Type Here to Get Search Results !

மாம்சத்தின்படி | கடைசிக்காலம் | THEY WILL FEAR | WHEN RAISED AGAINST | Yesuveh Aatharam Ministries | தின தியான குறிப்புகள் | Jesus Sam

வேதபகுதி: 2 கொரி 10:1-18*
*" மாம்சத்தின்படி "*

*" நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர் செய்கிறவர்களல்ல " - 2 கொரிந்தியர் 10:3*

*நாம் ஆவிக்குரியவர்களாயிருந்தாலும், இந்தப் பூமியில் இருக்கும் வரைக்கும் மாம்சத்தில்தான் நடக்க வேண்டும். ஆனால், ஒரு சிலர் இதைப் புரிந்து கொள்ளாமல், பரலோகத்தில் இருப்பதைப் போலவே நினைத்து, மிஞ்சின நீதிமானாயிருந்து, தங்களுடைய குடும்பத்தையும், தங்களுடைய ஜீவனையும்கூட இழந்து போயுள்ளனர். மனைவிக்குக் கணவனாக, கணவனுக்கு மனைவியாக, பெற்றோருக்குப் பிள்ளைகளாக, பிள்ளைகளுக்குப் பெற்றோராகவும் நாம் இந்தப் பூமியில் நடந்துகொள்ள வேண்டும். இவ்வாறு நாம் நடந்து கொண்டாலும் நாம் மாம்சத்தின்படி போர்செய்கிறவர்கள் அல்ல என்று பவுல் கூறுகிறான்.*

*மாம்சத்தின்படி போர் செய்கிறவர்கள் ஆவிக்குரியவர்கள் அல்ல. நம்முடைய வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளை நாம் எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறோம் என்பதும், எப்படி அவைகளை சந்திக்கிறோம் என்பதும் முக்கியம் தேவனுடைய ஆவியைப் பெற்றிருந்த தாவீதின் கையில் ஈட்டி இல்லை. ஆனால் தேவனைப்பாடி துதிப்பதற்கு ஏதுவான சுரமண்டலம் இருந்தது. அசுத்த ஆவியையுடைய சவுலுடைய கையில், மனித உயிரை வேட்டையாடும் ஈட்டி இருந்தது. இதை நாம் பார்க்கும் போதே, நாம் எதைக் கையில் வைத்திருக்க வேண்டும் என்பது ஒரளவுக்குப் புரியும். அசுத்த ஆவியையுடையவன், தேவனுடைய ஆவியையுடையவனான தாவீதைக் கொலை செய்யும்படி அவன்மேல் ஈட்டியை எறிவான்.*

*தேவ ஆவியையுடைய தாவீதும் பதிலுக்கு அவனைத் தாக்கமால், சுரமண்டலத்தை எடுத்து வாசிப்பான். அப்பொழுது அந்த அசுத்த ஆவி சவுலை விட்டு நீங்கி, அவன் சொஸ்தமடைவான். சாத்தானுடையவன் கையில் ஈட்டியே ஆயுதம். ஆனால், தேவனுடையவன் கையில் சுரமண்டலமே, அதாவது, தேவனைத் துதிப்பதும், ஸ்தோத்தரிப்பதுமே ஆயுதம். இறுதியில் வென்றது யார்? தேவனுடையவன்தானே வெற்றி பெற்றான். பிரியமானவர்களே! நாம் யார் என்றும், எப்படி நாம் யுத்தம்பண்ண வேண்டும் என்றும் அறிந்து, யுத்தம் பண்ணுவோம். வெற்றி பெறுவோம். அல்லேலூயா !*

*" எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல்....தேவ பலமுள்ளவைகளாயிருக்கிறது " - 2 கொரி 10:4*

🤔 *சிந்தனைக்கு* 🤔
*! ஆவிக்குரிய ஆயுதங்கள் அரண்களை நிர்மூலமாக்கும் !*


*Today’s Bible Reading: 2 Corin 10:1-18*
*ACCORDING TO THE FLESH*
*“ For though we walk in the flesh, we do not war after the flesh". - 2 Corin 10:3*

