Type Here to Get Search Results !

முட்டாள்! | ஏன் மவுனம்? | எது? எது? | கிறிஸ்தவ கதைகள் தமிழில் | christian story in tamil | Jesus Sam

ஓர் குட்டிக் கதை
==============
கர்த்தருடைய பெரிதான நாமம் மகிமைப்படுவதாக..
அன்பு நண்பா்கள் அனைவருக்கும்,                         
அன்புடன் இனிய காலை வணக்கம் !! இந்த நாள் உங்களுக்கு நல்ல நாளாய் அமைவதாக!!!                                       

சில தினங்களுக்கு பிறகு சிந்திக்க வைக்கும் குட்டிக்கதையுடன் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.!!!

முட்டாள்!
ஓர் ஊரில் முட்டாள் ஒருவன் இருந்தான். அந்த ஊர் மக்கள்எல்லாருக்கும் விளையாட்டுப் பொருளே அவன்தான். அவனிடம் இரண்டு துணிகளைக் கொடுத்துப் போட்டு வரச் சொன்னால், காலில் அணிய வேண்டிய துணியைச் சட்டை போல் மேலே அணிந்து இருப்பான். மேலே அணிய வேண்டிய துணியை எப்படியாவது காலுக்குள் நுழைத்துத் அணிந்து வருவான். அந்தக் கோலத்தில் அவனைப் பார்ப்வர்கள் யாராக இருந்தாலும் சிரித்துத் விடுவர்.

அந்த ஊருக்கு விருந்தினர் யார் வந்தாலும் முதலில் அவனை வரவழைத்துத் , "இவனைப் போன்ற முட்டாள் உங்கள் ஊரில் உண்டா?" என்று கேட்பர்
ஒரு வீட்டிற்கு வெளியூரிலிருந்து நண்பர் ஒருவர் வந்தார். விருந்து முடிந்தது.

"இந்த ஊரில் முட்டாள் ஒருவன் இருக்கிறான். அவனை வர வழைத்தால், நம் பொழுது இனிதாகப் போகும்," என்று சொன்ன வீட்டுக்காரன்... அவனை வரவழைக்க ஆள் அனுப்பினான்.

சிறிது நேரத்திற்குள் அந்த முட்டாள் அங்கு வந்து சேர்ந்தான். வீட்டுக்காரன் அவனிடம் தன் இரண்டு கைகளையும் நீட்டி, "நன்றாகப் பார்... ஒரு கையில் ஐந்து ரூபாய் நாணயம் உள்ளது. இன்னொன்றில், ஒரு ரூபாய் நாணயம் உள்ளது. உனக்கு எது
தேவையோ எடுத்துக் கொள்," என்றான்.
முட்டாள் இரண்டு கைகளையும் மாறி மாறிப் பார்த்தான்.

"ஆ! ஒரு ரூபாய் பெரிய காசு!" என்று சொல்லிக் கொண்டே ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்துத்க் கொண்டான். "இவனைப் போன்ற முட்டாளை நீங்கள் எங்கேயாவது பார்த்ததுண்டா? ஒரு ரூபாயை விட ஐந்து ரூபாய் எவ்வளவு மதிப்பு மிக்கது. அது தெரியாமல் இவ்வளவு கூத்தாடுகின்றானே?" என்று சொன்னான் வீட்டுக்காரன்.

நண்பருக்கும், முட்டாளுடன், விளையாட வேண்டும் போல இருந்தது. தன் இரண்டு கைகளையும் அவன் முன் நீட்டி , "இதில், ஒன்றில் வைர மோதிரம் உள்ளது. இன்னொன்றில் வெறும் ஐம்பது காசு உள்ளது.
ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்," என்றார் அவர்.

முட்டாள் இரண்டு கைகளையும் மாறி மாறிப் பார்த்து சிந்தித்தான். ஐம்பது காசை த்தான் கடைசியாக எடுத்தான். "இந்த முட்டாளோடு நீங்கள் பேசிக் கொண்டு இருங்கள். எனக்கு வேலை இருக்கிறது," என்று உள்ளே சென்றார் வீட்டுக்காரர்.

