===========
ஓர் குட்டிக் கதை
இயேசுவே துணை
============
இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். - மத். 28:20
அந்த ரயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது.. டிக்கெட் பரிசோதகரின் காலில் ஏதோ இடறியது.. குனிந்து அதை எடுத்தார்..
அது ஒரு பழைய மணி பர்ஸ்.. ஓரமெல்லாம் ஜீரணம் ஆகி, மெருகு குலைந்திருந்தது..
பர்ஸைத் திறந்தார்.. சில கசங்கிய நோட்டுகளும், சில்லறைகளும் இருந்தன.. அத்துடன் கடவுள் படம் ஒன்றும் இருந்தது..
பர்ஸைத் தலைக்கு மேலே பிடித்துக் காட்டிய பரிசோதகர், "இது யாருடையது?" என்று குரலை உயர்த்திக் கேட்டார்..
ஒரு முதியவர், "அது என்னுடையது" என்றார்.. பர்ஸின் நிலையையும், முதியவரின் வயதையும் கண்டு ஜோடிப் பொருத்தம் பார்த்தே பர்ஸைத் தந்திருக்கலாம்..
ஆனாலும் பரிசோதகர், "உம்முடையது தான் என்பதற்கு என்ன ஆதாரம்? "எனக் கேட்டார்..
"அதில் கடவுள் படம் இருக்கும்.."
"இதெல்லாம் ஒரு ஆதாரமா? யார் வேண்டுமானாலும் கடவுள் படம் வைத்திருக்கலாமே...?"
"ஐயா" என்று செருமியவாறு முதியவர் ஏதோ கதை சொல்வது போல் சொல்ல ஆரம்பித்தார்.. வண்டி வேகமெடுத்ததால் காற்று பெட்டியினுள் பரவ, இறுக்கம் விலகியது.. அனைவரும் அவரது கதையைக் கேட்க ஆர்வமாகினர்..
முதியவர் கூறினார் :
நான் படித்துக் கொண்டிருந்த போது என் அப்பா எனக்கு இந்தப் பர்ஸைக் கொடுத்தார்.. அப்பா அவ்வப்போது தரும் சில்லரைகளை இதில் சேர்க்க ஆரம்பித்தேன்..
வீட்டில் தேடிப் பிடித்து என் அப்பாவும், அம்மாவும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தைக் கண்டு பிடித்து அதில் வைத்தேன்..
நான் வாலிபனானேன்.. பள்ளித் தகவல்களுக்காக என்னைப் புகைப்படம் எடுத்தனர்..
ஆஹா! அரும்பு மீசையும், குறும்புச் சிரிப்புமாக இருந்த என்னை எனக்கே மிகவும் பிடித்தது.. அம்மா அப்பா படத்தை எடுத்து விட்டு என் படத்தை பர்ஸில் வைத்து, நொடிக்கு 100 தரம் பார்த்துக் கொண்டேன்..
சில வருடங்களில் திருமணமாயிற்று.. இப்போது மனைவியின் முகத்தை அடிக்கடி பார்க்க விரும்பினேன்.. பர்ஸில் மாற்றம். என் படம் இருந்த இடத்தில் என் அன்பு மனைவி.. அலுவலக வேலையின் இடையில் பர்ஸைத் திறந்து புகைப்படத்தைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது..
இதெல்லாம் சில காலம் தான்.. எங்கள் அன்பு மயமான வாழ்க்கையின் சாட்சியாக மகன் பிறந்தான்.. பர்ஸில் மறுபடியும் மாற்றம்!
மனைவியின் இடத்தை மகன் ஆக்கிரமித்துக் கொண்டான்... பலமுறை படத்தைப் பார்ப்பதும்,'என் மகன்' என்று மற்றவர்களுக்குக் காட்டுவதும்.. எனக்கு ஒரே பெருமை தான்..
வருடங்கள் ஓடின.. மனைவி காலமானாள்.. என் மகனுக்குத் தன் குடும்பத்தைக் கவனிக்கவே நேரம் போதவில்லை.. என்னை எப்படி கவனிப்பது?
