Type Here to Get Search Results !

Psalm 56-62 | கர்த்தருடைய துருத்தியில் நம் கண்ணீர் | A Dove on Distant Oaks | Bible Study | சங்கீதம் 56-62 | Jesus Sam



சங்கீதம் 56 - 62

❎ *மனுஷனுடைய உதவி விருதா* ❎

☄️ *"இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனுஷனுடைய உதவி விருதா."* (சங்கீதம் 60:11).

🔹 60-ஆம் சங்கீதம் தேவனோடு ஒப்புரவாகுவதற்கான உணர்ச்சிமிக்க, தீவிரமான வேண்டுகோளைக் கொண்டுள்ளது. தாவீதும் இஸ்ரவேலின் படைகளும் எதிரிப் படைகளுக்கு எதிராகப் போரிட்டு தோற்கடிக்கப்பட்டனர். *இஸ்ரவேலர்களுக்காக கர்த்தர் போரிட்டபோது அவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பதை தாவீது உணர்ந்திருந்தான்; இல்லையெனில் அவர்கள் தோற்றுப்போவது நிச்சயம். இஸ்ரவேலுடனான தேவனுடைய நெருங்கிய உறவின் காரணமாக இந்த சங்கீதம் புதிய தைரியத்தையும் நம்பிக்கையையும் உறுதிப்படுத்துகிறது. *கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு எப்போதும் பாதுகாப்பை அளித்து அவர்களை வழிநடத்துவார்* என்று அது அறிவிக்கிறது. *தேவனுடைய வல்லமை மட்டுமே வெற்றிபெறும், மனித உதவி பயனற்றது* என்று முடிவடைகிறது.




🔹 பல சமயங்களில், *தேவன் நம்மைக் கைவிட்டு, துன்பப்படுவதற்கு அனுமதித்திருக்கிறார் என்று எண்ணுகிறோம்.* நாம் வளரவும், பல ஆவிக்குரியப் பாடங்களைக் கற்றுக்கொள்ளவும், சோதனையான சூழ்நிலைகளை அனுபவிக்க கர்த்தர் நம்மை அனுமதிக்கிறார் என்பதை இது நமக்கு உணர்த்துகிறது.




🔹 நாம் எந்த உபவத்திரத்தையும் சந்திக்கும் போது, நமது வெற்றிக்காக எந்த ஒரு மனிதரையும் சார்ந்திருக்கக் கூடாது. *சர்வவல்லமையுள்ள தேவன் ஒருவரே எந்தச் சூழ்நிலையிலும் நம்மை வெற்றிபெறச் செய்ய முடியும்.*




🔹 *"மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்."* (சங்கீதம் 118:8) என்று வேதம் கூறுகிறது. *"பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள்."* (சங்கீதம் 146:3). கர்த்தராகிய இயேசுவின் மீதான விசுவாசத்துடன் கூடிய தேவபக்தி, மனிதர்கள் மீதான நமது பயத்திற்கும், அவர்கள் நமக்கு என்ன செய்வார்கள் என்பதைப் பற்றிய நமது கவலைக்கும் எதிராக ஒரு சக்திவாய்ந்த பாதுகாப்பை வழங்குகிறது. மனிதர்களைப் பற்றிய பயம் நம்மை முடக்குகிறது, ஆனால் நம் பரலோகத் தந்தையின் வாக்குறுதிகளின் மேலுள்ள பயபக்தியும் நம்பிக்கையும் பாதுகாப்பை உறுதி செய்கிறது. சாலொமோனின் வார்த்தைகள்: *“மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.”* (நீதிமொழிகள் 29:25).




🔹 *“மனுஷன்மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.”* (எரேமியா 17:5) என்று எரேமியா அறிவிக்கிறான். *“நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதை விட்டுவிடுங்கள்; எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்.”* (ஏசாயா 2:22) என்று ஏசாயா மூலம் கர்த்தர் வெளிப்படுத்துகிறார். மனிதர்களை நம்புபவர்கள் தேவனை நம்ப மறுத்து, தங்கள் சொந்த வளங்கள், படைப்பாற்றல் அல்லது மற்றவர்களின் ஆதரவை நம்பியிருக்கிறார்கள். அப்படிப்பட்டவன் பலனற்ற வாழ்க்கைக்கு ஆளாவான். அவன் நிச்சயமாக கஷ்டங்களையும், துயரங்களையும், மரணத்தையும் சந்திப்பான். *கர்த்தர் மீது விசுவாசம் வைக்கிறவர்கள் பெரிதும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.*




🔹 கர்த்தரில் விசுவாசம் வைப்பவர்களுக்கு அவருடைய இரட்சிப்பைப் பெறுவதற்கான பாக்கியம் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் மனிதன் மீது நம்பிக்கை வைப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள், அவர்கள் நித்தியத்தை பரலோகத்தில் கழிக்க மாட்டார்கள். இரட்சிப்புக்கான தேவனுடைய திட்டத்தில் மனிதன் மனிதர்களைச் சார்ந்திருப்பதற்கு இடமில்லை. *நம்மை அல்லது பிறரைச் சார்ந்து இருந்தால், தேவன் நமக்காக வடிவமைத்துள்ள அவருடனான அற்புதமான உறவை நாம் இழக்கிறோம்.*




🔸 *இப்பொழுதும் என்றென்றும் நம்முடைய வாழ்விற்காக, நாம் முழுவதுமாக கர்த்தரையே சார்ந்திருக்கிறோம் என்பதை உண்மையாக அறிவிக்க முடியுமா?*




✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:




1️⃣ *தேவனுடைய வல்லமை மட்டுமே வெற்றிபெறும், மனித உதவி பயனற்றது.*

2️⃣ *கர்த்தராகிய இயேசுவின் மீதான விசுவாசத்துடன் கூடிய தேவபக்தி, மனிதர்கள் மீதான நமது பயத்திற்கும், அவர்கள் நமக்கு என்ன செய்வார்கள் என்பதைப் பற்றிய நமது கவலைக்கும் எதிராக ஒரு சக்திவாய்ந்த பாதுகாப்பை வழங்குகிறது.*

3️⃣ *நம்மை அல்லது பிறரைச் சார்ந்து இருந்தால், தேவன் நமக்காக வடிவமைத்துள்ள அவருடனான அற்புதமான உறவை நாம் இழக்கிறோம்.*

Dr.எஸ்.செல்வன்

சென்னை


*சங்கீதம்: 56-62*

💐💐💐💐💐💐

*மவுனமாயிருக்கிறவர் களே, நீங்கள் மெய்யாய் நீதியைப் பேசுவீர்களோ? மனுபுத்திரரே, நியாயமாய்த் தீர்ப்பு செய்வீர்களோ?*

*மனதார நியாயக்கேடு செய்கிறீர்கள்; பூமியிலே உங்கள் கைகளின் கொடுமையை நிறுத்துக் கொடுக்கிறீர்கள்*.

*முள்நெருப்பினால் உங்கள் பானைகளில் சூடேறுமுன்னே பச்சையானதையும் எரிந்து போனதையும் அவர் சுழல் காற்றினால் அடித்துக் கொண்டு போவார்*.

*பழிவாங்குதலை நீதிமான் காணும் போது மகிழுவான்; அவன் தன் பாதங்களைத் துன்மார்க்கனுடைய இரத்தத்திலே கழுவுவான்*.

*அப்பொழுது மெய்யாய் நீதிமானுக்குப் பலன் உண்டென்றும், மெய்யாய் பூமியிலே நியாயஞ்செய்கிற தேவன் உண்டென்றும் மனுஷன் சொல்லுவான்*.

(சங்கீதம்: 58: 1,2,9-11)

★ அநேக அரசியல்வாதிகள், தலைவர்கள், காவலர்கள், அதிகாரிகள், நியாயாதிபதிகள் அநியாயமாக நடந்து கொள்ளும் காலம் இது. வன்முறைகள், கொலைகள், கொள்ளைகள், லஞ்ச ஊழல்கள், பாலியல் குற்றங்கள் போன்றவை ஒவ்வொரு நாளும் பெருகி வருவதை செய்திகள் மூலம் காண்கிறோம்.

★ கிறிஸ்தவர்கள் என்று சொல்லுகிறவர்களிடமும் நற்குணங்கள் இல்லாதது மிகவும் வேதனையான காரியம்.

*இறுதியில் யாவற்றிற்கும் நீதியான நியாயத்தீர்ப்பு உண்டு* என்பது நமக்கு ஆறுதல் அளிக்கிறது.

★ நியாயத்தீர்ப்பு நாளில் கர்த்தரின் நியாயாசனத்துக்கு முன்பாக நிற்கும் போது, நாம் செய்த எல்லாத் தீமைக்கும் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.

★ இந்த பூமியில் நியாயக்கேடு செய்த நியாயாதிபதிகள் தேவனுடைய சமுகத்தில் நடுக்கத்தோடு நிற்பார்கள்.

*குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சங்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக் கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்* (சங்கீதம்:2:12)

*ஆமென்*



*சங்கீதம் 56 - 62*




*பயத்தின்* *மத்தியில்* *நம்பிக்கை*




தாவீது, ஒரு விசை ஒரு சிங்கத்தையும்..ஒரு கரடியையும் தனியாக நின்று வீழ்த்தினவன். ஒரு கவணினாலும், ஒரு கல்லினாலும் கோலியாத்தை வீழ்த்தினவன்.




இப்பொழுது,அவன் மீது பொறாமை கொண்ட சவுல்.. அவனைக் கொன்று போட வகை தேடினான். தாவீது,அவனுக்குப் பயந்து வனாந்தரத்தில் அலைந்து திரிந்தான். தாவீதின் ஒளிப்பிடங்களைக் கண்டுபிடித்து சவுலுக்குச் சொன்னவர்களும் தாவீதிற்குப் பயமுறுத்தலாய் இருந்தார்கள். பெலிஸ்தர் அவனைப் பிடிக்க வகை தேடினார்கள்.

தாவீதிற்கு எப்பக்கமும் நெருக்கப்பட்ட சூழ்நிலை..அதனால் தாவீதுக்குப் பயம் உண்டானது.




ஆனால் தாவீது, "*நான்* *பயப்படுகிற நாளில்* *உம்மை* *நம்புவேன்*" என்று கர்த்தரையே தன் தஞ்சமாக்கித் தன் பயத்தை விரட்டியடித்தான்.

(சங்.56 : 3 )




தாவீது ,தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவன்.

அவன் சவுலை மேற்கொண்டு ராஜ்ய பாரத்தை எடுத்துக் கொள்ள விரும்பவில்லை..

கர்த்தரே எல்லாவற்றையும்

அவருடைய வேளையிலே நிறைவேற்றட்டுமென்று அவருக்காகக் காத்திருந்தான். தான் இவ்விதம் நேசிக்கும் தேவன்.. தன்னையும் நேசிக்கிறார், தன் பட்சத்தில் இருக்கிறார் என்று

அவன் அறிந்திருந்தான்..

