Type Here to Get Search Results !

Psalm 17-20 PRONOUNCING THE PRIESTLY BLESSING | கண்மணியைப் போல என்னைக் காத்தருளும் | பிரசங்க குறிப்புகள் | Jesus Sam

சங்கீதம் 17 - 20

படித்து தியானம் செய்யலாம்
*சங்கீதம் 20:1-4*
*PRONOUNCING THE PRIESTLY BLESSING*
*ஆசாரியத்துவ ஆசீர்வாதத்தை அறிவித்தல்*




📝 பழைய ஏற்பாடில் , *ஆரோன், மோசே மற்றும் தாவீது* போன்ற ஆசாரியர்களும் தலைவர்களும் சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் மக்களை அடிக்கடி ஆசீர்வதித்தனர் ( *யாத். 39:43; எண் 6:24-26; 1 நாளா 16:2*)




📝 இன்றைய பத்தியில், பல பேச்சொலிகளை கேட்கிறோம்:

🗣️ ஒரு ஆசாரியர் ( *வ 1-4* )

🗣️ ஒரு ராஜா ( *வ 6-8* )

🗣️ ஆசாரியர் மற்றும் மக்கள் ( *வ 5,9* )




📝 ஆசாரியத்துவ ஆசீர்வாதம்:

📍 *கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்டு உம்மைப் பாதுகாப்பார்* (வ. 1)

📍 *கர்த்தர் உமக்கு ஒத்தாசையனுப்பி, உம்மை ஆதரிப்பார்.* (வ. 2)

📍 *கர்த்தர் உமது காணிக்கைகளையெல்லாம் ஏற்றுக்கொள்வார்* (வ. 3)

📍 *கர்த்தர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளுவார்.* (வ. 4)




🙋‍♂️🙋‍♀️ பிரியமான திருச்சபையே, இந்த ஆசாரியத்துவ ஆசீர்வாதம் இன்று நமக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க முடியும், இப்போது *விசுவாசிகள் அனைவரும் தேவனுடைய ஆசாரியர்களாக இருக்கிறோம்* (1 பேதுரு 2:9)

📍 பிறர் மீது ஒரு ஆசீர்வாதத்தைப் பேசுவது அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஊக்கம். ஆனால் அது தேவனை கட்டுப்படுத்தவோ கையாளவோ ஒரு வழி அல்ல என்பதை நினைவில் கொள்வோம்.

📍 ஆசாரியத்துவ ஆசீர்வாதம் என்பது ஒரு ஜெபத்தைப் போன்றது, தேவனுடைய வல்லமையை நினைவூட்டுவது மற்றும் மற்றொரு நபரிடம் நாம் எதிர்பார்ப்பதை அவர் கொண்டுவருவதற்கான வேண்டுகோள்.




தேவனுக்கே மகிமை 🙌

✍️ *மார்க் போஜே*

அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳

தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்


💠 *நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம்* 💠




☄️ *“சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம். அவர்கள் முறிந்து விழுந்தார்கள்; நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம்.”* (சங்கீதம் 20:7-8).




🔹 அவர்கள் மேன்மைபாராட்டுவதன் அடிப்படையில், தாவீது *உலக மக்களுக்கும் தேவ மக்களுக்கும் உள்ள வித்தியாசத்தை வெளிப்படுத்துகிறான்.* உலக மக்கள் *இரதங்களாலும் குதிரைகளாலும் அளவிடப்படும் மனித பலத்தை நம்பியிருக்கிறார்கள்.* தேவபக்தியுள்ள ஜனங்கள் *கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுகிறார்கள்.* நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை நம்புவது என்பது தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட குணாதிசயங்களை நம்புவதாகும். ஒடுக்கப்பட்ட இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்து, அன்றைய காலத்தின் ஆதிக்க ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் அவர்களை ஒரு தேசமாக மாற்றிய கர்த்தரில் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும்.