*Although we are spiritual, we must walk in the flesh as long as we are on this earth. But some people do not understand this and think that they are in heaven have lost their families and even their lives by being too righteous. We should behave on this earth as wife to husband, husband to wife, parents to children and children to parents. Paul says that even if we do, we are not warring according to the flesh.*

*Those who war according to the flesh are not spiritual. What matters is how we see the problems in our lives and how we face them. David, who had received the Spirit of God, did not have a spear in his hand. But there was enough space to sing and praise God. In Saul's hand, possessed by an unclean spirit, was a spear that hunted human life. As soon as we see this, we will understand to some extent what we have in hand. He who has an unclean spirit will throw a spear at David to kill him as the Spirit of God.*

*David, who is inspired by God, does not attack him in return, but takes the scroll and reads it. Then the unclean spirit will leave Saul, and he will be healed. In the hand of Satan the weapon is the spear, but in the hand of God the sword is the weapon, that is to praise and glorify God. Who won in the end? God himself has won. Beloved ! Let us fight knowing who we are and how we should fight. Let's win. Hallelujah!*

*The weapons we fight with are not the weapons of the world. …., they have divine power to demolish strongholds. – 2 Corin 10:4*

🤔 *For Thought* 🤔
    *SPIRITUAL WEAPONS DESTROY STRONGHOLDS.*


*வேதபகுதி: யூதா 1-25*
*" கடைசிக்காலம் "*
*" கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே " - யூதா 18*

*ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று காலங்கள் உண்டு. ஆரம்ப காலம், மத்தியக் காலம், கடைசிக்காலம் என்று மூன்று காலங்களை பெரும்பாலான மனிதர்கள் சந்திக்கிறார்கள். அப்படியே உலகத்திற்கும் கடைசிக் காலம் என்று இருக்கிறது. சில மனிதர்கள் நோய்வாய்ப்பட்டு, மருத்துவமனையில் இருக்கும்போது, அந்த மனிதனுடைய உள் உறுப்புகள் அனைத்தும் ஒவ்வொன்றாய் செயலிழப்பதைக் கண்டறிகிற மருத்துவர், இவர் கடைசி காலத்தில் இருக்கிறார் என்று கூறுவார்கள். அப்படியே, உலகத்தில் நடைபெறும் சம்பவங்கள் மற்றும் உலகில் வாழும் மனிதர்களுடைய சுபாவங்கள் இவைகளைப் பார்த்தே இது கடைசி காலம் என்று நாம் எளிதில் கூறிவிடலாம். கடைசி காலத்தில் நடைபெறும் அடையாளங்கள் என்று பல காரியங்களை வேதம் பட்டியலிட்டுக் காண்பிக்கிறது. இவைகளையெல்லாம் நாம் பார்க்கும்போது, இயேசு கிறிஸ்துவின் வருகை சமீபம் என்பதை அறிந்து, அவருடைய வருகைக்கு ஆயத்தப்பட வேண்டியது அவசியமாகும்.*

*பிரியமானவர்களே ! இன்று தம்முடைய கண்கள் காணும் அனைத்துமே கடைசி காலத்தின் அடையாளங்கள் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். இவைகளைக் குறித்து ஒருவரும் நமக்குப் போதிக்கவும், உபதேசிக்கவும் தேவையில்லை. அந்த அளவுக்கு நம்முடைய அறிவு பெருகியிருக்கிறது. ஆனால், இவைகளையெல்லாம் அறிந்துகொள்வது காரியமல்ல. இவைகளை அறிந்திருக்கிற நாம், கடைசி காலத்தில் செய்ய வேண்டியவைகளைச் செய்திருக்கிறோமா என்பதுதான் காரியம்.*

*நம்முடைய ஆவி ஆத்துமா சரீரம் மூன்றும் குற்றமற்றதாய் காக்கப்படுவதாக என்ற வசனத்தின்படி நாம் முழுவதும் பரிசுத்தமாய் இருக்கிறோமா? ஜெபம், தேவ பக்தி இவைகளில் நாம் திளைத்திருக்கிறோமா? எல்லாவற்றிற்கும் மேலாக, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையை ஆவலோடு எதிர்நோக்கியிருக்கிறோமா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் "ஆம்" என்று பதில் கூறுமளவு ஆயத்தமாவோம். இயேசுவின் வருகையில் எடுத்துக்கொள்ளப்படுவோம். அல்லேலூயா !*

