Type Here to Get Search Results !

Psalm 40-44 | கர்த்தரோ என் மேல் நினைவாயிருக்கிறார் | நான் ஏன் புலம்புகிறேன் | Tamil Gospel Sermon Notes | Jesus Sam

சங்கீதம்: 40-44
💐💐💐💐💐💐

*சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்*.

*கர்த்தர் அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடே வைப்பார்; பூமியிலே அவன் பாக்கியவானா யிருப்பான். அவன் சத்துருக்களின் இஷ்டத்திற்கு நீர் அவனை ஒப்புக்கொடீர்*.

*படுக்கையின்மேல் வியாதியாய்க்கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப் போடுவீர்*.

(சங்கீதம்: 41:1-3)

*சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவனுக்கு வரும் ஆசீர்வாதங்கள்*.

1. தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்.

2. பாதுகாப்பார்.

3. உயிரோடே வைப்பார்.

4. பூமியில் அவனை ஆசீர்வதிப்பார்.

5. சத்துருக்களிடமிருந்து விடுதலையாக்குவார்.

6. படுக்கையில் வியாதியாய்க் கிடக்கிறபோது அவனைத் தாங்குவார்.

★ கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் சிறுமைப்பட்டவர்களைக் கண்டும் காணாதவர்கள் போல் நடந்து கொள்ளக் கூடாது.

★ அவர்களுடைய சிறுமை நீங்க நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும். *பொருளுதவி* செய்தும், நம்முடைய ஜெபங்களில் அவர்களுக்காக *ஜெபிக்கவும்*, கனிவான *ஆறுதல் வார்த்தைகள்* சொல்லி அவர்களைத் தேற்றவும் வேண்டும்.

★ சிலர் தரித்திரரை ஒடுக்குவார்கள். இரக்க குணம் உள்ளவர்கள் மட்டுமே இரக்கம் பெறுவார்கள்.

★ வசதி படைத்த அநேகர் ஏழைகளிடம் இரக்கம் காட்டாமல், தாராளமாக காணிக்கைகளை மட்டும் தங்களின் பெயர் பெருமைக்காகக் கொடுப்பார்கள்.

★ பிறருக்கு உதவும் இருதயம் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த பூமியில் கர்த்தரின் ஆசீர்வாதம் கிடைக்கும்.

★ஏழைகளுக்கு உதவி செய்கிறவனுக்குப் பல ஆசீர்வாதங்கள் உண்டு. எனினும் *ஆசீர்வாதங்களை எதிர்பார்த்து உதவி செய்யாமல் மனதுருக்கத்தோடு* உதவி செய்வோமாக.

*ஆமென்*.

💐💐💐💐💐💐💐

✍️ Mrs. Bhavani Jeeja Devaraj, Chennai. Tamilnadu.


*சங்கீதம் 40 - 44*
🌹🌹🌹🌹🌹

"நான் ஏன் புலம்புகிறேன்.

🌹🌹🌹🌹🌹🌹🌹"

சந்தோஷப்படுவதற்குப் பதிலாக நாம் அடிக்கடி துக்கப்படுவதற்கு ஏதேனும் காரணத்தைக் காணலாம்.

இரவு பகலில் முடியும்.

பகல் இரவைத் தொடர்ந்து வருகிறது.

வசந்த காலமும் கோடைகாலமும் குளிர்காலத்தைத் தொடர்ந்து வருகின்றன.

நாம் கர்த்தரை நம்புவோம்.

நாம் எப்போதும் கர்த்தரை நம்புவோம்.

கடவுள் நம்மைத் கைவிடுவதில்லை.

இவை அனைத்தின் மத்தியிலும் கடவுள் நம்மை நேசிக்கிறார்.

மலைகள், இருளில் மறைந்திருக்கிறது.

​​பகலில் இருப்பது உண்மையானது.மேலும் கடவுளின் அன்பு நம் பிரகாசமான தருணங்களில் இருந்ததைப் போலவே,இருளிலும் நமக்கு உண்மையாக இருக்கிறது.

எந்த தந்தையும் தன் பிள்ளையை எப்போதும் தண்டிப்பதில்லை.

