Type Here to Get Search Results !

வேண்டிக் கொண்டபடியினால் | FOR HIS PEOPLE | Daniel J Bible Study | தின தியான குறிப்புகள் | Jesus Sam

வேதபகுதி: 1 இராஜா 3:1-14*
"வேண்டிக் கொண்டபடியினால்"

*" ஆகையினால் தேவன் அவனை நோக்கி; நீ........உனக்கு வேண்டிக் கொண்டபடியினால் " - 1 இராஜாக்கள் 3:11*

*நாம் என்ன கேட்டாலும் அவைகளைக் கொடுப்பதற்கு வல்லமையுள்ளவர் நம்முடைய தேவன். ஆனால் நாம் கேட்பவைகள் அவருக்கு ஏற்றவைகளாயிருக்கும் போது, நாம் கேட்டவைகளையும், நமக்கு தேவையானவைகளையும் அவர் வாரி வழங்குகிறவராயிருக்கிறார். தேவனுக்குப் பிரியமானவைகள் எது என்று பார்த்து, அவைகளை அவரிடத்திலிருந்து கேட்டுப் பெற்றுக்கொள்வது மிகப்பெரிய ஆசீர்வாதமாகும். தேவனால் சிநேகிக்கப்பட்ட சாலொமோனிடம் உனக்கு என்ன வேண்டும் என்னிடத்தில் கேள் என்று தேவன் கேட்டபோது, இந்த ஏராளமான ஜனங்களை நியாயம் விசாரிக்க ஞானம் வேண்டும் என்று கேட்டான். உடனே சந்தோஷப்பட்ட தேவன், அவன் கேட்டவைகளையும், கேளாதவைகளையும் அவனுக்குக் கொடுத்து அவனை ஆசீர்வதித்தார்.*




*தம்முடைய ஜனங்களை அரசாண்டு, அவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுக்கும்படிக்கே சாலொமோனை தேவன் ராஜாவாக்கினார். அதாவது ராஜாவின் நோக்கம், ஜனங்களுக்கு நன்மை செய்வதே. ஜனங்களை விசாரித்து, அவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுத்து, அவர்களைப் பாதுகாக்க வேண்டியதே ராஜாவுடைய கடமை. எனவே, தன்னுடைய அழைப்பு எது என்று அறிந்து, தன்னுடைய கடமையைச் செய்ய என்ன தேவை என்பதை (ஞானம்) உணர்ந்து, அதை தேவனிடம் கேட்டதால், தேவன் அவனை மிகுதியாய் ஆசீர்வதித்தார்.*




*பிரியமானவர்களே ! நாம் பரலோக ராஜ்யத்தை சுதந்தரிக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம். எனவே அதற்கு என்ன தேவை என்பதை அறிந்து நாம் தேவனிடம் கேட்டால் அது தேவனுக்குப் பிரியமான விண்ணப்பமாக இருக்கும் என்பதில் எவ்வளவும் சந்தேகமில்லை. பரலோகம் செல்லத் தேவையான பரிசுத்தம், உண்மை, கீழ்ப்படிதல், அன்பு, தாழ்மை இவைகளை நாம் தேவனிடத்தில் கேட்டால், தேவன் இவைகளை நமக்குத் தந்து, நாம் கேளாதவைகளையும் தந்து, ஆசீர்வதிப்பார். அப்பொழுது நாமும் ஆசீர்வாதமாயிருப்போம். அல்லேலூயா !*




*" நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர்......தைரியம் " - 1 யோவான் 5:14*

🤔 *சிந்தனைக்கு* 🤔
*! தேவ சித்தம் செய்தால் தேடி வரும் நன்மைகள் !*



*Today’s Bible Reading: 1 Kings 3:1-14*
*SINCE ASKED*

*“So God said to him, “Since you have asked for this………….” - 1 Kings 3:11*




*Our God is able to give us whatever we ask. But when what we ask is acceptable to him, he is the one who gives us what we ask and what we need. It is a great blessing to see what is pleasing to God and to ask Him for it. When God asked Solomon, who was loved by God, "Ask me what you want," he asked, "I need wisdom to judge this multitude of people." Immediately God was pleased and blessed him by giving him what he asked and what he did not ask.*




*God made Solomon king to rule over his people and give them good things. That is, the purpose of the king is to benefit the people. It is the king's duty to investigate the people, give them good things and protect them. So he knew what his calling was, realized what was needed (wisdom) to do his duty, and asked God for it, and God blessed him abundantly.*




*Beloved, we are called to inherit the kingdom of heaven. So if we ask God knowing what it requires, there is no doubt that it will be a request that is pleasing to God. If we ask God for holiness, truth, obedience, love, and humility, which are necessary to go to heaven, God will give us these and bless us with what we do not ask for. Then we too will be blessed. Hallelujah!*




*“This is the confidence we have in approaching God: that if we ask anything according to his will, he hears us.” - 1 John 5:14*

