சங்கீதம் 68 - 71
*தேவரீர் என் நிந்தையையும் என் வெட்கத்தையும் என் அவமானத்தையும் அறிந்திருக்கிறீர்; என் சத்துருக்கள் எல்லாரும் உமக்கு முன்பாக இருக்கிறார்கள்*.
*நிந்தை என் இருதயத்தைப் பிளந்தது; நான் மிகவும் வேதனைப்படுகிறேன்; எனக்காகப் பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன், ஒருவனும் இல்லை; தேற்று கிறவர்களுக்குக் காத்திருந்தேன், ஒருவனையும் காணேன்*.
(சங்கீதம்: 69: 19-20)
★ தாவீதின் வாழ்க்கையில் நிந்தைகள், வேதனைகள் நிறைந்து அவர் அவமானப்பட்ட நேரங்களில் அவரைத் தேற்றுபவர்கள் யாரும் இல்லை என்று சங்கீதம் பாடுகிறார்.
★ கிறிஸ்து அடைந்த அவமானத்தையும் அவரைத் தேற்ற யாரும் இல்லாத சூழ்நிலையையும் இந்த வசனங்கள் காட்டுகின்றன.
★ நம்முடைய வாழ்க்கையிலும் நாம் ஒருவேளை நிந்தைகள் அனுபவித்து, தனித்து விடப்பட்டிருக்கலாம். நம்மிடம் நன்மை பெற்றவர்கள், அன்பு காட்ட வேண்டியவர்கள் நம்மை ஒதுக்கி வைத்து, நமக்கு எதிராக ஆகடியம் பேசி, பொய்யான காரியங்களை தூற்றித் திரியலாம்.
★ இயேசுக்கிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்த நாட்களில் நன்மை செய்கிறவராகச் சுற்றித் திரிந்தார். அத்தகைய கிறிஸ்துவே எத்தனை அவமானங்கள் அடைந்தார் என்று நாம் அறிவோம்.
★ என்றைக்கும் நம்மை விட்டு விலகாத கர்த்தரும் என்றென்றும் நம்முடன் தங்கியிருந்து தேற்றுகிற பரிசுத்த ஆவியானவரும் நமக்கு உண்டு.
*நான் பிதாவை வேண்டிக் கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும் படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்*.
( யோவான்: 14: 16)🧎
✍️ பவானி ஜீஜா தேவராஜ், சென்னை.
🌟 *உம்முடைய அதிசயங்களை அறிவிக்கிறேன்* 🌟
☄️ *“தேவனே, என் சிறுவயதுமுதல் எனக்குப் போதித்து வந்தீர்; இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்துவந்தேன். இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும்வரைக்கும் என்னைக் கைவிடீராக.”* (சங்கீதம் 71:17-18).
🔸 இந்த பூமியில் நீண்ட காலம் வாழ அனைவரும் விரும்புகிறார்கள். நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமும், செல்வச் செழிப்பும் கொண்ட வாழ்க்கையையும் அவர்கள் விரும்புகிறார்கள். ஞானி நீண்ட ஆயுளுக்கான இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்: *"கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசு நாட்களைப் பெருகப்பண்ணும்."* (நீதிமொழிகள் 10:27). பூமியிலே வாழ்நாள் நீடித்திருப்பதற்கு தேவன் அருளிய கற்பனையை பவுல் நமக்கு நினைவூட்டுகிறான்: *“உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது.”* (எபேசியர் 6:2-3).
🔸 ஆனால் சங்கீதக்காரன், *இந்தச் சந்ததிக்கு தேவனுடைய வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் அவரது பராக்கிரமத்தையும் அறிவிக்கவே* நீண்ட காலம் வாழ விரும்புவதாக அறிவிக்கிறான். அவன் தனது சிறுவயதுமுதல் தேவன் தனக்குப் போதித்து வந்தார் என்பதையும், அவன் இதுவரைக்கும் அவருடைய அதிசயங்களை அறிவித்துவந்தான் என்பதையும் பிரகடனப்படுத்துகிறான். சங்கீதக்காரன் தேவனிடம் இவ்வாறு ஜெபிக்கிறான்: *"என் வாய் உமது துதியினாலும், நாள்தோறும் உமது மகத்துவத்தினாலும் நிறைந்திருப்பதாக."* (சங்கீதம் 71:8). இதை நாம் பின்பற்றினால், தேவனுடைய மகத்துவத்தையும் மகிமையையும் அனைத்து மக்களுக்கும் திறம்பட அறிவிக்க இது நமக்கு உதவும்.
