வேதபகுதி: யோசுவா 3:1-17*
*" காலூன்றி நிற்கும்போது "*
*" சகல ஜனங்களும் யோர்தானைக் கடந்து தீருமளவும், கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானின் நடுவிலே தண்ணீரில்லாத தரையில் காலூன்றி நிற்கும்போது, இஸ்ரவேலரெல்லாரும் தண்ணீரற்ற உலர்ந்த தரைவழியாய் கடந்துபோனார்கள் " - யோசுவா 3:17*
*கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டியை சுமக்கிற கர்த்தருடைய ஆசாரியர்கள் காலூன்றி நிற்கும்போது, ஜனங்கள் அனைவரும் சுகமாக, பிரயாணம் செய்தார்கள். யோர்தானைக் கடந்து அக்கரைப்பட்டார்கள். தேவனுடைய ஊழியர்கள் நிற்க வேண்டிய நிலையில் நின்றால், தங்களுடைய அழைப்பில், தரிசனத்தில் சரியாய் நின்றால் ஜனங்கள் ஆசீர்வாதமாயிருப்பார்கள். எவ்வளவு பெரிய உண்மை. தேவ ஜனங்களுடைய வாழ்க்கையில் ஊழியர்களுடைய பங்கு மிகப் பெரியது. இதை உணர்ந்து கொண்ட ஊழியர்களே ஜனங்களுக்கு ஆசீர்வாதமானவர்கள். தங்களுடைய நிலையில் நிற்கும் ஊழியர்களைக் கண்டு பிடித்து, அவர்களோடு ஐக்கியத்தை வைத்திருக்கும் விசுவாசிகளும் ஆசீர்வாதமானவர்கள்.*
*ஊழியர்களும் கவனமாயிருக்க வேண்டும். விசுவாசிகளும் கவனமாயிருக்க வேண்டும். தேவன் தங்களை எதற்கு எப்பொழுது, எப்படி செய்ய வேண்டும் என்பதை அறிந்து, ஊழியர்கள் ஊழியம் செய்ய வேண்டும். இவைகளை மறந்து, தன்னுடைய இஷ்டத்துக்கு ஊழியம் செய்யும் நபர்களால் ஜனங்களுக்கு எவ்விதமான நன்மையும் வரப்போவதில்லை. அதற்குப்பதிலாக இவ்வாறு ஊழியம் செய்கிறவர்களும், ஜனங்களும் தங்களுடையவைகளை வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.*
*விசுவாசிகளும் கண்ணை மூடிக் கொண்டு ஊழியர்களுக்குத் தங்களை விட்டுக்கொடுத்துவிடக் கூடாது. நம்மோடு கூட இருக்கிற ஊழியர், தேவனால் அழைக்கப்பட்டு, தேவனுடைய சித்தத்தின்படி ஊழியம் செய்கிறாரா என்று பகுத்தறிந்து அதற்குப் பின்பே அவரைப் பின்பற்ற வேண்டும். அதுவரைக்கும் அவரை ஆராய்ந்து கொள்வது நல்லது. நல்ல ஊழியரைப் பின்பற்றி, அவரோடு ஐக்கியம் கொண்டிருந்தால் நிச்சயம் நம்முடைய வாழ்க்கை சுகமாகவும், ஆசீர்வாதமாகவும் இருக்கும். ஆமென்.*
*" நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள் " - 1 கொரி 11:1*
🤔 *சிந்தனைக்கு* 🤔
*! சரியான ஊழியர்கள் அளவில்லாத ஆசீர்வாதங்கள் !*
*Today’s Bible Reading: Joshua 3:1-17*
*WHEN STAND FIRM*
*“The priests who carried the ark of the covenant of the LORD stopped in the middle of the Jordan and stood on dry ground, while all Israel passed by until the whole nation had completed the crossing on dry ground.” - Joshua 3:17*
*When the priests of the Lord stood up, carrying the ark of the covenant of the Lord, all the people travelled in peace. They were concerned about crossing the Jordan. If God's servants stand where they should stand, if they stand true to their calling and vision, the people will be blessed. What a great truth. The role of servants in the lives of God's people is very great. Servants who realize this are blessings to the people. Blessed are the believers who find servants who stand in their place and have fellowship with them.*
*Servants must be careful and believers must be careful. Servants should serve knowing what, when and how God wants them to do. People who forget these things and serve their own will, will not benefit the people. Instead, it is true that those who do service like this and the people are wasting theirs.*
*Believers should not turn a blind eye and give themselves up to servants. The servant who is with him should discern whether he is called by God and is serving according to God's will, and then follow him. Until then, it's best to explore. If we follow the good servant and have union with him, surely our life will be comfortable and blessed. Amen!*
*“ Follow my example, as I follow the example of Christ.” - 1 Corin 11:1*
*🤔 For Thought 🤔*
*RIGHT SERVANTS ARE BLESSINGS BEYOND MEASURE.*
*வேதபகுதி: அப் 10 : 24-48*
*" வசனத்தை "*
*" இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் வசனத்தைக் கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார் " - அப்போஸ்தலர் 10:44*
