Type Here to Get Search Results !

தேவ வசனமாகிய பிசின் தைலம்! | He will lead you in the dark! | Daily Devotion By Rajan | Jesus Sam

===================
இருளிலும் உங்களை நடத்துவார்!
==================
    நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான். யோவான் 8:12*

    *இருளான வாழ்க்கை எந்த ஒரு மனிதனையும் முன்னேற விடாது. இருளும், காரிருளும் மிக கொடுமையானது. அந்த காரிருளில் மாட்டிக்கொண்டு தவிக்கும் உள்ளங்களை இயேசு கிறிஸ்துவின் தீபமான அவருடைய வார்த்தை விடுதலையாக்கும். இருளானது யாருக்கும் பயப்படாது. அது பயப்படுகிற ஒரே நபர் இயேசு கிறிஸ்து மாத்திரமே. ஏன் இருளானது கர்த்தருக்கு பயப்படுகிறது தெரியுமா? ஏனென்றால் அவர் வெளிச்சத்தை அனுப்பி இருளை விரட்டுவார். சில மனிதர்களெல்லாம் அந்தகார இருளிலே அகப்பட்டு ஒரு அடிகூட முன்னேறி செல்லமுடியாமல் அப்படியே ஸ்தம்பித்து போய் விடுவார்கள். இருளானது அவர்களை அடிமைப்படுத்தி தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். குடும்பத்தில் உள்ள நபர்களெல்லாம் இருளில் கிடக்கும் மனிதனை அல்லது மனுஷியை விடுவிப்பதற்கு பதிலாக அவர்களை விட்டு தூரம் போய் விடுவார்கள். ஆனால் பரலோக தேவனோ உங்கள் மீது தயவு வைத்து, இரக்கம் வைத்து உங்கள் அருகாமையில் வருகிற படியால் அவருடைய ஒளி உங்களிடத்தில் உள்ள இருளை அகற்றி வெளிச்சத்தை கொண்டு வரும். அந்த வெளிச்சமானது உங்களை முன்னோக்கி கொண்டு செல்லும்.*

    *இயேசு கிறிஸ்துவே மெய்யான ஒளியாக இருக்கிறார். நான் உலகத்திற்கு ஒளியாக இருக்கிறேன் என்றும் என்னை பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியிலே நடக்கிறான் என்று நம்முடைய கர்த்தர் யோவான் 8:12ல் சொல்கிறார். இருளானது உங்களை ஆட்கொண்டது என்று நீங்கள் படயப்படாதீர்கள். அந்த காரிருளின் மத்தியில் தேவனுடைய வசனம் தீபமாக வந்து உங்களை காப்பாற்றும். ஒரு முறை ஒரு சகோதரன் பல இலட்சங்களை கடனாக பெற்று இருளிலே மாட்டிக்கொண்டார். அந்த இருளிலிருந்து தப்பி செல்லவோ அல்லது ஒரு அடி முன்னேறி செல்லவோ அவரால் முடியவில்லை. கண்ணீரும், பயமும், திகிலுமே அவரது வாழ்க்கையாயிருந்தது. ஆனால் கர்த்தரோ அவர் மீது தயை வைத்து தம்முடைய வேத வசனம் என்னும் வல்லமையான ஒளியை அனுப்பினார். அந்த ஒளியானது அவரை சகலவித கடன் பிரச்சனைகளிலிருந்தும் விடுவித்தது. இப்போது மனநிறைவோடு தன் வேலைக்கு செல்கிறார். நீங்களும் கூட இதுபோன்ற பலவிதமான இருளிலே அகப்பட்டிருக்கலாம். தேவனை நோக்கி முறையிடுங்கள். அவர் உங்களிடத்தில் தம்முடைய ஒளியை அனுப்புவார்.*

    *தேவ ஜனமே, தாவீது சொல்லும் போது நான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படமாட்டேன் என்று சொல்வதை பாருங்கள். தேவனுடைய ஒளியே அல்லாமல் வேறே எந்த ஒரு ஒளியும் உங்கள் இருளை போக்க முடியாது. உங்கள் வருத்தங்கள், வியாகுலங்கள், மனகிலேசங்கள் என்னும் இருள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே பறந்து போகும். உங்களை இருளுக்குள் நடத்த நினைக்கும் அசுத்த ஆவிகளை கடிந்து கொள்ளவும், சகல இருளையும், காரிருளையும் வெளிச்சமாக்கவும் பரலோக தேவன் தம்முடைய அக்கினி ஸ்தம்பமாகிய ஒளியை அனுப்புவார். நீங்கள் அந்த அக்கினி ஸ்தம்பத்தின் ஒளியிலே விடுதலையோடு பயணம் செய்யலாம். அதிசயமான, ஒளிமயமான அந்த பரலோக நாட்டை நீங்கள் சேரும் வரை தேவனுடைய அக்கினி ஸ்தம்பம் உங்களுக்கு முன்சென்று உங்களை வழிநடத்தும். இருளானது இயேசு கிறிஸ்துவை பற்றிக்கொள்ளாதது போல உங்களையும் பற்றிக்கொள்ளாது. அல்லேலூயா ஆமென்.*

