Type Here to Get Search Results !

Psalm 26-30 | என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர் | VINDICATE ME, O LORD | Bible Study Tamil | சங்கீதம் 26-30 வேத ஆராய்ச்சி | Jesus Sam

சங்கீதம் 26 - 30
❇️ *என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்* ❇️




☄️ *“என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர். என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்.”* (சங்கீதம் 30:11-12).




💥 தாவீது தனது வீட்டை அர்ப்பணித்த சந்தர்ப்பத்தில் 30-ஆம் சங்கீதத்தை எழுதினான். இந்த சங்கீதத்தில், தேவன் தனக்கு அருளிய மாபெரும் இரட்சிப்புக்காக அவன் *தேவனுக்கு நன்றியை வெளிப்படுத்தினான்.* நாம் தேவனிடமிருந்து பெறும் இதேபோன்ற இரட்சிப்புக்காக நாமும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று இந்த சங்கீதம் போதிக்கிறது. *தேவனைத் துதிக்க நாம் தூண்டப்பட்டு, அவரைச் சார்ந்திருக்கக் கடமைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.*




💥 தாவீதின் சாட்சியம் என்னவென்றால், அவன் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான், அவர் அவனுக்குச் செவிசாய்த்தார். தேவன் அவனுக்குச் செவிகொடுத்து, அவனைக் குணமாக்கினார். தேவன் அவனுக்குச் செவிகொடுத்து இரக்கம் காட்டினார். *தேவன் தன் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாற்றியதால் தாவீது மகிழ்ச்சியடைந்தான்.* துக்கப்படுபவர்கள் இரட்டு அணிவார்கள். தேவன் அவனுடைய இரட்டைக் களைந்துபோட்டு, அவனுடைய துக்கத்தை நீக்கினார். அதனால் தாவீது மகிழ்ந்து களிகூர்ந்தான். இதனால் அவன் கர்த்தருடைய துதியை மகிமையாகப் பாடினான். *கர்த்தரை என்றென்றைக்கும் துதிப்பதாக அறிவித்து தன் நன்றியை வெளிப்படுத்தினான்.*




💥 முறையான ஜெபம் மற்றும் ஆராதனை விண்ணப்பங்கள் மற்றும் பொதுவான துதிகளாக மட்டும் இருக்கக்கூடாது. *உள்ளார்ந்த துதி மற்றும் நன்றி செலுத்துதல்* என்பதே நமது ஜெபங்களுக்கு வழங்கப்பட்ட தேவனுடைய இரட்சிப்புக்கு பொருத்தமான பதிலளிப்பாகும்.




💥 நம்முடைய பாவங்களினிமித்தம் நாம் துக்கத்தினால் நிறைந்திருந்தோம், நம்மால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. நமக்கு இரட்சிப்பையும் பாவ மன்னிப்பையும் அருளுவதற்காக இயேசு தம் இரத்தத்தைச் சிந்தினார். *இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தின் மூலம் நாம் இரட்சிப்பைப் பெறும்போது, நமது துக்கம் நீங்கி, மகிழ்ச்சியைப் பெறுகிறோம்.* நமது நன்றியின் அடையாளமாக, நம் இருதயங்கள் என்றென்றைக்கும் துதியால் நிரப்பப்பட வேண்டும். *அவருடைய அன்பைப் பகிர்ந்துகொள்ளவும், அவருடைய இரட்சிப்பை அறிவிக்கவும் இது நமக்கு உதவும்.* நாம் இந்த பூமியில் வாழும் வரை இது தொடர வேண்டும்.




💥 *“எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது.”* (1 தெசலோனிக்கேயர் 5:16-18) என்று வேதம் போதிக்கிறது. இதுவே இரட்சிக்கப்பட்ட மக்கள் தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர அவர்களுக்கு கிடைக்கும் பாக்கியம். *தொடர்ந்து ஜெபிக்கும் மனப்பான்மையும் நன்றியுணர்வு உள்ள இருதயமும் கடினமான சூழ்நிலைகளில் கூட வாழ்க்கையை மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றும்.* தேவனுடைய மக்கள் ஜெபத்தின் மூலம் அவரை அணுகமுடியும். இதுவே கிறிஸ்து இயேசுவின் மூலமாக நமக்காகத் திட்டமிடப்பட்ட தேவ சித்தம்.




