சங்கீதம் 31-34
எக்காலத்திலும், எப்போதும்*
சங்கீதம் 34: 1. *கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன். அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.*
1. எந்த சூழ்நிலையில் தாவீது எக்காலத்திலும், எப்போதும் துதிப்பேன் என சொல்கிறார் என்றால் *அபிமலேக்குக்கு முன்பாக வேஷம் மாறின போது . அவனால் தூரத்திவிடப்படுகையில்* பாடின சங்கீதம். தன் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் தாவீதால் இதை கூற முடிந்தது. நம்முடைய ஆபத்து வேளைகளில், சூழ்நிலைகளில், துக்கங்களில் நம்மால் கர்த்தரை துதிக்க முடியுமா? *கர்த்தரோடுள்ள இந்த நெருங்கிய அன்பின் உறவு, விசுவாசம் தைரியம் நமக்கு இருக்கிறதா?* என நம்மை ஆராய்ந்து பார்ப்போம்.
2. *நாம் ஏன் துதிக்க, ஸ்தோத்திரிக்க வேண்டும்?*
1. *ஸ்தோத்திரம் நாம் கர்த்தருக்கு செலுத்துகிற பலி*. சங்கீதம் 50: 23, 107:22.
2. *ஸ்தோத்திரம் நம் உதடுகளிலிருந்து புறப்படும் கனி.* எபிரேயர் 13: 15.
3. *அநேகருடைய ஸ்தோத்திரத்தால் கிருபை பெருகும்*. 2கொரிந்தியர் 4: 15.
4. *ஸ்தோத்திரத்தினால் தடைகள் உடையும்*. எரிகோவின் கோட்டை உடைந்து விழுந்தது.
5. பவுலும், சீலாவும் பாடி, ஸ்தோத்தரித்த போது, *சங்கிலிகள் தானே கழன்று விழுந்தன, சிறை சாலை கதவுகள் தானே திறந்தன*.
6. ஸ்தோத்திரம் செய்யும் போது, துதிக்கும் போது நாம் *கர்த்தருக்கு நன்றி செலுத்துவது மட்டுமல்ல, நம் இருதயம் தேவ மகிமையால் நிரம்பும். அப்படியானால் நாம் பாவமின்றி, பரிசுத்தமாய் வாழ முடியும்.*
7. *நாம் எல்லாவற்றிலும் ஸ்தோத்திரம் செய்வது தேவசித்தமாயிருக்கிறது.* 1 தெசலோனிக்கேயர் 5: 18.
3. *நாம் எப்படி துதிக்க வேண்டும்?*
1. *ஆத்துமாவிலிருந்து.* சங்கீதம் 103: 1.
2. *முழு இருதயத்தோடு* சங்கீதம் 9: 1.
3. *உதடுகள்* சங்கீதம் 63:3. *வாய்* சங்கீதம் 51: 15.
4. *எப்பொழுதும்* சங்கீதம் 71: 6.
5.*உயிரோடிருக்குமட்டும்* சங்கீதம் 104: 33.
ஆம், நாம் துதிக்க வேண்டியவிதத்தில், எக்காலத்திலும், எப்போதும் துதிக்கவில்லை அல்லவா? அப்படியானால் ஆவியானவரே *நான் எக்காலத்திலும் எப்போதும் கர்த்தரை துதிக்க கற்று தாரும்* என ஜெபிப்போம். தீர்மானிப்போம். யோபுவை போல, தாவீதை போல எல்லா சூழ்நிலைகளிலும், *துதிகளின் மத்தியில் வாசமாயிருக்கிறவரை* துதிப்போம். ஸ்தோத்தரிப்போம். ஆமென். அல்லேலூயா.
*Dr. Padmini Selvyn
🌺🌺🌺🌺🌺
"நம் இருதயம் அவரில் களிகூரும்".
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺ஆழ்ந்த துயரத்திலும், துன்பம் நம்மைச் சூழ்ந்தாலும், நாம் மகிழ்ச்சியடைய முடியும் என்பது நமது பாக்கியம்.
கூண்டில் இருக்கும் பல பறவைகளைப் போல நாம் இன்னும் பாடுகிறோம்.
அலைகள் நம்மீது புரளலாம் .
ஆனால் நம் ஆத்துமாக்கள் விரைவில் மேலெழுந்து கடவுளின் முகத்தின் ஒளியைக் காணும்.
கடவுள் இன்னும் நம்முடன் இருக்கிறார்.
இயேசுவுக்கு மகிமையைக் கொடுப்போம்.
