சங்கீதம் 63-67
✅ *என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது* ✅
☄️ *“தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது.”* (சங்கீதம் 63:1).
💥 சங்கீதம் 63, தாவீது யூதாவின் வனாந்தரத்தில் இருந்தபோது எழுதியது. *தாவீது வனாந்தரத்தில் இருந்தபோதுதான், அவனுடைய மிக அற்புதமான சங்கீதங்களில் சிலவற்றை எழுதியுள்ளான்.* வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திற்கு தண்ணீர் எவ்வளவு அவசியமோ, அவ்வளவு தாகம் கர்த்தர் மீது தான் கொண்டிருப்பதாக தாவீது ஒப்பிடுகிறான். எனவே, தாவீது தேவனை நோக்கி, *“தேவனே, நீர் என்னுடைய தேவன். அதிகாலமே உம்மைத் தேடுகிறேன். வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது.”* என்று கெஞ்சுகிறான் (சங்கீதம் 63:1).
💥 தாவீது தேவனை *நீர் என்னுடைய தேவன்* என்று அழைக்கிறான். இது அவனது வனாந்தர அனுபவத்திலும்கூட, அவன் தேவனுடன் நெருக்கமாக இருப்பதைக் காட்டுகிறது. தேவனை, நம்முடைய தேவன் என்று குறிப்பிடுவதன் மூலம், நம்மைப் படைத்த அவரை, *நம்மீது ஆதிக்கம் செலுத்தக்கூடிய நம்முடைய அதிகாரப்பூர்வமான எஜமானனாகவும் ராஜாவாகவும் நாம் ஒப்புக்கொள்கிறோம்.*
💥 தாவீதின் ஜெபத்தில் மூன்று பகுதிகள் உள்ளன: (i) *அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்,* (ii) *என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது,* (iii) *என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது.* இவற்றிலிருந்து சில *ஆவிக்குரிய சத்தியங்களை* நாம் அறிந்துகொள்ளலாம்.
♦️ *அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்*
💥 நம்முடைய வாழ்க்கையில் தரிசு, வறண்ட வனாந்தரம் போன்ற சூழ்நிலைகளை நாம் அடிக்கடி சந்திக்கிறோம். காலையில் நம் இருதயத்தை ஆக்கிரமிக்கும் முதல் விஷயம்தான், நாள் முழுவதும் அங்கேயே இருக்கும். நாம் காலையில் எழுந்தவுடன், *தேவனைத் தேடுவது* நமது முதன்மையானதாக இருக்க வேண்டும். *கர்த்தருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்* (புலம்பல் 3:23). *அவர் ஒருவரே ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்* (சங்கீதம் 46:1). *அவருடைய கிருபை ஜீவனைப்பார்க்கிலும் நல்லது* (சங்கீதம் 63:3). எனவே, *அவரை அதிகாலையில் தேடுவோம், அவரை ஊக்கமாகப் பின்தொடர்வோம்.*
♦️ *என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது*
💥 *தங்கள் ஆத்துமா, படைத்த தேவனுக்காகத்தான் உண்மையிலேயே வாஞ்சையாயிருக்கிறது* என்பதை பெரும்பாலானோர் அறிந்திருக்கவில்லை. அவர்கள் வேறு எங்கும் தேடினாலும், அவர்களுடைய ஆத்துமா வேறு எதைக்கொண்டும் ஒருபோதும் *திருப்தி அடையாது.* சங்கீதக்காரன் அறிவிக்கிறான்: *“மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது.”* (சங்கீதம் 42:1-2). உண்மையான திருப்திக்காக ஏங்கும் ஒரு ஆத்துமாவின் விஷயத்தில், இந்த ஒப்பீடு உண்மையில் மிகவும் உகந்ததாகும். தாகமாக இருப்பதும் அதற்காக தண்ணீர் கொடுப்பதும், மனிதனின் ஆவிக்குரிய தேவைக்கும் தேவனுடைய கொடுக்கும் கிருபைக்கும் சிறந்த உதாரணங்களாகும். தாவீது, “என் கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்; *வறண்ட நிலத்தைப்போல் என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது.”* (சங்கீதம் 143:6) என்று கூறுகிறான். ஒரு மிகச்சரியான ஒப்பீடு! தாகமுள்ள ஒரு ஆத்துமாவிற்கு இயேசு வழங்கும் ஜீவத்தண்ணர், அவர் மூலம் கிடைக்கும் *நித்திய ஜீவனே* (யோவான் 4:14).
