வேதபகுதி: எபேசியர் 5:1-33*
*" திருவசனத்தைக்கொண்டு "*
*" நாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும் " - எபேசியர் 5:26*
*தேவனாகிய கர்த்தர் தன்னுடைய சபையை எப்படி பரிசுத்தமாக்குகிறார் என்று இன்றைய தியான வசனம் குறிப்படுகிறது. திருவசனத்தைக் கொண்டு அவர் சபையைச் சுத்தப்படுத்துகிறார் என்பதைப் பார்க்கும்போது, வசனமில்லாத சபைகள் தேவனுடைய ஆளுகையை இழந்துவிட்டது. சுத்தப்படுத்துகிறார் என்ற வார்த்தைக்கு, தேவையில்லாத காரியங்களை அகற்றுகிறார் என்பதே சரியான அர்த்தமாகும். நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் தேவையில்லாத காரியங்கள் அகற்றப்பட வேண்டுமானால் திருவசனம் நமக்குப் போதிக்கப்பட வேண்டும். நாம் எவைகளையெல்லாம் செய்யக்கூடாது என்று வசனத்தின்படி சொல்லப்பட வேண்டும். எவைகளெல்லாம் அசுத்தமானவைகள், நம் ஆத்துமாவைக் கறைப்படுத்துபவைகள் என்று வசனத்தின்படி அடையாளப்படுத்தப்பட வேண்டும். அதற்கேற்ற வசனங்கள் நமக்குப் போதிக்கப்பட வேண்டும். இத்தகைய வசனங்கள் சபையில் போதிக்கப்படாமல், வாக்குத்தத்தங்களும், ஆசீர்வாதங்களும் மட்டுமே சபையில் போதிக்கப்படுமானால், சபை ஒருபோதும் பரிசுத்தமடையாது.*
*பிரியமானவர்களே ! நம்மை பரிசுத்தத்திற்கு நேராக நடத்தாத எந்த இடமாயிருந்தாலும் அவைகள் நமக்கு மிகவும் ஆபத்தான இடங்களாகும். அவைகள் அத்தனையும் பாதாளத்தின் வழிகளே. பரலோகத்தின் பாதை பரிசுத்தமானது. பரலோகமும் பரிசுத்தமானது. இவைகளை மறந்து போனவர்களே பரிசுத்தத்தை வலியுறுத்தமாட்டார்கள். இவர்களுக்கு " பரிசுத்தம் " என்ற செய்தி பாகற்காயை விட அதிகமாகக் கசக்கும். பரிசுத்தத்தைக் குறித்த செய்தியையும், அதைப் பிரசங்கிப்பவர்களையும் கடுமையாக எதிர்ப்பார்கள். இவர்களுக்கு பாதாளத்தின் வாசல்கள் எப்பொழுதும் திறந்தே இருக்கும்.*
*பிரியமானவர்களே ! நாமோ நம்மை பரிசுத்தத்திற்கு ஒப்புக்கொடுப்போம். பரிசுத்தத்திற்கு நேராக நடத்தும் சபைகளுக்கும், கூட்டங்களுக்கும் செல்லுவோம். பரிசுத்தத்தைக் குறித்துப்பேசும் ஊழியர்களோடு ஐக்கியமாய் இருப்போம். அப்பொழுது மட்டுமே நம்முடைய ஆத்துமாவைக் காத்துக்கொள்ள முடியும். எனவே, நாம் ஜாக்கிரதையாயிருந்து, நம்மைக் காத்துக் கொள்வோமாக. ஆமென்.*
*" கட்டளையைக் காத்துக் கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான் " - நீதி 19:16*
🤔 *சிந்தனைக்கு* 🤔
*! பரிசுத்தத்தை விரும்பாதவர்கள் நரகத்தை விரும்புகிறார்கள் !*
*Today’s Bible Reading: Ephesians 5:1-33*
*THROUGH THE WORD*
*“To make her holy, cleansing her by the washing with water through the word.” – Eph 5:26*
*Today's meditation verse refers to how the Lord God sanctifies his congregation. Seeing that He cleanses the church with the Word, the Wordless Church has lost God's rule. The word purifies literally means to remove unnecessary things. If we want to get rid of unnecessary things in our life, we need to be taught the gospel. We should be told by the verse what we should not do. All of which are defiled and defile our souls should be identified by the verse. Appropriate verses should be taught to us. If such verses are not preached in the church, but only promises and blessings are preached in the church, the church will never be sanctified.*