🔹 தங்கள் இரதங்கள் மற்றும் குதிரைகள் மீது நம்பிக்கை வைக்கும் உலக மக்கள் *முறிந்து விழுந்தார்கள்* என்றும், நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை நம்புகிற தேவபக்தியுள்ள ஜனங்கள் *எழுந்து நிமிர்ந்து நிற்கிறார்கள்* என்றும் தாவீது அறிவிக்கிறான்.




🔹 கர்த்தர் சகரியாவுக்கு வெளிப்படுத்தினார்: *"செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.”* (சகரியா 4:6). தேவனுடைய ஆவியின் மூலம் ஒருவர் பெறும் பலத்தின் மூலம் மட்டுமே வெற்றி உறுதி செய்யப்படுகிறது, மனித பலத்தினாலும், பராக்கிரமத்தினாலும் அல்ல.




🔹 ஐசுவரியத்தை நம்புகிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது கடினமாக இருக்கும் என்று இயேசு தம் சீடர்களுக்குக் கற்பித்தார். இயேசுவின் வார்த்தைகள்: “பிள்ளைகளே, *ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது!”* (மாற்கு 10:24). தேவனுடைய ராஜ்யத்தில், உலகத்தால் அற்புதமான ஆசீர்வாதமாகவும் பாதுகாப்பின் ஆதாரமாகவும் கருதப்படுகிற ஐசுவரியம் பயனற்றதே.




🔹 கோலியாத்தின் மீது தாவீது பெற்ற வெற்றி, மாமிச வல்லமையை கர்த்தரின் நாமத்தின் மீதுள்ள நம்பிக்கையின் மூலம் வெற்றி பெற்றதற்கான சரியான எடுத்துக்காட்டாகும். தாவீது கோலியாத்தை நோக்கி சொன்ன வார்த்தைகள்: *"நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்.”* (1 சாமுவேல் 17:45).




🔹 ஆவிக்குரியப் போரில், நாம் மாம்சத்துக்கேற்ற பலத்தையும் ஞானத்தையும் சார்ந்திருக்கக் கூடாது. *நம்முடைய கர்த்தரும் தேவனுமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வரும் தேவபலத்தினால் மட்டுமே நாம் வெற்றிபெற முடியும்.* பவுல் திருச்சபைக்கு எழுதுகிறான்: *"எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.”* (2 கொரிந்தியர் 10:4).




💥 *நம்முடைய வெற்றிக்காக நாம் எதைச் சார்ந்து இருக்கிறோம்—தேவனுடைய பரிசுத்த ஆவி அல்லது நம்முடைய சொந்த ஞானம் மற்றும் பலம்?*




✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:




1️⃣ *தேவனுடைய ஆவியின் மூலம் ஒருவர் பெறும் பலத்தின் மூலம் மட்டுமே வெற்றி உறுதி செய்யப்படுகிறது, மனித பலத்தினாலும், பராக்கிரமத்தினாலும் அல்ல.*

2️⃣ *தேவனுடைய ராஜ்யத்தில், உலகத்தால் அற்புதமான ஆசீர்வாதமாகவும் பாதுகாப்பின் ஆதாரமாகவும் கருதப்படுகிற ஐசுவரியம் பயனற்றதே.*

3️⃣ *நம்முடைய கர்த்தரும் தேவனுமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வரும் தேவபலத்தினால் மட்டுமே நாம் வெற்றிபெற முடியும்.*

Dr எஸ் செல்வன்

சென்னை


👩‍🦯 தெய்வீக வழிகாட்டுதலில் நம்பிக்கை🧑‍🦯*




[ நாள் - 164] சங்கீதம் 17 - 20:




☄️சங்கீதம் 17 - 20, தெய்வீக பாதுகாப்பைத் தேடுதல், துன்ப காலங்களில் ஆறுதல் கண்டறிதல் மற்றும் தேவனுடைய உறுதியான அன்புக்கு நன்றியை வெளிப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கருப்பொருள்களைக் கையாள்கிறது.




