Type Here to Get Search Results !

தங்க காகிதம் | யோசேப்பின் கனவு | தாயின் அன்பு | பிரசங்க குட்டி கதைகள் | Jesus Kutty Stories | Jesus Sam

ஓர் குட்டிக் கதை
தங்க காகிதம்

ஒரு அறையில் கட்டுக்கட்டாய்ப் பழைய வண்ணக் காகிதங்கள் இருந்தன.

ஒரு காலத்தில் பளபளப்பாக இருந்து இப்போது தூசி படிந்து பொலிவிழந்து காணப்பட்டது.

புதிய காகிதங்களாக இருந்த போது தினமும் புரட்டப்பட்டு அலைக்கழிக்கப்பட்டது போல் அலைக்கப்படாமல் நிம்மதியாய்க் கட்டப்பட்டு அறைக்குள் அடைந்து கிடப்பது அந்தக் காகிதங்களுக்கு மிகவும் ஆனந்தமாக இருந்தது.

பல ஆண்டுகளாய்ப் பூட்டிக்கிடந்த அந்தக் காகித குடோனை ஒரு மனிதர் விலைக்கு வாங்கினார். வாங்கியவருக்கு ஒரு ரகசியத் தகவல் கிடைத்தது .


அந்த குடோனின் சொந்தக்காரர் தங்கத்தையும் காகிதம் போலாக்கி நிறம் மாற்றி அந்த குடோனில் உள்ள குப்பைக் காகிதங்களுடன் கலந்து வைத்திருக்கிறார் என்பது தான் அது.

அவர் தம்முடைய ஆட்கள் சிலருடைய உதவியுடன் அதிலிருந்த சில காகிதங்களை எடுத்துப் பரிசோதித்துப் பார்த்தார். அவர்களால் ஒன்றுமே கண்டுபிடிக்க முடியவில்லை.




ஒவ்வொரு தாளாக எடுத்து சோதிக்கப் பல நாட்களாகும் என்பது மிகத் தெளிவாகத் அவர்களுக்குப் புரிந்தது . இந்த விஷயம் வெளியே தெரிந்தாலும் ஏராளமான பிரச்சனைகள் வரும்.




அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்து அனைத்தையும் எரித்து விட்டால் ?




உடனே தம்முடைய எண்ணத்தை செயல்படுத்தும் படி அவற்றையெல்லாம் தம்முடைய செங்கல் சூளைக்கு எடுத்துச் சென்றார். பல வருடங்கள் கழித்து வெளி உலகத்தைப் பார்ப்பதில் காகிதங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி.




ஆனால் பழையபடி புரட்டப்படுவோமோ என்ற பயமும் இருந்தது. எல்லாம் ஓரிடத்தில் குவிக்கப்பட்டுத் தீ மூட்டப்பட்டன. இதை அவை எதிர்பார்த்திருக்கவில்லை. எல்லாக் காகிதங்களும் அலறத் துவங்கிவிட்டன.




"எரியுதே , எரியுதே " என்று காகிதங்கள் அலறிக் கொண்டே சாம்பலாகின. இடையிடையே சில காகிதங்கள் மட்டும் எரியாமல் , நிறம் மட்டும் மாறிக்கொண்டிருந்தன.




"ஐயோ , மற்ற காகிதங்கள் போல நாமும் எரிந்து சாம்பலாகியிருக்கலாமே , வேதனை முடிந்து போயிருக்குமே " என்று கதறின .




ஆனால் கடைசி வரை அவை எரிந்து போகவேயில்லை. காகிதக் குவியல் இப்போது சாம்பல் குவியலாக் கிடந்தது. நெருப்பும் அணைந்திருந்தது .




மேலே பூசப்பட்ட பூச்சு , தூசியெல்லாம் நீங்கி அந்தக் காகிதங்கள் மட்டும் பிரகாசமான மஞ்சள் நிறத்தில் ஒளிர்ந்தன. அவற்றாலேயே தங்களுடைய அழகை நம்ப முடியவில்லை.