தேவனுடைய குமாரனின் பிரசன்னம் நம் இருதயத்தை மகிழ்ச்சியால் நிரப்புகிறது.
நாம் நோய்வாய்ப்பட்டு துன்பப்பட்டால், இயேசு நம்மைச் சந்தித்து, படுக்கை அருகில் வந்து நிற்கிறார் .
இயேசு தம் கைகளால் நம்மை அரவணைத்து , "அஞ்ச வேண்டாம், அன்பே, பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன், திகையாதே, நானே உன் கர்த்தர்" என்கிறார் .
.இவ்வாறு கடவுள் தனது விசுவாசிகளை பலப்படுத்தி ஆறுதல்படுத்துகிறார்.
இயேசு விடி வெள்ளி நட்சத்திரம்.
நாம் அவரைப் பார்க்க அவர் ஏங்குகிறார்.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
மேபி சுந்தர்
*💞தேவனின் உறுதியான அன்பு💞*
சங்கீதம் 31-34
☄️சங்கீதம் 31-34, தேவனின் உறுதியான அன்பில் வலிமை, நம்பிக்கை மற்றும் விசுவாசம் ஆகியவற்றைக் கண்டறிவதற்கான கருப்பொருள்களை எடுத்துக்காட்டுகிறது.
1️⃣ *சங்கீதம் 31: தேவனுடைய உறுதியான அன்பில் அடைக்கலம் புகுதல்*
🔹சங்கீதக்காரர் விடுதலைக்காக மன்றாடுகிறார் மற்றும் தேவனுடைய பாதுகாப்பில் அசைக்க முடியாத நம்பிக்கையை வைக்கிறார்.
🔹அவர் தேவனிடம் அடைக்கலம் தேடுகிறார், அவருடைய மாறாத அன்பில் ஆறுதல் காண்கிறார்.
🔹தேவனை ஒரு வலிமையான கோட்டையாக உருவகப்படுத்துவது, அடைக்கலம் மற்றும் விடுதலை அளிக்கும் அவரது திறனை விளக்குகிறது.
🔹துன்பங்களை எதிர்கொண்டாலும், தேவனுடைய இறையாண்மையில் விசுவாசம் வைத்து, அவரது மாறாத பிரசன்னத்தில் நம்பிக்கையை அடையுமாறு சங்கீதக்காரன் வாசகர்களை ஊக்குவிக்கிறார்.
2️⃣ *சங்கீதம் 32: மன்னிப்பின் ஆசீர்வாதங்கள்*
🔸சங்கீதம் 32 மன்னிப்பு மற்றும் அதனுடன் வரும் ஆசீர்வாதங்களை மையமாகக் கொண்டுள்ளது.
🔸சங்கீதக்காரன் அறிக்கைசெய்யப்படாத பாவத்தின் பாரத்தையும், அதை ஒப்புக்கொண்டு, தேவனுடைய மன்னிப்பை தேடுவதன் மூலம் கிடைக்கும் சுதந்திரத்தைப் பற்றியும் பிரதிபலிக்கிறான்.
🔸நம்முடைய பாவங்களை மனத்தாழ்மையுடன் ஒப்புக்கொண்டு, தேவனுடைய இரக்கத்தைப் பெறும்போதுதான் உண்மையான மகிழ்ச்சியும், உள் அமைதியும் கிடைக்கும்.
🔸நமது மறைவிடமான கர்த்தரிடம் திரும்பவும், அவருடைய மன்னிப்பின் நிச்சயத்தில் மகிழ்ச்சியைக் காணவும் சங்கீதக்காரன் நம்மை ஊக்குவிக்கிறார்.
3️⃣ *சங்கீதம் 33: தேவனுடைய இறையாண்மையைப் போற்றுதல்*
◾️சங்கீதம் 33 தேவனுடைய மகத்துவத்தையும் வல்லமையையும் கொண்டாடுகிறது. பிரபஞ்சத்தின் படைப்பாளராக அவரது பங்கை அங்கீகரித்து. கீதவாத்தியங்கள் மற்றும் புதுப்பாடல்கள் மூலம் அவரை கீர்த்தனம்பண்ணும் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது.
◾️நீதிமான்கள் தேவனுடைய உத்தமத்தில் களிகூறவும், அவருடைய மாறாத அன்பில் நம்பிக்கை வைக்கவும் சங்கீதக்காரன் அழைக்கிறார்.
