சங்கீதம் 21 - 25
சாந்தகுணமுள்ளவர்கள்
~~~~~~~~~~~~~~~~~~~
சங்கீதம் 25: 9. *சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்த குணமுள்ளவர்களுக்கு தமது வழியை போதிக்கிறார்.*
1. அப்படியானால் இந்த சாந்த குணம் கட்டாயமாக நம்மில் இருக்க வேண்டும்.
*சாந்த குணம் என்றால் என்ன?* இது அமைதியான குணம். கோபமடைய கூடிய சூழ்நிலையிலும் பொறுமையாக, அமைதியாக இருப்பது.
2. நாம் ஏன் சாந்தமாய், நீடிய சாந்தமாய் இருக்க வேண்டும் ?
1. நம் பரம பிதா, *நான் சாந்தமும், மன தாழ்மையுமாயிருக்கிறேன்* என்றார். மத்தேயு 11: 29.
*கர்த்தர் நீடிய சாந்தமும், கிருபையுமுள்ளவர்*. யோவேல் 2: 13.
அப்படியானால் அவருடைய பிள்ளைகளாகிய நாமும், நம் அப்பாவை போல சாந்த குணமுள்ளவர்களாய் வாழ வேண்டும்.
2. சாந்தம் நம்மிலிருக்க வேண்டிய ஒரு *ஆவியின் கனி* கலாத்தியர் 5:23.
*அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது*. 1கொரிந்தியர் 13: 4.
*பலவானை பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்.* நீதிமொழிகள் 16: 32
*நீடிய சாந்தமுள்ளவன் சண்டையை அமர்ந்துகிறான்.* நீதிமொழிகள் 15: 18.
*சாந்த குணமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் பூமியை சுதந்தரித்து கொள்வார்கள்.* மத்தேயு 5: 5.
3. *ஒருவன் பாவம் செய்யும் போது, அவனை சாந்தமுள்ள ஆவியோடு சீர்பொருந்த பண்ண வேண்டும்*. கலாத்தியர் 6: 1.
*எல்லாரிடமும் நீடிய சாந்தமாயிருங்கள்*. 1 தெசலோனிக்கேயர் 5: 14.
*நீடிய சாந்தத்தோடு புத்தி சொல்லு*. 2 தீமோத்தேயு 4:2.
4. ஆம், நாம் இரட்சிக்கப்படும் போது, நம் பழைய குணங்கள் மாற வேண்டும். பழைய கோபம், எரிச்சல், கசப்பு , வைராக்கியம் ஆகிய குணங்களை விட்டு, விட்டு சாந்தமுள்ளவர்களாய், நீடிய சாந்தமுள்ளவர்களாய் நாம் வாழ வேண்டும். இந்த *சாட்சி நம் வாழ்க்கையில், குடும்பத்தில், வேலையிடத்தில், சபையில் காணப்பட வேண்டும்.*
ஆம், *சாந்த குணமுள்ளவர்களை நியாத்திலே நடத்துவார். தம் வழியை போதிப்பார்*. ஒரு கிறிஸ்தவனுடைய அனுதின வாழ்க்கையில் கட்டாயமாக இருக்க வேண்டிய இந்த கனி , நம்மில் இருக்கிறதா? என்பதை ஆராய்ந்து பார்ப்போம். இல்லாவிடில் இந்த சாந்த குணம் நம்மில் உருவாக ஜெபிப்போம் . ஆமென், அல்லேலூயா.
Dr.Padmini Seĺvyn*
*சங்கீதம் 24:3-4*
*WHO MAY ENTER HIS SANCTUARY*?
*யார் அவரது பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைவார்* ?