என்னைத் தனிமை வாட்டியது.. கூட்டத்தில் தொலைந்து விட்ட குழந்தையாய்த் தவித்தேன் : தடுமாறினேன்.. அப்போது தான் இந்தப் படத்தை ஒரு கடையில் பார்த்தேன்.. அன்பே உருவான இயேசு கடவுளின் கண்கள் என் நெஞ்சை வருடின..
அவனது உதட்டின் முறுவல் என் உள்ளத்தில் நேசத்தையும், பாசத்தையும் நிறைத்தது..
சொன்னால் நம்புங்கள்,
என் கண்கள் அருவியாய் நீரைச் சொரிந்தன.. உடனே இயேசு நாதாின் படத்தை வாங்கி பர்ஸில் வைத்து, நெஞ்சோடு அணைத்துக் கொண்டேன்..
என் கவலையும் பறந்தது ; தனிமையும் மறைந்தது.. என்றென்றும் எவருக்கும் நிரந்தரமான துணையாக இருப்பவர் இயேசு கடவுள் மட்டுமே..
முதியவர் நிறுத்தினார்..
ஆனால், வண்டியில் இருந்த ஒவ்வொருவர் நெஞ்சிலும் இயேசுவின் அன்பின் முகம் தெரிய ஆரம்பித்தது.
பரிசோதகர் நெகிழ்ச்சியுடன் பர்ஸை முதியவரிடம் கொடுத்தார்.
To get daily message and prayer requests contact+917904957814
என் அன்புக்குாியவா்களே,
இவ்வளவு தாங்க மனுஷனின் வாழ்க்கை
இதுக்குள்ள தான் எத்தனை போட்டி,,பொறாமை யுமான அவமானங்களும்.....
தேவன்ஒருவரே என்றும் துணையானவா்இன்று
உங்களைப் பாா்த்து தேவன் சொல்கிறாா்..
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன், திகையாதே, நான் உன் தேவன்
நான் உன்னைப் பலப்படுத்தி உனக்கு சகாயம் பண்ணுவேன், என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். - ஏசா. 41:10
இந்த புதிய வாரத்தில் தைாியமாயிருங்கள். தேவன் உங்களோடிருக்கிறாா்.
உங்கள் பிள்ளைகளும், உங்கள் குடும்பத்தின ரும் உன்னுடன் கடைசிவரை இருப்பேன் என்ற உங்கள் துணையும் கூட மாித்தோ அல்லது பிாிந்தோப் போயிருக்கலாம்.
உங்கள் நண்பா்கள் கூட உங்களை அலட்சியப் படுத்தி உங்களை விட்டுப் போயிருக்கலாம்.
நம் தேவனும்,கா்த்தருமாய் இருக்கிற இயேசு கிறிஸ்து உங்களை ஒருபோதும் கைவிடவே மாட்டாா். உங்களோடு துணையாக இருக்கிறாா்.
இந்த புதிய வாரத்தில் புதிய குறிக்கோளுடனும் லட்சியத்தோடும் புதிய தாிசனத்தோடும் உங்கள்
வாழ்க்கை ஆரம்பியுங்கள். உங்கள் வாழ்க்கை அழகாகும்.
நீங்கள் ஆசீா்வதிக்கப்பட்டவர்கள் !!!
==============
ஓர் குட்டிக் கதை
யேகோவாயீரே
=============
ஒரு நாள் குருவை பார்க்க ஒருவன் சென்று இருந்தார்....அவர் பாதம் தொட்டு கும்பிட்டுவிட்டு வணங்கி நின்றான்....
அவனை மேலும் கீழுமாக பார்த்தவர்., ஏதோ எதிர்பார்ப்புடன் வந்திருக்கிறாய் போல என்று முகத்தை பார்த்து கேட்டார்.
