ஓர் குட்டிக் கதை
==============
சிறுவனின் உபதேசம்
==============
ராஜவர்மன் விஜயபுரியின் அரசன் . அவனுக்குத் தான் அரசனாகவும் இருக்க வேண்டும்; அதே நேரத்தில் ஆன்ம இலாபம் தரும் ஞான வினையையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்னும் தணியாத ஆவல்.
உடனே மந்திரியைக் கூப்பிட்டு, “நம் நட்டில் உள்ள குருமார்கள் இங்கு அரண்மனைக்கு வந்து தங்களுக்குத் தெரிந்த ஞான வித்தைகளை எனக்குப் பயமின்றி உபதேசிக்கலாம்; அப்படி செய்யும் உபதேசங்களில் என் மனதைக் கவரும் உபதேசம் எதுவோ அதற்கு, உபதேசித்தவர் கேட்பதைப் பரிசிலாகத் தருவோம்” என பறையறிவிக்கச் சொன்னான்.
வாயிலில் ஒரு ஆராய்ச்சி மணியையும் கட்டினான். வந்தவர்கள் மணியை அடிக்க, மந்திரி அவர்களை அழைத்துப் போய், நீராட, உண்ண, உடுக்க எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து அரசவைக்கு இட்டுச் செல்வார்.
இதைக் கேள்வியுற்ற குருமார்களும், அறிஞர்களும் அரசவை சென்று தங்களுக்குத் தெரிந்தவற்றை உபதேசிக்க மன்னனுக்குத் திருப்தி இல்லை. அவர்களையெல்லாம் விருந்தினர் மாளிகையிலேயே சிறை வைத்து விட்டான்.
அந்த நாட்டிலுள்ள , ஒரு சிற்றூரில் அட்டகோணலுடன் விகாரமான சிறுவன் இருந்தான். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அவனை உன் தந்தை யாரெனக்கேலிபேச, வீட்டுக்கு வந்தவன் அன்னையிடம், “என் தந்தை எங்கே?” எனக் கேட்டான். “மகனே! உன் தந்தையை அரசன் சிறை வைத்துள்ளான்” என முழுக் கதையையும் கூற,
“அம்மா! நான் போய் அப்பாவை மீட்டு வருகிறேன்” எனத் தாய் தடுத்ததையும் மீறிக் கிளம்பி அரசவை வந்தான். அவன் உருவையும், வயதையும் கண்டு எல்லோரும் எள்ளி நகையாடினார்கள்.
எல்லோரும் நகைத்ததைக் கண்ட சிறுவன் அரசனை நோக்கி, “ஏன் சிரித்தீர்கள்? என் உருவைக் கண்டா? அல்லது சிறுவனா நமக்கு உபதேசம் செய்யப் போகிறான்? என்று என் வயதைக் கண்டா?” என்று கேட்டான்.
ஒருவரும் பதில் பேசவில்லை.
பின்னர் அரசனை நோக்கி, ''அரசே! ஏன் நகைத்தீர்? குயவனைப் பார்த்து நகைத்தீரா? அல்லது பாண்டத்தைப் பார்த்து நகைத்தீரா? என வினவினான். அரசனுக்குக் குயவன் என்றால் யார்? பாண்டம் என்றால் எது? எனப் புரியவில்லை.
சிந்தை மருண்ட மன்னனோ, உடனே சிறுவனை நோக்கி,
“எனக்கு ஞான உபதேசம் செய்வித்து அருளல் வேண்டும்; தங்களின் சித்தம் என்னவோ அதுபோல் நான் நடக்கிறேன்” எனக் கேட்டுக் கொண்டான்.
அதற்கு, சிறியவன், “அரசே! நீ உனக்குச் சொந்தமாக எண்ணியிருப்பதை எனக்குத் தானம் செய்; பின்னர் உபதேசிக்கிறேன்” என்றான்.
அரசன்: கழுத்தில் கிடந்த விலையுயர்ந்த மணிமாலையயும் என் ஆபரணங்களையும் தந்துவிட்டேன் என்றான்.
சிறுவன்: “இவையெல்லாம் உன் பிள்ளைகளுக்குறியது. உனக்கல்ல. எனவே வேண்டாம் .”
அரசன் – “இந்த நாட்டையே தருகிறேன்.”
சிறுவன் – “இந்த நாடு மக்களுக்குச் சொந்தம். இதுவும் வேண்டாம். உனக்கு உரிய, சொந்தமான பொருளை உணர்ந்து கொடு.”