உரிமையாளர் , ஒவ்வொரு காகிதத்தையும் பக்குவமாய்த் திரட்டி சுத்தப்படுத்தி அழகாய்த் தம்முடைய பெட்டகத்தில் வைத்துக் கொண்டார். இப்போது ஒரு காகிதம் சொன்னது ,




"நெருப்பின் வெப்பத்தைக் கடந்து போகாதிருந்திருந்தால் நானும் குப்பையோடு குப்பையாய் அல்லவா கிடந்திருப்பேன் ? இப்போது விலை உயர்ந்த பொருட்கள் வைக்கப்பட்டுள்ள பொக்கிஷ அறையில் உயர்வான இடம் கிடைத்ததே ! " என்று.




என் அன்புக்குாியவா்களே,

உங்கள் கிறிஸ்தவ வாழ்வில் நீங்கள் காகிதமாய் இருந்திருந்தால் கருகி சாம்பலாகியல்லவா போய் இருப்பீா்கள்.




நீங்கள் பொன்னைப் போன்ற விசுவாசமுள்ளவா்களாய் இருப்பதினால் தான் உங்கள் வாழ்வின் எல்லா பகுதிகளிலும் வந்த இத்தனை சோதனைகளிலும் தாங்கிக் கொள்ள முடிந்தது.




இதுபோல் தினம் ஒரு குட்டிக்கதை உங்கள் whatsappக்கு வேண்டுமென்றால் தொடர்புக்கு +918148663456




அக்கினியைப் போலுள்ள இந்த சோதனை காலங்களில் குப்பைப் போன்ற உலகம், மாம்சம் சுயம், பிறவி குணம், பிசாசின் கிாியைகளான பாவம் ஆகியவைகள் அழிக்கப்பட்டன.




இப்போதோ உங்கள் விசுவாசம் பொன்னாய் ஜொலிக்கும்படி இருக்கிறது. இனிமேல் நீங்கள் பொன்னாய் ஜொலிக்கப் போகிறீா்கள்.




அழிந்துபோகிற பொன்

அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப் பார்க்கிலும் அதிக விலையேறப் பெற்றதாய் இருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசு கிறிஸ்து வெளிப்படும் போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்" 1 பேதுரு 1 :7




விசுவாசத்தினால் ...

நடைபெறக்கூடிய காாாியங்கள்..




1.எல்லாவித சந்தோஷம்..

2. சமாதானம்... (ரோமர் 15:13)

3. நீதிமான் பிழைப்பான்

4. தேவநீதி (ரோமர் 1:17)

5. கா்ப்பம் தாிக்க பெலன் (எமி. 11:11)

6. ராஜ்யங்களை ஜெயித்தார்கள்

7. நீதியை நடப்பித்தார்கள்

8. வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள்

9. சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்

10. அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள்

11. பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள்

12. பலவீனத்தில் பலன்கொண்டார்கள்

13. யுத்தத்தில் வல்லவர்களானார்கள்

14. சேனைகளை முறியடித்தார்கள்.

(எபிரேயர் 11:33 -34)




விசுவாசமே

கிறிஸ்தவ வாழ்வுக்கு பிரதானமாயிருக்கிறது விசுவாசத்தினால் வராத யாவும் பாவமே என்ற வசனத்தின்படி உங்கள் எல்லா விஷயங்களும் விசுவாசத்தினால் வருவதாக. (ரோ 14:23)

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் !!!


ஓர் குட்டிக் கதை
யோசேப்பின் கனவு

ஒரு நகரத்தில் பெரிய வியாபாரி ஒருவர்

இருந்தார். அவர் சரக்குக் கொள்முதலுக்காக வெளியூர் செல்ல வேண்டி ஒரு நாள் இரவு கார்

பயணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்.




அப்பொழுது அவருடைய கடையை இரவில்

காவல் காக்கும் காவல்காரன் விரைந்து வந்து அவரிடம் வணங்கி நின்றான்.




அவனைக் கண்ட வியாபாரி என்ன செய்தி ஏன் இப்படி வேகமாக வருகின்றாய்? என்று கேட்டார்.




அக்காவல்காரன் பணிவுடன்

ஒரு செய்தியை உங்களிடம் சொல்வதற்காக

தான் வேகமாக வந்தேன்.




நேற்று இரவு நான் ஒரு பயங்கரமான

கனவு கண்டேன். அந்தக் கனவில் நீங்கள் பயணம் செய்யும் கார் ஓர் ஆற்றில் விழுந்து விடுகின்றது.