அவன் மௌனமாக ஆமாம்.! என தலையாட்டிவிட்டு மெல்ல ஆரம்பித்தான்.
நான் நினைப்பதெல்லாம் நடக்கவேண்டும். இதற்கு என்ன வழி..? என்று ஒரு கேள்வியை கேட்டான்.
குரு புன்முறுவலாக சிரித்துக்கொண்டே.,
அவனை அருகில் அழைத்தார். மெல்ல அவன் தலையை கோதிவிட்டு., கன்னங்களை தட்டிக்கொடுக்க.....
அவனில் முணுக்கென கண்களில் எட்டிப்பார்த்த கண்ணீரை மெதுவாக துடைத்து விட்டு.,
நீ கலங்கக்கூடாது என்று ஆறுதல் படுத்தியவர்., நான் ஒரு கதை சொல்லப் போகிறேன்., பொறுமையாக கேள் என்று மெல்ல ஆரம்பித்தார்.
ஒரு ஊர்ல ஒரு இளவரசன் இருந்தான்.
ஒரு நாள் அவன் காட்டுக்கு வேட்டையாடப் போனான். வழியில் அவன் பரிவாரங்களை விட்டு வழி தவறி போய் விட்டான்.
அவர்களை தேடித் தேடி காட்டுக்குள் ரொம்ப தூரம் போய் விட்டான். ரொம்ப களைப்பு., பசி., தாகம்., கொஞ்சம் பயம் வேறு.
சோர்ந்து போய் ஒரு மரத்தடியில் உட்கர்ந்து விட்டான். அது ஒரு கற்பக மரம். நம் மனத்தில் நினைப்பதை எல்லாம் அப்படியே நிறைவேற்றி வைக்கும் அற்புத சக்தி கொண்டது. ஆனால் அது அந்த இளவரசனுக்குத் தெரியாது.
ரொம்ப தாகமா இருக்கிறதே. கொஞ்சம் தண்ணி கிடைத்தால் நல்லா இருக்குமே என்று நினைத்தான். சற்றே திரும்பி பார்த்தால்., அந்த மரத்தடியில் ஒரு சிறு குழி., அதில் குமிழியிட்டு நல்ல தண்ணீர் பொங்கி வந்து கொண்டு இருந்தது. தாகம் தீர குடித்தான்.
சற்று நேரத்தில் பசி வந்தது. ஏதாவது சாப்பிட கிடைத்தால் நல்லா இருக்குமே என்று நினைத்தான்., அந்த மரத்தில் இருந்து சுவையான சில பழங்கள் விழுந்தன. அவனுக்கிருந்த பசியிலும்., களைப்பிலும் என்ன ஏது என்று நினைக்க நேரமில்லை. அந்த பழங்களை உண்டு பசி ஆறினான்.
பிரயாணக் களைப்பு., உண்ட மயக்கம்., தூக்கம் கண்ணை சொக்கி கொண்டு வந்தது. அடடா இப்ப பஞ்சு மெத்தையோடு ஒரு கட்டில் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தான்., உடனே ஒரு கட்டில் வந்தது.
ஏறி படுத்தான். காலெல்லாம் வலிக்கிறது. பிடித்து விட ஒரு அழகான இளம் பெண் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தான்.... டங் என்று ஒரு பெண் தோன்றி அவன் காலை மெல்ல வருடி விட்டாள்.
அசந்து தூங்கினான்.
திடீரென்று விழித்துக் கொண்டான்.
என்னடா இது., நாம நினைக்கிறது எல்லாம் நடக்கிறதே., ஒரு வேளை இது ஏதாவது பிசாசோட வேலையா இருக்குமோ... அந்த பிசாசு இங்க வந்துட்டால்..? என்று நினைத்தான். டங் என்று ஒரு பெரிய பிசாசு வந்தது. கற்பக மரம் தான் நினைப்பது எல்லாம் கொடுக்குமே.
ஐயோ., இந்த பிசாசு நம்மை கடித்து தின்று விடுமோ..? என்று நினைத்தான்., அவன் நினைத்த மாதிரியே அவனை கடித்து தின்று விட்டது.
