வேதபகுதி: மத்தேயு 5:1-24
" இருதயத்தில் சுத்தம் "
*" இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள் - மத்தேயு 5:8*
*தேவனை யாரால் தரிசிக்க முடியும்? அதிகமாக ஜெபிப்பவர்கள், அதிகமாக ஊழியம் செய்பவர்கள், காணிக்கை கொடுப்பவர்கள், உழைப்பவர்களெல்லாம் தேவனை தரிசிக்க முடியுமா? என்று கேள்வி கேட்டால், முடியாது என்பதுதான் வேதம் கூறும் பதிலாகும். அப்படியானால், தேவனை தரிசிக்க என்ன செய்ய வேண்டும்? இருதயத்தில் சுத்தமாயிருக்க வேண்டும். இவ்வளவுதானா? என்று நமக்குத் தோன்றும். எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே கேடுள்ளதும் திருக்குள்ளதுமாயிருக்கிறது என்றும், இருதயத்திலிருந்துதான் சகலவிதமான அசுத்தங்களும், கேடுபாடுகளும், விபச்சாரங்களும், கொலைகளும், கபடும் புறப்பட்டு வருகிறது என்றும் வேதம் கூறுவதைக் காணும்போது, இருதயத்தை சுத்தமாகக் காத்துக்கொள்வது சவாலான விஷயம் என்பது மெள்ள மெள்ள நமக்குப் புரியும்.*
*இருதயத்தை சுத்தமாகக் காத்துக்கொள்வது மிகவும் கடினமானக் காரியமாக இருந்தாலும், நாம் இருதயத்தைக் காத்துக்கொண்டால் மாத்திரமே தேவனை தரிசிக்க முடியும். இருதயத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? பொல்லாத சிந்தனைகள் இருதயத்திலிருந்து எழும்பாதபடி இருதயத்தைக் காத்துக்கொள்வது எப்படி? என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் வேதத்தில் தான் உள்ளது. " சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும் " - சங் 51:10 என்று தாவீது தேவனிடம் வேண்டிக்கொண்டான் என்று எழுதப்பட்டுள்ளதை நாம் பார்த்து, இப்படியே தேவனிடம் நாமும் மன்றாடவேண்டும்.*
*கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்கிறான் என்று இயேசு கூறியதைப்போல, தேவனிடம் நாம் சுத்த இருதயத்தைக் கேட்கும் போது, கல்லான இருதயத்தை தேவன் எடுத்துப்போட்டு, சதையான, நவமான இருயத்தை தேவன் நமக்குத் தருவார். அதற்குப்பின்பு, தேவனுடைய அன்பு நம்முடைய இருதயத்தை நிரப்பும்படி ஜெபித்து, தேவனுடைய அன்பினால் நிரப்பப்பட வேண்டும். பின்பு வேத வசனங்களினால் நம்முடைய இருதயத்தை நிரப்ப வேண்டும். இவைகளை நாம் செய்யும்போது, நாம் இருதயத்தில் சுத்தமுள்ளவர்களாக மாறலாம். தேவனையும் தரிசிக்கலாம். அல்லேலூயா !*
*" எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவ ஊற்று புறப்படும் " - நீதி 4:23*
🤔 *சிந்தனைக்கு* 🤔
*! இருதயத்தில் சுத்தம் தேவனுக்குப் பிரியம் !*
*Today’s Bible Reading: Matthew 5:1-24*
*PURE IN HEART*
*“Blessed are the pure in heart, For they shall see God.” – Matt 5:8*
*Who can see God? Can those who pray more, serve more, give gifts, and work harder see God? If you ask that question, the answer given by the scripture is that it is not possible. So, what should be done to visit God? Be pure in heart. Is that all? It seems to us that When we see that the scripture says that the heart is corrupt and twisted above all else, and from the heart all kinds of impurity, corruption, adultery, murder, and deceit come out, we slowly understand that it is a challenge to keep the heart clean.*
