Type Here to Get Search Results !

வரப்போகிற நன்மைகள் | HIGHLY ESTEEMED | ஜெபம்பண்ணுகிறான் | சாவுக்கேதுவான விஷம் | Yesuveh Aatharam Ministries Sermons | Jesus Sam

வேதபகுதி: எபிரெயர் 9:1-28
" வரப்போகிற நன்மைகள் "*
*" கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டி சம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமமுமான கூடாரத்தின் வழியாகவும் " - எபி 9:11*

*தேவப்பிள்ளைகளாகிய நமக்கு நன்மைகள் வரப்போகிறது என்றும், நாம் அந்த நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்காகத்தான் இயேசு பூமியில் வெளிப்பட்டு, இரத்தம் சிந்தி, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாள் உயிரோடு எழும்பினார் என்று இன்றைய தியான வசனங்கள் கூறுகிறது. நமக்கு என்னென்ன நன்மைகள் வரப்போகிறது என்பதை நாம் அறிந்துகொண்டாலே நம்முடைய வாழ்க்கை முழுவதும் நிச்சயமாய் மாறிவிடும். நாம் பெற்றுக்கொள்ளப்போகிற நன்மைகள் என்னென்னவென்று, தேவப்பிள்ளைகள் பலருக்குத் தெரியாமல் இருக்கிறபடியால்தான், பரலோக தரிசனமும், அதன்மேல் வாஞ்சையும் இல்லாமல், பரலோகத்தைப் பற்றிய சிந்தையே இல்லாமல், உலகத்தின் காரியங்களில் மூழ்கிவிட்டார்கள். இயேசுவானவர் இம்மைக்குரிய தேவனாக மாத்திரமே இக்காலத்து விசுவாசிகளுக்குக் காட்டப்படுவதும் இந்த நிலைமைக்குக் காரணமாகும்.*

*வெளிப்படுத்தின விசேஷத்தில் சபைகளுக்கு ஆவியானவர் எழுதும்போது, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு எவைகளெல்லாம் கொடுக்கப்படும் என்று மிகப் பெரிய பட்டியல் ஒன்றைக் குறிப்பிடுகிறார். மனுஷனுக்கு ஏதேன் தோட்டத்தில் விலக்கப்பட்ட ஜீவ விருட்சத்தின் கனி, பரலோகத்தில் நமக்குக் கொடுக்கப்படப்போகிறது. மட்டுமல்லாமல் வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும். ஒருவரும் அறியாத நாமம் நமக்குக் கொடுக்கப்படும் என்று பல காரியங்களை ஆவியானவர் கூறினாலும், நான் ஜெயங்கொண்டு என்னுடைய பிதாவின் சிங்காசனத்தில் வீற்றிருப்பதுபோல, ஜெயங்கொள்ளுகிறவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னுடன் உட்காரும்படி அருள் செய்வேன் என்று இயேசு கூறியிருக்கிறாரே அதுவே எல்லாவற்றிலும் மேன்மையுள்ளது என்று நான் எண்ணுகிறேன். இன்னும் பல நன்மைகள் நமக்காக பரலோக ராஜ்யத்தில் காத்திருக்கிறது. இதைவிட வேறு என்ன நமக்கு வேண்டும். தேவப்பிள்ளையே! இந்த நன்மைகளைப் பெற்றுக்கொள்ள நாம் ஒவ்வொரு நாளும் ஆயத்தமாவோம், நன்மைகளை சுதந்தரிப்போம்.*

*“ கர்த்தர் நன்மையானதைத் தருவார் " - சங் 85:12*

🤔 *சிந்தனைக்கு* 🤔
*! தேவன் தரும் நன்மைகள் தேவனுடையவர்களுக்கே !*


*Today’s Bible Reading: Heb 9:1-28*
*FORTHCOMING BENEFITS*
*“But when Christ came as high priest of the good things that are now already here, he went through the greater and more perfect tabernacle that is not made with human hands, that is to say, is not a part of this creation.” – Heb 9:11*

