Type Here to Get Search Results !

தேவனுடைய சித்தம் | மனந்திரும்பவில்லை | HE WAS GONE | Evn Daniel J Daily Bible Sermons | தின தியான குறிப்புகள் | Jesus Sam

வேதபகுதி: 1 பேதுரு 2:1-25
" தேவனுடைய சித்தம் "

*" நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது " -1 பேதுரு 2:15*

*யோசேப்பிற்கு தேவன் சொப்பனங்களைக் கொடுத்து, பின் நாட்களில் நடக்கப் போகிறவைகளை அவனுக்கு வெளிப்படுத்தினார். இதை தன்னுடைய சகோதரர்களிடம் அறிவித்தான். உடனே அவர்களுக்கு யோசேப்பின் மேல் பொறாமை வந்தது. எப்படியும் அந்த சொப்பனங்கள் நிறைவேறாதபடி தடுக்க வேண்டும் என்று மூர்க்க வெறியோடு செயல்பட்டார்கள். அந்தச் சொப்பனங்கள் நிறைவேறக்கூடாதபடிக்குத் தங்களுடைய தம்பியைக் கொலை செய்யவும் ஆயத்தமாயிருந்தார்கள். சொப்பனங்களை தேவன் கொடுத்திருக்கும்போது, சொப்பனங்கள் நிறைவேறாதபடி தேவனைத்தானே கட்டிப்போட வேண்டும். அதற்குப் பதிலாக யோசேப்பை கடத்தினால் காரியம் நடக்குமா என்ற அடிப்படை யோசனைகூட இல்லாத புத்தியீன மனிதர்கள். சொப்பனத்தைக் கொடுத்த தேவனை விட்டு விட்டு, யோசேப்பை விற்றுப் போட்டால் சொப்பனங்கள் நிறைவேறாது என்று நம்பின அறியாமை. ஆனாலும் யோசேப்பு அவர்களுக்கு நன்மை செய்தான். அதற்குப் பின்பு அவனுடைய சகோதரர்கள் அவனுக்கு எந்தவிதமான பிரச்சனையும் செய்யவில்லை.*

*தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் நன்மை செய்ய வேண்டும். இதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறோம். பலர் நமக்குத் தீமை செய்திருக்கலாம். அவர்கள் செய்த தீமைக்குப் பதிலாக நாமும் அவர்களுக்குத் தீமை செய்வது தேவனுடைய சித்தமல்ல, அதற்குப்பதிலாக அவர்களுக்கு நாம் நன்மை செய்ய வேண்டும். அதுவே தேவசித்தமாயிருக்கிறது. இவ்வாறு நாம் நன்மை செய்யும்போது, சத்துருக்கள் தொடர்ந்து தீமை செய்யாதபடி தேவன் அவர்களை அடக்கிப்போடுகிறார். தேவப்பிள்ளையே ! நாம் இவைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். நாம் இப்படிச் செய்ய வேண்டுமென்றால் நமக்குள் தேவ அன்பு இருக்க வேண்டும். பழிவாங்க வேண்டும் என்று நினைக்கிற ஜென்ம சுபாவங்களை விட்டு விட்டு, தெய்வீக சுபாவங்களை அணிந்துகொள்ள வேண்டும். அப்பொழுது மாத்திரமே இப்படி செயல்பட முடியும். நாம் நன்மை செய்தால் மாத்திரமே தேவனுடைய சித்தம் நிறைவேறும். ஆமென்.*

*" தீமையை விட்டு விலகி, நன்மைசெய், சமாதானத்தைத் தேடி அதைத் தொடர்ந்துகொள் ” - சங் 34:14*

🤔 *சிந்தனைக்கு* 
*! நன்மை செய்கிறவர்கள் வெட்கமடைவதில்லை !*


*Today’s Bible Reading: 1 Peter 2:1-25*
*GOD’S WILL*
*“For this is the will of God, that by doing good you should put to silence the ignorance of foolish people.” – 1 Peter 2:15*