🔹 *நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு, ஆத்துமா இரட்சிக்கப்பட்டதில் நாம் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறோமா?*

🔹 *வியாதி மற்றும் பிற கஷ்டங்களின் போது நமது அழுகையைக் கேட்டு நம்மை விடுவித்ததற்காக நாம் உண்மையிலேயே தேவனுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோமா?*




✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:




1️⃣ *உள்ளார்ந்த துதி மற்றும் நன்றி செலுத்துதல் என்பதே நமது ஜெபங்களுக்கு வழங்கப்பட்ட தேவனுடைய இரட்சிப்புக்கு பொருத்தமான பதிலளிப்பாகும்.*

2️⃣ *இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தின் மூலம் நாம் இரட்சிப்பைப் பெறும்போது, நமது துக்கம் நீங்கி, மகிழ்ச்சியைப் பெறுகிறோம்.*

3️⃣ *தொடர்ந்து ஜெபிக்கும் மனப்பான்மையும் நன்றியுணர்வு உள்ள இருதயமும் கடினமான சூழ்நிலைகளில் கூட வாழ்க்கையை மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றும்.*




Dr. எஸ். செல்வன்

சென்னை


நான் குற்றமில்லாமையிலே என் கைகளை கழுவி*

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~




சங்கீதம் 26: 6, 7.




1. ஆம், நாம் குற்றமில்லாமையிலே அதாவது நம்மை பாவமற கழுவ வேண்டும். இங்கு கைகளை, அதாவது நம் கையின் கிரியைகள் கழுவப்பட வேண்டும் என தாவீது கூறுகிறார். என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது. என்னை கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன் என 51 ம் சங்கீதத்தில் கூறுகிறார். ஆம் நம்முடைய ஒவ்வொரு அவயவங்களும் கழுவப்பட வேண்டும். சுத்திகரிக்கப்பட வேண்டும்.




2. *எப்படி கழுவப்பட வேண்டும்?*




1. *இயேசுவின் இரத்தத்தால்*. வெளிப்படுத்தல் 1: 6.




2. *இயேசுவின் நாமத்தால்* 1கொரிந்தியர் 6: 11.




3. *பரிசுத்த ஆவியினால்* 1 கொரிந்தியர் 6: 11.




4. *வசனத்தினால்*




ஆம், *உங்களை கழுவி சுத்திகரியுங்கள்*. ஏசாயா 1: 16.




3. *எதற்காக கழுவப்பட வேண்டும்?*




1. *துதியின் சத்தத்தை தொனிக்க பண்ண.* அதாவது பரிசுத்த தேவனை துதிப்பதற்கு முன் நம் இருதயம், வாய், நாவு, உதடுகள் கைகள், கால்கள் எல்லா அவயவங்களும் கழுவப்பட்டு, அதன் பின் நாம் கர்த்தரை துதிக்க வேண்டுமல்லவா?




2. *அவர் செய்த அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக* ஆம், நாம் கழுவப்பட்டு, சுத்திகரிக்கப்படாமல் கர்த்தர் நமக்கு செய்த அதிசயங்களை சாட்சியாக கூறமுடியாதல்லவா? இன்று கிறிஸ்துவின் பிள்ளைகளாகிய நமக்கு கர்த்தர் செய்த அதிசயங்களை, அற்புதங்களை, அவர் தந்த விடுதலையை நாம் அறிவிப்பதற்கு முன் நாம் கழுவப்பட்டு பரிசுத்தமாய் வாழ்கிறோமா ? என்பதை அறிந்து சாட்சி கூறுவோம்.




4.*உம்முடைய பீடத்தை சுற்றி வருவேன்* அதாவது கர்த்தரை தொழுது கொள்வேன். நாம் கழுவப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட பின்னரே, கர்த்தரை தொழூது கொள்ள வேண்டும். ஆம், பரிசுத்த அலங்காரத்தோடே கர்த்தரை தொழுது கொள்ள வேண்டும்.




