செய்த நன்மையை மறவாதே | தந்நை மட்டுமல்ல. தாயுமானவர் | மாவீரன் நெப்போலியன்
======================
ஓர் குட்டிக் கதை
செய்த நன்மையை மறவாதே
===================
ஒரு கட்டெறும்பு ஆற்று தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது.
மரத்திலிருந்து இதைப் பார்த்த புறா ஒன்று மரத்திலிருந்த இலை ஒன்றைப் பறித்து நீரில் வீசியது.
எறும்பும் தத்தித் தத்தி வந்து அந்த இலையின் மேல் ஏறிக் கொண்டது. அந்த இலை காற்றில் அசைந்து மெதுவாகக் கரைப்பக்கம் ஒதுங்கக் கரையில் ஏறி தப்பியது அந்த எறும்பு. புறாவுக்கும் நன்றி கூறியது
மற்றொரு நாள். ஒரு வேடன் அந்த புறாவைக் குறி வைப்பதைப் பார்த்தது அந்த எறும்பு.
ஆனால் புறாவோ இதை அறியாமல் வேறெங்கோ கவனமாக இருந்தது. அன்று தன்னைக் காப்பாற்றிய புறாவின் உயிரைக் காப்பாற்ற வேண்டியது தனது கடமையாக எண்ணியது எறும்பு.
விரைந்து சென்று வேடனின் காலில் நறுக்கென்று கடித்தது.
கடியின் வலி தாங்க முடியாமல் கத்திய வேடனின் குறி தப்பியது. சத்தத்தைக் கேட்டுத் திரும்பிய புறா தனக்கேற்படவிருந்த ஆபத்தை அறிந்து அந்த இடத்தை விட்டுப் பறந்தது. எறும்புக்கும் ன்றி சொன்னது
அன்று புறா நமக்கென்ன என்று அலட்சியமாயிருக்காமல் உதவி செய்ததால்தான் புறாவின் உயிர் தப்பியது. அந்த சிறிய உருவம் கொண்ட எறும்பும் நன்றி மறக்காமல் செயல்பட்டது.
என் அன்பு வாசகரே,
எவருக்கும் எந்த நேரத்திலும் நம்மால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும். அது போல் நமக்குச் செய்த நன்மையையும் எந்தக் காலத்திலும் மறக்கக் கூடாது...
பவுல் அப்போஸ்தலன் தன் ஊழியத்தில் தனக்கு உதவி செய்த ஆக்கில்லா இவரது மனைவி பிாிஸ்கில்லா, ஆகியோரை குறித்து பின்வருமாறு கூறுகிறார்..
To Get Daily Story In What's App Contact + 917904957814
கிறிஸ்து இயேசுவுக்குள் என் உடன் வேலையாட்களாகிய பிரிஸ்கில்லாளையும் ஆக்கில்லாவையும் வாழ்த்துங்கள். அவர்கள் என் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள், அவர்களைப்பற்றி நான்மாத்திரமல்ல, புறஜாதியாரில் உண்டான சபையாரெல்லாரும் நன்றியறிதலுள்ள வர்களாயிருக்கிறார்கள். (ரோமா் 16 :3,4)
உங்கள் நெருக்கத்தில் உதவி செய்த ஒருவரையும் மறக்காமல் அவர்களின் நெருக்கத்தில் உதவி செய்யுங்கள். எப்போதுமே உதவி செய்யும்போது அவா்கள் தகுதியைப் பாா்த்து உதவி செய்யாமல் உங்கள் தகுதிக்கு ஏற்ப உதவி செய்யுங்கள்.
ஆலயத்தில் காணிக்கை போடுவதும் கூட உங்களை தகுதிபடுத்தின தேவனை நினைத்து மிகமிக அதிகமாக போட வேண்டும்.
மொய்க்கு மொய் என்று அவா்கள் கொடுத்ததை விட ஒரு ரூபாய் அதிகமாக கொடுப்பாா்கள். அப்படியல்ல உங்கள் தகுதியின்படி மொய் கொடுங்கள்.
பிச்சைகாரா்களுக்கு பொடுக்கும்போது கூட கொஞ்சமாயல்ல உங்கள் தகுதிபாா்த்து கொடுங்கள். ஏனென்றால் புழுதியிலும், குப்பையிலிருந்தும் இருந்த நம்மை தகுதிபடுத்தினவா் தேவனே.