அரசன் – “என் உடல் எனக்குத்தான் சொந்தம். அதைத் தருகிறேன்.”
சிறுவன் – “உன் உயிர் பிரிந்ததும், அது மண்ணுக்குச் சொந்தம். நீ தூங்கும்போது, உன் உடலின்மேல் ஒரு பாம்பு ஊர்ந்தாலும் உனக்குத் தெரிவதில்லையே? அப்படி இருக்க உனக்கு அது எப்படிச் சொந்தம்?”
இப்படியே ஒவ்வொன்றையும் சிறுவன் மறுத்துச் சொல்ல அரசனுக்கு ஒன்றும் விளங்க வில்லை. நீங்களே சொல்லிவிடுங்கள். தந்து விடுகிறேன் என்றான்.
“உன் மனம்தான் உனக்குச் சொந்தம். எல்லோர் முன்னிலையிலும் தானம் கொடு” என்றான் சிறுவன். அப்படியே தான் சம்பிரதாயங்கள் முடிவடைய சிறுவன் வெளியில் புறப்பட்டான். அரசன் சிறுவனை நோக்கி, “குருவே! உபதேசம் செய்யாமல் செல்லுகிறீர்களே!” என வினவ, அச் சிறுவன்,”அரசே! உன் மனதை எனக்குத் தானம் செய்தது உண்மையில்லை. இன்னும் உன் மனம் உன்னிடமே இருக்கிறது. எப்படி நான் உபதேசிக்காமல் செல்வதை நீ எப்படி உணர்ந்து கேட்டாய்?” என்றான். அரசன் திடுக்கிட்டு வணங்கி, “குருவே! உங்களின் ஆணைப்படியே நடக்கிறேன். இனி என் வயம் ஏதுமில்லை” என்றான்.
“சிறைப்பிடித்தவர்களை விடுதலை செய்க” என்றான் சிறுவன். அப்படியே நடந்தது. பின்னர் சிறுவன் உபதேசித்தான்.
என் அன்பு வாசகர்களே,
நம் தேவன் நம்மிடத்தில் எதிர்பார்ப்பது நமது சொத்தோ, ஐசுவரியமோ, காணிக்கையோ அல்ல நம் மனது தான். ஏனெனில் மனம் மட்டும் தான் நமக்குரியது மற்றவையெல்லாம் நாம் வாழ்ந்து நம் தலைமுறை அனுபவிக்க விட்டுச்செல்ல வேண்டியவை.
To get daily story and prayer requests in whats app contact +917904957814
மனது இன்றைய நாட்களில் நாம் நடக்க வேண்டியது, வருங்காலத்தில் செய்ய வேண்டியது இன்னது என்று சிந்தித்து முழுவதும் நிறைந்து இருக்கிறது. பிள்ளைகளுக்கு நன்றாக படிக்க வேண்டும் என்றும், பெற்றோருக்கு பிள்ளைகளை நல்ல நிலையில் உயர்த்த வேண்டும் என்றும், தொழிலதிபர்களுக்கு தன் தொழிலை இன்னும் உயர்த்த வேண்டும் என்றும், தொழிலாளிகளுக்கு தாங்களும் தொழிலதிபர் ஆக வேண்டும் என்றும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் மனம் சிந்திக்கிறது.
இவ்வாறு பல்வேறு காரியங்களை மனம் உள்ளடக்கியுள்ளதால் தேவனை குறித்தோ, அவர் நமக்கு செய்த நன்மைகளை குறித்தோ யோசிக்க அந்த சின்ன மனதில் இடமில்லை. நமக்கு தேவை ஏற்படுமாயின் மாத்திரம் தேவனை குறித்து சிந்திக்கிறதே ஒழிய மற்றபடி தேவனுக்கும் மனிதனுடைய மனதிற்கும் தொலைவு மிக அதிகம். அதை தான் தாவீது இவ்வாறு கூறுகிறார்,
சங்கீதம் 38: 10
என் உள்ளம் குழம்பி அலைகிறது, என் பெலன் என்னை விட்டு விலகி, என் கண்களின் ஒளி முதலாய் இல்லாமற்போயிற்று.
