அபிஷேக தைலம்! - Anointing balm! | பரிமளதைலம்! - Good ointments! | துதிப்பதே தகுதி! - Worthy of praise!
================
அபிஷேக தைலம்!
===============
*அபிஷேக தைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவையும் அபிஷேகம்பண்ணி, அதையும் அதிலுள்ள சகல பணிமுட்டுகளையும் பரிசுத்தப்படுத்துவாயாக. யாத்திராகமம் 40:9*
*பல ஆண்டுகளாக நான் அபிஷேகம் பெற்றுக்கொள்ளவில்லை. ஆனால் மற்றவர்கள் என்னை தவறாக நினைக்க கூடாது என்பதற்காக நான் அபிஷேகம் பெற்றவன் அல்லது பெற்றவள் என்று சொல்கிற அநேகர் உண்டு. அபிஷேகம் பெறாதவன் என்று சொன்னால் எல்லோரும் என்னை கேவலமாக நினைப்பார்களே என்று நினைக்க வேண்டாம். உண்மையாகவே உங்களை அபிஷேகம் செய்ய தேவனுடைய அபிஷேக தைலம் ஆயத்தமாயிருக்கிறது. உங்கள் வாஞ்சைகளும், விருப்பங்களும் நிச்சயமாக நிறைவேறப்போகிறது. கடந்த செய்திகளில் நீங்கள் வாசித்தது போல பிசின் தைலம் உங்களுடைய இரணங்களை ஆற்றி, ஆனந்த தைலம் உங்கள் உள்ளத்தை நிரப்புகிற வேளையில் தேவனுடைய அபிஷேக தைலம் உங்களை நிறைப்பது அதிக உன்மையானது. ஒருவன் அபிஷேக தைலத்தினால் நிரப்பப்படும்போது பாவம் அவனிடத்தில் பிரவேசிக்கவே முடியாது. உங்களுக்குள் இருக்கிற அபிஷேக தைலம் பாவத்தை சுட்டெரித்து போடும். நீங்கள் அபிஷேக தைலத்தினால் பரிசுத்தமாக்கப்படுகிறீர்கள்.*
*அபிஷேக தைலமானது உங்களை மட்டும் பரிசுத்தப்படுத்தாமல் உங்கள் உடைகள், வீடுகள், வீடுகளில் உள்ள பொருட்களையும் கூட அது பரிசுத்தப்படுத்தும் என்று யாத்திராகமம் 40:9 சொல்கிறது. ஐயா, என்னால் பரிசுத்தமாய் வாழமுடியுமா? தேவன் விரும்புகிற பரிசுத்த வாழ்க்கை என்னிடத்தில் காணப்படுமா என்று நீங்கள் நினைத்தால் நான் உங்களுக்கு சொல்கிறேன் நீங்களல்ல உங்களை பரிசுத்தப்படுத்துகிறவர் உங்கள் மேல் அபிஷேக தைலத்தை ஊற்றினால் நீங்கள் பரிசுத்தமாக வாழமுடியும். சபைகளிலே தேவனுக்கு பிரியமில்லாத காரியங்கள் உண்டாகக்கூடாது, தேவ சபை பரிசுத்தமாக இருக்க வேண்டும், தேவனைப்போலவே நானும் பரிசுத்தமாக வாழ வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் இப்பொழுதே தேவன் உங்களை அபிஷேக தைலத்தினால் அபிஷேகிக்கும்படி மன்றாடுங்கள். உங்கள் பிள்ளைகளுடைய வாழ்க்கையில் அபிஷேக தைலம் இறங்கும் போது அவர்கள் பரிசுத்தமடைந்து, தீர்க்கதரிசனம் சொல்லி தேவனை மகிமைப்படுத்துவார்கள். உங்கள் வாழ்வில் அப்படிப்பட்ட உன்னத அனுபவம் உண்டா?*
*தேவ ஜனமே, அபிஷேக தைலத்தினால் கிடைக்கும் பரிசுத்தம் முழு தேசத்திற்கும் ஆசீர்வாதமானது. உங்கள் மேல் அபிஷேகம் ஊற்றப்பட்டால் நீங்கள் ராஜாக்களும், ஆசாரியர்களுமாக இருப்பீர்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து இந்த அபிஷேக தைலம் இறங்கி உங்களையும் உங்கள் எல்லைகள் முழுவதையும் நிரப்பும். அநேக பரிசுத்தவான்களின் சிரசிலே ஊற்றப்பட்ட தைலம் அவர்களுடைய தாடியிலே வடிந்து அவர்கள் அங்கிகளிலும் இறங்கி வருகிறதான பரிசுத்த அபிஷேக தைலமாக இருக்கிறது. இந்த அபிஷேக தைலமானது உங்கள் தலைமுறை தலைமுறைக்கும் ஆசீர்வாதமாக மாறும். இப்படிப்பட்ட அபிஷேக தைலம் உங்கள் மீது வந்திறங்கும்படியாக தேவனை நோக்கி கேளுங்கள். உங்கள் வாசஸ்தலங்களெல்லாம் அபிஷேக தைலத்தினால் பரிசுத்தமாயிருப்பதாக. அவருடைய கரத்திலிருந்து கிடைக்கிற ஆசீர்வாதத்திலே மிக உயர்ந்ததும், வல்லமை நிறைந்ததுமாய் இந்த அபிஷேகத் தைலம் காணப்படுவதால் அதை நீங்கள் நிச்சயமாக பெற்றுக்கொள்ள வேண்டும். பிசின் தைலத்தினாலும், ஆனந்த தைலத்தினாலும் உங்களை நிறைத்த தேவன் அபிஷேக தைலத்தினாலும் உங்களை நிறைப்பாராக. அல்லேலூயா ஆமென்.*