கிறிஸ்துவின் பணியில்
பாஸ்டர்.S.ராஜன். 6385330029
ஜெப உதவிக்கு. 9003708768


=========================
He will lead you in the dark!
=========================
    *I am the light of the world, and he that followeth me shall not walk in darkness, but shall have the light of life. John 8:12*

    *A dark life does not allow any human being to progress. Dark and darkness are terrible. His Word, the lamp of Jesus Christ, will set free the hearts that are trapped in that darkness. Darkness is not afraid of anyone. The only person it is afraid of is Jesus Christ. Do you know why darkness is afraid of the Lord? Because he will send out the light and cast out the darkness. Some men are caught in the dark of darkness and are unable to take a step forward. Darkness will enslave them and keep them under its control. All the people in the family, instead of releasing the man or woman lying in the darkness, go away from them. But the heavenly God will have mercy and compassion on you and come near you, so that His light will remove the darkness from you and bring light. That light will take you forward.*

    *Jesus Christ is the true light. Our Lord says in John 8:12 that I am the light of the world, and that he that followeth me walketh not in darkness, but in the light of life. Don't be afraid that darkness has overtaken you. The word of God will come as a lamp in the midst of that darkness and save you. Once a brother borrowed several lakhs of rupees and got stuck in the dark. He could not escape from the darkness or take a step forward. Tears, fear, and horror were his life. But the Lord had mercy on him and sent out a mighty light called his scripture. That light freed him from all kinds of debt problems. Now he goes to his work with contentment. You too may be caught in such a variety of darkness. Appeal to God. He will send his light to you.*

    *O people of God, David says in Psalms 23:4 , "I will not be afraid of evil, even if I walk in the valley of the darkness of death." No light can remove your darkness except the light of God. The darkness of your sorrows, your sorrows, and your tribulations will fly away in the name of Jesus Christ. The God of heaven will send the light, the pillar of his fire, to reprove the unclean spirits that lead you into darkness, and to light up all dark and darkness. You can travel freely in the light of that pillar of fire. The fiery pillar of God will go ahead of you and guide you until you reach that wonderful, bright heavenly land. Darkness does not hold you in the same way that it does not cling to Jesus Christ. Alleluia amen.*

In the work of Christ
Pastor.S.Rajan.6385330029
For prayer 9003708768


======================
தேவ வசனமாகிய பிசின் தைலம்!
=====================
*அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார். சங்கீதம் 107:20*

*எத்தனை தான் நம்முடைய வீட்டிலே தைலம் இருந்தாலும் அடுத்த வீட்டு தைலமும், பக்கத்துவீட்டு பிசின் தைலமும் தான் சிலருக்கு இன்பமாக தெரிகிறது. தேவன் இப்படிப்பட்ட செய்கையை விரும்புவதில்லை. நம்முடைய சொந்த வைத்தியன் கொடுக்கும் வைத்தியமும், பிசின் தைலமும் ஒருவனுடைய சரீரத்திலுள்ள முழுக்காயங்களையும் ஆற்றிவிடும். அதுபோல இயேசு கிறிஸ்து தந்த பரிசுத்த வேதத்தின் வார்த்தைகள் எந்தவொரு வியாதியையும் நீக்கிவிடும்.தேவ பிள்ளைகள் கீலேயாத்திலுள்ள பிசின் தைலத்தையும், அங்கே உள்ள இரண வைத்தியனையும் சிறந்ததாக என்னாமல் வேறொரு தைலத்தை ஜனங்கள் விரும்பினபடியால் தேவன் இந்த கேள்வியை கேட்கிறார். ஒரு வைத்தியன் எந்த ஒரு நோயாளியையும் மேற்பூச்சாய் குணப்படுத்தக்கூடாது. அப்படி செய்தால் நோயாளியின் இரணங்கள் குணமடையாது. ஒவ்வொரு தேவ ஊழியனும் ஒரு வைத்தியனாக இருக்கிறான். விசுவாசிகளின் வாழ்க்கையில் காணப்படுகிற சமாதானமில்லாத காரியங்கள், பாவ ஜீவியங்கள், அசுத்த நோக்கங்கள் போன்ற இரணங்களை மேல் பூச்சாக உபதேசித்து குணப்படுத்திற தேவ ஊழியனாய் இருக்கக் கூடாது.*