இப்படி நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் நாம் பிசாசின் வாயில் தான் போய் விழுவோம் என்று சற்று நிறுத்தியவர்.....
பிறகு தொடர்ந்தார்.
நல்ல பெண் என்று தான் நினைத்து திருமணம் செய்து கொள்கிறான். இவள் தான் வேண்டும். இவள் இல்லாவிட்டால் வாழ்கையே இல்லை என்று நினைக்கிறான். திருமணம் முடிந்தவுடன்., ஐயோ., இவளுக்கா ஆசைப்பட்டேன் என்று நொந்து கொள்ளுகிறான்.
ஆசை ஆசையாக வீட்டை வாங்குகிறான்., கட்டுகிறான். அக்கம் பக்கம் தொல்லை., ஏண்டா இங்க வந்தோம் என்று ஆகி விடுகிறது.
பாராட்டி சீராட்டி வளர்த்த பிள்ளைகள் திரும்பிப் பார்க்காமல் போய் விடுகின்றன மனம் கிடந்து கவலையில் உழல்கிறது.
இப்படி வேண்டும் வேண்டும் என்று கேட்டது எல்லாம் பின்னாளில் வேண்டாம் வேண்டாம் என்று மறுதலிக்கும்படி ஆகி விடுகிறது என்று சொல்லிவிட்டு., சற்று நிறுத்தியவர்... நம் தேவனுக்குத் தெரியாதா இவர்தான் நம் பிதா.. அதாவது அப்பா ..
அவர் இருக்கும் போது நமக்கு என்ன வேண்டும் என்று அவனை பார்த்து ஒரு கேள்வியை கேட்டார். அவனுள் ஞானம் பிறந்தது.
#என்_அன்புக்குாியவா்களே,
தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிற உங்களு க்கு உங்களின் தேவைகளைச் சந்திக்கும் யேகோவாயீரே என்ற அா்த்தமுடையவராக
(God supplies,God provides) நம் அனைத்துத்தேவை களையும் சந்திக்கிறவராயிருக்கிறாா். என்பதை ஆபிரகாமுடைய வாழ்வில் காண்கிறோம்.
தேவன் ஆபிரகாமைச் சோதித்தார். எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே : உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ தகனபலியாகப் பலியிடு என்றாா்.
ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதை யின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டுபேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளை
யும் பிளந்துகொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான்.
ஆதியாகமம் 22:1 -3
ஆபிரகாம் தன்னுடைய பிள்ளையை தேவன் சர்வாங்க தகனபலியிடச் சொல்லும் போது அவன் மனது மிகவும் கலங்கிப் போனது ஆண்டவரின் 100 வயதில் பிள்ளை கொடுத்தாா். ஆனால் இப்போது பலியிட சொல்கிறாரே என்ற கலக்கம் அவன் மனதில் இருந்தது.
அவன் யோசித்துக்கொண்டே இருக்கும்போதே
ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும். 21 :13 என்று தேவன் அவனுக்கு சொன்னது ஞாபகத்தி ற்கு வந்தது
எனவே
சந்ததி விளங்கும் என்றால் ஈசாக்கு உயிரோடு இருந்த ஆக வேண்டும் எனவே ஆண்டவர் பலியிட சொன்னாலும் அந்த சாம்பலிலிருந்து ஈசாக்கை உயிரோடு எழுப்ப வல்லவராய் இருக்கிறார் என்ற ஒரு விசுவாசம் அவனுக்குள் துளிர் விட்டது
எனவே அவன் சந்தோஷமாய் விசுவாசத்தோடு கூட போனான். இடம் வந்தவுடன் அந்த வேலைக் காரா்களைப் பார்த்து ,நானும் பிள்ளையாண்டா னும் அவ்விடம் போய்போய் தொழுது கொண்டு திரும்பி வருவோம் என்று விசுவாசத்துடன் ஆணித்தரமாய் சொன்னான்.