*Although keeping the heart clean is a very difficult task, we can visit God only if we keep the heart clean. How to keep the heart clean? How to guard the heart so that evil thoughts do not arise from the heart? The answer to all these questions is in the scripture. "Create in me a pure heart" - Ps 51:10 We see that it is written that David prayed to God, and we should pray to God in the same way.*
*As Jesus said that everyone who asks receives, when we ask God for a clean heart, God will take away the stony heart and give us a fleshy, new heart. After that, pray for God's love to fill our hearts and fill them with God's love. Then we should fill our heart with the scripture. When we do these things, we can become pure in heart. You can also visit God. Hallelujah!*
*"Keep your heart with all diligence, For out of it spring the issues of life". – Prov 4:23*
*🤔For Thought🤔*
*CLEANLINESS OF HEART IS PLEASING TO GOD.*
*வேதபகுதி: பிரசங்கி 7:1-29*
*" உபாயதந்திரங்கள் "*
*" அவர்களோ அநேக உபாயதந்திரங்களைத் தேடிக்கொண்டார்கள்" - பிர 7:29*
*தேவன் மனிதனை உண்டாக்கும்போது நல்லவனாக, பழுதற்றவனாக, நல்ல புத்தியை உடையவனாக உண்டாக்கினார். ஆனால் அவர்களோ அநேக புதிய காரியங்களையும், குறுக்கு வழிகளையும் தேடிக்கொண்டார்கள் என்று இன்றைய தியான வசனம் கூறும் போது, மனிதர்களுடைய மூளை ஏன் இப்படி வேலை செய்கிறது என்று கேட்கத்தோன்றுகிறது. மனிதன் இப்படிமாறினது ஏதேன் தோட்டத்தில் ஆரம்பித்தது. தனக்குக் கொடுக்கப்பட்டவைகள் போதும் என்று மனிதன் நினைக்காமல் வேறு ஏதாகிலும் தனக்குக் கிடைக்குமா? இன்னும் புதிய காரியத்தை ஏதாகிலும் நாம் பெற்றுக்கொள்ள முடியுமா என்று யோசித்ததின் விளைவே விலக்கப்பட்ட விருட்சத்தின் கனியைப் பறித்து, புசித்து, பாவத்தையும் சாபத்தையும் வாங்கிக் கட்டிக்கொண்டதன் வரலாறு. தேவன் எவைகளெல்லாம் மனிதனுக்குப் போதும் என்று நினைத்தாரோ அவைகளை மட்டுமே அவனுக்குக் கொடுத்திருந்தார். அவனுக்குத் தேவையில்லாதவைகளையெல்லாம் அவனை விட்டு விலக்கி வைத்திருந்தார். ஆனால் சாத்தான் அவனைத் தூண்டியவுடனே, விலக்கப்பட்டவைகள்மேல் ஆசை கொண்டு, நம்முடைய கண்கள் திறக்கப்பட்டால் எப்படியிருக்கும், நாமும் தேவர்களைப்போல மாறினால் எப்படியிருக்கும் என்றெல்லாம் யோசித்து, கடைசியில் மிகவும் கொடுமையான விளைவுகளைக் சந்தித்தான்.*
*உபாயத்தந்திரங்கள் எப்பொழுதுமே ஆபத்தானவைகள். அவைகள் நம்மை தேவனுடைய கோபத்தில் தள்ளிவிடும். தான் செய்த பாவத்தை மறைப்பதற்காக உபாயதந்திரங்களை யோசித்து, அவைகளை செயல்படுத்தி, இதனால் உரியாவையும் வேறு சிலரையும் விருத்தசேதனமில்லாதவர்களுடைய பட்டயத்தினால் கொலைசெய்த தாவீது, தேவனுடைய கோபத்தில் விழுந்து, நியாயத்தீர்ப்பைப் பெற்றுக்கொண்டான். தேவ ஜனங்களை வீழ்த்தும் படி உபாயதந்திரங்களை யோசித்து, எதிரிக்கு ஆலோசனை கொடுத்த பிலேயாம் வெட்டிக்கொலை செய்யப்பட்டான். யாரெல்லாம் உபாய தந்திரங்களை மேற்கொண்டார்களோ, அவர்கள் அத்தனை பேரும் வாழ்வை அல்ல, அழிவைப் பெற்றுக் கொண்டார்கள். தேவப்பிள்ளையாகிய நாமோ, இப்படியிராமல் செம்மையான இருதயத்தோடிருந்து, ஆசீர்வாதமாயிருப்போம்.*
