Type Here to Get Search Results !

பரலோகத்தில் வீற்றிருக்கிற தேவன் சிரிக்கின்றார் | Help Others Rise | Daily Morning Short Devotion Tamil | Jesus Sam

சந்தோஷத்தைத் தெரிந்து கொள்ளுங்கள் | மற்றவர்களுடைய உயர்வுக்கு உதவி செய்யுங்கள் | பரலோகத்தில் வீற்றிருக்கிற தேவன் சிரிக்கின்றார் | உங்கள் அபிஷேகத்தில் நடந்திடுங்கள் | மனம் மறுரூபமாகுங்கள்
===================
சந்தோஷத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்
வாழ்வு தரும் வார்த்தை
=====================
"இது கர்த்தர் உண்டு பண்ணின நாள். இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்."*

சங்கீதம் 118:24*
சந்தோஷம் என்பது எப்பொழுதோ ஒரு முறை வருகின்ற ஒரு உணர்வல்ல. சந்தோஷம் என்பது ஒரு தீர்மானமாக இருக்கிறது. இது ஒவ்வொரு நாளும் நாம் எடுக்க வேண்டிய ஒரு தீர்மானமாக இருக்கிறது._*

*உங்களுடைய சந்தோஷத்தை இழப்பதற்கு நிறைய சந்தர்ப்பங்கள் உங்களுடைய வாழ்க்கை முழுவதும் வந்து கொண்டே இருக்கும். நாம் எல்லோருமே ஏமாற்றங்களின் வழியாகச் செல்கிறோம். நாம் நினைத்தபடி காரியங்கள் நடக்காமலிருக்கிற நேரங்களையும் நாம் எல்லோரும் கடந்து செல்கிறோம்.

*_ஆனால் சூழ்நிலைகள் நம்மை மனக்கசப்படையச் செய்து, நம்மை மனச்சோர்வுக்குள்ளாக்கும்படி இடம் கொடுப்போம் என்றால், பிறகு கடைசியில் நம் அன்றாட வாழ்க்கையில், அது போகிற போக்கிலேயே நாமும் போக ஆரம்பித்து விடுவோம்._*

*மாறாக, நீங்கள் வெற்றி வாழ்க்கை வாழ வேண்டுமென்றால், தேவன் முன் குறித்த விதத்தில் செழிப்பாய் வாழ வேண்டுமென்றால், உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் சந்தோஷமாய் அனுபவிக்கப் போகிறீர்கள் என்ற ஒரு தீர்மானத்தை நீங்கள் எடுக்க வேண்டும்.*

*_ஒவ்வொரு நாளும், உங்களுடைய சூழ்நிலைகள் எவ்வளவு மோசமாக இருந்தாலும், அதன் மத்தியில் சந்தோஷமாக இருக்கும்படி நீங்கள் தீர்மானிக்க வேண்டும். உங்களால் அது முடியும்._*

*இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணின நாள் என்பதை நினைவுகூர்ந்திடுங்கள்! இன்று களிகூர்ந்து மகிழ்ந்திருங்கள்! நீங்கள் சந்தோஷத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, நீங்கள் அவருடைய பெலனோடு உங்களை இணைத்துக் கொள்கிறீர்கள்.*

*_அது உங்களுடைய வாழ்க்கையின் எல்லா நாட்களிலும் வெற்றிக்கு நேராக உங்களைச் சுமந்து செல்லும்!_*

*நன்றி ஜெபம்:*
*_"பரலோகப் பிதாவே, உம்மை மகிமைப்படுத்தும்படி, உமக்காக வாழும்படி இன்னொரு நாளை எனக்குத் தந்திருக்கிறீர். உமக்கு நன்றி. எனக்கு எதிராக எது வந்தாலும், நான் உமக்குள் மகிழ்ந்து, களிகூர்ந்திருக்கும்படி தீர்மானிக்கிறேன். என்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் உம்முடைய சமாதானத்தையும், எதையும் மேற்கொள்ளும் வல்லமையையும் நீர் தந்திருக்கிறீர். உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தில், ஆமென்."_*

*இயேசுவே ஆண்டவர்! வெற்றி உங்களுடையதே!*
Bro. JOHN DURAI
WONDER WORD MINISTRY
MADURAI_INDIA.


