=================
மெய்யான சுதந்திரம்
==================
நம் ஒவ்வொருவருக்குள்ளும் *“நாம் இந்தியர்”* என்ற எண்ணமும், உணர்வும் குறிப்பிட்ட இரண்டு தினங்களில் நிச்சயமாக இருக்கும்.
ஒன்று சுதந்திர தினம், மற்றொன்று குடியரசு தினம். நமது இந்திய தேசம் தனது 77வது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
சுதந்திரம் என்னும் சொல்லே, எதிலிருந்தோ விடுதலை என்பதை காண்பிக்கிறது. அந்நிய ஆதிக்கத்திலிருந்து நமது தேசம் விடுதலை அடைந்ததை, இந்த சுதந்திர தினம் நினைவுபடுத்துகிறது.
இதற்காக ஓய்வில்லாது போராடிய பல தலைவர்களை இன்று நாம் நினைவுகூறுகிறோம்.
ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்விலும்
மெய்யான சுதந்திரம்
(விடுதலை) அவசியம். இந்த சுதந்திரத்தை நாம் அடைவதற்காக தனி ஒருவர் போராடிருக்கிறார். அவர்தான் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து.
ஆம், மனிதனை பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்ய கல்வாரி சிலுவையில் தன் உயிர்கொடுத்து மீட்டிருக்கிறார்.
சிந்திக்க;
*இதற்காக தான் அவர் சிலுவையில் தன் உயிரை பலியாக தந்தார் என்று வேதாகமம் சொல்கிறது*
_(எபிரெயர் 2:14,15)._
*கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை விசுவாசித்து, அவரை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு, தேவ ஆவியானவரை பெற்றுக் கொள்கிறவர்களுக்கு இந்த மெய்யான விடுதலையை அவர் இலவசமாய் தருகிறார். இதுவே கிறிஸ்து தரும்*
மெய்யான சுதந்திரம்.
ஆமென்
Thanks for using my website. Post your comments on this