ஆம், *குற்றமில்லாமையிலே நம் கைகளை ( ஒவ்வொரு அவயவங்களையும்) கழுவி , கர்த்தரை துதிப்போம், சாட்சியாக வாழ்வோம், அவரை தொழுது கொள்வோம்.* ஆமென். அல்லேலூயா.




*Dr.Padmini Seĺvyn*


சங்கீதம்.28:9

🌹🌹🌹🌹🌹

"அவர்களை என்றென்றும் உயர்த்தும்".

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

கடவுளின் மக்கள் உயர்த்தப்பட வேண்டும்.

இயற்கையாக தீப்பொறிகள் மேல்நோக்கி பறக்கும்.

ஆனால் மனிதர்களின் பாவ ஆத்துமாக்கள் கீழ்நோக்கி விழுகின்றன.

.கர்த்தாவே அவர்களை என்றென்றும் உயர்த்தும்.

தாவீது தானே "கடவுளே, நான் என் ஆத்துமாவை உம்மிடம் உயர்த்துகிறேன்" என்று கூறினார்.

மற்ற மனிதர்களின் ஆத்துமாக்கள் உயர்த்தப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் உணர்கிறார்.

இந்த ஆசீர்வாதத்தை நாம் நமக்காகக் கேட்கும்போது, ​​​​மற்றவர்களுக்காகவும் அதைத் தேட வேண்டும் என்பதை மறந்துவிடக்கூபாது.

கடவுளுடைய மக்கள் உயர்த்தப்பட வேண்டிய மூன்று வழிகள் உள்ளன.

அவர்கள் பண்புடன் உயர்த்தப்பட வேண்டும்.

அவர்களை உயர்த்தும் ஆண்டவரே, உலக மக்களைப் போல் உமது மக்கள் துன்புறக்கூடாது.

உலகம் பொல்லாதவனிடம் உள்ளது.

ஆண்டவரே அவர்களை அதிலிருந்து விடுவியும்.

உலக மக்கள் வெள்ளியையும் தங்கத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், தங்கள் சொந்த இன்பங்களையும் தங்கள் இச்சைகளையும், திருப்தியையும் தேடுகிறார்கள்.

ஆண்டவரே உமது மக்களை இதற்கெல்லாம் மேலாக உயர்த்தும்.

.தீங்கு நாளில் ஆண்டவரே உமது பிள்ளைகளின் ஆவிகளை உயர்த்தும்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

மேபி சுந்தர்


📗 *சிறிய குறிப்பு* 📗




🍂 *நிராகரிக்கப்பட்டவர்களின் தேவன்* 🍂




ஒரு குழந்தைக்கு மிகவும் நெருக்கமானவர்கள் பெற்றோர்கள். தாய் தன் வயிற்றில் ஒரு சிறிய கருவாக இருக்கும்போதே தன் குழந்தையை நேசிக்கத் தொடங்குகிறாள். *அப்பாவும் அம்மாவும் தங்கள் பிறக்காத குழந்தைக்காக கனவு காணவும் திட்டமிடவும் தொடங்குகிறார்கள்*. ஆனால் பெற்றோரால் நிராகரிக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். இந்த நிராகரிப்பை கர்த்தர் கவனத்தில் கொள்கிறார்.




📖 *“என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக் கொள்ளுவார்.” (சங்‬ ‭27‬:‭10‬)*




காரணம் எதுவாக இருந்தாலும், புறக்கணிக்கப்பட்டவர்களை கர்த்தர் அறிந்திருக்கிறார், அவர்கள் மேல் அக்கறை காட்டுகிறார். சுய பரிதாபத்தில் மூழ்குவதற்குப் பதிலாக, மன காயங்கள் சுகம் பெற உங்கள் கவனத்தை தேவனிடம் திருப்புங்கள். *அவர் நிராகரிக்கப்பட்டவர்களின் ஆண்டவர்.* நிராகரிப்பதால் ஏற்படும் மன வேதனையை அவர் புரிந்துகொள்கிறார். *மனக் காயங்கள் குணமடைய அவரிடம் வாருங்கள்.*

_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏻


Tamil translation of Rev. C.V.Abraham’s insight.*

* உத்தம வாழ்க்கையை நடத்துவது எப்படி?*




சங்கீதம் 26. தாவீதின் சங்கீதம்.




