Type Here to Get Search Results !

பயப்படவும் கலங்கவும் வேண்டாம் | THEY TOO HAVE SIDED | Daniel J Bible Sermon's Tamil | தின தியான குறிப்புகள் | Jesus Sam

வேதபகுதி: அப் 4:1-20*
" சினங்கொண்டு "

*" அவர்கள் ஜனங்களுக்கு உபதேசிக்கிறதினாலும், இயேசுவை முன்னிட்டு, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதலைப் பிரசங்கிக்கிறதினாலும், சினங்கொண்டு " - அப்போஸ்தலர் 4 : 2*


*ஆசாரியர்கள் தேவாலயத்துச் சேனைத் தலைவன், சதுசேயர் (அத்தனை பேர்களும் ஊழியர்கள்) இவர்கள் அனைவருக்கும் அப்போஸ்தலர்கள் மேல் கடுங்கோபம் வந்தது. இதினிமித்தமாக அவர்களைப் பிடித்துக் காவலில் வைத்தார்கள். இப்படிப் பிடித்துக் காவலில் வைக்கும்படியாக அப்போஸ்தலர்கள் செய்த தவறு என்ன? இயேசுவையும், உயிர்த்தெழுதலையும் அவர்கள் பிரசங்கித்தார்கள். இவைகளை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவேதான் அப்போஸ்தலர்கள் மேல் அவர்களுக்குக் கோபம் வந்தது. இப்போது இருப்பவைகள் தேவாலயம் அல்ல, இவைகள் அனைத்தும் ஜெப ஆலயங்கள்தான். ஜெப ஆலயமாயிருப்பதினால் பலிபீடம் என்பது இப்போது இல்லை, இப்போது இருப்பது வெறும் மேடைதான். பழைய ஏற்பாட்டில் ஆசாரியர்கள் என்பவர்கள் ஒரு குறிப்பிட்ட சாரார் மட்டும்தான். ஆனால் புதிய ஏற்பாட்டில் இரட்சிக்கப்பட்ட அனைவருமே ஆசாரியர்கள். எனவே, அனைவரும் ஆசாரிய ஊழியத்தைச் செய்ய வேண்டும் என்று சொல்லிப் பாருங்களேன். அவ்வளவுதான், நம்மை அந்திக்கிறஸ்து என்று முத்திரை குத்தி, நம்மை ஒரு வழியாக்காமல் விடமாட்டார்கள் ஒரு சிலர்.*


*பிரியமானவர்களே! சத்தியத்தைப் பேசுகிறவர்களுக்கு, தேவ பக்தியை ஆதாயத் தொழிலாகக் கொண்டிருப்பவர்களும், ஊழியத்தினால் மனிதர்களுடைய மகிமையை எதிர்பார்க்கிறவர்களும், இன்றும் சத்துருக்கள்தான். சத்தியத்தைப் பேசுகிறவர்களுக்கு எதிர்த்து நின்று, அவர்களை தூஷித்து, அவர்கள்மேல் வீண் பழிகளை சுமத்தி, எப்படியாயினும் அவர்களை அடக்கிவிட வேண்டும் அல்லது அழித்தே விடவேண்டும் என்று போராடுவார்கள். ஆனாலும்,தேவன் அவர்களை இவர்கள் கையில் விடுவதில்லை. நாம் என்ன செய்ய வேண்டும் ? சத்தியத்தைப் பேசுபவர்களுக்காக ஊக்கமாக ஜெபிக்க வேண்டும். அவர்களுக்கு எல்லாவிதங்களிலும் நாம் உதவியாயிருக்க வேண்டும். நாம் இப்படிச் செய்யும் போது, தேவ சித்தம் நிறைவேறும், தேவனுடைய ராஜ்யம் கட்டப்படும். அல்லேலூயா !*


