================
பாடல் பிறந்த கதை:
=================
பாமாலை: It is well with my soul / நன்மைக்கே, எல்லாம் நன்மைக்கே
வசனம்:
ரோமர் 8:28
சங்கீதம் 25:12,13
ஆசிரியர்: ஹொரேஷியோ ஸ்பாபோர்டு
இசை: பிலிப் P. பிளிஸ்
பாமாலை: நன்மைக்கே எல்லாமே நன்மைக்கே
1). துன்பங்கள் என்னை நெருக்கி வந்தாலும் இயேசுவில் நிம்மதி பெற்றேன்
என்ன நேர்ந்தாலும் அவர் வாக்குப்படி நன்மைக்கே எல்லாமே நன்மைக்கே...
- நன்மைக்கே எல்லாமே நன்மைக்கே
2).சாத்தான் என்னை சோதிக்க வந்தபோதும் உன் வார்த்தையால் வென்றிடுவேன்
இயேசு எனக்காய் சிந்திய ரத்தத்தால் எனக்காய் நிச்சயம் வெற்றியே...
- நன்மைக்கே எல்லாமே நன்மைக்கே
3).என் பாவம் சிவேர் என்றிருந்தாலும் இயேசுவின் திரு இரத்தத்தால
பஞ்சை போல வெண்மை ஆகிடுமே
தோத்திரம் தோத்திரம் இயேசுவே...
- நன்மைக்கே எல்லாமே நன்மைக்கே
4). மேகங்கள் பாயைப்யை போல் உருண்டோடி விடும் எக்காளம் தொனிக்கையிலே மீட்பர் நமக்காய்
வானில் வந்திடுவார்...
- நன்மைக்கே எல்லாமே நன்மைக்கே
ஹொரேஷியோ ஸ்பாபோர்டு என்கிற தேவ மனிதர் அமெரிக்காவின் சிக்காகோ நகரில் ஒரு சிறந்த வழக்கறிஞராகவும், தொழிலதிபராகவும் பணிபுரிந்து வந்தார். உலக பிரசித்திபெற்ற அமெரிக்க சுவிசேஷகர் D.L.Mody க்கு சிறந்த நண்பராக விளங்கியவர்.
ஸ்பாபோர்டு திருச்சபையில் ஓய்வு நாள் பாடசாலை ஆசிரியராகவும் பணியாற்றினார். ஆண்டவர் இவருக்கு அன்னா என்கிற மனைவியும் நான்கு மகள்களையும் ஒரு ஆண் மகனையும் கொடுத்து ஆசீர்வதித்திருந்தார்.
தெளிந்த நீரோடை போல அமைதியாய் ஓடின இவரது இல்லற வாழ்வில் 1870 ஆண்டு முதல் கடும் புயல் வீச ஆரம்பித்தது. ஆழ்ந்த பக்திமானாக விளங்கிய ஸ்பாபோர்டுவை அடுக்கடுக்காய் துன்பங்கள் தாக்கின. தான் அருமையாய் நேசித்த 3 வயது நிரம்பிய ஒரே மகனை 1870இல் ஸ்கார்லெட் என்ற காய்ச்சலுக்கு பறிகொடுத்தார். அதிலிருந்து அவர் முழுமையாய் மீளுமுன் 1871 ஆண்டில் இவர் வசித்துவந்த சிகாகோ மாநகரம் தீக்கிரையானது. இந்த துயர சம்பவத்தில் 300க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தார்கள். இதில் இவருடைய வணிக வளாகமும் முழுமையாக தீக்கிறையானது.
இந்நிலையில் தனது நெருங்கிய நண்பரான D.L.Mody இங்கிலாந்தில் உயிர் மீட்சி கூட்டங்கள் நணத்த இருந்ததாலும், மகனையும் சொத்துக்களையும் இழந்ததால் மனதளவில் பாதிக்கப்பட்ட தனது மனைவியின் உடல் நிலைக்கு இங்கிலாந்து சென்றுவந்தால் நன்மை பயக்கும் என்பதால் 1873 இல் தனது குடும்பத்துடன் இங்கிலாந்து செல்ல திட்டமிட்டார். ஆனால் கடைசி நேரத்தில் அவசர அலுவல் குறுக்கிட்டதால் தனது மனைவி அன்னாவுடன் நான்கு குமாரத்திகளையும் அனுப்பிவைத்து, தான் சீக்கிரத்தில் அவர்களுடன் சேர்ந்துகொள்வதாக கூறி வழியனுப்பி வைத்தார்.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக அன்னா சென்ற கப்பல் அட்லாண்டிக்கடலில் மற்றொரு கப்பலுடன் மோதி 12 நிமிடங்களுக்குள் கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் 226 பேர்கள் உயிரிழந்ததில் ஸ்பாபோர்டுவின் 4 குமாரத்திகளும் அடங்குவார்கள். இந்த விபத்தில் 47 பேர் மட்டும் உயிர் பிழைத்திருந்ததில் திருமதி. அன்னா ஸ்பாபோர்டும் ஒருவர்.
