக்கப் பட்ட பாவிகளாகிய நாமும் அவருக்கு செலுத்துவோம். ஆமென்.
*🌎பூமியும் அதன் நிறைவும் கர்த்தருடையவைகள்.*
*அவைகள்...* (பூமியோ, பூமியில் உள்ளவைகளோ )
*நம்முடையவைகள் அல்ல, அல்ல, அல்ல....*
*அல்லவே, அல்ல பிரியமானோரே!*
Sis. Martha Lazar🌿*
*NJC, Kodairoad*
ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👨👩👦👦
🙋♂️🙋♀️ நாம் *சங்கீதம் 55:12-14* இல் இருக்கிறோம்
*CAST YOUR CARES ON THE LORD*
*உங்கள் கவலைகளை கர்த்தர் மேல் வையுங்கள்*
📝 சங்கீதம் 55 தாவீதின் தனிப்பட்ட புலம்பலுக்குக் காரணம். அவனுடைய நண்பனும் தோழனுமாகியவன் தனக்கு எதிராகத் திரும்பியதைக் குறித்து அவன் தன் துயரத்தை ( *மனதளவில் மற்றும் உணர்ச்சியில் வேதனை*) கொட்டி தீர்த்தான். விவரிக்கப்பட்ட நிலைமை, ராஜாவுக்கு எதிராக அப்சலோமின் சதி (2சாமு 15-17) போன்றது.
📝 இன்றைய வாசிப்பு பகுதியில் தாவீது வெளிப்படுத்தினார், " *சத்துருவின் நிந்தனைகளையும் தீய சதிகளையும் சகித்துக்கொள்ள முடியும், ஆனால் நண்பனும் தோழனுமாகியவன் துரோகம் செய்தால் அது இன்னும் மோசமானது* (வ. 12-14)
🙋♂️ தாவீது,
📍 அவரைப் போலவே தேவனை ஆராதிப்பவர்
📍 தேவனுடைய வீட்டில் ஒன்றாக நேரம் கழித்தவர்
📍 ஐக்கியத்தில் இணைந்தவர்
📍 ஜெபம் மற்றும் போஜனபலியை பகிர்ந்து கொள்பவர், .... யாரோ ஒருவரால் தாக்கப்படுகிறார்:
🙋♂️ வேறுவிதமாகக் கூறினால், " *தாவீதின் நண்பன் அவனுக்கு எதிரியானான்*".
*தாவீது என்ன செய்வார்*❓
1️⃣ *அமைதியான பின்வாங்கலுக்கு அவர் விரும்புகிறார்* (வ. 6-8) : தாவீது எழுதுகிறார், "ஆ, எனக்கு *புறாவைப் போல் சிறகுகள் இருந்தால்*! நான் பறந்து போய் இளைப்பாறுவேன்.. " வ 6.
📍 சங்கீதக்காரன் *கழுகு* போன்ற பலம்வாய்ந்த வேட்டையாடும் பறவையை விட *புறாவாக* இருக்க விரும்புவது ஏன் என்று நாம் யோசிக்கலாம். அது கீழே உள்ளதாக இருக்கலாம்:
🙋♂️ விலங்குகள் மற்றும் மனிதர்கள் இருவராலும் எளிதில் வேட்டையாடப்படும் புறாவைப் போல *பலவீனமானவராக* அவர் தன்னைப் பார்க்கிறார், எப்போதும் பாதுகாப்பான இடத்தைத் தேடுகிறார்.
🙋♂️ அவர் புறாவைப் போல *கபடற்றவர்* (மத்தேயு 10:16)
*2️⃣அவர் விடுதலைக்காக தேவனை கூப்பிடுவார்* (வ. 16-19)
3️⃣ *அவன் தன் கவலைகளையெல்லாம் கர்த்தரிடம் வைப்பார்* (வ. 22)
4️⃣ *அவர் தேவனை மட்டுமே சார்ந்திருப்பார்* ( "தேவனே, .... நானோ உம்மை நம்பியிருக்கிறேன்" வ 23b ) என்றிருப்பார்.
