வேதபகுதி: 1 கொரி 12:12-31*
"கவலையாயிருக்கும்படிக்கு"
*" சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக் குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படிக்கு, ........இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார் " - 1 கொரிந்தியர் 12:25*
*இன்றைய தியான வசனங்கள் முழுவதும் சபையைக்குறித்த ஆழமான காரியங்களைக் கூறுகின்றன. சபையில் அங்கம் வகிக்கும் அனைவரும் ஒன்றுபோல இருக்கமாட்டார்கள் என்றும், கனத்தில் குறைவுள்ளவர்கள் விசுவாசத்தில், தாலந்துகளில், திறமையில் குறைவுள்ளவர்கள் கட்டாயம் இருப்பார்கள் என்றும், மற்றவர்கள் அனைவரும் இப்படிப்பட்டவர்கள் மேல் அதிகக் கரிசனையுடையவர்களாயிருக்க வேண்டும் என்றும் ஆவியானவர் கூறுவதை நாம் காணலாம். இந்த ஆழமான, அவசியமான கருத்தைக் கூறும்போது, இதை விளங்கிக்கொள்ளும்படி, சபையை சரீரத்தோடு ஒப்பிட்டு அவர் கூறுகிறார். நம்முடைய சரீரத்தில் பலவீனமாக, அவலட்சணமாக இருக்கும் அவயங்களுக்கே அதிகமான அலங்கரிப்பு அவசியமாயிருக்கிறது என்று கூறி, சரீரத்தின் ஒவ்வொரு அவயவமும் ஒன்றுக்கொன்று கவலையாயிருக்கும்படிக்கே அப்படி வைத்திருக்கிறார் என்றும் கூறுகிறார்.*
*கண்ணானது மற்ற உறுப்புகளுக்கு சேதம் வரக்கூடாது என்று பார்த்து பார்த்து செயல்படுகிறது. கண்ணுக்கு சேதம் வரக்கூடாது என்று கரங்கள் செயல்படுகிறது. இப்படியே சபை முழுவதும் இருக்கவேண்டும் என்பது தேவனுடைய திட்டமாயிருக்கிறது. தேவன் எதிர்பார்க்கிறபடியே சபை இருக்குமானால் அது எவ்வளவு ஆசீர்வாதமாயிருக்கும். யோசித்து பார்க்கும் போதே நம்முடைய உடம்பு சிலிர்க்கிறது. ஒவ்வொருவரும் மற்றவர்களைக் குறித்து கரிசனை உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பது மையக் கருத்தாகும்.*
*பிரியமானவர்களே! இதற்காக நாம் பாரத்தோடு ஜெபிப்போம். எங்கள் சபையை இவ்விதமாய் மாற்றும் ஆண்டவரே என்று போராடுவோம். நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை நம்மிலிருந்து தொடங்குவோம். நாம் மற்றவர்களைக் குறித்துக் கரிசனை உள்ளவர்களாக இருப்போம். அவர்களுக்காக ஜெபித்து, செயல்படுவோம். அப்பொழுது தேவ சித்தம் நிறைவேறும்; தேவ ராஜ்யமும் கட்டப்படும். அல்லேலூயா !*
*" ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள் ” - கலா 6:2*
🤔 *சிந்தனைக்கு* 🤔
*! பிறர் மேலுள்ள கரிசனையே தேவ சித்தம் !*
*Today’s Bible Reading: 1 Corin.12:12-31*
*TO BE WORRIED*
*“So that there should be no division in the body, but that its parts should have equal concern for each other.” - 1 Corin.12:25*
*Today's meditation verses are full of profound things about the church. We can see that the Spirit says that not all members of the church will be the same, and that there will necessarily be those who are less in weight, less in faith, less in talents, less in ability, and that all others should be more concerned about such people. In making this deep and necessary point, he compares the church to a body to make it clear. He says that the parts of our body that are weak and needy need more care, and he says that every part of the body is concerned with each other.*
*The eye works to ensure that other organs are not damaged. The arms work to avoid damage to the eye. It is God's plan that the whole church should be like this. What a blessing it would be if the church was as God expected it to be? Just thinking about it makes our body shiver. The theme is that everyone should be considerate of others.*
*Beloved, for this we will pray with burden. Let us fight, "Lord, change our church like this." Let the change we seek begin with ourselves. We will be considerate of others. Let us pray and act for them. Then God's will will be fulfilled and God's kingdom will be built. Hallelujah!*
*“Carry each other’s burdens, and in this way you will fulfill the law of Christ.” - Gal.6:2*
🤔 *For Thought* 🤔
*CARING FOR OTHERS IS THE WILL OF GOD.*
*வேதபகுதி: 1 யோவான் 3:1-24*
*" வெளிப்பட்டார் "*
*" பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான்; பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார் " - 1 யோவான் 3:8*
*தேவகுமாரனாகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்தப் பூமிக்கு வெளிப்பட்டதன் காரணங்கள் பல உண்டு. அதில் ஒரு காரணம்தான் இன்றைய தியான வசனமாகும். பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும் படிக்கே மனுஷகுமாரன் வெளிப்பட்டார் என்பதை நாம் பார்க்கும்போது, நமக்குள் மிகப் பெரிய சந்தோஷம் உண்டாகிறது. சாத்தான் என்ன காரியங்களைச் செய்தாலும், எப்படியெல்லாம் நம்மை வீழ்த்த நினைத்தாலும் அவனுடைய காரியங்கள் அனைத்தையும் ஒன்றுமில்லாமல் ஆகச்செய்து நம்மை காப்பாற்றி வாழவைப்பவர் இயேசு. எனவே, சாத்தானைக் கண்டு நாம் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவனுடைய கிரியைகளைக் கண்டு நாம் கவலைப்பட வேண்டிய அவசியமுமில்லை. காரணம், அவன் என்ன செய்தாலும் அவைகளை நிர்மூலமாக்குகிற இயேசு நம்மோடுகூட இருக்கிறாரே.*
*தேவனுடையவர்கள் மேல்தான் சாத்தானுடைய கண்கள் இரவும் பகலும் இருக்கிறது. எப்படியாவது அவர்களை வீழ்த்தும்படி அவன் போராடுகிறான். இதற்காக அவன் பல காரியங்களைச் செய்கிறான். இயேசுவையும் அவருடைய வல்லமையையும் சரியாக அறியாத மக்கள் சாத்தானுடைய வலையில் சிக்கி, கடைசியில் சிதைந்து போகிறார்கள்; அவனுடைய கிரியைகளை கண்டு பயந்து போகிறார்கள். ஆனால் இயேசுவையும் அவருடைய வல்லமையையும் அறிந்தவர்களோ, அவனையும், அவனுடைய தந்திரங்களையும் ஜெயித்து ஆசீர்வாதமாக வாழ்கிறார்கள்.*
*பிரியமானவர்களே ! சாத்தானுடைய கிரியைகளைக் கண்டு நாம் ஒருக்காலும் பயப்படக்கூடாது. நம்முடைய உறவு இயேசுவோடு நல்ல நிலையில் இருக்குமானால், அவர் அவனுடைய கிரியைகளை நிர்மூலமாக்கிவிடுவார். அவன் எத்தனை தடவை முயன்றாலும், அவனுக்குத் தோல்விதான். எனவே, நாம் எப்பொழுதும் இயேசுவோடுகூட இருப்போம், ஜெயமாக வாழுவோம். அல்லேலூயா !*
*" நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம் " - 1 கொரி 15:57*
🤔 *சிந்தனைக்கு* 🤔
*! பிசாசின் கிரியைகள் எப்போதும் இயேசுவின் காலுக்குக் கீழே !*
Today’s Bible Reading: 1 John 3:1-24*
*APPEARED*
*“The one who does what is sinful is of the devil, because the devil has been sinning from the beginning. The reason the Son of God appeared was to destroy the devil’s work.” - 1 John 3:8*
*There are many reasons why the Lord Jesus Christ, the Son of God, appeared on this earth. One of the reasons is today's meditation verse. When we see that the Son of Man was revealed to destroy the works of the devil, we are filled with great joy. No matter what Satan does, no matter how he tries to bring us down, it is Jesus who makes all his works come to naught and saves us and gives us life. Therefore, we do not need to fear Satan. We don't need to worry about his actions. The reason is that Jesus is with us who destroys whatever he does.*
*Satan's eyes are on God's people day and night. He struggles to somehow bring them down. For this he does many things. People who do not properly know Jesus and His power are trapped in Satan's power and eventually become corrupt. Seeing his deeds, they get scared. But those who know Jesus and his power overcome him and his tricks and live blessed lives.*
*Beloved, we must never fear the works of Satan. If our relationship is in good standing with Jesus, He will undo his works. No matter how many times he tries, he fails. Therefore, we will always be with Jesus and live victoriously. Hallelujah.. Amen!*
*“But thanks be to God! He gives us the victory through our Lord Jesus Christ.” - 1 Corin.15:57*
🤔 *For Thought* 🤔
*THE WORKS OF THE DEVIL ARE ALWAYS UNDER THE FEET OF JESUS.*
*வேதபகுதி: 2 கொரி 7:1-16*
*"துக்கம்"*
*" தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது ” - 2 கொரிந்தியர் 7:10*