1️⃣ *சங்கீதம் 17 - தெய்வீகப் பாதுகாப்பிற்கான பிரார்த்தனை*




🔹சங்கீதம் 17, எதிரிகள் மற்றும் அநியாய குற்றச்சாட்டுகளுக்கு எதிராகப் பாதுகாப்பிற்காக தேவனிடம் இதயப்பூர்வமான வேண்டுகோள்.

🔹சங்கீதக்காரன் தங்களுடைய சொந்த உத்தமத்தில் நம்பிக்கையை வெளிப்படுத்தி, தேவனுடைய நீதியில் அடைக்கலம் தேடுகிறான்.

🔹தேவனுடைய தெய்வீக நீதி வெல்லும், சங்கீதக்காரன் நியாயப்படுத்தப்படுவார் என்ற நம்பிக்கையே இந்த சங்கீதத்தின் அடிப்படையான செய்தியாகும்.




2️⃣ *சங்கீதம் 18 - துதி மற்றும் விடுதலையின் பாடல்கள்*




🔸சங்கீதம் 18 எதிரிகளிடமிருந்து கடவுள் விடுவித்ததற்காக நன்றியுணர்வின் கவிதை வெளிப்பாடு ஆகும்.

🔸இது தேவனுடைய வல்லமையையும் பராக்கிரமத்தையும் தெளிவாக சித்தரிக்கிறது, தேவனை ஒரு போர்வீரனுக்கு ஒப்பிட்டு, அவரை நம்புபவர்களை மீட்டு உயர்த்துகிறது.

🔸சங்கீதக்காரனின் வார்த்தைகள் தேவனுடைய வலிமையையும் உண்மையையும் கொண்டாடுகின்றன, தேவனுக்கும் அவருடைய உயிரினங்களுக்கும் இடையிலான பிரிக்க முடியாத பிணைப்பை வலியுறுத்துகின்றன.




3️⃣ *சங்கீதம் 19 - சிருஷ்டிப்பில் தேவனின் மகிமை*




🔺சங்கீதம் 19 தேவனுடைய சிருஷ்டிப்பின் அற்புதங்களை தெய்வீக சட்டத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதலுடன் அழகாக இணைக்கிறது.

🔺தேவனுடைய மகிமையை அறிவிக்கும் வானத்தையும் சூரியனையும் நட்சத்திரங்களையும் பார்த்து சங்கீதக்காரன் ஆச்சரியப்படுகிறான்.

🔺மேலும், சங்கீதக்காரன் தேவனுடைய சட்டத்தின் நற்பண்புகளைப் போற்றுகிறான், அதைப் பின்பற்றுபவர்களுக்கு ஞானத்தையும் மகிழ்ச்சியையும் அறிவொளியையும் கொண்டு வரும் அதன் திறனை ஒப்புக்கொள்கிறான்.




4️⃣ *சங்கீதம் 20 - வெற்றிக்காக தேவ நாமத்தில் நம்பிக்கை வைத்தல்*




▫️சங்கீதக்காரன் தேவனுடைய பெயரை அழைக்கிறான், நெருங்கி வரும் போர்களுக்கான உதவிக்காக அவர்களின் கூக்குரலுக்கு பதிலளிக்க தேவன் மீது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறான்.

▫️வெற்றி என்பது மனித பலத்தால் மட்டும் வருவது அல்ல, மாறாக தேவனுடைய வல்லமை மற்றும் மாறாத அன்பின் மீது நம்பிக்கை வைப்பதினால் வரும் என்பதை நினைவூட்டுகிறது.




♥️ *வாழ்க்கை பாடங்கள்*




💥இந்த சங்கீதங்கள் தெய்வீக பாதுகாப்பைத் தேடுவதன் முக்கியத்துவத்தை நமக்கு நினைவூட்டுகின்றன, விடுதலைக்கான நன்றியை வெளிப்படுத்துகின்றன, படைப்பின் அதிசயங்களைக் கண்டு வியப்படைகின்றன, தேவனுடைய இடைவிடாத ஆதரவில் நம்பிக்கை வைக்கின்றன.

