வேதபகுதி: எபேசியர் 6:1-24
" பலனை அடைவான் "
*" அவனவன் செய்கிற நன்மையின்படியே கர்த்தரிடத்தில் பலனை அடைவானென்று அறிந்து " - எபே 6:7*
*இந்த உலகில் வாழும் நாம் அனைவருமே ஏதோ ஒரு இடத்தில், ஏதோ ஒரு வேலையைச் செய்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு நாம் வேலை செய்யும்போது, நாம் செய்யும் வேலைக்கு ஏற்ற பலன் சில நேரம் நமக்குக் கிடைக்கிறது, சில வேளைகளில் நமக்குக் கிடைக்காமல் போகிறது. பலன் கிடைக்காதபோது நம்முடைய இருதயம் சோர்ந்து போகிறது. நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு என்ன பிரயோஜனம்? நாம் கஷ்டப்பட்டதற்கு ஏற்ற பலன் நமக்குக் கிடைக்கவில்லையே என்று நினைத்து, நாம் செய்யும் வேலையை உற்சாகமாய் செய்ய முடியாமல், கடமைக்காகச் செய்யவேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்படுகிறோம். அனைவருமே இப்படிப்பட்ட மனநிலைமையில்தான் இருக்கிறோம்.*
*தேவப்பிள்ளையே ! இன்றைய தியான வசனத்தைப் படித்துப் பார்த்து, அதை விசுவாசித்தால், நமக்குள் சோர்வே வராது, எந்தச் சூழ்நிலையிலும் சோர்ந்து போகமாட்டோம். நாம் செய்யும் ஒவ்வொரு கிரியைகளுக்கும், நன்மைகளுக்கும் ஏற்ற பலனை தேவன் நமக்குக் கட்டளையிடுவார் என்று வேதம் கூறும்போது, நாம் வேலை செய்யும் இடத்தில் நமக்கு எஜமானாக இருப்பவர்கள் நமக்கு ஏற்ற பலனைக் கொடுத்தாலும், கொடுக்காமல் போனாலும், தேவன் நமக்குப் பலன் கொடுப்பார் என்ற நம்பிக்கையினால் இன்னும் உற்சாகமாய் வேலை செய்யலாம். மோசேக்கு உண்மையாயிருந்த யோசுவாவுக்கு தேவன் பலனளித்தார்; அவனை உயர்த்தினார். ராஜாவுக்கு உண்மையாயிருந்த தானியேலை தேவன் உயர்த்தினார். இவ்விதமாய் ஏராளமான உதாரணங்கள் வேதத்தில் உண்டு. கண்களில் காண்கிற எஜமானை நாம் நம்புவதைப் பார்க்கிலும், கண்களால் பார்க்கமுடியாத பரம எஜமானை நம்புவோம். நாம் செய்யும் ஒவ்வொரு நன்மைகளையும் அவர் மறந்து போகமாட்டார். அதற்கேற்ற பலனைக் கொடுக்க மறக்கவுமாட்டார். எனவே, உற்சாகமாய் நம்முடைய கடமைகளைச் செய்வோம். தாராளமாய் பிறருக்கும் உதவிசெய்வோம். கர்த்தர் அவைகளுக்கேற்ற பலனை நமக்குத் தந்து நம்மை ஆசீர்வதிப்பார். அல்லேலூயா !*
*" தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார் " - ரோமர் 2:6*
🤔 *சிந்தனைக்கு* 🤔
*! உண்மையும் உழைப்பும் நிச்சயம் உயர்வைத் தரும் !*
Today’s Bible Reading: Ephesians 6:1-24
HE WILL GAIN FAVOUR
*“Remember that the Lord will reward each one of us for the good we do"*– *Eph.6:8*
*All of us living in this world are doing some kind of work in some places. Thus when we work, sometimes we get the benefit of our work, sometimes we don't get it. When there is no fruit, our hearts gets weary. We think, "What is the use of how hard we work? We don't get the results we are working hard for." We are all in this state of mind.*
*Child of God ! If we read today's meditation verse and believe it, we will not get weary. We will not get tired under any circumstances. When the scripture says that God will command us a reward according to every work and good we do, those who are our masters in the place where we work, whether they give us a suitable reward or not, we can work more enthusiastically with the belief that God will give us a reward. God rewarded Joshua who was faithful to Moses. God raised up Daniel who was faithful to the king. There are many examples of this in the scripture.*