🔸அவருடைய நன்மை, இரக்கம், மகத்துவம் ஆகியவற்றை அனுபவிப்பதற்காக மட்டுமே நாம் கர்த்தரால் இரட்சிக்கப்படவில்லை. அவர் நம்மில் யாரையும் *ஆசீர்வாதங்களுக்காகவும், ஐக்கியத்திற்காகவும் வெளிப்பாட்டிற்காகவும் மட்டுமே இரட்சிக்கவில்லை;* மாறாக, நித்திய நோக்கத்திற்காக அவ்வாறு செய்தார். தேவன் *ஒவ்வொரு விசுவாசியும் ஒரு சுவிசேஷகனாக இருக்க வேண்டும்* என்று விரும்புகிறார். *"ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்."* (நீதிமொழிகள் 11:30). *நாம் உயிருடன் இருக்கும் வரை தேவனை உயர்த்தவும், ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாக்கவும் எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும்.*
🔸 நம்முடைய வயது அதிகரிக்கும்போது தேவனோடுகூடிய நம்முடைய நடை வளர வேண்டும். இந்த நடை *தேவனோடுகூடிய ஆழமான, தனிப்பட்ட அனுபவங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.* இப்படி செய்தால், நாம் வாழும் வரை, நம் தேவனுடைய மகத்துவத்தை அடுத்த தலைமுறைக்குக் காட்டவும் சொல்லவும் நம்மால் முடியும்.
💥 *எவ்வகையான அறிக்கைகளை* நாம் செய்ய வேண்டும் என்பது வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
⚡ இரட்சிக்கப்படுவதற்கு நாம் எப்படி அறிக்கை செய்ய வேண்டும் என்பதை பவுல் விளக்குகிறான்: *“கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.” (ரோமர் 10:9). இரட்சிக்கப்பட்ட மக்கள் அனைவரும் மற்றவர்கள் இரட்சிக்கப்படுவதற்கு இதை எல்லோருக்கும் அறிவிக்க வேண்டும்.
⚡ இருளிலிருந்து வெளிச்சத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிற விசுவாசிகளிடம், தேவனுடைய புண்ணியங்களை அறிவிக்கும்படி பேதுரு கேட்கிறான்: “நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.”* (1 பேதுரு 2:9).
🔹 *நாம் உயிருடன் இருக்கும் வரை தேவனை உயர்த்தவும், ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாக்கவும் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *நீண்டகாலம் வாழ விரும்பும் ஒவ்வொரு விசுவாசியும் தேவனுடைய மகத்துவத்தையும் மகிமையையும் தன் தலைமுறைக்கும், தேவனுடைய பராக்கிரமத்தையும் வல்லமையையும் எதிர்கால சந்ததிகளுக்கும் அறிவிக்க வேண்டும்.*
2️⃣ *நம்முடைய வயது அதிகரிக்கும்போது தேவனோடுகூடிய ஆழமான, தனிப்பட்ட அனுபவங்களை உள்ளடக்கிய நம்முடைய நடை வளர வேண்டும்.*
3️⃣ *நாம் வாழும் காலமெல்லாம் நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் மேல் விசுவாசம் வைத்து தேவனுடைய கிருபையினால் எப்படி இரட்சிக்கப்பட்டோம் என்பதை எல்லாருக்கும் அறிவிக்க வேண்டும்.*
4️⃣ *அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு நம்மை வரவழைத்தவருடைய புண்ணியங்களை நாம் உயிரோடு இருக்கும் வரை அறிவிக்க வேண்டும்.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
*சங்கீதம் 68-71*
*புறக்கணிக்கப்பட்ட இயேசு*..
*சங்கீதம்* *69*..*மேசியாவைக் குறித்த* *ஓர் அற்புதமான சங்கீதம்*..
சங்கீதம் 22 ..இயேசு கிறிஸ்துவின் மரணத்தைத் குறித்துக் கூறுகிறது.
சங்கீதம் 69.. இயேசு கிறிஸ்துவின் வாழ்வின் அமைதியான காலங்களைக் குறித்து... குறிப்பாக அவர் ஊழியத்தை ஆரம்பிக்கும் முன்னே.. அவர் எப்படிப்பட்ட பாதையைக் கடந்து வந்தார் என்பதைக் குறித்துக் கூறுகிறது..
