ஓர் குட்டிக் கதை
முனிவரும் நான்குபேரும்
ஒரு ஊருல ஒரு முனிவர் இருந்தாரு.,
ஒரு நாளு அவரைப் பாக்க நான்கு பேரு வந்திருந்தாங்க.,
முனிவர்கிட்ட அந்த நான்கு பேரும்”சாமி உலகத்த புரிஞ்சிக்கவே முடியலயே ,அதுக்கு என்ன வழின்னு” கேட்டாங்க.,
அதுக்கு அந்த முனிவர்”தெரியலயேப்பா’ன்னு”
ஒத்த வாில பதில் சொல்லிட்டாரு.,
ஆனாலும் வந்தவங்க விடாம.
”என்ன சாமி நீங்க எவ்ளோ பெரிய முனிவர் இதுகூடத் தெரியலைன்னு
சொல்லுறிங்களே!” அப்டின்னு கேட்டாங்க.
அதுக்கு முனிவர் அவங்ககிட்ட “சரி இப்ப நான் உங்கள ஒரு புஷ்பக விமானத்துல அழைச்சிகிட்டுப் போவேன். போற வழியில ஒரு காட்சிய உங்களுக்கு காட்டுறேன்.
அது பத்தி உங்களோட கருத்த நீங்க சொல்லணும், கருத்து தப்பா இருந்துச்சின்னா இந்த விமானம்உங்கள கீழ தள்ளிவிட்டுடும்” அப்டின்னாரு.,
சரின்னு அந்த நான்கு பேரும் முனிவரோட சேந்து புஷ்பக விமானத்துல ஏறினாங்க.
கொஞ்ச தூரம் போன பிறகு ஒரு இடத்துல ஒரு புலி ,குட்டிபோட்டுக்கிட்டு இருந்திச்சி. குட்டி போட்ட பிறகு தனக்கும் தன் குட்டிகளுக்கும் பசிக்கு இரை தேடி அந்தப் பக்கமா போனது.
அந்தப் பக்கமா ஒரு மான், அதுவும் குட்டி போட்டுட்டு பசிக்கு தண்ணீர் குடிக்கிறதுக்கு வந்திச்சி.,மானப் பாத்த அந்தப் புலி சட்டுன்னு அது மேல பாஞ்சி அதைக் கொன்னு தானும் சாப்பிட்டு தன்னோட குட்டிகளுக்கும் குடுத்திச்சி. அத சாப்பிட்ட அந்தப் புலிக்குட்டிங்களுக்கு சந்தோசம்.
இந்தப்
பக்கமா தன் அம்மாவ பறிகொடுத்த மான்
குட்டிகளுக்கு வருத்தம். இந்தக் காட்சிய அவங்கிட்ட காட்டின முனிவர் இதப் பத்தி உங்க கருத்து என்ன’ன்னு கேட்டாரு.,
அதுக்கு அந்த 4 பேருல ஒருத்தர் “இது ரொம்ப தப்பு. மான் குட்டிகளுக்கு இப்ப தாய் இல்லாம போச்சேன்னு சொன்னாரு”. உடனே அவர அந்த விமானம் கீழத் தள்ளி விட்டுடுச்சு.
அடுத்த ஆளப்பாத்து முனிவர் கேட்டாரு,”ஏம்பா உன் கருத்து என்னன்னு?ஏற்கனவே ஒருத்தன் கீழ விழுந்தத பாத்த ஆளு இவன், ” இல்ல இது சரிதான், ஏன்னா புலிகளுக்கு இரையாகத்
தானே மான்கள் இருக்குது அப்படின்னு சொன்னாரு.
ஒடனே அவரையும் விமானம் கீழ தள்ளி விட்டுடுச்சு.,
இதையெல்லாம் பாத்துக்கிட்டு இருந்த அடுத்த ஆளு ரொம்ப உசாரா சொன்னான்,
“ இது தப்பும் இல்ல சரியும் இல்லன்னு”. ஒடனே அவனையும் அந்த விமானம் கீழ தள்ளிடிச்சி.
