Type Here to Get Search Results !

Psalm 45-49 | கனம் பொருந்தின மனிதர்களும் அறிவில்லாமல் அழிந்து போகிறார்கள் | Winds Blow From All Four Directions | பிரசங்க குறிப்புகள் | Jesus Sam

சங்கீதம் 45 - 49

❎ *கனம் பொருந்தின மனிதர்களும் அறிவில்லாமல் அழிந்து போகிறார்கள்* ❎




☄️ *“கனம் பொருந்தினவனாயிருந்தும் அறிவில்லாத மனுஷன் அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்.”* (அதிகாரம் 49:20).




⚡ சங்கீதம் 49 ஒரு பிரசங்கம். *இவ்வுலகின் செல்வத்தை நம்பி வாழ்வது புத்திசாலித்தனம் அல்ல* என்பதை இவ்வுலக மனிதர்களுக்குக் கற்பிப்பதே இந்தப் பிரசங்கத்தின் நோக்கமாகும். மேலும், துன்மார்க்கரின் செல்வத்தால் ஏற்படும் வேதனையை வலியுறுத்தி, கஷ்டங்களை எதிர்கொள்ளும் போது தேவனுடைய மக்கள் *தேவனையே சார்ந்திருக்க* ஊக்குவிக்கிறது.




⚡ *செல்வம் உள்ளவர்களை உலகம் கனம் பொருந்தினவர்களாகப் பார்க்கிறது.* ஆனால் பணத்தால் ஒரு மனிதனை அழிவிலிருந்து காப்பாற்ற முடியாது. *தேவனைப் புறக்கணித்து, செல்வத்தை நம்பியிருப்பவர்கள் அறிவில்லாதவர்கள்* என்று வேதம் வலியுறுத்துகிறது.




⚡ சாலொமோனின் வார்த்தைகள்: *“மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு; இவைகள் சாகிறதுபோலவே இவர்களும் சாகிறார்கள்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைப்பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே.”* (பிரசங்கி 3:19). மனித சரீரத்தைப் பொறுத்தவரை இது உண்மையாக இருந்தாலும், ஆத்துமாவைப் பொறுத்தவரை இது உண்மையல்ல. மரணத்திற்குப் பிறகு, ஒவ்வொருவரும் தேவனுடைய நியாயத்தீர்ப்பை எதிர்கொள்கிறார்கள். *"ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது."* (எபிரெயர் 9:27) என்று வேதம் போதிக்கிறது.




⚡ இரட்சிக்கப்படாதவர்கள், பணக்காரர்களாக இருந்தாலும் சரி ஏழைகளாக இருந்தாலும் சரி, நித்திய தண்டனையைப் பெறுகிறார்கள் (யோவான் 3:36). ஆனால் கிறிஸ்து இயேசுவில் விசுவாசம் வைத்து இரட்சிக்கப்படுபவர்கள் நித்திய ஜீவனைப் பெறுகிறார்கள் (யோவான் 3:16). இருப்பினும், இரட்சிக்கப்பட்ட அனைவரும் தேவனிடம் தங்களைப் பற்றி கணக்குக் கொடுக்க வேண்டும். *"சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்."* (2 கொரிந்தியர் 5:10). இந்த உலகத்தின் செல்வத்திற்கு நித்தியத்தில் எந்த மதிப்பும் இருக்காது. கிறிஸ்துவுக்காக நாம் செய்த நற்கிரியைகள் மிகவும் மதிக்கப்படும்.




⚡ மரணத்திற்குப் பிறகும் வாழ்க்கை இருப்பதாக சங்கீதக்காரன் நம்பினான். செல்வம் எவ்வளவு நிலையற்றது என்பதையும் அது எவ்வாறு தண்டனையிலிருந்து பாதுகாக்கப்பட உண்மையிலேயே உத்தரவாதம் அளிக்க முடியாது என்பதையும் அவன் அறிந்திருந்தான். எனவே அவன் தேவன் மீது நம்பிக்கை வைத்து, *"ஆனாலும் தேவன் என் ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார்." (சங்கீதம் 49:15) என்று அறிவித்தான்.