கிறிஸ்துவின் பணியில்*
பாஸ்டர்.S.ராஜன் 6385330029*
ஜெப உதவிக்கு 9003708768
=============
Anointing balm!
===============
*And thou shalt take the anointing oil, and anoint the tabernacle, and all that is in it, and sanctify it, and all the vessels that are therein. Exodus 40:9*
*I have not received the anointing for many years but there are many who say that I am anointed or received so that others do not misunderstand me. Don't think that if I say I am not anointed, everyone will look down on me. God's anointing oil is ready to truly anoint you. Your desires and wishes are definitely going to be fulfilled. As you have read in the past messages, while the adhesive balm heals your wounds and the bliss balm fills your heart, it is more noble for the anointing balm of God to fill you. When a person is filled with anointing oil, sin cannot enter into him at all. The anointing oil within you will burn the sins. You are sanctified with anointing oil.*
*Exodus 40:9 says that anointing oil will not only sanctify you but also the things in your clothes, houses, and households. Sir, can I live in holiness? If you think that whether the holy life that God desires will be found in me? Then I tell you that it is not you who is sanctifying yourself but if the One who sanctifies you pours anointing oil on you, you will be able to live in holiness. If you want that there should not be things in the churches that are not pleasing to God, that the Church of God should be holy, and that I should live as holy as God, then pray that God anoint you with anointing oil right now. When the anointing balm descends into your children's lives, they will be sanctified and will prophesy and glorify God. Have you had such a noble experience in your life?*
*O people of God, the holiness of anointing oil is a blessing to the entire nation. If anointing is poured out on you, you will be kings and priests. This anointing balm will come down from the Lord Jesus Christ and fill you and all your borders. The ointment poured out on the heads of many saints is the holy anointing oil that flows down into their beards and comes down into their robes. This anointing oil will become a blessing to your generation after generation. Ask God that such anointing oil may descend upon you. Let all your tabernacles be sanctified with anointing oil. You must receive this anointing balm, for it is found to be the highest and most powerful of the blessings that come from His hand. May the God who filled you with the ointment of resin, with the ointment of joy, and with the anointing oil. Alleluia amen.*
In the work of Christ
Pastor. S.Rajan 6385330029
For Prayer 9003708768
==============
பரிமளதைலம்!