*‼️ஆண்டவர் ஜீவிக்கிறார்! என் கன்மலைக்கு ஸ்தோத்திரம் ! கர்த்தரே என் இரட்சகராக உயர்ந்தவர்‼️*

பிரின்சஸ் ஹட்சன்
தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்


*வாய் மீறாதபடிக்கு தீர்மானம்*
~~~~~~~~~~~~~~~~~~~~

சங்கீதம் 17: 3. இங்கு தாவீது *என் வாய் மீறாதபடி தீர்மானம் பண்ணினேன்* என கூறுகிறார்.




1. நம்முடைய வாய், உதடு, நாவு நம் சரீரத்தில் முக்கியமான உறுப்புகள் ஆகும். *இருதயத்தில் நிறைவினால் வாய் பேசும்*. மத்தேயு 12: 34.

*தன் வாயை காக்கிறவன் தன் பிராணனை காக்கிறான்*. நீதிமொழிகள் 13: 3.

*அவனவன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்*. நீதிமொழிகள் 12: 14.

*நாம் பேசும் வார்த்தைகளை குறித்து நியாயதீர்ப்பு நாளிலே நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்*. மத்தேயு 12: 36. அப்படியானால் நாம் நம் வாயை எவ்வளவு கவனமாக காத்துக் கொள்ள வேண்டும்! ஆகவே தான் தாவீது தன் வாய் மீறாதபடி தீர்மானம் பண்ணுகிறார்.




2. அப்படியானால் வாயினால் நாம் கர்த்தருடைய வார்த்தைகளை எப்படி மீறுகிறோம்? *பொய் பேசுதல், புறங்கூறுதல், கெட்ட வார்த்தைகள், கசப்பான, கடினமான வார்த்தைகள், முறுமுறுப்பு, பிறரை நியாயம் தீர்க்கும் வார்த்தைகள், அவிசுவாசமான வார்த்தைகள், இச்சகம் பேசுதல், மேட்டிமையாய் பேசுதல்* ஆகிய எத்தனையோ வாயின் வார்த்தைகளால் நாம் பாவம் செய்கிறோம். ஆகவே நம் வாய் மீறாதபடி நாமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.




3. அப்படியானால் *நம் வாய் எப்போதும் கர்த்தரை துதிக்க வேண்டும். வசனத்தை விளம்ப வேண்டும். பிறர் காயங்கட்ட வேண்டும். பிறருக்கு ஆலோசனை வழங்க வேண்டும். விசுவாசத்தை பேச வேண்டும். புது பாடல்களை பாட வேண்டும். கர்த்தருக்கு மகிமை செலுத்த வேண்டும். மன்னிப்பை வழங்க வேண்டும். பிறருக்கு சமாதானத்தை கொடுக்க வேண்டும்.*




4. இன்று *நாமும் கூட நம் வாய் மீறாதபடி தீர்மானம் எடுப்போம்*. நம் வாயினால் பாவம் செய்யாதபடி, நம் வாயினால் கர்த்தரை துதிப்போம், ஸ்தோத்தரிப்போம், பாடி மகிமை படுத்துவோம். ஆமென், அல்லேலூயா.

*Dr.Padmini Seĺvyn*


*சங்கீதம் 17-20*




*👁️கண்மணியைப் போல என்னைக் காத்தருளும்.*




தாவீது இந்த சங்கீதத்தில், *தன்னை ஒடுக்குகிற துன்மார்க்கருக்கும், சூழ்ந்து கொண்டிருக்கிற பகைஞருக்கும், தன்னைத் தப்புவிக்கும்படி*, கர்த்தரிடம் வேண்டுகிறான். இது தாவீதுக்குக் கர்த்தர்மீதுள்ள அசைக்கமுடியாத நம்பிக்கையைக் காட்டுகின்றது.