⚡ அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதிய வார்த்தைகள்: *"இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும் கட்டளையிடு."* (1 தீமோத்தேயு 6:17). தேவன் நமக்கு நித்திய ஜீவனை மட்டுமல்ல, தற்போதைய உலகில் தேவையான அனைத்து நன்மைகளையும் தருகிறார். நாம் செல்வத்தில் நம்பிக்கை வைக்காமல், அதைக் கொடுக்கும் ஆண்டவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.




🔹 **நாம் உலகின் செல்வத்தை விட கர்த்தரையே நம்பியுள்ள அறிவுள்ள மனிதர்கள் என்று நம்மைக்குறித்து உண்மையாக சாட்சி சொல்ல முடியுமா?*




✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:




1️⃣ *தேவனைப் புறக்கணித்து, செல்வத்தை நம்பியிருப்பவர்கள் அறிவில்லாதவர்கள் என்று வேதம் வலியுறுத்துகிறது.*

2️⃣ *இந்த உலகத்தின் செல்வத்திற்கு நித்தியத்தில் எந்த மதிப்பும் இருக்காது.*

3️⃣ *தேவன் நமக்கு நித்திய ஜீவனை மட்டுமல்ல, தற்போதைய உலகில் தேவையான அனைத்து நன்மைகளையும் தருகிறார்.*

4️⃣ *உண்மையான அறிவு என்பது ஐசுவரியத்தை விட ஐசுவரியத்தை அருளும் ஆண்டவர் மீது நம்பிக்கை வைப்பதாகும்.*

Dr.எஸ்.செல்வன்

சென்னை



*சங்கீதம் 45 -49*




*கிருபையில் ஐசுவரியமுள்ள*

*தேவன்*..

*சங்கீதம் 46*







பரிசுத்த வேதாகமம்…தேவனுடைய பிள்ளைகளுக்கு

எந்தவித ஆபத்தும் வராது என்று கூறவில்லை..

ஒரு தேவ பிள்ளைக்கு..

தேவனைக் குறித்த சரியான அறிவுடன்..அவரோடுள்ள உறவும் சரியாக இருந்தால், இந்த உலகிலே ..இயற்கையின் மூலம் ஏற்படக்கூடிய பூமியதிர்ச்சி, கடல் கொந்தளிப்புகள்.. மனிதர்கள் மூலம் வரக்கூடிய கலகங்கள், யுத்தங்கள்..போன்றவற்றினால் இந்த உலகமே தலைகீழாகப் போனாலும்.. அந்த தேவ பிள்ளையை அசைக்கவும் முடியாது, அமிழ்ந்துபோகச் செய்யவும் முடியாது.

காரணம் எந்தச் சூழ்நிலையிலுமிருந்தும் பாதுகாக்கும் தேவன்

தன்னோடிருக்கிறார் என்ற

நம்பிக்கையின் நிச்சயம்..

அவர்களுக்கு உண்டு..




சீஷர்கள் ,கலிலேயாக் கடலில் படகிலே சென்றபோது.. அவர்களுடன் இயேசு கிறிஸ்துவும் இருந்தார்.. ஆனால் அவர் நித்திரையாக இருந்தார் .அப்போது

பெருங்காற்று உண்டாகி.. படகு நிரம்பத்தக்கதாக அலைகள் அதன் மீது மோதியபோது, ஆண்டவரே இரட்சியும் நாங்கள் அமிழ்ந்து போகிறோம் என்று சீஷர்கள் கூக்குரலிட்டார்கள்.

இயேசு கிறிஸ்துவுக்கு புயலை அமர்த்துவதைவிட.. சீஷர்களை அமைதிப்படுத்துவதுதான்

பெரிய காரியமாக இருந்தது.