அந்நாட்களிலே.. இயேசு கிறிஸ்து,
தாழ்மைப்படுத்தப்பட்டு.. புறக்கணிக்கப்பட்டார்.
இயேசு கிறிஸ்து, சிலுவையில் தன் சரீரத்திலே வேதனைகளை அனுபவித்தார்..
ஆனால் அவர் தன் வாழ்நாள் முழுவதும்.. ஆத்தும வியாகுலங்களை அனுபவித்தார்.
அவர் மாட்டுத் தொழுவத்தில், பாலகனாகப் பிறந்தபோது.. அவரின் பாடுகள் ஆரம்பமானது.
*நிமித்தமில்லாமல் என்னைப்* *பகைக்கிறவர்கள்* ...
*அதிகமாயிருக்கிறார்கள்*..
(சங் .69 : 4).
*என் சகோதரருக்கு வேற்று* *மனுசனும்..என் தாயின்* *பிள்ளைகளுக்கு* *அந்நியனுமானேன்*..
(சங்.69 :8 ).
நாம் வேறு எந்த வகையிலும் அறிந்து கொள்ள முடியாத காரியங்களை..
தீர்க்கதரிசனமாக இந்த வசனம் கூறுகிறது.
ஒரு நாளிலே ,இயேசு கிறிஸ்துவின் சகோதரராகிய யூதா, யோசே ..மரியாளிடம், அம்மா ..இயேசு கிறிஸ்து எங்கள் சகோதரர் அல்ல என்று மற்றவர்கள் கூறுகிறார்களே...
அவருடைய தகப்பன் யார் என்று கேட்டிருக்கக் கூடும்.
அதற்குப் பின் அந்தக் குடும்பத்திலே முழுமையான சமாதானம் இருந்திருக்கக் கூடுமா?
இங்கே என் தகப்பனின் பிள்ளைகள் என்று சொல்லப்படவில்லை..
என் தாயின் பிள்ளைகள் என்று சொல்லப்பட்டிருப்பதால், இயேசு கிறிஸ்துவின் கன்னிப் பிறப்பைக் குறித்த ஒரு சாட்சியாக ..இந்த வசனம் இருக்கிறது.
*என் ஆத்துமா வாடும்படி* *உபவாசித்து அழுதேன்..அதுவும்* *எனக்கு நிந்தையாய் முடிந்தது*.. (சங்.69:10)
இயேசு கிறிஸ்துவின் உபவாசத்தைப் பார்த்து.. இவன் பக்திமான் போல வேஷம் போடுகிறான் என்று.. அவரது சகோதரர்களே கூறியிருக்கக் கூடும்
*வாசலில்* *உட்கார்ந்திருக்கிறவர்கள்*
*எனக்கு விரோதமாய்* *பேசுகிறார்கள்* ..என்பது
(சங். 69 :12)
நாசரேத் ஊர் பெரியோர்களும்.. இயேசு கிறிஸ்துவை, தேவனுடைய குமாரன் என்று ஏற்றுக்கொள்ளவில்லை.
இவன் யாருடைய பிள்ளையோ என்றுதான் அவர்களும்
பேசியிருப்பார்கள்.
அங்குள்ள அநேகருக்கு..
அவர் பழமொழியானார்..
பாடலானார்..
*ஆழமான உளையில்* *அமிழ்ந்திருக்கிறேன்*. *நிற்க* *நிலையில்லை*..
என்று கூறப்பட்டிருப்பது..
(சங்.69:2)
எந்த அளவுக்கு இயேசு கிறிஸ்துவின் வியாகுலங்கள் இருந்தன என்பதை நமக்குக் காட்டுகிறது.
ஆனால் இயேசு அதிலே அமிழ்ந்து போகவில்லை, அவர் வெற்றி சிறந்தார்.
நாம் காரணம் இல்லாமல்
( எந்தத் தகுதியும் இல்லாமல்) இரட்சிக்கப்பட.. அவர் காரணம் இல்லாமல் வெறுக்கப்பட்டார்... நாம் அவருடைய சொந்தப் பிள்ளைகளாகும்படி.. அவருடைய சொந்தங்களாலே அவர் அவமானப்படுத்தப்பட்டார்.