உத்தம வாழ்க்கை - தார்மீகரீதியான உத்தம வாழ்க்கை, பாவமற்ற முழுமை அடைந்த வாழ்க்கை அல்ல.




⭐ *தேவன் மேல் நம்பிக்கை வைப்பதன் மூலம்*. (சங்.26:1)




⭐ *கர்த்தருடைய சத்தியத்தில் தொடர்ந்து நடப்பதன்* மூலம். ( சங். 26:3)




⭐ *வஞ்சகமான மனிதர்களுடன் உட்காராமல் இருப்பது*. ( 26:4)




⭐ *நயவஞ்சகர்களுடன் பழகாமல் இருப்பதன் மூலம்.* (26:4)




⭐ *தீமை செய்பவர்களின் கூட்டத்தை வெறுப்பதன் மூலம்.* (26:5)




⭐ *பொல்லாதவர்களுடன் உட்கார மறுப்பதன் மூலம்.* (26:5)




⭐ குற்றமில்லாமையில் கைகளை கழுவுவதன் மூலம்.* (26:6)




⭐ *கர்த்தருடைய துதியை உரக்க அறிவிப்பதன் மூலம்.*( 26:7)




⭐ *கர்த்தருடைய அனைத்து அற்புதமான செயல்களையும் அறிவிப்பதன் மூலம்.* (26:7)




*மேற்கண்ட குணங்களை நம் வாழ்வில் கடைப்பிடிக்கிறோமா?*




*உத்தம வாழ்க்கை வாழ கர்த்தர் நமக்கு உதவுவாராக.*




Rev.C.V.Abraham



ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👨‍👩‍👦‍👦




🙋‍♂️🙋‍♀️ படித்து தியானம் செய்யலாம்

*சங்கீதம் 26:1-8*




*VINDICATE ME, O LORD*




*கர்த்தாவே, என்னை நியாயம் விசாரியும்*




📝 சங்கீதம் 26, பொல்லாத சமுதாயத்தில் வாழும் ஒரு நீதிமானின் பிரார்த்தனையாகத் தோன்றுகிறது. துன்மார்க்கர்கள் மீதான தேவனுடைய தீர்ப்பில், சில சமயங்களில் நீதிமான்களும் பாதிக்கப்படுவார்கள் என்று அவர் பயப்படுகிறார்.

📍 தேவன் பொல்லாதவர்களை நியாயந்தீர்க்கும்போது பாவிகளுடன் சேர்ந்து தானும் வாரிக் கொள்ளப்படுவேனோ என்று அவன் அஞ்சுகிறான் ( *வ. 9*)




📝 சங்கீதக்காரன் தேவனிடம் நியாயம் கேட்கவும், அவரை நீதிமானாக அறிவிக்கவும் தேவனிடம் கேட்க எல்லா காரணங்களும் உள்ளன ( *வ 1a*):




1️⃣ அவர் உத்தமத்திலே நடந்தார் ( *வ 1,11* )

📍 தன்னைப் பரீட்சித்து சோதித்துப் பார்க்கும்படி கர்த்தரிடம் வேண்டுகிறான் ( *வ. 2*)




2️⃣ தேவனுடைய நிலையான அன்பை அவன் அறிந்திருந்தான் ( *வ. 3*)

📍 விசுவாசமாகவும் கீழ்ப்படிதலுடனும் அவர் பதிலளித்துள்ளார்.




3️⃣ அவர் தன்னைத் துன்மார்க்கரிடமிருந்து விலக்கிக்கொண்டார் ( *வ. 4-5*)

📍 அவர்களுடைய பொல்லாத செயல்களில் அவர் ஈடுபடவும் இல்லை, பங்கேற்கவும் இல்லை.