♦️ *என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது*
💥 பவுல் விசுவாசிகளுக்குப் போதிக்கிறான்: *"உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?"* (1 கொரிந்தியர் 6:19). பரிசுத்த ஆவியானவர் இந்த மாம்ச சரீரத்திற்குள் வாசம்பண்ணுவதால், *நம்முடைய மாம்சமும் தேவனை வாஞ்சிக்கிறது.* எனவே, பவுல் விசுவாசிகளுக்கு இவ்வாறு அறிவுரை கூறுகிறான்: *“சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.”* (ரோமர் 12:1).
🔹 *நமது முழு ஆள்தத்துவமும்—ஆவி, ஆத்துமா, மற்றும் சரீரம்—நம்மை சிருஷ்டித்த கர்த்தருக்குக்காக வாஞ்சையாயிருக்கிறதா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *நாம் கர்த்தரை அதிகாலையில் தேடவேண்டும், அவரை ஊக்கமாகப் பின்தொடரவேண்டும். ஏனென்றால். அவருடைய கிருபை ஜீவனைப்பார்க்கிலும் நல்லது.*
2️⃣ *மனிதனின் ஆத்துமா படைத்த தேவன்மேல் தாகமாக இருக்கிறது. தாகமுள்ள ஒரு ஆத்துமாவிற்கு இயேசு வழங்கும் ஜீவத்தண்ணர், அவர் மூலம் கிடைக்கும் நித்திய ஜீவனே.*
3️⃣ *பரிசுத்த ஆவியானவர் நம் சரீரங்களில் வாசமாயிருப்பதால், நாம் நம் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டும்.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
*சங்கீதம் 63-67*
*வனாந்தர* *வாழ்வு*..
*தாவீது யூதாவின்* *வனாந்தரத்திலிருந்தபோது*..
*சங்கீதம் 63ஐப் பாடினதாகக்*
*கூறப்பட்டிருக்கிறது*..
தாவீது வனாந்தரத்தில்
இருந்தான்..
அரண்மனையின் வசதிகளின்றி..
கற்களின் மீதும், மண்ணின் மீதும் படுத்திருந்த அவன் வாழ்வும்..
வனாந்தரமாகத்தானிருந்தது..
தண்ணீர் தாகத்தால் நாவறண்ட நேரம் அது..
ஆனாலும் அவ்வேளையிலும்..
அவன் ஆத்துமா தேவனையே வாஞ்சித்தது..
தேவன் மீதுள்ள அவனது ஆழ்ந்த வாஞ்சை ..பாடலாக வெளிப்பட்டது..
தேவனே நீர் என்னுடைய தேவன்..அதிகாலமே உம்மைத்
தேடுகிறேன்...என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது..
என் மாம்சம் உம்மை வாஞ்சிக்கிறது
என்றே சொன்னான்..
மட்டுமல்ல..
என் ஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை நல்லது..
என் ஜீவனுள்ள மட்டும்
உம்மைத் துதிப்பேன் ..
உம்மைப் போற்றுவேன் என்றே
பாடினான்..
( சங். 63 : 1-5)
தாவீதிற்கு வனாந்தரமும்..