*God gave Joseph dreams and revealed to him what was going to happen in the days to come. He announced this to his brothers. Immediately they became jealous of Joseph. In any case, they acted with ferocity to prevent those dreams from coming true. They were ready to kill their own brother so that those dreams could not come true. When God has given us dreams, we must bind God Himself so that dreams do not come true. Instead, they were stupid people who didn't even have a basic idea of what would happen if they abducted Joseph. It is ignorance to believe that dreams will not come true if you leave the God who gave the dream and sell Joseph. Yet Joseph did them good. After that his brothers did not give him any trouble.*

*As children of God, we must do good. This is what we are called to do. Many may have done us harm. It is not God's will that we do evil to them instead of the evil they have done. Instead, we should do them good. That is godly. Thus, when we do good, God suppresses the enemies so that they do not continue to do evil. child of God ! We must observe these things. If we are to do this, we must have God's love within us. One should give up the vindictive nature and put on the divine nature. Only then can this work. God's will, will be fulfilled only if we do good. Amen!*

*“Turn away from evil and do good; seek peace and pursue it.” – Psalm 34:14*

🤔 *For Thought* 🤔
*Those who do good are not ashamed.*


*வேதபகுதி: வெளி 9:1-21*
*" மனந்திரும்பவில்லை "*
*" தங்கள் கொலைபாதகங்களையும், தங்கள் சூனியங்களையும், தங்கள் வேசித்தனங்களையும், தங்கள் களவுகளையும்விட்டு மனந்திரும்பவுமில்லை " - வெளி 9:21*

*தேவனுடைய செயல்கள் ஒவ்வொன்றும் நம்முடைய மனந்திரும்புதலை எதிர்பார்த்தே இருக்கிறது. அவர் நன்மை செய்தாலும் அந்த நன்மையைப் பெற்றுக் கொண்ட நாம் மனந்திரும்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். கடைசி நாட்களில் பூமியில் வெளிப்படப்போகிற தேவனுடைய கோபத்தால் உண்டாகிற வாதையினால் மனிதரில் மூன்றில் ஒரு பங்கு மனிதர்கள் கொல்லப்பட்டதை யோவானுக்குத் தேவன் வெளிப்படுத்தின விசேஷத்தில் காண்பித்தார். இவ்வாறு மூன்றில் ஒரு பங்கு மனிதர்கள் கொல்லப்பட்டாலும், மீதி இருக்கும் மனிதர்களில் ஒருவர் கூட தேவனிடம் மனந்திரும்பவில்லை. இதனால் தேவனுடைய இருதயம் வேதனைப்பட்டது. இவைகளை பார்க்கும்போது தேவனுடைய ஒவ்வொரு அசைவும் நம்முடைய மனந்திரும்புதலை எதிர்பார்க்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.*

*மனிதர்களுடைய மனந்திரும்புதலுக்காக தேவனுடைய இருதயம் துடிப்பது எதற்காக என்று யோசிக்கும்போது, மனந்திரும்பாத அனைவரும் அக்கினிக்கடலாகிய நரகத்தில் தள்ளப்படப் போகிறார்கள். அங்குதான் அவர்கள் தங்களுடைய நித்திய வாழ்க்கையைக் கழிக்க வேண்டும். இந்தக் கொடூரமான இடத்திற்கு மனிதர்களில் ஒருவர்கூட செல்லக்கூடாது என்று தேவன் விரும்புகிறார். நாம் நரகம் செல்லக்கூடாது என்று தேவன் நினைப்பதற்கு, நமக்கும் தேவனுக்கும் என்ன உறவு இருக்கிறது? நாம் நரகம் செல்லுவதினால் தேவனுக்கு ஏதாவது நஷ்டம் உண்டா? நாம் அவ்வளவு நல்லவர்களா? என்றெல்லாம் கேள்வி கேட்டால் அத்தனைக் கேள்விகளுக்கும் இல்லை என்றே பதில் கூறவேண்டும்.*