📝 கர்த்தர், இந்தப் பூமியை சிருஷ்டித்தவராக இருப்பதால், எல்லாவற்றுக்கும் எஜமானாக இருக்கிறார் ( *வ 1-2*). இந்த "பர்வதத்தில்" ஏறுபவர்கள் ( *வ 3* ) தலை வணங்கி ஆராதிக்க மட்டும் வரவில்லை, ஆனால் அங்கு நின்று கர்த்தரிடம் ஏதாவது கேட்க வேண்டும் என்று தெரிகிறது.
📍 இந்த ஆராதனைக்காரர்கள் செல்லும் இடம் *"அவருடைய பரிசுத்த ஸ்தலம்"* (வ. 3) என வரையறுக்கப்பட்டுள்ளது. கர்த்தருடைய பிரசன்னம் அங்கே வாசமாயிருந்ததால் அது பரிசுத்தமானது.
📍 பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆசாரியர்கள் மட்டுமே ஆலயத்திற்குள் நுழைய முடியும், கழுவப்பட்டவர்கள் பிரகாரத்தில் வழிபடலாம்.
📍 *மக்கள் நிசாரமாக உள்ளே நுழையக்கூடாது*.
🙋♂️🙋♀️ அவருடைய பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைவதற்குத் தேவையான *"தகுதிகள்"* பற்றி கேட்பது பொருத்தமானது (வ 3 )
📍 தகுதிகளில் செயல்கள் மற்றும் அணுகுமுறைகள் இரண்டும் அடங்கும்:
1️⃣ கைகளில் சுத்தம் ( *வ 4* ) : தேவனுடனான இஸ்ரவேலின் உடன்படிக்கையின் கோரிக்கைகளை மீறாத அல்லது மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களை செய்யாத கைகள் ( *2சாமு 22:21: யோபு 17:9 ; ஏசாயா 1:15 ; எசேக் 23:45* )
2️⃣ சுத்தமான இருதயம் ( *வ 4*) : கர்த்தருக்கு கீழ்ப்படிதல் மற்றும் முழுமையான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் உணர்வை மீறி, நியாயப்பிரமாணத்திற்கு (கற்பனைகளுக்கு) கீழ்படிவது மட்டும் போதாது.
📍 *இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் தேவனை தரிசிப்பார்கள்* (மத் 5:8)
3️⃣ விக்கிரகங்களை விலக்குபவர்கள் ( *வ 4*) : விக்கிரகங்கள் மீது நம்பிக்கை வைக்காதவர்கள் (யாத் 20:4)
4️⃣ கபடாய் ஆணையிடாதவர்கள் ( *வ 4*) : பொய்யான கடவுள் மீது சத்தியம் செய்யாதவர்.
📍 *அவர்களுடைய பேச்சும் செயல்களும் கர்த்தரை மதிக்க வேண்டும் மற்றும் நேர்மையான இருதயத்தில் இருந்து வர வேண்டும்*.
🙋♂️🙋♀️ அன்பான திருச்சபையே, தேவனின் முகத்தைத் தேடும் மற்றும் அவரது பிரசன்னத்தை அனுபவிக்கும் நாமும் கைகளில் சுத்தமுள்ளவர்களாகவும் மாசில்லாத இதயத்தை பெறவும் முயற்சிக்க வேண்டும்.
📍 நமது வாழ்க்கையும் நமது நடக்கையும் தேவனின் நியமத்துடன் ஒத்துப்போகிறதா என்று நம்மை நாமே ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
🙋♂️🙋♀️ மேற்கூறிய நான்கு தகுதிகளைக் கொண்டவர்கள் அவருடைய பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைவதற்குத் தகுதியுடையவர்கள், மேலும் அவர்கள் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவார்கள் ( *வ 5* )
தேவனுக்கே மகிமை 🙌
✍️ *மார்க் போஜே*
அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳
தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்
🐏THE SHEPHERD’S GUIDANCE🐑*
*🐏மேய்ப்பனின் வழிகாட்டுதல்🐑*
[நாள் - 165] சங்கீதம் 21 - 25
☄️சங்கீதம் 21 முதல் 25 வரை, நம்பிக்கை, விடுதலை மற்றும் தேவனுடைய வழிகாட்டுதலைத் நாடுதல் போன்ற அழகான கருப்பொருள்களைக் உள்ளடக்கியிருப்பதைகாண்கிறோம்.