எனவே நன்மை செய்தவர்களுக்கு நன்றி உள்ளவா்களாய் நடந்து கொள்ளுங்கள் உங்கள் தகுதியின்படி கொடுங்கள். புறா காப்பாற்றப்பட்டது போல் உங்களால் அநேகர் காப்பாற்றப்டுவாா்கள்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் !!!
===============
ஓர் குட்டிக் கதை
தந்நை மட்டுமல்ல. தாயுமானவர்
=================
ஓர் அனைத்துலகப் பள்ளியில், அனலையும் தூசியையும் பொருட்படுத்தாமல், பூங்காவிலுள்ள செடிகளுக்கு, நீர் ஊற்றிக்கொண்டிருந்தார் தோட்டக்காரர் ஒருவர்.
" கங்கா தாஸ், தலைமையாசிரியை உன்னை உடனே வரச்சொன்னார்" . . .
அந்த அலுவலகப் பையனின் அந்தக் கடைசி இரு சொற்களின் தொனி அழைப்பின் அவசரத்தைச் சுட்டிக் காட்டியது.
உடனே தன் கை கால்களை அலம்பிக்கொண்டு, .. அறையை நோக்கி விரைந்தார்.
அன்று என்னவோ பூந்தோட்டத்திலிருந்து அலுவலதத்திற்குச் செல்வது நெடுந்தூர நடையாய்த் தோன்றியது. அவரது இதயம், நெஞ்சாங் கூட்டிற்குள்ளிருந்து வெளியே வந்து விழுவது போன்ற ஓர் உணர்வு.
அவர் மனத்தில் பலவாறான எண்ணங்கள் அலைமோதின. ஏன், என்ன நடந்திருக்கும்? இத்துணை அவசரமாக எதற்குக் கூப்பிட்டிருப்பார் என்ற கேள்விக் கணைகள். . .
அவர் நேர்மையான தொழிலாளியாவார். எத்தருணத்திலும் தன் கடமையிலிருந்து தவறியதில்லை. . .
அறைக் கதவைத் தட்டினார். . .
"என்ன கூப்பிட்டீங்களா மேடம்?"
"உள்ளே வா . . ." என்ற அந்த அதிகாரக் குரல் அவரது படபடப்பை மேலும் அதிகரித்தது. . .
பாதி நரை விழுந்த மயிர், சீராய் சீவி முடிச்சுப் போடப்பட்ட தலை, நேர்த்தியாய்ப் பின்னப்பட்ட சாரியைப் பாரம்பரியமான வழக்கில் அணிந்திருந்தார். அவர் அணிந்திருந்த மூக்குக் கண்ணாடி பேருக்கேற்ப அவர் மூக்கின்மேல் அமர்ந்துகொண்டிருந்தது.
மேசை மேலிருந்த தாளைச் சுட்டிக்காட்டி, "இதைப் படி". . . என்றார்.
"ஆனால், மெ..மெ மேடம் எனக்குப் படிப்பறிவு இல்லிங்க மேடம்.
எனக்கு இங்கிலிஷ் கூட படிக்க வராது."
மேடம் நான் தவறேதும் செய்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். . .எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள். . .
என் மகள் இந்தப் பள்ளியில் இலவசமாகப் படிக்க வாய்ப்பு தந்தீங்க. அதற்காக நான் உங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டவனாவேன். . .என் மகளுக்கு இப்படியொரு வாய்ப்பினை நான் கனவில்கூட காண முடியாது."
இப்படிக் கூறிக்கொண்டே அவர் தேம்பினார். நடுக்கமும் அவரை ஆட்கொண்டது.
" போதும் நிறுத்து. நீ ரொம்பதான் கற்பனை செய்கிறாய். நான் ஆசிரியர் ஒருவரைக் கூப்பிடுகிறேன். அவர் இதை உனக்கு, வாசித்து மொழிப்பெயர்த்துக் கூறுவார். . . இது உன் மகள் எழுதியது. இதை நீ தெரிந்துகொள்ள வேண்டும்."
விரைவிலேயே அங்கு வந்த ஆசிரியை ஒருவர் அதனை வாசித்து ஹிந்தியில் ஒவ்வொரு வரியாக மொழிப்பெயர்த்துக் கூறினார்.
"இன்று அன்னையர் தினம் தொடர்பாய் மாணவர்களைக் கட்டுரை எழுதச் சொன்னோம். இதுதான் அக்கட்டுரைகளில் ஒன்று.
"நான் பீஹாரிலுள்ள ஒரு கிராமத்தைத் சேர்ந்தவள். அந்தக் கிராமத்தில் மருத்துவ வசதியோ கல்வியோ இல்லை. அதைக் கனவில்கூட காண முடியாது.