நம் மனம் குழம்புவதால் நமது பெலன் குன்றி, கண்களும் ஒளி இல்லாமல் மாறிவிடுகிறது. எனவே குழப்பத்தோடு வாழாமல் நம் தேவனை மாத்திரம் சார்ந்து அவரிடம்நம் மனதை ஒப்படைக்கும் போது எவ்வித குழப்பங்களுமின்றி சுகமாய் வாழ்வோம்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!
ஓர் குட்டிக் கதை
==========
செல்வந்தன் குதிரை
==========
செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்த செல்வந்தன் ஒருவன் பல ஊர்களுக்கு வணிகம் செய்வதற்காகச் செல்ல வேண்டி இருந்தது. இதற்காக விலை உயர்ந்த குதிரை ஒன்றையும் அவன் வாங்கி வைத்திருந்தான். அந்தக் குதிரை காற்றை விட வேகமாக ஓடக் கூடியது. அந்தக் குதிரையின் வேகத்திற்கு இணையாக எந்தக் குதிரையாலும் ஓட முடியவில்லை.
அவனும் அந்தக் குதிரையின் அருமை தெரிந்து அதை நல்ல முறையில் கவனித்து வந்தான்.அந்த நகரத்தில் வாழ்ந்த அனைவருக்கும் அந்த குதிரையைப் பற்றியும் அதன் வேகத்தைப் பற்றியும் தெரிந்திருந்தது.
ஒரு முறை வணிக வேலையாக தொலைவிலிருந்த நகரத்துக்குக் குதிரையில் சென்ற அவன் தான் கொண்டு சென்ற பொருட்களை உடனுக்குடன் விற்று நிறைய பணம் சம்பாதித்தான். அந்தப் பணத்துடன் அந்த நகரத்தில் இருக்க விரும்பாத அவன் உடனே வீடு திரும்ப விரும்பினான்.
குதிரை சற்று கூட ஓய்வெடுக்க முடியாமல் களைத்துப் போயிருந்தது வணிகனும் உடனே திரும்ப வேண்டி வந்ததால், குதிரையை மெதுவாக ஓட்டிச் செல்வோம் என்று அந்தக் குதிரையின் மேல் அமர்ந்தான்.
காட்டு வழியாக குதிரையில் வந்து கொண்டிருந்த அவனை குதிரையோடு வழிப்பறித் திருடர்கள் சுற்றிச் சூழ்ந்து கொண்டார்கள்.
முதலாளியைக் காப்பாற்ற விரும்பிய அந்தக் குதிரை திருடர்களைக் காலால் உதைத்துத் தள்ளியபடி முன்னால் ஓடத் துவங்கியது. திருடர்களும் குதிரையைத் தாக்கத் துவங்கினார்கள். குதிரையின் உடலெங்கும் காயம் ஏற்பட்டது.
அந்தக் காயத்தைப் பொருட்படுத்தாத குதிரை தன் முதலாளியைக் காப்பாற்றும் நோக்கத்தில் வேகமாக ஓடத் துவங்கியது. திருடர்கள் வந்த குதிரையால் இந்தக் குதிரையின் வேகத்தைப் பிடிக்க முடியவில்லை.
குதிரை தன் முதலாளியை வீட்டில் கொண்டு வந்து சேர்த்ததுடன் வாயில் நுரை தள்ளியவாறு அப்படியே மயங்கி விழுந்தது. தன் உயிரையும் பொருளையும் காப்பாற்றித் தந்த அந்தக் குதிரையை நன்றியோடு பார்த்த முதலாளி வீட்டுக்குள் சென்றான்.
அங்கிருந்த பணியாட்கள் அந்தக் குதிரையின் மயக்கத்தைத்
தெளிவித்தார்கள். அதற்கு உணவு அளித்தார்கள். அதன் உடலெங்கும் ஏற்பட்ட காயம் ஆறப் பல நாட்கள் ஆகியது. அந்தக் குதிரை நலமடைந்து விட்டாலும் அதனால் முன் போல் வேகமாக ஓட முடியவில்லை. நொண்டியபடியே நடந்தது. பயனற்ற அந்தக் குதிரையைச் செல்வந்தன் கவனிக்கவில்லை. அதன் கண்களும் பார்வை இழக்கத் துவங்கின. அதன் நிலை பரிதாபமாக ஆனது.
பயனற்ற குதிரையால் தேவையற்ற செலவு வருவதாக எண்ணிய அந்த செல்வந்தன், அந்தக் குதிரையை வீட்டை விட்டு விரட்டும்படி பணியாட்களுக்குக் கட்டளையிட்டான்.
