Type Here to Get Search Results !

Godson Vincent | வேதாகம ஊழியரே | Part 1-4 | உண்மையும் விவேகமுமுள்ள ஊழியராயிருங்கள் | Tamil Bible Study | Jesus Sam

====================
வேதாகம ஊழியரே! (பகுதி 1)
======================
உண்மையும் விவேகமுமுள்ள ஊழியராயிருங்கள்!

ஏற்றவேளையிலே எஜமானின் வேலைக்காரருக்குப் போஜனங்கொடுத்து அவர்களை உண்மையும் விவேகமுமாய் விசாரியுங்கள்!
(மத்.24:45-47)

தேவஜனங்களுக்கு ஆவிக்குரிய போஜனங்கொடுங்கள்!* (அப்.2:42; 6:4 20:20,26,27; 28:31; ரோமர் 12:7; 2கொரி.2:14-17; 4:2; கொலோ.1:28,29; 1தீமோ.4:13; 5:17; 2தீமோ.2:15,26; தீத்து 2:1-8)

சபையாரில் இருக்கிறவர்கள் இல்லாதவர்களைத் தாங்க உபதேசியுங்கள்!* (அப்.2:42,44,45; 4:32; ரோமர் 12:13; கலா.6:10; யாக்.1:27; 2:15,16; 1தீமோ.6:17-19; 1யோவான் 3:16-18)

சபையில் உள்ள பணக்கார விசுவாசிகளிடம் பெற்று, ஏழை விசுவாசிகளுக்கு பகிர்ந்துகொடுங்கள்!* (அப்.4:34-37)

பகிர்ந்துகொடுக்கும் கிருபையுள்ளவர்கள் வஞ்சனையில்லாமல் பகிர்ந்துகொடுக்கச் செய்யுங்கள்!* (ரோமர் 12:8; 15:25,31; 2கொரி.8:20,21)

சபையாருக்கு ஆவிக்குரிய வரங்களைப் பகிர்ந்துகொடுங்கள்!* ரோமர் 1:10; அப்.8:15-18; 19:1-6; 1கொரி.12:1-11; 1தீமோ.4:14,15; 1கொரி.1:7; 4:1,2)

சபையார் தாங்கள் பெற்றுள்ள வரங்களை, சபையிலுள்ள மற்றவர்களின் பக்திவிருத்திக்கு ஏதுவாகப் பயன்படுத்த உற்சாகப்படுத்துங்கள்!* (1பேதுரு 4:10,11; 1கொரி.12:1-11; 14:1-12,24-31; ரோமர் 12:6-8)

தேவன் உங்கள் உண்மையும் விவேகமுமான ஊழியத்திற்கேற்ற பலனை அளிப்பார்! (மத்.24:47)

பொல்லாத ஊழியராயிராதீர்கள்!

ஆண்டவர் வர நாள் செல்லும் என்று இறுமாப்பாயிராதீர்கள்! (மத்.24:48; 1பேதுரு 5:3; 1கொரி.13:4; 2கொரி.1:24; கொலோ.2:19; 1தீமோ.6:4; யூதா 1:16)

உங்கள் உடன் வேலைக்காரரை (வயிற்றில்) அடித்து, நீங்கள் மாத்திரமே சுகபோகமாய் வாழாதீர்கள்!
(மத்.24:49; 1தீமோ.3:3; ரோமர் 12:8; 2பேதுரு 2:13)

*வெறியரோட வெறிகொள்ளாதீர்கள்!* (மத்.24:49; 1தெச.5:7; 1கொரி.6:10; ரோமர் 14:17; 1தீமோ.3:3; 6:5; எபே.5:18; 2பேதுரு 2:1-3,10-19)

*மாயக்காரரோடே பங்கடையாதீர்கள்!* (மத்.24:50,51; 2பேதுரு 2:1-3; யூதா 1:4,8-16)

க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920


===================
வேதாகம ஊழியரே (பகுதி 2)
=========================
உண்மையும் உத்தமமுமான ஊழியராயிருங்கள்!
கொஞ்சத்தில் உண்மையாய் இருங்கள்:* (மத்.25:19-23)

நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி நமக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்தை உள்ளபடியே போதிக்கிறதில் நாம் உண்மையுள்ளவர்களாய் இருப்போம் என்று எண்ணியே, நம்மைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து

இந்த ஊழியத்திற்கு நம்மை ஏற்படுத்தியிருக்கிறார். (1தீமோ.1:11,12; 1கொரி.2:17; 1தெச.2:3-5 )

ஆகவே, கிறிஸ்துவின் ஊழியக்காரராக, தேவனுடைய இரகசியங்களின் உண்மையுள்ள உக்கிராணக்காரராயிருங்கள். (1கொரி.4:1,2)

அதாவது, ஆத்துமாக்களுக்கு பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் அவர்களுக்கு மறைத்துவைக்காமல், வெளியரங்கமாக உபதேசம்பண்ணுங்கள். (அப்.20:20,21)

அதாவது, தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் மறைத்துவைக்காமல், எல்லாவற்றையும் ஜனங்களுக்கு அறிவித்து, எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி, சுத்தமாயிருங்கள். (அப்.20:26,27)

பெற்ற கிருபை வரங்களை பயன்படுத்தி ஊழியத்தை அபிவிருத்திப்பண்ணுங்கள்!* (மத்.25:14-18)

தேவன் உங்களுக்கு அருளிய கிருபையை விருதாவாக்காமல், அதிகமாய்ப் பிரயாசப்படுங்கள். (1கொரி.15:10)

உங்கள் இனத்தாருக்குள்ளே வைராக்கியம் எழும்பி, அவர்களில் சிலர் இரட்சிக்கப்படும்படிக்கு, பிறவினத்தாரில் அநேகரை விசுவாசத்துக்குள் நடத்துங்கள். (ரோமர் 11:13,14)

எந்த மனுஷனுக்கும் கிறிஸ்து இயேசுவையே அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம்பண்ணி, கிறிஸ்துவுக்குள் தேறினவனாக நிறத்தும்படிக்கு, உங்களுக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுங்கள். (கொலோ.1:28,29)

விவாகம்பண்ணாதிருத்தல், விசுவாசிகளும் சத்தியத்தை அறிந்தவர்களும் ஸ்தோத்திரத்தோடே அநுபவிக்கும்படி தேவன் படைத்த போஜனபதார்த்தங்களை விலக்குதல் போன்ற அற்ப பிரயோஜனமுள்ள சரீரமுயற்சிகளுக்கு ஜனங்களை விலக்கி, இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் பிரயோஜனமுள்ள தேவபக்திக்கேதுவானவைகளைக் கட்டளையிட்டுப் போதித்துக்கொண்டிருங்கள்! (1தீமோ. 4:1-11)

வேதத்தை வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாயிருங்கள். (1தீமோத்.4:13)

உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும்,

சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள். (1பேதுரு 5:2,3)

உங்களுக்கு அளிக்கப்பட்ட வரத்தைப் பற்றி அசதியாயிராமல், நீங்கள் தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி அவைகளையே சிந்தித்துக்கொண்டு, அவைகளிலே நிலைத்திருங்கள். (1தீமோ.4:14,15)

அநேகத்தின்மேல் அதிகாரிகளாயிருப்பீர்கள்!
கொஞ்சத்திலே உண்மையாயிருக்கிற உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரராகிய உங்களை, எஜமான் அநேகத்தின்மேல் அதிகாரியாக வைப்பார். தமது சந்தோஷத்திற்குள் பிரவேசிக்கவும் செய்வார். (மத்.25:20-23)

நல்ல போராட்டத்தைப் போராடி, ஓட்டத்தை முடித்து, விசுவாசத்தைக் காத்துக்கொள்ளுகிற உங்களுக்காக நீதியின் கிரீடம் வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாக கர்த்தர் அந்நாளிலே அதை உங்களுக்குத் தந்தருளுவார். (2தீமோ.4:7,8)

உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை மேய்த்து, மனப்பூர்வமாயும், உற்சாக மனதோடும், மந்தைக்கு மாதிரிகளாகவும் கண்காணிப்புச் செய்கிற நீங்கள்,

பிரதான மேய்ப்பர் வெளிப்படுத்தும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள். (1பேதுரு 5:2-4)

க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920


========================
வேதாகம ஊழியரே! (பகுதி 3)
=========================
பொல்லாத மற்றும் சோம்பலான ஊழியராய் இராதீர்!