*Beloved! Any place that does not lead us straight to holiness is a very dangerous place for us. They are all the ways of the underworld. The path of heaven is holy. Heaven is also holy. Those who have forgotten these will not insist on holiness. To them the message of "Holiness" is more bitter than a cantaloupe. They will strongly oppose the message of holiness and those who preach it. The gates of the underworld are always open to them.*
*Beloved! We will commit ourselves to holiness. Let's go to churches and meetings that lead straight to holiness. Let us be united with ministers who preach holiness. Only then we can save our souls. Therefore, let us beware and protect ourselves. Amen!*
*"Whoever keeps commandments keeps their life". – Pro 19:16*
*🤔For Thought🤔*
*THOSE WHO DO NOT LOVE HOLINESS LOVE HELL.*
*வேதபகுதி: 1 தீமோத்தேயு 6:1-21*
" விட்டோடு "*
*" நீயோ, தேவனுடைய மனுஷனே இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு ” - 1 தீமோ 6:11*
*தேவனுடைய மனுஷர்கள் சில காரியங்களை எதிர்த்து, அவைகளோடு போராட வேண்டியதாயிருக்கிறது. வேறு சில காரியங்களை விட்டு ஓட வேண்டியதாயிருக்கிறது. எதிர்க்க வேண்டிய காரியங்களை எதிர்த்து, ஓட வேண்டிய காரியங்களை விட்டு ஓடினால் மட்டுமே நம்மால் பிழைக்க முடியும், ஆவிக்குரிய வாழ்க்கையில் நிலைத்து நிற்க முடியும். தன்னால் பயிற்றுவிக்கப்படுகிற தீமோத்தேயுவுக்கு ஆலோசனை கூறும் பவுல், பண ஆசையை விட்டு ஓடும்படி புத்தி கூறுகிறான். பண ஆசை என்பது எவ்வளவு மோசமானது என்றும், அதனுடைய விளைவுகள் எவ்வளவு பயங்கரமானது என்றும் அவனுக்கு அடையாளங்காட்டும் பவுல், அதை விட்டு ஓடிவிடு என்று அறிவுறுத்துகிறான்.*
*இன்றைய நாட்களில் பவுல் இருந்திருந்தால் கட்டாயம் பவுல் ஒரு பயித்தியக்காரன் என்றும், பவுலுக்கு வேதம் தெரியவில்லை என்றும் பலர் முத்திரை குத்தியிருப்பார்கள். பலரைப் பார்த்து பவுலும் கண்ணீர் விட்டிருப்பான். அந்த அளவுக்கு இன்றைய கிறிஸ்தவம் பண ஆசையினாலும், ஆடம்பரங்களினாலும் நிறைந்து, சாரமற்றதாக மாறிவிட்டது. தேவ மனுஷனுடைய இலக்கு பணமாயில்லாமல், விசுவாசமாயிருக்க வேண்டும் என்று பவுல் கூறுவதை நாம் கவனிக்கும் போது, இன்றைய கிறிஸ்தவம் தன்னுடைய தரிசனத்தை இழந்து தடுமாறிக் கொண்டிருப்பதை அறியலாம்.*
*விசுவாசப் போதனைகளெல்லாம் விசுவாசிகளுக்கு மட்டும்தான் என்று இன்றைய பிரசங்க பீடங்கள் நினைத்துவிட்டன. விசுவாசிகளை விசுவாசிக்கச் சொல்லும் பிரசங்க பீடங்கள், பல வேளைகளில் தங்களுக்காக விசுவாசிகளையே விசுவாசத்தோடு எதிர்பார்க்கின்றன. இது வேடிக்கையாக இல்லையா. கிட்டத்தட்ட இது மாய்மாலத்தின் உச்சம் அல்லவா. பிரியமானவர்களே! நாம் வேத வசனங்களை மாத்திரம் கவனிப்போம். வேதம் கூறுகிறபடி பண ஆசையை விட்டு ஓடி, நம்மையும், நம்முடைய விசுவாசத்தையும் காத்துக்கொள்வோம் அப்பொழுது ஜீவ கிரீடத்தைப் பெற்றுக்கொள்ளலாம். ஆமென்.*
*" பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப் பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை " - பிரசங்கி 5:10*
🤔 *சிந்தனைக்கு* 🤔
*! பணப்பிரியர்கள் பரலோகத்தால் வெறுக்கப்படுவார்கள் !*
*Today’s Bible Reading: 1 Timothy 6:1-21*
*FLEE*
*“But you, O man of God, flee these things and pursue righteousness, godliness, faith, love, patience, gentleness.” – 1 Timo 6:11*
