=============
வேதாகம ஊழியர்! (பகுதி 1)
==============
'ஊழியக்காரன்'* (Servant)
*1. One devoted to a cause*
ஒரு பெரும் நோக்கத்திற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவன்.
*2. A person doing domestic duties for another*
அ) ஒருவருடைய வீட்டில் பிணைப்பட்ட வேலையை செய்கிறவன். ஆ) வேலைக்காரன் இ) தன் தாய்நாட்டுக்குரிய கடமைகளைச் செய்கிறவன்.
1️⃣ *ஊழியக்காரன் - ஒரு பெரும் நோக்கத்திற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவன்!*
இயேசுவின் பின்னே செல்லவும் மனுஷரைப் பிடிக்கவும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவன்! (மத்.4:18-22; இ.வ - மத்.9:9; யோவான் 1:37,40-51)
இயேசுவோடுகூட இருக்கவும், பிரசங்கம்பண்ணும்படியாகச் செல்லவும். வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தவும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவன்! (மாற்கு 3:13-15)
உள்ளூர் தொடங்கி உலகமெங்கும் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு சாட்சியாயிருக்கத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவன்! (அப்.1:8; 2:32,33; 3:14,15; 4:33)
பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவன்! (எபே.4:11-15)
புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் சொந்த ஜனங்களுக்கும் இயேசுவின் நாமத்தை அறிவிக்கிறதற்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டவன்! (அப்.9:15; இ.வ - மாற்கு 16:15)
சுவிசேஷத்தின் இரகசியத்த வெளிப்படுத்தும் ஊழியத்திற்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டவன்! (எபே.4:2-11; கொலோ.1:14-23)
தன் சுயஜனத்தாரும் அந்நிய ஜனத்தாரும்
ஆண்டவரைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்ககொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டுத் தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, அவர்களிடத்திற்கு அனுப்பப்பட தன்னை அர்ப்பணித்துக்கொண்டவன்! (அப்.26:17,18)
சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, இயேசுகிறிஸ்து தனக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவன்! (மத்.28:19,20)
இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவும் பாடுபட தன்னை அர்ப்பணித்துக்கொண்டவன்! (அப்.9:16. இ.வ - அப்.5:40,41; 1கொரி.4:9-13; 2கொரி.4:8-8; 6:3-10; 11:23-30)
*குறிப்பு:*
மேற்காணும் பெரும் நோக்கங்களுக்காக தன்னை உண்மையாய் அர்ப்பணித்துக்கொண்டவரே, வேத அடிப்படையிலான ஊழியராக இருக்கமுடியும்!!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920
===============
வேதாகம ஊழியர்! (பகுதி 2)
================
அ) ஊழியக்காரன் - வேறொருவருடைய வீட்டில் பிணைப்பட்ட வேலையை செய்கிறவன்!*
தேவனுடைய வீடு நிறையும்படி ஜனங்களைக் கூட்டிக்கொண்டு வருகிறவர்..... (லூக்கா 14:16-23; 1கொரி.9:16-23)
தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட அவரது சபையை தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிக்கிற
மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்களுக்கு எச்சரிக்கையாய் இருந்து மந்தையை மேய்க்கிறவர்..... (அப்.20:28-30)
தங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்கிறவர்..... (1பேதுரு 5:2,3)
தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிற தேவஜனங்களுக்கு தேவனுடைய உடன்வேலையாட்களாயிருக்கிறவர்..... (1கொரி.3:5-9; எபே.2:19)
ஜீவனுள்ள தேவனுடைய சபை சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கப் பிரயாசப்படுகிறவர்.... (1தீமோ.3:15)
இவரே வேத அடிப்படையிலான ஊழியக்காரராக இருக்கிறார்!!
குறிப்பு:
ஊழியக்காரர் தேவனுடைய வீட்டின் (சபையின்) உரிமையாளர் அல்ல, தேவனுடைய வீடாகிய சபையில் வேலைசெய்ய தேவனிடம் பிணைபட்டிருக்கிற ஒரு வேலையாள் என்பதை தேவஊழியரும் தேவனுடைய வீட்டாரும் அறியவேண்டியது அவசியம்.
இதை அறிந்துகொள்ளாத அநேக ஊழியர்கள் தங்களை தேடனுடைய வீட்டின் (சபையின்) உரிமையாளராக நினைத்துக்கொண்டு, தேவனுடைய வீட்டாரை தங்கள் வீட்டில் வேலைசெய்ய பிணைப்பட்டிருக்கிற அடிமைகளைப்போல நடத்துகிறதைக் காணமுடிகிறது!!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
===============
வேதாகம ஊழியர்! (பகுதி 3)
================
ஆ) ஊழியக்காரன் - வேலைக்காரன்
ஊழியக்காரர் தன் எஜமான் இயேசுவுக்கு கீழ்ப்பட்டவர். (மத்.10:24)
எஜமானைப்போல இராமல், மற்றவர்க்கு பணிவிடைக்காரராகவும், ஊழியக்காரராகவும் இருக்கவேண்டியவர். (மத்.10:25; 20:20-27)
எஜமான் தனக்கு கொடுத்துள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, தனுக்கு நியமித்துள்ள வேலையை விழிப்புடன் செய்கிறவர். (மாற்கு 13:34; 3:13-15; 16:15)
வேலைக்காரராக இயேசுவின் மாதிரி!