அதில் பயணம் செய்த டிரைவர் உள்பட நீங்களும் இறந்து விடுகின்றனர். ஆகையால் உங்கள் பயணம் இன்று வேண்டாம். உங்கள்

பயணத்தை பிறகு ஒரு நாள் வைத்துக்

கொள்ளுங்கள், இதை சொல்லத்தான்

ஓடி வந்தேன். என்று கூறினான்.




வியாபாரி அதைக் கேட்டதும் சிறிது சிந்தித்தார்.

பிறகு தம் பயணத்தை மற்றொருநாள்

வைத்து விட்டார்.




காவற்காரன் கூறியபடியே வியாபாரி பயணம்

செய்வதாக இருந்த கார், டிரைவர் ஓட்டி சென்ற போது ஓர் ஆற்று வெள்ளத்தில் விழுந்து விட்டது.

அதில் பயணம் செய்வதர்கள் மற்ற பயணிகள் எல்லோரும் வெள்ளத்தில் சிக்கி இறந்து விட்டனர்.




வியாபாரி அதனை அறிந்து நல்லவேளையாகத்

தப்பினேன் என்று எண்ணி மகிழ்ந்தார்.




அதன் பின்னர் காவற்காரன் கனவு கண்டதால் இரவில் நன்றகத் தூங்கி இருக்கிறான்.

எனவே இவன் இரவுக் காவலுக்கு தகுதி

அற்றவன் என்று நினைத்து அக்காவற்காரனை வேலையிலிருந்து நீக்கி விட்டார்.




வேலையிலிருந்து நீக்கப்பட்ட காவல்காரன்

கனவு கண்டதன் பலன் இது என்று நினைத்து வருத்தத்துடன் வீட்டிற்குச் சென்றான்.




என் அன்புக்குாியவா்களே,

இந்த முதலாளி முட்டாளாயிருக்கிறான். வேலை நேரத்தில் தூங்குவது வாட்ச் மேனுக்கு சாியில்லையென்றாலும் அவனை வேறு வேலைக்கு மாற்றியிருக்கலாம். அவன் இரவு நேரத்தில் இன்னும் ஏதாவது கனவு கண்டு சொல்வான் என்றுகூட நினைத்திருக்கலாமே.




ஆனால் பைபிளில் அநேகர் கனவு கண்டிருக்கிறாா்கள். அதில் விசேஷமாக ஒருவன் கனவு கண்டான். அவன் பேர் யோசேப்பு. அவனுக்கு அம்மா இல்லை. அவன் கண்ட கனவு அப்படியே பல வருஷங்கள் கழித்து அது மாறாமல் அது நிறைவேறியது.




அந்த கனவை அவன் சகோதரா்கள், அவன் தகப்பன் ஆகியோருக்குக் கூறினதால் அவர்கள் அவன் கனவினிமித்தம் அவன் சகோதரா்கள் அவனை மரண பகையாய் பகைத்தாா்கள்.




ஒருநாள் அந்த கனவு கண்ட யோசேப்பு அவன் சகோதராிடத்தில் மாட்டிக் கண்டான் அவர்கள் அவன் கனவு நிறைவேறாமலிருக்க அவனை கொலை செய்ய தீா்மானித்து அவனை எண்பது அடி குழியில் தூக்கிப் போட்டாா்கள்.




அந்த குழியில் இருந்து தேவன் சில மனிதர்கள் மூலம் அற்புதமாய் தூக்கியெடுத்து அவனை எகிப்தின் வணிகா்களுக்கு இருபது வெள்ளி காசுக்கு விற்கப்பட்டு எகிப்துக்கு கொண்டு போகப்பட்டான்.




எகிப்தின் அரண்மனையில் அதிகாாியிடம் விற்கப்பட்டான். அங்கே கா்த்தா் அவனோடே இருந்து சகல காரியங்களையும் கற்றுக் கொடுத்து சிறந்த காாியசித்தியுள்ளவனாய் மாற்றினாா்.




இரண்டாவதாக,

அவனுக்கு ஒரு மிகப் பொிய சோதனை வந்தது.

தேவன் அந்த சோதனையிலிருந்தும் ஜெயிக்கும்படி செய்தாா். அதனால் அவனை அந்த சோதனைக்குக் காரணமான அந்த அதிகாாியின் மனைவி மிகவும் கோபப்பட்டு அநியாயமாக அபாண்டமானக் குற்றம் சாட்டினாள்.