◾️இந்த சங்கீதம் தேவனுடைய செய்கையெல்லாம் சத்தியமும் அவருடைய வார்த்தை உத்தமமுமானது என்பதை நினைவூட்டுகிறது.
◾️நம்முடைய துதி மற்றும் விசுவாசத்தின் மூலம், எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் அவருடைய இறையாண்மையில் நாம் பெலத்தையும் நம்பிக்கையையும் காணலாம்.
4️⃣ *சங்கீதம் 34: தேவனுடைய பாதுகாப்பில் அடைக்கலம் தேடுதல்*
🔺சங்கீதம் 34 நன்றி செலுத்துதல் மற்றும் போற்றுதலின் ஒரு சங்கீதம். சங்கீதக்காரன் தேவனிடம் அடைக்கலம் தேடுவது, பயம் மற்றும் பிரச்சனையில் இருந்து விடுதலை கண்டது போன்ற தனிப்பட்ட அனுபவங்களை எண்ணுகிறார்.
🔺தேவனுடைய பிரசன்னத்தை நாடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அவருடைய ஏற்பாட்டில் நம்பிக்கை வைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பார்க்கும்படி மற்றவர்களை ஊக்குவிக்கிறார்.
🔺இருதயம் நொறுங்குண்டவர்களுக்கு தேவன் சமீபமாயிருக்கிறார், ஆவியில் நொறுங்குண்டவர்களைக் காப்பாற்றுகிறார் என்பதை இந்த சங்கீதம் நமக்குக் கற்பிக்கிறது. துன்பக் காலங்களில் அவரைச் சார்ந்திருக்கவும், அவருடைய அன்பான கவனிப்பில் ஆறுதல் பெறவும் இது நமக்கு நினைவூட்டுகிறது.
♥️ *வாழ்க்கை பாடங்கள்*
💥சங்கீதம் 31-34, தேவனுடைய பாதுகாப்பில் அடைக்கலம் தேடவும், அவருடைய இறையாண்மையில் பலத்தைக் காணவும், மன்னிப்பின் ஆசீர்வாதங்களை அனுபவிக்கவும், அவருடைய நன்மையில் மகிழ்ச்சியடையவும் கற்றுக்கொடுக்கிறது.
*‼️கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாருங்கள்‼️*
பிரின்சஸ் ஹட்சன்
தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை
🌟 *உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது* 🌟
☄️ *"உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டு பண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!”* (சங்கீதம் 31:19).
⚡ சங்கீதம் 31, வசனங்கள் 1-8 இல், தாவீது தேவன் மீது *தனக்குள்ள நம்பிக்கையை* வெளிப்படுத்தி, தேவனுடனான தனது *உறவின்* அடிப்படையில் தற்போதுள்ள பிரச்சனைகளில் இருந்து தன்னை *விடுவிக்கும்படி* கோருகிறான். வசனங்கள் 9-13 இல், தாவீது தனது துன்பங்களைப் பற்றியும், தான் தனிமைப்படுத்தப்பட்டதைப் பற்றியும் விவரிக்கிறான். 14-18 வசனங்களில், அவன் தனது எல்லா பிரச்சனைகளின் மத்தியிலும் *தேவன் மீதுள்ள நம்பிக்கையை* பதிவு செய்கிறான். வசனங்கள் 19-24 இல், தேவனுக்கு மகிமையைச் செலுத்தி, அவரைத் துதித்து, தன்னையும் மற்றவர்களையும் *அவர் மீது நம்பிக்கை வைக்கும்படி* அறிவுறுத்தி அவன் சங்கீதத்தை *வெற்றியுடன்* முடிக்கிறான்.
⚡ தாவீது கர்த்தரருளும் அளவற்ற நன்மையைக் குறித்துப் போற்றுகிறான். *தேவனுக்குப் பயந்து அவரை நம்புகிறவர்களுக்கு இத்தகைய ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.* அவர்கள் பெறும் ஆசீர்வாதங்களை அனைவரும் பார்த்துத் தெரிந்துகொள்வார்கள். ஏசாயா மூலம் தேவன் வெளிப்படுத்துகிறார்: *"அவர்களைப் பார்க்கிற யாவரும் அவர்கள் கர்த்தரால் ஆசீர்வாதம் பெற்ற சந்ததியென்று அறிந்துகொள்வார்கள்."* (ஏசாயா 61:9).