இதைக் குறித்து எபிரேயா்
நிருபத்தின் ஆசிாியா் இவ்விதமாய் எழுதுகிறார்.
விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப் பட்டபோது, ஈசாக்கைப் பலியாக ஒப்புக் கொடுத் தான்
ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே. இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோாில் இருந்துமெழுப்பத் தேவன் வல்லவராயிருக்கிறா ரென்றெண்ணி, தனக்கு ஒரேபேறானவனையே பலியாகஒப்புக்கொடுத்தான் மரித்தோரிலிருந்து
அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக் கொண்டான். எபி. 11:17-19
ஈசாக்கு ஆபிரகாமை நோக்கி: என் தகப்பனே இதோ நெருப்பும் கட்டையும் இருக்கிறது தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்றான்.
அதற்கு ஆபிரகாம்: என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக் கொள்வார் என்றான். - ஆதி. 22:7,8
உண்மையாகவே ஆட்டுக்குட்டியை கா்த்தா் ஆயத்தப்படுத்தி இருந்தாா்
இவன் வருவததற்கு முன்பாகவே ஒரு ஆட்டுக் கடாவையும் அவா் அவ்வழியே அனுப்பினார்
அது மலையோரத்தில் வந்தது மலைக்கு மேல் போக வேண்டும் என்ற உநதுதல் உண்டாகி அந்த ஆடு மலையின் மேலேமேய்ந்து கொண்டே போனது
அந்த மலையின் உச்சியில் போன போது ஒரு முள் புதரில் ஏதாவது கிடைக்கும் என்று அது உள்ளே சென்றது. அது சிக்கிக்கொண்டது
இவ்விதமாய் கர்த்தர் அந்த ஆட்டை அங்கேயே ஆபிரகாமுக்காய் அதை ஆயத்தப்படுத்தி இருக்க வைத்திருந்தார்
ஆபிரகாம் தன் மகனை பலிபீடம் கட்டி பலியிட கத்தியை எடுக்கும்போது தேவன் தடுத்தாா். . இப்போது தேவனுக்குபயந்தவன் என்பதை அறிந்து கொண்டேன். என்று தேவன் சொல்லி
ஆபிரகாமை முட்புதாில் சிக்கியிருந்த ஆட்டை ஏறிட்டுப் பாா்ககச் செய்தாா். அந்த ஆட்டை ஈசாக்குக்குப் பதிலாக பலியிட்டான்.
அந்த இடத்திற்கு யேகோவாயீரே என்று பேரிட் டான். இந்த வாா்த்தை கா்த்தருடைய பா்வதத்தில் பாா்த்துக் கொள்ளப்படும் என்றா்த்தமாகும்.
இதிலிருந்து நாம் என்னத் தொிநது கொள்கி றோம். நம் அனைத்துத் தேவைகளையும் தேவனேப் பாா்த்து ஆயத்தப்படுத்தி வைத்து உள்ளாா். எனவே நீங்கள் . மனம் கலங்காதீா்கள்.
இயேசு இவ்வாறாக சொல்கிறார்..
To get dailymeesage Contact +917904957814
நீங்கள் ஜெபம்பண்ணும்போது,அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தை களை அலப்பாதேயுங்கள், அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.
அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்,
(We are not fatherless people )
உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். - மத்தேயு 6:7,8
என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள் இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித் தேடுகிறார்கள்,
இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவை கள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.
மத்தேயு 6:31,32
தேவன் உங்கள் தேவைகள் அனைத்தையும் சந்திக்கும் யேகோவாயீரே - வாய் இருக்கிறாா்.
நீங்கள் ஆசீா்வதிக்கப்பட்டவா்கள் !!!