🙋♂️🙋♀️ தாவீதைப் போல நாமும் இப்படிப்பட்ட சூழ்நிலையை சந்தித்திருக்கிறோம். அரசாங்கத்திற்கும் அதன் கொள்கைகளுக்கும் விசுவாசமாக இல்லை என்பதற்காக நாம் குற்றம் சாட்டப்படுகிறோம் அல்லது ஏழைகளுக்கு பணம் கொடுத்து மதமாற்றம் செய்ய தூண்டுகிறோம் என்று வதந்திகள் பரப்பப்படுகிறது.
📍 ஒரு சக விசுவாசி / தேவாலய உறுப்பினர் நமக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து நம்மைப் பற்றி பொய்களைப் பரப்புவது வேதனையானது.
📍 இத்தகைய சூழ்நிலையில் நாம் அடிக்கடி நம் பிரச்சனைகளிலிருந்து பறந்து சென்று ஓய்வெடுக்கும் இடத்தில் இருக்க விரும்புகிறோம் ஆனால் *எதுவரைக்கும்* ?
📍தாவீதைப் போல நாம் அறிவிக்க வேண்டும்: *"நானோ கர்த்தரை நம்பியிருக்கிறேன்"* (வ. 23c)
🙋♂️🙋♀️ அன்பான திருச்சபையே, கர்த்தர் நீதிமான்களை ஒருபோதும் தள்ளாடவொட்டார் *(வ. 22*) ஏனென்றால், கர்த்தர் மீது நம்முடைய கவலைகளை வைப்போம்.
🙋♂️ பேதுரு நமக்கு உபதேசிக்கிறார்: *அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மீது வைத்துவிடுங்கள்* (1 பேதுரு 5:7). இந்த வசனம் விசேஷமானது. ஏனெனில்:
🔖 *நீங்கள்* இந்த வசனத்தில் உள்ளீர்கள் ("... உங்கள் அனைத்தும்" )
🔖 *உங்கள் கவலை* இந்த வசனத்தில் உள்ளது ( ".. உங்கள் கவலை அனைத்தையும் வெளிப்படுத்துதல்" )
🔖 *இயேசு* இந்த வசனத்தில் இருக்கிறார் (".. அவர் மீது" )
🔖 இயேசு *உங்களை விசாரிக்கிறார்*.
🙋♂️ அதை உரிமைகோருங்கள் விண்ணப்பியுங்கள் ஏனெனில் *நம்மை இரட்சித்து, கரிசனை கொண்டவர் நம் எல்லா கவலைகளையும் விசாரிக்கிறார்*.
தேவனுக்கே மகிமை 🙌
✍🏻 *மார்க் போஜே*
அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳
தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்
📗 *சிறிய குறிப்பு* 📗
🍂 *என்னை கூப்பிடு* 🍂
துன்ப நாள் துயரமான நாள். *தேவனைக் கூப்பிடத் தவறிவிடுகிற அளவுக்கு வாழ்க்கையில் சில சமயங்களில் அது வேதனையை அளிக்கிறது*. சில சமயங்களில் சோதனையின் புயல் கடுமையாக தாக்கி தள்ளாட வைக்கின்றது. இருப்பினும் கர்த்தர் துன்ப நாளை அறிந்திருக்கிறார். *விடுதலைக்கான மருந்தையும் அவர் நமக்கு அளித்துள்ளார்*.
உதவிக்காக அங்கும் இங்கும் ஓடுவதற்குப் பதிலாக *தேவனை ஏன் முதலில் கூப்பிடக்கூடாது?* நெருக்கடியின் போது நம் வாழ்க்கையில் மிக முக்கியமான நபரை நாம் அழைக்கிறோம். *தேவனாகிய கர்த்தர் நமக்கு அடைக்கலமாகவும் பலமாகவும் இருந்தால், நாம் நிச்சயமாக அவரிடம் உதவிக்காக கதறுவோம்.* அவரைக் கூப்பிடுபவர்கள் ஒருபோதும் ஏமாற்றமடையவோ கைவிடப்படவோ மாட்டார்கள்.