வேல்ஸ் நாட்டை சென்றடைந்த திருமதி. அன்னா, தனது கணவருக்கு துயர செய்தியை அறிவிக்க நான் மட்டும் காப்பாற்ற பட்டேன் என்று தந்தி அனுப்பினார். இந்த செய்தியை கேட்டதும் வேல்ஸ் நாட்டில் தனித்து வாழும் தன் மனைவியை ஆறுதல் படுத்த ஸ்பாபோர்டு உடனே புறப்பட்டார்.
ஸ்பாபோர்டு பயணம் செய்த கப்பல் அட்லாண்டிக் மகா சமுத்திரத்தில் தன்னுடைய நான்கு குமாரத்திகள் கடலில் மூழ்கி இடத்தை கப்பல் சென்றடைந்தபோது, தன்னுடைய நான்கு பிள்ளைகளையும் ஒரே நேரத்தில் பறி கொடுத்த ஸ்பாபோர்டுவின் உள்ளம் சுக்குநூறாக உடைந்தது.
இப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் ஆண்டவரே வசைபாடிய அவரது அன்பு உள்ளத்தை சந்தேகித்த மனமொடிந்து போவதே மனித இயல்பாக செய்யக்கூடிய காரியம் ஆனால் தனது அறையை சென்றடைந்தபோது அவரது உள்ளத்தை உலகம் தரக்கூடாத ஆண்டவரின் சமாதானம் நிறைத்தது எனவே விசுவாச வீரராக வெற்றி வீரராக காலத்தால் அழியாத பின்வரும் விசுவாச வார்த்தைகளை எழுதினார் நன்மைக்கே, எல்லாமே நன்மைக்கே
தன் உள்ளத்தில் பொங்கிய உணர்ச்சிகளை இப்பாடலின் நான்கு சரணங்களாக உடனே எழுதினார்.
இதைக்குறித்து ஸ்பாபோர்டு தன் சகோதரிக்கு எழுதிய கடிதத்தில் என் அன்பு பிள்ளைகள் கடலில் மூழ்கி விட்டதாக நான் சற்றும் நினைக்கவில்லை; மாறாக என் செல்ல ஆட்டுக்குட்டிகள் பத்திரமாக பாதுகாப்பாக இருக்கும் நித்தியத்திற்கு நாமும் விரைவில் செல்லப்போகிறோம். அதுவரை தேவனுக்கு நன்றி செலுத்தி, அவரை சேவிக்கவும், அவரது அன்புக்காகவும், அளவற்ற இறக்கத்திற்காகவும், அவரை துதிக்கவும் நமக்கு தருணம் தந்திருக்கிறார். நான் என் உயிர் உள்ளளவும் கடவுளை துதிப்பேன் என்று எழுதியுள்ளார்.
ஸ்பாபோர்டுக்கு ஆறுதல் சொல்ல, அவரது நண்பர் D.L மூடி வேல்ஸ் நாடு வந்து சந்தித்தார். அப்பொழுது நன்மைக்கே, எல்லாமே நன்மைக்கே, தேவசித்தம் நிறைவேறுவதாக என்று கண்ணீரோடு அமைதியாகக் கூறினார்.
ஸ்பாபோர்டு தம்பதியருக்கு அதன்பின் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன.
ஸ்பாபோடும் அவரது குடும்பத்தினரும் வேறு சில நண்பர்களும் 1881 இல் எருசலேமுக்கு குடிபெயர்ந்தனர். இதை பற்றி ஸ்பாபோர்டு கூறும் பொழுது, என் ஆண்டவர் எருசலேமில் வாழ்ந்து பாடுபட்டு வெற்றி சிறந்தார். அவ்வாறே நானும் வாழ்ந்து, பாடுகள் அனுபவித்து, வெற்றிபெற கற்றுக் கொள்ள விரும்புகிறேன் என்றார். ஏழை எளியவர்களுக்கு சேவை செய்வதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது. ஆகவே சிறுவர்களுக்கு புகலிடம் கொடுக்கும் தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்து அனேக சிறுவர்களுக்கு ஆதறவாய் இருந்தார்.