*அப்போஸ்தலனாகிய பேதுரு பேசிக்கொண்டிருந்தபோதே, வசனத்தைக் கேட்ட யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார், என்று எழுதப்படிருக்கிறதை நாம் பார்க்கும்போது, வேத வசனங்களுக்கும் ஆவியானவருடைய கிரியைகளுக்கும் தொடர்பு இருக்கிறதை நாம் அறிந்து கொள்ளமுடியும். வசனத்தைக் கேட்காதவர்கள் மேல் பரிசுத்த ஆவியானவர் இறங்கவில்லை. தேவ வசனங்களே நமக்குள் விசுவாசத்தைக் கொண்டு வரும். விசுவாசமே தேவனுடைய கிரியைகளை, வல்லமையை வெளியே கொண்டு வரும். விசுவாசமே ஆவியானவரைக் கிரியை செய்ய வைக்கும். வேத வசனங்களையும் ஆவியானவருடைய கிரியைகளையும் நாம் பிரிக்கவே முடியாது. வேத வசனங்கள் எங்கெல்லாம் வெளிப்படுகிறதோ, அங்கெல்லாம் ஆவியானவருடைய கிரியைகளும் வெளிப்படும். அப்படியே, ஆவியானவருடைய கிரியைகள் எங்கெல்லாம் வெளிப்படுகிறதோ, அங்கெல்லாம் தேவனுடைய வசனங்களும் வெளிப்படும். வேத வசனங்களில்லாமல் ஆவியானவரும் இல்லை; ஆவியானவர் இல்லாமல் வேத வசனங்களும் இல்லை.*
*ஆனால் இவைகளைப் புரிந்துகொள்ளாத பலர், வேத வசனங்களையும், அவைகளின்படி வாழ்வதையும் விட்டு விட்டு, ஆவியானவருடைய கிரியைகளாகிய அற்புதங்களையும், அடையாளங்களையும் எதிர்பார்க்கிறார்கள். வேறு சிலரோ, வசனத்தைப் பிடித்துக்கொண்டு ஆவியானவரையும், அவருடைய கிரியைகளையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். ஆவியானவருடைய செயல்களாகிய வரங்கள், வல்லமைகள், அற்புதங்கள் மற்றும் அடையாளங்கள் அனைத்தும் அப்போஸ்தலர் நடபடிகளோடு முடிந்து விட்டது என்று கூசாமல் பேசி, தேவனுடைய வல்லமையை மட்டுப்படுத்துகிறார்கள். தேவப்பிள்ளையே ! நாம் இப்படி இருக்கக்கூடாது. எந்த அளவுக்கு வசனத்தின் மேல் வாஞ்சை இருக்கிறதோ, அதே அளவுக்கு ஆவியானவர்மேலும் அவருடைய கிரியைகளின்மேலும் வாஞ்சை இருக்க வேண்டும். அப்பொழுது மட்டுமே தேவ சித்தம் நிறைவேறும், தேவ ராஜ்யமும் கட்டப்படும். அல்லேலூயா !*
*" எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடேமாத்திரமல்ல......முழு நிச்சயத்தோடும் வந்தது " - 1தெச 1:5*
🤔 *சிந்தனைக்கு* 🤔
*! வசனமில்லாத வாழ்வும் - பரிசுத்த ஆவியில்லாத வாழ்வும் வீணானது !*
*Today’s Bible Reading: Acts 10:24-48*
*THE WORD*
*“While Peter was still speaking these words, the Holy Spirit came on all who heard the message.” - Acts 10:44*
*While the apostle Peter was speaking, it is written that whoever heard the word and the Holy Spirit descended, we can know that there is a connection between the scripture and the works of the Spirit. The Holy Spirit did not descend on those who did not hear the word. The scripture brings faith in us. Faith brings forth the works and power of God. Faith causes the Spirit to work. We cannot separate the scripture and the works of the Spirit. Wherever the scripture are revealed, the works of the Spirit will also be revealed. Likewise, wherever the works of the Spirit are revealed, the words of God will also be revealed. Without the Scripture there is no Spirit, and without the Spirit there are no Scripture.*
*But many who do not understand these things leave the scripture and live by them and look for miracles and signs which are the works of the Spirit. Others cling to the scripture and refuse to accept the Spirit and His works. All the gifts, powers, miracles and signs that are the works of the Spirit are limited to the power of God by speaking bluntly that they ended with the Acts of the Apostles. Child of God ! We should not be like this. As much as there is an expectation of the Word, so much more an expectation of the Spirit's works. Only then will God's will be fulfilled. The kingdom will also be built.. Hallelujah!*
*“Because our gospel came to you not simply with words but also with power, with the Holy Spirit and deep conviction.” – 1 Thess 1:5*
🤔 *For Thought* 🤔
*A LIFE WITHOUT THE WORD – A LIFE WITHOUT THE HOLY SPIRIT IS IN VAIN.*
*வேதபகுதி: சங்கீதம் 119 : 49-64*
*" கொள்ளையிட்டும் "*
*" துன்மார்க்கரின் கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டும், உம்முடைய வேதத்தை நான் மறக்கவில்லை " - சங்கீதம் 119:61*