*👁️நம் சரீர உறுப்புகளில் மிகவும் மென்மையான, கவனமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய உறுப்புகளில் ஒன்று "கண்மணி"*. நாம் கண்மணியை எப்படிப் பாதுக்கிறோமோ, அப்படியே கர்த்தர் நம்மைப் பாதுகாக்கிறார்.




*👁️அளவிடமுடியாத ஞானமுள்ள தேவன்,* கண்மணிகளை, நம் சரீரத்தின் மிக நேர்த்தியான, மிகுந்த பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்கிறார். *எருசலேம் மதில்களால் சூழ்ந்து, பாதுகாப்பாக இருப்பது போல், நம் கண்மணிகளும் எலும்புகள் சூழ, திரைக்குப் பின்னால், பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது.*




👁️தாவீது பெரிய வீரனாக இருந்த போதிலும், *தன் சுயபெலத்தின்மேல் நம்பிக்கை வைக்காமல்,* கர்த்தர் தன்னைப் பாதுகாக்கும்படி கூப்பிடுகிறார். ஏனென்றால் *நமக்குப் போராட்டம், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வான்மண்டலத்தின் பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் உண்டு‌.* (எபேசியர் 6:12).




👁️கண்ணில் தூசி விழுந்துவிட்டால், *நம் பாதுகாப்பு செயலிழந்து விட்டதாக* நினைக்கக்கூடாது. *உலகத்தில் நமக்கு உபத்திரவம் உண்டு.* (யோவான் 16:33). *கர்த்தருடைய பாதுகாப்பு, வெறும் கஷ்டம் வராமல் பாதுகாப்பதை விட மேலான நோக்கத்திற்காக உள்ளது.* அவரில் பெலப்பட, சில வேளைகளில் வலிகளின் ஊடாக நடத்திச் செல்லுகிறார். *நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது* (சங் 119:71) என்று உபத்திரவம் தனக்கு கர்த்தருடைய பிரமாணங்களைக் கற்றுத் தந்ததாக சங்கீதக்காரன் சொல்லுகிறான்‌.




👁️கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை வனாந்திரத்தில் பாதுகாத்த விதத்தை மோசே விவரிக்கும்போது, *"அவனைத் தமது கண்மணியைப்போலக் காத்தருளினார்"* என்று இதே உணர்வை வெளிப்படுத்துகிறார். (உபா 32:11).




👁️ஒருவேளை நாம் வேதனையான சூழ்நிலையில் இருந்தாலும், எதிரி நம்மைச் சூழ்ந்திருந்தாலும், நாமும் கர்த்தரை நோக்கி, *கண்மணியைப் போல என்னைக் காத்தருளும்* என்று ஜெபிக்கலாமே!
பிரேமா ராஜசிங்



📗 *சிறிய குறிப்பு* 📗




🍂 *சண்டை* 🍂




சங்கீதம் 18 தாவீதின் வாழ்க்கையில் கர்த்தர் கொடுத்த விடுதலையைக் குறிப்பிடுகிறது. சுவாரஸ்யமாக தாவீது சண்டை என்ற கடுமையான பிரச்சினையிலிருந்து தேவன் அவனை விடுவித்ததை குறிப்பிடுகிறான். *“ஜனங்களின் சண்டைகளுக்கு நீர் என்னைத் தப்புவித்து, (சங்‬ ‭18‬:‭43‬)* நீங்கள் எப்போதாவது சண்டையின் வேதனையை அனுபவித்திருக்கிறீர்களா? சண்டை சச்சரவுகளுடன் வாழ்வது என்னவென்று உங்களுக்கு தெரியுமா?