அவன் தேவனை நம்பினான்.




*தாவீதிற்கு, தேவன் மீதிருந்த* *பூரண அன்பு*..*அவனது* *பயத்தைப் புறம்பே தள்ளிற்று*.




நம்முடைய வாழ்விலே.. பயப்படும்படியான சூழ்நிலைகள் நமக்கு வரும்போது.. நாம் பயத்துக்கு இடம் கொடுக்கிறோமா அல்லது பயத்தை நீக்கும் ஆண்டவரைப் பற்றிக் கொள்கிறோமா?




பயம் சாதாரண பிரச்சினைகளையும் பெரிதாகப் பார்க்க வைக்கிறது.

எளிய தீர்வுகளிருந்தும்.. இந்த வாழ்வு போதும் என்ற கோழைத்தனமான சிந்தனைக்கு வழி வகுக்கிறது.




*பிரியமானவர்களே..பிரச்சினைகள் இல்லா வாழ்வு* *இல்லை*.

*கர்த்தர் நம்மோடு இருக்கிறார்* *என்ற நம்பிக்கை நமக்கு இருந்தால்*.. *எத்தகைய பிரச்சினையும்* *அமைதியாகப் போய்விடும்*.

*அது ஆசீர்வாதமாகவும் மாறிவிடும்*..

*எல்லாப் பிரச்சினைகளையும்* *நம்மால் தவிர்க்கமுடியாது*..

*ஆனால் தேவனின் துணையோடு* *நிச்சயம் அவற்றை நாம்* *எதிர்கொள்ளமுடியும்*.




எனவே, இயேசுவே உம்மை மட்டுமே நான் நம்பியிருக்கிறேன் என்று.. அவரது கரத்தைப் பற்றிக் கொண்டு.. அவருக்குப் பின் செல்வோம்.. அவர் நம்மைத் தமது செட்டையின் நிழலிலே..

சிலுவையினடியிலே..வைத்துப்

பத்திரமாகப் பார்த்துக் கொள்வார்.ஆமென்..🙏




*தேவன் நம்முடைய* *பட்சத்திலிருந்தால், நமக்கு*

*விரோதமாயிருப்பவன் யார்*..?

( ரோமர் 8 : 31 )

மாலா டேவிட்


🤝TRUST IN TESTING TIMES🤝*

*🤝சோதனை காலங்களில் நம்பிக்கை🤝*




[நாள் - 172] சங்கீதம் 56-62




☄️சங்கீதம் 56-62 அடைக்கலம் தேடுதல், தேவனுடைய பிரசன்னத்தில் வலிமையைக் கண்டறிதல் மற்றும் இறைவனின் உண்மைத்தன்மையை அனுபவிப்பது ஆகிய கருப்பொருள்களை எடுத்துக்காட்டுகிறது.




1️⃣ *சங்கீதம் 56: தேவனுடைய பாதுகாப்பில் அடைக்கலம் புகுதல்*




🔹சங்கீதம் 56 சங்கீதக்காரன் தனது பயம் மற்றும் பாதிப்பை ஒப்புக்கொள்வதில் தொடங்குகிறது.

🔹தன்னைத் துன்புறுத்த நினைக்கும் எதிரிகளை எதிர்கொண்டாலும், தேவனுடைய பாதுகாப்பில் உள்ள நம்பிக்கையை தைரியமாக அறிவித்து, இறைவனின் வாக்குறுதிகள் ஸ்திரமானவையும், உறுதியானவையும் என்பதை அறிந்து அவரிடம் அடைக்கலம் தேடுகிறான்.




2️⃣ *சங்கீதம் 57: துன்பங்களுக்கு மத்தியில் துதித்தல்*




🔸சங்கீதம் 57 இல், சங்கீதக்காரன் சவுல் அரசனால் துரத்தப்பட்டு ஒரு குகையில் தன்னைக் காண்கிறான்.

🔸இருப்பினும், விரக்திக்கு ஆளாகாமல், தேவனைப் போற்றுவதில் தன் குரலை உயர்த்துவதைத் தேர்ந்தெடுக்கிறார்.




3️⃣ *சங்கீதம் 58: நீதிக்காக கதறல்*




🔺சங்கீதம் 58, உலகில் துன்மார்க்கமும் அநீதியும் இருப்பதைக் குறித்து சங்கீதக்காரனின் புலம்பலை வெளிப்படுத்துகிறது.

🔺சங்கீதக்காரர் தேவனிடம் உணர்ச்சிப்பூர்வமாக முறையிட்டு, அவர் அடக்குமுறையாளர்களுக்கு நீதி வழங்க தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறார், ஏனென்றால் அவர் நீதியின் தேவன், அவர் இறுதியில் எல்லாவற்றையும் சரியாகச் செய்வார்.




4️⃣ *சங்கீதம் 59: தேவன் நம் வலுவான கோட்டை*




▫️சங்கீதம் 59 இல், சங்கீதக்காரன் மீண்டும் தன்னை அழிக்கும்படி எதிரிகளால் சூழப்பட்டிருப்பதைக் காண்கிறான்.

▫️இருப்பினும், தேவனுடைய பலம் மற்றும் பாதுகாப்பில் அவர் உறுதியைக் காண்கிறார், மேலும் தேவன் தனது கோட்டை, துன்ப காலங்களில் அடைக்கலம் என்று உறுதிப்படுத்துகிறார்.




5️⃣ *சங்கீதம் 60: மறுசீரமைப்பிற்கான அழுகை*




◾️சங்கீதம் 60 தேசிய துயரத்தின் நேரத்தை பிரதிபலிக்கிறது.