நாம் தேவதூதர்களுடன் யாக்கோபின் ஏணியில் ஏறி, அதன் உச்சியில் அமர்ந்திருப்பவரைப் பார்ப்போம் -அவர் நமது உடன்படிக்கையின் கடவுள்.

நித்தியத்தின் அற்புதங்களுக்கு மத்தியில், காலத்தின் சோதனைகளை மறப்போம்.

இன்னல்களுக்கு மத்தியில் பாடுவோம்.

அக்கினி சூளை வழியாகச் செல்லும்போது கூட சந்தோஷப்படுவோம்.

பாலைவனப்பகுதியை ரோஜாவைப் போல மலரச் செய்வோம்

நாம் மயக்கம் அடைய வேண்டாம்.

பயப்பட வேண்டாம். அவருடைய கரங்கள் அருகில் உள்ளன.

கிறிஸ்து நமக்கு எல்லாவற்றிலும் எல்லாமாக இருக்கிறார்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

மேபி சுந்தர்.சென்னை



🌟 *உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்* 🌟




☄️ *"உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும் உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டுபோவதாக. அப்பொழுது நான் தேவனுடைய பீடத்தண்டைக்கும், எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிற தேவனிடத்திற்கும் பிரவேசிப்பேன். தேவனே, என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் துதிப்பேன்.”* (சங்கீதம் 43:3-4).




💥 சங்கீதம் 43 இல், சங்கீதக்காரன் தனது எதிரிகளிடமிருந்து பாதுகாக்கப்படுவதற்கு, அடைக்கலமான இடத்திற்குத் தன்னை கொண்டுசெல்லும்படி தேவனிடம் ஜெபம் பண்ணுகிறான். சங்கீதக்காரன் அடைக்கலமான இடம் என்று *தேவனுடைய பரிசுத்த பர்வதத்தையும், அவரது வாசஸ்தலங்களையும்* குறிப்பிடுகிறான்; அது *தேவனுடைய பிரசன்னமே.* இதற்காக, *அவரது வெளிச்சத்தையும் அவரது சத்தியத்தையும்* அனுப்பியருளும்படி தேவனிடம் வேண்டுகிறான்.




💥 ஆவிக்குரிய பிரகாரமாக, தேவன் பாவத்தையும் சோதனையையும் ஜெயிக்க நமக்குக் கிருபையளிக்கிறார்; துன்ப நேரங்களில், அவரது பாதத்தில் அமர்ந்து ஜெபிக்கும் பாக்கியத்தையும் அருளிகிறார். *நமது நம்பிக்கை மற்றும் அடைக்கலம் ஆகிய இரண்டிற்கும் கிறிஸ்துவே ஆதாரமாக இருக்கிறார்.*




💥 இயேசு ஜனங்களை நோக்கி: *"நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்.”* என்றார் (யோவான் 8:12). இயேசுவே வெளிச்சம்.




💥 இயேசு: *"நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்"* என்றார் (யோவான் 14:6). இயேசுவே சத்தியம்.




💥 வெளிச்சமும் சத்தியமும் தேவனுடைய பிரசன்னத்திற்கு நம்மை வழிநடத்துகின்றன. வெளிச்சமும் சத்தியமும் தேவனே. எனவே, *தேவன் தம்முடைய பிள்ளைகளைத் தம்மிடம் வழிநடத்துகிறார்.* இவ்வாறு, பாவம் மற்றும் சோதனையின் மீது வெற்றிபெற்று தேவனுடைய சாயலில் வளர, *நாம் வெளிச்சமும் சத்தியமுமான இயேசுவையே சார்ந்திருக்க வேண்டும்.* அப்போது நாம் ஜெயிப்போம்.




💥 சங்கீதக்காரன் கூறுகிறான்: *"உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது."* (சங்கீதம் 119:105). தேவனுடைய வசனம் நம்மை அவரிடத்திற்கு வழிநடத்தும் வெளிச்சமாயிருக்கிறது. இயேசுவின் வார்த்தைகள்: “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; *உம்முடைய வசனமே சத்தியம்.”* (யோவான் 17:17). தேவனுடைய வசனமே நம்மை அவரிடத்திற்கு வழிநடத்தும். சத்தியமாயிருக்கிறது. இவ்வாறு, *தேவனுடைய வார்த்தையின் மூலம், இயேசு வெளிச்சமாகவும் சத்தியமாகவும்* செயல்படுகிறார்.