===============
*உமது பரிமளதைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள், உமது நாமம் ஊற்றுண்ட பரிமளதைலமாயிருக்கிறது, உன்னதப்பாட்டு 1:3*
*பரிமளம் என்றால் வாசனை என்று பொருள். நல்ல வாசனை தருகிற வாசனை திரவியங்களை அநேகர் பயன்படுத்துவண்டு. ஒரு சில இஸ்லாமியர்கள் பயன்படுத்துகிற வாசனை திரவியங்கள் பத்து மைல் தூரம் நல்ல மனம் வீசும். இயேசு கிறிஸ்துவின் நாமம் இந்த பரிமளதைலத்தை விட வாசனை நிறைந்தது. எந்த ஒரு வாசனை திரவியமும் நாசியினால் நுகரப்படுகிறது. தேவனோ தம்முடைய ஜீவ சுவாசத்தை மனிதனுடைய நாசியிலே ஊதினார். இதனால் மனிதனுடைய ஆத்துமா ஜீவன் பெற்றது. தம்முடைய குமாரனுடைய கல்வாரி தியாகத்தினால் இயேசு என்னும் நாமம் இன்றைக்கு அகில உலகமெங்கும் வாசனை வீசுகிற ஒன்றாய் இருக்கிறது. அந்த நாமத்தை அண்டிக்கொண்டோரெல்லாம் அவருக்காக மகாபெரிய காரியங்களை செய்தார்கள். அவருடைய நாமம் பரிமளதைலம் மனம்வீசுவது போல பூமியெங்கும் பரவிசென்றது. உங்களையும் கர்த்தர் அப்படி மனம்வீசுகிற அளவிற்கு பயன்படுத்துவாராக.*
*ஒரு வாசனை திரவியம் துர்நாற்றத்தை நீக்கி நல்ல மணம் வீசுவது போல பரிமளதைலமாகிய இயேசுவின் நாமம் உலகமுழுவதிலுமுள்ள பாவம் என்னும் துர்நாற்றத்தை நீக்கி நல்ல ஜீவியத்தை கொண்டு வருகிறது. ஒருவனை பிசின் தைலத்தினால் குணப்படுத்தி, ஆனந்த தைலத்தினால் நிறைத்து, அபிஷேக தைலத்தினால் அபிஷேகிப்பதின் நோக்கமே அவன் பரிமளதைலம் போல வாசனை வீசுகிறவனாக காணப்படவேண்டும். இயேசுவை தங்களுடைய ஜீவியத்தில் ஏற்றுக்கொண்டவர்கள் அவரை பிரதிபலிக்கிறவர்களாக இருக்க வேண்டும். உங்கள் பேச்சினால், செய்கையினால், பார்வையினால் ஜெபத்தினால், நற்சாட்சியினால் இயேசு கிறிஸ்து என்னும் பரிமளதைலத்தை நீங்கள் பெற்றுள்ளீர்கள் என்பதை உங்கள் அருகில் வருகிற யாவரும் அறிந்து கொள்ள வேண்டும். சிலருடைய வாசனை திரவியங்களை பார்த்து இதை எங்கே வாங்கினீர்கள், இதனுடைய பெயர் என்ன என்று கேட்பது போல உங்களிடம் இயேசு இருப்பதை கண்டு அவர் யார், எப்படி அவரை பெற்றுக்கொள்வது என்று உங்களிடம் மற்றவர்கள் விசாரிக்க வேண்டும்.*
*தேவ ஜனமே, பூமியிலே தேவனுக்காக வாசனை வீசவேண்டும் என்று உங்கள் விருப்பம் இருந்தால் அவருடைய வேத வசனத்தை வாசித்து அதிலிருந்து சகல அர்த்தத்தையும் அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் ஒரு நல்ல மனிதனாய் வாழ விரும்பினால் இயேசு கிறிஸ்துவைப்போல் சாட்சியுள்ள ஜீவியம் செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையை கவனிக்கிற அநேகர் உங்களைப்போல வாழ வேண்டும் என்று விரும்புவார்கள். நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஆராதித்து துதித்து, பாடி, மகிமைப்படுத்தும் வேளையில் உங்களைக்கொண்டு அநேக அற்புதங்கள் நடைபெறும். இத்தனை நாட்களாய் உங்களுடைய வாசனை வெளியே தெரியவில்லையே என்று அங்கலாய்க்க வேண்டாம். உங்களுக்குள் பரிமளதைலமான இயேசு வந்தால் போதும். நீங்களும் கிறிஸ்துவுக்காக சாட்சியாக எழும்ப முடியும். உங்களுடைய சாட்சிகள் தேசத்திலே மாற்றத்தை கொண்டு வருவதாக. கர்த்தருடைய இனிதான நாமம் உங்கள் வழியாக பூமியெங்கும் வாசனை வீசுவதாக. அல்லேலூயா ஆமென்.*
கிறிஸ்துவின் பணியில்
பாஸ்டர்.S.ராஜன். 6385330029
ஜெப உதவிக்கு 9003708768
================
Good ointments!