◾️தோல்வி மற்றும் பின்னடைவுகளை அனுபவித்த போதிலும், சங்கீதக்காரன் மறுசீரமைப்பு மற்றும் வெற்றிக்காக கடவுளிடம் முறையிடுகிறான்.

◾️உண்மையான வெற்றி என்பது மனித முயற்சியில் மட்டும் அல்ல, கடவுளின் வல்லமையை நம்பியிருப்பதில் இருந்து வருகிறது என்பதை சங்கீதக்காரன் ஒப்புக்கொள்கிறார்.




6️⃣ *சங்கீதம் 61: தேவனில் அடைக்கலம் புகுதல்*




🔻சங்கீதம் 61 இல், சங்கீதக்காரன் தேவனுடைய பிரசன்னம் மற்றும் வழிகாட்டுதலுக்கான ஆழ்ந்த ஏக்கத்தை வெளிப்படுத்துகிறார், மேலும் தேவன் அவருடைய கன்மலையும் அடைக்கலமும், ஆபத்துக் காலங்களில் அடைக்கலமுமானவர் என்பதை அங்கீகரிக்கிறார்.

🔻இந்த சங்கீதம் தேவனுடைய பிரசன்னத்தைத் தேடவும், அவருடைய அசைக்க முடியாத அன்பு, ஆறுதல், பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையில் ஆறுதலையும் வலிமையையும் காண நினைவூட்டுகிறது.




7️⃣ *சங்கீதம் 62: தேவனுடைய உண்மையில் நங்கூரமிடப்பட்டது*




🔘சங்கீதம் 62, தேவனுடைய உண்மைத்தன்மையில் சங்கீதக்காரனின் அசைக்க முடியாத நம்பிக்கையை அழகாக விளக்குகிறது.

🔘தேவன் ஒருவரே அவருடைய கன்மலை மற்றும் இரட்சிப்பு, அவரது கோட்டை மற்றும் அடைக்கலம் என்று அவர் அறிவிக்கிறார்.

🔘சங்கீதக்காரன் கர்த்தர் மீது மட்டுமே நம்பிக்கை வைக்கும்படி நம்மை ஊக்குவிக்கிறார், ஏனென்றால் அவர் நம்முடைய பெலனும் விடுதலையும் ஆவார்.




♥️ *வாழ்க்கை பாடங்கள்*



💥சங்கீதம் 56-62 சோதனைகள் மற்றும் இன்னல்களுக்கு மத்தியில் தேவனை நம்புவதன் சாரத்தை வெளிப்படுத்துகிறது.

💥தேவனுடைய பாதுகாப்பில் அடைக்கலம் தேடவும், அவருடைய பிரசன்னத்தில் பெலனைக் காணவும், அவருடைய அசைக்க முடியாத விசுவாசத்தை அனுபவிக்கவும் அவை நமக்கு நினைவூட்டுகின்றன.




*‼️தேவனுடைய நன்மையில் நம்பிக்கை வையுங்கள், அவருடைய அழியாத அன்பை நம்புங்கள்‼️*

பிரின்சஸ் ஹட்சன்

தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை



ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👨‍👨‍👧‍👦




🙋‍♂️🙋‍♀️ நாம் *சங்கீதம் 56* ல் இருக்கிறோம்




*A Dove on Distant Oaks*

*தொலைதூர கருவேலமரத்தில் ஒரு புறா*



📝 இந்த சங்கீதத்தின்

அறிமுகக் குறிப்பு *"தொலைதூர கருவேல மரத்தில் ஒரு புறா"* என்று கூறுகிறது. அதாவது இந்த சங்கீதம் மேலே குறிப்பிட்டுள்ள ராகத்தில் பாடப்பட்டது.... 🎶🎵

📍 இது தாவீதைக் குறிக்கிறது என்று கூறப்படுகிறது, மேலும் அவர் சவுலிடமிருந்து தப்பி ஓடிப்போய் இஸ்ரவேலின் பகைவர்களான *காத்* - பெலிஸ்தியரின் நகரத்தில் தஞ்சம் புகுந்த காலத்துடன் தொடர்புடையது. பெலிஸ்தியர்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டபோது ( கோலியாத்தைக் கொன்றதற்காக (1சாமு 17), அவரது உயிருக்கு ஆபத்து இருந்தது, ஆனால் அவர் ஒரு பைத்தியக்காரனைப் போல நடந்து கொண்டார் ஆகவே அவர்கள் அவனை அனுப்பி வைத்தனர். ( *1சாமு 21:10-15*)




📍இந்த சங்கீதம் ஒரு தனிப்பட்ட புலம்பலாகவும், அவனுடைய நெருக்கடியான தருணங்களில் தேவன் மீதுள்ள நம்பிக்கையின் அறிக்கையாகவும் இருக்கிறது.

*📍இந்த சங்கீதத்தின் இசை* நமக்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் பாடல் வரிகள் இருக்கிறது:




*🎶. புலம்பல் மற்றும் நம்பிக்கை* (வ 1-4)

என் சத்துருக்கள் நாள்தோறும் என்னை விழுங்கப்பார்கிறார்கள், உன்னதமானவரே, *எனக்கு விரோதமாய் போர் செய்கிறவர்கள் அநேகர்*...

தேவனே, எனக்கு இரங்கும். தேவனை முன்னிட்டு அவருடைய

வார்த்தையைப் புகழுவேன்.