தேவனைத் துதிக்கும் இடமாக..மகிழ்ந்து களிகூரும் பரிசுத்த ஸ்தலமாகவே மாறிற்று..இது தேவன்மீது
தாவீது வைத்திருந்த
விசேஷித்த அன்பைக்
காட்டுகிறது..
இன்று நமக்கும் தேவன்மீது
இத்தகைய அன்பு உண்டா..?
தேவனுடைய பரிசுத்தவான்கள்
அனைவரும்.. வனாந்தர அனுபவங்களைக் கடந்து வந்தவர்களே..வனாந்தர
பல்கலைக்கழகத்தில்தான்.. அவர்கள் விசுவாச பாடங்களைக் கற்றுக் கொண்டார்கள்..
தேவனும், மோசேயை.. எகிப்தின் அரண்மனையிலல்ல, மீதியான் தேசத்து வனாந்திரத்தில்தான்..சாந்தம் உள்ளவனாக, உண்மை உள்ளவனாக உருவாக்கினார்.
இன்று நீங்களும்
கடினமான பாதை வழியாகக் கடந்து வருகிறீர்களா..?
இந்த வனாந்தர அனுபவங்கள்.. தேவனுக்கும் உங்களுக்கும் இடையேயுள்ள உறவை.. ஜீவன் உள்ளதாக மாற்றட்டும்..
கடந்த நாட்களில், உங்களைக் கரம் பிடித்து வழிநடத்தினவர்..
இப்பொழுதும் உங்களோடுதானிருக்கிறார்..
உங்களுக்காகச் செயல்பட்டுக்
கொண்டுதானிருக்கிறார்..
*உங்களில்..தமது சாயலை*
*வெளிப்படுத்த*.. *உங்களைப்* *புடமிடுகிறார்*..
*உங்களில்.. தமது மாபெரும்*
*சித்தத்தை நிறைவேற்ற*..
*உங்களைப் பயிற்றுவிக்கிறார்*..
வனாந்தரத்திற்குப் பின்..
செழிப்பான காலங்கள் உண்டென்று நம்புங்கள்..
இஸ்ரவேலர் வனாந்தர வாழ்வுக்குப் பின்தான்..
கானானைச் சுதந்தரித்தார்கள்..
யோசேப்பு அடிமையாக விற்கப்பட்டதும்.. சிறைச்சாலையில் போடப்பட்டதும்.. தேசத்தின் உயர்ந்த நிலைக்கேற்றவனாக அவனைப் பயிற்றுவிக்கவே..
ஒரு நாளிலே நீங்களும்.. நான் உபத்திரவப்பட்டது நல்லது
என்றே சொல்வீர்கள்...
*நாம் வாழ்வில் மகிழ்ந்து* *களிகூரும்போது.. தேவனின்* *சத்தம் மென்மையாகவே* *கேட்கும்..ஆனால்,* *உபத்திரவங்களின் மத்தியிலே..*
*அவரது சத்தம் பலமாகக்* *கேட்குமென்று*..*ஒரு தேவ* *மனிதன் கூறியிருக்கிறார்*..
*நம் வறண்ட வாழ்வும்*..
*நாம் நம் நேசரின் மார்பில்* *சாய்ந்து அவரின் சத்தம் கேட்கும்* *நாட்களாக*..
*சிலுவை நிழலிலே நாம்* *தேவனைத் துதிக்கும்* *நாட்களாக மாறட்டும்*..
ஆமென்.🙏
மாலா டேவிட்
சங்கீதம்.65:11.
🌺🌺🌺🌺🌺
"உங்கள் பாதைகள் செழிப்பைக் குறைக்கின்றன".
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
பல பாதைகள் செழிப்பைக் குறைக்கும் "கர்த்தருடைய பாதைகள்" ஆகும்.
ஒரு சிறப்பு வழி என்னவென்றால் ஜெபத்தின் பாதை ஆகும்.
கர்த்தருக்குள் மிக நெருக்கமாக வாழும் ஒரு மனிதன் அழமாட்டான்.