To Get Daily Story Contact +918148663456

"ஏன் முட்டாள்தனமாக நடக்கிறாய்? வைர மோதிரம் என்ன மதிப்புடையது? அதை விட்டுவிட்டு வெறும் ஐம்பது காசை எடுத்துக் கொண்டாயே... இனிமேலாவது சிந்தித்து, அறிவுள்ளவனாக நடந்து கொள்," என்று அறிவுரை சொன்னார்.

"ஐயா, நான் மிகக் குறைந்த மதிப்புடைய நாணயங்களையே எடுக்கிறேன். எல்லாரும் என்னை முட்டாள் என்று நினைத்து என்னிடம் நாணயங்கள் உள்ள கைகளை நீட்டுக்கின்றனர். இதிலேயே எனக்கு ஒரு நாளைக்கு நான்கைந்து ரூபாய் கிடைக்கிறது. நீங்கள் சொல்வது போல ஒரே ஒருநாள் விலை குறைவான நாணயத்தை எடுக்காமல், அதிக மதிப்புடைய
நாணயத்தை நான் எடுத்துக் கொண்டால், அதன்பிறகு யாரும் என்னிடம் கையையே நீட்டமாட்டார்கள்," என்றான் முட்டாள்.
இதைக் கேட்ட வெளியூர்கார் அசந்து போய்விட்டார்.

என் அன்பு வாசகர்களே,
இன்றைய கதையில் வருவது போன்று தான் அநேகர் அநேகரை குறித்து நினைத்து தங்களை தாங்களே ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவனுக்கு ஒன்றும் தெரியாது, சரியான ஏமாளி என யாரை மட்டம்தட்டிக்கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தங்கள் வேலையில் அல்லது செயலில் ஜாக்கிரதையுடனும் முன்னேறுகிறார்கள்.

வேதாகமத்தில் யோசேப்பு என்ற சிறுவன் தான் கண்ட சொப்பனத்தை தன் சகோதரரிடமும் பெற்றோரிடமும் சொன்னபோது அவனை மட்டந்தட்டவும், வெறுக்கவும் ஆரம்பித்தனர். ஆயினும் தான் கண்ட சொப்பனத்தை ஆதாரமாய் கொண்டு ஜாக்கிரதையுடன் செயல்பட்டான்.

அதன் முகாந்திரம் தான் கண்ட சொப்பனத்தை நனவாக்கி எல்லோரும் ஆச்சரியப்படும் விதம் மிக உயர்ந்த பதவியை அடைந்தான். 

ஒருவேளை நீங்களும் கேலி கிண்டலுக்கு உள்ளாகி மனம் சோர்ந்து போய் காணப்படுகிறீர்களா??? வேதம் சொல்கிறது,

7 கர்த்தர் யோசுவாவை நோக்கி: நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலரெல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்கு முன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்.
யோசுவா 3:7*

ஆம் யோசுவாவை மேன்மைபடுத்தின தேவன் இன்று உங்களையும் மேன்மைபடுத்த வல்லவராய் இருக்கிறார்‌. எனவே எதைக் குறித்தும் கவலைப்படாமல் உங்களுக்கான கடைமையை திறம்பட செய்யுங்கள் மேன்மையானதை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்‌.

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!!


============
ஓர் குட்டிக் கதை
ஏன் மவுனம்?
=============
உலகில் இருக்கக் கூடிய அத்தனைப் பழங்களும் ஒருமுறை ஒன்று சேர்ந்து ஒரு மாநாட்டைக் கூட்டின. தலைமையேற்றுப் பேசிய பழம், உலகில் உள்ள பழங்களில் எந்தப் பழம் அதிகச் சுவையுடையது; சிறப்புடையது? என்ற கேள்வியுடன் தன் தலைமை உரையை முடித்துத் க் கொண்டது.

பழங்கள் ஒன்றுக் கொன்று அடித்தொண்டையில் குசுகுசுவெனப் பேசின. ஆப்பிள் பழம், செர்ரிப்பழம், அன்னாசிப் பழம், கொய்யாப்பழம், மாதுளம் பழம் எல்லாம் ஒவ்வொன்றும் தானே அதிகச் சுவை உடையது என்று கூறி மார்தட்டின. 