*பரலோக வல்லமையை தேவ சபையின் மீது பொழிந்தருளவும், பாவத்தை கண்டித்து உணர்த்தவும், கீலேயாத்தின் பிசின் தைலமாகிய தேவனுடைய வசனத்தை பயன்படுத்தி சீயோன் குமாரத்தியின் இரணத்தை அமுக்கி, சீழ் பிதுக்கி, பின்பு அதிலே பிசின் தைலமாகிய தேவ வசனத்தை கொண்டு காயம் ஆற்றினால் உன்னத தேவனுடைய இருதயம் மகிழ்ச்சியடையும். தன்னுடைய அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் மறந்தவர்களே மேற்பூச்சாய் வசனத்தை பேசி ஜனங்களை அனுப்புவார்கள். ஆனால் அபிஷேகம் என்றால் என்னவென்று தெரிந்த அனுபவித்த ஊழியனோ விசுவாசியின் குற்றத்தை, பாவத்தை, மீறுதலை, அக்கிரமத்தை, துணிகரமான ஜீவியம் என்னும் கொடிய இரணத்தை தேவ வசனத்தைக்கொண்டு குணமாக்கி அந்த ஆத்துமாவை சரிசெய்வதில் நோக்கமாயிருப்பார்கள். பரிசுத்த வேதாகமம் என்னும் கீலேயாத்தின் பிசின் தைலத்தை பயன்படுத்தி சுகமடைய செய்வார்கள். அந்த ஊழியனுக்கு பரலோகத்திலிருந்து மிகப்பெரிய வெகுமதி கிடைக்கும். இப்படிப்பட்ட ஆவிக்குள்ளான தேவ ஊழியர்கள் கர்த்தரிடத்திலிருந்து கனத்தையும், மகிமையையும் அடைவார்கள்.*

*தேவ ஜனமே, உங்களுடைய இரணங்கள் இயேசு கிறிஸ்து கொடுத்த கீலேயாத்தின் பிசின் தைலத்தால் மாத்திரமே குணமடையும். இயேசு என்னும் பரலோக மருத்துவர் தந்த அந்த பிசின் தைலமானது உங்களுடைய நாடி, நரம்பு, புத்தி, தசைகளுக்குள்ளாக பாய்ந்து எந்த ஒரு பாவ இரணத்தையும் சரிசெய்து விடும். ஒவ்வொரு கர்த்தருடைய பிள்ளைகளுக்கும் ஆவி, ஆத்தும, சரீரத்திலே சுகமும், விடுதலையும் உண்டாக வேண்டும் என்றே கர்த்தர் விரும்புகிறார். அதற்காக சில வைத்தியர்களை ( போதகர்களை ) தெரிந்துகொண்டு சுத்தமான கீலேயாத்தின் பிசின் தைலத்தை அவர்களிடம் கொடுத்து வைத்திருக்கிறார். தங்களுடைய வியாதியிலிருந்து முழுவிடுதலை பெற விரும்புகிறவர்கள் தேவனுடைய சுகப்படுத்துகிற வார்த்தைகளை பெற்று அதன் வழியாக அற்புதத்தை அடைய முடியும். உங்கள் வாழ்விலே தேவனுடைய வேத வசனமாகிய பிசின் தைலம் உங்களை முற்றும் காயம்கட்டுவதாக. அவருடைய தழும்புகளால் குணமடைவீர்களாக. அல்லேலூயா ஆமென்.*

கிறிஸ்துவின் பணியில்
பாஸ்டர்.S.ராஜன் 6385330029
ஜெப உதவிக்கு 9003708768


=======================
The adhesive balm, the word of God!
======================
*He sends his word and heals them, and delivers them from destruction. Psalm 107:20*

*No matter how many balms we have in our house, the next house's ointment and the neighbor’s adhesive balm are the happiest for some. God does not like such a thing. The treatment and adhesive balm given by our own doctor will heal all the ailments in one's body. Similarly, the words of the Holy Bible given by Jesus Christ will remove any sickness. God asks this question because the children of God wanted a different ointment than the resin oil in Gilead and the ointment there. A doctor should not treat any patient topically. By doing so, the patient's wounds will not be cured. Every servant of God is a physician. He should not be a servant of God who teaches and heals the uneasy things, sinful creatures, and unclean motives found in the lives of believers.*