4️⃣ அவர் குற்றமில்லாத வாழ்க்கையை வாழ அர்ப்பணித்துள்ளார்; தேவனுடைய ஆலயத்தில் நேரத்தை செலவிட்டார், தேவன் செய்ததை அறிவித்தார் மற்றும் துதித்தார் ( *வ 7-8*)




🙋‍♂️🙋‍♀️ அன்பான திருச்சபையே, சங்கீதக்காரனைப் போலவே நாம் அனைவரும் ஒழுக்கக்கேடான மற்றும் வன்முறையான சமூகங்களில் வாழ்கிறோம், மேலும் நமது சமூகங்களில் பாவத்தின் விளைவுகளை நாம் அடிக்கடி சந்திக்க வேண்டியுள்ளது.

📍 இந்த ஜெபம் இந்த உலகத்தின் மாதிரிக்கு இணங்காமல் நேர்மையுடன் வாழ நம்மை ஊக்குவிக்கட்டும்.

📍 *இயேசு நம்மீது வைத்திருக்கும் அன்பு, நம்மை நேர்மையுடன் வாழ தூண்ட வேண்டும்*.




"கர்த்தாவே, என்னை நியாயம் விசாரியும், என்னை நியாயம் விசாரியும் என்று நம்மால் சொல்லமுடியுமா ❓




தேவனுக்கே மகிமை 🙌

✍️ *மார்க் போஜே*

அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳
தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்


மிகவும் உயர்வான நன்மை_*




*_சங்கீதம் 29_*




❇️ _கர்த்தர் தமது ஜனத்திற்குப் *பெலன்* கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் *சமாதானம்* அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார். (வ11)_




❇️ _*கர்த்தரின் பெலனும் சமாதானமும்* கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி *கர்த்தரையே* குறிக்கிறது_




▪️ _கர்த்தர் தம்முடைய ஜனத்தின் பெலன் (சங்.28:8)._




▪️ _கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் ( நெகேமி. 8:10)_




▪️ _அவர் (இயேசு கிறிஸ்து) அவர்களுக்குச் சமாதான காரணர் (மீகா.5:5)_




❇️ _*சமாதானம்* என்பது மிகவும் உயர்வான நன்மை (லத்தீன் மொழியில் Summum Bonum); இதிலிருந்தே மற்ற எல்லா மதிப்புகளும் பெறப்படலாம். நமக்கு சமாதானம் இருக்கும்போது, *துன்பங்களும் பிரச்சனைகளும்* நம்மை சோர்வடையச் செய்யாது. ​​நமக்கு சமாதானம் இருக்கும்போது, *செழிப்பு* ​​இல்லாமை நமக்கு ஒரு பொருட்டல்ல, மேலும் நாம் *திருப்தியான வாழ்க்கையைப்* பெறுவோம். நமக்குள் *சமாதானம்* இருக்கும்போது நாம் அனைவருடனும் *சமாதானமாக* வாழ்வோம்._




❇️ _*சமாதானம் என்பது கர்த்தருடன் ஒன்றி இருப்பது*.இந்த *உச்ச உயர் குறிக்கோள் நன்மைக்காக* ஒருவரால் உழைக்க முடியாது, மாறாக அதை தேவனிடமிருந்து இலவசமாகப் பெற வேண்டும்._




❇️ _*பெலன் மற்றும் சமாதானம்* என்பது தோற்கடிக்க முடியாத கலவையாகும். *கர்த்தர்* நமது *பெலனாக* இருக்கும் போது, ​​தீயவனை எளிதில் *வெல்லாம்*. *கர்த்தர்* நமது *சமாதானமாக* இருக்கும் போது, ​​நாம் அவருடன் ஒன்றிவிடுவோம், அதுவே நாம் எல்லா பிரச்சனைகளுக்கும் மேலாக *உயர்வதற்கு* உதவும்._