ஆனால், திராட்சைசைப் பழம் மட்டும் எதுவும் பேசாமல் அமைதியுடன் இருந்தது. எல்லாப் பழங்களும் திராட்சைப் பழத்தை வியப்புடன் பார்த்த வண்ணம் இருந்தன. திராட்சைப் பழம் எதையாவது பேசும் என்று எதிர்பார்த்தன. ஆனால், அதுவோ மவுனம் காட்டியது.

இதனால் மற்ற பழங்கள் திராட்சை பழத்தை பார்த்து இழிவாக சிரித்தன. அப்போது பலாப்பழம் ஒன்று உருண்டு வந்தது. அது திராட்சைப் பழத்தைப் பார்த்து அன்புடன் கேட்டது. ""திராட்சையே... நீ ஏன் மவுனமாக நிற்கிறாய்? எனக்குத் தெரியும். உலகில் உள்ள பழங்களிலேயே சிறப்புப் பெற்றவன், நன்மையைச் செய்பவன், நலம் அளிப்பவன், சுவை
நிரம்பியவன் நீதான் என்று! 

To Get Daily Story in what's app or Gmail contact +918148663456

ஆனால், அதையும் தாண்டிய ஒரு சிறப்புத் தகுதி உன்னிடம் உண்டு. அதை நீயே உன் வாயால் சொல்ல வேண்டும். அப்போது தான் மற்றப் பழங்களும் உன் தகுதி பற்றி அறிந்து கொள்ளும்,'' என்று கூறியது.‌திராட்சைட் சைப் பழம் அமைதியாகக் கூறியது. ""அண்ணா, நீங்கள் எல்லாருமே தனித்தனியாகவே வருகிறீர்கர்ள். தனித்தனியாகவே விற்பனை செய்யப்படுகிறீர்கள். 

ஆனால், நாங்களோ, ஒரு கூட்டமாக, கொத்தாக
வளருகிறோம். நாங்கள் ஒருவர் வளர்வதற்கு மற்றவர்கர்ளுக்கு இடம் தருகிறோம். விட்டுக் கொடுத்துத் வாழ்கிறோம். விற்பனைக்குப் போகும் போதும் கொத்தாகவே செல்கிறோம். தனியாக நாங்கள் விலை போவதில்லை.

""எங்களைச் சாறாக்கிக் குடிக்கும் போது கொத்துக் கொத்தாகவே அழிந்து போகிறோம். வாழ்விலும், வளர்ச்சியிலும், மரணத்திலும் நாங்கள் இணைபிரியாமல் இருக்கிறோம். அதனால்தான் நாங்கள் சிறந்தவர்கள் என்ற அங்கீகாரத்தை
மனிதர்கர்ளிடமிருந்து அடைந்திருக்கிறோம். வேறு காரணமில்லை! '' என்றது. அதைக்கேட்ட மற்ற பழங்கள் வெட்கத்தால் தலைகுனிந்து நின்றன.

என் அன்பு வாசகர்களே,
இன்றைய கதையின் சாராம்சம் என்ன என்பது இந்த கதையை படித்தவுடன் உங்களுக்கே புரிந்திருக்கும். ஆம் ஒற்றுமை தான். கணவன்-மனைவி, பெற்றோர்-பிள்ளைகள், போதகர்-விசுவாசிகள், முதலாளி-தொழிலாளி என எல்லா பந்தங்களுக்கும் ஒற்றுமை இன்றியமையாதது. இதில் ஒற்றுமை இல்லா பந்தம் ஒருபோதும் நிலைக்காது.

அல்லாமலும் கிறிஸ்தவத்திற்கும், திராட்சைக்கும் ஒரு ஐக்கியம் உண்டு. அதனால் தான் நாம் இராபோஜனம் ஆசரிக்கிற போது திராட்சை ரசத்தை அவருடைய இரத்தமாக பாவித்து பருகுகிறோம். மேலும் இயேசு கிறிஸ்துவும் தம்முடைய ஜனங்களை திராட்சை செடிக்குத்தான் ஒப்பிட்டு விளக்குகிறார்.