*Instead of believing in the visible boss, let us believe in the invisible Lord. He will not forget every good thing we do. He will not forget to give the corresponding benefit. So, let us perform our duties with enthusiasm. Let us generously help others. May the Lord bless us and reward us accordingly. Hallelujah!*
*“God will repay each person according to what they have done.” – Romans 2:6*
🤔 *For Thought* 🤔
*TRUTH AND HARD WORK WILL DEFINITELY BRING PROMOTION.*
*வேதபகுதி: பிலிப்பியர் 2:1-30*
*" தேடாமல் "*
*" மற்றவர்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள் " - பிலிப்பியர் 2:21*
*பிலிப்பி பட்டணத்திலுள்ள சபையை விசாரிக்கும்படி அனுப்புவதற்கு பலர் இருந்தாலும் தீமோத்தேயுவை அனுப்ப பலமான காரணத்தைக் கூறுவதாக இன்றைய தியான வசனம் கூறுகிறது. தீமோத்தேயுவைத் தவிர மற்ற அனைவரும் கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளைத் தேடினாார்கள். தங்களுக்குரியவைகளைத் தேடுபவர்கள் சபைக்குள் வந்தால், அங்கும் அவர்கள், தங்களுக்கு என்ன வேண்டுமோ, அதைத்தான் தேடுவார்கள். எனவே, அவர்களை சபைக்கு அனுப்பாமல், கிறிஸ்து இயேசு எவைகளை எதிர்பார்க்கிறாரோ, அதை மட்டுமே தேடும் தீமோத்தேயுவை பவுல் அனுப்பினான். பவுலின் காலத்திலேயே காணிக்கைகளுக்காகவும், பெயர் புகழ் இவைகளுக்காகவும் ஊழியம் செய்தவர்கள் இருந்திருக்கிறார்கள். அப்பொழுதே அப்படியென்றால், இந்தக் காலத்தில் கேட்கவே வேண்டாம்.*
*சபையானது எப்படிப்பட்டவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும், எப்படிப்பட்டவர்களை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பது நமக்குத் தெளிவாகிறது. பரலோகத்திற்கு ஏதாவது கிடைக்கும்படி ஊழியம் செய்கிறவர்களையே சபை ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்றவர்கள் ஒருவரும் சபைக்குள் வரும்படி சபை அவர்களுக்கு அனுமதி கொடுக்கக்கூடாது. ஆனால் இன்றைய நாட்களில், தங்களுக்கு ஏதாவது கொடுப்பவர்களையே சபையும் எதிர்பார்ப்பது வெட்கக்கேடானா விஷயம். ஏதாவது ஒரு உதவியை ஒரு ஊழியர் செய்தால், அவர்தான் அந்த சபையின் கன்வென்ஷன் கூட்டத்தில் செய்தியாளராக இருப்பார். அவர்மூலம் கர்த்தருடைய கிரியைகள் நடக்கிறதா இல்லையா என்பதையெல்லாம் இன்று பார்ப்பதில்லை. அதற்கு பதிலாக இவர் நமக்கு, சபைக்கு என்ன செய்வார், என்ன கொடுப்பார் என்று எதிர்பார்த்தே பல சபைகளில் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இவைகளினால் பரலோகத்திற்கு என்ன பலன்? ஒன்றுமில்லையே தேவப்பிள்ளையே ! பரலோகத்துக்குரியவைகளைத் தேடும் ஊழியரை மட்டும் சபையில் அனுமதிப்போம். நாமும் நேசிப்போம். அப்பொழுது தேவராஜ்யம் கட்டப்படும், நாமும் பரலோகம் செல்லலாம். ஆமென்.*
*" இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையன்றி, வேறொன்றையும்....தீர்மானித்தேன் " - 1 கொரி 2:2*
🤔 *சிந்தனைக்கு* 🤔
! உலக சம்பந்தமாக இச்சை நரகத்தின் வாசல் !