தம்மை அனுப்பினவருடைய சித்தத்தின் படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே அவருடைய போஜனமாயிருந்தது. (யோவான் 4:34)
பிதாவுக்குப் பிரியமானவைகளையே அவர் எப்பொழுதும் செய்தார். (யோவான் 8:29)
பிதாவானவர் செய்யக் குமாரன் கண்டதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யவில்லை: அவர் எவைகளைச் செய்தாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்தார். (யோவான் 5:19)
அவருடைய உபதேசம் அவருடையதாயிராமல், அவரை அனுப்பினவருடையதாயிருந்தது. (யோவான் 7:16)
அவர் சுயமாய்ப் பேசி தன் சுயமகிமையைத் தேடாமல், தம்மை அனுப்பினவரின் மகிமையைத் தேடினார். (யோவான் 7:18)
*வேலைக்காரராக சீஷர்கள்!*
தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிற சபையாருக்கு, தேவனுடைய உடன்வேலையாட்களாயிருந்தார்கள். (1கொரி.3:9-13; எபே.2:19-22; 1பேதுரு 2:4,5)
கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கும் வேலையை செய்தார்கள். (2கொரி.10:13-15)
கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் ஈடுபடுகிறவர்களுக்கு உடன்வேலையாட்களாய் இருந்தார்கள். (1தெசலோ.3:2,5)
பவுல் நட்டார், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினார், தேவன் விளையச்செய்தார். (1கொரி.3:6)
கூலிக்கு பாத்திரவான்களாகிய வேலைக்காரர்!
வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான். (மத்.10:10; 20:1,2; லூக்கா 10:4-11; 1தீமோ.5:17,18)
நடுகிறவனும் நீர்ப்பாய்ச்சுகிறவனும் தன்தன் வேலைக்குத் தக்கதாய்க் கூலியைப்பெறுவான். (1கொரி3:8)
அஸ்திபாரமாகிய கிறிஸ்துவின்மேல் ஒருவன் கட்டினது (சபை) (சோதனை காலத்தில்) நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான். (1கொரி.3:11-14)
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920
===============
வேதாகம ஊழியர்! (பகுதி 4)
=================
ஊழியக்காரன் - தன் தாய்நாட்டுக்குரியக் கடமைகளை செய்கிறவன்!
ஊழியக்காரர்கள் தங்கள் தாய்நாடாகிய பரலோகத்திற்குரிய வேலையை செய்கிறார்கள்.
இவர்களில் சிலர்
பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொள்கிறார்கள். (மத்.19:12)
அண்ணகர் மற்றும் அண்ணகரல்லாத ஊழியர்கள் அனைவரும் பரலோகத்திலிருக்கிற பிதாவின் சித்தத்தின்படி செய்கிறார்கள். (மத்.7:21)
பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி அருளப்பட்டிருக்கிறார்கள். (மத்.13:11)
தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்துக் கொடுக்கிற வீட்டெஜமானைப்போல,
பரலோகராஜ்யத்துக்கடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டுத் தேறினவர்களாய் இருக்கிறார்கள். (மத்.13:52)
பூலோகத்திலே தாங்கள் கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கவும், பூலோகத்திலே தாங்கள் கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கவும் தக்கதாக, ஆண்டவரால் பரலோகராஜ்யத்தின் திறவுகோல்கள் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். (மத்.16:19)
இவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்க தேவகுமாரனால் அனுப்பப்பட்டிருக்கிறார்கள். (லூக்கா 9:59,60)
பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கிறார்கள். (மத்.10:7)
பிணியாளிகளைச் சொஸ்தமாக்கி: "தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறது" என்று அவர்களுக்குச் சொல்லுகிறார்கள். (லூக்கா 10:1,8,9)
தேவனுடைய ராஜ்யத்துக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்துக்கும் ஏற்றவைகளைக்குறித்து, பிரசங்கித்து, ஜனங்களை விசுவாசத்திற்குள் நடத்துகிறார்கள். (அப்.8:12)
சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, "நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும் என்று சொல்லுகிறார்கள். (அப்.14:22)
கடமையாற்றுகிறவர்களுக்குரிய பரிசுகள்!
கிரியைக்குத்தக்கப் பலன். (வெளி.22:12; 1கொரி.9:17,18; 2தீமோ.2:3-6)
தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசம். (அப்.14:22)
பிதாவின் வீட்டில் வாசஸ்தலம். (யோவான் 14:2,3)
பரம அழைப்பின் பந்தயப்பொருள். (பிலி.3:12-14; 1கொரி.9:24-27)
நீதியின் கிரீடம். (2தீமோ.4:7,8)
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920
Thanks for using my website. Post your comments on this