🤔 *For Thought* 🤔

*IF WE DO GOD’S WILL, BENEFITS WILL FOLLOW US.*


*வேதபகுதி: சங்கீதம் 96:1-13*
*" உறுதிப்பட்டிருக்கும் "*


*" கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், ஆகையால் பூச்சக்கரம் அசையாதபடி உறுதிப்பட்டிருக்கும் "- சங்கீதம் 96:10*


*இன்றைய தியான வசனம் அழுத்தமான உண்மை ஒன்றைக் கூறுகிறது. தேவனாகிய கர்த்தர் ஆளுகை செய்கிறபடியினால் முழு உலகமும் அசையாமல் உறுதியாய் இருக்கிறது என்று வேதம் கூறுகிறது. தேவனுடைய ஆளுகை என்றால் தேவனுடைய பராமரிப்பு, பாதுகாப்பு என்று அர்த்தமாகும். தேவனுடைய பராமரிப்பு தேவையான பெலனைத் தரும். எனவே எந்த சூழ்நிலைகளும் உலகத்தை ஒன்றும் செய்ய முடியாது. எல்லாச் சூழ்நிலைகளையும் தாண்டி உலகமானது அசையாமல் உறுதியாய் இருக்கும். தேவனுடைய பாதுகாப்பில் மற்ற ஒருவரும் உள்ளே நுழையவும் முடியாது. தேவ பாதுகாப்பைத் தாண்டி ஒருவரும் எதுவும் செய்யவும் முடியாது. எனவே உலகம் அசையாமல் இருக்கும். அல்லேலூயா !*




*பிரியமானவர்களே! இந்த உலகத்தைப் போல நாமும், நம்முடையவைகளும் அசையாமல் உறுதியாய் இருக்கவேண்டுமானால், நம்மையும் நம்முடையவைகளையும் தேவன் ஆளுகை செய்ய வேண்டும். தேவனுடைய ஆளுகை எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் அசைக்கப்பட முடியாத உறுதி இருக்கும். தேவன் நம்மையும் நம்முடையவைகளையும் ஆளவேண்டுமானால் நாம், நம்மையும் நம்முடையவைகளையும் தேவனுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும். அவருடைய விருப்பம் மட்டுமே நிறைவேற வேண்டும். அவருக்குப் பிரியமானவைகளை மட்டுமே நாம் செய்ய வேண்டும். அப்பொழுது மட்டுமே தேவனுடைய ஆளுகை உண்டாயிருக்கும்.*




*இன்றைய நாட்களில் பலருக்கு தேவனுடைய ஆசீர்வாதங்களின் மேல் தீராத ஆசையுண்டு. வேதத்தில் கூறப்பட்டுள்ளதைப் போன்றே நாமும் இருக்க வேண்டும் என்ற தாகமுண்டு. ஆனால் தேவனுடைய ஆளுகைக்கு விட்டுக்கொடுக்க மனமில்லை. தேவனுடைய ஆளுகைக்குள் சுயம் என்பதில்லை. அங்கு சுயம் சாம்பலாயிருக்கும். நம்முடைய விருப்பங்கள் ஒன்றிற்கும் அங்கு இடமேயில்லை. தேவனுடைய விருப்பமே மேலோங்கி இருக்கும். இவ்வாறு தேவ ஆளுகைக்கு நம்மை விட்டுக்கொடுத்து, என்றென்றும் அசையாமல் உறுதியாய் இருப்போம். ஆமென்.*




*" அவர் என் வலது பாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை " - சங் 16:8*

🤔 *சிந்தனைக்கு* 🤔
*! தேவ ஆளுகையே மிகச் சிறந்த பாதுகாப்பு !*


*Today’s Bible Reading: Psalm 96:1-13*
*ESTABLISHED*

*“The Lord reigns.” The world is firmly established, it cannot be moved” - Psalm 96:10*




*Today's meditation verse tells a compelling truth. The scripture says that the whole world is immovable and stable because the Lord God rules. God's rule means God's care and protection. God's providence will yield the desired result. So no circumstances can make the world nothing. Beyond all circumstances, the world remains immovable and steadfast. No one else can enter God's protection. No one can do anything beyond God's protection. So the world will remain still. Hallelujah!*




*Beloved, God must govern us and ours, if we and ours are to be unmoved like this world. Wherever God's rule is, there is unshakable certainty. For God to rule over us and ours, we must surrender ourselves and ours to God. Only His will must be done. We should do only what pleases Him. Only then will the rule of God be established.*




*Many people these days have an insatiable desire for God's blessings. Just as the scripture say, we have a thirst to be. But there is no desire to give up to God's rule. Self is not within God's rule. There the self becomes ashes. There is no place for any of our preferences. God's will prevails. Thus yielding ourselves to God's rule, let us stand firm forever. Amen!*

