வேதபகுதி: 2 கொரி 12:1-21*
*" அடையாளங்கள் "*
*" அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் எல்லாவிதமான பொறுமையோடும், அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும், உங்களுக்குள்ளே நடப்பிக்கப்பட்டதே ” - 2 கொரிந்தியர் 12:12*
*சுவிசேஷ ஊழியத்திற்கும், மேய்ப்பர் ஊழியத்திற்கும் ,அப்போஸ்தல ஊழியத்திற்கும் அப்போஸ்தலனுக்கும் அடையாளங்கள் உண்டு. அந்த அடையாளங்களை நாம் காணும்போதே, இவர்கள் இப்படிப்பட்ட அழைப்பைப் பெற்றவர்கள் என்று அறிந்துகொள்ள முடியும். நாம் எந்த ஊழியத்திற்குப் போனாலும், அங்கு காணப்படும் அடையாளங்களை வைத்தே அந்த ஊழியம் எப்படிப்பட்டது என்றும், அந்த குறிப்பிட்ட ஊழியன் எந்த அழைப்பைப் பெற்றிருக்கிறார் என்றும் அறிந்து கொள்ளலாம். இவைகளை ஆராய்ந்து அறிந்து கொள்ளக்கூடிய ஞானமும், பகுத்தறிவும் நமக்கு அவசியம். உதாரணமாக, விசுவாசிகளாகிய நாம் ஒரு சுவிசேஷ ஊழியத்தோடு மாத்திரமே ஒட்டிக்கொண்டிருப்போமானால், அந்த குறிப்பிட்ட ஊழியத்தின் மூலமாக நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை வளர்ச்சியடைய முடியாது. அந்த ஊழியத்திற்கு நாம் உதவிகள் செய்யலாம். ஆனால் நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்கு போதக ஊழியத்தோடு (Teaching) ஐக்கியமாயிருக்க வேண்டும். இவ்வாறு அடையாளங்களை வைத்து, நாம் ஊழியங்களை விளங்கிக்கொண்டால் மட்டுமே, நம்முடைய வாழ்க்கையில் வளர்ச்சியும் உண்டாகும். நாமும் வஞ்சிக்கப்படாமல் இருப்போம்.*
*அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும் நடப்பிக்கப்பட்டது என்று பவுல் கூறுவதைப் பார்க்கும்போது, இன்றைய நாட்களில் அப்போஸ்தலர்கள் இல்லையோ என்று கேட்கத் தோன்றுகிறது. அப்போஸ்தலர் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களிடம் அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் எங்கே என்று தேடிப்பார்த்தால், அப்படி ஒன்றும் இல்லையே என்ற ஏமாற்றம் தான் நமக்குக் கிடைக்கிறது. அடையாளங்கள் ஒன்றும் இல்லாதிருக்கும்போது, எப்படி இவர்கள் தங்களை அப்போஸ்தலர் என்று கூறிக்கொள்கிறார்கள் ? தேவப்பிள்ளையே ! இது கடைசி காலம். கொடிய வஞ்சகங்களுக்குத் தப்ப, நாம் ஜாக்கிரதையாயிருப்போம், நம்மைக் காத்துக்கொள்வோம்.*
*" உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள் " - லூக்கா 21:19*
🤔 *சிந்தனைக்கு* 🤔
*! எச்சரிக்கையாயில்லாதவர்கள் வஞ்சிக்கப்படுவார்கள் !*
*Today’s Bible Reading: 2 Corin 12 :1-21*
*SIGNS AND WONDERS*
*" The signs of an apostle were performed among you with all endurance, signs and wonders, and mighty deeds ." 2 Corin 12:12*
*Evangelistic ministry, pastoral ministry, apostolic ministry and apostleship have signs. As soon as we see those signs, we can know that these are the ones who have received such a calling. Whenever we go to a ministry, we can know what the ministry is like and what calling that particular servant has received by keeping the signs found there. We need the wisdom and discernment to explore and understand these things. For example, if we as believers stick only to one evangelistic ministry, our spiritual life will not grow through that particular ministry. We can help that ministry. But our spiritual growth must be united with pastoral ministry. Only if we understand the ministry with these signs, then there will be growth in our life. Let us not be deceived.*
*When we see that Paul says that the signs of the apostles were performed with miracles, wonders, and powers, we seem to ask, "Are there no apostles" these days? If we look for the signs of apostleship in those who call themselves "apostles," we are disappointed that there is none. How can they claim to be apostles when there are no signs? O Child of God! this is the last time, let us beware and guard ourselves to avoid deadly deceptions.*
*“ By your endurance you will gain your lives.” – Luke 21:19*
🤔 *For Thought* 🤔
*The unwary will be deceived.*
*வேதபகுதி: லூக்கா 20:27-47*
*" அதிக ஆக்கினை "*
*" விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபாரகரைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள், அவர்கள் அதிக ஆக்கினையை அடைவார்கள் என்றார் " - லூக்கா 20:47*
*நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தை வெளிகளில் வந்தனங்களை அடையவும், ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபாரகரைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள், அவர்கள் அதிக ஆக்கினையை அடைவார்கள் என்று இயேசு கூறியிருக்கிறார். லூக்கா 20:46,47. மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு வசனங்களைப் படிக்கும் போது நம்முடைய கண்களுக்கு முன்பாகவும் இப்படிப்பட்ட அநேகர் இருக்கிறார்களே என்றும், கடைசி காலத்திலும் இப்படிப்பட்டவர்கள் அநேகர் எழும்பி, பலரை வஞ்சிப்பார்கள் என்பது எப்படி இயேசுவுக்குத் தெரியும்? இவ்வளவு சரியாக இயேசு கூறியிருக்கிறாரே என்றும் கூறத் தோன்றுகிறது. மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு வசனங்களின் சாரம் என்ன தெரியுமா ? தேவனுடைய நாமத்தைப் பயன்படுத்தி, உலக மேன்மைகளையும், சுய புகழ்ச்சியையும் தேடினவர்களுடைய ஆக்கினை அதிகமாயிருக்கும் என்பதே.*
*இவைகளைப் பார்க்கும்போது, நமக்குப் பயமாய் இருக்கிறது. இயேசுவின் பெயரைச் சொல்லி, பணம் சம்பாதிப்பது, அவருடைய பெயரைச் சொல்லி, பெருமையையும், உயர்ந்த இடங்களையும் தேடுவது மிகப் பெரிய ஆபத்தையும், அழிவையும் கொண்டுவரும். நான் அந்தக் கூட்டத்திற்குச் சென்றேன், என்னை மேடையில் உட்காரும்படி அழைக்கவே இல்லை. இவர்களுக்கெல்லாம் ஊழியர்களை மதிக்கத் தெரியவில்லை என்று புலம்பும் நபர்களுக்கு அதிக ஆக்கினை இருக்கிறது. இதை நானல்ல, இயேசுவே கூறியிருக்கிறார். இயேசுவின் நாமம் மகிமையானது. மகிமையான இயேசுவின் நாமத்தை வீணாகவும், உலகக் காரியங்களுக்காகவும் நாம் பயன்படுத்தினால், நரகம் நிச்சயம். எனவே, தேவனுடைய காரியங்களில், மிகுந்த பயத்துடன் இருப்போம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார். ஆமென்.*
*" கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார் " - உபா 5:11*
🤔 *சிந்தனைக்கு* 🤔
*! தேவ சமூகத்தில் துணிகரம் தேடிவரும் தண்டனை !*
*Today’s Bible Reading: Luke 20:27-47*
*GREATER CONDEMNATION*
*“Who devour widow's houses and for a pretense make long prayers. They will receive the greater condemnation.” – Luke 20:47*
*Beware of the scribes who want to walk around in long robes, reach for gifts in the marketplaces, sit in the best seats in the synagogues, have the best places at banquets, destroy widow's houses, and make long prayers in sight. Jesus said that they will suffer much punishment - Luke 20:46,47. When we read the two verses mentioned above, how does Jesus know that there are many such people before our eyes and that in the last time all such people will arise and deceive many? It seems that Jesus said so rightly. Do you know the essence of the two verses mentioned above? Those who seek worldly honours and self-praise by using God's name will have a heavy punishment.*
*When we see these things, we are afraid. Calling on the name of Jesus and making money, calling on His name and seeking glory and high places will bring great danger and destruction. “I went to that meeting and I was never invited to sit on the stage.” all these people complain that they don't know how to respect their elders. Jesus said this, not me. Glory be to the name of Jesus! Hell is sure if we use the glorious name of Jesus in vain and for worldly things. Therefore, let us have great fear in the things of God. May the Lord bless us. Amen!*
*“You shall not take the name of the LORD your God in vain, for the LORD will not hold him guiltless who takes his name in vain.” – Deut 5:11*
🤔 *For Thought* 🤔
*Daring in God's presence will be punished.*
வேதபகுதி: நியாயா 6:1-16
*" நேரிடுவானேன்? "*
*" அப்பொழுது கிதியோன் அவரை நோக்கி: ஆ என் ஆண்டவனே, கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்? " - நியாயாதிபதிகள் 6:13*