💥 தேவன் தம்முடைய *வெளிச்சத்தையும் சத்தியத்தையும்* நம்முடைய ஆத்துமாவுக்குள் அனுப்பும்போது, அவைகள் நம்முடைய எல்லா ஜெபங்களிலும், நம்முடைய எல்லா இலக்குகள் மற்றும் விருப்பங்களிலும்* நம்மை *பரலோகத்தை நோக்கி வழிநடத்தும்.*




💥 தன்னுடைய ஜெபத்திற்கு தேவன் பதிலளித்ததால், தேவனுடைய பீடத்தண்டைக்கும், தனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிற தேவனிடத்திற்கும் பிரவேசிப்பதாகவும் சங்கீதக்காரன் அறிவிக்கிறான். *நம்முடைய ஜெபங்களுக்குப் பதில் கிடைக்கும்போதெல்லாம், நாம் எப்போதும் தேவனுடைய பிரசன்னத்திற்குத் திரும்பி, அவர் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் அவருக்கு நன்றி செலுத்தித் துதிக்க வேண்டும்.*




🔹 *தேவனுடைய வார்த்தையின் வழிகாட்டுதலுக்கு நாம் உண்மையிலேயே நம் மனதையும் இருதயத்தையும் ஒப்படைத்துவிட்டோமா?*




✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:




1️⃣ *தேவன் தம்முடைய வெளிச்சத்தையும் சத்தியத்தையும் நம்முடைய ஆத்துமாவுக்குள் அனுப்பும்போது, நாம் பரலோக சிந்தையைத் தரித்துக்கொள்வோம்.*

2️⃣ *தேவனுடைய வசனமே வெளிச்சமும் சத்தியமுமாயிருந்து நம்மை அவரிடத்திற்கு வழிநடத்தும்.*

3️⃣ *பாவம் மற்றும் சோதனையின் மீது வெற்றிபெற, நாம் வெளிச்சமும் சத்தியமுமான இயேசுவையே சார்ந்திருக்க வேண்டும்.*

4️⃣ *நம்முடைய ஜெபங்களுக்குப் பதில் கிடைக்கும்போதெல்லாம், நாம் எப்போதும் தேவனுடைய பிரசன்னத்திற்குத் திரும்பி, அவர் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் அவருக்கு நன்றி செலுத்தித் துதிக்க வேண்டும்.*

Dr. எஸ். செல்வன்

சென்னை


கர்த்தரோ என் மேல் நினைவாயிருக்கிறார்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~




சங்கீதம் 40: 17.




1. ஆம், வானத்தையும், பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள தேவன், நம்மை அவருடைய பிள்ளைகளாக மாற்றியிருப்பது மட்டுமல்ல, *ஒரு தகப்பன் தன் பிள்ளையை குறித்து எப்போதும் நினைவாயிருப்பது போல நம் மேல் நினைவாயிருக்கிறார்*. அப்படியானால் அவர் நம்மேல் பாராட்டும் அன்பு எத்தகையது என்பதை சிந்தித்து பார்ப்போம். *நாம் பாவமில்லாத பரிசுத்தவான்களாய் வாழ்ந்து, பரலோகம் சென்று சேர வேண்டும் என்பதே அவர் வாஞ்சை. அதற்காக தான் அவர் எப்போதும் நம் மேல் நினைவாகவே இருக்கிறார்.*




2. ஆகவே தான் அவர் ஒரு தகப்பன் தன் பிள்ளையிடம் பேசுவது போல, நீ *பயப்படாதே, நான் உன்னோடிருக்கிறேன். நீ என் பார்வைக்கு அருமையானவன். நீ என்னால் மறக்கப்படுவதில்லை* என்கிறார். ஏசாயா 43: 4, 5.




ஆனால் நாமோ பலவித துன்பங்கள், துயரங்கள், வியாதிகள், நிந்தைகள், நஷ்டங்கள் வழியாய் செல்லும் போது, *கர்த்தர் என்னை கைவிட்டார். ஆண்டவர் என்னை மறந்து விட்டார்* என நினைக்கிறோம், சொல்லுகிறோம். ஆனால் நம்மை பார்த்து, நம் கர்த்தர் ஒரு கேள்வி கேட்கிறார். *ஸ்தீரியானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை* என்கிறார்.