*" உத்தமமும் நேர்மையும் என்னைக் காக்கக்கடவது " - சங் 25:21*
🤔 *சிந்தனைக்கு* 🤔
*! குறுக்கு வழியைத் தேடுபவர்கள் குறுகிப் போவார்கள் !*
*Today’s Bible Reading: Eccle 7:1-29*
*SCHEMES*
*“But they have sought out many schemes.” – Eccle 7:29*
*When God created man, he made him good, blameless, and intelligent. But when today's meditation verse says that they searched for many new things and shortcuts, it seems to ask why the human brain works like this. Man's transformation began in the Garden of Eden. Does a man think that what has been given to him is enough, but can he get anything else? Yet the history of plucking and eating the fruit of the forsaken tree, bearing sin and curse, is the result of thinking that we can obtain a new thing in anything. God had given man only what he thought was sufficient for him. He kept away from him all that he did not need. But as soon as Satan provoked him, he lusted after things excluded, and thought what it would be like if our eyes were opened, and what it would be like if we became like gods, and at last met with the most terrible consequences.*
*Tricks are always dangerous. They will bring us into the wrath of God. David, who thought of tricks to cover up his sin, executed them, and thus killed Uriah and some others with the sword of the uncircumcised, incurred God's wrath and received judgment. Balaam, who devised strategies and counselled the enemy to bring down God's people, was killed. All those who practiced subterfuge got destruction, not life. We, the children of God, will not be like this and will be blessed with a pure heart.*
*"Let integrity and uprightness preserve me". – Psa 25:21*
*🤔For Thought🤔*
*THOSE WHO SEEK A SHORTCUT WILL BE NARROWED DOWN.*
*வேதபகுதி: யாத் 39:33-43*
*" ஆசீர்வதித்தான் "*
*" மோசே அவர்களை ஆசீர்வதித்தான் " - யாத்திராகமம் 39:43*
*கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி, மற்றும் ஆராதனை சம்பந்தப்பட்ட வேலைகளைச்செய்ய தேவன் மோசேக்குக் கட்டளையிட்டு, அந்த வேலைகளைச் செய்யும்படி பெசலெயேலை பெயர் சொல்லி அழைத்து, அவனுக்கு அறிவும் புத்தியும் ஞானமும் உண்டாக அவனை தேவ ஆவியால் நிரப்பி, அவனுக்கு உதவியாக மேலும் சில நபர்களையும் கொடுத்தார். தனக்குக் கட்டளையிட்டவைகளையெல்லாம் செய்யும்படி, மோசே பெசலெயேலுக்குக் கட்டளையிட்டான். பெசலெயேலும் அவனைச் சேர்ந்தவர்களும் தாங்கள் செய்யும்படி மோசே எவைகளையெல்லாம் கட்டளையிட்டானோ அவைகளையெல்லாம் செய்து முடித்தார்கள். மோசே அவைகளையெல்லாம் பார்த்தான். அவனுக்குள் மிகப் பெரிய சந்தோஷமும் திருப்தியும் உண்டானது. எனவே, மோசே அவர்களை ஆசீர்வதித்தான்.*
