=========
பெட்சே ஸ்டாக்டன்
Betsey Stockton
==========
மண்ணில் : ~1798
விண்ணில் : 1865
ஊர் : நியூ ஜெர்சி
நாடு: அமெரிக்கா
தரிசன பூமி : ஹவாய் தீவுகள்
நியூ ஜெர்சியிலுள்ள பிரின்ஸ்டனை சேர்ந்த பெட்சே ஸ்டாக்டன் அடிமைத்தனத்தில் பிறந்தவர். அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் கீழேஉள்ள ‘காலேஜ் ஆஃப் நியூ ஜெர்சி’ கல்லூரியின் தலைவரான ரெவ். அஷ்பெல் கிரீன் அவர்களுடைய குடும்பத்திற்கு அடிமையாக கொடுக்கப்பட்டார். என்றபோதிலும் பெட்சே ரெவ். அஷ்பெல் கிரீனுடைய கண்களில் தயவு பெற்றுக்கொண்டதினால், அஷ்பெல் அவருக்கு படிக்க கற்றுக் கொடுத்தார் மற்றும் கல்லூரியில் மாலை வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதித்தார். 1815 ஆம் ஆண்டில், கல்லூரி வளாகத்தில் நடந்த ஒரு எழுப்புதல் கூட்டத்தில் பெட்சே கிறிஸ்துவைப் பற்றி அறிந்து கொண்டார். அதன்மூலம் அவர் கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, ‘பிரின்ஸ்டன் ஃபஸ்ட் பிரஸ்பைடிரியன் சபை’-யில் ஞானஸ்நானம் பெற்றார்.
நற்செய்தியை கேட்காதவர்களிடம் அதை எடுத்துச் செல்ல கர்த்தர் தன்னை அழைக்கிறார் என்ற நிச்சயத்தை உறுதியாக கொண்டிருந்த பெட்சேனுடைய ஜெபங்களும் இறுதியில் அவரது வாழ்கையும் அதன்படியே வடிவமைக்கப்பட்டன. அவர் விசுவாசத்தில் வளர்ந்துக் கொண்டிருந்தபோது, ஒரு மிஷனரியாக கர்த்தரின் ஊழியம் செய்ய ஆப்பிரிக்கா செல்ல வேண்டும் என்ற வாஞ்சையும் அவரில் வளர்ந்தது. இருப்பினும் ‘அமெரிக்கன் போர்ட் ஆஃப் கமிஷனர்ஸ் ஃபர் ஃபாரின் மிஷன்ஸ்’ மூலம், சார்லஸ் எஸ். ஸ்டுவர்ட்டின் குடும்பத்துடன் ஹவாயில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆகவே 1823ஆம் ஆண்டில் ஹவாயை அடைந்த அவர், விரைவில் அங்குள்ள உள்ளூர் மொழியைக் கற்றுக்கொண்டார். பின்னர் அவர் சாதாரண மக்களுக்காக ஒரு பள்ளியை அமைத்து அவர்களுக்கு வரலாறு, ஆங்கிலம், லத்தீன் மற்றும் இயற்கணிதம் கற்பித்தார். வேதவசனங்களை புரிந்துகொள்வதற்கு கல்வி அவசியம் என்பதால் கல்வியே மத பயிற்சிக்கு முந்தியது என்று அவர் கருதினார். கர்த்தரின் ஊழியத்தில் அவர் கொண்டிருந்த வாஞ்சை சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்கும், மக்களை கிறிஸ்துவின் சீடர்களாக மாற்றுவதற்கும் தேவையான அடித்தளத்தை அமைத்தது.
தனது ஊழியத்தில் பெட்சே இனவெறி காரணமாக பிரச்சினைகளை எதிர்கொண்டார். இருப்பினும், ஸ்டுவர்ட்டு தம்பத்தினருக்கு உதவுவதன் மூலமாகவும், ஹவாய் உள்ளூர் மக்களுக்குக் கற்பிப்பதன் மூலமாகவும் அவர் அந்த மிஷன் முயற்சிகளில் உதவியாக இருந்து ஊழியத்தில் தனது பங்களித்தார். மேலும் அவர் அங்குள்ள மக்களுக்கு ஆசிரியர் பயிற்சி அளித்தார். இது பின்னர் அவர் எதிர்பாராமல் திடீரென அமெரிக்கா திரும்பியபோது அவரது பொறுப்புகளை பயிற்சி பெற்றவர்கள் ஏற்றுக்கொள்ள உதவியது. அமெரிக்க சென்ற பின்னர் அவர் அங்கு பிலதெல்பியா மற்றும் கனடாவின் கிரேப் தீவில் உள்ளூர் அமெரிக்கர்களுக்காக பள்ளிகளைத் தொடங்கினார். தனது கல்விப் பணிகளுடன், 1848 ஆம் ஆண்டில் பிரின்ஸ்டனில் ஆப்பிரிக்க அமெரிக்க பிரஸ்பைடிரியன் சர்ச்சை நிறுவுவதிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார். பெட்சே ஒரு மென்மையான நடத்தை கொண்ட கிறிஸ்தவர். 1865ஆம் ஆண்டில் தான் மகிமைக்குள் பிரவேசிக்கும் வரை அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பில் உண்மையாகவே இருந்தார்.