நாம் செய்யவேண்டிய வேலைக்கேற்ற கிருபையையே தேவன் நமக்கு கொடுத்திருக்கிறார் என்பதை நம்புங்கள்!* (மத்.25:15)

கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவரவருக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது. (எபே.4:7)

ஒருவரும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவரவருக்குத்தேவன் பகிர்ந்தவிசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவராய் எண்ணக்கடவோம்!
(ரோமர் 12:3)

அதாவது, நாம் உண்மையில் இருப்பதை விட நாம் சிறந்தவர் அல்லது முக்கியமானவர் என்று நினைக்கவேண்டாம். நமக்கு அளிக்கப்பட்ட கிருபைக்கும், நம் செய்கைக்கும் தக்கதாக நம்மைப் பற்றி சரியாக சிந்திப்போம். நம் ஒவ்வொருவருக்கும் தேவன் குறிப்பிட்ட அளவு விசுவாசத்தை பகிர்ந்தளித்து, காரியங்களைச் சிறப்பாகச் செய்யும்படி செய்திருக்கிறார். (ரோமர் 12:3)

"தங்களைத்தாங்களே மெச்சிக்கொள்ளுகிற சிலருக்கு நாங்கள் எங்களைச் சரியாக்கவும் ஒப்பிடவும் துணியமாட்டோம். தங்களைக்கொண்டு தங்களை அளந்துகொண்டு, தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்ளுகிற அவர்கள் புத்திமான்களல்ல. நாங்கள் அளவுக்கு மிஞ்சி மேன்மை பாராட்டாமல், உங்களிடம்வரைக்கும் வந்தெட்டத்தக்கதாக, தேவன் எங்களுக்கு அளந்து பகிர்ந்த அளவுப்பிரமாணத்தின்படியே மேன்மைபாராட்டுகிறோம். உங்களிடத்தில் வந்தெட்டாதவர்களாய் நாங்கள் அளவுக்கு மிஞ்சிப்போகிறதில்லை. நாங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து உங்களிடம் வரைக்கும் வந்தோமே. எங்கள் அளவைக் கடந்து மற்றவர்களுடைய வேலைக்குட்பட்டு மேன்மை பாராட்டமாட்டோம்" என்று பவுல் சொல்லுகிறதை கவனியுங்கள்.
(2கொரி. 10:12-15)

பிறருக்கு அளிக்கப்பட்டுள்ள கிருபைக்குறித்து பொறாமைப்படாதீர்கள்!

பிறர் செய்யவேண்டியப் பணிக்கேற்ப அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கிருபை நமக்கு கொடுக்கப்படவில்லை என்பதற்காக விசனப்பட்டு, நமக்கு அளிக்கப்பட்டுள்ள கிருபையை நாம் வீணடிக்கக்கூடாது! (மத்.25:15,18)

"தேவன் அவனவனுக்குப் பகிர்ந்ததெப்படியோ, கர்த்தர் அவனவனை அழைத்ததெப்படியோ, அப்படியே அவனவன் நடக்கக்கடவன்" என்று பவுல் சொல்லுகிறதை கவனியுங்கள்.
(1கொரி.7:17)

"அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள். ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன். ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படி செய்யக்கடவன். எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்துமூலமாய்த் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக" என்று பேதுரு சபையாருக்கு போதிக்கிறதில் ஊழியர்களாகிய நமக்கும் பாடம் உண்டு. (1பேதுரு 4:10,11)

அதிகக் கிருபை பெற்றவராயினும், குறைவாகக் கிருபை பெற்றவராயிலும், நாம் எதை செய்தாலும் எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்துமூலமாய்த் தேவன் மகிமைப்படும்படியே செய்யவேண்டும் என்கிறதை மறந்துவிடாதீர்கள்.