*இஸ்ரவேல் ஜனங்கள் கஷ்டப்பட்டு பயிரிட்டு, அறுவடைக்கு ஆயத்தமாயிருக்கும்போது, மீதியானியர் வந்து எல்லாவற்றையும் அறுத்துக் கொண்டு போய்விடுவார்கள். அதாவது அவர்களுடைய கைக்கு எட்டினவைகள் வாய்க்கு எட்டவில்லை. இந்தச் சூழ்நிலையில் இஸ்ரவேலர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, அவர்களை மீதியானியருடைய கையிலிருந்து விடுதலையாக்க தேவன் சித்தங்கொண்டு, அதற்காகக் கிதியோனிடம் சென்று, தன்னுடைய திட்டத்தை வெளிப்படுத்தினார். அப்பொழுது கிதியோன், தேவன் எங்களோடு இருந்தால், இவைகளெல்லாம் ஏன் நேரிட்டது என்று கேட்டான். கிதியோனுடைய கேள்வியில் ஆழமான உண்மை இருந்தது. தேவன் அவர்களோடு இருந்தால் அவர்கள் ஏன் அடிமையாக இருக்க வேண்டும்? அவர்களுடைய உழைப்பு அந்நியர்களுக்கு எதற்காகச் செல்ல வேண்டும்?*
*இவைகள் அனைத்தும் உண்மைதான். ஆனால் இன்னொரு உண்மையை கிதியோன் அறியவில்லை. " இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் அவர்களை ஏழு வருஷம் மீதியானியர் கையில் ஒப்புக்கொடுத்தார் " நியாயா 6:1. என்ற உண்மையை கிதியோன் அறியவில்லை. அவர்கள் தேவனுடைய ஜனங்களாகவே இருந்தாலும், கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானவைகளைச் செய்யும்போது தேவனாகிய கர்த்தர் அவர்களோடு இராமல், அவர்களை சத்துருக்களின் கையில் ஒப்புக்கொடுக்கிறார். இதுவே வேதம் கூறும் சத்தியம்.*
*பிரியமானவர்களே ! நமக்கும் இதே பிரமாணம்தான். நாம் தேவனுக்குப் பிரியமானவைகளைச் செய்யும்போது நம்மோடுகூட இருக்கும் கர்த்தர், நாம் தேவனுடைய பார்வைக்குப் பொல்லாப்பானவைகளைச் செய்யும்போது நம்மை விட்டு விலகி, நம்மையும் கேடான காரியங்களுக்கு ஒப்புக்கொடுப்பார் - ரோமர் 1:28. எனவே, அவருடைய பிள்ளைகளாகிய நாம் எப்பொழுதும் அவருடைய பார்வைக்குச் செம்மையானவைகளையேச் செய்து, சுகமாயிருப்போம். அல்லேலூயா !*
*" அவன் செய்தது கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்ததினால், அவனையும் அவர் அழித்துப்போட்டார் " - ஆதி 38:10*
🤔 *சிந்தனைக்கு* 🤔
*! செம்மையானவர்களே செழிப்பாயிருப்பார்கள் !*
*Today’s Bible Reading: Judges 6:1-16*
*WHY THIS HAPPENED?*
*“Gideon said to Him, “O my lord, if the Lord is with us, why then has all this happened to us?” – Judges 6:13*
*When the people of Israel were hard at work planting and ready to harvest, the Midianites would come and reap everything and leave. That is, what was within their reach did not reach their mouth. In this situation, when the Israelites cried out to the Lord, God wanted to free them from the hand of the Midianites, and for that, he went to Gideon and revealed his plan. Then Gideon asked, "If God is with us, why has all this happened?" There was a deep truth in Gideon's question. Why should they be slaves if God is with them? Why should their labour go to strangers?*
*All these are true. But Gideon did not know another fact. "The children of Israel did evil in the sight of the Lord, and the Lord delivered them into the hand of the Midianites for seven years" Judges 6:1. Gideon did not know the truth. Although they are God's people, when they do what is evil in the sight of God, the Lord God is not with them and gives them into the hands of their enemies. This is the truth of the scripture.*
*Beloved ! We have the same oath. The Lord, who is with us when we do what is pleasing to God, withdraws from us when we do what is evil in God's sight, and gives us over to evil things - Romans 1:28. Therefore, as His children, we will always do what is right in His sight and be healed. Hallelujah!*
*And the thing which he did displeased the LORD; therefore He killed him also. – Gen 38:10*
*🤔For Thought🤔*
*THE PURE WILL PROSPER.*
*வேதபகுதி: பிலிப்பியர் 4:1-23*
*" போதிக்கப்பட்டேன் "*
*" தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன் " - பிலி 4:12*