*" எனக்கு அளிக்கப்பட்ட கிருபையை அறிந்தபோது ........ வலது கை கொடுத்து " - கலா 2:9*
🤔 *சிந்தனைக்கு* 🤔
    *! சத்தியத்தைப் பேசுகிறவர்கள் பரலோகப் பிரதிநிதிகள் !*


*Today’s Bible Reading: Acts 4:1-20*
*DISTURBED*
*“They were greatly disturbed because the apostles were teaching the people, proclaiming in Jesus the resurrection of the dead.” - Acts 4:2*


*The priests, the captain of the church, and the Sadducees (All are servants) were very angry with the apostles. For this they were arrested and taken into custody. What did the apostles do wrong to be arrested and detained like this? They preached Jesus and the resurrection. They could not accept these. That is why they got angry with the apostles. The ones that exist now are not churches, they are all synagogues. Being a synagogue, the altar is no longer there. Now it is just a stage. Priests in the Old Testament were only a specific group. But in the New Testament all the saved were priests. So, are you saying that everyone should do priestly work? That's it. A few will label us "antichrist" and they cannot tolerate with it.*


*Beloved, to those who speak the truth, those who make godliness their business of gain, and those who seek the glory of men by their service, are enemies even today. They will stand against those who speak the truth, slander them, cast vain accusations against them, and fight to suppress them, or to destroy them at all costs. However, God does not leave them in their hands. What should we do? Pray fervently for those who speak the truth. We should help them in every way. When we do this, God's will will be fulfilled and God's kingdom will be built. Hallelujah!*


*“Gave me…………….. the right hand of fellowship when they recognized the grace given to me.” - Gal.2:9*

🤔 *For Thought* 🤔
*THOSE WHO SPEAK THE TRUTH ARE REPRESENTATIVES OF HEAVEN.*


*வேதபகுதி: 1 சாமுவேல் 22:1-23*
*" அவர்கள் கையும் "*
*" நீங்கள் போய், கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொல்லுங்கள்; அவர்கள் கையும் தாவீதோடே இருக்கிறது " - 1 சாமு 22:17*


*தேவன் தாவீதோடு இருக்கிறார் என்று அறிந்த சவுல், தாவீதுக்கு உதவி செய்த ஆசாரியர்களையும் கொலை செய்யும்படி கட்டளையிடுகிறான். தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டிருந்த சவுலுக்குள் இருந்த பதவி வெறி அவனை எப்படி ஆக்கிவிட்டது பார்த்தீர்களா ! ஆசாரியர்களைக் கொலை செய்யும்படி இவன் கட்டளையிட்டான். அதாவது தேவனுடைய ஊழியர்களைத் கொலை செய்யும்படி இவன் கட்டளையிட்டான். இந்தத் துணிவு எங்கிருந்து, அவனுக்கு வந்தது? எப்படி வந்தது? எதினால் வந்தது? இவை எல்லாவற்றிற்கும் பதவி வெறியே காரணமாகும். தன்னுடைய பதவி வேறு ஒருவருக்கு சென்றுவிடக்கூடாது என்ற வெறி.*


*ஆசாரியர்களைக் கொலை செய்யும்படி கட்டளையிட என்ன காரணம்? இவர்கள் தாவீதுக்கு உதவியாயிருந்தார்கள். தாவீது, தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவன். தேவன் அவனைத் தெரிந்துகொண்டார். தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டு, அபிஷேகம் பண்ணப்பட்டவர்களுக்குத் துணையாயிருப்பதுதான் நம்முடைய கடமையாகும். இவ்வாறு தேவனுடைய ஊழியர்களையும், தேவனுடையவர்களுக்குத் துணையாயிருப்பவர்களையும் கொலை செய்யத் துடித்த சவுலுக்குள் பொல்லாத ஆவி இருந்தது. எனவேதான் தாவீதுக்கு உதவி செய்த ஆசாரியர்களை கொலை செய்ய கட்டளையிட்டான்.*