*" மெய்யாகவே நான் (இயேசு) சீக்கிரமாய் வருகிறேன் " - வெளி 22:20*

🤔 *சிந்தனைக்கு* 🤔
*! உணர்வுள்ளவர்கள் உன்னதரோடு இருப்பார்கள் !*


*Today’s Bible Reading: Jude 1-25*
*END TIMES*
*“They said to you, “In the last times there will be scoffers who will follow their own ungodly desires.” – Jude 18*

*Every human being has three periods. Most people experience three periods: the beginning, the middle, and the end. In the same way, there is an end time for the world. When a person is sick and in the hospital, the doctor finds that all the internal organs of that person are failing one by one, and the doctor says, "He is in his last days." We can easily say "this is the last time" by looking at the events happening in the world and the nature of the people living in the world. The scriptures list and show many things that will happen in the end times as signs. When we see all these, it is necessary to know that the coming of Jesus Christ is near and prepare for his coming.*

*Beloved ! We know very well that all that our eyes see are signs of the last time. No one needs to preach and preach about these. That is how much our knowledge has increased. But it is not enough to know all these things. The question is whether we who know these things have done what we should have done in the last days.*

*Are we wholly holy according to the scripture that our spirit, soul, and body are kept blameless? Are we persistent in prayer and godliness? Above all, are we looking forward to the coming of the Lord Jesus Christ? Let's be prepared to answer "yes" to all these questions. We will be raptured at the coming of Jesus. Hallelujah!*

*“Yes, I (Jesus Christ) am coming soon.”– Rev 22:20*

🤔 *For Thought* 🤔
*THOSE WHO ARE CONSCIOUS WILL BE WITH GOD.*


*வேதபகுதி: உபாகமம் 28:1-14*
*" பயப்படுவார்கள் "
*" அப்பொழுது கர்த்தருடைய நாமம் உனக்குத் தரிக்கப்பட்டது என்று பூமியின் ஜனங்களெல்லாம் கண்டு, உமக்குப் பயப்படுவார்கள் " - உபாகமம் 28:10*

*இன்றைய தியான வசனங்கள் அனைத்தும் நம்முடைய வாழ்க்கையில் இப்பொழுதே நிறைவேறினால் நலமாயிருக்கும் என்று கத்த வேண்டும் போலிருக்கிறது. அவ்வளவு ஆசீர்வாதங்களை இன்றைய வசனங்கள் உள்ளடக்கியிருக்கிறது. கர்த்தர் நம்மை தம்முடைய பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்தும்போது, நம்மைச் சுற்றிலும் இருக்கும் ஜனங்கள் அனைவரும் நமக்குப் பயப்படுவார்கள் என்று வேதம் கூறுகிறது. எரிகோ பட்டணத்தை வேவு பார்த்துவிட்டு வரும்படி யோசுவாவால் அனுப்பப்பட்ட இரண்டு வாலிபர்களும் எரிகோ பட்டணத்திலுள்ள ஒரு வேசியின் வீட்டில் போய்த் தங்கினார்கள். அப்பொழுது அவள்; எங்கள் இருதயமெல்லாம் உங்களை நினைத்து தண்ணீராய்ப் போயிற்று, கர்த்தர் உங்களுக்காக செய்யும் காரியங்கள் அனைத்தையும் நாங்கள் அறிந்திருக்கிறோம். எனவே, உங்களைப் பற்றிய பயம் எங்களைப் பிடித்திருக்கிறது என்று கூறினாள்.*