*தேவனை நான் நம்பியிருக்கிறேன்* ~~ 🎶

🙋‍♂️ தாவீதுக்கு இரக்கம் தேவை, ஏனென்றால் அவனுடைய எதிரிகள் அவனது பாதையில் சூடாக இருக்கிறார்கள். அவன் பயப்படும்போது தேவனை நம்புகிறான்.

📍 *தாவீதைப் போல நாமும் தேவனை நம்பினால், மக்கள் நமக்கு என்ன செய்வார்கள் என்று எதற்கும் பயப்பட மாட்டோம்*.




🎶 ~ *பொய்கள் மற்றும் அவமானம்* ( வ 5-7 )

நித்தமும் *என் வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்* ;

அவர்கள் ஏகமாய்க் கூடி, பதிவிருக்கிறார்கள்.. அவர்கள் *என் பிராணனை வாங்க* விரும்பி, *காலடிகளை தொடர்ந்து வருகிறார்கள்*

~~ 🎶

🙋‍♂️அவர்கள் தாவீதின் ஒவ்வொரு அசைவையும் கவனித்தனர், மூலைமுடுக்குகளில் ஒளிந்துகொண்டு, சதித்திட்டம் தீட்டி, அவரது உயிரைப் பறிப்பதற்கான வாய்ப்பைப் பார்த்துக்கொண்டிருந்தனர். இந்தச் சூழ்நிலையில்தான் தாவீது தம் விடுதலைக்காக தேவனிடம் வேண்டினார்.

*📍அவரை நம்புங்கள்*




🎶 *கண்ணீர் மற்றும் நம்பிக்கை* (வ 8-11)

என் புலம்பலை பதிவு செய்யுங்கள்...

என் கண்ணீரைப் பட்டியலிட்டு பதிவு செய்யுங்கள்,

நான் அவரை கூப்பிட்டால், அவர் பதிலளிப்பார் ...

யாருடைய வார்த்தையை நான் புகழுகிறேன்..

மனிதன் என்னை என்ன செய்ய முடியும்?

நான் பயப்பட மாட்டேன் ~~🎶

📍 சுருளில் உள்ள கண்ணீரைப் பட்டியலிட்டால், *கர்த்தர் நம் கண்ணீரைப் பார்க்கிறார், நம் துயரத்தின் மீது இரக்கம் காட்டுகிறார்*. இவை கர்த்தர் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பொறுத்தது.




🎶..*பொருத்தனை மற்றும் நன்றி* ( வ 12-13 )

தேவனே ,

நீர் என்னை மரணத்திலிருந்து விடுவித்தீர்,

நான் உமக்கு பொருத்தனை செய்துள்ளேன்

நான் ஸ்தோத்திரம் செலுத்துகிறேன்.

நான் தேவனுக்கு முன்பாக வெளிச்சத்திலே நடப்பேன்

..~~ 🎶

🙋‍♂️ தேவனின் உண்மைத்தன்மைக்கு தாவீது நன்றி சொல்ல வேண்டும். தேவன் அவன் கால்களை இடறாமல் காத்தார்.

📍 *ஜீவ ஒளியில் நடக்க அவர் உயிருடன் இருக்கிறார்* 👣




💞 அன்பான திருச்சபையே, இந்த சங்கீதம் நமக்கும் பொருந்தும்:

🙋‍♂️🙋‍♀️ வ 2: தங்களை உயர்வாக மதிக்கும் நபர்களால் ( *பெருமை*) நாம் துன்புறுத்தப்படலாம், மேலும் அவர்கள் தங்கள் பதவிக்கு அச்சுறுத்தலாக கருதுபவர்களை அழிக்க நினைக்கிறார்கள்.

📍 *தேவனை நம்புங்கள்*




🙋‍♂️🙋‍♀️ வ 13: நம்மை நாமே நினைவுபடுத்திக் கொள்வோம், எதிரிகளால் நாம் பின்தொடராவிட்டாலும், *ஒழுக்கம் மற்றும் நிதி நேர்மை ஆகியவற்றில் நாம் தடுமாறுகிறோமா என்று மற்றவர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்*.

📍 *நம்பிக்கையில் உறுதியாக நில்லுங்கள்*




🛐 தேவனே, நாங்கள் உமது வார்த்தைகளை தினமும் தியானித்து உமது வழிகளில் நடக்க எங்களுக்கு உதவி செய்யும் .




தேவனுக்கே மகிமை 🙏

✍🏽 *மார்க் போஜே*

அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳

தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்


கர்த்தருடைய துருத்தியில் நம் கண்ணீர்*.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~




சங்கீதம் 56: 8. *என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும். அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?* என தாவீது ஜெபிக்கிறார்.




1. அப்படியானால் தாவீதிற்கு ஆவியானவர் கர்த்தரை குறித்து எவ்வளவு ஞானத்தை கொடுத்திருக்கிறார் பாருங்கள்! *பரலோக தேவனுடைய துருத்தியில் நம் கண்ணீர் சேகரிக்கப்பட்டு, அவர் கணக்கு வைத்திருக்கிறார் என்றால் நம்முடைய கண்ணீர் எவ்வளவு விலையேறப் பெற்றது* என்பதை சிந்தித்து பார்ப்போம்.




ஆம், நம்முடைய பாடுகள், துக்கங்கள், துயரங்கள் மத்தியில் நாம் மனிதரிடம் நம் பிரச்சனைகளை கூறி கண்ணீர் சிந்துகிறோம் அல்லவா? ஆனால் *நாம் கர்த்தரை நோக்கி* யோபுவை போல கண்ணீர் சொரிய வேண்டும். யோபு 16: 20.