*The heart of the Most High God will rejoice if he uses the word of God, the adhesive oil of Gilead, to pour out the heavenly power upon the church of God, and to condemn sin, and to squeeze out the wound of the daughter of Zion, and to bind it, and then heal the wound with the word of God, which is the ointment of the adhesive in it. Those who have forgotten their calling and his choosing will send people away by speaking the word topically. But the experienced servant who knows what anointing is will be intent on correcting the believer's guilt, sin, transgression, iniquity, and the deadly wound of courageous life by means of the word of God. They will use the adhesive ointment of Gilead, the Holy Bible, to heal. That servant will receive a great reward from heaven. God's servants in such a spirit will receive honor and glory from the Lord.*

*O people of God, your wounds will be healed only by the adhesive ointment of Gilead given by Jesus Christ. The adhesive balm given by Jesus, the heavenly doctor, will flow into your pulses, veins, intellects, and muscles and cure any sinfulness. The Lord wants every Child of The Lord to have peace and freedom in spirit, soul, and body. For this he has chosen some physicians (pastors) and given them the adhesive ointment of clean Gilead. Those who want to be completely freed from their sickness can receive God's healing words and through it can achieve miracles. May the resin balm, the scripture of God, in your life clean you completely. May you be healed by his wounds. Alleluia amen.*

In the work of Christ
Pastor. S.Rajan 6385330029
For Prayer 9003708768


=================
ஆனந்த தைலம்!
=================
*சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார், ஏசாயா 61:3*

*நேற்றைய தினத்திலே பிசின் தைலம் என்றால் என்ன என்பதையும் அது குணப்படுத்துகிற தேவனுடைய வார்த்தைக்கு அடையாளமாயிருக்கிறது என்பதையும் தியானித்தோம். இன்றைக்கு ஆனந்த தைலத்தை குறித்து பார்க்க போகிறோம். ஒரு வேளை நேற்றைய செய்தியை நீங்கள் வாசிக்கவில்லை என்றால் தயவுசெய்து முதலாவது அதை வாசியுங்கள். உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும். பிசின் தைலமாகிய வேத வசனத்தால் நீங்கள் குணமடைந்த பிறகு உங்களுக்கு கிடைப்பது ஆனந்தம். தேவன் உங்களுடைய துயரமான சூழ்நிலைகளை மாற்றி ஆனந்த தைலத்தால் உங்களை நிறைக்கிறார். அநேக தேவனுடைய பிள்ளைகளின் வாழ்விலே ஆனந்தம் இருப்பதில்லை. எப்போதும் துயரமாகவே காணப்படுவார்கள். இந்த மாதம் தேவன் உங்களுடைய துயரமெல்லாவற்றையும் மாற்றி ஆனந்த தைலத்தால் உங்களை நிறைப்பார். சாம்பல் என்பது துக்கத்திற்கு அடையாளமாயிருக்கிறது. யூத ஜனங்களுக்கு ஒரு ஆபத்து வரப்போகிறது என்பதை அறிந்த மொர்தேகாய் சாம்பலிலே உட்கார்ந்தான் என்று வாசிக்கிறோம். நினிவே ஜனங்களுக்கு ஒரு ஆபத்து என்று அறிந்தவுடன் ஜனங்களும், ராஜாவும் சாம்பலிலே உட்கார்ந்தார்கள் என்று வாசிக்கிறோம். துக்கமான சாம்பலின் அனுபவத்தை ஆனந்த தைலத்தை கொண்டு மாற்றுகிறவர் இயேசு கிறிஸ்து.*

*ஆனந்த தைலமானது உங்கள் துயரத்தையும், துக்கத்தையும் மாற்றக்கூடியது. தேவனாகிய கர்த்தர் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை மற்ற எல்லாரையும் விட அதிகமான ஆனந்த தைலத்தால் அபிஷேகம் செய்தார் என்று தீர்க்கதரிசனமாய் சொல்லப்பட்ட வார்த்தையை சங்கீதம் 45:8ல் வாசிக்கிறோம். எல்லோருக்கும் பிசின் தைலமாகிய தேவ வார்த்தை கிடைத்தது. ஆனால் உங்களுக்கோ தேவனுடைய வசனத்தால் வருகிற ஆனந்தத்தை உங்களுக்கு தருவார். எத்தனையோ ஜனங்கள் வேத வசனத்தை கேட்கிறார்கள், அதை வாசிக்கிறார்கள், தியானிக்கிறார்கள் ஆனால் இன்று வரை அவர்களுக்கு ஆனந்த தைலம் கிடைக்க வில்லை. உங்களை கர்த்தர் விசேஷமாய் நேசிக்கிறபடியால் மற்றவர்களுக்கு நீங்கள் வெளிச்சமாய் காணப்படுப்படியாக உங்கள் மீது ஆனந்த தைலத்தை ஊற்றுகிறார். சற்றும் எதிர்பாராத ஒரு மகிழ்ச்சி, ஆனந்தம் உங்களை வந்தடையும்.*