❇️ _*சமாதானம்* என்பது *பிரச்சினைகள்* இல்லாதது அல்ல, ஆனால் பிரச்சனைகள் இருக்கும்போதும் நாம் *பாதுகாப்பாக* உணர்வதாகும், ஏனெனில் *கிறிஸ்துவானவர்* மகிமையின் *நம்பிக்கையாக* நமக்குள் இருக்கிறார் (கொலோ.1:27)_




✅ *_கற்றறிந்த நுண்ணறிவு_*:




▶️ _கர்த்தரே நமது பெலன்_




▶️ _கர்த்தரே நமது சமாதானம்_




▶️ _கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக நமக்குள் இருக்கிறார்._




*_ecd_* 🙏




தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்


*📌சிப்பிக்குள் முத்து📌*




இன்றைய வேத வாசிப்பு பகுதி -

*சங் : 26 - 30*




*💠முத்துச்சிதறல் : 166*




🌻🌻🍇🌻🌻

*கர்த்தருடைய சத்தம்* "வல்லமையுள்ளது :, *கர்த்தருடைய சத்தம்* மகத்துவமுள்ளது.

(சங் - 29 : 4)

🍇🍇🌻🍇🍇




*கர்த்தருடைய சத்தம்*

29ம் சங்கீதம்




*✍️இடி முழக்கத்தை நாம் மழை காலங்களில் கேட்கையில்.... என்றாவது இறைவனது அந்த பயங்கர சத்தத்தின் ஓசையை குறித்து... நமது சிந்தனைக்கு தீனியிட்டு அசை போட்டதுண்டா❓*




29ம் சங்கீதம் இறைவனது வல்லமை மற்றும் மகத்துவத்தை குறித்து வெளிப்படுத்தும் ஓர் பாடலாகும்.




*கர்த்தருடைய நாமத்துக்குரிய மகிமையை அவருக்கு செலுத்த மனு மக்கள் கடந்து வருகையில், அவரை தொழுது கொள்ளுகையில்... "பரிசுத்தம்"* என்னும் அலங்காரம் அவர்களில் இருக்க வேண்டும் என இந்த சங்கீதம் வலியுறுத்தும் அதே வேளை....

கடலில் யாத்திரை செய்யும் போது... அலைகள், புசல் காற்று மற்றும் அலைகள் வந்து படகையோ, இல்லை கப்பலையோ மோதி அடிக்கையில்....

கப்பல் கவிழ்ந்து விடுமோ என்ற பயம் கடல் யாத்திரை செய்வோறுக்கு ஏற்படுவது இயற்கையாயினும், அலையை எழும்ப செய்தவரே, அதனை அடங்கவும் செய்கிறவராக இருப்பதை நாம் கவனிக்க வேண்டியுள்ளது.

*(யோனா - 1 : 4 - 6)*




🌿அஞ்ஞானிகள் தாங்கள் நம்பும் தேவர்களை இடி முழக்கத்தோடு ஒப்பிட்டு.... இடிக்கென்று ஓர் தெய்வம், புயலுக்கென்று ஓர் தெய்வம் என தவறான நம்பிக்கை கொண்டு அக்காலத்தில் வாழ்ந்து வந்தனர். ஆனால் யாவே கடவுள்/ யெகோவா கடவுள் இஸ்ரவேலரை..

*தமது பலத்த வல்லமையை பயன்படுத்தி....* சிவந்த சமுத்திரத்தை பிளந்து வழிநடத்தியதை அவர்கள் பாடலாக பாடி....அவருக்குரிய துதியை அவருக்கு செலுத்தினர்.

*(யாத் - 15)*

அதே போல அவரது சத்துருக்களை அவர் எவ்விதம் கையாண்டு இஸ்ரவேலருக்கு வெற்றி அருளினார் என *தெபோராளின் பாடலும்* விவரணம் செய்கிறது.

(நியா - 5)

👆👆இந்த இரண்டு பாடல்களை போலவே இங்கு 29ம் சங்கீதத்தில் பலவை கோர்வையாக்கப்பட்டுள்ளது.




*🎈29ம் சங்கீதத்தில்*....




*கர்த்தர்* என்ற பதம் ஏறக்குறைய *18 முறையும்*




*கர்த்தருடைய சத்தம்* என்ற பதம்...