பணியாட்களும் அந்தக் குதிரையை வெளியே தள்ளி கதவைத் தாழிட்டார்கள். பசியால் துடித்த அது நகரம் முழுவதும் அலையத் துவங்கியது.
அந்நகரத்தில் யாருக்காவது ஏதேனும் குறை ஏற்பட்டால் ஊர் மத்தியில் அமைக்கப்பட்டிருந்த மணியை அடிப்பார்கள். உடனே அந்த ஊரின் முக்கியமான பெரியவர்கள் கூடி அவரின் குறையைத் தீர்த்து வைப்பார்கள். அது அந்த ஊரின் வழக்கமாக இருந்தது.
பசியுடன் வந்த குதிரை அந்த மணிக்காகக் கட்டப்பட்டிருந்த கயிற்றை வைக்கோல் என நினைத்துத் தின்பதற்காக அதைப் பிடித்து இழுத்தது. மணியோசை கேட்டு வந்த அந்த நகரப் பெரியவர்கள் அந்தக் குதிரையைப் பார்த்தார்கள்.
எலும்பும் தோலுமாக இருந்த அந்தக் குதிரையைப் பார்த்த பெரியவர்கள் அது செல்வந்தனின் குதிரை என்பதையும் செல்வந்தனை திருடர்களிடமிருந்து காப்பாற்றிய குதிரை அது என்பதையும் அறிந்து செல்வந்தனை விசாரணைக்காக வரச் செய்தார்கள்.
அவனோ இந்தக் குதிரை பயனற்றது, அதனால் விரட்டி விட்டேன். என்மீது எந்தத் தவறுமில்லை என்று வாதிட்டான். இந்தக் குதிரை எவ்வளவு அருமையான குதிரை. எவ்வளவு வேகமாக ஓடியது. உன்னைத் திருடர்களிடமிருந்து காப்பாற்றியதால் தானே இது இப்படி ஆனது. உன் உயிரைக் காப்பாற்றிய இந்தக் குதிரையிடம் உமக்கு சிறிது கூட நன்றி இல்லையா?
இதற்கு நாள்தோறும் நல்ல உணவு அளித்துப் பாதுகாக்க வேண்டியது உன் பொறுப்பு. ஒவ்வொரு வாரமும் எங்களில் ஒருவர் வந்து இந்தக் குதிரையைப் பார்வையிடுவோம். இந்தக் குதிரைக்கு ஏதேனும் தவறு நேர்ந்தால் உமக்குக் கடுமையான தண்டனை கிடைக்கும் என்று தீர்ப்பு வழங்கினார்கள். தலை கவிழ்ந்த அந்த செல்வந்தன் அந்தக் குதிரையைத் தன் வீட்டிற்கு ஓட்டிச் சென்றான்
என் அன்பு வாசகர்களே,
நம் தேவனுடைய அன்பும் இவ்வாறு தான் இவ்வுலகில் மறக்கப்பட்டு போய்விட்டது. தன்னுடைய சொந்த ஜீவனையே நமக்காக தந்து நமது பாடுகளை ஏற்றுக்கொண்டு நாம் மரணிக்க வேண்டிய இடத்தில் தன் ஜீவனை கொடுத்து நம்மை விடுவித்தார். ஆனால் நாமோ நன்றியற்றவர்களாய் தேவன் நமக்கு செய்த எல்லாவற்றையும் மறந்து மனம்போன போக்கில் வாழ்கின்றோம்.
நமது பாவங்களுக்காய் தன்னுடைய சரீரத்தில் ஒரு அவயவமும் இல்லாத வண்ணம் எல்லாம் பிய்க்கப்பட்டது. நமது கைகள் செய்கிற பாவத்திற்காய் அவருடைய கைகளில் ஆணிகள் அடிக்கப்பட்டது, கால்களின் பாவத்திற்காய் கால்களில் ஆணிகள் அடிக்கப்பட்டது, நமது தீய எண்ணங்களுக்காய் அவருடைய நெஞ்சில் ஈட்டியால் குத்தப்பட்டது, வீணாண சிந்தனைகளுக்காய் முள்முடி சூட்டப்பட்டது என எல்லா அவயவங்களும் நமது அவயவங்களுக்காய் அடிக்கப்பட்டது.