*பிரியமானவர்களே! தேவன் இன்றும் மாறாதவராயிருக்கிறார். அவருடைய கிரியைகளும் மாறாதவைகளாயிருக்கிறது. அன்று தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலர்களுக்கு தேவன் செய்த காரியங்களையெல்லாம் கேள்விப்பட்ட எரிகோவின் குடிகளுக்குப் பயம் ஏற்பட்டது போல, நமக்கும் தேவன் செய்யும் எல்லாக் காரியங்களையும் கண்டு, நம்மைச் சுற்றிலும் இருப்பவர்கள் பயப்படுவார்கள். எனவே, நாம் சந்தேஷமாயிருப்போம். தேவனுக்கு உண்மையாயிருந்து, அவருடைய வழியில் நடப்போம். அன்று கிரியை செய்த தேவன் இன்றும் கிரியை செய்வார்.*

*நம்முடைய ஒரே வேலை என்ன தெரியுமா? தேவனுடைய இருதயத்தை எப்பொழுதும் சந்தோஷமாக வைத்திருப்பது மட்டுமே. அவருடைய வழியில் நடந்து, பொல்லாப்புக்கு விலகி, நன்மையும் செவ்வையுமாயிருக்கிறதை நாம் செய்யும் போது, தேவன் சந்தோஷப்படுவார். அவர் நமக்குக் கூறின எல்லா நல் வார்த்தைகளையும் நிறைவேறப்பண்ணுவார். அப்பொழுது அனைவரும் நமக்கு பயப்படுவார்கள், நாமும் ஆசீர்வாதமாயிருப்போம். அல்லேலூயா!*

*" எல்லாருக்கும் பயமுண்டாயிற்று, அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டது " - அப் 2:43*

🤔 *சிந்தனைக்கு* 🤔
*! கர்த்தர் கொடுக்கும் நன்மை நம்மை உயர்த்தும் !*


*Today’s Bible Reading: Deut 28:1-14*
*THEY WILL FEAR*
*“Then all the peoples on earth will see that you are called by the name of the Lord, and they will fear you.” – Deut 28:10*

*It seems to shout that all the meditation verses of today would be good if they are fulfilled in our life right now. Today's verses contain so many blessings. The scripture says that when the Lord establishes us as His holy people, all the people around us will fear us. The two young men sent by Joshua to visit the city of Jericho stayed in the house of a prostitute in the city of Jericho. Then she; All our hearts are filled with water for you, and we know all the things the Lord will do for you. So, she said, fear of you has caught us.*

*Beloved! God is still unchanging. His works are also unchangeable. Just as the people of Jericho were afraid when they heard about all the things God had done for his people Israel, so those around us will be afraid of all the things God will do for us. So, we are skeptical. Be true to God and walk in His ways. God who did the work then will do the work today.*

*You know what our only job is? Just keep God's heart always happy. God is pleased when we walk in His way, turn away from evil, and do what is good and righteous. He will fulfil all the good words He has spoken to us. Then all will fear us, and we will be blessed. Hallelujah!*

*Everyone was filled with awe at the many wonders and signs performed by the apostles. – Acts 2:43*

*🤔For Thought🤔*
*THE GOODNESS OF THE LORD WILL LIFT US UP*


*வேதபகுதி: சங்கீதம் 124:1-8*
*" எழும்பினபோது "*
*" மனுஷர் நமக்கு விரோதமாய் எழும்பினபோது, கர்த்தர் நமது பக்கத்திலிராவிட்டால் " - சங்கீதம் 124:1*

*சத்துருக்கள் என் தலைமுடியிலும் அதிகமாயிருக்கிறார்கள் என்று கூறின தாவீதுக்கு, திரும்பின இடமெல்லாம் சத்துருக்கள் தான். அத்தனை சத்துருக்கள் மத்தியிலும் அவனுடைய தலையை உயர்த்தி வைத்திருந்த தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்தரிக்கப்படுவாராக. இத்தனை திரளான சத்துருக்கள் அவனுக்கு இருந்த போதிலும், அவர்களால் தாவீதை ஒன்றும் செய்ய முடியவில்லை. இதற்குக் காரணம் என்ன? " மனுஷர் நமக்கு விரோதமாய் எழும்பின போது, கர்த்தர் நமது பக்கத்திலிராவிட்டால் " - சங் 124:1. என்ற வசனத்தின் படி, கர்த்தர் அவனுடைய வலது பக்கத்தில் அவனுக்குத் துணையாக நின்றார். எனவேதான் அவனுடைய சத்துருக்களால் தாவீதை ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்படியே நமது பக்கத்திலும் கர்த்தர் நமக்குத் துணையாக நிற்பாரென்றால், நம்மையும் ஒருவராலும் ஒன்றும் செய்யும் முடியாது. நம்மைத் தொடவும் முடியாது. அல்லேலூயா!*