( மாற்கு 4 : 35-41 )




*பிரியமானவர்களே..இந்த* *உலகிலே,நாம் மலைபோல* *நம்பினவர்கள் நம்மைக்* *கைவிட்டாலும்*..

*மறுபடியும் நாம் சுகம்* *பெறுவோமா என்ற நிலையில்* *நமது பெலவீனங்கள் இருந்தாலும்*,

*நமது வருமானங்கள் யாவும்* *தடைபட்டாலும்*,

*நமது நியாயங்கள் எடுபட்டு*

*நாம் தோற்றுப்போனாலும்*..

*ஆண்டவர்மீதுள்ள* *நம்பிக்கையில்*..

*நாம் இளைப்பாறுவோம்*..

*சேனைகளின் கர்த்தர்* *நம்மோடிருக்கிறார்*..

*யாக்கோபின் தேவன் நமக்கு* *உயர்ந்த அடைக்கலமானவர்*

*என்று..விசுவாச* *அறிக்கை செய்வோம்*..

( சங்.46 : 7,11 )




*யாக்கோபு ஒரு எத்தன்* ..

*தன் சகோதரனை வஞ்சித்தவன்*..

*தேவன் அவனை யாப்போக்கு*

*ஆற்றங்கரையில் சந்தித்து* *அவனை இஸ்ரவேலாக* *மாற்றும்வரை*..

*அவனிடம் எத்தகைய* *நன்மையான காரியங்களும்*

*காணப்படவில்லை*..

*ஆனால்,தேவன் தன்னை*..

*யாக்கோபின் தேவன்*..

*இஸ்ரவேலின் கர்த்தர் என்று*

*இந்த உலகத்திற்கு* *வெளிப்படுத்தச்* *சித்தங்கொண்டாரே*..

*அது மாபெரும்* *கிருபையல்லவா*..?

*அந்தக் கிருபையில்* *ஐசுவரியமுள்ள தேவன்*..

*அவரையே நம்பியிருக்கும்*

*அவருடைய பிள்ளைகளாகிய*

*நம்மை*..*ஆபத்துக் காலங்களில்* *கைவிடுவாரா*..?

*நிச்சயம் கைவிடவேமாட்டார்*

*நமக்கு அநுகூலமான* *துணையாகவே இருப்பார்*..

ஆமென்.🙏
மாலா டேவிட்


 சங்கீதம்.45:8.

🌺🌺🌺🌺🌺

கடவுள் நம்மை மகிழ்விக்கிறார்.

நம் அன்பினால் கடவுளை மகிழ்விக்க முடியும்.

நம்முடைய துதிகளும் அவரை மகிழ்விக்கின்றன.

நாம் நம்முடைய நேரத்தையும் திறமைகளையும் அவருக்கு செலவிடுவதைப் பார்ப்பதில் அவர் நம்மை நேசிக்கிறார்.

அவருடைய பரிசுத்தவான்களின் தாழ்மையான காணிக்கைகள் அவருக்கு மிகவும் ஏற்றுக்கொள்ளத்தக்கவைள் ஆகும்.

.நமது எதிரிகளை மன்னிப்போம்.,

இதனால்

நாம் கிறிஸ்துவை மகிழ்விக்கிறோம்.

ஏழைகளுக்கு நமது பொருட்களை விநியோகம் செய்யும்போது கடவுள் மகிழ்ச்சியடைகிறார்.

நாம் நமது அன்பான கர்த்தரை நமது இதயத்தில் புகழும்போது நாம் நறுமணமாக திகழ்கிறோம்.

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

மேபி சுந்தர்


சங்கீதம்: 45-49

💐💐💐💐💐💐

*ஞானிகளும் மரித்து, அஞ்ஞானிகளும் நிர்மூடரும் ஏகமாய் அழிந்து, தங்கள் ஆஸ்தியை மற்றவர்களுக்கு வைத்துப் போகிறதைக் காண்கிறான்*.