*ஆனால், நம்மை அளவில்லாமல் தேவன் நேசிப்பதினால், நாம் நரகத்தின் தண்டனைக்குத் தப்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். நாம் நரகம் செல்லுவதைத் தடுக்கும்படி அவர் நமக்கு அற்புதங்களைச் செய்து, தமது அன்பை வெளிப்படுத்துகிறார். சில வேளைகளில் சிட்சித்து, நம்மை எச்சரிக்கிறார். இவைகளை அறிந்து கொண்டு, நாம் மனந்திரும்பினால், நிச்சயம் நமக்கு பரலோகம்தான். இல்லாவிட்டால் நரகம்தான்.*

*" மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது " - மத் 4:17*

🤔 *சிந்தனைக்கு* 🤔
*! மனந்திரும்புதல் ஆக்கினையை அகற்றும் !*


*Today’s Bible Reading: Revelation 9 :1-21*
*NOT REPENTED*

*“Nor did they repent of their murders or their sorceries or their sexual immorality or their thefts.” – Rev.9:21*

*All of God's works await our repentance. Even if he does good, he expects us to repent after receiving that good. In a special revelation to John, God showed that one-third of mankind had been killed by the plague caused by the wrath of God that would be revealed on earth in the last days. Thus, though one-third of men were killed, not one of the remaining men turned back to God. God's heart was troubled by this. When we see these things we can know that every move of God expects our repentance.*

*When you think about why God's heart beats for the repentance of men, all who do not repent are going to be thrown into hell, the sea of fire, where they will spend their eternal life, and God wants no one of men to go to this horrible place. God thinks that we should not go to hell, what relationship do we have with God? Is there any loss for God because we go to hell? Are we that good? If you are asked all these questions, you should answer "No" to all the questions.*

*But because God loves us so much, He expects us to escape the punishment of hell. He shows us His love by performing miracles to prevent us from going to hell. He warns us by disciplining us in certain works. Knowing these things, if we repent, we will surely go to heaven. If not, hell.*

*“From that time Jesus began to preach, saying, “Repent, for the kingdom of heaven is at hand.” – Matt 4:17*

🤔 *For Thought* 🤔
*Repentance removes punishment.*


*வேதபகுதி: உன் 5:1-16*
*" போய்விட்டார் "*

*“ என் நேசரோ இல்லை, போய்விட்டார் " - உன்னதப்பாட்டு 5:6*

*தன்னுடைய மணவாட்டியைத்தேடி வந்த நேசர் எவ்வளவோ கேட்டும், மணவாட்டியானவள் அவருக்குக் கதவைத்திறக்காமல் மறுக்க, பின் யோசித்து, கதவைத் திறந்தாள் அதற்குள் நேசர் போய்விட்டார். நேசரைக் காணாத மணவாட்டியானவள் மிகுந்த ஏமாற்றமடைந்தாள். நேசர் கூப்பிட்ட போது கதவைத்திறக்காமல், தாமதமாக அவள் கதவைத் திறக்க என்ன காரணம்? தன்னுடைய நேசர் தன்னை விட்டு விட்டு எங்கே சென்றுவிடப்போகிறார் என்ற நினைப்போ என்னவோ தெரியவில்லை. எவ்வளவு நேரமானாலும் நேசர் அங்கேதான் இருப்பார் என்று நினைத்தாளோ என்னவோ தெரியவில்லை. ஆனால் அவர் கூப்பிடும்போது கதவைத் திறக்காததினால், அவள் தேடும்போது அவரைக் காணவில்லை.*