Ithu Pola daily message venum endral contact whats app +917904957814
இக்கதையில் உள்ள குதிரையைப் போல அந்த எஜமானை காப்பாற்ற தன் அழகு, கம்பீரம், ஜீவன் என அனைத்தையும் கொடுத்தது. ஆனால் அந்த எஜமானே அந்த குதிரை அழகில்லை, பலன் இல்லை அது இல்லை இது இல்லை என காரணம் கூறி அந்த குதிரையை தன்னை விட்டு அப்புறப்படுத்தினான்.
அந்த நன்றியில்லாத எஜமானைப் போலத்தான் நாமும் நம் தேவனை நம்மைவிட்டு அப்புறப்படுத்தி விட்டு நம் மனப்போக்கில் வாழ்கின்றோம். நமக்காக எதாவது ஒரு காரியத்தில் நமக்கு உதவின ஒரு மனிதனுக்கு உண்மையாய் வாழ வேண்டும் என்று விரும்புகிற நாம் நமக்காக தன் உயிரையே துச்சமாய் எண்ணி நம்மை விடுவித்தவருக்கு எவ்வளவு உண்மையாய் வாழ்கிறோம் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.
இயேசு கிறிஸ்துவின் பாடுகளை தியானத்து, அவருடைய உயிர்த்தெழுதலை விசவாசிக்கிற நாம் அவரை விட்டுவிடாமல் அவரை சார்ந்தே வாழ்வோம் தேவ ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோம்.
ஏசாயா 53:2
இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார், அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை, அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!
ஓர் குட்டிக் கதை
===============
குழந்தை பெறுதல்
===============
கர்ப்பமாக இருந்த தாய், தன் மகளிடம் கேட்டாள்..."உனக்குத் தம்பி வேண்டுமா, அல்லது தங்கை வேண்டுமா?" என்று..கேட்ட போது
மகள், "தம்பி வேண்டும்" என்றாள். "யாரைப் போல் தம்பி இருக்க வேண்டும்?" என்று தாய் கேட்க, "ராவணனைப் போல் இருக்க வேண்டும்" என்றாள் மகள்.
திடுக்கிட்ட தாய், "உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா என்ன? ராமனைப் போல் ஒரு சகோதரன் வேண்டும் என்று சொல்லாமல், ராவணனைப் போல் வேண்டும் என்கிறாயே!" என்றாள்.
"அம்மா! நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? உடன் பிறந்த சகோதரி அவமானப்பட்டாள் என்பதற்காக, ராவணன் தன் அரியணை, ராஜ்ஜியம், உயிர் அனைத்தையும் இழந்தானே! தன் எதிரியின் மனைவியைச் சிறை பிடித்த போதிலும், அவளை ஒரு போதும் தீண்டவில்லையே!
ஆனால் ராமன், யாரோ ஒருவன் சொன்னான் என்பதற்காக, கர்ப்பவதியாக இருந்த தன் மனைவியை ஒதுக்கி வைத்தானே! அவளை தீக்குளித்துத் தன் புனிதத்தை நிரூபிக்கச் செய்தானே!
உனக்கு வேண்டுமானால் ராமனைப் போல் மகன் பிறக்கட்டும். ஆனால் எனக்கு ராவணன் போன்ற சகோதரன் தான் வேண்டும்" என்றாள் மகள்.
தாயால் பதில் கூற முடியவில்லை. அதிர்ந்து போனாள்.
இக்கதை ஒரு விவாதத்தைத் துவக்கலாம். ஆனால் கதையின் உட்பொருளைக் கூர்ந்து நோக்கினால்,
ஒரு உண்மை புலப்படும்.இவ்வுலகில் நல்லவர், கெட்டவர் என்பது நாம் நம் தனிப்பட்ட அனுமானங்களால் முடிவு செய்வதே.
கேளிக்கைகளில் திளைப்பவன் என்பதால்,
ஒருவன் கெட்டவன் என்றில்லை.
கோவிலுக்குச் செல்பவன் என்பதால்,
ஒருவன் நல்லவனும் இல்லை.
கோவிலுக்கு வெளியே இருக்கும் ஏழையும் சரி, கோவிலுக்கு உள்ளே இருக்கும் பணக்காரனும் சரி - கேட்பதென்னவோ பிச்சை தான்.
என் அன்புக்குாியவா்களே,
நம் எண்ணங்கள் தேவனுக்கு முன் பாிசுத்தமாக இருத்தல் வேண்டும். பிறப்பதற்கு முன்பாக குழந்தையை பற்றியும், அதன் குணங்களைப் பற்றியும் யாராவது சொல்லமுடியுமா என்று கேட்டால் எந்த மனுஷனாலும் முடியாது. ஆனால் தேவன் ஒருவரால் மட்டுமே சொல்ல முடியும் என்று உறுதியாக செல்கிறேன்.