*நாம் ஒரு வேலையைச் செய்யும்படி ஒருவருக்குக் கூறும்போது, அவர்கள் அந்த வேலையை மிகச் சரியாக செய்து முடிக்கும்போது நமக்குள் மிகப்பெரிய சந்தோஷம் உண்டாகி, அவர்களுக்கு எப்படியெல்லாம் நன்மை செய்யமுடியுமோ அப்படியெல்லாம் நன்மை செய்வோம். ஊழியமானாலும், சபைகளானாலும், வேலை ஸ்தலங்களானாலும், தங்களுக்குக் கொடுக்கப்படும் வேலையை சிறப்பாகச் செய்கிறவர்களை தலைவர்களுடைய இருதயம் ஆசீர்வதிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் இன்று அப்படி நடப்பதில்லை. வேலையைச் சிறப்பாகச் செய்ய மாட்டார்கள். ஆனால் ஆசீர்வாதம் மட்டும் வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.*
*இவைகள் ஒருபுறம் இருந்தாலும், தேவன் நமக்குக் கொடுத்த வேலையை நாம் சரியாகச் செய்து முடித்தால், தேவன் நம்மை ஆசீர்வதிப்பாரல்லவா. நாம் வேலையை ஒழுங்காகச் செய்யும்போது தேவனுடைய இருதயம் எவ்வளவு சந்தோஷப்படும். பிரியமானவர்களே ! இவைகளை அறிந்து, தேவனுடைய வேலையை உற்சாகமாய் செய்வோம். எவ்வளவு சிறப்பாகச் செய்ய முடியுமோ அவ்வளவு சிறப்பாகச் செய்வோம். நம்முடைய வேலையெல்லாம் முடிந்ததற்குப்பின்பு தேவனாகிய கர்த்தர் நிச்சயமாய் நம்மை ஆசீர்வதிப்பார், நாமும் ஆசீர்வாதமாயிருப்போம். அல்லேலூயா !*
*" என் பார்வைக்குச் செம்மையானதை நீ நன்றாய்ச் செய்து, என் இருதயத்தில் இருந்தபடியெல்லாம்....... செய்தபடியினால் " - 2 இராஜா 10:30*
🤔 *சிந்தனைக்கு* 🤔
! உண்மையுள்ளவர்களை உயர்வுகள் தேடிவரும் !*
*Today’s Bible Reading: Exo 39:33-43*
*HE BLESSED*
*“And Moses blessed them.” – Exo 39:43*
*God commanded Moses to do the work related to the ark of the covenant of the Lord, and the worship, and called Bezalel by name to do the work, filled him with the Spirit of God to give him knowledge, intellect and wisdom, and gave him some other people to help him. Moses commanded Bezaleel to do all that he was commanded. Bezalel and his men did all that Moses commanded them to do. Moses saw them all. There was great joy and satisfaction in him. So, Moses blessed them.*
*When we tell someone to do a job, we feel great joy when they do it perfectly, and we do whatever good we can to them. In ministries, congregations, or workplaces, there is no doubt that the hearts of leaders bless those who do the work they are given well. But that is not the case today. They won't do the job well. But they expect only blessings.*
*These things aside, if we do the work that God has given us, God will not bless us. How glad God's heart will be when we do the work properly. Beloved! Knowing these things, let us do God's work enthusiastically. We will do the best we can. After all our work is done, the Lord God will surely bless us and we will also be blessed. Hallelujah!*
*"Because you have done well in doing what is right in my sight ". – 2 Kings 10:30*
*🤔For Thought🤔*
*PROMOTIONS SEEK THE FAITHFUL.*
Brother J. Daniel
Yesuveh Aatharam Ministries
496/1, Lakshmipuram Periyar Nagar,
Redhills, Chennai – 600052
Mobile: +919940018988
Email id: jesusthefoundation@gmail.com
Youtube: https://youtube.com/@YesuvehAatharamMinistries?si=tmnC_9ZbaIMGfOKh
Thanks for using my website. Post your comments on this