கடைசியா
விமானத்தில இருந்தவனைப் பாத்து கேட்டாரு முனிவர்,”ஏம்பா உன் கருத்து என்னன்னு”,
அதுக்கு
அவன்,”தெரியலயே சாமின்னு”, சொன்னான்.
இந்த மொற அவன அந்த விமானம் கீழ தள்ளல. இரண்டு பேரையும் சொமந்துகிட்டு பயணம் செய்ய ஆரம்பிச்சிச்சி.
என் அன்பு வாசகரே,
நம்ம வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும் தேவையில்லாத விசயங்கள தொிஞ்சிக்க முயற்சி செய்யாதீாகள். அதினால்
நமக்கு ஒரு பிரயோஜனமுமில்லை
அது போல தனக்கு அறிவில்லாத விஷயங்கள் குறித்து தனக்கு தொிஞ்சமாதிரி பேசுறதும் நம்மை பலபேர் மத்தியில் முட்டாளாக்கி விடும். தெரியாத விஷயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்...
To Get Daily Story in What's App contact and pray contact +917904957814
தேவையற்ற விஷயங்களை சிந்திக்காதபடி ஒவ்வொரு நாளும் ஆவியானவா் உங்களை நடத்த முற்றுலுமாய் உங்களை ஒப்புக்கொடுங்கள்.
வாழ்க்கையின் நெளிவு, சுளிவு , என்ன என்பதையும், எதைப் பேசவேண்டும் எதைப் பேசக்கூடாதென்பதையும் உங்களுக்குப் போதித்து நடத்துவாா்.
நீங்கள் ஒரு வார்த்தை பேசினாலும் வெள்ளி தட்டில் வைத்திருக்கும் பொற்பழங்களுக்கு சமானமாய் பேச வைப்பார்.
ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம். (நீதி. 25:11)
நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன், உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். (சங்கீதம் 32:8)
இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே. (ஏசாயா 48:17)
எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். (ரோமர் 8:14)
பிலிப்பியா் 2:5-ல் சொல்லப்பட்டுள்ள..
கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தயை ஆவியானவா் உங்களுக்கு தந்து உங்களை அற்புதமாய் வழிநடத்துவாா்.
நீங்கள்ஆசீா்வதிக்கப்பட்டவர்கள் !!!
ஓர் குட்டிக் கதை
மனம் ஒரு குரங்கு
ஒரு சாமியாரின் ஆசிரமத்துக்கு நண்பர் ஒருவர் வந்தார். அவருக்கு உணவு கொடுக்க விரும்பிய சாமியார் தான் வளர்த்த குரங்கைப் பார்த்து இலை போடு என்றார்.
குரங்கு வாழை இலை எடுத்து வந்து போட்டது. உடனே சாமியார் தன் கையில் வைத்திருந்த பிரம்பால் குரங்கின் தலையில் ஓங்கி அடித்தார்.
சாதம் போடு என்றார். குரங்கு சாதம் கொண்டு வந்து பரிமாறியது. திரும்பவும் தலையில் அடித்தார்.
அவர் சொன்னதை எல்லாம் குரங்கு சரியாகச் செய்தாலும் அடி விழுந்து கொண்டே இருந்தது.
நண்பருக்கு மனம் பொறுக்கவில்லை. சாமி குரங்கு தான் நீங்கள் சொன்னதை எல்லாம் சரியாகச் செய்கின்றதே. அந்த வாயில்லாச் ஜீவனை ஏன் அடித்துத் துன்புறுத்துகிறீர்கள் என்று கேட்டார்.
சாமியார் எதுவும் பேசவில்லை. சிரித்து விட்டுப் பிரம்பை தானிருந்த பாயின் கீழே ஒளித்து வைத்தார்.