*There are certain things that men of God have to contend with. There are other things to run away from. We can survive and sustain in the spiritual life only by resisting the things we should resist and running away from the things we should run away from. Paul advises Timothy, who is being trained by him, to flee from the desire for money. Paul reminds him how bad the love of money is and how terrible its consequences are, and advises him to flee from it.*
*If Paul had existed today, many would have labelled Paul as a mad and that Paul did not know the scripture. Paul would have shed tears seeing many people. Today's Christianity is so full of money and luxury that it has become insubstantial. When we notice that Paul says that the goal of the man of God is not money, but faith, we can know that today's Christianity has lost its vision and is stumbling.*
*Today's pulpits think that all faith teachings are for believers only. Pulpits that ask believers to believe often expect believers to believe for themselves. Isn't it funny. Isn't this almost the height of hypocrisy? Beloved! We will look at the scripture verses only. As the scripture says, let us flee from the lust of money, and guard ourselves and our faith, and we shall receive the crown of life. Amen.*
*"He that loveth silver shall not be satisfied with silver; nor he that loveth abundance with increase "– Eccl 5:10*
*🤔For Thought🤔*
*LOVERS OF MONEY WILL BE HATED BY HEAVEN*
*வேதபகுதி: 2 பேதுரு 2:1-22*
" தப்பி நடந்தவன் "*
*“ செம்மையான வழியைவிட்டுத் தப்பிநடந்து, பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப்போனவர்கள்; அவன் அநீதத்தின் கூலியை விரும்பி " - 2 பேதுரு 2:15*
*பொருளாசை என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு பிலேயாமைவிட சிறந்த உதாரணம் வேறு இருக்க முடியாது என்று எண்ணுகிறேன். பொருளாசையுள்ளவர்கள் உல்லாச வாழ்வை விரும்புகிறார்கள் என்பதை நினைக்கும்போது, நாம் எளிமையான வாழ்க்கை வாழ்கிறோமா என்று நிதானிப்பதைத்தடுக்க முடியவில்லை. பொருளாசையை விரும்பி செம்மையான வழியை விட்டு பிலேயாம் தப்பி நடந்தான் என்று வேதம் கூறுகிறது. சரியான வழியில் நடந்தால் மட்டுமே நாம் சரியான இடத்திற்கு போய்ச் சேரமுடியும். தவறான பாதையில் நாம் நடந்தால் தவறான இடத்திற்கே செல்ல முடியும். எனவே நாம் சரியான இடத்திற்கு, நல்ல இடமாகிய பரலோகத்திற்குச் செல்ல வேண்டுமானால், நாம் சரியான வழியில் நடக்க வேண்டியது அவசியம்.*
*தேவனுடைய ஊழியர்களானாலும், பிள்ளைகளானாலும் வெறுக்க வேண்டிய மிக முக்கியமான இரண்டு காரியங்கள் பண ஆசையும், பொருளாசையுமே. இவைகள் தேவனுடையவர்களிடம் இருக்குமென்றால், நிச்சயமாய் அவர்களால் சரியான வழியில் செல்லவே முடியாது. இந்த இரண்டு ஆசைகளும் தேவனுடையவர்களை வழி தப்பப்பண்ணும். கடைசியில் படுகுழியில் தள்ளிவிடும். தேவனுடைய அதிகாரத்தையுடைய பிலேயாம், தேவனுடைய ஜனங்களின் வாழ்வுக்கும், பாதுகாப்பிற்கும், உயர்வுக்கும் காரணமாக இருக்க வேண்டியவன். ஆனால், பொருளாசையினிமித்தமாக தேவ ஜனங்கள் அழிந்துபோக விருப்பம் கொண்டான்.*
*தேவப்பிள்ளையே! பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்று இயேசு கூறினதை நாம் மறந்து போகக்கூடாது. அவர்கள் இப்படிக் கூறினார்கள், அவர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று நாம் மற்றவர்களைப் பார்த்து, அவர்களைப்போல பொருளாசையுள்ளவர்களாக மாறி, கடைசியில் தேவ கோபத்தில் விழுந்துவிடக் கூடாது. எனவே, பொருளாசையை வெறுத்து, போதும் என்ற மனதுடனே பக்தியாய் வாழ்வோம். தேவன் நம்மை ஆசீர்வதிப்பார். அல்லேலூயா !*