பிரவசத்தின்போது பல பெண்கள் மரணித்துள்ளனர். என் தாயாரும் அவர்களுள் ஒருவர். என்னை அவர் கைகளில் ஏந்தும் பாக்கியத்தைக்கூடப் பெறவில்லை. என்னை முதன்மதலில் தன் கைகளில் ஏந்தியவர் என் அப்பாதான். . .சொல்லப்போனால் அவர் ஒருவர் மட்டும்தான்.
நான் ஒரு பெண்ணாகப் பிறந்து விட்டேன். பிறக்கும்போதே என் தாயாரை விழுங்கிவிட்டேன் என்று உறவினர் குறைபட்டுக்கொண்டனர். அதனால், எல்லோரும் கவலையடைந்தனர். உடனே மறுமணம் செய்துகொள்ளும்படி என் தந்தையை வற்புறுத்தினர். ஆனால், என் அப்பா அதை மறுத்துவிட்டார்.
என் தாத்தாவும் பாட்டியும் அவரைச் சம்மதிக்க வைக்க எல்லாவித யுத்திகளையும் கையாண்டனர். அறிவுப்பூர்வமான வாதங்களையும் முன் வைத்தனர்.
என் தாத்தா பாட்டிக்கு ஒரு பேரன் வேண்டுமாம். ஆகவே, அவரை மறுமணம் செய்துகொள்ள வேண்டுமென கட்டாயப்படுத்தினர். அப்படி அவர் இணங்காவிட்டால் அவரைத் தள்ளி வைத்துவிடுவதாகவும் அச்சுறுத்தினர்.
என் அப்பா சற்றும் தயங்காமல் நிலம், நல்ல வாழ்க்கை, சொகுசான வீடு, கால்நடைகள் மற்றும் அக்கிராமத்தில் கௌரவமான வாழ்க்கை வாழ அவருக்கு இருந்த அனைத்து சலுகைகளையும் துறந்தார்.
கையில் சல்லிக் காசுகூட இல்லாமல் - ஆனால் என்னை மட்டுமே கையில் ஏந்தியவாறு, இந்த மாநகரில் குடியேறினார். வாழ்க்கை மிகவும் சிரமமானதாகவே இருந்தது. அப்பா இரவும் பகலும் கடுமையாக உழைத்து என்னைக் கண்ணும் கருத்துமாய்ப் பேணி வளர்த்தார்.
நான் விரும்பிச் சாப்பிட்ட உணவுப் பண்டங்களைத் திடீரென தனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்வார். அதன் காரணம் எனக்கு அப்பொழுது புரியவில்லை . . . தட்டில் இருக்கும் அந்த ஒரு துண்டை நான் சாப்பிட வேண்டும் என்பதற்காகவே அவர் அவ்வாறு நடந்துள்ளார் என்பதை நான் பெரியவளாக வளர்ந்த பிறகுதான் தெரிந்துகொண்டேன்.
அவர் சக்திக்கு மீறிய ஒரு வசதியை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தார்.
இப்பள்ளி அவருக்குப் புகலிடமளித்து சிறப்பு செய்துள்ளது. இப்பள்ளி இன்னொரு மாபெரும் பரிசையும் தந்துள்ளது. ஆம், நான் இப்பள்ளியிலேயே சேர்ந்து பயில வழங்கியுள்ள வாய்ப்புதான் அது.
அம்மா என்றால் அன்பும் அரவணைப்பும் எனின், என் அப்பா அதற்குப் பொருத்தமானவர். . .
அம்மா என்பவர் இரக்கமிக்கவர் எனின், என் அப்பா அதற்கும் பொருத்தமானவரே. . .
அம்மா என்பவர் தியாகி எனின், நிச்சயமாக என் அப்பா அதையும் ஆக்ரமிக்கின்றார். . .
சுருங்கக்கூறின், தாய் ஒருவரின் வடிவம் அன்பு, பராமரிப்பு, தியாகம், இரக்கம் எனின்
*என் அப்பாதான் இவ்வுலகிலேயே மிகச் சிறந்த தாய்*
அன்னையர் தினத்தில் இம்மண்ணில் மிகச் சிறந்த பெற்றோராக இருக்கும் என் அப்பாவுக்கு வாழ்த்துத் தெரிவிக்க விரும்புகிறேன். . .
இப்பள்ளியில் கடின உழைப்பாளியாகத் திகழும் தோட்டக்காரருக்கு என் வணக்கத்தைத் தெரிவித்து அவர்தான் என் அப்பா என்பதைப் பெருமையோடு அறிவிக்க விரும்புகிறேன்.