அதற்காக *அவர் நம்மை அவருடைய உள்ளங்கைகளில் வரைந்து வைத்திருக்கிறாராம்.* ஏசாயா 49: 14-16. உள்ளங் கைகளில் என்றால் நம் இரண்டு கைகளிலும் வரைந்து வைத்திருக்கிறார். நம் உள்ளங் கை எப்போதும் நம் கண்களுக்கு முன் இருக்கும் அல்லவா? ஆகவே அவரால் நம்மை மறக்க முடியாது. ஆகவே நம் மேல் எப்போதும் அவர் நினைவாகவே இருக்கிறார்.




3. ஆனால் *நாமோ அநேகமுறை அவரை விட்டு நம் முகங்களை மறைத்து விட்டு, பாவம் செய்கிறோம். ஆனால் அவரோ மனதுருகி, என் கிருபை உன்னோடிருக்கும் என நம் பாவங்களை மன்னித்து, அவருடைய கையில் அலங்காரமான கிரீடமாகவும், ராஜமுடியாகவும் ஆசீர்வதித்து வைத்திருக்கிறார்*. ஏசாயா 62: 3. இந்த அன்பை எண்ணி அவருக்கு நன்றி கூறுவோம்.




4.*ஒருவனை அவன் தாய் மறந்தாலும், நம் தேவன் நம்மை மறப்பதில்லை. தாயை போல நம்மை தேற்றுகிறார். தகப்பனை போல நம் கையை பிடித்து நடக்க பழக்குவிக்கிறார். நாம் நடக்க முடியாத வேளைகளில் தகப்பனை போல தூக்கி சுமக்கிறார். நாம் உயர பறக்க, தேவ பிரசன்னத்தில் வர, கீழே விழுந்து போகாதபடி, கழுகை போல செட்டைகளை விரித்து தூக்கி, ஆவிக்குரிய வாழ்க்கையில், உயர, உயர உன்னதத்திற்கு நேராக பறக்க கற்று தருகிறார்*. ஆம் இந்த அன்பின் தேவன், நம் தகப்பன் எப்போதும் நம் நினைவாகவே இருக்கிறார்.




5. நோவாவையும், குடும்பத்தையும், பேழையிலிருந்த மிருகங்களையும் நினைத்த போது ஜலம் அமர்ந்தது. அன்னாளை நினைத்தருளி சாமுவேலை கொடுத்தார். *இன்று நாம் எதிர்பார்த்திருக்கும் முடிவை நமக்கு கொடுக்கும் படி, அவர் நம் மேல் நினைத்திருக்கும் நினைவை அறிவேன்* என கர்த்தர் கூறுகிறார். எரேமியா 29: 11. ஆனால் நாம் பாவத்தை விட்டு மனந்திரும்பும் போது, கர்த்தரோ *நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்* என்கிறார். எரேமியா 31: 34.
ஆம், *கர்த்தரோ நம் மேல் நினைவாயிருக்கிறார்.* ஆமென். அல்லேலூயா.

*Dr. Padmini Selvyn*


*சங்கீதம் 40-44*

*ஜீவனுள்ள விசுவாசம்*..




தாவீது ,சங்கீதம் 42ஐ எந்தக் காலக்கட்டத்தில் எழுதினான்

என்ற விவரமான வரலாறு இல்லை.. ஆனால் அவன் தேவனுடைய உடன்படிக்கைப்

பெட்டியிருந்த எருசலேமிலே இல்லை..யோர்தான் தேசத்திலிருந்தான்..




அவ்வேளையிலே..தாவீது, தான்.. தேவனுடைய உறவையும் அவருடைய பிரசன்னத்தையும் இழந்ததுபோல தவித்தான்..

தேவன் தன்னை மறந்துவிட்டாரோ என்றும் கலங்கினான்..




மட்டுமல்ல தாவீது..

தேவன் மீதுள்ள தனது வாஞ்சையையும்..தேவனுடைய ஆலயத்திற்குத் தான் மகிழ்ச்சியோடு சென்று வந்த நாட்களையும்.. நினைத்து ஏங்கினான்.