===========
ஓர் குட்டிக் கதை
புத்திசாலி ஜிட்டு
===========
உடல் நலமில்லாத மகன் ஜிட்டுவோடு டாக்டரைப் பார்க்கப் போய்க் கொண்டிருந்தாள் ஜானகி. மாட்டு வண்டியில் காட்டு வழியாகப் போக
வேண்டியிருக்கிறதோ என்று கவலையோடு இருந்தாள். காட்டுக்குள் செல்லச்செல்ல இருட்டு அதிகமாயிற்று. காட்டின் நடுவே போய்க் கொண்டிருந்தபோது திடீரென்று வண்டி நின்றுவிட்டட் து. பயந்தபடியே திரும்பிப் பார்த்தாள் ஜானகி.
மூன்று திருடர்கள் வண்டியை இழுத்துக் கொண்டிருந்தனர். ஜானகி கை கூப்பினாள். ஐயா! நான் என் பையனுக்கு வைத்தியம் பார்க்கிறதுக்கு போயிட்டிருக்கேன்... தயவுசெய்து விட்டுடுங்க...
ஏய்... அதெல்லாம் முடியாது. உன் நகை , பணம் எல்லாம் தந்தாத்தான் விடுவோம். இல்லை, ரெண்டு பேரையும் கொன்னுடுவோம் என்றார்கள்.
வேறுவழியில்லாமல் தன் வளையல்கள், சங்கிலி, பணம் எல்லாம் தந்தாள் ஜானகி. திருடர்கர் ள் ஓடி மறைந்தார்கள்.
வண்டி மறுபடி புறப்பட்டது. பக்கத்துக் கிராமத்தில் போய் மருத்துவரிடம் ஜிட்டுக்கு வைத்தியம் பார்த்தாள் ஜானகி. பணம், நகை கொள்ளை போனது பற்றி கூறினாள். மருத்துவரும், பரவாயில்லை, இன்னொரு முறை வரும்போது பணம் தந்தால் போதும் என்று கூறி அனுப்பி விட்டார். மறுபடியும் வண்டி நடுக்காட்டை கடந்து கொண்டிருக்கும்போது மாடு மிரண்டது. யாரோ வண்டியைப் பிடித்துத் இழுத்தார்கள். இந்த முறை
ஜானகிக்கு தைரியம் வந்துவிட்டது. அவளிடம்தான் பணம் ஏதும் இல்லையே! ஏய், திருடர்களா! மரியாதையாய் வண்டியைப் போகவிடுங்க! என்று ஜானகி மிரட்ட ...
ஹா.. ஹா.. ஹா... என்று இடிக்குரலில் ஒரு சிரிப்பு சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தால்.. ஒரு பெரிய பூதம் நின்றிருந்தது. சர்வ நாடியும் ஒடுங்கிவிட்டது ஜானகிக்கு. நான் ஒன்றும் திருடனில்லை என்று பூதம் கர்ஜனை செய்தது. சட்டென்று ஒரு யோசனை உதித்தது ஜிட்டுவுக்கு. நான் நம்பமாட்டேன்..நீதான் மூன்று திருடர்களைப் போல மாறுவேடம் போட்டுவந்து கொள்ளையடித்தாய் என்று கத்தினான். ச்சேச் ! அது வேறு யாரோ! என்று பூதமும் கத்தியது.
நான் நம்பமாட்டேன் என்று மறுபடியும் ஜிட்டு சொல்ல... தன் தலையில் இரு கை களையும் பதித்துக்கொண்டு கத்தியது பூதம், நானில்லை அது! அப்படியானால் உனக்கு அரைமணி நேரம் அவகாசம் தருகிறேன், அதற்குள் அவர்களைப் பிடித்துக்கொண்டு வா! அப்புறம் உன்னை நம்புகிறேன் என்று கத்தினான் ஜிட்டு . உடனே திரும்பி தன் அம்மாவைப் பார்த்து ஜாடை காட்டினான். சட்டென்று மாட்டை உசுப்பி விரட்டினாள் ஜானகி. வேகவேகமாய் வண்டி ஓடியது. ஊர் விரைவாக நெருங்கிக் கொண்டிருந்தது.