📖 *“ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.” (சங் 50:15)*
முடிந்தால் நான் உன்னை விடுவிப்பேன் என்று ஆண்டவர் சொல்லவில்லை. ஆனால் *நிச்சயமான விடுதலையை அவர் உறுதியளிக்கிறார்*. அவர் மீது நாம் உறுதியான நம்பிக்கை வைக்கலாம். மனிதனின் உதவி வரம்புகளுடன் வருகிறது. *தேவனாகிய கர்த்தருடைய உதவி வரம்பற்றது.* கர்த்தர் நல்லவர் என்று நம்புங்கள். *அவர் காப்பாற்றுகிறாரா என்பதை அறிந்து கொள்ள அவரை உதவிக்காக அழைத்துப் பாருங்கள்.*
_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏻
🎯தலைப்பு:
🎈ஆசாப்.
🎯இன்றைய சங்கீதம் :
🎈சங்கீதம் : 50
🎈ஆசாபின் சங்கீதம்.
🎯தியானம்:
🎈ஆசாப்:
🎷லேவியன்
🎺இசைக்குழு தலைவர்
🔸தேவனுடைய பெட்டியை கூடாரத்தில் தாவீது வைத்த பின் ,
🙋இஸ்ரவேலின் தேவனையை கர்த்தரைப் பிரஸ்தாபம் பண்ணித் துதித்துப் புகழுகிறதற்கும்
🙇கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாக சேவிக்கவும் லேவியரில் சிலரை நியமித்தார்.
🎈அவர்களின் தலைவன் : ஆசாப்
1 நாளா 16:4, 5,
🔸மேலும் இவர் காலத்தில் பாடல் குழு ஒழுங்கு முறை படுத்தப்பட்டிருந்தது என நெகேமியா குறிப்பிடுகிறார்.(நெகே 12:46)
🎈ஞான திருஷ்டிகாரன் :
எசேக்கியா ராஜா இவரை ஞான திருஷ்டிகாரன் என குறிப்பிடுகிறார்.
🎈சங்கீதங்கள் எழுதியவர்:
சங் 50,73 - 78 இவை ஆசாபின் சங்கீதங்கள்.
🎯சிந்தனைக்கு :
🙇இந்த 50 ஆம் சங்கீதத்தில் தேவன் அருளிய மிக அருமையான வாக்குத்தத்தத்தைக் காணலாம்.
14. "நீ தேவனுக்கு ஸ்தோத்திர பலியிட்டு,
உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளை செலுத்தி "
15." என்னை நோக்கிக் கூப்பிடு
நான் உன்னை விடுவிப்பேன்.
நீ என்னை மகிமை படுத்துவாய்"
🎈இந்த அருமையான வாக்குத்தத்தை அருளிய தேவனுக்கு
1 .ஸ்தோத்திர பலியிட்டு
2. நம் பொருத்தனைகளை செலுத்தி
3. அவரை நோக்கி கூப்பிடுவோம்
4. அவர் நம்மை விடுவிப்பார்.
5. விடுவித்த அவரை நாம் மகிமை படுத்துவோம்.
ஆமென்.🙏
[02/10, 09:51] +91 99431 72360: 🔥🔥🔥🔥🔥🔥🔥
🔥 Mrs. Jasmine Samuel
Chennai
வேத பகுதி
50 ஆம் சங்கீதம்
சிந்தனைத் துளிகள்
(50:15)
ஆபத்துக் காலத்தில் என்னை
நோக்கிக் கூப்பிடு , நான் உன்னை
விடுவிப்பேன், நீ என்னை
மகிமைப்படுத்துவாய்
சங் 50 ஆசாப் எழுதின
சங்கீதம்
இந்த வசனத்திலிருந்து'.......
1) கூப்பிடு
2) விடுவிப்பேன்
3.) மகிமைப்படுத்துவாய்
1) கூப்பிடு '.......
யாரை? எப்பொழுது?
கர்த்தரை நோக்கிக் கூப்பிட வேண்டும்
ஆபத்துக் காலத்தில் கூப்பிட வேண்டும்
2) விடுவிப்பேன் .......