தாகத்தால் வாடும் ஆத்துமாக்கள் இரக்காசனத்திலிருந்து தொலைவில் வாழ்கின்றன.
கடவுளுடன் போராடி அதிகமாக ஜெ பிப்பது விசுவாசியை பலப்படுத்துவது உறுதி.
பரலோக வாயிலுக்கு அருகில் உள்ள இடம் பரலோக கிருபையின் சிம்மாசனம்.
.மிகவும் தனியாக ஜெபிப்பது நமக்கு உறுதியை அளிக்கும்.
இயேசுவோடு மட்டும் உள்ள உறவு குறைவுபட்டால், நமது நம்பிக்கை ஆழமற்றதாகவும், பல சந்தேகங்கள் மற்றும் அச்சங்களால் மாசுபட்டதாகவும், கர்த்தரின் மகிழ்ச்சியால் பிரகாசிக்காததாகவும் இருக்கும்.
நாம் மிகவும் மண்டியிட்டு ஜெபிப்போம்.
ஏனென்றால் எலியா வறண்டு கிடந்த இஸ்ரவேலின் வயல்களில் மழை பொழியும்படி ஊக்கமாக ஜெபித்தார்.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
மேபி சுந்தர்.சென்னை.
*அதின் பயிரை ஆசீர்வதிக்கிறீர்*
~~~~~~~~~~~~~~~~~~~~~
சங்கீதம் 65: 9, 10.
1. இங்கு *கர்த்தர் பூமியை விசாரிக்கிறார்* என பார்க்கிறோம். நம்முடைய வாழ்க்கை இந்த பூமியை போல காணப்படுகிறது. ஒழுங்கின்மையும், வெறுமையுமாயிருந்த பூமியை *கர்த்தருடைய வார்த்தை ஒரு கனிதரும் செழிப்பான ஏதேன் தோட்ட மாக மாற்றியது*. அது போல நம்முடைய வாழ்க்கை ஒரு வெறுமையான, பிரயோஜனமற்ற , வனாந்திரம் போன்ற, தண்ணீரற்ற பூமியை போல காணப்படலாம். ஆனால், நம் *கர்த்தர் நம்மை விசாரிக்கிறார். நம்முடைய வாழ்க்கையில் நீர்ப்பாய்ச்சுகிறார்.* இந்த பூமி பிரயோஜனமற்றது என அவர் நம்மை விட்டு விடவில்லை. அவருடைய அன்பினால், கிருபையினால் நம்மேல் நீர்பாய்ச்சுகிறார்.
2.*தண்ணீர் மிகுந்த தேவநதியினால் நம்மை மிகவும் செழிப்பாக்குகிறார்*. இந்த தண்ணீர் மிகுந்த தேவ நதி தான் பரிசுத்த ஆவியானவர். இந்த தண்ணீர் அவருடைய வாயின் வார்த்தையாகிய வசனம். இந்த தண்ணீராகிய வசனத்தால் என்ன செய்கிறார்?
1. *நம் வறண்ட பூமியை செழிப்பாக்குகிறார்.*
2. *நம் வாழ்க்கையை திருத்துகிறார்*. பாவத்தை விட்டு பரிசுத்தமாக்குகிறார்.
3. *தானியத்தை விளைவிக்கிறார்.* ஆம், தேவ நதியின் தண்ணீராகிய வசனத்தால் நம்மில் தானியத்தை விளைவிக்கிறார். பிரயோஜனமற்ற நம் வாழ்க்கையில் நம்மையும், பிறரையும் போஷிக்க தானியம் விளைவிக்கப்படுகிறது.
இந்த தேவநதியின் தண்ணீர் என்னில் பாயட்டும், ஓடட்டும், என் ஆத்துமாவை செழிப்பாக்கட்டும் என ஜெபிப்போமாக.