*5 நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. 
யோவான் 15:5*

மற்ற பழங்கள் ஒற்றை ஒற்றையாக தான் கனிகொடுக்கின்றன. ஆனால் திராட்சையோ ஒரே கொடியில் பல கனிகளை கொடுக்கிறது. அதன் அர்த்தம் அவருடைய தயவால் அவரை ஏற்றுக்கொண்டிருக்கிற அனைவரும் பூத்து, காய்த்து, கனிகொடுத்து நிலைக்க வேண்டும் என்பதே. 

திராட்சைக்கொடி தானாக வளர்ந்து கனிகொடுக்க வேண்டிய காலத்தில் கனிகொடுக்க வேண்டும். ஆகவே கனிகொடுக்க வேண்டும் என்பதற்காக தேவையில்லாத காரியங்களை செய்ய முற்படும்போது அந்த கொடி மொத்தமாக அழிந்து விடும். எனவே நாமும் அன்றாடம் நாம் செய்ய வேண்டிய காரியங்களை மட்டும் செய்தாலே போதும் சந்தோஷத்தோடும் சமாதானத்தோடும் வாழ முடியும்.

எனவே தேவையற்ற காரியங்களை களைந்து அவரோடு ஐக்கியமாய் வாழ முற்படுவோம் ஆசீர்வாதத்தை சுதந்தரிப்போம்.

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!!!!


===========
ஓர் குட்டிக் கதை
எது...? எது...?
============
அரசர் கிருஷ்ண சந்திரர் அரியணையில் வீற்றிருந்தார். அப்போது நவாபின் தூதன் அங்கு வந்தான். அரசர் அவனை வரவேற்றார்.
அந்த தூதன் இரண்டு வாத்துக் குஞ்சுகளை அவர் முன் வைத்தான். அரசர் வாத்துக் குஞ்சுகளைக் கவனித்தார். இரண்டும் ஒரே நிறம்; ஒரே
அளவுடையதாக இருந்தது. அவற்றிற்குள் எந்த வேறுபாடும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒன்றும் புரியாமல் தூதனை பார்த்தார் அரசர்.

“அரசே! நவாப் அவர்கள் இந்த வாத்துக் குஞ்சுகளை அனுப்பி உள்ளார். இவற்றில் எது ஆண் வாத்து என்பதை தாங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
அப்படிக் கண்டுபிடித்ததற்கான காரணத்தையும் சொல்ல வேண்டும். அப்படிச் செய்தால், இந்த ஆண்டு நீங்கள் கப்பம் கட்ட வேண்டாம். செய்ய இயலாவிட்டால் உங்கள் சிற்றரசை எங்கள் நாட்டுடன் இணைத்துக் கொள்வோம்,'' என்றான் தூதன்.

அரசர் மீண்டும், அந்த வாத்துத் க் குஞ்சுகளை உற்றுக் கவனித்தார். கடினமான சோதனைதான் தனக்கு வைக்கப்பட்டுள்ளது என்பதைப்
புரிந்து கொண்டார். “இவற்றில் எது ஆண் வாத்துத் என்பதைக் கண்டுபிடிக்க முடியுமா?'' என்று அமைச்சர்களை பார்த்துக் கேட்டார். அமைச்சர்கள் எல்லாரும் அமைதியாக இருந்தனர்.

எப்படி கண்டுபிடிப்பது என்று கவலையில் ஆழ்ந்தார் அரசர். அங்கு வேலை செய்துக் கொண்டிருந்த கோபால் இதை கவனித்தான். அவன் அரசனிடம் சென்று, “அரசே! கவலைப்பட வேண்டாம்... எது
ஆண்வாத்துத் என்பதை நான் கண்டுபிடிக்கிறேன்!'' என்றான். “எப்படிக் கண்டுபிடிப்பாய்?'' என்று கேட்டார்.