ஆனால் 30 ஆண்டு காலம்.. அந்த ஏளனப் பேச்சுக்கள் மத்தியிலும்.. இயேசு பொறுமையோடு இருந்தார்.
எதற்காக..? உங்களுக்காகவும்..
எனக்காகவுமே..
அந்த இயேசுவுக்காக.. நாம் செய்வது என்ன..?
நம் வாழ்விலே பொறுமை..
தாழ்மை உண்டா..?
*இந்த உலகம் ..இயேசு* *கிறிஸ்துவை, ஒவ்வொரு கிறிஸ்தவனிடமும் தேடுகிறது..அவர்களின்* *தேடலுக்கு நம் பதில் என்ன*..?
*சிந்திப்போம்*...ஆமென்.🙏
மாலா டேவிட்
☘️☘️☘️☘️☘️
"தேவனே எங்களுக்கு நேரிடுகிற போராட்டங்களில் எங்களை பலப்படுத்தும்.."
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️ நாம் தொடர்ந்து பலத்தைப் பெற்றுக் கொள்ள கர்த்தரிடம் ஞானத்தை தருமாறு விண்ணப்பம் செய்ய வேண்டும்.
நமது அவிசுவாசத்தினால் வரும் சோதனைகள் மற்றும் துன்பங்களுக்கு கடவுளைக் குற்றம்சாட்டக்கூடாது. சாத்தான் மகிழ்ச்சியாகிய இதய தோட்டத்தை அழிக்க முயல்கிறான். அது பாழான ஒரு காட்சியை உருவாக்குகிறது.
நமது விசுவாசத்தின் பாதுகாவலர் நமக்கு முன்பாக இருக்கிறார் என்பதை நாம் அடிக்கடி மறந்துவிடுகிறோம். ஆலயத்தில் எரியும் விளக்கின் பிரகாசம் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை ஆனால் விளக்கில் தினமும் புதிய எண்ணெய் நிரப்ப வேண்டும்.
நம் விசுவாசமும் அவ்விதமே கிருபையாகிய எண்ணெயுடன் நீடித்திருந்தால் வாழ முடியும்,.
நாம் கடவுளிடமிருந்து மட்டுமே இதை பெற முடியும்.
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️மேபி சுந்தர்.சென்னை. இந்தியா
இதுவே கர்த்தருக்கு பிரியமாயிருக்கும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சங்கீதம் 69: 30, 31.
இதுவே கர்த்தருக்கு பிரியம். எதை பார்க்கிலும் என்றால், *கொம்பும், விரிகுளம்புமுள்ள காளை எருதை பார்க்கிலும் அதாவது இந்த பலியை பார்க்கிலும், இதுவே கர்த்தருக்கு பிரியம்.* கர்த்தருக்கு பிரியமானவை என அநேக காரியங்கள் வேதத்தில் கூறப்பட்டிருக்கின்றன. ஆனாலும் இதுவே கர்த்தருக்கு பிரியம் என 2 முக்கியமான காரியங்கள் இங்கு கூறப்பட்டுள்ளன.
1. *தேவனுடைய நாமத்தை பாட்டினால் துதிப்பது* .
ஆம், மோசே, மிரியாம், தெபோரா, தாவீது என அநேகருடைய பாட்டுகள் வேதத்தில் எழுதப்பட்டுள்ளன. தாவீது உம்முடைய நாமத்தை பாடுவேன் என்கிறார். சங்கீதம் 18: 49. அநேகர் ராகத்தை , இசையை ரசித்து, பாடிக்கொண்டிருக்கிறார்கள். நாம் எப்படி பாட வேண்டும்?
1. *கருத்துடனே கர்த்தரை போற்றி பாடணும்.* சங்கீதம் 47: 7
2. *என்றென்றும் பாடணும்* சங்கீதம் 89:1.
3. *கெம்பீரமாய் பாடணும்.* சங்கீதம் 95: 1.
4. *துதியுடன் பாடி கொண்டாடணும்* சங்கீதம் 147: 7.
5. *ஆவியோடும் பாடணும், கருத்தோடும் பாடணும்*. 1கொரிந்தியர் 14: 15.
6. *இருதயத்தில் பக்தியுடன் பாடணும்* கொலோசேயர் 3: 16.