*Today's meditation verses say that benefits are going to come to us as God's children, and that Jesus appeared on earth, shed his blood, was buried, and rose alive on the third day for us to receive those benefits. If we know what benefits are coming our way, our whole life will definitely change. Because many of God's children do not know what benefits we are going to receive, they are immersed in the things of the world, without a vision of heaven and a desire for it. The reason for this situation is that Jesus is only shown to the believers of this time as the God of this world.*

*When the Spirit writes to the churches in Revelation, he mentions a very long list of things that will be given to the one who overcomes. The fruit of the tree of life, which was denied to man in the Garden of Eden, is going to be given to us in heaven. Moreover, although the Spirit has said many things that we shall be given a cursed one and an unknown name, I will grant that he who overcomes may sit with me, just as I have overcome and sat on my Father's throne. Jesus said. I think that's the beauty of it all. Many more blessings await us in the Kingdom of Heaven. What else do we want? God, let us prepare ourselves every day to receive these benefits. Let us inherit the benefits. Hallelujah!*

*The Lord will indeed give what is good . – Psalm 85:12*

🤔 *For Thought* 🤔
*GOD’S BENEFITS ARE FOR GOD’S PEOPLE ONLY.*


*வேதபகுதி: மாற்கு 11:1-26*
*" பார்க்க வந்தார் "*

*" இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்க்க வந்தார் " - மாற்கு 11:13*

*பார்க்க வருதல் என்ற வார்த்தைகளுக்கு இரண்டுவிதமான அர்த்தங்கள் உண்டு, மகளைத் திருமணம் செய்து கொடுத்தவர்கள், தங்களுடைய மகள் எப்படி இருக்கிறாள் என்று பார்க்க வருவார்கள். இவ்வாறு வரும் போது வெறுங்கையாய்ப் போகாமல், எதையாவது வாங்கிக் கொண்டு வருவார்கள். ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்போது, அவருடைய உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களும் அவருக்குத் தேவையானவைகளைக் கொடுத்து விட்டு, அவரைப் பார்த்துவிட்டுச் செல்லுவார்கள்.*

*நம்முடைய தேவைகளை சந்திக்கிறவர்கள் இருக்கும்போது, நமக்குத் தேவையானவைகளை அவரிடமிருந்து பெற்றுக்கொள்வதற்காக, அவரைப் பார்க்க வருவோம். உதாரணமாக நம்முடைய வீட்டை நாம் வாடகைக்குக் கொடுத்திருந்தால், வாடகையை வாங்குவதற்கு அந்த வீட்டிலிருப்பவர்களைப் பார்க்க வருவோம். இவ்வண்ணமாக, ஆண்டவராகிய இயேசு இலைகளுள்ள அத்திமரம் ஒன்றைக் கண்டு, அதில் பழங்கள் ஏதாகிலும் கிடைக்குமா என்று பார்க்க வந்தார். ஆனால் அந்த மரமோ பழங்களின்றி, வெறும் இலைகளோடு மாத்திரம் இருந்து, இயேசுவுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. இதினிமித்தமாக, அந்த அத்திமரம் இயேசுவால் சபிக்கப்பட்டு, பட்டுப்போயிற்று.*

*பிரியமானவர்களே! ஒரு வேளை இயேசு இன்று, இப்பொழுது நம்மைப் பார்க்க வந்தால் நம்முடைய நிலமை என்ன? அத்திமரமானது, இலைகளோடு இருந்தபடியினால், கட்டாயம் அதில் பழங்கள் இருக்கும் என்று நினைத்தே, இயேசு அந்த மரத்திடம் வந்தார். அதேபோல், நாமும் கிறிஸ்தவர்கள் என்று கூறிக் கொள்வதினாலும், ஆலயத்துக்குச் செல்லுவதினாலும், எனக்கு இயேசுவைத் தெரியும் என்று சொல்லுவதினாலும், ஊழியம் செய்வதினாலும் (இவைகளெல்லாம் இலைகள்) இவைகளையெல்லாம் பார்க்கும் இயேசு நம்மிடம் வந்தால், ஆவியின் கனி அவருக்குக் கிடைக்குமா? ஆவியின் கனி இல்லாமல் நாம் செய்யும் அனைத்துமே சடங்காச்சாரங்கள்தான். எனவே, கனி கொடுப்போம், ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளுவோம்.*

*" நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் " - மத் 3:10*

🤔 *சிந்தனைக்கு* 🤔
*! கனியில்லாதவர்கள் கர்த்தருடையவர்களல்ல !*


*Today’s Bible Reading: Mark 11:1-26*
*HE CAME TO SEE*
*“Seeing in the distance a fig tree in leaf, he went to find out if it had any fruit. When he reached it, he found nothing but leaves, because it was not the season for figs.” – Mark 11:13*

*The word visit has two different meanings. Those who gave their daughter in marriage come to see how their daughter is doing. When they come like this,they will not leave empty-handed, but will bring something with them. When a person is undergoing treatment in the hospital, his relatives, family and friends visit him by giving him what he needs.*

*When there are those who meet our needs, we come to Him to receive from Him what we need. For example, if we have rented out our house, we will visit the occupants to buy the rent. In this way the Lord Jesus saw a fig tree with leaves and came to see if there was any fruit on it, but the tree was disappointed with only leaves and no fruit. Because of this the fig tree was cursed by Jesus and died.*

*Beloved ! If Jesus came to visit us today, what would be our situation? Jesus came to the fig tree thinking that since it had leaves, it must have fruit. Similarly, if Jesus comes to us and sees all these (these are leaves) because we claim to be Christians, go to church, say that I know Jesus, and do ministry, will he get the fruit of the Spirit? Everything we do without the fruit of the Spirit is ritualistic. So, let us bear fruit and receive blessings. Hallelujah!*

*The ax is already at the root of the trees, and every tree that does not produce good fruit will be cut down and thrown into the fire. – Matth 3:10*

🤔 *For Thought* 🤔
*THE UNFRUITFUL ARE NOT OF THE LORD.*


*வேதபகுதி: ஏசாயா 47:1-15*
*" ஆகையால் தீங்கு "*
*" ஆகையால் தீங்கு உன்மேல் வரும், ” - ஏசாயா 47:11*

*பாபிலோன் தேசத்தைக் குறித்துக் கர்த்தர் கூறும் காரியங்களே இன்றைய தியான வசனங்களாகும். பாபிலோன் மேல் வரப்போகும் தீங்கையும், அதினிமித்தமாக பாபிலோனுக்கு உண்டாகப்போகும் காரியங்களையும் தேவன் முன்னறிவிக்கிறார். இதில் விசேஷமான காரியம் என்னவென்றால், பாபிலோன் மேல் வரப்போகும் தீங்கு எங்கேயிருந்து வருகிறது என்பது அதற்குத் தெரியாது என்பதும், சடுதியிலே அது பாழாய்ப்போகும் என்பதுமே. தேவனுடைய அற்புதங்கள் நடப்பதற்கு ஒரு வினாடிக்கு முன்பு சூழ்நிலையில் எந்த விதமான மாற்றங்களும் இருக்காது. ஆனால், அற்புதங்கள் நடந்தவுடனே ஒரு நொடியில் அனைத்தும் மாறிவிடும். அப்படியே, தீங்கு வருவதற்கு ஒரு நொடிக்கு முன்பு வரைக்கும் சூழ்நிலைகள் நன்றாக இருப்பது போல இருக்கும். ஆனால், தீங்கு வரும்போது, ஒரு நொடிக்குள்ளாக அனைத்தும் தலை கீழாக மாறிவிடும்.*