2. எரேமியா பாவத்திலிருக்கும் ஜனம் இரட்சிக்கப்படும் படியாய் இரவும் பகலும் அழுதார். *ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீர் ஊற்றுமானால் நலமாயிருக்கும்* என்றார். *இரவும் , பகலும் அவர் கண்களிலிருந்து ஒயாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்* என்றார். எரேமியா 9: 1, 18.

மட்டுமல்ல, *என் ஜனத்தின் நொறுக்குதலினால் கண்ணீர் சொரிந்து, என் கண்கள் பூத்து போகிறது* என்றார். ஆம், *சீயோன் குமாரத்தியே, நதியளவு கண்ணீர் விடு* என்கிறார் புலம்பல் 2: 11, 18.




ஆம், நாமும் கூட அழிந்து போகிற ஆத்துமாக்களுக்காக, அவர்கள் இரட்சிப்பிற்காக , கட்டுண்ட மக்கள் விடுதலை பெற கண்ணீரோடு ஜெபிப்போமானால் இந்த கண்ணீர் கர்த்தருடைய துருத்தியில், கணக்கில் சேகரிக்கப்படும்.




3. மட்டுமல்ல, ஆகாரின் கண்ணீரை கண்ட கர்த்தர், அவளை பெயர் சொல்லி அழைத்தார். அவளோடு பேசினார், ஆசீர்வதித்தார், தண்ணீர் துரவை காணும்படியாய் அவள் கண்களை திறந்தார். பிள்ளையை ஆசீர்வதித்தார்.




அன்னாளின் கண்ணீரை கண்டவர் அவளுக்கு சாமுவேலை கொடுத்தார். இன்று நாமும் ஆகார் , அன்னாள், தாவீதை போல கண்ணீர் சிந்துவோம். *ஜனத்தின் பாவத்தினிமித்தம் அழுது, கண்ணீர் சிந்துபவர்கள் நெற்றியில் முத்திரை போடப்படும்*. எசேக்கியேல் 9: 4.




4. ஆம், இன்று நம் பிள்ளைகளுக்காக, அவர்கள் இரட்சிபிற்காக நாம் கண்ணீர் சிந்துகிறோமா? பிசாசினால் , மனிதரால் கட்டப்பட்ட நம்முடையவர்களுக்காக, ஊழியங்களுக்காக, தேசத்திற்காக, கண்ணீரோடே ஜெபிக்கிறோமா? நம் கண்ணீர் கர்த்தருடைய துருத்தியை நிரப்பட்டும். அப்போது நிச்சயம் நம் ஜெபங்கள் கேட்கப்படும்.




அது மட்டுமல்ல பரலோக இராஜ்யத்தில் கர்த்தரே நம் கண்ணீரை துடைப்பார். ஆனால் இந்த உலக வாழ்க்கையில் நம் கண்ணீர் கர்த்தருடைய துருத்தியை நிரப்பட்டும். அவைகள் கர்த்தருடைய கணக்கில் இருக்கட்டும். ஆமென். அல்லேலூயா.




*Dr.Padmini Selvyn*

[03/10, 09:30] +91 99431 72360: Mrs.Merin Gnanaraj

Covai.

Day : 172/365

Date: 3.10.23




✍️தலைப்பு:

🩸எண்ணப்படும் அலைச்சல்கள்.




🎯இன்றைய தியானம்.

சங் 56.




🔸பெலிஸ்தர் தாவீதைக் காத்தூரில் பிடித்த போது,

📍"யோனாத் ஏலம் ரிக்கோகீம்"

🔸என்னும் வாத்தியத்தில் வாசிக்கும் படி

🔸தாவீது பாடி

🔸இராகத் தலைவனுக்கு ஒப்புவித்த

📍"மிக்தாம்"

🔸என்னும் சங்கீதம்.




🎈யோனாத் ஏலம் ரிக்கோகீம்

= தூரதேசத்தில் இருக்கும் மௌன புறா.




🎈மிக்தாம் (கொத்தப்பட்டது.)

= இரகசியமாய் முத்திரையிடப்பட்டது




👉அதாவது,

1.தூர இடத்தில் தனிமைப்பட்டு வாழும் அனுபவம்.

2. அலைச்சலின் அனுபவம்.




👉அதனால் தான்,

👉சங்56:8ல்.

📍என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர்

என்கிறார்.




🎯எண்ணுதலின் இருபொருள்கள்:

1. நினைத்தல்

2. கணக்கிடுதல்.

(ealculate or count)




👉இந்த வசனத்தில்,

🎈கணக்கிடுதல் என பொருள்படும்.




👉ஏனெனில்,

👉56:8bல்

👉தாவீது,

🔸என் கண்ணீர்கள்

🔸 உம்முடைய

🔸 கணக்கில்

🔸அல்லவோ இருக்கிறது

என்கிறார்.




🎯சிந்தனைக்கு,




📍நம்மால் எண்ணி கணக்கிட முடியாத நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி,

பேரிட்டு அழைக்கும் (சங் 147.4)

நம் கர்த்தர்,




📍ஆகாரமில்லாமல் பறந்து அலைகிற காக்கை குஞ்சுகளுக்கு இரையை சவதரித்து கொடுக்கும்

நம் கர்த்தர் (யோபு 38:41)




📍நம் அலைச்சல்களை

எண்ணிக்(Count)

கொண்டே இருக்கிறார்.




📍நம் கண்ணீர்களை

துருத்தியில் வைத்து,

கணக்கில் வைத்துள்ளார்.