யார்? யாரை?எதிலிருந்து?
கர்த்தர் நம்மை விடுவிப்பார்
கூப்பிடுகிறவர்களை விடுவிப்பார்
ஆபத்திலிருந்து விடுவிப்பார்
3) மகிமைப்படுத்துவாய்
யார்? யாரை? எப்பொழுது?
விடுதலைப் பெற்றவர்
விடுவித்தக் கர்த்தரை
விடுதலைப் பெற்றவுடனே
சிந்தனைக்கு
எரேமியா 33:3
என்னை நோக்கிக் கூப்பிடு,
அப்பொழுது நான் உனக்கு
உத்தரவு கொடுப்பேன்,
நீ அறியாததும், உனக்கு
எட்டாததுமான பெரிய காரியங்களை
உனக்கு அறிவிப்பேன்
இயேசு என்னும் நாமத்தில்
பிதாவை நோக்கிக் கூப்பிடுவோம்
கர்த்தர் நம் ஜெபத்திற்கு
பதில் தருவார்
ஆமென்
[02/10, 17:09] +91 99431 72360: *💔❤️🩹SPIRITUAL HEALING❤️🩹💔*
*💔❤️🩹ஆவிக்குரிய சுகம்❤️🩹💔*
[நாள் - 171] சங்கீதம் 50-55
☄️சங்கீதம் 50-55, மனந்திரும்புதல், தெய்வ நம்பிக்கை, விடுதலை மற்றும் ஜெபத்தின் வல்லமை ஆகியவற்றின் கருப்பொருள்களை ஆராய்ந்து, மனித ஆத்துமாவின் ஆழத்தைப் பார்க்கிறது.
1️⃣ *சங்கீதம் 50: உண்மையான ஆராதனைக்கான அழைப்பு*
🔹இந்த சங்கீதத்தில், தாவீது உண்மையான வழிபாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார், தேவன் வெற்று பலிகளை விட நேர்மையையும் கீழ்ப்படிதலையும் விரும்புகிறார் என்பதை எடுத்துக்காட்டுகிறார்.
🔹தேவனுக்கு இதயப்பூர்வமான நன்றியையும் துதியையும் செலுத்தவும், அவருடைய இறையாண்மையை ஒப்புக்கொண்டு மனந்திரும்பவும், தேவனுடன் உண்மையான உறவு மற்றும் மாற்றத்தைப் பெறவும் அவர் நம்மைத் தூண்டுகிறார்.
2️⃣ *சங்கீதம் 51: மன்னிப்புக்கான பிரார்த்தனை*
🔸சங்கீதம் 51, பத்சேபாளுடன் தாவீதின் மீறலுக்குப் பிறகு மன்னிப்பு மற்றும் மறுசீரமைப்புக்கான சக்திவாய்ந்த வேண்டுகோள்.
🔸தாவீது தன் பாவத்தை ஒப்புக்கொண்டு, ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தி, தேவனுடைய கருணையையும் சுத்திகரிப்பையும் வேண்டுகிறான்.
🔸இந்த சங்கீதம் உண்மையான மனந்திரும்புதலின் முக்கியத்துவத்தையும், கடவுளின் மன்னிப்பின் வல்லமையையும், அவருடனான உறவை மீட்டெடுப்பதின் மாற்றும் விளைவையும் கற்பிக்கிறது.
3️⃣ *சங்கீதம் 52: தேவனுடைய நீதியில் நம்பிக்கை*
🔺தாவீது ராஜா சவுலுக்கு துரோகம் செய்த தோகின் வஞ்சக செயல்களுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த சங்கீதத்தை இயற்றினார்.
🔺தேவனுடைய நீதி மற்றும் இறையாண்மையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை சங்கீதக்காரன் வெளிப்படுத்துகிறார்.
4️⃣ *சங்கீதம் 53: தேவனை நம்பாதவர்களின் முட்டாள்தனம்*
▫️சங்கீதம் 53 தேவன் இருப்பதை மறுதலித்து அக்கிரமத்திற்கு அடிபணிபவர்களின் முட்டாள்தனத்தை எடுத்துக்காட்டுகிறது.