*தங்கள் வீடுகள் நித்திய காலமாகவும் தங்கள் வாசஸ்தலங்கள் தலைமுறை தலைமுறையாகவும் இருக்குமென்பது அவர்கள் உள்ளத்தின் அபிப்பிராயம்; அவர்கள் தங்கள் நாமங்களைத் தங்கள் நிலங்களுக்குத் தரிக்கிறார்கள்*.

*ஆகிலும் கனம் பொருந்திய வனாயிருக்கிற மனுஷன் நிலைத்திருக்கிற தில்லை; அழிந்து போகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்*.

(சங்கீதம்: 49:10-12)

▪️ மரிக்கும் போது இவ்வுலகச் செல்வம் அனைத்தையும் விட்டுவிட்டு வெறுமையாகவே செல்ல வேண்டும்.

▪️இவ்வுலகில் அரசனாக இருந்து பாதாளத்திற்கு செல்கிறவன், அங்கு அரசனாக நடத்தப்படாமல் வேதனை படுவான்.

▪️அதிகாரம், செல்வாக்கு,புகழ் யாவும் இவ்வுலக வாழ்க்கைக்குப்பின் பயன்படாது.‌

*நித்தியத்திற்கென்று செலவிட்டவை மட்டுமே பயன் தரும்*. எனவே இவ்வுலகில் வாழும் பொழுதே நித்திய வாழ்விற்கான ஆயத்தத்தோடே வாழ்வோமாக.

▪️நமது பொருளை அவருடைய பணிக்கென்று செலவுசெய்தும், நற்கிரியைகள் நடப்பித்தும் பரலோகத்தில் பொக்கிஷங்களை சேர்த்து வைப்போமாக.

*பரலோகத்திலே உங்களுக்கு பொக்கிஷங்களை சேர்த்து வையுங்கள்* என்று இயேசு (மத்தேயு: 6:20) கூறியுள்ளார்.

*ஆமென்*

✍️ பவானி ஜீஜா தேவராஜ், சென்னை.