ஸ்பாபோர்டு எழுதிய இந்த பாடலுக்கு, பிரபல இசை வல்லுநர் பி.பி ப்ளீஸ் மிகச்சிறப்பாக இசையமைத்தார். இந்த பாடல் சீர்திருத்த திருச்சபைகளில் அதிகமாக பாடப்படுகிறது. குறிப்பாக அடக்க ஆராதனைகளிலும், நினைவு ஆராதனைகளிலும், நம்பிக்கையூட்டும் ஆறுதல் பாடலாக பாடப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் மன ரம்யமாய் இருக்க கற்றுக் கொண்டேன் என பவுல் அப்போஸ்தலன் கூறியது போல, வாழ்ந்து காட்டிய ஸ்பாபோர்டுவின் வாழ்க்கை நமக்கு ஒரு சவால்!
தமிழ் கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் பரிசுத்த வேதாகமம் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறதோ அதுபோல கிறிஸ்தவ பாமாலைகளும், கீர்த்தனைகளும் அதிக முக்கியத்துவம் பெற்று, திருச்சபையின் இதயதுடிப்பாக இருக்கிறது. ஆங்கிலம் மற்றும் ஜெர்மானியம் போன்ற மொழிகளில் மேல் நாட்டவரால் எழுதப்பட்டு, மேல்நாட்டு இசையுடன் திருச்சபையில் பாடி வந்த பக்தி பாடல்களை தமிழில் மொழிபெயர்த்து, பாமாலைகள் என்றும் கர்நாடக இராகம், தாளம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, தமிழில் இயற்றப்பட்ட பக்தி பாடல்கள் கீர்த்தனைகள் என்று அழைக்கப்படுகிறது.
சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், ஞான பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து, புத்தி சொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரை பக்தியுடன் பாடுங்கள் என்ற (எபேசியர் 5:9) வார்த்தையின்படி, நம்முடைய ஆலய ஆராதனைகளில் இந்த பாமாலைகள் மற்றும் கீர்த்தனைகளை அதன் பொருளை உணர்ந்து நாம் பாடும்போது நம்முடைய இதயங்கள் ஒருமுகப்படுத்தப்பட்டு உள்ளம் உருகுகிறது, பக்தி உணர்வு பெருகி ஆழ்ந்த இறை உணர்வு பெறுவதற்கும் துணை செய்கிறது. இந்த பாடல்கள் நம்முடைய ஆவிக்குறிய வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
==============
Story behind the Hymn:
==============
Hymn: It is well with my soul
Scriptures:
Psalm 31:14
Psalm 46:1
Romans 5:2-4
1 Peter 4:19
Theme: Assurance, Comfort, Hope, Peace
Author: Horatio Gates Spafford (1828-1888)
The year had been filled with tragedy when Horatio Spafford, a 43 year old Chicago businessman, pennd this hymn.
He and his wife were still grieving over the death of their son when the Great Chicago fire struck and caused them financial disaster.
He realised that his family needed to get away, so that fall he decided to take his wife and four daughters to England. His wife and daughters went ahead and the SS Ville du Havre; he planned to follow in a few days.
But on the Atlantic the Ville du Havre was struck by another ship and sank within 12 minutes. More than 200 lives were lost, including the Spaffords' four daughters.
When the survivors was were brought to shore at Cardiff Wales Mrs. Spafford cable her husband with the words Saved alone
Spafford booked passage on the next ship. It was while crossing the Atlantic that safford penned the words to the Hymn: When sorrows like sea billows roll... it is well, it is well with my soul
It Is Well With My Soul
When peace like a river attendeth my way
When sorrows like sea billows roll
Whatever my lot, Thou hast taught me to say
It is well, it is well with my soul
It is well With my soul
It is well, it is well with my soul
Though Satan should buffet, though trials should come
Let this blest assurance control
That Christ (yes, He has) has regarded my helpless estate
And has shed His own blood for my soul
My sin, oh the bliss of this glorious thought (a thought)
My sin, not in part, but the whole (every bit, every bit, all of it)
Is nailed to the cross, and I bear it no more (yes!)
Praise the Lord, praise the Lord, O my soul!
And, Lord, haste the day when the faith shall be sight,
The clouds be rolled back as a scroll,
The trump shall resound and the Lord shall descend,
Even so – it is well with my soul
Thanks for using my website. Post your comments on this