1️⃣ *சங்கீதம் 21: வெற்றி மற்றும் ஆசீர்வாதங்களின் பாடல்*
🔹இந்த சங்கீதத்தில், தேவனுடைய உண்மைத்தன்மையைக்யும், நீதிமான்களின் வெற்றியையும் கொண்டாடுவதைக் காண்கிறோம்.
🔹 வெற்றி என்பது தேவனிடமிருந்து மட்டுமே வருகிறது என்பதை சங்கீதக்காரன் ஒப்புக்கொண்டு, அவருடைய ஆசீர்வாதங்களுக்காக அவரைப் துதிக்கிறார்.
🔹தேவனுடைய நன்மையில் மகிழ்ச்சியடைய கற்றுக்கொள்கிறோம், மகிழ்ச்சி மற்றும் போராட்டத்தின் நேரங்களிலும் அவருடைய அசைக்கப்படாத ஆதரவில் நம்பிக்கை வைக்கிறோம்.
2️⃣ *சங்கீதம் 22: வேதனையின் அழுகையும் இறுதி நம்பிக்கையும்*
🔸சங்கீதம் 22 விரக்தி மற்றும் வேதனையின் கடுமையான வெளிப்பாடாகும், இருப்பினும் இது இறுதியில் தேவனுடைய விடுதலையில் அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
🔸சங்கீதக்காரன் கைவிடப்பட்டதாக உணர்கிறான், ஆனால் துன்பங்களுக்கு மத்தியில், தேவன் தன்னைக் கைவிட மாட்டார் என்ற நம்பிக்கையை அவன் பற்றிக் கொள்கிறான்.
🔸தேவன் நம்முடைய அழுகையைக் கேட்கிறார், ஆறுதலையும் விடுதலையையும் தருவார் என்று நம்பி, நம்முடைய ஆழ்ந்த உணர்ச்சிகளை தேவனிடம் ஊற்ற கற்றுக்கொள்கிறோம்.
3️⃣ சங்கீதம் 23: *மேய்ப்பனின் அக்கறையும் அன்பும்*
▫️இது மிகவும் பிரியமான சங்கீதங்களில் ஒன்றாகும். கர்த்தர் நம் மேய்ப்பராக, நம்முடைய ஒவ்வொரு தேவையையும் கவனித்துக்கொள்வதைப் பற்றிய தெளிவான படத்தை இது சித்தரிக்கிறது.
▫️சங்கீதக்காரன் கர்த்தருடைய ஏற்பாடு, வழிகாட்டுதல் மற்றும் பாதுகாப்பில் ஆறுதல் காண்கிறான்.
▫️வாழ்க்கையின் சவால்களுக்கு மத்தியிலும், தேவனின் அன்பான கவனிப்புக்கு சரணடைவதால் கிடைக்கும் ஓய்வு மற்றும் அமைதி நமக்கு நினைவுபடுத்தப்படுகிறது.
4️⃣ *சங்கீதம் 24: கம்பீரமான ராஜா*
🔺சங்கீதம் 24 தேவனை மகிமையின் ராஜாவாகவும், எல்லாவற்றையும் படைத்தவராகவும் உயர்த்துகிறது.
🔺தேவனுடைய பிரசன்னத்தைத் தேடுவதில் தூய்மை மற்றும் நீதியின் முக்கியத்துவத்தை சங்கீதக்காரர் வலியுறுத்துகிறார்.
🔺நம் தலையை உயர்த்தவும், நம் இதயத்தின் கதவுகளைத் திறக்கவும், மகிமையின் ராஜாவை நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் வரவேற்கவும் நாம் ஊக்குவிக்கப்படுகிறோம்.