⚡ தேவன் எரேமியா மூலம் வெளிப்படுத்துகிறார்: *"அவர்களுக்கு நன்மைசெய்யும்படி, நான் அவர்களை விட்டுப் பின்வாங்குவதில்லையென்கிற நித்திய உடன்படிக்கையை அவர்களோடே பண்ணி, அவர்கள் என்னைவிட்டு அகன்றுபோகாதபடிக்கு, எனக்குப்பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்திலே வைப்பேன்."* (எரேமியா 32: 40) தேவனுக்குப் பயப்படும் பயம் அவரிடமிருந்து தடையில்லாமல் நன்மையைக் கொண்டுவரும்.
⚡ பவுல் விசுவாசிகளை எச்சரிக்கிறான்: *"இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்."* (1 கொரிந்தியர் 15:19). ஆகவே, கிறிஸ்தவர்களாகிய நமக்கு, *இம்மையைவிட மறுமையில் அதிக ஆர்வமும் விருப்பமும் உண்டு.* பரிசுத்த ஆவியானவர் பேதுரு மூலம் வெளிப்படுத்துகிறார்: *"அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரம் உங்களுக்கு பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது."* (1 பேதுரு 1:4-5).
⚡ வேதம் பதிவுசெய்கிறது: *“தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் செய்பவைகளை, நீரேயல்லாமல் உலகத்தோற்றமுதற்கொண்டு ஒருவரும் கேட்டதுமில்லை, செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளைக் கண்டதுமில்லை.”* (ஏசாயா 64:4).
⚡ தேவன் பவுல் மூலம் வெளிப்படுத்துகிறார்: “எழுதியிருக்கிறபடி: *தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை. நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்.”* (1 கொரிந்தியர் 2:9-10). தேவன் தம்முடைய பிள்ளைகளுக்காக ஆயத்தம்பண்ணினவைகள் மனிதனுடைய புரிதலுக்கு அப்பாற்பட்டவைகள். பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே அவைகளை நமக்கு வெளிப்படுத்த முடியும்.
⚡ இயேசுவின் வார்த்தைகள்: *"பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள். உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்."* (மத்தேயு 6:20-21). நாம் பூமிக்குரிய நன்மைகளை விட பரலோக நன்மைகளையே விரும்ப வேண்டும்.
🔹 *தேவன் தம் பிள்ளைகளுக்காக ஆயத்தம் பண்ணினவைகளைப் பரிசுத்த ஆவியின் மூலம் நாம் உணர்ந்திருக்கிறோமா?*
🔹 *நாம் முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுகிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்:*
1️⃣ *தேவனுக்குப் பயப்படும் பயம் அவரிடமிருந்து தடையில்லாமல் நன்மையைக் கொண்டுவரும்.*
2️⃣ *அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரம் நமக்காக பரலோகத்தில் வைக்கப்பட்டுள்ளது.*
3️⃣ *தேவன் தம்முடைய பிள்ளைகளுக்காக பரலோகத்தில் ஆயத்தம்பண்ணினவைகள் மனிதனுடைய புரிதலுக்கு அப்பாற்பட்டவைகள்.*
4️⃣ *நாம் பூமிக்குரிய நன்மைகளை விட பரலோக நன்மைகளையே விரும்ப வேண்டும்.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👨👩👦👦
🙋♂️🙋♀️ நாம் *சங்கீதம் 31** இல் இருக்கிறோம்
*INTO YOUR HANDS, O LORD*
*கர்த்தாவே, உமது கைகளில்*
📝 சங்கீதக்காரன் மிகுந்த பயத்தில் இருப்பதாகத் தெரிகிறது. அவன் எதிர்கொள்ளும் ஆபத்து, அவனது எதிரிகளால் அவனுக்குப் போடப்பட்ட சில வலையாகும். *(வ. 4*).
📍 இந்த சங்கீதம் உடனடி மீட்புக்கான பிரார்த்தனையாகும், அதற்காக அவர் தேவனை தனது *கன்மலை மற்றும் கோட்டை* (வ 1-4) என்று அழைக்கிறார்.
1️⃣ "உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்" ( *வ 5*)
📍 அவரை விடுவிக்க வேண்டும் என்பது ஒரு வேண்டுகோள்.
📍 கர்த்தர் தன் ஜெபத்திற்கு பதிலளிப்பார் என்பதில் உறுதியாக இருக்கிறார் ( *வ 7-8* )
📍 *இயேசு அதே சொற்றொடரை மேற்கோள் காட்டினார்* : *பரிசுத்த லூக்கா எழுதின சுவிசேஷசம் 23:46 படி* "பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்" என்றார்.