*பாபிலோன் மீது தேவனுடைய கடுங்கோபம் இறங்க என்ன காரணம் என்று கேட்டால், அதனுடைய அறிவும் ஞானமுமே காரணம் என்று கர்த்தர் கூறுகிறார். அதற்கு அதிகமான அறிவும் ஞானமும் இருந்தபடியால், பாபிலோன் தன்னை மிகுதியாய் உயர்த்தி, தன்னை ஒருவரும் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்து அகங்காரமாய் நடந்து கொண்டது. எனவே, தேவனுடைய கோபம் அதன்மேல் இறங்கிற்று. தேவனை மதிக்காமல் போகும் பட்டணங்கள், குடும்பங்கள் மீதெல்லாம் தேவ கோபம் இறங்கும், தேவனை மதியாத இடங்களெல்லாம், தேவனால் மிதிக்கப்படும்.*

*பிரியமானவர்களே! இந்தப் பூமியில் நமக்கு இருப்பது ஒரே ஒரு வாழ்க்கைதான். இந்த வாழ்க்கையில் தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்று, தேவன் கொடுக்கும் சந்தோஷத்தையும், சமாதானத்தையும் அனுபவித்து, சுகமாய் இருக்க வேண்டும். அதற்குப் பகுதிலாக தேவனுடைய கோபத்தில் விழுந்து, அழிந்துபோகக்கூடாது. நம்முடைய அறிவும் ஞானமும் பெருகும் போது, நம்முடைய இருதயத்தில் அகந்தைக்கு இடம் கொடுக்காதபடிக்கு மிகுந்த தாழ்மையைத் தரித்துக்கொள்ள வேண்டும். அப்பொழுது நாம் சுகமாக இருக்கலாம். அல்லேலூயா!*

*".....தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையில் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார் " - மீகா 6:8*

🤔 *சிந்தனைக்கு* 🤔
*! மனத்தாழ்மையே மகுடம் சூடும் !*


*Today’s Bible Reading: Isaiah 47:1-15*
*THEREFORE DISASTER*
*“Disaster will come upon you” – Isa 47:11*

*Today's meditation verses are the things that the Lord says about the land of Babylon. God foretells the evil that will come upon Babylon and the things that will happen to Babylon of its own accord. The peculiar thing about this is that Babylon does not know whence the harm that will come upon her will come, and it will be destroyed immediately. There will be no changes in the situation for a second before God's miracles happen. But everything changes in an instant when miracles happen. As such, conditions may appear to be good up until a moment before harm occurs. But when harm comes, everything turns upside down in a second.*

*When asked why God's wrath fell on Babylon, the Lord says that it was because of its knowledge and wisdom. Because it had more knowledge and wisdom, Babylon exalted itself in abundance and behaved arrogantly, thinking that no one could do anything to it. Therefore, the wrath of God has fallen upon it. God's anger will descend on cities and families that do not respect God, and all places that do not respect God will be trampled by God.*

*Beloved! We have only one life on this earth. We should receive the blessings of God in this life, enjoy the happiness and peace that God gives, and be comfortable. In part, we should not fall into God's wrath and perish. As our knowledge and wisdom increase, we must be very humble so as not to give place to pride in our hearts. Then we can be comfortable. Hallelujah!*

*And what does the Lord require of you? To walk humbly with your God. – Micah 6:8*