ஊரின் எல்லையருகே மறுபடி தொம் என்று குதித்தது பூதம். அதன் கைகளில் கொள்ளையடித்த பொருட்களுடன் மூன்று திருடர்கள்! தொம்... தொம்... தொம்... என்று மூன்று பேரையும் பூமியில் வீசியடித்தது. சத்தம் கேட்டுட் ஊர் ஜனங்கள் எல்லாம் கூடிவிட்டார்கள். ஐயோ! அம்மா! என்று விழுந்தார்கள் திருடர்கள்.
ஆகா! நீ திருடனில்லை... ரொம்ப நல்ல பூதம்... தங்கமான பூதம்! என்று கத்தினான் ஜிட்டு . ஊர்மக்களும் நல்ல பூதம், தங்கமான பூதம்! என்று
கோஷம் போட்டார்கள். எல்லோரும் தன்னைப் பாராட்டியதால் சந்தோஷப்பட்ட பூதம், யாரையும் துன்பம் செய்யாமல் காட்டுக்குள் போய் மறைந்தது.
என் அன்பு வாசகர்களே,
தான் ஒரு புத்திசாலி என்று நிரூபிப்பதற்காக தன்னை சுற்றி உள்ளவர்களை முட்டாளாய் மாற்றி அவர்களின் திறமையை திருடி அவர்களை அவமானப்படுத்தி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய எல்லாவற்றையும் அபகரித்துக் கொள்கிறார்கள். இன்றைய கதையின் சாராம்சம் அதுதான்.
To Get Daily Story Contact +917904957814
அந்த சிறுவன் தான் புத்திசாலி என்பதை விளங்கச் செய்வதற்காக அந்த பூதத்தின் திறமையை பிரயோகித்து அந்த ஊராரின் முன் நல்ல பெயரை எடுத்து அந்த பூதத்தின் சகல காரியத்தையும் தனதாக்கி கொண்டான். அந்த பூதமும் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கிருந்து சென்று விட்டது.
சிந்தித்துப் பாருங்கள். ஒருவேளை அந்த பூதம் சிந்தித்திருந்தால் தனக்கு கிடைக்க வேண்டிய உணவான அந்த சிறுவனையும், அவன் தாயையும் கொன்று சாப்பிட்டு சந்தோஷமாய் தன் வேலையை தொடர்ந்து செய்திருக்கும். ஆனால் அங்கு நடந்ததோ எல்லாம் தலைகீழாய்.
ஒன்றை மட்டும் நன்றாய் புரிந்துக்கொள்ளுங்கள், யாருடைய திறமையையும் திருடாமல், நமக்கு தேவன் கொடுத்த அறிவை பயன்படுத்தி அநேக புதிய காரியங்களை செய்ய முற்படுங்கள். ஒருவேளை மற்றவர்களின் அறிவை பயன்படுத்த வேண்டுமாயின் அதை பயன்படுத்தி அவர்களுக்கேற்ற மதிப்பை அவர்களிடம் கொடுத்துவிடுங்கள்.
வேதம் சொல்கிறது,
2 கொரிந்தியர் 10:16
ஆகிலும் உங்கள் விசுவாசம் விருத்தியாகும்போது, மற்றவர்களுடைய எல்லைகளுக்குள்ளே செய்யப்பட்டவைகளை நாங்கள் செய்ததாக மேன்மைபாராட்டாமல், உங்களுக்கு அப்புறமான இடங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கத்தக்கதாக, எங்கள் அளவின்படி உங்களால் மிகவும்பெருகி விருத்தியடைவோமென்று நம்பிக்கையாயிருக்கிறோம்.
எனவே மற்றவர்களின் திறமையை அபகரியாமல் அவர்களின் திறமைக்கேற்ற பிரதிபலனை அடைய அவர்களுக்கு உறுதுணையாய் நிற்போம், அநேகருக்கு ஆசீர்வாதமாய் வாழ்வோம்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!
Thanks for using my website. Post your comments on this