இதை வாசிக்கும் என் ஆசிரியை எனக்கு நல்ல புள்ளிகள் தரமாட்டார் என்பது எனக்குத் தெரியும். ஆயினும் தன்னலமற்ற அப்பாவுக்கு ஒருவர் வழங்கும் ஒரு சிறிய அன்பளிப்பாக இக்கட்டுரை இருக்குமென நம்புகிறேன்.
அந்த அறை நிசப்தமானது. . .
கங்கா தாஸ் தேம்பி அழுவது மட்டுமே கேட்டது. . .
கடும் வெயில்கூட அவரின் ஆடையை வியர்வையால் ஈரப்படுத்தாது இருந்திருக்கலாம். ஆனால், தன் மகளின் சொற்கள் அவர் உள்ளத்தையே ஈரப்படுத்தியது. . .
அவர் கைகட்டி, வாயடைத்து அங்கு நின்றுகொண்டிருந்தார். . .
ஆசிரியையிடமிருந்து அந்தத் தாளை வாங்கி தன் நெஞ்சின்மேல் வைத்து கண்கலங்கினார். . .
தலைமையாசிரியைத் தன் இருக்கையிலிருந்து எழுந்தார். . . கங்கா தாஸை அமரச்சொன்னார். அவர் பருக ஒரு கோப்பை நீர் வழங்கி அவரிடம் ஏதோ சொன்னார். அவர் குரலில் ஒரு கனிவு வெளிப்பட்டது.
கங்கா தாஸ் உன் மகளின் இக்கட்டுரைக்காக 10/10 புள்ளிகள் வழங்கியுள்ளோம். இப்பள்ளி வரலாற்றிலேயே அன்னையர் தினம் தொடர்பில் எழுதப்பட்ட மிகச்சிறந்த கட்டுரை இதுதான். நாளைக்கு இப்பள்ளியின் *அன்னையர் தின விழா* வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படவிருக்கிறது. இப்பள்ளியின் ஒட்டுமொத்த நிர்வாகஸ்தரும் உன்னையே சிறப்பு விருந்தினராக அழைக்க முடிவுசெய்துள்ளனர்.
பிள்ளையை வளர்த்தெடுப்பதில் ஆண் ஒருவன் காட்டும் அன்பு, அர்ப்பணிப்பினை கௌரவிக்கவும் ஒரு சிறந்த பெற்றோராகத் திகழ பெண் ஒருவரால் மட்டுமே முடியும் என்பதல்ல என்ற உண்மையை உலகறியச் செய்யவும் நாங்கள் இம்முடிவைச் செய்துள்ளோம்.
அதற்கும் மேலாக, உன் மகள் உன் மீது கொண்டுள்ள உறுதியான நம்பிக்கையை மறு உறுதிப்படுத்துவதுடன் போற்றி அங்கீகரிக்கவும் உன் மகளுக்குப் பெருமை சேர்க்கவும் உன் மகள் தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போல், இவ்வுலகிலேயே தலைசிறந்த பெற்றோரை இப்பள்ளி பெற்றிருப்பதற்காக இப்பள்ளியிலுள்ள அனைவரும் பெருமைகொள்ளவும் இம்முடிவைச் செய்துள்ளோம். . . .
"நீ பூங்காவை மட்டும் பராமரிக்கவில்லை. மாறாக உன் வாழ்வின் விலை உயர்ந்த மலரை அழகிய முறையில் பேணி வளர்த்துள்ளாய். நீதான் உண்மையான தோட்டக்காரன்."
To Get Daily Story In What's App Contact+917904957814
என் அன்பு வாசகரே,
இவ்வுலகத்தில் பல பிரச்னைகள் மத்தியில் தன் பிள்ளைகளை தியாகத்துடனும், பொறுப்புடனும் வளா்க்கிற தகப்பன்மாா்கள் இருக்கிறாா்கள். அவா்கள் எல்லாரும் குழந்தைகளுக்காக தேவனால் ஏற்படுத்தப்பட்டவா்கள். அவா்களை இரண்டாவது கடவுள் என்று கூட சொல்லலாம்.
பைபிள் சொல்கிறது.
தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல....
கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.சங்கீதம் 103 :13
ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல....
நீங்கள் இவ்விடத்திற்கு வருகிறவரைக்கும், நடந்துவந்த வழிகள் எல்லாவற்றிலும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சுமந்துகொண்டு வந்ததைக் கண்டீர்களே. உபாகமம் 1:31
எனவே தகப்பன்மாா்களுக்கு மற்றவர்களிடம் பெருமை சேர்க்கும் அளவில் நடந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் !!!