*🤔For Thought🤔*
*HUMILITY IS THE CROWNING GLORY.*


*வேதபகுதி: தானியேல் 9:1-27*
" பிரியமானவன் "*

*" நீ மிகவும் பிரியமானவன், " - தானி 9:23*

*தானியேல் பரலோகத்திற்கு மிகவும் பிரியமானவன். எனவே, அவன் வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே, கட்டளை வெளிப்பட்டதாம். தேவனுக்குப் பிரியமாய் வாழ்வதினால் என்ன பிரயோஜனம் என்று கேட்டபவர்களுக்கு இன்றையத் தியான வசனம் மிகப் பெரிய பதிலாகும். தேவனுக்குப் பிரியமாய் வாழ்பவர்களை தேவன் பரலோகத்தில் கனப்படுத்துவார் என்பதெல்லாம் உண்மைதான், ஆனால் இந்த உலகத்தில் அவர்களுக்கு என்ன கிடைக்கும் என்று கேட்பவர்கள் தானியேலைக் கவனித்துப்பார்த்தால் நலமாயிருக்கும். தானியேல் தேவனுக்குப் பிரியமானவனாயிருந்ததினால், அவன் ஜெபிக்கத் தொடங்கினவுடனே, அவனுடைய ஜெபத்திற்கான பதிலை பரலோகம் அனுப்பி விட்டது. எவ்வளவு ஆச்சரியம் பாருங்கள். அவன் தன்னுடைய ஜெபத்தை முடிக்கவே இல்லை. அவன் ஜெபிக்கத் தொடங்கினவுடனே, இவைகளுக்காகத் தான் அவன் ஜெபிக்கப்போகிறான், தன்னுடைய ஜெபத்தில் இவைகளைத் தான் கேட்கப்போகிறான் என்று அறிந்த பரலோகம், உடனடியாக அதற்குத் தேவையான பதிலை அனுப்பினது. இதற்குமேல் என்ன வேண்டும்?*

*தேவனுக்குப் பிரியமானவர்கள் கேட்பவைகளையெல்லாம் கொடுத்து, பரலோகம் அவர்களை அழகு பார்க்கும். தேவனுக்குப் பிரியமானவர்களுக்கு ஆபத்து வரும் போதெல்லாம் பரலோகம் இறங்கி வந்து, அவர்களுக்கு உதவி செய்து, அவர்களைக் காப்பாற்றும், தேவனுடைய சேனைகள் அனைத்தும் அவர்கள்மேல் நோக்கமாயிருந்து, அவர்களைக் காப்பாற்றுவதிலும், பராமரிப்பதிலும் கருத்தாயிருக்கும். தேவனுக்குப் பிரியமாயிருப்பவர்களுக்கு நடக்கப்போகும் காரியங்களெல்லாம் வெளிப்படுத்தப்படும். எல்லாவற்றிற்கும் மேலாக, தேவன் அவர்களோடுகூட இருப்பார். இதற்குமேல் என்ன வேண்டும். மனிதர்களுடைய அறிவுக்கு எட்டாத காரியங்களையெல்லாம் தேவன் அவர்களுக்காகச் செய்து, அவர்களை மேன்மைப்படுத்துகிறார்.*

*பிரியமானவர்களே! இந்த உலகில் மிகவும் முக்கியமான வேலை ஒன்று இருக்கிறதென்றால் அது தேவனுக்குப் பிரியமாய் வாழ்வதுதான். எனவே, நாம் தேவனுக்குப் பிரியமாய் வாழ நம்மை அர்ப்பணித்து, அதற்காகப் பிரயாசப்பட வேண்டும். இவ்விதமாய் நாம் பிரயாசப்படும்போது, தேவன் நமக்கு உதவி செய்து, நம்மை ஆசீர்வதிப்பார். அல்லேலூயா !*
*" உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும் " - சங் 143:10*

🤔 *சிந்தனைக்கு* 🤔
*! தேவனுக்குப் பிரியமானதை செய்வது - ஆசீர்வாதங்களின் உச்சம் !*


*Today’s Bible Reading: Daniel 9:1-27*
*HIGHLY ESTEEMED*
*“You are highly esteemed .” – Dan 9:23*