============================
மற்றவர்களுடைய உயர்வுக்கு உதவி செய்யுங்கள்
வளமான வாழ்விற்கு வார்த்தை
============================
*அங்கேயிருந்த சேசாய், அகீமான், தல்மாய் என்னும் ஏனாக்கின் மூன்று குமாரரையும் காலேப் துரத்தி விட்டு,*

யோசுவா 15:14
    வாக்குப் பண்ணப்பட்ட தேசம், பிரிக்கப்பட்டு, இஸ்ரவேல் குடும்பத்தாருக்குக் கொடுக்கப்பட்டபோது, ஈஸியாய் சுதந்தரிக்கக்கூடிய ஒரு பகுதியை காலேப் கேட்டிருக்க முடியும்

*ஆனால் அவன் மலைப் பகுதியைக் கேட்டான். அங்கே மூன்று இராட்சதக் குமாரர்களை வசித்தனர். இஸ்ரவேல் ஜனங்கள், அங்கே செல்ல மறுத்தனர். அதன் விளைவாக, 40 வருடங்களாக, காலேப் அவர்களுடன் வனாந்திரத்தில் அலைந்து திரிந்தான். அவன் சொன்னான், “தேவன் எனக்கு வாக்குப் பண்ணின இந்த மலைத் தேசத்தைத் தாரும். இதுதான் என் சுதந்தரம்.”*

*_உங்களுக்கு வாக்குப் பண்ணப்பட்ட தேசத்தை நீங்கள் சுதந்தரிக்கவே இல்லை என்பதை உங்கள் வாழ்க்கையின் முடிவில் நீங்கள் உணருவீர்கள் என்றால், அதைக் காட்டிலும் பரிதாபமான நிலை வேறு இல்லை. சராசரி நிலையில், வழக்கமான வாழ்க்கையை, சௌகரியமாக வாழ்வதில் அல்ல. நோக்கத்தில்தான் வித்தியாசம் இருக்கிறது._*

*சாதாரணமாய் வாழ்கின்ற சௌகரிய சூழலை விட்டு நீங்கள் வெளியே வந்து ஒன்றைச் செய்ய வேண்டும். உங்களைக் குறித்ததல்லாத ஒன்றில் நீங்கள் ஈடுபாடு காட்ட வேண்டும். இன்னொருவருடைய வாழ்க்கை உயர, நீங்கள் உதவ வேண்டும். உங்கள் சக பணியாளருக்கு நீங்கள் ஆசீர்வாதமாக வாழ வேண்டும்.*

*_இராட்சதனைத் துரத்தியடிக்க வேண்டும். சௌகரியம் அல்ல, உயரிய நோக்கமே உங்கள் உந்துசக்தியாக இருக்க வேண்டும். அப்பொழுது நீங்கள் பெரிய மோசமான எதிரிகளை துரத்தியடித்து, உங்களுக்குரியதை நீங்கள் சுதந்தரிப்பீர்கள்._*

நன்றி ஜெபம்
    அன்பின் பரலோகப் பிதாவே, நீர் மகா உன்னதமான தேவன். என் பிரச்சனைகள், உம்மைக் காட்டிலும் பெரியவை அல்ல. உமக்கு நன்றி. மற்றவர்களுக்கு சப்போர்ட் செய்து, அவர்கள் உயரும்படி உதவி செய்ய, எனக்குக் கிருபை தாரும். இராட்சதர்களைத் துரத்தியடிக்கும்படி, எனக்குப் பெலன் தாரும். காலேபைப்போல, எனக்குரியதைத் தைரியமாய் சுதந்தரிக்கும்படி, எனக்கு உதவி செய்யும். உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தில், ஆமென்

*இயேசுவே ஆண்டவர்! வெற்றி உங்களுடையதே!*

Bro. JOHN DURAI
WONDER WORD MINISTRY
MADURAI_INDIA.


========================
பரலோகத்தில் வீற்றிருக்கிற தேவன் சிரிக்கின்றார்
வாழ்வு தரும் வார்த்தை
========================
பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார் (சிரிக்கிறார்)
    சங்கீதம் 2:4

*_பரலோகத்தில் வீற்றிருக்கிற தேவன் நகைக்கிறார் என்பதை எப்பொழுதாவது நீங்கள் கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா? அதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்._*