*இன்றைய வேதம் வசனம் மிகவும் அருமையான காரியங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. துன்மார்க்கரின் கூட்டம் நீதிமானைக் கொள்ளையிடக்கூடுமா? ஒரு வேளை இவ்வாறு நடந்தால், தேவன் என்னசெய்து கொண்டிருக்கிறார் என்ற கேள்விகள் நமக்கு வருகின்றன. தேவனுடைய காரியங்கள் மிகவும் வித்தியாசமானவைகள், நாமெல்லாரும் அவருடைய கண்ணின்மணி போன்றவர்கள்தான். கர்த்தர் நம்முடைய வலது பக்கத்தில் நமக்கு நிழலாக இருக்கிறார் என்பதும் உண்மைதான். ஆனாலும் பல பரிசுத்தவான்கள் இரத்தசாட்சிகளாக மரிக்கிறார்களே, நீதிமான்களாகிய அவர்களுடைய குற்றமில்லாத இரத்தம், துன்மார்க்கர்களாலே சிந்தப்படுகிறதே இது எப்படி? தேவன் அவர்களைக் காக்காமல் போனாரோ? இரத்த சாட்சியாக மரிப்பவர்கள் அத்தனை பேரும் மாபெரும் பாவிகளா? இல்லையே.*
*யாக்கோபை பட்டயத்தால் கொலை செய்ய ஒப்புக்கொடுத்தவர், பேதுருவை அதே பட்டயத்துக்குத் தப்புவித்தார். ஸ்தேவான் கல்லெறியப்பட்டு இரத்த சாட்சியாக கொல்லப்படுவதற்கு ஒப்புக்கொடுத்தவர், பவுல் கல்லெறியப்பட்டாலும் மரணத்துக்கு அவனைத் தப்புவித்தார். தீர்க்கதரிசனம் சொன்ன ஆசாரியனாகிய யோய்தாவின் குமாரனாகிய சகரியாவை கொலை செய்யும் போது அமைதியாக இருந்தவர், எரேமியாவை மரணத்துக்கு ஒப்புக்கொடுத்தார். இன்னும் ஏராளமான உதாரணங்களை நாம் கூறலாம்.*
*இவைகளையெல்லாம் பார்த்து, தேவனை நாம் குற்றப்படுத்தக் கூடுமோ? காரியம் அதுவல்ல. நம்முடைய வாழ்க்கையில் எது நடந்தாலும் நாம் தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறோமா? தேவனுடைய அன்பில் குறைவற்றவர்களாக இருக்கிறோமா என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய காரியம். எனக்கு எதுவுமே நேரிடக்கூடாது என்று எதிர்பார்ப்பவர்கள் இயேசு சிலுவையில் அறையப்பட்டது ஏன் என்று யோசித்துப்பார்க்க வேண்டும். தேவப்பிள்ளையே ! நாம் தேவனுடையவர்கள். நமக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனாலும் நாம் தேவனோடிருந்தால், தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.*
*" கிறிஸ்துவின் அன்பை விட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? " - ரோமர் 8:36*
🤔 *சிந்தனைக்கு* 🤔
*! கிறிஸ்துவுக்காக இழப்பவர்கள் கிறிஸ்துவோடு இருப்பார்கள் !*
*Today’s Bible Reading: Psalm 119:49-64*
*HAVE BOUND*
*“The cords of the wicked have bound me, But I have not forgotten Your law.” – Psalm 119:61*
*Today's scripture contains many wonderful things in itself. Can the multitude of the wicked rob the righteous? Perhaps if this happens, we will have questions about what God is doing. The things of God are very different, and we are all like the apple of His eye. It is also true that the Lord is our shadow at our right hand. Yet many saints die as martyrs, how is it that their innocent blood, the righteous, is shed by the wicked? Did God fail to protect them? Are all those who die as blood witnesses great sinners? “No.”*
*He who agreed to put James to death with the sword spared Peter to the same sword. Stephen was the one who agreed to be stoned to death as a blood witness, but Paul was stoned and spared death. The one who kept quiet while murdering the prophetic priest Zechariah, son of Jehoiada, delivered Jeremiah to death. We can cite many more examples.*
*Seeing all this, can we blame God? That is not the point. Do we obey God's commandments no matter what happens in our lives? What matters is whether we are perfect in God's love. Those who expect nothing to happen to me should consider why Jesus was crucified. Child of God! We belong to God. Anything can happen to us. But if we are with God, we can receive God's blessings.*
*Who shall separate us from the love of Christ? – Romans 8:35*
*🤔For Thought🤔*
*THOSE WHO LOSE FOR CHRIST SHALL BE WITH CHRIST.*
Brother J. Daniel
Yesuveh Aatharam Ministries
496/1, Lakshmipuram Periyar Nagar,
Redhills, Chennai – 600052
Mobile: +919940018988
Email id: jesusthefoundation@gmail.com
Thanks for using my website. Post your comments on this