வேதபகுதி: ஆதியாகமம் 13:1-18*
*" கர்த்தருடைய தோட்டம் "*
*" கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிக்கும்முன்னே, சோவாருக்குப் போம் வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப்போலவும் " - ஆதி 13:10*
*ஒவ்வொருவரும் தங்களுடைய திராணிக்கும் தகுதிக்கும் தக்கதாக தோட்டங்களை நாட்டுவார்கள். ஒருவருடைய தோட்டம் அவலட்சணமாய் இருந்தால், பாதுகாப்பின்றி இருந்தால் அந்த தோட்டத்தின் உரிமையாளருக்கு அது அவமானமாகும். அந்தத் தோட்டத்திலுள்ள செடிகளும் மரங்களும் சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தாலும் அது அந்தத் தோட்டத்தின் உரிமையாளருக்கு அவமானம். அதே வேளையில் ஒரு தோட்டமானது நன்றாகப் பராமரிக்கப்பட்டும், பாதுகாப்போடும் இருக்குமென்றால், அது அந்தத் தோட்டத்தின் உரிமையாளருக்கு மகிமை.*
*இன்றைய வசனம் கர்த்தரின் தோட்டம் என்று குறிப்பிடுவதை நாம் பார்க்கும்போது, கர்த்தருடைய தோட்டம் எவ்வளவு மகிமையாக, செழிப்பாக, பாதுகாப்பாக இருக்கும் என்பதை நம்மால் ஓரளவுக்கு யூகிக்க முடியும். கர்த்தருடைய தோட்டத்திற்குப் பாய்ச்சப்படும் நீர் எவ்வளவு சுத்தமானதாக இருக்கும். அவருடைய தோட்டத்தின் பணியாளர்கள் எவ்வளவு உண்மையுள்ளவர்களாயும், திறமையானவர்களாயும் இருப்பார்கள். கர்த்தருடைய தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு எவ்வளவு மேன்மையான கூலி கிடைக்கும்.*
*மகா செழிப்பான மேட்டிலே கர்த்தருக்கு ஒரு தோட்டம் இருந்தது என்று ஏசாயா குறிப்பிட்டு, அவருடைய தோட்டத்தில் அவர் நற்குல திராட்சச் செடிகளை நட்டிருந்தார் என்றும், அந்தச் செடிகள், தேவனுடையவர்களாகிய நாம்தான் என்றும் ஏசாயா குறிப்பிடுகிறான். கர்த்தருடைய தோட்டத்தில், அவருடைய பராமரிப்பில் நாம் இருக்கிறோம் என்பதை நினைக்கும்போதே நம்முடைய உள்ளம் பரவசமடைகிறது. கர்த்தருடைய பிள்ளையே ! நம்மை தேவன் அவருடைய தோட்டத்தில் வைத்திருப்பதற்காக அவரை நாம் ஸ்தோத்தரிக்க வேண்டும். நம்மிடம் அவர் எதிர்பார்க்கும் பலனை அவருக்குக் கொடுக்க வேண்டும். அப்பொழுது நாம் இன்னும் செழிப்பாயிருக்கலாம், ஆசீர்வாதமாயிருக்கலாம். மேலும் பல கனிகளைக் கொடுக்கலாம். அல்லேலூயா !*
*" நான் உன்னை முற்றிலும் நற்கனி தரும் உயர்குலத் திராட்சச் செடியாக நாட்டினேன் ” - எரே 2:21*
🤔 *சிந்தனைக்கு* 🤔
*! கனி கொடுப்பவர்கள் கர்த்தருக்கேற்றவர்கள் !*
*Today’s Bible Reading: Gen 13:1-18*
*GARDEN OF THE LORD*
*“The Jordan Valley was well watered everywhere like the garden of the LORD, like the land of Egypt, in the direction of Zoar.” – Gen 13:10*
*Each will plant gardens according to there power and merit . If one's garden is wretched and unprotected, it is a disgrace to the owner of that garden. Even if the plants and trees in the garden are not properly maintained, it is a disgrace to the owner of the garden. While a garden is well maintained and protected, it is a glory to the owner of the garden.*
*When we see that today's verse refers to the "Garden of the Lord," we can somewhat guess how glorious, prosperous, and secure the garden of the Lord will be. How pure is the water that flows into the Lord's garden. How faithful and efficient are the servants of His garden. What great wages are those who work in the Lord's garden.*