3. *இந்த பூமியில் வரப்புகள் தணியதக்கதாய், அதின் படைசால்களுக்கு தண்ணீர் இறைக்கிறார்.* இதை தான் தாவீது, என் பாத்திரம் நிரம்பி வழிகிறது என்கிறார். வரப்புகள் தணியதக்கதான அபிஷேகத்தை எனக்கு தாரும் என ஜெபிப்போம்.
4. *அதை மழைகளால் கரைய பண்ணி, அதின் பயிரை ஆசீர்வதிக்கிறார்.* ஆம், நதியின் தண்ணீர் மட்டுமல்ல, *பரிசுத்த ஆவியாகிய மழையை பெய்யப்பண்ணி, இந்த பூமியின், தோட்டத்தின், நம் வாழ்க்கையின் கடின தன்மைகளை, விட முடியாத பாவங்களை எல்லாம் கரையப்பண்ணுகிறார்*. அதாவது ஒரு செழிப்பான தோட்ட மாக நம்மை மாற்றுகிறார்.
5. இவ்விதமாய் *அதி ன் பயிரை ஆசீர்வதிக்கிறார்.* ஆசீர்வதிக்கப்பட்ட பயிர் என்றால் மிகுந்த தானியம் விளையும். பதர் இருக்காது. மிகுந்த விளைச்சல் உண்டாகும். கனிகள் உண்டாகும்.
கர்த்தாவே, வறண்ட பூமியாகிய என் வாழ்க்கையை பரிசுத்த ஆவியாகிய தேவநதியால், மழையால், தண்ணீராகிய வசனத்தால் ஒரு செழிப்பான தோட்டமாய் மாற்றும். என்னில் மிகுந்த தானியம் உண்டாகட்டும், கனி உண்டாகட்டும். என்னை, என் ஆத்துமாவை ஆசீர்வதியும் என ஜெபிப்போம். ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👨👨👧👦
🙋♂️🙋♀️ நாம் *சங்கீதம் 66** இல் இருக்கிறோம்
*AN OPEN INVITATION*
*ஒரு பொதுவான அழைப்பு*
📝 இந்த சங்கீதம் தேவனின் அன்பு மற்றும் அற்புதமான செயல்களுக்காக சங்கீதக்காரன் துதிப்பதை விளக்குகிறது. இந்த துதியானது பொதுவானது மற்றும் தனிப்பட்டது.
📍 *கர்த்தர் நம் வாழ்க்கையில் செய்ததை ஒரு தேவாலயம் அல்லது தனி நபர் அறிவிப்பதற்கும், அவரைத் துதிப்பதில் நம்முடன் சேர மற்றவர்களை ஊக்குவிப்பதற்கும் இது ஒரு முன்மாதிரியாகும்*.
🙋♂️ சங்கீதக்காரன் அனைவரையும் அழைக்கிறார்:
1️⃣ *வாருங்கள், தேவனைத் துதித்துப் பாடுங்கள்* (வ. 1-4) : தேவனை ஆராதித்து துதித்துப் பாடுவதன் மூலமும் கர்த்தரே தேவன் என்பதை ஒப்புக்கொள்ள அனைவரும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
📍ஒரு நாள், *முழங்கால் யாவும் முடங்கும், நாவு யாவரும் இயேசுவே தேவன் என்று அறிக்கை பண்ணும்.* (ரோமர் 14:11; பிலிப் 2:9-11)
2️⃣ *வந்து பாருங்கள்* (வ. 5-12) : தேவனின் *அற்புதமான நீதியின் செயல்களை* சங்கீதக்காரன் விவரிக்கிறார்: தேவனுடைய வல்லமை அவருடைய படைப்பில் வெளிப்படுகிறது, பூமியை விசாரிக்கிறார், தேவன் தனது ஜனங்களையும் மிருகஜீவன்களையும் சங்கீதம் 65 & 66ன் மாதிரியின் படி பராமரிக்கிறார். எகிப்திலிருந்து இஸ்ரவேலர்களின் விடுதலையை அவருடைய அற்புதமான செயல்களில் ஒன்றாக விவரிக்கலாம்.