பிரியமானவர்களே, நீங்கள் செய்கிற பணி சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்கும் மற்றவர்களை இயேசு கிறிஸ்துவின் சீஷராக மாற்றுவதற்கும் ஒரு அடிதளத்தை உருவாக்குகிறதா?
"ஆண்டவரே, சுவிசேஷ ஊழியத்திற்கு ஒரு சிறந்த அடித்தளத்தை உருவாக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்!"
===========
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: Dr. எப்சிபா செல்வம்
===========
தாமஸ் வாக்கர்
Thomas Walker
===========
மண்ணில் : 09-02-1859
விண்ணில் : 24-08-1912
ஊர் : டெர்பிஷயர்
நாடு: இங்கிலாந்து
தரிசன பூமி : திருநெல்வேலி (இந்தியா)
ஆங்கிலேய மிஷனரியான தாமஸ் வாக்கர் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தின்னெவெல்லி (தற்போதைய திருநெல்வேலி)-க்கு வந்து தனது மிஷனரி சேவைகளை வழங்கினார். பக்தியுள்ள கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த அவர் சிறு வயதிலிருந்தே தெய்வ பயத்துடன் வளர்ந்தார். பதினேழு வயதில் அவர் ஒரு வேதாகம வகுப்பில் கலந்து கொண்டபோது, அங்கு சொல்லப்பட்ட "கன்மலையின்மேல் கட்டுகிறவன் மற்றும் மணலின்மேல் கட்டுகிறவன்" என்ற உவமையை அவரின் இதயத்தை ஆழமாக தொட்டது. உடனே அவர் கர்த்தரிடம் தன்னை ஒப்புக்கொடுத்தார். பின்னர் கணிதம் படிப்பதற்காக கேம்பிரிட்ஜில் உள்ள செயின்ட் ஜான்ஸ் கல்லூரிக்குச் சென்ற வாக்கர், அங்கு பக்தி, ஜெபம் மற்றும் முறையான வேத தியானம் போன்ற நல்ல பழக்க வழக்கங்களை வளர்த்துக் கொண்டார். அது அவருடைய எதிர்கால வாழ்க்கைக்கும் ஊழியத்திற்கும் அடித்தளமாக அமைத்தது. அவரது தந்தை தனது மகன் வாக்கர் வியாபாரம் செய்ய வேண்டும் என்று விரும்பினார். ஆனால், மிஷனரியாக பணியாற்ற வேண்டும் என்ற வாஞ்சை வாக்கருடைய இதயத்தை நிரம்பியது. அவர் ஆண்டவருடைய வார்த்தையை தியானித்தபோது, 'மனுஷரைப் பிடிக்கிறவனாக' மாற வேண்டும் என்ற அவரது உறுதிப்பாடு இன்னும் அதிகமாக வளர்ந்துக்கொண்டு வந்தது. இதன் விளைவாக, 'சர்ச் மிஷனரி சொசைட்டியில்' சேர்ந்த அவர், 1885ஆம் ஆண்டில் தின்னெவெல்லி (திருநெல்வேலி)-க்கு அனுப்பப்பட்டார்.
தின்னெவெல்லியை அடைந்த பிறகு தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்ற வாக்கர், பல ஆங்கில பாமாலைகளை தமிழில் மொழிபெயர்க்கும் ஒரு சிறந்த பழக்கத்தை கற்றுக்கொடுத்தார். கால்நடையாகவும் மாட்டு வண்டியிலும் தின்னெவெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று சுவிசேஷத்தை பிரசங்கித்த ஒரு வல்லமையான போதகர் வாக்கர் என்று சொல்லலாம். இவ்வாறு அவரது அயராத சேவையால் கிறிஸ்துவின் ஒளியைக் கண்ட இடங்களில் பண்ணைவிளை ஒன்று. அவருக்கு இந்துக்களிடமிருந்து எதிர்ப்புகள் வந்தபோதிலும், கிறிஸ்துவுக்காக பல ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துவதில் அவர் வெற்றி பெற்றார். மேலும் அவர் கோவில்களில் தேவதாசியாக விடப்பட்ட சிறுவர்கள் மத்தியில் பணியாற்றிய தனது சக மிஷனரியான ஏமி கார்மைக்கேல் அவர்களை அந்த ஊழியத்தில் ஊக்குவித்தார். அவர்கள் இருவரும் சேர்ந்து டொனாவூரில் ஒரு பள்ளியையும், "டோனாவூர் பெல்லோஷிப்" என்ற அமைப்பையும் நிறுவினர். இதன் மூலம் அந்த இடம் ஒரு கிறிஸ்தவ சமூகமாக மாறியது மற்றும் இளம் பெண்களுக்கு பாதுகாப்பான அடைக்கல பட்டணமாக மாறியது.