*Isaiah mentions that the Lord had a garden on a very fertile hill, and in his garden he had planted good vines, and those plants are we who are God's. When we think that we are in the Lord's garden, in His care, our souls are thrilled. We should praise God for keeping us in his garden, child of God. We should give him the benefit he expects from us. Then we can be more prosperous and blessed. May also give many fruits. Hallelujah!*
*“Yet I planted you a choice vine, wholly of pure seed. How then have you turned degenerate and become a wild vine?” – Jere 2:21*
🤔 *For Thought* 🤔
*Those who bear fruit are of the Lord.*
*வேதபகுதி: லேவி 16:1-34*
*" ஆரோன் செய்தான் "*
*" கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோன் செய்தான் " - லேவியராகமம் 16:34*
*பிரதான ஆசாரியன் என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்பதையெல்லாம் தேவன் நேரிடையாக பிரதான ஆசாரியனிடமே கூறியிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யாமல் மோசேயிடம் தேவன் கூறினார். தனக்கு மேலே இருக்கும் தலைவர்களை மதிக்க வேண்டும் என்பதற்காகவும், எல்லாவற்றிலும் ஒழுங்கு இருக்க வேண்டும் என்பதற்காகவும் தேவன் அப்படிச் செய்தார். மட்டுமல்லாமல், ஆரோனுக்குத் தேவனாக மோசேயை நியமித்தார் - யாத் 4:16. அவர் நியமித்த காரியங்களை அவரே மீறினால் அது நீதியாயிருக்காதல்லவா. எனவே, தேவன் என்ன கூறினாரோ, அதைக் கடைசிவரைக்கும் கடைப்பிடிப்பதற்காக அப்படிக்கூறினார். இவ்வாறு பல கோணத்திலே நாம் தியானித்தாலும், கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோன் செய்தான் என்பது நமக்கும் கொஞ்சம் சவாலாகத்தான் இருக்கிறது.*
*இன்றைய நாட்களில் தங்களுடைய தலைவர்களுக்குக் கீழ்ப்படிபவர்கள் குறைந்துவிட்டார்கள். தேவன் தன்னோடு பேசினால் மட்டுமே செய்வதாகவும், மற்றவர்கள் யார் சொன்னாலும் கீழ்ப்படியப் போவதில்லை என்ற பைத்தியக்கார சிந்தனையை உடையவர்களும் பெருகிவிட்டார்கள். நமக்கென்று தேவன் தலைவர்களை வைத்திருக்கும்போது ஊழியத்தில், சபையில் செய்ய வேண்டிய காரியங்களை தேவன் நமக்கு நிச்சயமாய் வெளிப்படுத்தமாட்டார். அப்படியே நமக்கு வெளிப்படுத்தினாலும், தலைவர்களுக்கும் அவைகளை வெளிப்படுத்துவார். அதற்கேற்றபடி அவர்களை நடத்துவார். தலைவர்களுக்குச் சொல்லாமல் நமக்கு மட்டுமே ஊழிய வேலைகளை தேவன் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைப்பது நம்முடைய அறியாமையே.*
*பிரியமானவர்களே ! மோசே என்னவெல்லாம் கூறினானோ அவைகளையெல்லாம் ஆரோன் செய்தான். அப்படியே தேவன் நமக்குத் தந்திருக்கும் தலைவர்கள் என்னவெல்லாம் சொல்லுகிறார்களோ, அவைகளையெல்லாம் நாம் செய்யும்போது, தேவனுடைய சித்தம் நிறைவேறும், தேவ ராஜ்யம் கட்டப்படும், தேவ நாமம் மகிமைப்படும். நாமும் ஆசீர்வாதமாயிருப்போம். எனவே, தேவன் நமக்குத் தந்திருக்கும் தலைவர்களுக்குக் கீழ்ப்படிவோம், ஆசீர்வாதங்களை சுதந்தரிப்போம். அல்லேலூயா !*
*" கர்த்தர் தனக்குக் கற்பித்தபடியெல்லாம் மோசே செய்தான் " - யாத் 40:16*
🤔 *சிந்தனைக்கு* 🤔
*! கீழ்ப்படிதலே தேவனுடைய எதிர்பார்ப்பு !*
*Today’s Bible Reading: Lev 16:1-34*
*AARON DID*
*“And Aaron did as the Lord commanded Moses.” – Lev 16:34*
*God may directly tell the high priest what to do and how to do it. But God told Moses not to do that. God did it so that he would respect the leaders above him and that there would be order in everything. Moreover, he appointed Moses as God to Aaron – Exo 4:16. Would it not be justice if he himself transgressed the things he had ordained? So. what God said, He will keep it to the end. Even though we meditate on it from many angles, it is a little challenging for us that Aaron did as the Lord commanded Moses.*