📍இயேசு ஒரு பொதுவான அழைப்பை வழங்கினார்: யோவான் ஸ்நானகனின் இரண்டு சீஷர்களை *வந்து பாருங்கள்* என்றார் (யோவான் 1:35-42). அவர்கள் இயேசுவோடு அந்த நாளைக் கழித்ததாகவும், பின்னர் அவர்கள் சீமோன் பேதுருவிடம் *"மேசியாவைக் கண்டோம்"* என்று அறிவித்ததாகவும் அந்த உரை கூறுகிறது.
3️⃣ *வந்து களிகூருங்கள்* (வ. 6-9) : அந்த நேரத்தில் மறக்க முடியாத செயல்களில் ஒன்று *செங்கடல் பிரிந்தது* . இந்த அற்புதமான செயலுக்காக அனைவரும் களிகூரும்படி அழைக்கப்படுகிறார்கள்.
📍 *அவர் வல்லவர், நாம் துன்பக் கடலில் மூழ்கும்போது அதையே செய்வார்*.
*4️⃣வந்து கேளுங்கள்* (வ. 13-19) : கர்த்தர் தன்னை கஷ்டத்தில் இருந்து விடுவித்ததற்கு நன்றி செலுத்தும் விதமாக விலையுயர்ந்த காணிக்கைகளுடன் தேவனை ஆராதிக்க வந்த சங்கீதக்காரன், அவனது சாட்சியைக் கேட்கும்படி சக வழிபாட்டாளர்களை வலியுறுத்துகிறார்:
🙋♂️இஸ்ரவேல் ஜனங்களின் வரலாற்றில் செயல்பட்ட தேவன் தன் வாழ்க்கையிலும் செயல்பட்டார்.
🙋♂️ அவர் ஜெபத்தில் தேவனைக் கூப்பிட்டார், தேவன் அவருக்கு செவிசாய்த்து பதிலளித்தார்
🙋♂️கர்த்தர் பதிலளித்ததற்குக் காரணம், *சங்கீதக்காரன் தன் பாவத்தை நேர்மையாக ஒப்புக்கொண்டு, மனந்திரும்பி, தேவனுக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தான்* (வ. 18-19)
🙋♂️🙋♀️ அன்பான திருச்சபையே, தேவனுடைய செழிப்பான வாக்குறுதிகள், பராமரிப்புகள் மற்றும் பாதுகாப்பை அனுபவிக்கவும் செயல்படுத்தவும் நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம்.
📍 சங்கீதக்காரன் தேவன் அவனுடைய ஜெபத்திற்குப் பதிலளிப்பதன் மூலம் தேவனிடம் அன்பை வெளிப்படுத்தி துதித்தார். ( *வ. 20* )
📍 சங்கீதக்காரன் ஜெபத்தைப் பற்றிய அழகான பாடத்தை நமக்குக் கற்றுத் தந்தார்: *"நாம் பாவத்தை நம் இருதயத்தில் நேசித்தால், கர்த்தர் நம் ஜெபத்தைக் கேட்க மாட்டார்"* வ18.
தேவனுக்கே மகிமை 🙏
✍🏽 *மார்க் போஜே*
அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳
தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்
*🎋சிப்பிக்குள் முத்து🎋*
*சங் : 63 - 67*
*🪶முத்துச்சிதறல் : 173*
🌹🌲🌹🌲🌹🌲
*என் ஜெபத்தை தள்ளாமலும்......* இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக !
*( 66 : 20 )*
🌲🌹🌲🌹🌲🌹
*🙇♀️தள்ளுபடி ஆகாத ஜெபம்🙇♀️*
🍎🐛🐛🍎🐛🐛🍎
*👍ஜெபம் என்பது நமது இயலாமையை உணர்ந்து, இறைவனால் மாத்திரமே அது இயலும் என்னும் நம்பிக்கையின் அடிப்படையில் எமது இதய வாஞ்சைகளை ஆண்டவருக்கு பணிவோடு தெரிவிக்கும் ஓர் உன்னத நிலையாகும்.*
*👍சமீபத்தில் நாம் ஜெபித்த ஏதோவொரு முக்கியமான ஜெபத்திற்கு இறைவன் பதில் கொடுத்தார் என்று இன்றைய தினம் எம்மால் கூற இயலுமா❓* இல்லை, *இதுநாள்வரை நான் கேட்ட யாதொன்றையும் ஆண்டவர் எனக்கு மறுத்ததே இல்லை என எம்மால் அடித்து கூறிட இயலுமா❓*
தாவீதரசர் தாம் ஆண்டவரிடம் முன் வைத்த விண்ணப்பத்திற்கான பதிலை பெற்றுக் கொண்டதினால்.... அதை மிக சந்தோஷமாக.... பாடல் வடிவில் இயற்றி, தாம் நியமித்த பாடகர்களால் அது பாடப்படும்படி ஒப்புவித்தார் / ஒப்புவித்துள்ளார்.
🌴இங்கு அவர் உணர்ந்துக் கொண்டது யாதெனில்,
*"தன் இதயத்தில் எந்த விதமான அக்கிரம சிந்தையும்"* இல்லாதிருந்த ஒரே காரணத்தினால் தான்....
தனது ஜெபம் கேட்கப்பட்டது.
*அது ஆண்டவரால் தள்ளுபடி ஆகவில்லை என்று கவி பாடி நிற்கிறார்.*
(66:18)
🤔அப்படியென்றால் ஒரு சத்தியம் இங்கு பொதியபட்டுள்ளது. அது என்னவெனில்... *அக்கிரம சிந்தையுள்ளோரின் ஜெபம் ஆண்டவரால் தள்ளுபடி ஆகலாம் என்பதாம்.* மட்டுமல்ல.......
இந்த விசேஷ ஜெபம் *"தாவீது தனது ஆத்மத்திற்க்காக"* செய்த விண்ணப்பமாக இருக்கிற.
அதினால் தான்.... தேவனுக்கு பயந்தவர்களே நீங்கள் எல்லாரும் வந்து கேளுங்கள், அவர் என் ஆத்துமாவுக்கு செய்ததை சொல்லுவேன் என்கிறார்.
*(66:16)*
🧐நம்மில் எத்தனை பேர் நம் ஆத்துமாவிற்காக, அல்லது எமது ஆத்மீக காரியங்களுக்காக ஆண்டவரை நோக்கி ஜெபங்களை ஏறெ டுத்துள்ளோம்❓ *எத்தனை முறை ஏறெடுத்திருப்போம் என்று சற்றே நம் மனதை ஒருமுகப்படுத்தி சிந்தித்துதான் பார்ப்போமே !*
*🦋எம்மையோ எமது ஜெபங்களையோ நம் அருமை ஆண்டவர் தள்ளுபடி செய்யாமல் இருக்க வேண்டுமா❓* வேதாகமம் போதிக்கும் காரியங்களை நாம் அறிந்து வைத்திருப்போமானால் ஏற்ற காலத்தில் அவை எமக்கு உதவிடலாம்.
*இதோ சில எடுத்து காட்டுக்கள் :* 👇👇
*🍒1. மாயக்காரர்கள், வேஷதாரிகள், ஜெபிக்கும் ஜெபத்திற்கு சில வேளைகளில் ஆண்டவர் பதில் கொடாமல் மவுனமாகவே இருந்துக்கொள்ளுவாராம்.*
(யோபு - 27 : 8, 9)
*🍒2. அவர் தமது பார்வையில் யார் நீதிமான்களாக* (கிறிஸ்துவின் நீதியால் முடி சூட்டப்பட்டுள்ள நீதிமான்களாக) இருக்கிறார்களோ அவர்கள் ஜெபத்தை கேட்கிறவர்.