தன் சத்துருக்கள், தன்னைக் குறித்துக் கூறுவதை நினைத்து, இரவும் பகலும் கண்ணீர் வடித்தான்.




ஆனாலும் தாவீது..

அப்படிப்பட்ட தனது பரிதாபமான சூழ்நிலையிலும்.. “ *என் ஆத்துமாவே*, *நீ ஏன்* *கலங்குகிறாய்*..*ஏன் எனக்குள்* *தியங்குகிறாய்*.. *தேவனை* *நோக்கிக் காத்திரு*..”

( சங்.42 : 11 )

கர்த்தர் இரட்சிப்பார் என்று ..

தனக்குள்ளே நம்பிக்கையான வார்த்தைகளைச் சொல்லித் தன்னைத்தானே தேற்றிக்கொண்டான். தொடர்ந்து விசுவாசத்தோடு கர்த்தரைப் பாடினான். அவரைத் துதித்தான்.




இன்றும்.. தேவன் உங்களை மறந்தது போன்ற சில சூழ்நிலைகள் ..உங்களைக்

கைவிட்டது போன்ற சில அனுபவங்கள் உண்டாகலாம்..

கர்த்தரைத் தேடினாயே,

கர்த்தருக்காக ஓடி ஓடி உழைத்தாயே, உனக்கு என்ன கிடைத்தது என்று மற்றவர்களால் நீங்கள் பரிகசிக்கப்படலாம்..

அதனால் உங்கள் ஆத்துமா உங்களுக்குள்ளே தொய்ந்து போகும் நிலையும் ஏற்படலாம்..




பிரியமானவர்களே..சில நேரங்களில் நம் வாழ்க்கையில் நடக்கும் இத்தகைய சம்பவங்களை..நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது..

அப்படிப்பட்ட சூழ்நிலைகளிலே..

தேவனுடைய கரங்களில்

நம்மை ஒப்புவித்துவிட்டு..

அவருடைய வாக்குத்தத்தங்களை நம்பி.. நாம் அமர்ந்திருக்கவேண்டும்..

அந்த வாக்குத்தத்தங்களை

நாம் அறிக்கை செய்துகொண்டேயிருக்க வேண்டும்..

தேவன் தம்மை நம்புகிற

பிள்ளைகளை ஒருபோதும்

கைவிடமாட்டார் என்றும்

விசுவாசிக்கவேண்டும்..




*தாவீதின் ஜீவனுள்ள* *விசுவாசத்தினால்தான்*..

*தாவீது, மீண்டும் அரியணையில்* *அமர்ந்தான்*..

*நம்முடைய விசுவாசமும்* *ஜீவனுள்ளதாயிருந்தால்*....

*நமது வாழ்வின் இருள் விலகி*.. *வெளிச்சம் உண்டாகும்*.

*நம்முடைய புலம்பல்கள்*.. *துதிகளாக மாறும்*.

*நம்முடைய பள்ளத்தாக்கின்* *அனுபவம் நீங்கி.. மீண்டும் மலை* *உச்சிக்குச் செல்வோம்*..




*காரணம் தம்முடைய*

*சொந்தக் குமாரனென்றும்*

*பாராமல்*..

*நம்மெல்லாருக்காகவும்*

*அவரை ஒப்புக்கொடுத்தவர்*..

*அவரோடுகூட மற்ற* *எல்லாவற்றையும் நமக்கு*

*அருளுவது அதிக நிச்சயம்* *அல்லவா*..?

ஆமென்.🙏

மாலா டேவிட்


Mrs. Merin Gnanaraj

Covai

🎯தியான சங்கீதம் :

📍சங் 42

🎈கோராகின் புத்திரரிலுள்ள இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மஸ்கீல் (போதக) என்னும் தாவீதின் சங்கீதம்.




🎯தியானம்:

🎈இதே தலைப்பின் கீழ் உள்ள சங்கீதங்கள்

சங் 42 - 49,84, 85, 87, 88




🔸கோராகின் புத்திரர் பாடகர்குழு தலைவராக இருந்ததால் ,

🔸இந்த சங்கீதங்கள் அவர்களுக்கு ஒப்புவிக்கப்பட்டவை




🎯கோராகு யார்❓




🔸கோரான் புத்திரரின் குல பெரியவரான

🎈கோராகு - லேவி கோத்திரத்தார்.