*Nowadays, people who obey their leaders have decreased and those who have the crazy idea that God will only do it if He speaks to him, and will not obey anyone else, have increased. When God has leaders for us, God will certainly not reveal to us what to do in the ministry and church. Even if He reveals them to us, He will also reveal them to the leaders. He will treat them accordingly. It is our ignorance to think that God should reveal ministry works only to us without telling the leaders.*
*Beloved ! Aaron did all that Moses said. In the same way, when we do whatever the leaders that God has given us say, God's will ,will be fulfilled, God's kingdom will be built, God's name will be glorified, and we will be blessed. Therefore, let us obey the leaders God has given us and inherit the blessings. Hallelujah!*
*“ This Moses did; according to all that the Lord commanded him.” – Exo 40:16*
🤔 *For Thought* 🤔
*Obedience is God's expectation.*
*வேதபகுதி: நியாயா 13:1-25*
*" புசியாமல் குடியாமல் "*
*" ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாதபடிக்கும், தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு " - நியாயாதிபதிகள் 13:4*
*சிம்சோனுடைய பிறப்பு ஆச்சரியமானது. அவனுடைய பிறப்பு அவனுடைய தாய், தந்தைக்கு முன்னறிவிக்கப்பட்டது. அவனைத் தன்னுடைய வயிற்றிலே சுமக்கும் தாயானவள் எப்படி இருக்க வேண்டும் என்றும் அவளுக்குக் கட்டளையிடப்பட்டது. சிம்சோன் தேவனால் முன்குறிக்கப்பட்டு, தேவனால் அனுப்பப்பட்டு, பயன்படுத்தப்பட்டவன். அவன் தேவனுடைய கரத்தில் இருக்கப்போகிறவன். எனவே, அவன் மிகுந்த கட்டுப்பாடுகளுடன், தேவன் விரும்புகிறபடி வாழ வேண்டியது அவசியம். ஆனால், அவனுடைய தாய் ஏன் கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும். சிம்சோன் என்ற பிள்ளை அவளுடைய வயிற்றில் இருக்கும் வரைக்கும் அவள் தீட்டானதொன்றையும் புசிக்கவும் குடிக்கவும் கூடாது என்று தேவன் அவளுக்குக் கட்டளையிட அவசியம் என்ன?*
*பிரியமானவர்களே ! தேவன் எதிர்பார்க்கும் ஒரு காரியத்தை நாம் அவருக்குக் கொடுக்க வேண்டுமென்றால் நாம் தீட்டானவைகளுக்கு விலகியிருக்க வேண்டும். தேவன் எதிர்பார்க்கும் காரியம் நம்மிடம் இருக்கும் வரைக்கும் நாம் அப்படி இருக்க வேண்டும். தேவன் எதிர்பார்க்கும் காரியம் நம்மிடம் எதுவரைக்கும் இருக்கும்? சிம்சோன் அவனுடைய தாயின் வயிற்றில் பத்து மாதங்கள் மட்டுமே இருந்தான். ஆனால், தேவன் நம்மிடம் எதிர்பார்க்கும் ஆத்துமாவானது, அதாவது, நம்முடைய ஆத்துமா பரலோகம் சேர வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறாரல்லவா. எனவே, நம்முடைய ஆத்துமா நமக்குள் இருக்கும் மட்டும் நாம் தீட்டானவைகளுக்கு விலகி இருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும்.*
*நம்முடைய மரண நேரம் வரைக்கும் நம்முடைய ஆத்துமா நமக்குள் இருக்கும். எனவே நம்முடைய மரணம் வரைக்கும் நாம் தீட்டானவைகளுக்கு விலகியிருக்க வேண்டும். இவைகளை மறந்து, நாம் தீட்டுப்பட்டால், நமக்குள் இருக்கும் ஆத்துமாவும் தீட்டுப்படும். அதற்குப்பின்பு பரலோக ராஜ்ய பாக்கியத்தை நம்முடைய ஆத்துமா இழந்து போகும். தேவப்பிள்ளையே ! இவைகளை அறிந்து நம்மை பரிசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்து, ஆத்துமாவைக் காத்துக்கொள்வோம். பரலோக ராஜ்யத்தை சுதந்தரிப்போம். அல்லேலூயா !*