Today’s Bible Reading: Philippians 2:1-30
NOT LOOKING FOR
*“For everyone looks out for their own interests, not those of Jesus Christ.” – Phil 2:21*
*Today's meditation verse says that there are strong reasons for sending Timothy even though there are many to investigate the church in Philippi. All except Timothy sought their own, not the things of Christ Jesus. If those who seek what they know come into the church, they will seek what they want. So instead of sending them to the church, Paul sent Timothy to seek only those things that Christ Jesus expects. Even in Paul's day there were those who served for gifts and fame. If that was the case then, don't ask at this time.*
*It is clear to us what kind of people the church should accept and what kind of people it should not accept. The church should accept only those who serve to gain something for heaven. The congregation should not allow anyone else to enter the congregation. But it is a shame that the church these days expects people to give something to them. If a servant makes any assistance, he will be the reporter at the convention meeting of that congregation. Are the works of God done through him? Isn't it? We don't see all that today. What will he do for us and the church instead? What will he give? In anticipation of that, meetings are held in many congregations. What is the benefit of these to heaven? Nothing. Child of God ! Let us admit into the church only the servant who seeks heavenly things. We will love too. Then the Kingdom will be built. We too can go to heaven. Amen!*
*“For I resolved to know nothing while I was with you except Jesus Christ and him crucified.” – 1 Corin. 2:2*
🤔 *For Thought* 🤔
LUST IN CONNECTION WITH THE WORLD IS THE GATE OF HELL.*
\
வேதபகுதி: 1 இராஜாக்கள் 19:1-21
" பிரயாணம் வெகுதூரம் "
*" கர்த்தருடைய தூதன் திரும்ப இரண்டாந்தரம் வந்து அவனைத் தட்டியெழுப்பி; எழுந்திருந்து போஜனம்பண்ணு; நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம் என்றான் ” -1 இராஜா 19:7*
*ஊழியத்தில் வந்த எதிர்பாராத பிரச்சனையினிமித்தமாக சோர்ந்து போய் சூரைச் செடியின் கீழ்ப்படுத்துக் கொண்டு என்னுடைய பிராணனை எடுத்துக்கொள்ளும் என்று எலியா விண்ணப்பம்பண்ணி, நித்திரை பண்ணினான். அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் வந்து, எலியாவை எழுப்பி, நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகு தூரம் என்றான். மிகப் பெரிய அற்புதத்தைச் செய்து, தேசத்தை தேவன் பக்கமாகத் திருப்பிய எலியா, மிகப்பெரிய சாதனையைச் செய்தான். தான் எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டதாக அவனுக்குள் நினைப்பு வந்து விட்டது. தேவன் தனக்குக் கொடுத்த வேலை அவ்வளவுதான் என்று அவன் நினைத்தான். ஆனால், தேவனுடைய திட்டமோ வேறாய் இருந்தது. அவன் செய்ய வேண்டிய வேலை இன்னும் அதிகமாய் இருந்தது.*
*பிரியமானவர்களே! நாமும் எலியாவைப் போலவே, பல நேரங்களில் நினைத்துவிடுகிறோம். ஏதோ ஒரு காரியத்தைச் செய்து முடித்தவுடன், நம்முடைய வேலையே முடிந்துவிட்டது என்று நினைக்கிறோம். இன்றைய நாட்களில் பல ஊழியங்கள் இப்படி இருப்பதை நாம் காணலாம். தாங்கள் ஊழியம் செய்யத் தொடங்கின ஆரம்ப நாட்களில் ஓடி ஓடி ஊழியம் செய்திருப்பார்கள். தங்களுடைய ஊழியத்தினிமித்தமாக ஒரு சில காரியங்களை சாதித்த பின்பு, அமைதியாக உட்கார்ந்து, இருக்கும் ஊழியத்தைப் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்பார்கள். ஆனால், நம்மிடம் தேவன் இதை எதிர்பார்க்கவில்லை.*