▫️கடவுள் இல்லாதவர்கள் ஞானம் மற்றும் புரிதல் இல்லாதவர்கள் என்றும், அவர்களின் செயல்கள் அவர்களுடைய சொந்த வீழ்ச்சியையே கொண்டு வருவதையும் தாவீது வலியுறுத்துகிறார்.
▫️அவர்கள் தேவன் இருப்பதை ஒப்புக்கொண்டு, அவருடைய வழிகாட்டுதலைத் தேடி, நீதியில் வேரூன்றிய வாழ்க்கையை வாழ வேண்டும்.
5️⃣ *சங்கீதம் 54: விடுதலைக்கான அழுகை*
◾️தாவீது இந்த சங்கீதத்தை, துன்பத்தின் போது, சீபியர்கள் அவரை சவுல் ராஜாவிடம் காட்டிக்கொடுக்க முயன்றபோது இயற்றினார்.
◾️சங்கீதக்காரர் கடவுளின் தலையீடு மற்றும் பாதுகாப்பிற்காக உருக்கமாக மன்றாடுகிறார், தனது எதிரிகளிடமிருந்து விடுதலையை நாடுகிறார்.
◾️தேவனுடைய உண்மைத்துவத்தின் நிச்சயத்தையும், ஜெபத்தின் வல்லமையையும், தேவனுடைய உறுதியான அன்பை சார்ந்திருப்பதில் கிடைக்கும் ஆறுதலையும் நாம் காண்கிறோம்.
6️⃣ *சங்கீதம் 55: கர்த்தர் மீது பாரங்களை சுமத்துதல்*
🔻இந்த சங்கீதம் தாவீதின் வேதனையையும், நெருங்கிய நண்பரால் காட்டிக்கொடுக்கப்பட்டதையும் வெளிப்படுத்துகிறது, இது அப்சலோமின் கலகத்தின் போது அஹித்தோப்பலின் துரோகத்தைக் குறிக்கும்.
🔻சங்கீதக்காரன் தனது இதயத்தை கடவுளிடம் ஊற்றி, ஆறுதல், வழிகாட்டுதல் மற்றும் அவரது துயரத்திலிருந்து விடுதலையை நாடுகிறார், மேலும் ஜெபத்தின் மூலம் கொந்தளிப்பின் மத்தியில் அமைதியைக் காண்கிறார்.
♥️ *வாழ்க்கை பாடங்கள்*
💥இந்த சங்கீதங்கள் மூலம், வாழ்க்கையின் சிக்கலான சூழ்நிலைகளில் நாம் செல்லும்போது ஆறுதலையும், வழிகாட்டுதலையும், ஊக்கத்தையும் பெறுகிறோம்.
💥நமது இருண்ட தருணங்களிலும், தேவன் எப்போதும் இருக்கிறார், நம் பிரார்த்தனைகளைக் கேட்கவும், மன்னிக்கவும், ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளத் தேவையான பலத்தை வழங்கவும் தயாராக இருக்கிறார் என்பதை அவை நமக்கு நினைவூட்டுகின்றன.