*ஒரு நதியுண்டு*

~~~~~~~~~~~~




சங்கீதம் 46: 4, 5. *ஒரு நதியுண்டு. அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர் வாசம் பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும்.*




*தேவன் அதின் நடுவில் இருக்கிறார். அது அசையாது. அதிகாலையிலே தேவன் அதற்கு சகாயம் பண்ணுவார்*




1. *நாமே இந்த நகரம், பரிசுத்த ஸ்தலம்*. ஏசாயா 60: 14.




2. *இந்த நதியும், அதின் நீர்க்கால்களும் பரிசுத்த ஆவியானவர்*




3. இந்த நதியின் தண்ணீராகிய ஜீவ தண்ணீர் நம்மில் ஓடும் போது, உலாவும் போது *நம் வாழ்க்கை செழிப்பாகும்*. புஷ்பங்கள் மலரும். *நம் சாட்சியின் வாசனை வீசும். காய்கள், கனிகள் உருவாகும். அநேக ஆத்துமாக்களை போஷி க்கும்.*




4. இந்த நதி (ஆவியானவர் ) *இந்த நகரத்தை நம் வாழ்க்கையை சந்தோஷிப்பிக்கும்*.




5. நம் நகரத்தின் நடுவில் ஆவியானவர் இருக்கிறார். ஆம், உலாவுகிறார், அசைவாடுகிறார். அவர் நம் நகரத்தில் இருக்கும் போது, *அது அசையாது. அதிகாலையில் இந்த நகரத்திற்கு சகாயம் பண்ணுகிறார்.*




ஆம், ஆவியானவர் நம் நடுவில் இருக்கும் போது, என்ன பாடுகள், பிரச்சனைகள் நம் வாழ்க்கையில் வந்தாலும் *நாம் அசைக்கப்பட மாட்டோம். ஏனென்றால் *ஆவியானவர் நமக்கு சகாயம் பண்ணுகிறார்.* எவ்வளவு பெரிய ஆசீர்வாதம் பாருங்கள்!




ஆம், ஆவியானவர் நம் வாழ்க்கையாகிய நகரத்தில் நதியாக ஓடி நம்மை செழிப்பாக்குவாராக. *இந்த ஜீவ தண்ணீர் நம்மை சந்தோஷிப்பிக்கட்டும்*. அப்போது உலகம், மாம்சம், பிசாசு *நம்மை அசைக்க முடியாது*. நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இந்த நதி ஓடட்டும், நம் ஆத்துமாவை செழிப்பாக்கட்டும். *ஜீவ தண்ணீர் நித்திய ஜீவனை நமக்கு தந்து நம்மை சந்தோஷிப்பிக்கட்டும்*. ஆமென். அல்லேலூயா.


*Dr.Padmini Seĺvyn*




🎯தலைப்பு:

🎈நான்கு திசையிலுமிருந்து வீசும் காற்றுகள்




🎯இன்றைய வசனம் :

🎈கீழ் காற்றினால் தர்ஷீசின் கப்பல்களை நீர் உடைக்கிறீர்.

சங் 48:7




🎯தியானம்:




🔸இஸ்ரவேலரை பொறுத்தவரை 4 திசையிலிருந்து வரும் காற்றுகளும் அவர்கள் காலநிலையுடன் தொடர்புடையவை.

🔸அவை வாழ்க்கைக் கால நிலையுடன் ஒப்பிடப்படுவது முண்டு.




1️⃣கீழ்க்காற்று (கிழக்குக் காற்று ):

- இது கொண்டல் காற்று

- பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும்

- பாலைவனம் வழியாக வந்த இந்த வறண்ட காற்று யோபின் பிள்ளைகளைக் கொன்றது. (யோபு 1: 19)

- செங்கடலை பிளந்தது (யாத் 14:21)

- இதை எரேமியா போருடன் ஒப்பிடுகிறார் ( எரே 18:17)

- இது எப்போதும் சோதனைக்கு அடையாளமாக கலக்கம், வறட்சி, சோர்வுகளை ஏற்படுத்துகிறது.

(ஆதி 41:6, யோனா 4:8, ஓசி 13: 15)




2️⃣மேற்கு காற்று:




- இது கொண்டலுக்கு எதிரானது.

- மத்திய தரைக்கடலிலிருந்து வீசும்

- இது கீழ் காற்று கொண்டு வந்த வெட்டுக்கிளிகளை வாரிச் சென்றது. (யாத் 10: 13, 19)




3️⃣வடக்குக் காற்று:




- வாடைக்காற்று, குளிருடையது.

- தற்காலத்தில் அரேபியர் இதனை நச்சுக்காற்று (சிம்மீம்) என அழைப்பர். தலைவலி, காய்ச்சலை ஏற்படுத்தும்..




4️⃣தெற்குக் காற்று:




-தென்றல் காற்று

- வசந்தத்தின் தூதுவன்

- இது பவுலின் கப்பற் பயணத்திற்கு உதவியது (அப் 27:13)

- மேட்டுப் பகுதிகளான சீனாய் , அரேபியா வழி வரும் இது சிறந்த ஆசீர்வாதங்களை உணர்த்தி நிற்பது.




🎯சிந்தனைக்கு :




🔸காலம் என்றும் கொண்டலுக்கோ , வாடைக்கோ மட்டும் சொந்தமானதல்ல.




🔸தேவன் எல்லாவற்றையும் தனக்குள் அடக்கி வைத்துள்ளார்


எனவே,

🔸கீழ் காற்றினால் தீய்ந்து போகாமல் தரித்திருப்போம்..

🎈தேவன் தென்றலாய் வருவார்

ஆமென்🙏

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.