*இந்த உலகில் சாத்தானும், கடைசி ஆத்துமாவும் இருக்கும்வரைக்கும் நம்முடைய ஊழியம் இருக்கும். நமக்கும் வேலை இருக்கும். சாத்தான் இருக்கும்வரைக்கும் அவனும் கிரியை செய்து கொண்டேயிருப்பான், நாமும் கிரியை செய்து கொண்டேயிருக்கவேண்டும். கடைசி ஆத்துமா இருக்கிற வரைக்கும் அவர்களை இரட்சிப்புக்குள் நடத்த, நாம் வேலை செய்து கொண்டே இருக்கவேண்டும். எனவே, நாமும் பண்ண வேண்டிய பிரயாணம் வெகுதூரம் என்பதை அறிந்து செயல்படுவோம், ஜெயம் பெறுவோம்.*
*" இந்தத் தொழுவத்திலுள்ளவைகளெல்லாம் வேறே ஆடுகளும்.......நான் கொண்டு வரவேண்டும் " - யோவான் 10:16*
🤔 *சிந்தனைக்கு* 🤔
*! சோர்ந்து போகிறவர்கள் சாதனைகளை ருசிப்பதில்லை !*
Today’s Bible Reading: 1 Kings 19:1-21
LONG JOURNEY
*“And the angel of the Lord came back the second time, and touched him, and said, “Arise and eat, because the journey is too great for you.” – 1 Kings 19:7*
*Exhausted due to an unexpected problem in the ministry, Elijah prayed that my soul would be taken under the control of the tuna plant and fell asleep. Then an angel of the Lord came and woke up Elijah and said, "You have a long way to go." Elijah performed a great miracle and turned the nation back to God. He felt that he had done everything. He thought that was all the work God had given him. But God's plan was different. He had more work to do.*
*Beloved! Like Elijah, we often wonder. When we finish something, we think our work is done. We see many ministries like this today. In the early days when they began to serve, they would have run and served. After accomplishing a few things for their ministry, they think they can sit back and look after the ministry at hand. But God does not expect this from us.*
*Our ministry will last as long as Satan and the last soul remain in this world. We also have work. As long as Satan exists, he will continue to do work, and we must also continue to do work. We must keep working to bring them to salvation until the last soul. Therefore, knowing that we too have a long way to go, let us act and win.*
*And other sheep I have which are not of this fold; them also I must bring. – John 10:16*
*🤔For Thought🤔*
*TIRED PEOPLE DON'T ENJOY ACHIEVEMENTS.*
வேதபகுதி: 1 இராஜா 18:1-21
" கலங்கப்பண்ணுகிறவர்கள் "
*" நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவர்கள் ” - 1 இராஜாக்கள் 18:18*
*இன்றைய தியான வசனம் தேவனுடைய தீர்க்கதரிசியாகிய எலியாவின் வாயிலிருந்து அக்கினியாய் வெளிப்பட்டது. ராஜாவாகிய ஆகாபையும், அவனுடைய தகப்பன் வீட்டாரையும் கடுமையாகப் பேசினான் எலியா. அவர்களுடைய காரியங்கள் இஸ்ரவேல் அனைவரையும் கலங்கப்பண்ணிற்று என்றான். முழு இஸ்ரவேல் ஜனங்களும் சமாதானத்தையும், சந்தோஷத்தையும் ஆசீர்வாதங்களையும் இழந்து, கலங்கிப்போனதற்கு ஆகாபும் அவனுடைய தகப்பன் வீட்டாருமே காரணம் என்று குற்றம் சாட்டினான் எலியா. மூன்று வருஷமும் ஆறுமாதமும் மழையும் பனியும் பெய்யாததினால் தேசம் முழுவதும் பஞ்சத்தால் வாடியது. இதற்குக் காரணம் எலியாதான் என்று ஆகாப் குற்றம் சாட்டினான். காரணம் எலியாதான் இப்படி நடக்கும் என்று கூறினான் -1 இராஜா 17:1. ஆனால் எலியாவோ, நான் இப்படிக் கூறினதற்கு நீயும், உன்னுடைய தகப்பன் வீட்டாரும்தான் காரணம் என்று ஆகாபிடம் கூறினான்.*