*‼️நமது ஆவிக்குரிய வளர்ச்சிக்காக தேவனுடைய மாறாத அன்பையும் கிருபையையும் நம்புவோம்‼️*
பிரின்சஸ் ஹட்சன்
தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை
[02/10, 17:09] +91 99431 72360: *_ecd_*
*_இரட்சிப்பின் சந்தோஷம் திரும்ப பெறுதல்_*
*_சங்கீதம் : 51_*
❇️ _*உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தை* திரும்பவும் எனக்குத் தந்து *உற்சாகமான ஆவி* என்னைத் தாங்கும்படி செய்யும். (வ 12)_
❇️ _இந்த சங்கீதம் தாவீது ராஜா *பத்சேபாளுடன் விபசாரம்* செய்த பிறகு *தீர்க்கதரிசி நாத்தான்* அவரை எதிர்கொண்ட போது *அவருடைய ஒப்புதல் மற்றும் மனந்திரும்புதல்* ஆகும்._
❇️ _இந்த வசனத்திலிருந்து ஒரு முக்கியமான உண்மை வெளிவருகிறது, நாம் பாவம் செய்யும்போது நாம் *இரட்சிப்பின் மகிழ்ச்சியை* மட்டுமே இழக்கிறோம், *இரட்சிப்பின் ஈவை* அல்ல. அதனால்தான் தாவீது கர்த்தரிடம் *இரட்சிப்பின் சந்தோஷத்தை திரும்பவும் தரும்படி* மன்றாடுகிறார்._
❇️ _கர்த்தர் இரட்சிப்பின் சந்தோஷத்தை மீட்டெடுப்பதற்காகச் செலுத்தப்படும் *பலிகள்* *நொறுங்குண்ட ஆவி* ஆகும். *நொறுங்குண்டதும்* *நறுங்குண்டதுமான இருதயத்தை* கர்த்தர் *புறக்கணிப்பதில்லை* (வ 17)._
❇️ _நாம் *மெட்டனோயா* வுடன் (மனந்திரும்புதலுக்கான கிரேக்க வார்த்தை) கர்த்தருக்கு முன்பாக வரும்போது, அதாவது *பின்-சிந்தனை*. பின் சிந்தனை என்பது *மாறிய எண்ணம்* அது *திருத்தம்* செய்ய *வருத்தத்தை* கொண்டு வருகிறது. *உண்மையான மெட்டனோயா* *நெறுங்குண்ட ஆவி* மற்றும் *நறுங்குண்ட இதயத்தில்* இருந்து வருகிறது, இது கர்த்தர் நம்மை *மன்னிக்க* காரணமாகிறது._
❇️ _நம்மில் வாழும் *பரிசுத்த ஆவியானவர்* *நம்முடைய பாவங்களை கண்டிக்கும்போது* (யோவா.16:8) நாம் *நொறுங்குண்ட ஆவி* மற்றும் *நருங்குண்ட இருதயத்ததோடு* முன்னேறி, *மெட்டனோயா* வுக்கு இட்டுச்செல்லும் *இரட்சிப்பின் சந்தோஷத்தை மீட்டுத் தருகிறது*._
✅ *_கற்றறிந்த நுண்ணறிவு_*:
▪️ _மெட்டனோயா இரட்சிப்பின் சந்தோஷத்தை திரும்பத் தருகிறது_
▪️ _நொறுங்குண்ட ஆவி மற்றும் நருங்குண்ட இருதயம்_
_மெட்டனோயாவை உண்டாக்குகிறது_
தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்
*🐟சிப்பிக்குள் முத்து🐟
இன்றைய வேத
வாசிப்பு பகுதி -
*சங் : 50 - 55
*🐋முத்துச்சிதறல் : 171 பி*
🥀🌷🎋🥀🌷🎋🥀🌷
*தேவனுக்கு ஏற்கும் பலிகள்* நொறுங்குண்ட ஆவிதான்:,
தேவனே, *நொறுங்குண்டதும் நறுங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.* (51:17)
🥀🌷🎋🥀🌷🎋🥀🌷
*நமது ஆவியின் நிலை*
🍧🍧🌳🍧🍧
*✍️தாவீதரசர் தொடர்சியாக செய்த பாவத்தின் விளைவை அறுவடை செய்ய வேண்டி இருந்தது.*
கண்களின் இச்சை👀 என்னும் ஒரு பாவத்தின் விளைவினால், அது படி படியாக அவரை சறுக்கல் நிலைக்கு.... அழையா விருந்தாளி போல அழைத்து கொண்டு போய்....
பல பாவங்களில் அவர் ஈடுபடும்படி நிறுத்திவிட்டிருந்தது.
*இறைவன் அவரை உடனடியாக உணர்த்தாமல்,* கிட்டத்திட்ட ஒரு ஆண்டுக்கு பின்னரே அவரை எச்சரிக்கும்படி நாத்தான் என்னும் தீர்க்கரை அவரிடம் அனுப்பிவித்து உணர்த்துதல் வழங்கினார்.