“அரசே! அந்த இரண்டு வாத்துக் குஞ்சுகளையும் அரண்மனைக் குளத்திற்கு எடுத்துத் வரச் சொல்லுங்கள் தூதனை. நாம் அனைவரும்
அரண்மனை குளத்திற்கு செல்வோம்,'' என்றான். எல்லாரும் அரண்மனை குளத்தை அடைந்தனர். தூதனிடமிருந்து இரண்டு வாத்துக் குஞ்சுகளையும் வாங்கினான் கோபால். அவற்றை அரண்மனைக் குளத்தில் விட்டான். இரண்டும் மகிழ்ச்சியாக நீந்தத் தொடங்கின. 

அவற்றில் முன்னால் சென்ற வாத்தை சுட்டிக்காட்டி , “இதுதான் ஆண்வாத்துத் !'' என்றான். “எப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறாய்?'' என்றார் அரசர். “அரசே! முன்னால் செல்கிற வாத்து ஆண் வாத்து. பின்னால் செல்கிற வாத்து பெண் வாத்து . 

எப்போதும் ஆண் வலிமை மிகுந்ததாக இருக்கும். பெண் மென்மையானதாக இருக்கும். அதனால், முன்னால் நீந்திச் சென்றது ஆண்வாத்தாகத்தான் இருக்க வேண்டும்,'' என்றான்.

“கோபால்! உனக்கு எப்படி நன்றி சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை,'' என்ற அவர் அவனைக் கட்டித் தழுவிக் கொண்டார். அந்த வாத்துக் குஞ்சுகளை எடுத்துக் கொண்ட தூதன் அங்கிருந்து
ஏமாற்றத்துடன் புறப்பட்டான்.

என் அன்பு வாசகர்களே,
இன்றைய கதையின் சாராம்சம் நேற்றைய கதையை போன்று ஒற்றுமையை தான் பிரதிபலிக்கிறது. அரசனும் அரசவையில் வேலை செய்யும் அந்த நபரும் ஒற்றுமையாய் இருந்தபடியால் தான் கடினமான காரியம் இலகுவாய் முடிந்தது.

ஒருவேளை அரசன் தான் அரசன் என்ற கர்வத்தில் அந்த வேலைக்காரனின் உதவியை நிராகரித்திருந்தால் அந்த நாட்டையே பறிகொடுத்திருக்க நேர்ந்திருக்கும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்ததால் அந்த நாடே கப்பம் கட்டுவதிலிருந்து தப்பித்தது.

வேதாகமத்தில் கோலியாத்தை தாவீது கொன்றபோது இஸ்ரவேல் ஜனங்கள் சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று பாடி வாழ்த்தினபோது அதுவரை தாவீதை நேசித்த சவுல் அவனை பகைக்க ஆரம்பித்தான்.

To Get Daily Story Contact +917904957814

அதனால் தாவீது சவுலின் முகத்திற்கு மறைந்து வாழ்ந்துவந்தான். சவுலும் தாவீது சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்தது தான் ஒரு அரசன் என்பதையும் மறந்து, தன் நாட்டு மக்களை குறித்த சிந்தை அற்றவனாய் தாவீதை பின்தொடர்ந்தான்.

தான் எதிர்க்கொண்ட போர்களில் தோல்வியை தழுவி இறுதியில் தன் ஜீவனை போர்க்களத்தில் மாய்த்துக்கொண்டான். சிந்தித்துப் பாருங்கள் ஒருவேளை இருவரும் ஒருமித்து வாழ்ந்து, ஒருமித்து அரசாட்சி செய்திருந்தால் அநேக இராஜ்ஜியங்களை கட்டி எழுப்பியிருக்க கூடும். மாத்திரமல்ல இஸ்ரவேல் கோத்திரமும் பலுகி பெருகியிருக்கும்.

எனவே இதுவரை ஒற்றுமையாய் விட்டுக்கொடுத்து வாழாதவர்கள் அதற்கான பிராயசங்களை மேற்கொள்ளுங்கள், உங்களுக்கான இராஜ்ஜியத்தை தேவன் உங்களுக்காக எழுப்புவார்.

ஆமோஸ் 3:3
    இரண்டுபேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்துபோவார்களோ?

சங்கீதம் 34:3
    என்னோடேகூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக.

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.