📝 சங்கீதக்காரன் மீண்டும் தேவனிடம் இரங்கி கேட்கிறான் மற்றும் அவனது சரீர, பிராண மற்றும் ஆத்துமாவின் துயரத்தை முன்வைக்கிறான் ( *வ 9-10* )
📍 அனைத்து துன்பங்கள் மற்றும் ஆபத்துகள் இருந்தபோதிலும், சங்கீதக்காரன் கர்த்தர் மீதான தனது நம்பிக்கையை தைரியமாக உறுதிப்படுத்துகிறார் ( *வ. 14*)
2️⃣ "என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது" ( *வ 15* )
📍அவர் தனது ஆவியை மட்டும் வைக்க வில்லை *ஆனால்* அவரது காலங்கள் - நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை தேவனிடம் வைத்துவிட்டார்.
📍 அவர் ஒரு நேர்மறையான அறிக்கையை வெளியிடுகிறார், இது பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் இளைப்பாறுதல் ஆகியவற்றைப் பற்றி பேசுகிறது.
🙋♂️🙋♀️ அன்பான திருச்சபையே, காலம் என்பது தேவனிடமிருந்து கிடைத்த பரிசு, அதை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்ற சில எதிர்பார்ப்புகளுடன் கர்த்தர் நமக்கு காலத்தைத் தருகிறார்.
📍 நாம் காலத்தைப் பயன்படுத்தலாம் அல்லது அதை நாம் புறக்கணிக்கலாம்; நாம் நமது காலத்தை நமக்கு மட்டுமென பதுக்கலாம் அல்லது அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் ; நாம் நமது காலத்தை முதலீடு செய்யலாம் அல்லது அதை வீணடிக்கலாம்.
📍 காலத்தைக் கொண்டு நாம் எதைச் செய்ய முடிவு செய்தாலும், *"அதற்கு நாம் தேவனிடம் கணக்குக் கொடுக்க வேண்டும்"* என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
தேவனுக்கே மகிமை 🙌
✍️ *மார்க் போஜே*
அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳
தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்
*🍒சிப்பிக்குள் முத்து🍒*
இன்றைய வேத
வாசிப்பு பகுதி -
*சங் : 31 - 34*
*🫐முத்துச்சிதறல் : 167*
*👍கர்த்தர் நல்லவர்* என்பதை *ருசித்து பாருங்கள் :,* "அவர்மேல் நம்பிக்கையாய் இருக்கிற மனுஷன் *பாக்கியவான்".*
(34 : 8)
🌲🦩🌲🦩🌲
அநேகர் இந்நாட்களில் "கர்த்தர் நல்லவர்" என்னும் வாக்கியத்தை பயன்படுத்துவதை நாம் காண்கிறோம், கேட்கிறோம்.
இவர்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் இறைவன் நடப்பித்த ஒவ்வொரு கிரியைகளை நினைவு கூறுகின்றனர் என்பதற்கான சான்றாக இதனை தங்கள் வாழ்வின் ஓர் அடித்தளமாக...
நன்றி உணர்வின் கோட்பாடாக அதை அடிக்கடிக்கு உச்சரிப்பதும்...
பிறரை வாழ்த்துவதற்கு பயன்படுத்துவதுமாக திகழ்கின்றனர்.
🥦🦋🥦🦋🥦
இங்கு தாவீதரசன் இக்கவியை பாடும் ஒவ்வொருவரும் தன்னை போன்றே கர்த்தரின் மகத்துவங்களை அனுபவபூர்வமாக அனுபவிக்க ஓர் அழைப்பினை விடுவிப்பதாக இருக்கிறது.
இந்த 34ம் சங்கீதம் தாவீதரசன் பெலீஸ்தியா நாட்டு அதிபதி எனப்படும் அபிமலேக்குக்கு முன்பாக பயத்தின் நிமித்தம் வேஷம் மாறினபோது அவனால் வேறொரு இடத்துக்கு துரத்தி விடப்படுகையில் பாடிய சங்கீதம் என தலைப்பு அடைப்பு குறிப்பு மூலம் அறிகிறோம்.