*இந்த இரகசியத்தை நாம் தெரிந்து கொள்வோமானால் கர்த்தரை நாம் விடவேமாட்டோம். நமக்கு அறிவு இருக்கிறதோ இல்லையோ, பெலன், யுத்த ஆயுதங்கள் போன்றவைகள் இருக்கிறதோ இல்லையோ, கர்த்தரை மாத்திரம் விடாமல் பிடித்து வைத்துக் கொள்ளுவோம். தேவனே என்னை விட்டுவிட்டு எங்கும் சென்றுவிடக் கூடாது என்று, அவரிடம் கெஞ்சி, அழுது, புரண்டு, இன்னும் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவைகளையெல்லாம் செய்து, அவரை நம்மோடுகூடவே வைத்துக்கொள்வோம்.*

*கர்த்தர் நம்மோடுகூடவே இருந்தால் நம்மை ஒருவராலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற மிகப் பெரிய சத்தியத்தை நன்றாக அறிந்திருக்கும் சாத்தான் நம்மையும் கர்த்தரையும் பிரிப்பதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவைகள் எல்லாவற்றையும் செய்கிறான். அவனுடைய தந்திரங்களை அறிந்து, நாம் ஜாக்கிரதையாயிருந்து, கர்த்தரைக் காத்துக்கொள்ள வேண்டும். அவருக்கும் நமக்கும் இருக்கிற உறவில் விரிசல் வராதபடிக்கு மிகவும் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். இவ்விதமாய் நாம் ஜாக்கிரதையாயிருந்து, கர்த்தரை நம்மோடு வைத்துக்கொள்ளுவோம். அசைக்கப்படாமல் இருப்போம்.*

*" கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்..... நான் அசைக்கப்படுவதில்லை " - சங் 16:8*


🤔 *சிந்தனைக்கு* 🤔
*! கர்த்தரோடிருப்பவர்களை ஒருவரும் அசைப்பதில்லை !*


*Today’s Bible Reading: Psalm 124:1-8*
*WHEN RAISED AGAINST*

*“If the Lord had not been on our side when people attacked us”. – Psalm 124:2*

*David said that there are too many enemies than my hair, and everywhere he turned, there were enemies. Praised be the Lord God who held his head high in the midst of all his enemies. Even though he had so many enemies, they could not do anything to David. What is the reason for this? "Unless the Lord is on our side when men rise up against us" - Psalm 124:1. According to the verse, the Lord stood by him at his right hand. That is why his enemies could not do anything to David. Similarly, if the Lord stands by our side, nothing can be done to us. Can't even touch us. Hallelujah!*

*If we know this secret we will never leave the Lord. Whether we have knowledge or not, whether we have weapons of war or not, let us hold on to the Lord without letting go. Let's keep him with us by begging him, crying, crying, and whatever else we can do, so that he won't leave me and go anywhere.*

*Knowing very well the great truth that if the Lord is with us, no one can do anything to us, Satan does everything he can to separate us from the Lord. Knowing his tricks, we must beware and guard the Lord. We must be very careful not to cause a rift in the relationship between him and us. Thus, let us be careful and keep the Lord with us. Let us not be moved.*

*I keep my eyes always on the LORD. I will not be shaken. – Psalm 16:8*

*🤔For Thought🤔*
*NO ONE CAN SHAKE THOSE WHO ARE WITH THE LORD.*

Brother J. Daniel
Yesuveh Aatharam Ministries
496/1, Lakshmipuram Periyar Nagar,
Redhills, Chennai – 600052
Mobile: +919940018988
Email id: jesusthefoundation@gmail.com
Youtube:https://youtube.com/@YesuvehAatharamMinistries?si=tmnC_9ZbaIMGfOKh 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.