5️⃣ *சங்கீதம் 25: வழிகாட்டுதலுக்கான பிரார்த்தனை*
◾️இந்த சங்கீதத்தில், சங்கீதக்காரன் தேவனுடைய வழிகாட்டுதல், மன்னிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக மன்றாடுகிறார்.
◾️சங்கீதக்காரன் தேவனே ஞானத்தின் ஆதாரம் என்பதை உணர்ந்து, ஒவ்வொரு முடிவிலும் அவருடைய வழிநடத்துதலை நாடுகிறார்.
◾️தேவனின் வழிநடத்துதலுக்கு நம் வாழ்க்கையை ஒப்புக்கொடுக்கும்போது பணிவு, நம்பிக்கை மற்றும் பொறுமை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நாம் கற்றுக்கொள்கிறோம்.
♥️ *வாழ்க்கை பாடங்கள்*
💥சங்கீதம் 21 முதல் 25 வரையில், தேவனுடைய பராமரிப்பில் விசுவாசம், நம்பிக்கை ஆகிய மனித உணர்வுகளைக் காணலாம்.
💥இந்தப் பழங்கால ஜெபங்களை நாம் வாசிக்கும்போது, தேவன் நமக்குப் பெலன், வழிகாட்டுதல் மற்றும் மீட்பின் மாறாத ஆதாரம் என்பதை அறிந்து, ஆறுதலையும், உத்வேகத்தையும், அவர்மீது புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையையும் காண்போம்.
*‼️கர்த்தர் நம் மேய்ப்பராய் இருக்கிறபடியால் நாம் பொல்லாப்புக்கு பயப்பட வேண்டாம்‼️*
பிரின்சஸ் ஹட்சன்
தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை
📗 *சிறிய குறிப்பு* 📗
🍂 *பயிற்சி மைதானம்* 🍂
தாவீது தான் அவனுடைய வீட்டின் மந்தையை மேய்க்கும் பையன். வயல்வெளிகளில் தனது மந்தைகளை மேய்த்துக் கொண்டு நேரத்தைக் கழித்தான். ஆனால், *இஸ்ரவேலின் வருங்கால ராஜாவாக கர்த்தர் அவனைப் பயிற்றுவிக்கிறார் என்பது அப்போது அவனுக்குத் தெரியாது.* தாவீது பயிற்சி மைதானத்தில் தேவனாகிய கர்த்தருக்கு மிக நெருக்கமாக வந்தான். *நம்முடைய பயிற்சி மைதானம் நம்மை முதலில் தேவனாக கர்த்தரிடம் கிட்டி சேர்க்கிறது.*
தாவீது எப்பொழுதும் அவனுடைய *கவணையும் கல்லையும்* வைத்திருந்தான். அவன் தனது மந்தையை ஒரு கரடி மற்றும் சிங்கத்திடம் இருந்து காப்பாற்றினான். எப்படி அடிக்க வேண்டும், எங்கு அடிக்க வேண்டும் என்று அவனுக்குத் தெரியும். *எனவே கோலியாத்தை தோற்கடிப்பது தாவீதுக்கு எளிதான காரியமாக இருந்தது.* நம்முடைய வேலை எதுவாக இருந்தாலும் அதில் சிறந்து விளங்குவோம். *ஏனென்றால் ஆண்டவர் அதை ஏதோ ஒரு பெரிய நோக்கத்திற்காக பயன்படுத்தப் போகிறார்.*
கர்த்தருடைய மகிழ்ச்சி தாவீதை அமைதியான தண்ணீருக்கு அருகில் நடனமாட செய்தது. எனவே *உடன்படிக்கைப் பெட்டி எருசலேமுக்குக் கொண்டு வரப்பட்டபோது அதற்கு முன்பாக நடனமாடுவது* அவனுக்கு இயற்கையான ஒன்றாக இருந்தது. ஒரு மேய்ப்பனாக, தாவீது தனது மந்தையை போஷித்து, பாதுகாத்தான். அது பிற்காலத்தில் அவனை *கரிசனை உள்ள ராஜாவாக* இருக்க பயிற்றுவித்தது.