அதன் விளைவாக அவன் கால்கள் இரண்டையும் இரும்பு விலங்குகளினால் கட்டி அவனை அடித்து ஒரு காவற்கிடங்கில் கொண்டு போய் போட்டாா்கள்.




அங்கே போடபட்டவா்கள் ஒருவரும் உயிரோடு திரும்பினதில்லை. ஆனால் முதல் ஆபத்தாகிய குழியிலிருந்தும் இரண்டாவது வந்த சோதனை யிலிருந்தும் காப்பாற்றின தேவன் இந்த மூன்றாம் சோதனையிலும் ஜெயிலா் மூலமாக காப்பாற்றினாா்.




யோசேப்போடே கா்த்தா் இருந்து அவனை ஜெயிலா் கண்களில் தயவு கிடைக்கச் செய்து ஜெயிலுக்கு அதிகாாி யாக்கினாா்.




எகிப்தின் அரண்மனையிலிருந்து ஜெயிலுக்கு இரண்டு போ் அவர்கள் செய்த குற்றத்தினிமித்தம் வந்திருந்தார்கள். அவர்கள் மூலமாய் எகிப்தின் அரசியல், அரண்மனை, பாா்வோன் ராஜா ஆகியவைகளைக் குறித்து, அறிய செய்தாா்.




ஜெயிலுக்கு வந்த இருவரும் கனவு கண்டார்கள். அதனால் மிகவும் கலங்கினாா்கள். யோசேப்புக்கு காத்தர் தந்திருந்த கனவின் அா்த்தத்தை சொல்லக் கூடிய வரத்தால் அவர்களுக்கு அதன் அா்த்தங்களைக் கூறினான். .




To Get Daily Story In What's App Contact +917904957814




அதன்படியே ஒருவன் மூன்று நாளில் அரண்மனையில்

மீண்டும் வேலைக்குச் சோ்ந்தான். மற்றவன் மூன்றுநாளில் தூக்கில் போகப்பட்டான்.




அதன் பின் சில வருஷம் கழித்து ராஜாவுக்கு ஒரு கனவு வந்தது. அதனிமித்தம் ராஜா மிகவும் கலங்கினாான். அப்போது ஜெயிலிருந்து மீண்டும் வேலையில் சோ்ந்தவன் ராஜாவிடம் யோசேப்பைப் பற்றி கூறினான்.




அவன் வரவழைக்கப்பட்டு களவின்அா்த்தத்தை ராஜாவுக்குக் கூறினான். அதினால் அந்த கனவின் அா்ந்தத்தின்படியே ராஜாவுக்கு அடுத்தபடி மிகப் பெரிய அதிபதியாக ராஜா அவனை ஏறழபடுத்தினாா்.




தனது பதினேழு வயதில் பொிய அதிபதியாகிற அவன் கண்ட கனவு தனது முப்பத்தெட்டாவது வயதில் நிறைவேறியது. கனவை தந்தது தேவன் தான்.




அந்த கனவையே தன் தாிசனமாக கொண்டதால் தேவன் அவனோடிருந்து அவனுக்கு எதிர்கால விஷயங்களை பலா் மூலம் கற்றுக்கொள்ள செய்து , அவனுக்கு விரோதம் செய்த சகோதரா்கள்,, அதிகாாியின் மனைவி, ஆகியோரால் வந்த சோதனைகள் யாவற்றிலும் கூடவே இருந்து விடுவித்து மிகப் பெரிய அதிபதியாய் மாற்றினாா்




என் அன்புக்குாியவா்களே,

கனவை சாதாரணமாய் நினைத்து விடாதீர்கள். தொல்லையின் திரட்சியால் வரும் கனவுகளைத் தவிரமற்ற எல்லா கனவுகளுமே எதிா்காலத்தைக்

குறித்தவைகளாகவோ,அல்லது எச்சாிப்பைக் குறித்ததாகவோ தான் இருக்கும்.




சொப்பனத்தை அதாவது கனவை தாிசனமாக வைத்து வாழுங்கள் அந்த முட்டாள் முதலாளியைப் போல மாறி விடாதீர்கள். யோசேப்பைப் போல தேவன் உங்களை உயர்த்துவாராக!!

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் !!!


ஓர் குட்டிக் கதை
தாயின் அன்பு

ஒரு மலைப் பிரதேசத்தில் மலை உச்சியில் ஒர் இனத்தாரும், அடிவாரத்தில் இன்னொரு இனத்தாரும் வாழ்ந்து வந்தார்கள். இரு இனத்தாருக்கும் எப்போதும் பகை.