*கர்த்தர் தாவீதை எல்லா காலங்களிலும் தப்புவித்து வழிநடத்தியதை அரசன் நினைவு கூறுகிறார்.*
அதற்க்கு நன்றி கடனாக துதியினால் நிறைந்த ஓர் வாழ்வை ஆண்டவருக்கு காணிக்கையாக படைக்கிறார். (34 : 1, 2) *அடுத்து பாருங்கள்...* தன்னோடு கூட சேர்ந்து கர்த்தரை யாவரும் ஏகமாக மகிமை படுத்த அறைக்கூவல் விடுக்கிறார். என் முன்னோர்கள் கர்த்தரை நோக்கி பார்த்து பிரகாச மடைந்தார்கள், இந்த ஏழையாகிய நான் கூப்பிட்டேன், கர்த்தர் கேட்டார், கர்த்தரின் தூதன் அவருக்கு பயந்து நடப்போரை சூழ எப்பொழுதும் காவல் காப்பது மட்டுமல்ல, அவர்களை விடுவிக்கிறார் என்றெல்லாம், ஓர் சாட்சியாக கவி படிக்கொண்டே இருக்கையில்....
*கர்த்தர் நல்லவர் என்பதை* "ருசித்து பாருங்கள்" என்றோடு நில்லாமல்....*அவர்மேல் நம்பிக்கை வைக்கிற மனுஷன் / மனுஷி "பாக்கியவான் / பாக்கியவதி"* என்றும் கூட பாடுகிறார்.
🥏🥏🎊🥏🥏
இந்த 34ம் சங்கீதத்தை....
*4 பிரிவுகளாக நாம் பிரிக்கலாம்.*
*1🍧*
வ : 1 - 7 கர்த்தரை தேடியதற்கு பதில் கிடைத்ததற்காக நன்றியோடு அவரை மகிமை படுத்துதல்.
*2🍧*
வ : 8 - 10 கர்த்தருக்கு பயந்து நடப்பொருக்கு யாதோறு குறையும் இராது. அவர்கள் என்றைக்குமே *"கர்த்தர் நல்லவர்"* என்பதை உணர்ந்தும், பல விதங்களில் அனுபவங்கள் வாயிலாக அனுபவித்து, அறிந்தும் இருப்பார்கள்.
*3🍧*
வ : 11 - 14 கர்த்தருக்கு பயப்படுதல் என்றால் என்ன என்பதை விவரிக்கும் பகுதி இது.
*4🍧*
வ : 15 - 22 நீதியாய் நடப்போர் மாத்திரமே கர்த்தரின் பணிவிடையாளர் என்னும் தகுதியுடையோராக, மீட்படைய பாத்திரராய் திகழ இயலும்.
🍏🐟🍏🐟🍏
*🪶ருசித்தலும், பார்த்தலும்*
🌷இங்கு *ருசித்து பார்த்தல்* என்னும் சொற்க்களான...
*ருசி* என்பதைற்கு... *டா ' ஆம்* என்னும் எபிரெய வார்த்தை பயன்படுத்த பட்டுள்ளதாக அறிஞர்கள் கூறுகின்றனர். அதற்கான அர்த்தம்... *உண்ணுதல், தெரிந்து கொள்ளுதல் / உணர்ந்துக்கொள்ளுதல்* என்பதாக நாம் அறிகிறோம்.
அடுத்து... *பார்த்தல்* என்பதற்கு...*றா ' ஆ* என்னும் எபிரேய வார்த்தை பயன்படுத்த பட்டுள்ளது.
அதற்க்கு....
*ஒன்றை பார்த்தல், தரிசித்தல், நோக்குதல், ஒருவரை ஒருவர் கவனிப்பது போன்ற அர்த்தங்கள் கற்பிக்க படுகின்றது.*
🌹🌽🌹🌽🌹
கர்த்தருடைய *நல்ல தன்மையை* முழுமையாக அனுபவ பூர்வமாக உணருங்கள் என்பதாகவும் எடுத்து கொள்ளலாம்.
🌽🌹🌽🌹
🥒🥒🥒🥒
🍇இந்த பவுதீக உலகில்...
*பார்வை மற்றும் ருசி போன்றவை*...
எம் ஊணியல் உணர்வுகளோடு சம்பந்தப்பட்டவையாகும்
அதே போல தான்....
*விசுவாசம் / விசுவாச வாழ்வு* என்பது... ஆவிக்குரிய உலகோடு எம்மை தொடர்பு கொள்ள வைக்கும் ஓர் *ஆவிக்குரிய உணர்வாக இருக்கிறது.*
முழுமையாக அனுபவ பூர்வமாக கர்த்தரை மற்றும் கர்த்தரின் அதிசய நடத்துதல்களை நாம் உணர்ந்து கர்த்தரை துதிக்க வேண்டுமாம்.