*(நீதி - 15 : 29)*
*🍒3. வேதத்தின்படி நடக்க மனமில்லை என்றால், ஆண்டவரின் காதுகளுக்கும் அந்த ஜெபத்தின் சத்தங்கள் அருவருப்பாக இருக்குமாம்.*
(நீதி - 28 : 9)
*🍒4. நம் இச்சைகள் நிறைவேற வேண்டி செய்யப்படும் விண்ணப்பங்களினால் தான் பெரும்பாலும் நாம் பெற்றுக் கொள்ளமல் இருக்கிறோம்.* (யாக் - 4 : 3)
*✍️தன் இதயத்தில் எவரை குறித்தும் யாதோறு அக்கிரம சிந்தை, அதாவது வேண்டாத சிந்தனை துளியளவும் இல்லை என்பதை தாவீது ஆணித்தரமாக கூறி நிற்க முடிந்தது போல எம்மில் எத்தனை பேரால் இவ்விதம் கூறிட இயலும் ❓*
🪶ஆம், எம் இதயத்தில்.... *"பிறருக்கு விரோதமாக எந்தவோர் திட்டமிடுதலோ, இல்லை பிறருக்கு விரோதமாக உழைப்பதலோ, அல்லது இறைவன் விரும்பாத, பாவமான எந்த கிரியையிலோ நாம் ஈடு படுவதால் எம் ஜெபங்களுக்கு வரவேண்டிய பதில் வர தடை உண்டாகி விடாதபடி, எம் குற்றங்கள் அனைத்தையும் ஆண்டவரிடம் அறிக்கை செய்து விட்டுவிட தீர்மானித்தோராக, புதிய வாழ்வுடையோராக, இறைவன் எம் வாழ்வில் ஜெபத்தின் வாயிலாக செய்தவற்றினை "சாட்சியாக அறிவித்து", அவருக்காக சாட்சியாக வாழ்ந்து, தாவீதைப்போலவே "ஆண்டவர் என் ஜெபத்தின் சத்தத்தை கேட்டார்" என்று சொல்லி, அவரது நாமம் உயரத்தக்கதாக அவரை போற்றி, அவருக்கு நன்றி பலியாக ஏராளம் "ஸ்தோத்திரங்களை" அவர் ஒருவருக்கே செலுத்துவோம்.*
*🥀எமது ஜெபங்கள் தள்ளுபடியாகாமல் இறை சந்நிதானத்தில் கேட்கப்பட்டு, மெய்யாய் தேவன் எனக்கு செவிக்கொடுத்தார்எனும் நன்றியுணர்வினால் நிறைந்த வாழ்வு எம்மில் என்றும் இருக்கட்டும்.*
அதே வேளை இறைவன் நம்மை குறித்து கொண்டிருக்கும் சித்தத்திற்கும் திட்டத்திற்கும் குறுக்கீடுதலாக எம் ஜெபம் இல்லாதிருக்க.... எல்லாவற்றையும் அவரிடம் வேண்டி விட்டு... கடைசியாக...
*என் விருப்ப படியல்ல ஆண்டவரே*
மாறாக.....உம் விருப்படியே எல்லாம் என் வாழ்வில் நிறைவேறட்டும் என்று அவரிடம் ஒப்புக்கொடுத்து, எம் காரியங்களை குறித்து கவலை கொள்ளாமல் வாழ கற்று கொள்வோம். அப்பொழுதே *தேவ சமாதானம்* எம் உள்ளத்தினை *ஆளுகை செய்யும். ஆமென்.*
*Sis. Martha Lazar🌷*
*NJC, Kodairoad*
Thanks for using my website. Post your comments on this