*“ இது (பொருளாசை) தன்னையுடையவர்களின் உயிரை வாங்கும் " - நீதி 1:19*
🤔 *சிந்தனைக்கு* 🤔
*! பொருளாசை நரகத்தின் வழியாகும் !
*Today’s Bible Reading: 2 Peter 2:1-22*
*GONE ASTRAY*
*“Which have forsaken the right way, and are gone astray, following the way of Balaam the son of Bosor, who loved the wages of unrighteousness.” – 2 Peter 2:15*
*I think there is no better example of what materialism can do than Balaam. When we think that materialistic people love to live a life of pleasure, but wonder if we are living a simple life. The scripture says that Balaam ran away from the pure way because he loved material things. We can reach the right place only if we walk in the right way. If we take the wrong path we can end up in the wrong place. So if we want to go to the right place, the good place, heaven, it is necessary that we walk in the right way.*
*The two most important things to hate as servants and children of God are the desire for money and the desire for material things. If these things are with the people of God, surely they will never be able to walk in the right way. These two desires lead God's people astray. In the end it will be pushed into the abyss. Balaam, who has the authority of God, is supposed to be the reason for the life, protection and promotion of God's people. But, for the sake of materialism, God wanted the people to perish.*
*Child of God! Let us not forget that Jesus said to beware of materialism. They said this, we should not look at others as they are and become materialistic like them and end up falling into God's wrath. Therefore, let us hate materialism and live a pious life with a mind of sufficiency. God bless us. Hallelujah!*
*"Which (greedy of money) taketh away the life of the owners thereof ". – Prov 1:19*
*🤔For Thought🤔*
*MATERIALISM IS THE ROAD TO HELL*
*வேதபகுதி: மத்தேயு 14:1-36*
" இன்னார் என்று அறிந்து "*
*" அவ்விடத்து மனுஷர் அவரை இன்னார் என்று அறிந்து, சுற்றுப்புறமெங்கும் செய்தி அனுப்பி, பிணியாளிகளெல்லாரையும் அவரிடத்தில் கொண்டுவந்து "- மத் 14:35*
*கெனெசரேத்து என்ற நாட்டிற்கு இயேசுவும் அவருடைய சீஷர்களும் வந்து சேர்ந்து போது, அந்த நாட்டிலுள்ள ஜனங்கள் அவரை யார் என்று அறிந்து, அவ்விடத்திலுள்ள பிணியாளிகள் எல்லாரையும் அவரிடத்தில் கொண்டு வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் தொடும்படி வேண்டிக்கொண்டார்கள். இயேசுவும் அவர்களுக்கு உத்தரவு கொடுத்தார். அவர்களுடைய விசுவாசத்தின்படியே அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டவர்கள் யாவரும் குணமானார்கள். இயேசு யார் என்று அறிந்திருந்த ஒரு சிலரால் அநேகருக்குக் கிடைத்த ஆசீர்வாதங்கள். நினைத்துப் பார்க்கும்போது, நாமும் இயேசு யார் என்று அறிந்திருக்கிறோம், நம்மால் எத்தனை பேர் நன்மை பெற்றிருக்கிறார்கள் என்று கேட்கத்தோன்றுகிறது.*