*அன்றைய நாட்களின் கிறிஸ்தவ போதனைகள் வேறு. இன்றைய நாட்களின் போதனைகள் வேறு. அன்றைய நாட்களில் கிறிஸ்து இயேசுவைப் பின்பற்றினால் உங்களுக்கு வரும் உபத்திரவங்களில் பொறுமையாக நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்றும், குறைவுகள், பட்டினியின் மத்தியிலும் கர்த்தரைவிடாமல் பற்றிக்கொள்ள வேண்டும் என்றும் போதிக்கப்பட்டது. இந்த உலகம் நமக்குச் சொந்தமானது அல்ல என்றும் இந்த உலகத்தின் மேன்மைகளும் மகிமையும் நம்முடைய இலக்கு அல்லவென்றும், பரலோக ராஜ்யமே நம்முடைய இலக்கு என்றும் போதிக்கப்பட்டது. எனவே, அன்றைய கிறிஸ்தவம் பரலோக தரிசனத்தை உடையதாய், பரிசுத்தப் பாதையில் வீறு நடைபோட்டது. உபத்திரவங்களில் மிரளாமல், சோதனைகளை சாதனைகளாக்கி, தாழ்விலும் களிகூர்ந்து, கர்த்தரைத் துதித்து, இயேசுவுக்கும், சத்தியத்துக்கும் சாட்சியாயிருந்தது.*
*ஆனால் இன்றைய கிறிஸ்தவத்தின் போதனைகள் தலை கீழாய் இருக்கிறது. பணம் இருந்தால்தான் ஆசீர்வாதம் என்றும், உலகத்தின் மேன்மையையும், மகிமையையும் நாம் அனுபவிக்க வேண்டும் என்றும், நாம் ஐசுவரியமுள்ளவர்களாக வாழ்வதற்கே இயேசு சிலுவையில் மரித்தார் என்றும் பலவிதமான கேலிக்குரிய காரியங்களை போதனைகளாக போதித்துக் கொண்டிருக்கிறது. அன்றைய போதனைகள் தேவனுடைய விருப்பமாயிருந்தது. இன்றைய போதனைகள் மனிதர்களுடைய விருப்பமாயிருக்கிறது.*
*அன்றைய போதனைகள் ஆத்துமாக்களை நோக்கி இருந்தது. இன்றைய போதனைகள் மனிதர்களை நோக்கி இருக்கிறது. இவ்வாறு ஏராளமான காரியங்களை கூறலாம். ஆனால் காரியம் என்னவென்றால் நாம் அப்போஸ்தல போதனையில் இருக்கிறோமா? இல்லையென்றால் இன்றைய காலத்து போதனையில் இருக்கிறோமா, அப்போஸ்தல போதனையில் இருந்தால், நிச்சயம் பரலோகம்தான். இல்லையென்றால் நிச்சயம் நரகம்தான்.*
*" நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலரால் முன் சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைவுகூருங்கள் " - யூதா 17
🤔 *சிந்தனைக்கு* 🤔
*! ஆதி உபதேசம் ஆண்டவருக்குப் பிரியம் !*
*Today’s Bible Reading: Phil 4:1-23*
*I HAVE LEARNED*
*“I know what it is to be in need, and I know what it is to have plenty. I have learned the secret of being content in any and every situation, whether well fed or hungry, whether living in plenty or in want.” – Phil 4:12*
*The Christian teachings of those days were different. Today's teachings are different. In those days it was taught that if you follow Christ Jesus, you should be patient and have faith in the trials that will come to you, and that you should cling to the Lord even in the midst of shortages and hunger. It was taught that this world does not belong to us and that the exaltations and glory of this world are not our goal and that the kingdom of heaven is our goal. Therefore, the Christianity of that day had a heavenly vision and walked on the holy path. Not afraid of tribulations, making trials into achievements, rejoicing even in the low, praising the Lord, testifying to Jesus and the truth.*
*But the teachings of Christianity today are upside down. It is teaching many ridiculous things that only having money is a blessing, that we should enjoy the superiority and glory of the world, and that Jesus died on the cross so that we could live rich lives. The teachings of the day were God's will. Today's teachings are about the will of men.*
*The teachings of the day were aimed at souls. Today's teachings are directed at humans. So many things can be said. But the point is are we in apostolic teaching? If not, are we in today's teaching, if we are in the apostle's teaching, it is definitely heaven. Otherwise it is definitely hell.*
*"Remember what the apostles of our Lord Jesus Christ foretold." – Jude 17*
*🤔For Thought🤔*
*ANCIENT TEACHING IS PLEASING TO THE LORD.*
Brother J. Daniel
Yesuveh Aatharam Ministries
496/1, Lakshmipuram Periyar Nagar,
Redhills, Chennai – 600052
Mobile: +919940018988
Email id: jesusthefoundation@gmail.com
Youtube: https://youtube.com/@YesuvehAatharamMinistries?si=tmnC_9ZbaIMGfOKh
Thanks for using my website. Post your comments on this