*" உன்னைச் சுத்தவானாகக் காத்துக்கொள் "- 1தீமோ 5:22*
🤔 *சிந்தனைக்கு* 🤔
*! அர்ப்பணிப்போடு இருப்பவர்களுக்கு அளவில்லாத ஆசீர்வாதங்கள் !*
*Today’s Bible Reading: Judges 13:1-25*
*WITHOUT EATING AND DRINKING*
*“Now see to it that you drink no wine or other fermented drink and that you do not eat anything unclean.” – Judges 13:4*
*Samson's birth was surprising. His birth was foretold to his parents. She was also commanded to look like a mother carrying him in her womb. Samson was foreordained by God, sent by God, and used by God. He is going to be in the hands of God. Therefore, it is necessary for him to live as God wants, with great restraint. But why should his mother be so restrictive? Why was it necessary for God to command her not to eat or drink anything unclean as long as the child named Samson was in her womb?*
*Beloved ! If we are to give God the one thing he expects us to do, we must abstain from unclean things. We must be so as long as we have what God expects us to do. How long will we have what God expects us to do? Samson was only 10 months old in his mother's womb. But what God expects from us is the soul, that is, doesn't God expect our soul to join heaven? So only our soul is within us and we must keep ourselves away from the unclean.*
*Our soul remains within us until the time of our death. So we must abstain from unclean things till our death. If we forget these things and become defiled, the soul within us will also be defiled. After that our soul will lose the heavenly kingdom privilege. Child of God ! Let us know these things and consecrate ourselves to holiness and guard our souls. We will inherit the kingdom of heaven. Hallelujah!*
*Keep yourself pure. – 1 Timo 5:22*
🤔 *For Thought* 🤔
*IMMEASURABLE BLESSINGS ARE FOR THOSE WHO ARE DEDICATED.*
*வேதபகுதி: 1 இராஜா 8:1-21*
*" கட்டப்பட்ட ஆலயம் "*
*" இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டினேன் " - 1 இராஜாக்கள் 8:20*
*சாலொமோன் தேவனுடைய நாமத்திற்காக நான் ஆலயத்தைக் கட்டினேன் என்று கூறினான். இவன் ஆலயத்தைக் கட்ட என்ன காரணம்? (1) தேவன் வாசம்பண்ணும் படியாக ஆலயத்தைக் கட்டினான். (2) தேவனுடைய நாமம் மகிமைப்படும்படியாக ஆலயத்தைக் கட்டினான். (3) தன்னுடைய தகப்பனாகிய தாவீதின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியும்படியாக ஆலயத்தைக் கட்டினான். சாலொமோன் தேவனுடைய ஆலயத்தைக் கட்டினபடியால் தேவன் அவன்மேல் பிரியமாயிருந்தார். அவன் கட்டின ஆலயத்தில், தேவனுடைய இருதயமும், கண்களும், செவிகளும் இருந்தன. அவன் கட்டின ஆலயம் ஜனங்கள் அனைவருக்கும் ஆசீர்வாதமாயிருந்தது.*