சற்று நேரத்தில் குரங்கு தாவிப் பாய்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவரின் தோளில் ஏறி இருந்தது. காதைப் பிடித்து இழுத்தது. தலை மயிரைப் பிரித்துப் பேன் பார்த்தது. சாப்பிட்ட இலையில் வாலைத் தொங்க விட்டு ஆட்டியது.
ஐயோ சாமி இந்தக் குரங்கின் தொல்லை தாங்க முடியவில்லை அடி போடுங்கள் என்றார் நண்பர்.
சாமியார் பிரம்பை எடுத்துக் குரங்கின் தலையில் அடித்தார். அது போய் ஒரு மூலையில் அமைதியாக இருந்தது.
என் அன்புக்குாியவா்களே,
இந்தக் குரங்கைப் போலத் தான் மனிதருடைய மனமும் மாம்சமும் விரும்புகிறபடியெல்லாம் செய்ய ஆரம்பிக்கும். பிரேக் இல்லாத வண்டியைப் போல அடுத்தடுத்து சிந்தனைகள் தாிகெட்டு ஓடும்.
அதினால் அது ஒரு அரண்களைக் கட்டுவது போல கெட்ட சிந்தைகளால் மனதை கட்டிவிடும். அப்போது எந்த ஒரு நல் விஷயங்களும் மனதின் உள்ளே செல்லாமல் அந்த அரண்கள் தடுத்து விடும்.
மனம் போன போக்கில் அந்த மனிதன் செயல்படுவான் அவன்மனம் பல கெட்ட சிந்தனைகளினால் நிறைந்து
இருக்கும். அதனால் கெட்ட வார்த்தைகளை பேசுகிறான். கோபப்படுவான். அவனுக்கு அவன் மனதை போன்றவா்களே நண்பா்களாய் இருப்பாா்கள். உலகத்தில் என்னென்ன கெட்ட பழக்கவழக்கங்கள் இருக்கிறதோ அதை எல்லாம் செய்வான்.
மனம் அவன் கட்டுபாட்டில் இருக்காது. உலகம், மாம்சம் சுயம், பிசாசின் கிாியைகளான பாவங்கள் அனைத்தும் அவனில் செயல்படும்.
இப்படிப்பட்ட மனிதர்கள் உலகத்தில் திரள் கூட்டமாய் இருக்கின்றனா். இவா்களை சாிபண்ண இயேசுவை தவிர வேறு யாருமில்லை. இதற்காகத்தான் இயேசு என்ற போில் தேவன் வந்தாா்.
இயேசு. கிறிஸ்துவா்களின் தெய்வம் மட்டுமல்ல. அவா் உலகிலுள்ள அத்தனைபேருக்கும் தெய்வமாக இருக்கிறாா்.
அவா் மதத்தை ஸ்தாபிக்க வரவில்லை. அவா் ஒவ்வொருவாின் மனதை மேற்கூறப்பட்ட குணங்களையுடைய மனிதர்களின் மனதை மாற்ற வந்தவர். மனிதனுடைய மனது தேவனின் ஆலயமாய் இருக்கிறது. ஆலயம் மட்டுமல்ல அது அன்பின் குமாரனின் ராஜ்ஜியமாயிருக்கிறது.
பவுல் சொல்கிறாா்.
நீங்கள் தேவனுடைய ஆலயமாய் இருக்கிறீர்கள் என்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாய் இருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீா்களா? ...
தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது. நீங்களே அந்த ஆலயம். (1 கொரிந்தியர் 3:16,17)
இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்.
(கொலோசெயர் 1:13)
எனவேதான் முதன் முதலாக தீா்க்கதாிசியான யோவான் ஸ்நானகன் மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது எனறு பிரசங்கம் பண்ணினான். (மத்தேயு 3:2)
பரலோகம் வேறு பரலோக ராஜ்ஜியம் வேறு ..