"வார்த்தைகளினாலாவது கிரியைகளினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்" என்று பவுல் கொலோசெ சபையாருக்கு சொல்லுகிறது நமக்கும் பொருந்தும்!
(கொலோ. 3:17)

உங்களை பிறருக்கு சமமாய் நடத்தவில்லை என்று எஜமான்மேல் வருத்தப்படாதீர்கள்!

பிறருக்கு ஐந்து, இரண்டு தாலந்து என்று கொடுத்த எஜமான், நமக்கு ஒரு தாலந்து கொடுத்து, அவர்களிலும் நம்மை சிறுமைப்படுத்திவிட்டதாக அவர்மேல் வருத்தம் கொள்ளவேண்டாம்.
    (மத்.25:15)

மற்றவரிலும் நமக்கு குறைந்த கிருபை அளிக்கப்பட்டதற்காக கசப்படைந்து, எஜமானின் வேலையை செய்ய மனமற்றவராயிருந்து, கணக்கு கேட்கும் எஜமானை, "ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனுஷன்" என்று நாம் குற்றப்படுத்தவேண்டாம். (மத்.25:24,25)

ஒன்றையும் நம்மிடத்தில் கொடாமல், ஒன்றை நம்மிடத்தில் எதிர்பார்க்கிறவரல்ல நமது எஜமான் இயேசுகிறிஸ்து!

ஒரு தாலந்தை நமக்கு கொடாமல், மேலும் ஒரு தாலந்தை நம்மிடம் அவர் எதிர்பார்க்கிறவரல்ல!

கிருபையை போக்கடித்து அழிவை சந்திக்காதீர்கள்!
மற்றவருக்கு அளிக்கப்பட்ட கிருபை, வசதி, வாய்ப்புகள் நமக்கு அளிக்கப்படவில்லை என்பதற்காக, நமக்கு அளிக்கப்பட்ட கிருபையை பயன்படுத்த எந்த முயற்சியும் எடுக்காமல், பிரயோஜனமற்ற ஊழியராகி, இருளிலே தள்ளப்பட்டு, அழுகையையும் பற்கடிப்பையும் அறுவடைசெய்யாதிருப்போமாக! (மத்.25:26-30)

நமக்கு கொடுக்கப்பட்டுள்ள ஒரு தாலந்தை இரட்டிப்பாக்கினோமானால், இரண்டு தாலந்தை நான்காகவும், ஐந்து தாலந்தை பத்தாகவும் மாற்றினவர்களுக்கு கொடுக்கும் அதே கனத்தையே எஜமான் நமக்கும் கொடுப்பார் என்பதில் ஐயமில்லை! (மத்.25:19-23)

நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள வேலை சிறிதாயினும் அதை சிறப்பாக செய்து, பெரிய வேலையை சரியாய் செய்தவர்களுக்கு இணையான மகிமையை, மகிழ்ச்சியை அடையப் பிரயாசப்படுவோம்.

மற்றவரின் தாலந்துகளைக் குறித்து பொறாமைப்பட்டு, நமக்குக் கொடுக்கப்பட்டத் தாலந்தை புதைத்துவைத்து, எஜமான்மேல் உள்ள எரிச்சலை வெளிப்படுத்தும் பொல்லாத ஊழியராயும் (மத்.25:15,18,24,25), ஒரு தாலந்தை இரட்டிப்பாக்க எந்த முயற்சியும் எடுக்காத சோம்பலான ஊழியராயும் (மத்.25;26,27) இருப்பது நமக்கு ஆபத்தாகும்! (மத்.25;28-30)

"சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை. அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது. சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ. நான் உற்சாகமாய் அப்படிச் செய்தால் எனக்குப் பலன் உண்டு. உற்சாகமில்லாதவனாய்ச் செய்தாலும், உக்கிராண உத்தியோகம் எனக்கு ஒப்பவிக்கப்பட்டிருக்கிறதே" என்று உண்மையும் உத்தமமுமான ஊழியர் பவுல் சொல்லுகிறதிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்வோமாக! (1கொரி.9:16,17)

க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.