*இன்றைய தியான வசனம் இரண்டுவிதமான துக்கத்தைக் குறித்துப் பேசுகிறது. ஒன்று தேவனுக்கேற்ற துக்கம், இன்னொன்று லௌகிக அதாவது உலகத்தின் துக்கம். தேவனுக்கேற்ற துக்கம் இரட்சிப்புக்கேற்ற மனந்திரும்புதலையும், உலகத்துக்கேற்ற துக்கம் மரணத்தையும் உண்டாக்குகிறது. இவைகளைப் பார்க்கும்போது தேவனுக்கேற்ற துக்கம் நமக்கு மிகுந்த ஆசீர்வாதம் என்பதை நாம் மறந்து போகக்கூடாது. தேவனுக்கேற்ற துக்கம் என்றால் என்ன? நாம் வேத வசனங்களைப் படிக்கும்போது, ஐயோ ! நம்மால் இவ்வாறு வாழ முடியவில்லையே ! தேவன் என்மேல் அன்பாயிருந்து, எனக்கு அளவற்ற நன்மைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது, தேவனுக்கேற்றபடி என்னால் வாழ முடியவில்லையே, தேவனுக்காக சாதிக்க முடியவில்லையே என்ற எண்ணம் நமக்குள் எழும்பி நம்மை வாதிக்கும் போது உண்டாகிற துக்கம், நம்மை தேவனண்டைக்குச் சேர்க்கிறது.*
*ஜனங்கள் அனைவரும் கொத்துக் கொத்தாய் மடிந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் போதும், தேவனுடைய அக்கினி பற்றியெரிந்து கொண்டிருக்க வேண்டிய பிரசங்க பீடங்களெல்லாம் அனலுமின்றி குளிருமின்றி இருப்பதைக் காணும்போதும், ஐயோ ! தேவனே எங்களுக்கு இரங்கமாட்டீரா என்று கண்ணீரோடு கெஞ்சும்போது உண்டாகிற துக்கம் தேவனுக்கேற்றது. இவ்வாறு தேவனுக்கேற்ற துக்கம் நமக்கு மிகுந்த ஆசீர்வாதம்.*
*ஆனால், இன்றைய பரிதாபம் என்ன தெரியுமா? தேவனுக்கேற்ற துக்கத்தால் நிரம்பியிருக்க வேண்டியவர்கள், உலகத்தின் துக்கத்தால் நிரம்பி இருப்பதுதான் மிகப் பெரிய வேதனை. தேவனுக்கேற்றபடி துக்கப்பட ஆட்கள் இல்லை. பிரியமானவர்களே ! உங்களுக்கு தேவனுக்கேற்ற துக்கம் உண்டா? உங்களுடைய கண்கள் தேவனுக்குரியவைகளுக்காக எப்பொழுதாவது கண்ணீர் சிந்தியிருக்கிறதா? இனிமேல் நம்முடைய கண்கள் தேவனுக்குரியவைகளுக்காகக் கண்ணீர் விடட்டும், தேவ ராஜ்யமும் கட்டப்படட்டும். ஆமென்.*
*" இவைகளினிமித்தம் நான் அழுகிறேன்; என் கண், என் கண்ணே நீராய்ச்சொரிகிறது " - புலம்பல் 1:16*
----------------------------------------------------------
🤔 *சிந்தனைக்கு* 🤔
*! தேவனுக்குரியவைகளுக்கான கவலை தேவனிடத்திலிருந்து வரும் ஆசீர்வாதம் !*
*Today’s Bible Reading: 2 Corin.7:1-16*
*SORROW*
*“Godly sorrow brings repentance that leads to salvation and leaves no regret, but worldly sorrow brings death.” - 2 Corin.7:10*
*Today's meditation verse talks about two types of grief. One is sorrow for God, and the other is sorrow for the world. Grief for God produces repentance for salvation, sorrow for the world produces death. When we see these things, we should not forget that Godly sorrow is a great blessing to us. What is godly sorrow? When we read the scriptures, alas, we cannot live like this. When God is loving me and giving me immeasurable benefits, the thought that I could not live according to God and could not achieve for God arises in us and affects us.*
*When you see all the people dying in bunches, and when you see that all the pulpits that should be burning by the fire of God are without heat and without cold, the grief that occurs when you plead with tears that oh God, won't you come down to us, is for God. Thus godly sorrow is a great blessing to us.*
*But you know what's so sad about today? Those who should be filled with sorrow for God are filled with the sorrow of the world. There are no people to mourn according to God. Beloved, do you have godly sorrow? Have your eyes ever shed tears for the things of God? Henceforth let our eyes shed tears for the things of God, and let the kingdom of God be built. Amen!*
*“This is why I weep and my eyes overflow with tears.” - Lamen.1:16*
🤔 *For Thought* 🤔
*CONCERN FOR GOD’S THINGS IS A BLESSING FROM GOD.*
Brother J. Daniel
Yesuveh Aatharam Ministries
1/1711, 1st Floor, T.H. Road,
Gandhi Nagar, Red Hills,
Chennai – 600 052
Mobile: +919940018988
Email id: jesusthefoundation@gmail.com
You tube: Yesuveh Aatharam
Thanks for using my website. Post your comments on this