*பிரியமானவர்களே ! நாம் என்ன செய்கிறோம். தேவனுடையவர்களுக்கு உதவியாய் அவர்களுக்குக் கைகொடுக்கிறோமா? எல்லாவிதங்களிலேயும் அவர்களுக்கு உதவிசெய்து வருகிறோமா? தேவனுடையவர்களுக்கு உதவி செய்வதினால் நமக்கு எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அவைகள் அனைத்துமே நமக்கு ஆசீர்வாதம்தான். நமக்கு வரும் எல்லா பிரச்சனைகளையும் தேவன் பார்த்துக்கொள்ளுவார். எனவே பிரச்சனைகளைக் கண்டு கலங்காமலும் பயப்படாமலும் இருப்போம். தேவனுடையவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து, அவர்களுடைய இக்கட்டுக் காலத்தில் அவர்களுக்கு உதவி செய்வோம். அப்பொழுது தேவனாகிய கர்த்தர் நம்மோடிருந்து நம்மை ஆசீர்வதிப்பார். அல்லேலூயா !*


*" ...அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் " - மத் 26 : 13*

🤔 *சிந்தனைக்கு* 🤔
*! ஊழியர்களுக்கு உதவி செய்பவர்கள் ஆசீர்வாதத்தின் பங்காளிகள் !*


*Today’s Bible Reading: 1 Samuel 22:1-23*
*THEY TOO HAVE SIDED*
*“Turn and kill the priests of the Lord, because they too have sided with David.” - 1 Samuel 22:17*


*Knowing that God is with David, Saul orders the priests who helped David to be killed. Have you seen how the frenzy for power in Saul who was anointed by God has made him? He ordered the priests to be killed. That is, he ordered to kill the God's servants. Where did he get this courage? How did it come about? Why did it come? All this is due to greed for power. A frenzy not to let his position go to someone else.*


*What was the reason for ordering to kill the priests? They helped David. David was anointed by God. God knew him. Our duty is to help those who have been chosen and anointed by God. Thus there was an evil spirit in Saul that sought to kill the servants of God and those who were companions of God. That is why, he ordered to kill the priests who helped David.*


*Beloved !What are we doing? Do we lend a helping hand to God's people? Are we helping them in every way? Helping God's people, no matter how many problems we face, all of them will become blessings for us. God will take care of all our problems. So let us not be troubled and afraid of problems. Let us know what God's people need and help them in their time of trouble. Then the Lord God will be with us and bless us. Hallelujah!*


*“Wherever this gospel is preached throughout the world, what she has done will also be told, in memory of her.” - Matthew 26:13*
🤔 *For Thought* 🤔
*THOSE WHO HELP THE SERVANTS ARE PARTAKERS OF THE BLESSING.*


*வேதபகுதி: உபாகமம் 31:1-30*
*" பயப்படவும் கலங்கவும் "*

*" அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை ; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான் " - உபா 31:8*


*தன்னுடைய மரணத்துக்குப் பின்பு, இஸ்ரவேல் ஜனங்களை வழி நடத்த தலைவர் இல்லாதிருந்தால், அவர்களுடைய நிலைமை கஷ்டமாகிவிடும் என்றும், கானானை சுதந்தரிக்கும் படி தேவனுடைய வார்த்தைகளை நம்பி, எகிப்தைவிட்டு புறப்பட்டு வந்தவர்கள் இன்னும் கானானை சுதந்தரிக்கவில்லை என்றும், இஸ்ரவேலர்கள் கானானை சுதந்தரிக்க வேண்டும் என்றால் அவர்களை நடத்துவதற்கு ஒரு தலைவன் வேண்டும் என்று அறிந்த மோசே, தலைவனைத் தெரிந்தெடுக்கும் வேலையை தேவனிடமே விட்டு விட, தேவன், யோசுவாவை தலைவனாக தெரிந்தெடுத்தார். உடனே யோசுவாவைப் பார்த்து, அவனுக்குத் தேவையான ஆலோசனைகளை மோசே கூறும்போது, நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம். தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்னே போவார். அவர் உன்னோடே இருப்பார் என்றான்.*