*இந்த மணவாட்டியைப் போலத்தான் இன்றைய நாட்களிலும் அநேகர் இருக்கிறார்கள். கர்த்தர் எத்தனை ஊழியர்கள் மூலமாக எத்தனையோ தடவை இவர்களோடு பேசிக்கொண்டேயிருப்பார். இந்த ஊழியர்களுக்கு வேறு வேலையே இல்லை என்று கூறிக்கொள்ளும் இவர்கள், தங்களைத் தேடி வந்திருக்கும் தேவனுடைய அன்பை மதியாமலும், நினையாமலும் அவருடைய அன்பைப் புறந்தள்ளுவார்கள். ஆனால், தேவனைத் தேட வேண்டிய ஒரு சூழ்நிலை அவர்களுக்கு உண்டாகும்போது, இந்த உலகமும், பணமும், அவர்களைக் கைவிடும் சூழ்நிலை உண்டாகும்போது, இவர்கள் தேவனை ஊக்கத்தோடு தேடுவார்கள். எனக்கு இரங்கும், எனக்கு உதவி செய்யும் என்றும் கெஞ்சுவார்கள். ஆனால் தேவனை அவர்களால் கண்டுபிடிக்க முடியாது.*

*பிரியமானவர்களே! இவைகள் பழைய ஏற்பாட்டு சம்பவங்கள் என்று நாம் ஒதுக்கிவிட முடியாது. புத்தியில்லாத ஐந்து கன்னிகைகள் மீண்டும் கதவைத் தட்டின போது, நீங்கள் யார் என்று எனக்குத் தெரியாது, உங்களை அறியேன் என்றுதான் அவர்களுக்குப் பதில் கொடுக்கப்பட்டது. வாய்ப்பு கொடுக்கப்பட்டபோது அதை வீணடிப்பவர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்படாது. தங்களுக்குக் கொடுக்கப்படும் வாய்ப்பை சரியாக பயன் படுத்திக்கொள்ளுகிறவர்கள் மட்டுமே ஆசீர்வாதங்களைச் சுதந்தரித்துக் கொள்ளுகிறார்கள். நாம் வாய்ப்பை பயன்படுத்தி, ஆசீர்வாதமாயிருப்போம்.*

*" நான் கூப்பிட்டபோது அவர்கள் எப்படிக் கேளாமற்போனார்களோ....நானும் கேளாமலிருந்தேன் " - சகரியா 7:13*

🤔 *சிந்தனைக்கு* 🤔
*! நல் வாய்ப்புகளை பயன்படுத்துவோர் வாழ்ந்திருப்பார்கள் !*



*Today’s Bible Reading: Song of Songs 5:1-16*
*HE WAS GONE*
*“But my beloved had turned away and was gone.” – Song of Songs 5:6*

*No matter how much the beloved, who came looking for his bride, the bride refused to open the door for him, after thinking, when she opened the door, the beloved was gone. The bride who did not see Nasser was very disappointed. Why did she open the door so late and not when beloved called? She does not know where his beloved is going to leave her. I don't know if beloved thought he would be there no matter how long. But as she did not answer the door when called, she did not find him when she searched.*

*There are many people like this bride today. The Lord will be talking to them many times through many servants. Those who claim that these servants have no other work, they will leave God's love without appreciating and remembering the love of God who has come to find them. But when a situation arises for them to seek God, when this world and money abandon them, they will seek God with enthusiasm. They will beg for mercy and help me. But they cannot find God.*

*Beloved! We cannot dismiss these as Old Testament incidents. When the five foolish virgins knocked on the door again, they were answered, "I don't know who you are, I don't know you." Those who squander an opportunity when given it will never be given a second chance. Only those who make the right use of the opportunity given to them inherit the blessings. Let us seize the opportunity and be blessed.*

*That just as He proclaimed and they would not hear, so they called out and I would not listen. – Zechariah 7:13*

*🤔For Thought🤔*
*THOSE WHO USE GOOD OPPORTUNITIES WILL LIVE.*

Brother J. Daniel
Yesuveh Aatharam Ministries
496/1, Lakshmipuram Periyar Nagar,
Redhills, Chennai – 600052
Mobile: +919940018988
Email id: jesusthefoundation@gmail.com
Youtube: https://youtube.com/@YesuvehAatharamMinistries?si=tmnC_9ZbaIMGfOKh

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.