*இப்பொழுது தேவன் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார். அவர் எரிச்சலாக இல்லை. பொருளாதாரா வீழ்ச்சியைக் குறித்து அவர் கவலைப்படப் போவதில்லை. உங்கள் மீதும், என் மீதும் அவர் கோபமாக இல்லை. தேவன் சந்தோஷத்தினால் நிறைந்தவராய், சிங்காசனத்தில் வீற்றிருந்து, சிரித்துக் கொண்டிருக்கிறார்.*

*_"அவர் சத்துருவினுடைய அழிவின் நாள் வருகிறதைப் பார்க்கிறபடியால்," அவர் சிரித்துக் கொண்டிருக்கிறார் என்று சங்கீதம் 37-ல் சொல்லப்பட்டிருக்கிறது._*

*வேறு வார்த்தைகளில் சொன்னால், அவர் அந்தச் சம்பவத்தின் முடிவை அறிந்திருக்கிறபடியால், தேவன் சிரிக்கிறார் என்று சொல்லலாம். தேவனுக்கு எந்த ஒரு விஷயத்தின் முடிவும் எப்படியிருக்கும் என்பது தெரியும். நற்செய்தி என்னவென்றால், நீங்களும் நானும் ஜெயிப்போம். தேவன் எப்பொழுதும் நம்மை வெற்றி சிறக்கச் செய்கிறார்!*

*_ஒரு கிரிக்கெட் போட்டியின் முடிவு உங்களுக்கு ஏற்கனவே தெரியும். இப்பொழுது அந்தப் போட்டியை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்._*

*யார் அதில் ஜெயிக்கப் போகிறார்கள் என்பது ஏற்கனவே உங்களுக்கு தெரியும். ஜெயிக்கிற அணி எவ்வளவு பின்னடைவில் இருந்தாலும், அது பார்ப்பதற்கு எவ்வளவு மோசமான நிலையில் இருந்தாலும், நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள், எரிச்சலடைய மாட்டீர்கள். ஏன்? அதன் முடிவு ஏற்கனவே உங்களுக்குத் தெரியும். அதைத்தான் தேவன் இன்றைக்கு நம்மிடம் சொல்கிறார்.*

*_சூழ்நிலைகள் கடினமாகும்போது, பார்ப்பதற்கு எதுவும் ஒழுங்காக நடப்பதுபோல தெரியவில்லை எனும்போது, அதன் மத்தியிலும், ஒன்று நமக்குத் தெரியும். தேவனோடு சேர்ந்து, நாம் ஜெயிக்கிற அணியில் இருக்கிறோம்!_*

*தேவனுடைய தயவும், வல்லமையும், வெற்றியும் எப்பொழுதும் உங்களுக்குக் கிடைக்கக்கூடியதாய் இருக்கிறது என்பதை அறிந்தவர்களாய், இப்பொழுது நீங்களும் அவரோடு சேர்ந்து சிரியுங்கள்!*

நன்றி ஜெபம்:
    "பரலோகப் பிதாவே, உமக்குள் இளைப்பாறும்படி, உம்மையே நம்பி வாழும்படி நான் தீர்மானிக்கிறேன். என்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் நீர் வெற்றியைக் கொடுத்திருக்கிறீர். உமக்கு நன்றி. உம்முடைய சந்தோஷத்தையும், அன்பையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும்படி இன்று நீர் எனக்குத் தந்திருக்கிற வாய்ப்புகளுக்காக உமக்கு நான் நன்றி சொல்கிறேன். இயேசுவின் நாமத்தில், ஆமென்."*

இயேசுவே ஆண்டவர்! வெற்றி உங்களுடையதே!
Bro. JOHN DURAI
WONDER WORD MINISTRY
MADURAI_INDIA


==========================
உங்கள் அபிஷேகத்தில் நடந்திடுங்கள்
வளமான வாழ்விற்கு வார்த்தை
======================
*இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப் பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே.*
*கலாத்தியர் 1:10*

*_யாருடைய அங்கீகாரத்தைப் பெறும்படி நான் முயற்சிக்கின்றேன், மனிதர்களுடையதையா அல்லது தேவனுடையதையா? பவுல் கேட்கின்றார். தாங்கள் யார் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலேயே அநேகர் வாழ்கின்றனர்._*

*இன்னொருவரை விட சிறந்த விதத்தில் தங்கள் செயற்திறனை வெளிப்படுத்தும்படி அவர்கள் முயற்சிக்கின்றனர். தங்களால் அதைச் செய்ய முடியவில்லை என்றால், அவரைப்போல – இவரைப்போல இல்லை என்று தங்களைக் குறித்து குறைப்பட்டுக் கொள்கின்றனர்.*