*தேவப்பிள்ளையே ! நாமும், நாம் செய்யும் காரியங்களும் இப்படி அனைவரும் ஆசீர்வாதமாயிருக்க வேண்டுமென்றால், நாமும் சாலொமோனனை இந்த காரியத்தில் பின்பற்ற வேண்டும். நம்முடைய வாழ்க்கையில், தொழிலில், ஊழியத்தில் தேவன் வாசமாயிருக்கத்தக்க இடத்தை உண்டாக்க வேண்டும். தேவன் எங்கு வாசமாயிருப்பார் தெரியுமா? பரிசுத்தம் இருக்கும் இடத்தில் அவர் வாசமாயிருப்பார். பரிசுத்தத்தோடு கூடிய துதி, ஸ்தோத்திரம் இருக்கும் இடத்தில் தேவன் வாசமாயிருப்பார். எனவே, இப்படிப்பட்ட இடத்தை நம்முடைய எல்லாக் காரியங்களிலும் ஏற்படுத்த வேண்டும். இரண்டாவது, தேவனுடைய நாமத்தின் மகிமைக்காக நாம் எல்லாவற்றையும் செய்ய வேண்டும். அதாவது, நாம் செய்யும் ஒவ்வொரு காரியங்களும் தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்த வேண்டும். எந்தவொரு இடத்திலும் நம்முடைய சுயம் வெளிப்பட்டு விடாதபடி நாம் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். தேவனுடைய நாமம் தூஷிக்கப்படும்படியான எந்தவொரு காரியத்தையும் நாம் செய்யக்கூடாது. மூன்றாவதாக, நம்முடைய பெற்றோர்களுக்கும், பெரியோர்களுக்கும் கர்த்தருக்குள் கீழ்ப்படிய வேண்டும். நாம் இவர்களுக்குக் கீழ்ப்படியாமல் போகும் போது, தேவனுடைய இருதயம் காயப்படுகிறது. தேவனுடைய இருதயம் காயப்படுத்தப்படும் இடத்தில் அவர் வாசம்பண்ணமாட்டார். தேவப்பிள்ளையே ! நாம் இவைகளைக் கடைப்பிடிப்போம். தேவன் நம்மோடு எப்பொழுதும் தங்கியிருப்பார், நாமும் அநேகருக்கு ஆசீர்வாதமாய் இருப்போம். அல்லேலூயா !*
*" நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் " - ஆதி 12:2*
🤔 *சிந்தனைக்கு* 🤔
*! தேவ நாமத்தின் மகிமை ஆசீர்வாதங்களின் வழியாகும் !*
*Today’s Bible Reading:1 Kings 8:1-21*
*BUILT TEMPLE*
*“I have built the temple for the Name of the Lord, the God of Israel.” – 1 Kings 8:20*
*Solomon said, “I built the temple for God's name.” What is the reason for Solomon to build the temple? 1. He built the temple for God to dwell in. 2. He built the temple so that God's name would be glorified. 3. He built the temple in obedience to the words of his father David. God was pleased with Solomon because he built God's temple. In the temple he built, there were God's heart, eyes, and ears. The temple he built was a blessing to all the people.*
*Child of God ! If we and what we do are to be blessed like this, we must follow Solomon in this matter. We should create a place where God can dwell in our lives, work, and ministry. Do you know where God resides? He dwells where there is holiness. Where there is praise and thanksgiving with holiness, God dwells. So we should create such a place in all our activities. Second, we must do everything for the glory of God's name. That is, the things we do should glorify God's name. We must be careful not to let our self manifest in any place. We must not do anything that would blaspheme God's name. Third, we must obey our parents and elders in the Lord. God's heart is broken when we disobey them. Where God's heart is wounded He will not dwell. Child of God, let us observe these things. God is always with us. May we also be a blessing to many. Hallelujah!*
*You will be a blessing – Gen12:2*
🤔 *For Thought* 🤔
*GLORIFYING GOD IS THE WAY TO BLESSINGS.*
Brother J. Daniel
Yesuveh Aatharam Ministries
496/1, Lakshmipuram Periyar Nagar,
Redhills, Chennai – 600052
Mobile: +919940018988
Email id: jesusthefoundation@gmail.com
Youtube : https://youtube.com/@YesuvehAatharamMinistries
Thanks for using my website. Post your comments on this