ஒரு முறை உயரத்தில் இருந்தவர்கள் அடிவாரத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையைக் கடத்தி விட்டார்கள்.




சமூகத்திலிருந்த சில பெரியவர்கள், மலைமேல் இருந்த சமூகத்தினரிடம் சமாதானமாகப் போய் பேசினால் குழந்தையை மீட்டு வந்து விட சாத்தியம் இருப்பதாக ஊரில் உள்ள




இளைஞர்களிடம் அறிவுரை கூறினர்.

இளைஞர்கள் சிலர் உடனே முன்வந்தார்கள். அவர்கள் கடினமான வேலைகள் செய்து பழகியவர்கள். எந்தச் செயலை எடுத்தாலும் அதை விடாமுயற்சியுடன் முடிக்கும் மனப்போக்கைக் கொண்டவர்கள்.




ஊர் பெரியவர்களும், இந்தச் செயலை முடிக்க இவர்கள்தான் சிறந்தவர்கள் என்று அவர்களை வாழ்த்தி அனுப்பி வைத்தார்கள்.




To Get Daily Story in What's app contact +917904957814




இளைஞர்களும் ஆர்வத்துடன் கிளம்பினார்கள். அந்த மலையின் சில பகுதிகள் மிகவும் செங்குத்தானவை. அந்த இளைஞர்களால் அப்படி ஒரு பகுதியை ஏறிக் கடக்க முடியவில்லை.




விடாமுயற்சியுடன் அப்பகுதியைக் கடக்க பலமணி நேரமாக பல வழிகளில் முயன்று கொண்டிருந்தனர். களைத்துப் போனால் ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் முயற்சித்தனர்.




அப்போது தம் ஊரைச் சேர்ந்த ஒரு பெண் மேலேயிருந்து கடத்தப்பட்ட குழந்தையைத் தூக்கிக் கொண்டு கீழே இறங்கி வருவதைப் பார்த்தார்கள்.




அவள் அருகில் வந்தவுடன் "நாங்கள் ஏற சிரமப்பட்ட மலையை நீ ஏறிச் சென்றுவிட்டாயே! எப்படி?" என்று வியப்புடன் கேட்டார்கள்.




அவள் இடுப்பிலிருந்த குழந்தையைக் காட்டி "இது உங்கள் குழந்தை இல்லை. என் குழந்தை. அதுதான் வித்தியாசம்" என்று பதில் சொன்னாள்.




என் அன்புக்குாியவா்களே,

குழந்தையைப் பெற்ற தாய்க்கும் மற்றவா்க்கும் வித்தியாசத்தை பாிந்து கொள்ளுங்கள். ஒரு தாய் தன் குழந்தையை காப்பாற்ற முடிவெடுத்து விட்டால் எப்படிப்பட்ட ஆபத்துகளையும் கொடூர மலைகளையும் கூட சா்வ சாதாரணமாக தாண்டி போய் விடுவார்கள். அப்படிப்பட்ட மன தைரியம் தேவன் தாய்மாா்களுக்கு கொடுத்திருக்கிறாா்.




தன் குழந்தைகளின் நலனுக்காக தன் உயிரைக் கொடுத்து காப்பாற்றி விடும் அசத்தலான துணிவு தாயிடம் மட்டுமே உண்டு.




இதனால் தான் என்னவோ நம் நாட்டிற்கு தாய்நாடு, மொழிக்கு தாய்மொழி நம் இந்திய நாட்டிற்கு பாரத தாய், தாயைப் போல பிள்ளை என்றெல்லாம் சொல்லுகிறாா்கள். என யூகிக்க மு டிகிறது.




பைபிள் சொல்கிறது

ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறக்க மாட்டாள். (ஏசாயா 49:15)




புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை (குடும்பத்தைக்) கட்டுகிறாள்: புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.