*இதிலிருந்து நாம் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் சரியாக, தேவனுக்குக் கீழ்ப்படிந்து, அவருக்குப் பிரியமாய் இருந்தால், தேவனுடைய ஊழியர்களுடைய வாயிலிருந்து புறப்படும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நமக்கு ஆசீர்வாதமாயிருக்கும். நாம் தேவனுக்குப் பிரியமாய் இல்லாதபோது, தேவ ஊழியர்களுடைய வார்த்தைகள் நமக்கு எதிரானவைகளாயிருக்கும். பல நேரங்களில் நமக்கு இவைகள் புரிவதில்லை. நம்மைக் கடிந்து கொள்ளும் ஊழியரைப் பார்த்து, இவர் எப்பொழுதும் இப்படி சபிக்கிறாரே என்று நாம் கூறுகிறோம்.*
*நாம் தவறு செய்யும்போது நம்மைத் தட்டிக் கொடுத்து, நமக்கு ஆசீர்வாதங்களைக் கூறுபவர்கள் போலியானவர்களே. அதே வேளையில் நம்மைக் கடிந்து கொண்டு, மனந்திரும்ப நமக்கு அழைப்புக் கொடுப்பவர்களே உண்மையானவர்கள். எனவே, நாம் தேவனுக்குப் பிரியமாய் வாழ்ந்து, தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வோம். தேவன் தாமே இப்படிப்பட்ட கிருபைகளை நமக்குத் தருவாராக. ஆமென்.*
*" ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால்....சமாதானமாகும்படிசெய்வார் ” - நீதி 16:7*
🤔 *சிந்தனைக்கு* 🤔
*! நல்ல வழிகளே சமாதானமுள்ள வாழ்வு !*
Today’s Bible Reading: 1 Kings 18:1-21
DISTURBING PEOPLE
*“But you and your father’s family have. You have abandoned the LORD’s commands” - 1 Kings 18:18*
*Today's meditation verse came out of the mouth of God's prophet Elijah like fire. Elijah spoke harshly to King Ahab and his father's household. Their deeds have troubled all Israel. Elijah blamed Ahab and his father's house for the loss of peace, joy and blessings and for the entire people of Israel to be in turmoil. As there was no rain or snow for three years and six months, the whole country languished with famine. Ahab blamed Elijah for this. Because Elijah said this would happen(1 Kings 17:1). But Elijah said to Ahab, “You and your father's house are the reason why I said this.”*
*We should learn one thing from this. If we properly obey God and please him, every word that comes out of the mouth of God's servants will be a blessing to us. When we are not pleasing to God, the words of God's servants will be against us. Many times we do not understand these things. We look at the servant who scolds us and say, "Does he always curse like this?"*
*Those who pat us down and bless us when we make mistakes are fake. At the same time, those who rebuke us and call us to repent are the real ones. So let us live pleasing to God and receive God's blessings. May God himself give us such graces. Amen!*
*“When the LORD takes pleasure in anyone’s way, he causes their enemies to make peace with them.” - Proverbs 16:7*
*🤔 For Thought 🤔*
*GOOD WAYS ARE A PEACEFUL LIFE.*
Brother J. Daniel
Yesuveh Aatharam Ministries
496/1, Lakshmipuram Periyar Nagar,
Redhills, Chennai – 600052
Mobile: +919940018988
Email id: jesusthefoundation@gmail.com
Youtube : https://youtube.com/@YesuvehAatharamMinistries
Thanks for using my website. Post your comments on this