நீங்கள் இப்போது இருக்கும் இடம் தான் உங்கள் பயிற்சி மைதானம். * தேவனாகிய கர்த்தர் உங்களை ஒரு பெரிய மற்றும் உயர்ந்த நோக்கத்திற்காக ஆயத்தப்படுத்துகிறார்*. உங்களுக்கு இப்போது அது புரியாமல் இருக்கலாம். *ஆனால் உங்கள் வாழ்க்கையில் இன்னும் பெரிய காரியங்கள் நடக்கும்.* எனவே நீங்கள் இப்போது செய்யும் எல்லாவற்றிலும் சிறந்ததை செய்யவும்.
_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏻
*🍃சிப்பிக்குள் முத்து🍃*
*சங் : 21 - 25*
*🌵முத்துச்சிதறல் : 165*
🌹🌹🍏🌹🌹
*நானோ ஒரு புழு, மனுஷனல்ல :,* மனுஷரால் நிந்திக்கப்பட்டும், ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன்.
*(22:6)*
🌹🌹🍏🌹🌹
*💘அம்பெய்யப்பட்ட, உடைந்த உள்ளம்💔*
22ம் சங்கீதம்
🌿🌿🍒🌿🌿
*இறைவனின் உந்துதலால், "தேவ ஆவியானவரால் அருளப்பட்ட விதமாக, / தீர்க்கதரிசனமாக", கிறிஸ்துவுக்கு ஏறக்குறைய 950 ஆண்டுகளுக்கு முன்பதாகவே வரையப்பட்டுள்ள சங்கீதங்களில் இந்த 22 ம் சங்கீதமும் அடக்கம்.*
இந்த 22ம் சங்கீதத்தை நாம் *"மேசியானிய சங்கீதம்"*
என்றும் அடையாளங் கண்டு வாசிப்போமானால் பல விஷயங்களை புரிந்துக்கொள்ளலாம்.
அரசன் தாவீது தான் கடந்து சென்ற, அல்லது கடந்து செல்லும் பாதையை வர்ணித்து வரையப்பட்டுள்ள இவ்வாக்கியங்கள் ஏதோ அவர்,
*"தான் மட்டும்"* இந்த பாதையினூடே கடந்து சென்றதுபோல / செல்லுவது போல எண்ணி இயற்றி இருந்தாலும், இது வரப்போகிற கிறிஸ்து எவ்விதம் பாடுகளையும், துன்பத்தினையும், கைவிடப்படுதலையும், அனுபவிக்க போகிறார் என்பதை நிழலுருவமாக சித்தரித்து எழுதப்பட்டுள்ள ஒரு தீர்க்கமான பார்வையாகும்.
மட்டுமல்ல.....
*இந்த 22 ம் சங்கீதமானது* பூமியில் பிறந்து வாழும் அத்தனை மனிதர்களுமே தங்களது வாழ்க்கை பயணத்தில் கடந்து செல்லும் அல்லது, கடந்து சென்றுள்ள பாதையை குறித்து இங்கு தெளிவாக கூறுகிறார். எல்லோருக்கும் சம்பவிப்பதே நமக்கும் சம்பவிக்கிறது என்றும், இயேசு கிறிஸ்துவுக்கு நிகழ்ந்ததே எனக்கும் நிகழுகிறது / நிகழ்ந்துள்ளது என்றும் அறியும்படி எம் மனக்கண்கள் திறக்கப்பட / பிரகாசமடைய வேண்டும்.