*Daniel is very dear to heaven. So, as soon as he began to pray, the command was revealed. Today's meditation verse is a great answer for those who ask what is the benefit of living pleasing to God. It is true that God will honour those who live pleasing to God in heaven, but those who ask what they will get in this world would do well to consider Daniel. Because Daniel was dear to God, as soon as he began to pray, heaven sent the answer to his prayer. Look how amazing. He never finished his prayer. As soon as he began to pray, Heaven, knowing that these were the things he was going to pray for, and these were the things he was going to hear in his prayer, immediately sent the necessary answer. What more could you want?*

*Those who are dear to God will give whatever they ask for and heaven will look upon them as beautiful. Whenever danger befalls those dear to God, heaven will come down, help them, and save them, and all the armies of God will be aimed at them, to save and preserve them. All the things that will happen to those who please God will be revealed. Above all, God will be with them. What more do you want? God does for them all things beyond the understanding of men, and exalts them.*

*Beloved! If there is one most important work in this world, it is to live pleasing to God. Therefore, we should dedicate ourselves to live pleasing to God and strive for it. As we strive in this way, God will help us and bless us. Hallelujah!*

*"Teach me to do your will". – Psalm 143:10*

*🤔For Thought🤔*
*TO DO WHAT IS PLEASING TO GOD – THE PINNACLE OF BLESSINGS.*


*வேதபகுதி: அப்போஸ்தலர் 9:1-22*
*" ஜெபம்பண்ணுகிறான் "*
*" அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான் " - அப் 9:11*

*தேவன் பவுலைச் சந்தித்ததற்குப் பின்பு, தம்முடைய நோக்கத்தையும் திட்டத்தையும் அவனுக்கு வெளிப்படுத்தி, அவனைத் தம்முடைய போர்க்களத்தில் முன்னணியில் நிறுத்துவதற்கு அனனியா என்பவனைத் தெரிந்துகொண்டு, அவனை பவுலிடம் அனுப்பினார். இவ்வாறு அவர் அனனியாவை அனுப்பும்போது, பவுலைக் குறித்து அவனிடம் பேசி, அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான் என்று கூறினார். தேவனால் சந்திக்கப்பட்டவன், தேவனுடைய உறவை எதிர்ப்பார்ப்பதும், தேவனுடைய நடத்துதலை நோக்குவதும் உண்மைதானே. பவுலும் இதற்கு விதிவிலக்கல்ல.*

தேவனால் சந்திக்கப்பட்டவுடனே, அந்த மகிமையின் ஒளியினால் தன்னுடைய பார்வையை இழந்துபோன சவுலுக்கு, அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்பது தெரியவில்லை. அவன் கமாலியேலிடம் கற்ற அறிவாளியாக இருந்தாலும், தேவனுடைய காரியத்திற்கு உலக அறிவும் ஞானமும் உதவாதே. எனவே தேவனிடம் அவன் கேட்க வேண்டியதாயிருந்தது. தேவன் அவனை நடத்த வேண்டியதாயிருந்தது. அவனுடைய ஜெபத்தையும் தேவன் கேட்டு, அவன் ஜெபிப்பதையும் அனனியாவிடம் கூறினார். தேவனால் தொடப்பட்டவுடனே, நான் பெரிய ஆள், என்று நினைத்து, சாட்சி சொல்லப்போகிறேன் என்று ஊரெல்லாம் ஓடாமல், தேவன் என்ன சொல்லுகிறாரோ அதன்படி செய்ய வேண்டும் என்று ஜெபத்தில் காத்திருந்த பவுல் பாராட்டப்பட வேண்டியவனே. அவன் ஜெபித்ததினால்தான் தேவனால் கிரியை செய்ய முடிந்தது.