*மிகப்பெரிய பொறுப்பு யோசுவாவின் தலையில் விழுந்தது. இஸ்ரவேலர்கள் அனைவரையும் கானானுக்குள் பிரவேசிக்கச் செய்து, அவர்களுக்கு அந்த தேசத்தை பங்கிட்டுக்கொடுக்க வேண்டும். இந்தக் காரியம் யோசுவாவுக்கு மிகப்பெரிய காரியமாகத் தெரிகிறது. ஆனாலும் தேவனாகிய கர்த்தர் அவனோடுகூட இருக்கிறபடியால் அவன் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து, தன்னுடைய வேலையை வெற்றிகரமாகச் செய்து முடித்தான். இஸ்ரவேலர்களும் கானானை சுதந்தரித்தார்கள்.*


*பிரியமானவர்களே ! நமக்கு முன்பாக மிகப் பெரிய சவால்கள் எழும்பி நிற்கும்போது, அவைகளைக் கண்டு நாம் பயந்துவிடக்கூடாது. இவைகளை எப்படி நான் சாதிப்பேன் என்று கலங்கிவிடக்கூடாது. அதற்குப் பதிலாக, நம்மை அழைத்து, அபிஷேகம்பண்ணின தேவனை நோக்கிப்பார்க்க வேண்டும். தேவன் நமக்கு உதவி செய்வார் என்று விசுவாசிக்க வேண்டும். தேவன் தம்முடைய வார்த்தைகளை நிறைவேற்ற வல்லமையுள்ளவர் என்று விசுவாசித்து, பயப்படாமல் இருக்க வேண்டும். வாக்குப்பண்ணினவர் மாறாதவராயிருந்து நிச்சயம் நம்மை ஆசீர்வதிப்பார். அல்லேலூயா !*


*" சகல கிரியைகளையும் நீ முடித்துத் தீருமட்டும், அவர் உன்னை விட்டு..... கைவிடவுமாட்டார் " -1 நாளா 28:20*
🤔 *சிந்தனைக்கு* 🤔
    *! தேவனுடைய வார்த்தைகளே தேவப்பிள்ளைகளின் பெலன் !*


*Today’s Bible Reading: Deuteronomy 31:1-30*
*AFRAID AND DISCOURAGED*

*“He will never leave you nor forsake you. Do not be afraid; do not be discouraged.” - Deut.31:8*

*After his death, Moses knew that if there was no leader to lead the people of Israel, their situation would be difficult, and those who had left Egypt to inherit Canaan, believing God's words, had not yet inherited the covenant, and if the Israelites were to inherit Canaan, they needed a leader to lead them, Moses left the work of choosing the leader to God. God chosen Joshua as leader. When Moses looked at Joshua and gave him the advice he needed, he said, "Don't be afraid and don't be dismayed, the Lord God will go before you. He will be with you."*


*The greatest responsibility fell on Joshua. To bring all the Israelites into the land and give them the land. This seems like a big deal for Joshua. But because the Lord God was with him, he did not fear or worry and successfully completed his work. The Israelites also inherited Canaan.*


*Beloved, when great challenges arise before us, we must not be daunted by them. Don't worry about how I will achieve these things. Instead we should look to God who has called and anointed us. We have to believe that God will help us. Believe that God is able to fulfill His words and do not fear. He who has promised remains unchanging and will surely bless us. Hallelujah!*

*“He will not fail you or forsake you until all the work ……..is finished.” - 1 Chro.28:20*

🤔 *For Thought* 🤔
God's words are the strength of God's children.

Brother J. Daniel
Yesuveh Aatharam Ministries
1/1711, 1st Floor, T.H. Road,
Gandhi Nagar, Red Hills,
Chennai – 600 052
Mobile: +919940018988
Email id: jesusthefoundation@gmail.com
You tube: Yesuveh Aatharam

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.