*👍எப்படி தீ என்றால் சுடத்தான் செய்யும், தண்ணீர் என்றால் / ஐஸ் கட்டி என்றால் குளிர தான் செய்யும் என்னுந் தன்மையை* நாம் கல்வி பாடங்களின் வழியாக அறிவு பூர்வமாக அறிந்திருந்த பொழுதும்....
ஒருவர் அதை பரிசோதித்து அறியாத வரை ஏட்டு சுரைக்காயாக, கறிக்கு உதவா தன்மையோடு தான் இருக்குமோ....
அது போலவே கர்த்தரை, கர்த்தரின் காரியங்களை நாம் ருசிப்பது மற்றும் பார்ப்பது என்பது எம் வாழ்வோடு பின்னி பிணைந்த தன்மையாக திகழும்போதே நாம் மெய்யான உணர்வோடு அவரை துதித்து போற்ற இயலும் என்கிறார்.
🔥🐛🔥🐛🔥
*ஒரு மனிதரை குறித்த காரியங்கள் பலவற்றை நீங்கள் அறியலாம்.... ஆனாலும் அவரை நீங்கள் தனிப்பட்ட விதமாக முழுமையாக அறிந்து விட்டீர்கள் என பொருள்படாது என்கிறார்... டெட் டக்கர் என்பவர்.*
அது போலவே நாமும் கூட...
எமது வாழ்வில் ஆண்டவரின் மகத்தான கிரியைகளை அனுபவித்து உணர்ந்து கொள்ளாமல்... அநேகராகிய நாம் இறைவனின் அதிசய நடத்துதல்... மற்றும் அதிசயமான கிரியைகளை எம் வாழ்வில்... தனிப்பட்ட விதமாக அனுபவியாமல் வெறும் மூளை அறிவை மாத்திரமே உடையவர்களாக இருந்து விட்டோமானால்.... அவரை போற்றுவதில் மற்றும் உயர்த்தி மகிமை படுத்துவதில் ஒரு போலித்தனமே மிஞ்சி கிடக்கும்.
🍓✅️🍓✅️🍓
இறைவனையும் அவர் வார்த்தையின் வல்லமையையும் ஒரு காலத்தில்
*அறிந்து உணர்ந்து ருசித்தவர்கள்* தங்களுக்கு வரும் / வந்த / வரபோகிற *சோதனை காலகட்டத்தில் ஆண்டவரை மறுதலித்து பின் மாற்றம் கண்டு விட்டனர் என்றால்.....*
அவர்களை புதுப்பிப்பது மனிதர்களாகிய எம்மால் ஒரு போதும் கூடாத காரியமாக இருப்பினும்....
*அவர்கள் கிரியையும், ஒரு கால கட்டத்தில்.... பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ் செய்தது/ இப்பொழுதும் செய்து வருவது போன்றவற்றால்.... அவரது நாமத்திற்க்காக "அவர்கள் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தை"*
மறந்து விடுகிறதற்கு....
*தேவன் அநீதியுள்ளவர் அல்லவே* என்பதாகவும் விவிலியம் கூறுகிறது.
*(எபி - 6 : 4 - 10)*
இங்கும் பாருங்கள்...
*ருசித்தவர்கள்* என்பது....
தங்கள் பரிசுத்தத்தை காத்து கொண்டு....
தங்களை தேவனுக்காக அர்ப்பணித்து வாழ ஒப்புவித்தவர்கள்.....
தங்கள் சொந்த வாழ்வில் தனிப்பட்ட விதத்தில் அனுபவத்தில் தேவனை உணர்ந்தவன்/ள் என்று அர்த்தமாம்.
ஆகையால்....
*நன்மையானவைகளும் இரட்சிப்புக்குரியவைகளும்*
அப்படி பட்டோரில் இருக்க தான் செய்யுமாம்.
🍒🐟🍒🐟🍒
நாம் ஒவ்வொருவரும் *கர்த்தர் தயையுள்ளவர்*
என....
*ருசி பார்த்து இருப்போமாகில்....*
அதாவது, கர்த்தர் என்றுமே தயையுள்ளவர் தான். அல்லது அவர் கிருபையுள்ளவர் என்று கூட எடுத்து கொள்வோம் ! இறைவன் என்பவர் எம் வாழ்வில் நடபிக்கும் யாவுமே நமது நன்மைக்கு ஏற்ற விதத்தில்....*அதை முடிவுக்கு கொண்டு வருவார்* என்ற நம்பிக்கை மட்டுமே, *கர்த்தர் நல்லவர்* என்று ருசித்த நிலையாகும்.