*சண்டை என்பது கடுமையான வாக்குவாதம், பகை, சச்சரவு அல்லது கருத்து வேறுபாடு.* சண்டை முக்கியமாக உறவுகளில் காணப்படுகிறது. சண்டை என்பது மனிதக் கண்களுக்குப் புலப்படாதது, ஆனால் அதை உணரவும் முடியும். *குடும்பங்களில் சச்சரவுகள் ஆழமான உணர்ச்சி வடுக்களை ஏற்படுத்துகின்றன*. சண்டை நம்பிக்கையையும் நல்லிணக்கத்தையும் அழிக்கிறது. *சண்டை, அமைதியைக் குலைக்கிறது* அதை நீண்ட காலம் எதிர்கொள்வது சோர்வை ஏற்படுத்தும்.




*சில சமயங்களில் நீங்கள் சச்சரவுகளுக்கு காரணமாக இல்லாமல் இருக்கலாம்*. தாவீது புகழப்பட்டபோது சவுல் அவனை வெறுக்க ஆரம்பித்தான். அவனது பொறாமை வேரூன்றி, பகைமையை உண்டாக்கியது. சவுல் தாவீதை ஒழிக்க பல நேரங்கள் முயற்சித்தான். *தாவீதின் வாழ்க்கையில் ஏற்பட்ட இந்தப் போராட்டத்தை தேவன் அறிந்திருந்தார்.* சச்சரவின் வலியை கடந்து செல்ல ஆண்டவர் அவனை அனுமதித்தார்.




உங்களால் *முடிந்தவரை அனைவருடனும் சமாதானமாக வாழ முயற்சி செய்யுங்கள்.* சமாதானமாக வாழ உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள். *அதற்குப் பிறகும் நீங்கள் சச்சரவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் போது, ​​காரியங்களை ஆண்டவரிடம் ஒப்படைக்கவும்.* சமாதானத்தின் தேவன், தம்முடைய சமாதானத்தினால் உங்களை நிரப்பி, உங்களைப் பாதுகாப்பாராக.

திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏻


*🌈சிப்பிக்குள் முத்து🌈*




இன்றைய வேத

வாசிப்பு பகுதி -

*சங் : 17 - 20*




*🍏முத்துச்சிதறல் : 164*




🍇🌽🍇🌽

அன்றியும் *அவைகளால்* உமது அடியேன் *எச்சரிக்கப்படுகிறேன்.*

(சங் - 19 : 11)

🌽🍇🌽🍇




*🫐எச்சரிக்கை செய்திகள் எங்கும் இக்காலத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.* அவரவர் தம் தம் ஆத்துமாவை காப்பாற்றி கொள்ளவேண்டியே அவை பறைசாற்றப்பட்டுக்கொண்டு வருகின்றதை நாம் அனைவரும் அறிவோம். *முற்காலங்களில்* திடீரென்று ஒரு *வாக்குரைஞர்* வருவார், *ஜனங்களை எச்சரிக்கை செய்வார்,* பின்பு கிளம்பி விடுவார்.




*👍தங்களது ஆத்துமாவை குறித்த கரிசனை உடையோர் மாத்திரமே இந்த எச்சரிக்கை செய்திகளை கவனித்து நடப்பர்.* பலர் இவ்வற்றை எல்லாம் ஒரு காதில் வாங்கி, மறு காதின் வழியே வெளியேற்றி விடுவதும் உண்டு.




🍒நாம் திசை மாறாமல் இருக்கும்படி,

🍒அல்லது நாம் ஒருவேளை அறியாமையினால் வழிதவறி இருக்கையில்,

🍒அல்லது நாம் வேண்டும் என்றே பிடிவாதமாக சில விஷயங்களில் இருக்கையில்,

🍒அல்லது நாம் அஜாக்கிறதையாய் இருக்கையில், *"கர்த்தர் நம் மேல் வைத்துள்ள தமது அன்பினை வெளிப்படுத்தும்படி, அவர் பிரயோகிக்கும் ஒரு ஆயுதம் தான் இந்த எச்சரிக்கைகள்" / எச்சரிக்கை செய்திகள்.*