*🌈இந்த 22ம் சங்கீதமானது ஆதியாகமம் 3ம் அதிகாரம் 15 முதல் 24 ம் வாக்கியம் வரை கூறப்பட்டுள்ள ஒவ்வொரு காரியமும் (கிட்டத்திட்ட 7 காரியங்கள், இயேசு கிறிஸ்துவில், அவரது சிலுவை பாடுகளின் போது நிறைவேறியுள்ளது. அதனை நாம் கீழே காணலாம் :*
*வார்த்தை ஆதாமில் இயேசுவில்*
*1 ❣️* வியர்வை ஆதி -3:19 லூக் - 22 : 24
*2❣️* முள்ளு ஆதி -3:18 யோ - 19 : 2
*3❣️* சாபம் ஆதி -3:17 கலா - 3 : 17
*4❣️* வருத்தம் ஆதி -3:17 புலம் - 1:12
*5❣️* நசுக்கபடுதல் ஆதி -3:15 ஏசா - 53 : 10
*6❣️* பட்டாயம் ஆதி -3: 24 சகரி - 13 : 7
*7❣️* மண் ஆதி -3: 19 சங்கீ - 22 : 15
*🍇ஆதி மனிதனுக்கு சொல்லப்பட்டவை யாவும் பாருங்கள் இயேசு கிறிஸ்துவில் நிறைவேறியது.* ஏன் என்றால்.....
*அவர் மாம்சத்தில் வெளிப்பட்டிருந்தார்*
(1தீமோ - 3 : 16)
மனித குலத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்த சாபத்தினை, நீதியான தீர்ப்பினை தன் மீது சுமந்துக் கொண்டார். அதினால் முழு மனித குலத்துக்கு கிடைக்க வேண்டிய, பாவத்தின் சம்பளமாகிய / கூலியாகிய மரணத்தை சுவீகரித்துக் கொண்டு,
*பின்பு அதனை வென்று உயிரோடு எழுந்து,*
ஜீவ காலமெல்லாம் மரண பயத்தில் இருந்தோரை மீட்டெடுத்து, அவர்களது இரட்சகனாகி நிற்கிறார்.
*(எபி - 2 : 14 - 16)*
*🔥இயேசு கிறிஸ்து பாடுப்பட்டபோது, துன்புருத்தப்பட்டபோது, வாறினால் அடிக்கபட்டப்போது, அவர் தேவனால் தண்டிக்கப்படுகிறார், அவர் ஏதோ பாவம் செய்துள்ளார், ஆகையால் தான் இவ்வித நிலைமை என, மனுமக்கள் எண்ணங்கொண்டனராம்.*
ஆனால் தேவனோ, *"எமது பாவங்களை அவர் மீது சுமத்தினாராம்".* (ஏசா - 53 : 3 - 12 வாசிக்கவும்)
ஆம்,
[இயேசு கிறிஸ்து]
*1. தமது சரீரத்தில் பாடுப்பட்டார்.*
(சங்கீ - 22 : 14- 16)
*2. தமது ஆவியில் பாடுப்பட்டார்.*
(சங்கீ - 22 : 1- 6)
*3. தமது ஆத்துமாவில் பாடு அனுபவித்தார்.*
(சங்கீ - 22 : 7 - 13)
*🍉கிறிஸ்துவுக்கு எவ்விதம் பாடுகள் உண்டாயினவோ , இராஜனாக அபிஷேகம் பெற்றிருந்திருப்பினும் தாவீதும் பாடுகளையும் துன்பங்களையும் அனுபவிக்க வேண்டியதாயிற்று.* மனிதர்களாகிய எமக்கும் இதே பாதை தான் என்பதை தான் ஆண்டவர் தாவீதின் அகத்தில் தூண்டுதலை கொடுத்து, தீர்க்கதரிசனமாக மேசியாவின் பாடுகளை குறித்து பாட வைத்தார்.