📍எண்ணி முடியாத அதிசயங்களை செய்யும் கர்த்தர் (யோபு 9:10)




👉நம் அலைச்சல்களை எண்ணுவார்.

👉நம் கண்ணீர்களைத் துடைப்பார்.




ஆமென்🙏.

[03/10, 09:30] +91 99431 72360: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖




📗 *சிறிய குறிப்பு* 📗




🍂 *அலைச்சல்கள்* 🍂




📖 *“என் அலைச்சல்களைத் தேவரீர் எண்ணியிருக்கிறீர்; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?” (சங்‬ ‭56‬:‭8‬)*




*அலைந்து திரிதல்* என்ற வார்த்தையின் அர்த்தம் *இடத்திலிருந்து இடம் செல்வது.* தாவீதின் முந்தைய வாழ்க்கை எளிதானது அல்ல. அதில் *பல இடமாற்றங்கள் மற்றும் ஏராளமான அலைவுகள்* இருந்தன. அவனது முதல் இடமாற்றம் அவனது வீட்டிலிருந்து அரண்மனைக்கு இருந்தது. பின்னர் அவன் சவுலின் கோபத்திலிருந்து தப்பிக்க ஓட வேண்டியிருந்தது.




சில சமயங்களில் அவன் *குகைகளில் தஞ்சம் புகுந்தான்.* சில சமயங்களில் அவன் *வனாந்தரத்திற்கு ஓட வேண்டியிருந்தது.* அவர் பாதுகாப்பாக இருக்க *ஆறுகளையும்* கடக்க வேண்டியிருந்தது. தாவீது தொடர்ந்து இடத்திலிருந்து இடத்திற்கு நகர்ந்து கொண்டிருந்தான். அதனால் அவன் அலைந்து திரிந்ததை எண்ண தவறி விட்டான். *ஆனால் தேவன் அவன் அலைந்து திரிவதை எண்ணினார்*.




நாம் அலைச்சல்கள் எல்லாவற்றையும் கர்த்தர் கணக்கு வைக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? உண்மையில் அவை அனைத்தும் அவரால் எண்ணப்பட்டவை. *நம்முடைய அலைச்சல் வீண் போகாது.* தேவனாகிய கர்த்தர் அவற்றுக்கான காரணத்தை அறிந்திருக்கிறார், அவர் அதற்கு தகுந்த பதிலளிப்பார்.




_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏻


*🍂சிப்பிக்குள் முத்து🍂*




இன்றைய வேத

வாசிப்பு பகுதி -

*சங் : 56 - 62*




*🌿முத்துச்சிதறல் : 172*




🐛🍒🌷🐛🍒🌷🐛

*ஐசுவரியம் விருத்தியானால்....* இருதயத்தை அதின்மேல் வைக்காதேயுங்கள். *(62:10)*

🌷🐛🍒🌷🐛🍒🌷




*🐡உலக வாழ்வில் ஐசுவாரியம் எல்லோருக்கும் கிட்டுவதில்லை.* அயரா கடின உழைப்பினால் சிலர் அதை அடைந்துக் கொள்ளுகின்றனர். *இங்கு தாவீதரசன் நாம் எமது ஐசுவரியத்தின் பெருக்க காலத்தில் அதின் மேல் நம்பிக்கை வையாமல்,* "ஜீவனுள்ள தேவனை மாத்திரம் எமது நம்பிக்கையாக கொள்ள வேண்டும்" *என்று அறிவுரை வழங்குகிறார்.*




*🐟ஏன் நாம் இந்த பூமியில் எமக்கு ஈவாக கிடைக்கப் பெற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வைக்க கூடாது❓ என்பதற்கான காரணத்தை நாம் புரிந்துக் கொள்ளுவது கூடுதல் தெளிவை எமக்கு அறிய தருவதாக இருக்கும்.*




*🍉1.*

*மனிதன் வீழ்ச்சி அடைவதற்கு* (இறைவனை விட்டு தூரம் போகுவதற்கு ) *இந்த அவனது ஐசுவரியமும் ஒரு காரணமாக இருக்கிறது.*

அதாவது அவர்கள் ஆன்மீக வாழ்வில் வளர்ச்சியற்றோராக இருப்பார்களாம். *தேவனை மெய்யாக தேடவோ, இல்லை பற்றிக் கொள்ளவோ மனமிராது.* (நீதி-11:28)*




*🍉2. ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வைத்திருப்போர் தங்களது ஆன்மாவை குறித்த எந்த கரிசனையும் கொள்ள மாட்டார்கள்.* ஆகையால் அவர்களால் இயேசு இரட்சகர் கூறும் நித்திய வாழ்வின் பயணத்தில் பங்கு பெற இயலாத மனநிலை சிலருக்கு உண்டாகி இருக்கும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒரு ஐசுவரியவானை அன்பு செலுத்தி.... அன்போடு போதித்தும்.... வழிநடத்தியும் கூட... *கர்த்தரை அவனால் பின்பற்ற இயலாமல் போனதற்கு ஒரே காரணம் ஐசுவரியத்தி ன்மேல் அவனுக்கு இருந்த "பிடி உணர்வு."*




சமூக அந்தஸ்தை விட்டு...*"தாழ இறங்க முடியாமையும், முயலாமையும்"* தான் காரணம். *(மாற்கு - 10 : 17 - 25)*




*🍉3.*

*இந்த ஐசுவரிய வான்களிடம் பொதுவாக ஒரு பெருமை குணம் தலைதூக்கி நிற்கும்.*

தங்களது ஆஸ்தியை யாருக்கு வைத்து போகிறார்கள் என்று அறியாத அஞ்ஞானிகளிவர்கள். அவர்களை குறித்து தாவீதரசர் தீர்க்கமாக எழுதியுள்ளதை நாம் *சங்- 49 : 6 - 13 வாசித்தால் புரிந்துக்கொள்ளலாம்.*




*🍉4.*

இந்த ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வைத்திருப்போர் வசனத்தை கேட்டிருப்பார்கள். ஆனால் பலன்கொடா மரம் போல,

*"மலட்டு மரங்களாக"*

ஆகி விடுபவர்கள் என்று இயேசு அடையாளங்காட்டினார்.