இவை யார் மூலமும் எம் முன் வரலாம். இதில் சிறியோர், பெரியோர் என்னும் பாரபட்சமெல்லாம் இல்லாமல், *கர்த்தர் எவரை கொண்டும் எம்மை எச்சரிக்கலாம்.*




நம்மை எச்சரிக்கை செய்யும்படி.....

*கர்த்தர் பயன்படுத்தும் சில தளவாடங்கள் எவையெனில்,* 👇




🍉பெற்றோர்,

🍉உடன் பிறந்தோர், 🍉ஆசிரியர்கள்,

🍉அறிமுக மானோர், 🍉உறவினர்கள்,

🍉சபையார்,

🍉சில வேளைகளில் அக்கம் பக்கத்தினர், 🍉நமது எதிரிகள்,

🍉அரசாங்கம்,

*🍉வழி பிரயாணத்தில் எச்சரிக்கை பலகைகள்*

என....

*எவ்வகையிலும்எண்ணற்ற விதத்தில் இந்த எச்சரிக்கைகள் எமக்கு கொடுக்கப்படலாம்.*

கவனித்து நடந்து கொள்ளுவோமானால் ஆபத்துக்களில் இருந்து தப்பித்து கொள்ளலாம். இல்லையென்றால் இந்த எச்சரிக்கைகளை நாம் உதாசீன படுத்திய பாவத்தினிமித்தம் என்றாவது ஒரு நாள் *நெடுக போய் தண்டிக்க பட்டோராக, குழியில் விழுந்தோராக...படு கஷ்டமும், நஷ்டமும் கூட அடையலாம்.*




❣️❣️🍏❣️❣️




*தாவீதரசன் இங்கு 19 ம் சங்கீதம் 11ம் வாக்கியத்தில்,*




அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கை படுகிறேன் என்று *"கர்த்தருடைய எழுதப்பட்ட வார்த்தைகளை"* குறித்து குறிப்பிடுகிறார்.




ஆம் இறைவன் என்பவர்.....

🔥தம்மை குறித்ததான தமது வெளிப்பாட்டினை இந்த உலக மற்றும் அண்ட படைப்பின் வாயிலாகவும், *"எழுதிக்கொடுக்கப்பட்டுள்ள தமது வேதத்தின் வாயிலாகவும்"* எமக்கு தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார் என்பதை தாவீதரசர் இந்த 19ம் சங்கீதத்தில் அழகாக குறிப்பிட்டுள்ளார்.




ஆகையால் இறைவன்.....

☔தம்மை குறித்து,

☔தமது பரிபூரண சித்தத்தை குறித்து, ☔தமது மாறாத வாக்குதத்தங்களை குறித்து,.....

*"தமது வார்த்தையின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளதை"* புரிந்து, அவ்வற்றை நினைத்து, நாம் தினந்தோறும் அவருக்கு நன்றி பலிகளை ஏறேடுக்க வேண்டும்.

மட்டுமல்ல........ *இவைகளால் மிகுந்த பலன் மனித ஆத்துமாவுக்கு உண்டாம்.*




*🧐🤔எப்படி என கேட்கிறீர்களா❓*




தாவீதரசரே தெரியப்படுத்துகிறார்கவனியுங்கள். 👇




*🍉அவைகளால் எச்சரிப்புகள் எமக்கு கிட்டுகிறது.*

(வ.11)

*🍉அவைகளை கைக் கொள்ளுவதால் மிகுந்த பலன் உண்டு.*

(வ.11)

*🍉எமது பிழைகளை உணர செய்கிறது.*

(வ.12)

*🍉மறைவான குற்றங்களை எம்மில் இருந்து நீக்குகிறது.*

(வ.12)

*🍉துணிகரமான பாவங்களுக்கு எம்மை விலக்கி காக்கும் தன்மைகொண்டது.*(வ.13)

*🍉பெரும் பாதகத்துக்கு நீங்கலாகி இருக்க உதவிடுகிறது.*

(வ.13)

*🍉எமது வாயின் வார்த்தைகளும், இதயத்தின் தியானமும் அவருக்கு பிரியமாக இருக்க உதவியாய் இருக்கிறது.*