இதற்கு அநேக உதாரணங்களை பைபிளிலிருந்து சொல்லலாம்... முக்கியமான சிலபேரை மட்டும் செல்கிறேன்.
உதாரணமாக ..
1. இஸ்மவேல்.. பிறப்பதற்கு முன்பாகவே அவன் போ் முதல் அவன் குணங்களையெல்லாம் கூட ஆகாாிடம் தேவன் சொல்லிவிட்டாா்.
(ஆதியாகமம் 16:10-12)
2. ஏசா, யாக்கோபு இந்த இரண்டுபோ் இரட்டை குழந்தைகளாக பிறப்பாா்கள். என்பதைக் குறித்தும், அவர்கள் குணங்களைப் பற்றியும் அவர் எதிர்கால வாழ்வைப் பற்றியும் தேவன் ரெபேக்காவுக்கு வெளிப்படுத்திவிட்டாா்.
3. (ரோமா் 9:10-13)
3. சிம்சோன்..
4. மலடியான மனோவாவின் மனைவிக்கும், அவனுக்கும் தாிசனமாகி அவனை வளர்க்கும் விதம், நடத்தும் விதம் அனைத்தையும் சொல்லி குழந்தையை தந்தாா்.
5. (நியாயதிபதிகள்13:2-22)
4. எரேமியா.. தேவன் தாயின் வயிற்றிலிருந்து போது அவனை பாிசுத்தமாக்கி தீா்க்கதாிசியாக கட்டளையிட்டாா். (எரேமியா 1:5)
5் யோவான் ஸ்நானகன் ...
பிறப்பதற்கு முன்பாகவே யோவான் என்ற போ் சொல்லப்பட்ட து. அவனது குணங்கள் அவனது ஊழியம் ஆகியவை தீர்க்கத் தரிசனமாக சொல்லப்பட்டதெல்லாம் நிறைவேறியது.
(லூக்கா 1:5 -17)
குழந்தை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் அதைப் பெற்றெடுக்கும் தாயும் தகப்பனும் நல்ல குணங்களையுடையவா்களாக இருக்கவேண்டும்.
தேவன் அவா்களது குணங்களைப் பார்த்து அவர்கள் ஜீன் DNA,RNA, குரோம்சோம்கள் ஆகியவைகளைக் கொண்டு குழந்தைக்கு நிறத்தையும்,குணத்தையும்,சரீர வடிவத்தையும் கொடுக்கிறாா்.
எனவே நீங்கள் பிள்ளை பெறுவது சுலபம். ஆனால் நல்ல குணங்களையும், குழந்தையின் எதிா்காலத்தையும் வடிவமைக்கிற தேவனுக்கு பயந்த புருஷனாயிருக்க வேண்டும். கெட்ட பழக்க வழக்கங்களை விட்டிருக்க வேண்டும். கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும். ஊதாாிதனமாக செலவு செய்யாமல் பணத்தை சேமிக்கிறவா்களாக இருக்க வேண்டும்.
மனைவியைக் குறித்து சுகபிரசவத்திற்காக வேதம் கீழ்கண்டவாறு சொல்கிறது ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள். உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ் செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை. அவள் அமைதலாயிருக்கவேண்டும்.
என்னத்தினாலெனில், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.
To get daily story and Prayer Requests in whats app contact +917904957814
அப்படியிருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால், பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள்
1 தீமோத்தேயு 2:11-15
அடக்கமும், அமைதலும், உள்ளவா்களாயும், தெளிந்த புத்தியோடுள்ள விசுவாசம், அன்பு, பாிசுத்தம் ஆகியவைகளில் நிலைத்திருக்கும் போது வலியில்லாத சுகமான பிரசவம் உண்டாகும்.
என் அன்புக்குாியவா்களே,
குழந்தை பிறப்பு என்பது முக்கியமானது. குழந்தையின் வாழ்க்கை, எதிர்காலம் ஆகியவைகளை கருத்தில் கொண்டு கடவுளுக்கு பயந்த வாழ்க்கை வாழ்ந்து உங்கள் குடும்பத்தை கட்டுங்கள்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் !!!
Thanks for using my website. Post your comments on this