🔸இவர் 250 மக்களை தமது வசம் சேர்த்துக் கொண்டு 🔸மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக புரட்சி செய்து,

🔸தேவனுக்கு எதிராக பாவம் செய்தவர்.

🔸அவரும் அவர் கூட்டத்தாரும் தேவனின் நியாயத்தீர்ப்பால்

🔸பூமி பிளந்து மண்ணில் புதைந்தனர் (எண் 16)




ஆனால்,

🎈பிற்காலத்தில் இந்த கோராகின் வம்சாவழியினர்

🎺சிறந்த இசைக்கலைஞர்களாக இருந்தனர்.

🎷அவர்களைத் தாவீது இசைக்குழு தலைவராக நியமித்தார் (1 நாளா 6:37)

🎻அவர்கள் பாடல்களை இசையமைத்து, கற்பித்து, பாடல் வேளைகளை வழி நடத்தினர்.




🎯சிந்தனைக்கு,




✍️இவர்களது மூதாதையர்கள் நியாயத்தீர்ப்புக்குள்ளாகி தண்டனையை அனுபவித்தவர்களாயிருந்தாலும்.




🎈தற்போதைய சந்ததியினர் நியாயதீர்ப்பிலிருந்து 🎹புதுபாடலின் அனுபவத்துக்கு அவர்கள் மாற்றப்பட்டிருந்தனர்.(சங் 40:1-3)




🔸ஒரு வேளை நம் முற்கால வாழ்வில் வெளியரங்கமாகவோ மறைமுகமாகவோ பாவங்களும் அதற்கான தண்டனைகளும் கிடைத்திருக்கலாம்.




🎈ஆனாலும் கிறிஸ்துவுக்குள் ஒரு புது வாழ்க்கையை நம்மால் தொடங்கி , தொடர முடியும்.




ஆமென்🙏.


Mrs. Jasmine Samuel

🔥 Chennai




💦 சிந்தனைத் துளிகள்




💦சிந்தை (41: 1)




⚡ சிறுமைப்பட்டவன் மேல் சிந்தை

உள்ளவன் பாக்கியவான்




⚡ பாக்கியவான் = ஆசிர்வதிக்கப்பட்டவன்




பிலி 2:5

⚡கிறிஸ்து இயேசுவில் இருந்த

சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது.




⚡ இயேசு கிறிஸ்து எப்பொழுதுமே

துன்பத்தில், கஷ்டங்களில்,

வியாதியில் ........

⚡சிறுமைப்பட்ட வர்கள் மேலேயே

அவருடைய சிந்தை இருந்து




⚡சிறுமைப்பட்டவர்கள் மேல்

மனதுருகி அவர்களுக்கு

அற்புதம் செய்தார்




தாவீது இன்று நமக்கு கொடுக்கும்

ஆலோசனை _ :

🤴 சிறுமைப்பட்டவர்கள் மேல்

நாம் சிந்தையாய் இருக்க வேண்டும்




🙇‍♂️ சிந்தனைக்கு :

1 ) நாம் பாக்கியம் பெறுவோம் (41:1)

2) தீங்கு நாளில் விடுவிக்கப்படுவோம் (41:1)

3) பாதுகாக்கப்படுவோம் (41:2)

4) கர்த்தர் நம்மை தாங்குவார்



மத்தேயு 25 : 35 - 37

⚡ பசியாயிருப்போருக்கு.... போஜனமும்

⚡தாகமாயிருப்போருக்கு ..... தண்ணீரும்

⚡ வஸ்திரமில்லாதோருக்கு .....வஸ்திரமும்

⚡ தனிமையாயிருப்போருக்கு ......ஆதரவும்

கொடுப்போம்




அப்பொழுது'.....

🤴 ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் .....

🤴தேவ ராஜ்யத்தின் பிள்ளைகளாவோம்




சிறுமைப்பட்டவன் மேல் சிந்தை

உள்ளவன் பாக்கியவான்

ஆமென்🙏
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.