*நடு இரவில் சிறை சாலையில் பவுலும், சீலாவும் கர்த்தரை பாடி துதித்த போது, பூமி அதிர்ந்தது. சிறை சாலை கதவுகள் திறந்தன.எல்லாருடைய கட்டுகளும் கழன்றன . இரட்சிப்பு உண்டானது*. அப்போஸ்தலர் 16: 26.
கர்த்தருக்கு பாட்டு பிரியமானதால் , சாத்தானும் மக்களை திசை திருப்ப சினிமா பாடல்கள், பல நவீன பாடல்களால் மக்களை வஞ்சித்து கொண்டிருக்கிறான். ஆம், இன்று நாம் எத்தகைய பாடல்களை, எப்படி பாடிக்கொண்டிருக்கிறோம்? சிந்திப்போம். கர்த்தருக்கு மிகவும் பிரியமாய் அவர் நாமத்தை பாடி கொண்டாடுவோம்.
2. *தேவனுடைய நாமத்தை ஸ்தோத்திரத்தினால் மகிமைப் படுத்துவது*.
1. *ஸ்தோத்திரம் ஒரு பலி. ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப் படுத்துகிறான்*. சங்கீதம் 50: 23.
2. *இது நம் உதடுகளின் கனி. இந்த கனியாகிய ஸ்தோத்திர பலியை எப்போதும் தேவனுக்கு செலுத்துங்கள்.* எபிரேயர் 13: 15.
3. *எக்காலத்திலும், எப்போதும் கர்த்தரை ஸ்தோத்தரிக்க வேண்டும்.* சங்கீதம் 34:1.
4. *என் ஆத்துமாவே, முழு உள்ளமே, கர்த்தரை ஸ்தோத்தரி* சங்கீதம் 103:1 ஆம் ஆத்துமாவிலிருந்து ஸ்தோத்தரிக்க வேண்டும்.
5. *ஸ்தோத்திரத்தோடே விண்ணப்பம் செய்யணும்.* பிலிப்பியர் 4: 6.
ஆம், *ஸ்தோத்திரத்தினால் தடைகள் உடையும். கிருபை பெருகும்.துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் தேவனுடைய பிரசன்னம் நம் மத்தியில் இறங்கும்*
ஆம், இன்று நாம் பலவித பாடுகளால் சோர்ந்து போயிருக்கலாம். ஆனால் தேவனுடைய நாமத்தை பாட்டினால் துதித்து, ஸ்தோத்திரத்தினால் மகிமைப் படுத்துவோம். கர்த்தர் நம்மையும் விடுவிப்பார். ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👨👩👦👦
🙋♂️🙋♀️ படித்து தியானம் செய்யலாம்
*சங்கீதம் 70:1-5*
*GOD HEARS SHORT PRAYER*
*கர்த்தர் சுருக்கமான ஜெபங்களைக் கேட்கிறார்*
📝 இந்த சங்கீதம் எதிரிகளால் அச்சுறுத்தப்படும்போது தேவனுடைய உதவிக்காக ஒரு அவசர ஜெபமாகும். சங்கீதக்காரன் கர்த்தரை *தீவிரமாய்* வருமாறு கெஞ்சுகிறான் (வ. 1,5)
📍அவசரத்தின் மீதான அழுத்தம், சங்கீதக்காரன் உடனடி ஆபத்தில் இருப்பதைக் குறிக்கிறது.
📍அவரால் செய்யக்கூடியது ஒரு *சுருக்கமான ஜெபம்* மட்டுமே : "தனது உயிரைப் பறிக்க நினைத்தவர்களுக்கு (தன் எதிரிகளுக்கு) *குழப்பத்தையும்* *வெட்கத்தையும்* ஏற்படுத்த வேண்டும்" என்பதே.
📝 பழைய ஏற்பாடில் கர்த்தர் அடிக்கடி இஸ்ரவேலின் எதிரிகளை குழப்பத்தில் தள்ளி அவர்களை தோற்கடித்தார் ( *யாத் 14:24; யோசு 10:10; 1சாமு 14:20* )
📍 *தேவன் தம்முடைய பிள்ளைகளை எதிர்ப்பவர்களுக்கு இப்பொழுதும் குழப்பத்தை அனுப்ப முடியும்*. அரசியல் தலைவர்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் அவர்கள் *மதமாற்ற எதிர்ப்பு மசோதாக்களை* கைவிட வழிவகுக்கும்.