===================
ஓர் குட்டிக் கதை
மாவீரன் நெப்போலியன்
======================
#உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார்..!!
#தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது..!!
#சிறையில் மன உளைச்சலில் அவரின் கடைசி காலம் கழிந்தது..!!
#அவரை பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவ்ர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து “இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார்..!!
#ஆனால் சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் அதன் மீது கவன்ம் போகவில்லை..!!
#சிறிது காலத்தில் இறந்தும் போனார்..!!
#பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறீப்பு இருந்தது..!!
#அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்க்கான வழியை அந்த குறீப்பு சொல்லி இருந்தது..!!
என் அன்பு வாசகரே>
நெப்போலியனின்மன உளைச்சலும்..பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது..!!
உறுதியான சிமெண்ட் தரையையும், மரபெட்டியையும் தன் கூர்மையான் பற்களாலும், நகத்தாலும் குடைந்து ஓட்டை போடும் எலி..!!
அதே மரத்தால் செய்யப்பட்ட எலிப்பொறியில் சிக்கி கொண்டால் அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதட்டத்தாலும் அந்த எலி பொறியை உடைக்கும் வழியை விட்டு விட்டு அந்த பொறியின் பின்னால் இருக்கும் கம்பிக்கு முன்னால் பின்னாலும் பதட்டத்துடன் சென்று சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக்கொண்டு விடும்..!!
மாவீரனுக்கும் சரி..சாதாரண எலிக்கும் சரி..!!
பதட்டமும் மன உளைச்சலும் அவர்களீன் சிந்தனையை செயல்படாமல் வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது..!!
எனவே எந்த சூழ்நிலையிலும் பதட்டப்படக்கூடாது. நீங்கள் கிறிஸ்துவின் இரத்தத்தில் மீட்கப்பட்டு தேவனுடைய பிள்ளைகளானால் உங்கள் வாழ்வில் வரும் சகலமும் முன்குறிக்கப்பட்டன. என்பதை மனதில் வையுங்கள். அவைகள் அனைத்திலும் உங்களுக்கு ஜெயத்தை தன் சிலுவை மரசத்தினால் ஏற்படுத்தி வைத்து விட்டார்.
To Get Daily Story In What's App Contact +917904957814
நீங்கள் எந்த சூழ்நிலையில் பாதிக்கப்படுகிறீா்களோ அதின் ஜெயம் உங்களுக்கு முன்னே வந்து விடுகிறது. உங்களை எந்த விஷயத்திலும் யாரும், எதுவும் தோற்கடிக்க முடியாது. இது கிறிஸ்து இயேசுவினால் உண்டான மிகப் பொிய சிலாக்கிமாயிருக்கிறது.
பைபிள் சொல்கிறது மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
(1 கொரிந்தியர் 15:55-57)
...என் ஆலோசனையை நிறைவேற்றும் மனுஷனைத் தூரதேசத்திலிருந்தும் வரவழைக்கிறவராயிருக்கிறேன், அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன், அதைத் திட்டம்பண்ணினேன், அதைச் செய்து முடிப்பேன். ஏசாயா 46:11
கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்,
அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும்,
திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக் கல்லாயிருக்கும், விசுவாசிக்கிறவன் பதறான். ஏசாயா 28:16
நீங்கள் திட்டத்தின்படி வரவழைக்கப்பட்டு இருக்கிறீா்கள். உங்களுக்கு விரோதமாக, எதிராக நடைபெறுகிற ஒவ்வொரு விஷயத்திற்கும் ஜெயத்தையே வைத்து விட்டாா்.
நீங்கள், உங்களை கிறிஸ்துவுக்குட்படுத்தி அவரை விசுவாசியுங்கள்.ஜெயத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு எத்தகைய மன உளைச்சலோ, பதட்டமோ வராது.
அவரை விசுவாசிக்கிறவன் பதறான், சிதறான், கதறான், உளறான்.
உங்கள் எதிரிகள் உதிாிகளாகி, பதறிகளாகி, சிதறிகளாகப் போய் விடுவார்கள்.
நீங்கள் அவரைத் தேடினாலும் காணமாட்டீா்கள்.
தைாியமாயிருங்கள் !
கா்த்தா் உங்களோடிருக்கிறாா். !!
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் !!!
Thanks for using my website. Post your comments on this