தாவீது உடனடியாக தன்னை தாழ்த்தினார்.
*"நான் கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்தேன்"* என்று, தன்னிலை விளக்கம் அருளி, இறைவனது சார்பில் நின்று தன்னை எச்சரித்த நாத்தான் தீர்க்கத்தரிசியிடம் சரணடைந்து விட்டார்.
*ஆகையால் கர்த்தர் அவர் பாவம் நீங்கவும் செய்தார், அதே வேளை அவரது துணிகர பாவத்தினால் உண்டாக கூடிய பின் விளைவுகளை அறுக்கவும் தக்கதாக விட்டிருந்தார்.* (2சாமு - 11:1-27)
அந்த வேளையில்.... துக்கத்தின் மிகுதியால் அவர் *சங்கீதம் 51 ஐ பாடலாக இயற்றி* அதை இராக தலைவனுக்கு ஒப்புவித்தார் என்பது வேத ஆராய்ச்சியாளர்கள் சிலரின் கருத்து.
💊💊🌳💊💊
*தான் ஒரு அரசன், ஆகையால் எதையும் அனுபவிக்க தனக்கு உரிமை உண்டு, எவரும் தன்னை கேள்வி கேட்கவோ, தான் செய்ய நினைத்த காரியத்தை செய்யவிடாமல் தடுக்கவோ அவர்களுக்கு உரிமை ஏதும் இல்லை என்னும்*
👎கர்வம்,
👎விபச்சார மயக்கம்,
👎பிறர் மீது பழியை போட நினைத்த நினைவு,
👎கொலை,
👎பிறன் மனைவியை அபகரித்து விட்டு,
👎அவன் யுத்தத்தில் செத்துப்போனதாகவும்,
👎அதினால் யுத்தத்தில் மடிந்துப்போன தனது முன்னாள் இராணுவ வீரனின் மனைவியை ஆதரிப்பது போல பாவ்லா காட்டிய கொடுங்கைச் செயல் எல்லாவற்றையும் அரங்கேற்றிய பின்னர்....
அவள் மூலம் பிறந்த குழந்தை இறந்து விடும் என்னும் செய்தியை கேட்டபின்,
அந்த குழந்தைக்காக உபவாசம் செய்து,
இரா முழுவதும் தரையில் விழுந்து கிடந்தார்.
🌿அப்பொழுது தாவீது ஆண்டவரை நோக்கி விண்ணப்பித்து, தனக்கு ஒரு புது *"மாற்று இருதயம்"* உண்டாகும்படி வேண்டி நின்றார்.
🍒உடைந்த உள்ளத்தோடு,
🍒கண்ணீர் நிறைந்த கண்களோடு,
🍒ஆவியில் நொறுங்குண்டு,
🍒மெய் மன்னிப்பிற்க்காக இறைவனிடம் இறைஞ்சி ஜெபித்தார். *இறைவன் தனக்கு ஒரு புதிய வாழ்வை அருள வேண்டி விரும்பி சிலவற்றை இறைவனிடமே வேண்டுகிறார்.*
(வ. 7-12)
ஏன் எனில்.....
*பலியை தேவன் விரும்பாமல், நொறுங்குண்ட ஆவி மற்றும் நறுங்குண்ட இருதயத்தை அவர் புறக்கணிக்காதவர் என்பதை தாவீது அறிந்து, இறைவனது கோபத்தில் இருந்து தான் தப்பித்துக் கொள்ள சில காரியங்களை தாம் முன்னெடுக்க போவதாக கூறுகிறார்.*
🫛🫛🍇🫛🫛
தனக்கு ஒரு புதிய இதயம், அதாவது *"இருதய மாற்று அறுவை சிகிச்சை தனக்கு ஆண்டவரே செய்து விடும்படி"* கேட்டுக் கொள்ளுகிறார்.
*அது சுத்த இருதயமாக இருக்க வாஞ்சிக்கிறார்.* தனது பாவங்களை மன்னித்து, மீண்டும் தன்னோடு இறைவன் பேசி செயல்பட்டாராகில்,....