*(மாற்கு - 4 : 18)*




*🍉5.* *ஐசுவரியவானாகும்படி ஒரு தேவ பிள்ளை பிரயாசை எடுக்காமல் இருக்க வேதாகமம் வழிகாட்டுகிறது.* ஏன் என்றால் ஒரு நாள் அது தனக்குத்தானே இறக்கைகளை உண்டுபண்ணிக்கொண்டு, ஆகாயமார்க்கமாக எம்மை விட்டு பறந்து போய்விடக்கூடிய தன்மை கொண்டது என்பதை நாம் மறவாமலிருக்க ஆண்டவரால் அறிவுத்தப்பட்டுள்ளோம்.

*(நீதி - 23 : 4 , 5)*




📌📌🍀📌📌




*ஐசுவாரியம் என்ற ஒன்று இவ்வுலக வாழ்வில் நிலையற்ற தன்மை கொண்டது.* ஆகையால் அதை குறித்து மேன்மை பாராட்டலோ, இல்லை, அதன் மேல் நம்பிக்கை வைத்தலோ , ஒரு தேவ பிள்ளைக்கு தகுதியற்றது.

*(1தீமோ - 6 :17 :, எரே - 9 : 23 :, சங் - 62 : 10)*




*🦋ஐசுவரிய பெறுக்கம் என்றும் ஆபத்தே !,*

ஏன் என்றால் மனம் அதின்மேல் லயித்து விடும். ஆகையால் ஐசுவரியமும் வேண்டாம், தரித்திரமும் வேண்டாம் என்று தினந்தோறும் ஜெபித்துக்கொள்ளுவோம்.

*(நீதி - 30 : 7 - 9)*




*Sis. Martha Lazar✍️*

*NJC, KodaiRoad*

[03/10, 20:37] +91 6381 380 447: *நாள் 172: சங்கீதம் 56 - 62*




*பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவரைத் துதியுங்கள்*




_எல்லா ஆசீர்வாதங்களின் ஊற்றாகிய தேவனைத் துதியுங்கள்;_

_பூமியிலுள்ளவைகளே, அவரைத் துதியுங்கள்;_

_ஆகாய மண்டலமே அவரைத் துதியுங்கள்:_

_*பிதா ,குமாரன்* மற்றும் *பரிசுத்த ஆவியானவரைத்* துதியுங்கள்._

- தாமஸ் கென், 1674




*சங்கீதம் 57* -> இந்த சங்கீதம் *தாவீதின்* வாழ்க்கையில் ஒரு *அகதியாக ஒரு நாளை* பார்க்கிறது, வசனம் 4 அவர் *கீழே கிடப்பதையும்*, வசனம் 8 அதிகாலையில் துதிப்பதற்காக *விழித்துக்கொள்வதையும்* பதிவு செய்கிறது.




*57:4* -> _... தீயை இறைக்கிற மனுபுத்திரருக்குள்ளே *கிடக்கிறேன்*. அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும்..._ ,

*57:5* -> _*தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும். உமது மகிமை பூமியனைத்தின் மேலும் உயர்ந்திருப்பதாக.*_

*57:6* -> _என் கால்களுக்கு கண்ணியை வைத்திருக்கிறார்கள்..._

*57:7* -> _…. *நான் பாடிக் கீர்த்தனம் பண்ணுவேன்*_.




*வசனம் 4* ல், தாவீது தான் எதிர்கொள்ளும் *சத்துருவை* விவரிக்கிறார், அடுத்த வசனத்தில் *[வ 5]*, தாவீது *தேவனை* மகிமைப்படுத்துகிறார். மீண்டும், *வசனம் 6* ல், தாவீது தான் எதிர்கொள்ளும் *சூழ்நிலையை* விவரிக்கிறார், பின்னர் அடுத்த வசனம் *[வ 7]*, அவர் *தேவனைக் கீர்த்தனம் பண்ணுகிறார்!*




*துதியின் நோக்கம்* *கர்த்தரை உங்கள் சுற்றுச்சூழலுக்கு வரவழைப்பதே* [சங் 22:3] என்ற துதியைப் பற்றிய ஒரு முக்கியமான திறவுகோலை தாவீது புரிந்துகொண்டார். *கர்த்தர் வரும்போது காரியங்கள் மாறும்*.




துதி கர்த்தரை உங்கள் நாளுக்குள் கொண்டுவருகிறது, அதனால் உங்கள் வழியில் வரும் அனைத்தையும் அவர் கையாள முடியும், *சாத்தியமற்றவற்றை வெற்றிகளாக மாற்றுகிறார்*.




*விசுவாசத்தின் அடிப்படையிலான துதியானது* கர்த்தர் என்ன செய்வார் என்பதை அவர் *அதைச் செய்வதற்கு முன்* அவருக்கு நன்றி சொல்வதாகும்.

- செர்ரி செரியன், கொச்சி, இந்தியா

தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.