===============
*Because of the savour of thy good ointments thy name is as ointment poured forth,Song of Solomon 1:3*
*Savour means smell. Many people use perfumes that smell good. The perfumes used by a few Muslims will blow a good heart for ten miles. The name of Jesus Christ is more fragrant than this perfume. Any perfume is consumed by the nostrils. But God breathed his breath of life into man's nostrils. Thus the soul of man came to life. Because of the Calvary sacrifice of his Son, the name Of Jesus is today something that smells all over the whole world. All those who came to that name did great things for him. His name spread all over the earth as if it were a perfumed ointment. May the Lord use you as much as he pleases you.*
*Just as a perfume removes the stench and smells good, so the name of Jesus, the good perfume, removes the stench of sin from all over the world and brings good life. The purpose of healing a person with adhesive ointment, filling him with bliss oil and anointing him with anointing oil is that he should be seen smelling like perfumed ointment. Those who have accepted Jesus in their life must be reflective of Him. All who come near you should know that by your speech, by deeds, by sight, by prayer, by good testimony you have received the gift of Jesus Christ. Just as you look at some people's perfumes and ask where you bought it and what is its name, others should ask you who Jesus is and how to receive him.*
*O people of God, if you desire to smell for God on earth, read his scripture and learn all the meaning from it. If you want to live as a good man, do witnessful lives like Jesus Christ. Many who observe your life will want to live like you. Many miracles will be performed through you as you worship, praise, sing, and glorify the Lord Jesus Christ. Don't worry that you haven't seen your scent for so many days. It is enough for Jesus, the perfectionist, to come into you. You too can rise up as a witness for Christ. May your witnesses bring about a change in the land. May the sweet name of the Lord smell through you throughout whole earth. Alleluia amen.*
In the work of Christ
Pastor. S.Rajan. 6385330029
For Payers 9003708768
================
துதிப்பதே தகுதி!
================
*நீதிமான்களே, கர்த்தருக்குள் களிகூருங்கள், துதிசெய்வது செம்மையானவர்களுக்குத் தகும். சங்கீதம் 33:1*
*அநேக தேவனுடைய ஊழியர்களும், விசுவாசிகளும், மூப்பர்களும் பிரசங்கம் செய்யவும், தான் போதகனாயிருப்பதே தன்னுடைய தகுதியென்றும் என்னுகிறார்கள். ஆடுகளை மேய்த்த தாவீது ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டார். இது அவருடைய தகுதிக்கு மேலான ஒன்று. அந்த தாவீது கூட தேவன் தன்னை ஆசாரியனாக அபிஷேகம் செய்யாமல் தேசத்துக்கு ராஜாவாக அபிஷேகம் செய்து விட்டாரே என்று ஏங்கி தவித்ததுண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒரு தகுதியை எதிர்பார்க்கிற தேவன் அவரை துதிப்பதற்கு ஒரு தகுதியை வைத்திருக்கிறார். எல்லாராலும் தேவனை துதிக்க முடியாது. துதி செய்வது செம்மையானவர்களுடைய தகுதி என்று வேதம் சொல்கிறது. செம்மையான இருதயமுடைய எந்த மனிதனும் தான் தேவனை துதிக்க வேண்டும், புகழ வேண்டும், பாட வேண்டும் என்று நினைப்பான். அவரை துதிக்கும் எந்த மனிதனும், மனுஷியும் தேவனுடையவர்களாக இருக்கிறார்கள்.*
*ஒரு கம்பெனிக்கு வேலை தேடி செல்வோரிடம் சில தகுதிகளை அந்த நிர்வாகம் எதிர்பார்க்கிறது. அது போலவே தேவனை துதிப்பதற்கு சுத்தமுள்ள இருதயம் தேவை. சிலருடைய இருதய நினைவுகளை சாதாரண மனிதனே புரிந்துகொள்ளும்போது பரலோக தேவன் இருதயத்தை புரிந்துகொள்வது அதிக நிச்சயம். தேவனுடைய வார்த்தை நிறைந்த எந்த ஒரு இருதயமும் நீ தேவனை துதி என்றே ஒவ்வொரு மனிதனிடமும் பேசும். ஏனென்றால் துதிகளின் மத்தியில் வாசம் செய்கிற கர்த்தர் உங்களுடைய துதி ஸ்தோத்திரங்களை அங்கிகரிக்கிறார். யார் ஒருவர் தேவனை துதிக்கிறார்களோ அவர்கள் தேவனுடைய பிரசன்னத்தை உணர்ந்துகொள்ள முடியும். கர்த்தர் எந்த மனிதனையும் உயர்த்தவும் மேன்மைப்படுத்தவும் விரும்பினால் அவன் தேவனை துதிக்க வேண்டும். மனிதனை துதி பாடினால் இன்றோ அல்லது என்றோ ஒரு நாள் பிரச்சனை உருவாகும். ஆனால் தேவனை உயர்த்தி துதிக்கும்போது சகல பிரச்சனைகளும் விலகி மாபெரும் இரட்சிப்பு உண்டாகும்.*