எப்படி 1947 க்கு முன் இங்கிலாந்தை மையமாக வைத்து இந்தியாவில் இராஜ்யத்தை எப்படி அமைத்தாா்களோ அதே போலத்தான். பரலோகத்தை மையாக வைத்து நம் ஒவ்வொரு மனங்களிலும் பரலோக ராஜ்ஜியத்தை தேவன் ஸ்தாபிக்கிறாா்.
To Get Bible Story & Bible Quotes Contact +917904957814
எனவே நம் மனது தேவனுடைய ராஜ்ஜியமாயிருக்கிறது.
நம்முடைய மனதில் தேவனுடைய ராஜ்ஜியதில் உள்ள நீதி, சமாதானம், பாிசுத்தாவியினால் உண்டான சந்தோஷம் ஆகியவைகளைக் கொடுக்கிறாா்.
பரலோகத்திலுள்ள சகலவற்றையும் நம் வாழ்வில் அனுபவிக்கத்தக்கதாய் பரலோகத்தில் உள்ள ராஜ்ஜியம் வருவதாக! என்று ஜெபிக்கக் கற்றுக் கொடுத்தாா். .
நீங்கள் ஜெபம்பண்ணும்போது..
பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக, உம்முடைய ராஜ்யம் வருவதாக, உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக,
(லூக்கா 11:2)
எனவே உங்கள் மனது தேவன் தங்கி உங்களை வழி நடத்தும் தேவனுடைய ஆலயமாயிருக்கிறது. அதுமட்டுமல்ல அன்பின் குமாரனுடைய ராஜியமான பரலோக ராஜ்ஜியமாயிருக்கிறது.
பரலோக சந்தோஷத்தை பூமியில் அனுபவிக்க உங்கள் நீங்கள் போய் கொண்டிருக்கிற வழிகளை விட்டு உங்கள் மனம் திருப்பப்பட வேண்டும் எங்கே திருப்பப்படவேண்டும்.????
இயேசுவின் வழியில் திருப்பப்பட வேண்டும்.
இதுதான் மனம்திரும்புதல் ஆகும்.
இயேசுசொல்கிறாா். :
நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
யோவான் 14:6
இயேசுவை தெய்வமாக ஏற்றுகொண்டு மனம் திரும்ப உங்கள் இருதயத்தை ஒப்புக்கொடுப்பீா் களைன்றால் உங்களின் மனதிலுள்ள அரண்கள்
போலிருக்கும் சிந்தனைகளை உடைத்து நிா்மூலமாக்கி ..உங்களிடத்தில் நல்ல நல்ல சிந்தனைகளை உருவாக்கி
வேதம் வாசித்து தியானம் செய்ய வைத்து வசனத்தின்படி வாழவும் நல்ல சிந்தனைகள் உடையவா்களாகவும் மாற்றி விடுவார்.
கீழ்காணும் வசனங்களின்படி உங்கள் மனதை மாற்றுவாா்.
பவுல் சொல்கிறாா்.
எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக் கேற்றவைகளாயிராமல், மனதில் சாத்தான் கட்டுகிற அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவை களாயிருக்கிறது.
அவைகளால்
நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.
(2 கொரிந்தியர் 10:4,5..)
உண்மை,ஒழுக்கம், நீதி, கற்பு, அன்பு, நற்கீர்த்தி புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொணடிருக்க செய்வாா். (பிலிப்பியர் 4:8)
எனவே இயேசு கிறிஸ்துவை ஏற்றுகொண்டு தேவனுடைய பிள்ளைகளாக மாறி இரட்சிப்பையும் மனதின் ஆசீா்வாதங்களையும் பெற்றுக் கொள்ளுங்கள்.
நம் மனது குரங்கைப் போலல்ல. இது தேவனை போன்றதாய் இருக்கிறது. நம் மனதை தேவனைப் போன்றே மாற்றிவிடுவாா்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் !!!
Thanks for using my website. Post your comments on this