🙋♂️🙋♀️ *இதுபோன்ற குழப்பத்திற்காக ஜெபிப்பது தவறல்ல*.
📝 *மத்தேயு 14:22-33* ல், பேதுரு தண்ணீரின் மேல் நடக்கும் பாக்கியத்தைப் பெற்றிருந்தான், ஆனால் அவன் தன் கண்களை காற்றின் மீது செலுத்தியபோது அவன் மூழ்க ஆரம்பித்தான். உடனே பேதுரு வேதத்திலுள்ள மிகவும் சுருக்கமான ஜெபத்தைச் செய்தார்: " *ஆண்டவரே, என்னை இரட்சியும்*" என்று கூப்பிட்டான். வ 30.
பேதுரு நீண்ட ஜெபம் செய்யவில்லை: தனது பிரச்சினையைச் சொன்னார்; அவரது பாவங்களை ஒப்புக்கொள்வது மற்றும் பல; *ஆனால்* அவரது ஜெபம் மிகவும் குறிப்பிட்டு இருந்தது.
📍 *தான் மூழ்குவதை பேதுரு அறிந்திருப்பது நல்லது, மேலும் இயேசு தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று விரும்பினார்* என உரை கூறுகிறது, " *உடனடியாக இயேசு தம் கையை நீட்டி அவரைப் பிடித்தார்*.. " வ31
🙋♂️🙋♀️ *இன்று நம்மில் பலருக்கு நாம் மூழ்குகிறோம் என்பது தெரியாது ; சிலர் இதைப் பற்றி அறிந்திருக்கிறார்கள், ஆனால் மேலோட்டமாக ஜெபம் செய்கிறார்கள்.*
✝️ *பேதுருவை மூழ்காமல் காப்பாற்றிய அதே இயேசுவே உன்னையும் என்னையும் சேறும் சகதியுமான களிமண்ணிலிருந்தும், பயங்கரமான குழியிலிருந்தும், கடுமையான புயல்களிலிருந்தும் மீட்க வல்லவர்* .
💞 அன்பான திருச்சபையே, சங்கீதக்காரனைப் போலவே, நமக்கு உதவி தேவை என்பதையும், அவர் மட்டுமே நமக்கு உதவ முடியும் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். நாம் விரைவாக ஜெபத்தில் தேவனிடம் திரும்ப வேண்டும்.
📍 *உங்கள் ஜெபத்தில் தெளிவாக இருங்கள்*.
📍 *வேதாகமத்தின் தேவனிடம் நாம் கேட்பதற்கு முன்பே நமக்கு என்ன தேவை என்று அவருக்குத் தெரியும்*.
தேவனுக்கே மகிமை 🙌
✍🏻 *மார்க் போஜே*
அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳
தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்
🎯தியான சங்கீதம்:
🎈சங்கீதம் 71.
🎯தியானம்:
🎈இந்த சங்கீதத்தில்,
🔸கர்ப்பத்தில் உற்பவித்தது முதலாய்
🔸தாயின் வயிற்றிலிருந்து பிறந்து
🔸சிறு வயதிலும்
🔸 தேவனுடைய வழியில் நடந்த ஒருவர் (வச 5, 6)
அதற்காக ஸ்தோத்திரம் செலுத்துவதோடு,
🎈தனது முதிர்வயதில் ,
🔸கஷ்டங்களை எதிர்கொள்ளுகிறதற்கும்
🔸தன் சத்துருக்கள் மற்றும்
🔸 உபத்திரவங்களினின்று
மீட்கும் பொருட்டு தேவ உதவி வேண்டி
🎈ஜெபிக்கும் ஜெபமாகும்.
🙏ஜெபம்:
🔸முதிர்ந்த வயதில் என்னை தள்ளி விடாமலும்,
என் பெலன் ஒடுங்கும் போது என்னை கைவிடாமலும் இரும்.
🔸தேவனே, என் சிறு வயது முதல் எனக்குப் போதித்து வந்தீர்,
இதுவரைக்கும் உமது அதிசயங்களை அறிவித்து வந்தேன்.
🔸இப்போதும் தேவனே,
🔸இந்த சந்ததிக்கு உமது வல்லமையையும்,
வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும்,
🔸முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக (வச 9, 10,11)
ஆமென்🙏.
Thanks for using my website. Post your comments on this