📌📌💠📌📌
*✍️மனிதர்களாகிய நாமும் ஏதோவொரு காலகட்டத்தில் மனுஷரால் நிந்திக்கப்பட்டும், ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்க வேண்டிய சூழலில் தள்ளப்பட்டே ஆகுவோம்.*
எவரும் இந்த நிலைக்கு விதி விலக்கானோர் அல்லவே அல்ல என்பதை நாம் எல்லோரும் எம் வாழ்வு பயணத்தை வைத்து அடித்து கூறிடலாம். பாடுகளின் பொழுதெல்லாம் இயேசுவை நோக்கி பார்க்க வேண்டும். *அவரை காட்டிலுமா யான் அவமான படுத்தப்பட்டுள்ளேன்❓இல்லையே !* அவரை காட்டிலுமா யான் துன்பறுத்த பட்டுள்ளேன்❓ இல்லையே ! *அவருக்கு நிகழ்ந்ததே எனக்கும் நிகழ்ந்துள்ளது என்னும் ஆரோக்கிய சிந்தையில் நாம் வளர்ச்சி கொள்ள வேண்டும்.*
*🍄நிந்தனைகளையும், அவமானங்களையும் எதிர்பார்த்து வாழும்படி, எம் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும், சபையொரும், பழக்குவிக்க பட வேண்டும்.* பாராட்டுங்களும், பரிசுகளும் மாத்திரமல்ல, இயேசுவைப்போல பாடுகளும், அவமானங்களும், வசை சொற்களும், குட்டும், திட்டும், கைவிடப்படுதலும், ஒருவரும் எம்மை சேர்த்துக்கொள்ளா நிலைமைகளும், சகாயமின்றி தவித்தலும், ஆதரவின்றி அமிழ்தலும் போன்ற நிலைகள், எவருக்கும் எந்நேரமும் வரலாம் என்பதை கொரோனா காலகட்டம் எல்லோருக்கும் உணர்த்தி விட்டதல்லவா❓
*அந்த கால கட்டத்தில் எமக்கு அருமையானோர் எம்மை விட்டு பிரிக்கப்பட்டனர்.* நாம் கதறியப்போது கேட்பார் எவரும் இல்லாதிருந்தனர். தனிமையின் பாதையில் எல்லோரும் பயணித்தோம் தானே !
ஆம்,
தாவீதரசனும் சரி, எமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவும் சரி, இந்த பாதையை தான் அவர்களும் கடந்தனர் என்பதை மறவாமல், எம்மை ஆண்டவர் முன் தாழ்த்தி, தலை குனிந்து,
*"நானோ ஒரு 🐛புழு" என்போமா❓* மனுஷரால் நிந்திக்கப்பட்டும், ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன். என்னை கண்ணோக்கி பாரும் தேவனே ! என அவரிடமே சரணாகதி அடைந்து விட்டோமானால், ஓர் தெய்வீக சமாதானம் எம் உள்ளத்தினை ஆட்கொண்டு , எம் *"இதயம் என்றெண்றைக்கும் வாழும்".*
ஏன் எனில் நாம் அவரை தேடி, அவரையே சார்ந்துக் கொண்டோம்.
*(22 : 19 - 26)*
*சில வேளைகளில்.... எம் வாழ்வில்....கர்த்தர் எமக்கு தூரம் ஆகுபவர் போல தோன்றினும், அவர் எம்மை கைவிடுபவர் அல்ல.*
ஜனங்களின் நிந்தனைகள் எம்மை வாட்டி வறுத்து எடுத்திடினும், இந்த போராட்டங்களில் எமது
*"விசுவாசம் மட்டும் ஆட்டங் கண்டு விடாமல்"* அவரை சார்ந்துக் கொண்டோமானால் *அவரே எம்மை ஆற்றுபடுத்தி,* இனி பிறக்கபோகிற மக்களுக்கு எம்மை சாட்சிகளாகவும், அடையாளங்களாகவும் நிறுத்துவார். *(22:30,31)*
*Sis. Martha Lazar✍️*
*NJC, Kodairoad*
Thanks for using my website. Post your comments on this