*என்றோ ஒரு நாள் தேவன் நமக்குக் கொடுத்த நடத்துதலை வைத்துக் கொண்டு வாழ்நாள் முழுவதும் ஓட முடியாது. ஒவ்வொரு நாளும் தேவன் நம்மை நடத்த வேண்டும் என்று விரும்பவேண்டும். காரணம் ஒவ்வொரு நாளும் புதியது. ஒவ்வொரு நாளும் நாம் சந்திக்கும் சூழ்நிலைகளும், மனிதர்களும், பிரச்சனைகளும் புதியவைகள். நேற்று இருந்த மனநிலையோடு இன்று மனிதர்கள் இருப்பதில்லை. எனவே, ஒவ்வொரு நாளும் நமக்கு தேவனுடைய நடத்துதல் தேவையாயிருக்கிறது. இதற்காக நாம் தேவ சமுகத்தில் காத்திருக்க வேண்டும்; ஜெபிக்க வேண்டும். தன்னிடம் கேட்பவர்களுக்கு, பதில் கொடுத்து, தேவன் அவர்களை நடத்துவார். எனவே தினமும் ஜெபிப்போம். ஜெயம் பெறுவோம். அல்லேலூயா !*

*" கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும் " - மத் 7:7*

🤔 *சிந்தனைக்கு* 🤔
*! ஜெபிக்கிறவர்கள் ஜெயம் பெறுவார்கள் !*


*Today’s Bible Reading: Acts 9:1-22*
*HE IS PRAYING*
*“For he is praying.” – Acts 9:11*

*After God met with Paul, He revealed to him His purpose and plan and chose Ananias to be at the forefront of His battle and sent him to Paul. Thus when he sent Ananias, he spoke to him concerning Paul, saying that he was now praying. It is true that one who is met by God expects God's relationship and looks to God's dealings. Paul is no exception.*

*As soon as he was met by God, Saul lost his sight due to the light of the glory and did not know what to do next. Although he was a learned man from Gamaliel, worldly knowledge and wisdom did not help the cause of God. So he had to ask God. God had to lead him. God heard his prayer and told Ananias what he was praying. As soon as he was touched by God, he thought that he was a great man and did not run all over town saying that he was going to testify, but Paul should be praised for waiting in prayer to do what God said. God was able to do the work because he prayed.*

*We cannot run our whole life with the behaviour that God has given us one day. We want God to lead us every day. Because every day is new. Every day the situations, people and problems we encounter are new. People today do not have the mentality of yesterday. Therefore, we need God's guidance every day. For this we must wait in the presence of God; to pray. God will answer and guide those who ask Him. So let's pray daily. Let's win. Hallelujah!*

*“Ask and it will be given to you.” – Matt 7:7*

*🤔For Thought🤔*
*THOSE WHO PRAY WILL WIN.*


*வேதபகுதி: யாக்கோபு 3:1-18*
*" சாவுக்கேதுவான விஷம் "*

*“ நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது " - யாக்கோபு 3:8*

*நம்முடைய சரீரத்தில் இருக்கும் அவயவங்கள் ஒவ்வொன்றும் இரண்டு தன்மைகளையுடையவைகளாயிருக்கிறது. ஆக்கவும், அழிக்கவும் அவைகளால் முடியும். நல்ல காரிங்களைக் கேட்டு, பார்த்து, நம்முடைய ஆத்துமாவை வாழவைக்க கண்களாலும், காதுகளாலும் முடியும். அதே போல தீமையான காரியங்களைக் கேட்டு, பார்த்து, நம்முடைய ஆத்துமாவைக் கறைப்படுத்தி, அழிக்கவும் இவைகளால் முடியும். நம்முடைய கைகளால், கால்களால் நாம் நல்ல காரியங்களையும் செய்யலாம், கெட்ட காரியங்களையும் செய்யலாம். அப்படியே, நம்முடைய நாவால் நாம் நல்ல காரியங்களைப் பேசி பலரை வாழவைக்கலாம், நாமும் வாழலாம். கெட்ட காரியங்களைப் பேசி, பலரைக் கொல்லலாம், நம்மையும் அழித்துக் கொள்ளலாம். எனவே, நம்முடைய அவயவங்களை நாம் ஞானத்துடன் பயன்படுத்த வேண்டும்.*