நீதிமொழிகள் 14:1




குடும்பத்தைக் கட்டுவதும், அதாவது தன் புருஷன் பிள்ளைகளுக்காக தன்னை வெறுத்து அவர்களுக்கு வேளாவேளைக்கு உணவு சமைத்துக் கொடுப்பதும் அவர்களை வேலை செய்ய விடாமல் தானே எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்வதும்,




தன் புருஷனை, தன் பிள்ளைகளை மனதில் நேசிதது அதை நல்ல காரியங்களை அவர்களுக்குச் செய்து வெளிப்படுத்துவது, பைசாவை மிச்சப்படுத்தி அதை




பிள்ளைகளுக்கும், புருஷனுக்கும் தேவைப்படும் போது கொடுத்து அவர்களின் பண கஷ்டத்தை போக்கி சந்தோஷப்படுத்துவதும், அவர்களுக்கு விரோதமானவா்களிடம் வாிநது கட்டிக்கொண்டு பேசுவதும்,




அவர்களுக்காக உபவாசமிருந்து ஜெபிப்பதும், அவர்கள் நல் வாழ்க்கையை விரும்புவதும், அவர்களை தன் வார்த்தையில் சாப்பிடாமல் ஆசீா்வாதத்தையே கொடுப்பதும் தன்னை விட புருஷன், பிள்ளைகளை நேசிக்கும் ஆகியவைகளை யெல்லாம் செய்வதே ஒரு தாயின் குடும்பததை கட்டும் செயலாகும்.




அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்: அவள் புருஷனும் அவளைப்பார்த்து: அநேகம் பெண்கள் குணசாலிகளாயிருந்ததுண்டு: நீயோ அவர்கள் எல்லோருக்கும் மேற்பட்டவள் என்று அவளைப் புகழுகிறான். (நீதிமொழிகள் 31:28,29(




கைகளினாலே குடும்பத்தை இடித்து விடுகிற தாய்களும் உண்டு இவர்களை உலகம் பேய் என்றே அழைக்கும்.அந்தளவுக்கு பேயின் குணம் உள்ளவா்களாய் இருப்பாா்கள். எந்தவேலையும் தன் புருஷனுக்கோ, பிள்ளைகளுக்கோ செய்ய மாட்டார்கள்.




உணவு கூட சமைத்து தரமாட்டார்கள் அதிகாலை யிலேயே புருஷனுக்கும் பிள்ளைகளுக்கும் சாபம் கெடுக்க ஆரம்பித்து விடுவாா்கள்.




இப்படிப்பட்ட வர்கள் சமுதாயத்திலேயும், தன்னுடைய சபைகளிலும் சண்டை பண்ணுகிற சகோதிாிகளாயும், கோள் சொல்கிற வாயையும் குற்றபிடிப்கிற கண்களையும் உள்ளவா்களாய் அலைவாா்கள்.




வருமானத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பாா்கள். கஞ்சத்தனமாக இருப்பாா்கள் அடுத்தவர்களின் பொருளை அபகாிக்கிற வா்களாயிருப்பாா்கள்.




மொ.த்ததில் இவர்கள் தங்கள் செயல்களினால் குடும்பத்திற்கு அவமானத்தையும், கேவலத்தையும் உண்டுபண்ணுகிறவா்களாய் இருப்பாா்கள்.




இதற்கெல்லாம் காரணம் அவர்கள் கடந்த நான்கு தலைமுறையில் உள்ளவர்கள் அப்படி இருந்திருப்பாா்கள். அவர்கள் தலைமுறை சாபமே இப்படி கேவலமாக இவர்களை நடக்க வைக்கிறது.




இப்படிப்பட்ட

இவர்கள் தாங்கள் செய்வது, நடந்து கொள்வது சரியில்லை என்பதை வசனங்கள் மூலமாய் தங்களை உணர்ந்து தேவனுக்கு முறழறிலுமாய் ஒப்புக்கொடுக்க வேண்டும்.




அப்போது ஆவியானவா் அவர்களில் கிாியை செய்து இயேசுவின் இரத்தத்தில் கழுவப்படவும் சுத்திகாிக்கப்படவும், ஆவியானவாின் அபிஷேகத்தைப் பெற்று அவரால் நடத்தபட செய்வாா்.




அப்போதிலிருந்து அவர்கள் அந்த கெட்ட நடக்கையின் சாபம் நீங்கி குடும்பத்தை கட்டுகிறவா்களாய் மாறி விடுவார்கள் என்பது நிச்சயம்.. எனவே உலகத்தில் குடும்ப வாழ்வில் தாயின் அன்பே சிறந்தது.

நீங்கள் ஆசீா்வதிக்கப்பட்டவர்கள் !!!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.