📌1. பாதகருக்கு ஆண்டவரின் வழிகளை உபதேசிக்கவும்,
📌2) தனது நாவு தேவனுடைய நீதியை, புகழை கெம்பீரமாய் பாடவும் செய்யும் என்கிறார்.
🌴ஆம் தேவனுக்கு ஏற்கும் பலிகள் சதா அவரை, அவரது கிரியைகளை போற்றி, எல்லா சூழ்நிலைகளிலும் அவருக்கு ஸ்தோத்திரம் செய்யும் பலியும், நொறுங்குண்டதும், நறுங்குண்டதுமான இருதயத்தோடு, மிகவும் கர்த்தருக்கு முன்....
*"தனது பாவ இயலின் தன்மையை உணர்ந்து,"*
தனது சொந்த முயற்சிகளினால் எதுவும் இயலாது என்னும் தனது உண்மையான இயலாமைகளை வெளிப்படுத்தி பணிவோடு இருப்பதை மாத்திரமே தாவீது விரும்பி வாஞ்சித்தார்.
*இப்படி வாஞ்சித்து ஜெபிக்கும் எவருக்கும் அளிக்கப்படும் வெகுமதி என்னவெனில்....* நீதியின் கனிகளால் அவர்கள் நிறைந்து இருப்பார்கள்.
*(வ. 19)*
*🐋ஆம் இறைவன் பலியையோ, இல்லை தகனபலியையோ எப்பொழுது வெறுக்கிறார் என்றால்.....*
நாம்.....
🪶அகம்பாவத்தால்,
🪶கர்வத்தால்,
🪶பெருமையால் நிறைந்தோராக, இருக்கும் போது. ஆனால்....
நாம் நம்மை தாழ்த்தி, தாழ்த்தி, எமது பாவ இயல்பிலிருந்து வெளியே வர இயலாத இயலாமையை அறிக்கையிட்டு நிற்போமானால்..... *"இயேசுவின் வல்லமையினால் ஆட்கொள்ளப்பட்டு,"* அவரது நீதி எமக்கு தரிக்கப்படும்.
அப்பொழுது நாம் அவரது நீதியினால் நீதிமான்களாக....
அவர் சமூகத்தில் அங்கீகரிக்க பட்டு நிற்போம்.
*எமது எவ்வித பலிகளும் நீதியின் பலிகளாக அங்கீகாரம் பெற்று நிற்கும்.*
*❣️சிந்தனைக்கு:*
*🍏1. நம் வாழ்வில், எவருக்கும் தெரிய கூடாதென்று, நாம் மறைத்த ஏதேனும் பாவத்தினிமித்தம் உண்டாகிய பின் விளைவுகள் ஏதேனயும்.... நாம் என்றாவது சந்தித்துள்ளோமா❓*
*🍏2. நாம் எந்த பாவத்தையும் ஒளித்து வையாமல், அதனை வெளிப்படையாக, உடைந்த உள்ளதோடு அறிக்கையிட்டு, அதனை விட்டு விட்டதினால், நம்மில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்னென்ன❓ அதனை*
(எமது மனமாற்றத்தினை ) *பிறர் கண்டு கொண்டனரா❓*
*🍏3. எமது தனிப்பட்ட "விழுகைகள், மற்றும் தடுமாற்றங்கள்,"*
🦀பிறரை,
🦀எம்மை,
🦀கடவுளை,
🦀இச்சமூகத்தை,
🦀எமது திருச்சபையை
எந்தளவு பாதித்துள்ளது❓
*என்று....*
என்றாவது சிந்தித்தது உண்டா❓
*மேற்கண்ட👆👆 கேள்விகளுக்கு, எமக்கு தானே நொறுங்கிய உள்ளதோடு பதிலளித்துக் கொள்ளுவோம்.*
சீர் திருந்துவோம்... ஏன் எனில் நொறுங்குண்ட இதயத்தை அவர் புறக்கணியார்.
*Sis. Martha Lazar✍️*
*NJC, KodaiRoad*
Thanks for using my website. Post your comments on this