*நம்முடைய நாவு சாவுக்கேதுவான விஷம் நிறைந்தது என்பதை நாம் கவனிக்கும்போது, நாம் எவ்வளவு ஜாக்கிரதையாக நாவைப் பயன்படுத்த வேண்டியது அவசியமாயிருக்கிறது. நம்முடைய ஆயுள் சக்கரத்தை அது கொளுத்திவிடும். அதாவது நம்முடைய ஆயுசு நாட்களைக் குறைத்து, சீக்கிரமே மரணத்தை நமக்குக் கொண்டுவரும். தன்னுடைய நாவை அடக்காமல் போன சிம்சோன், பேசக்கூடாதவைகளையெல்லாம் தெலீலாளிடம் பேசி, தேவ பெலனை இழந்து, அழிந்து போனான். மிகப் பெரிய தேவ மனுஷனுடைய அழிவுக்கு அவனுடைய நாவே காரணமாயிற்று. சர்பத்திடம் பேசக் கூடாதவைகளையெல்லாம் பேசின ஏவாள் கடைசியில் பாவத்திலும் சாபத்திலும் விழுந்துபோனாள். பேசக்கூடாதவைகளையெல்லாம் பேசின யெப்தா தன்னுடைய வார்த்தையினால், தான் பெற்ற பிள்ளையை இழந்து போனான்.*

*பிரியமானவர்களே! நம்முடைய நாவைக் குறித்து மிகுந்த ஜாக்கிரதையாக இருப்போம். தேவன் நமக்குக் கிருபையாகக் கொடுத்திருக்கும் வாழ்க்கையை நாம் ஞானத்துடன் காப்பாற்றிக் கொள்ளுவோம். நம்முடைய நாவைப் பாதுகாக்க, தேவன்தாமே நமக்குக் கிருபையையும், ஞானத்தையும் கொடுப்பாராக. ஆமென்.*

*" அவனவன் தன்தன் வாயின் பலனால் திருப்தியடைவான் ” - நீதி 12:14*

🤔 *சிந்தனைக்கு* 🤔
*! வாயின் தாறுமாறு வாழ்க்கையின் அழிவு !*


*Today’s Bible Reading: James 3:1-18*
*DEADLY POISON*
*“But no human being can tame the tongue. It is a restless evil, full of deadly poison.” – James 3:8*

*Each of the organs in our body is of two natures. They can create and destroy. Eyes and ears can hear and see good things and feed our soul. Likewise hearing and seeing evil things can stain and destroy our soul. With our hands and feet we can do good things and bad things. In the same way, with our tongue we can speak good things and make many people live, and we can also live. By speaking bad things, we can kill many people and destroy ourselves. Therefore, we should use our organs wisely.*

*When we realize that our tongue is full of deadly poison, how carefully we need to use our tongue. It ignites our life cycle. It means shortening our life span and bringing us early death. Samson, who could not control his tongue, spoke to Delilah all the things that should not be spoken, lost God's power and perished. His tongue caused the destruction of the greatest God-man. Eve spoke all the things that should not be spoken to serpent and finally fell into sin and curse. Jephthah, who spoke all that should not be spoken, lost his son because of his words.*

*Beloved ! Let us be very careful about our tongue. May we preserve the life that God has graciously given us with wisdom. May God himself give us grace and wisdom to guard our tongue. Amen !*

*"From the fruit of their lips people are filled with good things".– Prov 12:14*

*🤔For Thought🤔*
*DESTRUCTION OF LIFE BY THE SWEEP OF THE MOUTH.*

Brother J. Daniel
Yesuveh Aatharam Ministries
496/1, Lakshmipuram Periyar Nagar,
Redhills, Chennai – 600052
Mobile: +919940018988
Email id: jesusthefoundation@gmail.com
Youtube:https://youtube.com/@YesuvehAatharamMinistries?si=tmnC_9ZbaIMGfOKh

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.