வாக்கர் அசாதாரண ஒருமைப்பாடு மற்றும் ஆவிக்குரிய விஷயங்களில் மிகுந்த ஆர்வம் கொண்ட மனிதர். மார்மன் மாநாட்டில் அவர் கொடுத்த பிரசங்கங்கள் கேரள மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவ திருச்சபைகளில் எழுப்புதலை கொண்டுவந்தன. அவர் செய்த ஊழியத்தின் விளைவாக, தைவ ஊழியர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க ஆழ்ந்த வாஞ்சையால் நிரப்பப்பட்டனர். இதன் மூலம், அநேகர் கர்த்தரின் மந்தையில் சேர்க்கப்பட்டனர். பல மிஷனரிகளுக்கு ஊக்கமாக இருந்த "தின்னெவெல்லியின் வாக்கர்" என்று அழைக்கப்படும் தாமஸ் வாக்கர், கர்த்தருக்காக மனுஷரைப் பிடிக்கிறவனாக இந்த உலகில் தனது வேலையை வெற்றிகரமாக முடித்து, 1912-ம் ஆண்டில் பரலோக வாசஸ்தலத்திற்கு சென்றார்.
பிரியமானவர்களே, நீங்கள் கர்த்தருக்காக மனுஷரைப் பிடிக்கிறவர்களாக இருக்கிறீர்களா?
"ஆண்டவரே, உமக்காக மனுஷரைப் பிடிக்கிறவனாக இருக்கும்படி இந்த உலகத்தின் இன்பங்களை விட்டு உமக்காய் வாழ எனக்கு உதவி செய்யும். ஆமென்!"
*******
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: Dr. எப்சிபா செல்வம்
============
யோவான் மாற்கு
John Mark
============
வாழ்க்கையில் சோர்வுற்று மிகவும் வேதனையடைந்து பின்வாங்கி போனவரா நீங்கள்? அப்படியானால் மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானின் வாழ்க்கையைப் பார்த்து சீர்படுத்திக் கொள்ளுங்கள்.
பவுலின் முதல் ஊழியப் பயணம் அது. பவுலும், பர்னபாவும் எருசலேமுக்கு வந்து, தர்ம ஊழியத்தை நிறைவேற்றின பின்பு, மாற்குவைக் கூட்டிக் கொண்டு அந்தியோகியாவுக்கு வந்தார்கள். பின்னர் அங்கிருந்து சீப்புரு தீவு வழியாக தற்போது துருக்கி என்றழைக்கப்படும் நாட்டிற்கு வந்தார்கள். அங்குள்ள மக்கள் சற்றே முரடர்கள். சுவிசேஷத்தை அறிவிக்கச் சென்றபோது மாற்குவுக்கு என்ன ஆனதோ தெரியவில்லை. அவர் பின்வாங்கி விட்டார். ஒருவேளை அம்முரடர்களைக் கண்ட பயம்கூட காரணமாக இருக்கலாம். ஆண்டுகள் இரண்டு உருண்டோடின. தனது செயலுக்காக மாற்கு மிகவும் மனஸ்தாபப்பட்டார்.
பவுலின் இரண்டாவது மிஷனெரிப் பயணம் அது. பவுல் தன் பயணத்தை துவங்கும் வேளையில், மாற்குவும் உடன் செல்ல விரும்பினார். ஆனால், பவுல் அதற்கு சம்மதிக்க மறுக்கவே, பர்னபாவுடன் இணைந்து சுவிசேஷத்தை அறிவித்தார். பின்வாங்கிப்போன மாற்குவின் பணி வீரத்துடனும், சுறுசுறுப்புடனும் காணப்பட்டது.
மாற்கு பதினொரு ஆண்டு இடைவெளிக்குப் பின் பவுலை சந்தித்தார். “மிகவும் சிறப்பாக பணி செய்பவன், ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமானவன்' என்ற பாராட்டைப் பெற்றார். பவுலுக்கு மட்டுமின்றி, பேதுருவுக்கும் உதவி புரிந்தார். கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை மிகவும் சிறப்பாக சுருக்கமாக எழுதினார். இது மாற்கு சுவிசேஷம் என்ற பெயரில் வேதாகமத்தில் இடம் பெற்று, ஒவ்வொருவரின் உள்ளத்திலும், இல்லத்திலும் கிறிஸ்துவை இடம் பெறச் செய்ய தூண்டுகின்றது.
மாற்கு எகிப்துக்குச் சென்று ஆப்பிரிக்காவில் கிறிஸ்தவ சபைகளை நிறுவிய முதல் நபரானார் என்றும், அவர் அலெக்சாந்திரியாவில் திருச்சபையை நிறுவி, கடைசி வரை அங்கு ஊழியம் செய்தார் என்றும் கூறப்படுகிறது.
அன்பரே! மாற்குவை போன்று மனதில் எழுச்சி பெற்று, வீரமுடன் செயல்பட அர்ப்பணிப்பீர்களா?
"ஆண்டவரே! உம்மால் ஏற்றி வைக்கப்பட்ட விளக்காக, பிரகாசித்து சுடர் கொடுக்க என்னை அர்ப்பணிக்கிறேன். ஆமென்!"
===========
BenjaminForChrist
+91 9842513842
Thanks for using my website. Post your comments on this