*இயேசு யார் என்று அறிந்திருந்தவர்கள் அதை தங்களுக்குள்ளேயே அடக்கி வைத்திருந்தால், அத்தனை பேர் நன்மை பெற்றிருக்க முடியாது. அவர்கள் போய், தேவையுள்ளோருக்கு இயேசுவைக் குறித்து அறிவித்து, அவர்களை இயேசுவிடம் அழைத்துக்கொண்டு வந்தார்கள். தேவப்பிள்ளையே ! இயேசுவைப்பற்றி அறிந்திருக்கும் நாமும் அதை நமக்குள்ளாகவே அடக்கி வைத்துக்கொள்ளாமல், தேவையுள்ளோருக்கு இயேசுவை அறிவிக்க வேண்டும், மட்டுமல்லாமல், அவர்களை இயேசுவிடம் அழைத்துக்கொண்டு வர வேண்டும். இதைச் செய்யும்பொழுது மட்டுமே அநேகர் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.*
*தேவையுள்ளோரை இயேசுவிடம் அழைத்து வந்ததோடு அவர்கள் நின்று விடாமல், அவர்கள் இயேசுவைத் தொட்டு, அற்புதங்களைப் பெற்றுக்கொள்ளும்படி அதாவது இயேசு கிரியை செய்யும்படி அவர்கள் இயேசுவிடம் வேண்டிக்கொண்டார்கள். இயேசுவை அறிவிக்கும் நாமும், அவர்களை இயேசுவிடம் கொண்டு வந்துவிட்டதோடு நின்றுவிடாமல், அவர்கள் அற்புதங்களைப் பெற்றுக்கொள்ளும்படி, இயேசுவிடம் மன்றாட வேண்டும். அவர்களுக்காக நாம் ஜெபிக்க வேண்டும். அப்பொழுதுமட்டுமே அநேகர் ஆசீர்வதிக்கப்படுவார்கள். எனவே, நாமும் இவைகளைப் பின்பற்றுவோம், ஆசீர்வாதமாயிருப்போம். அல்லேலூயா !*
*“ இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள் "- 2 இராஜா 7:9*
🤔 *சிந்தனைக்கு* 🤔
! நற்செய்தியை அறிவிக்காதவர்கள் துர்செய்தியாளர்களே !*
*Today’s Bible Reading: Matthew 14:1-36*
*ACKNOWLEDGE HIM*
*“And when the men of that place had knowledge of him, they sent out into all that country round about, and brought unto him all that were diseased”. – Matt 14:35*
*When Jesus and his disciples came to a country called Gennesaret, the people of that country knew who he was, and they brought all the pilgrims to him and begged him to touch even the hem of his garment. Jesus also gave them orders. According to their faith, all who touched the hem of his garment were healed. Blessings to many by a few whof knew who Jesus was. When we think about it, we also know who Jesus is and ask how many people have benefited from us.*
*If those who knew who Jesus was had kept it to themselves, not so many could have benefited. They went and preached about Jesus to those in need and brought them to Jesus. Child of God! We, who know about Jesus, should not keep it to ourselves, but should announce Jesus to those in need, and bring them to Jesus. Only by doing this many will be blessed.*
*They brought the needy to Jesus and they did not stop, they touched Jesus and prayed to Jesus to receive miracles, that is, to do Jesus work. We who preach Jesus must not stop at bringing them to Jesus, we must plead with Jesus for them to receive miracles. We should pray for them. Only then will many be blessed. Therefore, let us follow these and be blessed. Hallelujah!*
*"This day is a day of good news". – 2 Kings 7:9*
*🤔For Thought🤔*
*THOSE WHO DO NOT PREACH GOOD NEWS ARE BAD NEWS*
Brother J. Daniel
Yesuveh Aatharam Ministries
496/1, Lakshmipuram Periyar Nagar,
Redhills, Chennai – 600052
Mobile: +919940018988
Email id: jesusthefoundation@gmail.com
Youtube: https://youtube.com/@YesuvehAatharamMinistries?si=tmnC_9ZbaIMGfOKh
Thanks for using my website. Post your comments on this