*“With him at my right hand, I will not be shaken.” - Psalm 16:8*

🤔 *For Thought* 🤔

*GOD’S RULE IS THE BEST PROTECTION.*


*வேதபகுதி: யோவேல் 3:1-21*
*" தமது ஜனத்துக்கு "*

*" கர்த்தர் சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; வானமும் பூமியும் அதிரும். ஆனாலும் கர்த்தர் தமது ஜனத்துக்கு அடைக்கலமும் இஸ்ரவேலின் புத்திரருக்கு அரணான கோட்டையுமாயிருப்பார் " - யோவேல் 3:16*




*தேவனுடைய ஜனங்களைப் பாதுகாப்பதிலும், அவர்களை நடத்துவதிலும் கர்த்தர் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். அவர்கள்மேல் அவருடைய கண்கள் எப்போதும் வைக்கப்பட்டிருக்கும். அவர்களுடைய தேவைகளை அறிந்து அவர்களை ஆசீர்வதிக்கிறார். அவர்களுக்கு ஏதாவது குறைவு ஏற்பட்டால், உடனடியாக அந்தக்குறையை நிறைவாக்கி அவர்களை சந்தோஷப்படுத்துகிறார். தேவைப்படும்போது, அவர்களுக்கு முன்பாக அவர் கடந்துபோய், என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அவைகளையெல்லாம் செய்கிறார். எந்த இடத்திலும் அவர்களை வேறு ஒருவரிடத்திலும் விட்டுக்கொடுக்கவும் மாட்டார். தம்முடைய ஜனங்கள் மேல் தேவனுக்கு இருக்கும் கரிசனைக்கு அளவே இல்லை.*

*இன்றைய தியான வசனத்தைக் கவனித்துப் பார்த்தால் இது நன்றாகவே விளங்கும். வானமும் பூமியும் அதிரும்; ஆனால் கர்த்தர் தம்முடைய ஜனத்துக்கு அடைக்கலமும், அரணான கோட்டையுமாயிருப்பாராம். இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்து தேசத்தில் கோசேன் என்ற இடத்தில் இருந்தார்கள். எகிப்து தேசமெங்கும் வாதைகள் வந்தபோது, இஸ்ரவேலர்கள் இருந்த கோசேன் பகுதி மட்டும் வாதைகள் இல்லாமல் மிகுந்த பாதுகாப்பாய் இருந்தது. காரணம் அவர்கள் தேவனுடையவர்கள். இவ்வாறு தம்முடைய ஜனங்களை விசேஷப்படுத்தி, பாதுகாத்தார் தேவன்.*




*நம்மைச் சுற்றிலும் இருக்கும் சூழ்நிலை எவ்வளவு மோசமானதாக மாறினாலும் அவைகளுக்கு நடுவில் தேவன் நம்மைப் பாதுகாக்க வல்லமையுள்ளவராயிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். சூழ்நிலைகள் மோசமாகும்போது நாம் தடுமாறிவிடக் கூடாது. அமைதியாய், கர்த்தர் மேல் நம்பிக்கையோடு இருக்க வேண்டும். நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மை பாதுகாக்க வல்லமையுள்ளவர். எனவே எந்தச் சேதமும் வராமல் நம்மை பாதுகாப்பார். நாமும் சுகமாய் இருப்போம். அல்லேலூயா !*




*" ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும் பகலும் காத்துக்கொள்வேன் " - ஏசாயா 27:3*

🤔 *சிந்தனைக்கு* 🤔
*! தேவப்பிள்ளைகளே தேவனுக்கு விசேஷமானவர்கள் !*


*Today’s Bible Reading: Joel 3:1-21*
*FOR HIS PEOPLE*
*“The Lord will roar from Zion and thunder from Jerusalem; the earth and the heavens will tremble. But the Lord will be a refuge for his people, a stronghold for the people of Israel.” - Joel 3:16*

*The Lord is attentive to protecting and guiding God's people. His eyes are ever fixed upon them. He knows their needs and blesses them. If they lack something, he immediately makes up for it and makes them happy. He passes before them when it is necessary and does whatever is necessary. He will not give them up to anyone else anywhere. God's concern for His people knows no bounds.*




*This will be well understood if we look at today's meditation verse. Heaven and earth will shake, but the Lord will be a refuge and a strong fortress for His people. The people of Israel were in a place called Goshen in the land of Egypt. When the plagues came throughout the land of Egypt, only the area of Goshen, where the Israelites were, was spared from the plagues. Because they belong to God. Thus God protected His people in a special way .*




*No matter how bad the situation around us becomes, we need to know that God is able to protect us in the midst of them. When the life gets tough, we must not panic. Be calm and trust in the Lord. The Lord our God is able to protect us. So He protects us from any harm. We will also be comfortable. Hallelujah!*

*“I guard it day and night so that no one may harm it.” - Isaiah 27:3*
🤔 *For Thought* 🤔
*CHILDREN OF GOD ARE SPECIAL TO GOD.*

Brother J. Daniel
Yesuveh Aatharam Ministries
1/1711, 1st Floor, T.H. Road
Gandhi Nagar, Red Hills
Chennai – 600 052
Mobile: +919940018988
Email id: jesusthefoundation@gmail.com
You tube: Yesuveh Aatharam

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.