❣️❣️✅❣️❣️
இந்த 34ம் சங்கீதத்தின் 20ம் வாக்கியத்தில்.... நீதிமானுடைய எலும்புகளை கர்த்தர் காப்பாற்றுவதாகவும்.... அவைகளில் ஒன்றும் முறிக்க படுவதில்லை என்பதை....
*கிறிஸ்தவர்கள் எவருக்கும் விபத்துக்கள், எலும்பு முறிவுகள் ஏற்பட கூடாது* போன்ற ஓர் தவறான புரிதல் உள்ளது.
ஆனால்.....
*இந்த வாக்கியம், இயேசு கிறிஸ்துவுக்கு மட்டுமே பொருந்தும்.*
இயேசுவாகிய பஸ்கா நமக்காக அடிக்கப்பட்டு, கல்வாரியில் தொங்கிய போது நடந்த நிகழ்வினை.....
இந்த சங் - 34 : 20ன் நிறைவேறுதலாக அப். யோவான் கண்ணோக்கி விளக்குகிறார்.
*(யோ - 19 : 32 - 36)*
இயேசுவின் தியாக பலியை / மீட்பை விசுவாசித்து அவரை இரட்சகராக ஏற்று கொண்டு, *பரதீசு பாக்கியம் பெற்றிருந்த ஓர் கள்ளனுடைய கால் எலும்புகள் முறிக்கப்பட்டன.*
ஆனால்..... *இயேசுவின் கால் எலும்புகளோ முறிக்கப்படவில்லை.*
இதன் மூலம் பஸ்கா ஆட்டு குட்டியாக அவர் இருப்பது நிரூபணமாகியது.
*(1கொரி - 5 : 7)*
ஆகையால்... பிரமாண நியதிக்கேர்ப்ப, அவர் கால் எலும்புகள் முறிக்கப்படாதிருக்கும் ஓர் சூழல் அங்கு ஏற்பட்டது.
*(யாத் - 12 : 46)*
இதை நாம் மனதில் இருத்தி கொள்ள வேண்டியது அவசியப்படுகிறது.
மேசியா ஒருவருக்கே பொருந்த கூடிய வாக்கியத்தினை எடுத்து.....
எல்லோருக்குமானதாக நினைத்து கொள்ளுவது... தவறான புரிதலுக்கு நேரே நம்மை வழிநடத்தி விடும்.
🎈🎈🍀🎈🎈
நம் வாழ்வில் கர்த்தர் எவ்விதம் நல்லவராகவே திகழ்ந்துள்ளார் என்பதை நாம் அனுபவியாமல்....
*கர்த்தர் நல்லவர் 👌அவர் ரொம்ப ரொம்ப நல்லவர்* என பொய்மையாக கூறுவது, இல்லை எழுதுவது தகாத செயலாகி போகும்.
🍎எமது கிறிஸ்தவ வாழ்வு, கர்த்தருக்குள்ளாக எப்படிப்பட்ட ருசியுள்ளதாக நமக்கு / எனக்கு இருக்கிறது என்பதை நாம் சரியாக புரிந்து செயல்பட ஆண்டவர் எமக்கு அருள் புரிவாராக !
நாம் வளரும்படி..... புதிதாய் பிறந்த குழந்தைகளை போல *அனுதினமும் திருவசனம்* என்னும் களங்கமில்லா ஞான பாலின் மேல் நாள் தோறும் வாஞ்சை கூடி கொண்டே போக வேண்டும்.
*இது இறை நியதிகளில் ஒன்றாக்கும்.*
அப்படி செய்வோமானால்.....
அவர் மேல் நம்பிக்கை கொண்டு பாக்கியர்களாக திகழ வேண்டுமெனில்....
நமது கிறிஸ்தவ வாழ்வு நமக்kகே முதலாவது ருசியுள்ளதாக இருக்க வேண்டியது அவசியம்.
🧐சிலருக்கு அது கசப்புள்ளது.
🧐சிலருக்கு அது மதுரமானது.
🧐சிலருக்கு அது காரமானது.
🧐சிலருக்கு அது எந்த விதமான உப்புசப்புமில்லாதது.
*🔥நமக்கு கர்த்தர் நல்லவர் 👌👌👌என்றால்....*
இந்த கிறிஸ்தவ வாழ்வும் மதுரமானது தானே❓ *யோசிப்போம்.*
*✍️Sis. Martha Lazar*
*NJC, Kodairoad*
Thanks for using my website. Post your comments on this