ஏறக்குறைய

*7 முறை* யும் பயன்படுத்த பட்டுள்ளது.




*🥏கர்த்தருடைய சத்தம் எவ்வாரெல்லாம் பூமியில் கிரியை செய்கிறது என்பதை இங்கு தாவீதரசன் கவி பாடுகிறார்.*




இயற்கைக்கு மேலாக...

இயற்கைக்கு அப்பார்பட்டவராக இங்கு இறைவனை அரசன் போற்றி புகழுகிறார்.




*ஆதி - 1ம் அதிகாரத்தில்....*

படைப்பின் வரலாற்றில் இறைவன் எவ்வாறு செயல்பட்டாரோ அவ்விதமே அவர் சத்தம் தொடர்ந்து செயலாற்றி வருகிறது என்பதை சங்கீதக்காரர் உணர்வு பூர்வமாக உணர்ந்து பாடுகிறார்.




இறைவன் தன் வார்த்தையை உச்சரிக்கும் போது உண்டாகும் சத்தம் *(ஓசை)* படைப்பினை உருவாக்கியதை போலவே இங்கும் *அவர் சத்தத்தை குறித்து...*

அது வல்லமையுள்ளது, அது மகத்துவமுள்ளது என்கிறார்.




இந்த 29ம் சங்கீதம் பாரம்பரியமாக பெந்தெகோஸ்தே நாளில் *(50ம் நாளில்)* வாசிக்க பட்டதாக / பாட பட்டதாக வேத அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.




*🔰பலத்த இடி முழக்க சத்தம் மற்றும் காற்று* போன்ற ஓர் சூழல் அங்கு உருவானதாக அப்போஸ்தலர் - 2ம் அதிகாரத்தில் காண்கிறோம்.




கர்த்தரின் சத்தம் வல்லமையாக அந்த சீஷர்கள் மத்தியில் தொனித்த பொழுது....

*அவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியினால் நிறைய பட்டு.... பற்பல பாஷைகளில் இறைவனை புகழ ஆரம்பித்தனர்.*




ஆம்,

எமது கடவுள்....

*தூதர்களின் மீதும்,*

*இயற்கை உந்து விசையின் மீதும்,*

*மனிதர்களின் மீதும்* அவர் ஆட்சியில் இருந்து துரைத்தனம் செய்பவராக இருக்கிறார்.




ஆகையால்.... இறைவனுக்கு செலுத்த கூடிய / செலுத்த வேண்டிய துதி, கன, மகிமை யாவும் சரியாக செலுத்த பட வேண்டியது அவசியப்படுகிறது.

*அவரே இராஜா*




*✍️கர்த்தரின் சத்தம்....*

*இடி முழக்கங்களை முழங்க செய்யும் தன்மை கொண்டதாக இருக்கிறது.*

அவர் பேசும் போது....

சில வேளைகளில்....

*அமர்ந்த மெல்லிய சத்தத்தின் வாயிலாகவும் பேசுபவர்*.....

(1 இராஜா - 19 : 12)

அதே வேளை....

இடி முழக்கம் போன்ற ஓசையுள்ள சத்தத்தின் வாயிலாகவும் தமது வல்லமையை விளங்க பண்ணுபவராக இருக்கிறார்.

*(1சாமு - 7 : 10 :, ஏசா - 30 : 30 :, யோபு - 37 : 4, 5 :, சங் - 18 : 13)*




வல்லமையுள்ள அவர் சத்தம் உருவாக்கும் தன்மை கொண்ட அதே நேரம் உடைக்கும் தன்மை / முறிக்கும் தன்மை கொண்டதாகவும், பிளக்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கிறதாம்.




தமது ஜனத்திற்கு சமாதான வார்த்தைகளை அருளி அவர்களை ஆசீர்வதிக்கும் சத்தமாகவும் அது இந்நாள் வரை கிரியையில் இருப்பதால்....

*கர்த்தருக்கு அவருக்குரிய மகிமையை செலுத்துவோம்.*




*🍉Sis. Martha Lazar*

*NJC, KodaiRoad*

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.