*தேவ ஜனமே இத்தனை நாட்களாய் உங்களை துயரப்படுத்தின காரியங்கள் மறைந்து போகும். நீங்கள் பெற்றுக்கொள்கிற ஆனந்த தைலமானது உங்கள் நாவிலே தேவனை துதிக்கும் துதி பாடலைக்கொண்டு வரும். இந்நாள் வரை உங்களை ஆட்டிப்படைத்த துயரத்தை நீங்கள் தேடினாலும் காணமாட்டீர்கள். உங்கள் ஆவியை ஒடுக்கின துயரத்தை கர்த்தர் தம்முடைய ஆனந்த தைலத்தால் துரத்திவிட்டார். இன்றும் என்றும் உங்களோடு வாசம்செய்ய வேண்டும் என்று தேவன் விரும்பி உங்கள் உள்ளத்திலே அவர் ஊற்றின ஆனந்த தைலமானது அகில உலகத்திற்கும் வெளிச்சம் கொண்டுசெல்லும். ஆனந்தத்தால் அணல் மூட்டுகிற ஆவியானவர் உங்களைக்கொண்டு மாபெரும் காரியத்தை செய்வாராக. உங்கள் ஜெபமும், வேத வசனமும் அதற்கு ஆதாரமாக இருப்பதாக. இத்தனை மாதங்களாக உங்களை பாதுகாத்து நடத்தின தேவன் இனிவரும் நாட்களில் உங்களை பாதுகாப்பாராக. அல்லேலூயா ஆமென்.*

கிறிஸ்துவின் பணியில்
பாஸ்டர்.S.ராஜன் 6385330029
ஜெப உதவிக்கு 9003708768


===============
Blissful balm!
=================
*He sent me to give unto them beauty for ashes, the oil of joy for mourning, the garment of praise for the spirit of heaviness;, Isaiah 61:3*

*Yesterday we meditated on what adhesive balm is and how it is a sign of God's word of healing. Today we are going to look at the the oil of joy. If you haven't read yesterday's message, please read it first. It will be a blessing for you. Happiness is what you get after you have been healed by the Bible verse, which is the adhesive balm. God changes your tragic circumstances and fills you with the balm of joy. There is no joy in the lives of many children of God. They will always be seen as sad. This month God will change all your sorrows and fill you with the oil of bliss. Ash is a sign of sorrow. We read that Mordecai sat down in the ashes, knowing that a danger was about to come to the Jewish people. We read that the people and the king sat in the ashes when they learned that Nineveh was a danger to the people. Jesus Christ is the one who transforms the experience of sorrowful ashes with the balm of joy.*

*The ointment of bliss can change your grief and sorrow. In Psalm 45:8, we read the prophetic word that it was prophesied that the Lord God anointed His Son, Jesus Christ, with more joyful ointment than anyone else. Everyone got the word of God, the adhesive ointment. But he will give you the oil of joy that comes from the word of God. Many people listen to the Scriptures, read it, and meditate on it, but to this day they have not received the oil of bliss. But the Lord loves you especially, He pours out the oil of joy upon you so that you may be seen as a light to others. An unexpected joy and bliss will reach you.*

*O people of God, the things that have afflicted you for so many days will disappear. The joyous ointment that you receive will bring a song of praise to God in your tongue. Even if you look for it, you will not find the sorrow that has plagued you to this day. The Lord has cast out with His joyful ointment the sorrow that has oppressed your spirit. The ointment of joy that God has poured into your hearts, desiring to dwell with you today and forever, will bring light to the whole world. May the Spirit, who sets the fire with joy, do a great thing through you. Let your prayer and the Scripture be the basis of it. May the God who has protected and guided you for so many months protect you in the days to come. Alleluia amen.*

In the work of Christ
Pastor. S.Rajan 6385330029
For prayer 9003708768

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.