*தேவ ஜனமே, துதிப்பதில் பல விதம் இருந்தாலும் தேவன் செய்த நன்மைகளை நினைத்து கண்ணீரோடு நன்றி சொல்லித் துதிப்பது உன்னத கர்த்தரின் இதயத்தை உங்கள் பக்கமாய் திருப்புகிறது. அவரை நோக்கி பார்த்தவர்கள் எல்லாம் வெட்கமடையாமல் காணப்படுவதற்கு தேவனை புகழ்வதும் துதிப்பதும் தான் முதல் காரணம். ஜீவனுள்ள தேவனுக்கு பிள்ளைகளாக இருக்கிற நீங்கள் தேவனை அழகாக துதிக்க முடியும். உங்கள் துதிகளினால் எரிகோ கோட்டைகள் போன்ற தடைகள் இடிந்து விழும். கர்த்தருடைய கிருபை உங்கள் வாழ்க்கையை மூடிக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் தேவனை போற்றுங்கள், துதியுங்கள். உங்களுக்கு எந்த தகுதியும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் தேவனை துதிக்கிற தகுதி உங்களுக்கு உண்டு. இந்த தகுதியை எந்த மனிதனும் உங்களுக்கு தராமல் கர்த்தாதி கர்த்தரும் உன்னத ராஜாவுமான பரலோக பிதாவே உங்களுக்கு தந்தார். உங்களுடைய துதிகள் தேவனுக்கு மகிமை சேர்க்கும் என்று சொல்லி உங்களை ஆசீர்வதிக்கிறோம். அல்லேலூயா ஆமென் *
கிறிஸ்துவின் பணியில்
பாஸ்டர்.S.ராஜன். 6385330029
ஜெப உதவிக்கு. 9003708768
===============
Worthy of praise!
=============
*Rejoice in the Lord, ye righteous: for praise is comely for the upight. Psalm 33:1*
*Many servants of God, believers and elders say that it is their qualification to preach and to be a preacher. David the shepherd was anointed as king. This is more than he deserves. Even David was not anointed by God as a priestI longed to be anointed as the king of the country. God, who expects a merit from everyone, has a merit to praise Him. Not everyone can praise God. The scriptures say that praise is the virtue of the pure. Any man with a pure heart would think that he should praise, glorify and sing to God. All those man and woman Who praises Him belong to God.*
*The management expects certain qualifications from the job seekers of a company. Similarly, praising God requires a pure heart. The heavenly God understands the heart more surely than the ordinary man understands the heart and mind of some people. Any heart full of God's word will speak to every man, Praise God. Because the Lord who dwells in the midst of praises accepts your praises. Whoever praises God can realize God's presence. If the Lord wants to lift and exalt any man he must praise God. If you sing the praises of a man, one day or another there will be trouble. But when God is lifted up and praised, every Problems will be removed and there will be great salvation.*
*God's people, although there are many ways of praising God, praising God with tears and thanks for the good things he has done turns the heart of the Supreme Lord towards you. Praising and glorifying God is the first reason why all who look at Him are not ashamed. You who are children of the living God, praise God beautifully. You can break the Barriers like the fortresses of Jericho. That will crumble with your praises. If you feel that God's grace should cover your life, praise and magnify God. You may not have any qualifications. But you have the qualification to praise God. This qualification was not given to you by any human being but by the Almighty Lord and Supreme King, the Heavenly Father.We bless you by saying that your praises will add glory to God. Alleluia Amen.*
In the work of Christ
Pastor.S.Rajan 6385330029
For prayer 9003708768
Thanks for using my website. Post your comments on this