(வ.14)




இன்னும் பல பல....

முழு சங்கீதத்திலும் அவர் தெரியப் படுத்தியுள்ளார்.




💠💠🥏💠💠




*ஆண்டவரின் திட்டமான வெளிப்பாட்டின் 6 விதமான அம்சங்களை இந்த சங்கீதம் - 19 : 7 முதல் 9 வாக்கியங்களில் நாம் வாசித்து அறியலாம்.* அவைகள்




எவையெனில் : 👇




*🌹1. கர்த்தருடைய வேதம்.*




*🌹2. கர்த்தருடைய சாட்சி.*




*🌹3. கர்த்தருடைய (பிரமாணங்கள்) நியாயங்கள்.*




*🌹4. கர்த்தருடைய கற்பனை.*




*🌹5. கர்த்தருக்கு பயப்படுகிற பயம்.*




*🌹6. கர்த்தருடைய நியாயங்கள்.*




*மேற்கண்டவை 👆 யாவும் ஆண்டவரின் திட்டமான வெளிப்பாடுகளை உடையவைகளாகும்.*




🛍️🛍️💊🛍️🛍️




*💥1. முதலாவது, அவருடைய வேதம்.*

இது அவரது இதயத்தை எமக்கு அப்பட்டமாக தெரியப்படுத்தியுள்ளதை குறிப்பிடுகிறது. *(சங்கீ - 1 : 2)*




*💥2. இரண்டாவது, அவருடைய சாட்சி.*

இது அவரது உண்மையை வெளிப்படுத்தும் பகுதிகளாகும்.

*(சங்கீ - 93 : 5)*




*💥3. மூன்றாவது, அவருடைய பிரமாணங்கள்.*

இது அவரது கட்டளைகளை குறிப்பிடுவதாக இருக்கிறது.

*(சங்கீ - 111 : 7)*




*💥4. நான்காவது, கர்த்தருடைய கற்பனை.*

இது அதிகாரமிக்க அவரது வாக்கியங்களை குறிப்பிடுகிறது.




*💥5. ஐந்தாவது, அவருக்கு பயப்படுகிற பயம்*

இது கர்த்தரின் வார்த்தைகள் அவர் தம் மக்களில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி, பரிசுத்த பயத்தினை அருளும் தன்மையை பெற்ற ஒன்றாகும்.

*(நீதி - 1 : 7 :, யோபு - 28 : 28)*




*💥6. ஆறாவது, அவருடைய நியாயங்கள்*

இது மனித சூழலுக்கு ஏற்ற விதமான நல் முடிவுகளுக்கான தன்மைகளை வெளிப்படுத்துபவை யாகும்.

*(பிர - 13 : 13)*




🙋‍♀️🙋‍♀️✅🙋‍♀️🙋‍♀️




*☘️ஆம் நமது கடவுளை குறித்த பொதுவான, மற்றும் முடிவான கோட்பாடுகள் யாவும் எமது பரிசுத்த வேதாகமத்தில் மாத்திரமே இருக்கிறதென்பதை நாம் விசுவாசித்து, ஏற்று வாழவேண்டிய கட்டாயம் இந்நாட்களில் பெறுகியுள்ளது.*




🍃இதன் வாயிலாக மாத்திரமே மனுமக்களுக்கு, *"புதிய வாழ்க்கை முறை"* ஒன்று உள்ளதென்பதை நாம் மக்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை பக்குவமாக நடத்தினோமானால் ஒரு வேளை அநேகர், புரிந்துக் கொண்டு செயலாற்ற வழிவகுக்கும்.

ஏன் என்றால் *"அவைகளை கைக் கொள்ளுவதால்"* மிகுந்த பலன் மனித ஆத்துமாவுக்கு உண்டாகிறது.

*🌷எச்சரிக்கைகளை காத்து நடந்து வந்தோமானால், நம் ஆத்துமா பத்திரபட்டிருக்கும்.* நாம் ஆசீர்வாத மிக்க ஜனங்களாய் பாதுகாப்புடன் திகழலாம்.

*Sis. Martha Lazar🎊*
*NJC, KodaiRoad*

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.