*_நீங்களும் இவ்வாறு வாழ்கின்றீர்கள் என்றால், கூடிய சீக்கிரத்தில் நீங்கள் மனந்தளர்ந்து சோர்ந்து போய் விடுவீர்கள். உங்கள் சந்தோஷத்தை நீங்கள் இழந்து விடுவீர்கள். நீங்கள் நிரூபிக்கத் தேவையில்லாத ஒன்றை நிரூபிக்கும்படி நீங்கள் முயற்சிக்கின்றீர்கள்._*

*நீங்கள் போட்டியிடத் தேவையில்லாத ஒரு ஓட்டப்பந்தயத்தில், நீங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றீர்கள். உங்கள் அபிஷேகத்தில் நடந்திடுங்கள். தேவனுடைய அங்கீகாரம் ஏற்கனவே உங்களிடம் இருக்கிறது. நீங்கள் அதில் நடந்தால் போதும்.*

*_தேவன் உங்களை உருவாக்கிய பிறகு, அந்த அச்சை தூக்கி எறிந்து விட்டார். “இதோ, இன்னொரு மாஸ்டர் பீஸ்-ஐ நான் உருவாக்கி விட்டேன்,” என்று அவர் சொன்னார்._*

*மற்றவர்களுடன் நீங்கள் போட்டியிட வேண்டியதில்லை. நீங்கள் எப்பொழுதும் உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருப்பீர்கள் என்றால், உங்களை நிரூபிக்கும்படி நீங்கள் இன்னும் கடினமாய் பிரயாசப்பட்டுக் கொண்டே இருப்பீர்கள்.*

*_மற்றவர்களை கவர்ந்திழுக்கும்படி முயற்சிப்பீர்கள். இது முடிவில்லாத ஒரு சுழற்சியாக இருக்கும். எந்திரத்தனமான இந்த வாழ்க்கைமுறையிலிருந்து முதலில் விடுபடுங்கள்._*

*உங்கள் நண்பரைக் காட்டிலும், நீங்கள் அதிகப் பிரபலமாக இருக்க வேண்டியதில்லை. உங்கள் சகோதரனைக் காட்டிலும் சிறந்த விளையாட்டு வீரனாக நீங்கள் இருக்க வேண்டியதில்லை. உங்கள் உறவினரைக் காட்டிலும் வெற்றிகரமாய் நீங்கள் வாழ வேண்டியதில்லை.*

*_இது உங்கள் ஓட்டம் அல்ல. நீங்கள் அவர்களோடு போட்டியிடத் தேவையில்லை. நீங்கள் உங்களோடு போட்டியிடுங்கள். உங்களால் இயன்ற அளவிற்கு சிறந்தவர்களாய் வாழுங்கள்._*

நன்றி ஜெபம்:
    அன்பின் பரலோகப் பிதாவே, நீர் என்னை ஏற்கனவே கிறிஸ்துவுக்குள் ஏற்றுக் கொண்டிருக்கிறீர். நீர் ஏற்கனவே என் மீது அன்பாயிருக்கிறீர். இதை அறிந்த நிலையில், நான் பாதுகாப்புடன் வாழ முடியும். தலைசிறந்த படைப்பு என்று நீர் என்னை அழைத்திருக்கிறீர். எனவே என் மதிப்பை நான் ஒருவரிடமும் நிரூபிக்க வேண்டியதில்லை. உம் கிருபையினால், என்னால் இயன்ற சிறந்த வாழ்க்கையை நான் வாழப் போகிறேன். உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தில், ஆமென்._*

இயேசுவே ஆண்டவர்! வெற்றி உங்களுடையதே!
Bro. JOHN DURAI*
WONDER WORD MINISTRY
MADURAI_INDIA


====================
மனம் மறுரூபமாகுங்கள்
வாழ்வு தரும் வார்த்தை
====================
*"நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும், பிரியமும், பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்."*

*ரோமர் 12:2*

*_நிறைய பேருக்கு தங்களுடைய வாழ்க்கையில், அவர்கள் மாற விரும்புகிற காரியங்கள் பல உண்டு. அவை பழைய தவறான பழக்கவழக்கங்களாக இருக்கலாம். அவற்றை அவர்கள் மேற்கொண்டு, விட்டு விட விரும்புகிறார்கள். இவ்வுலகம் உங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்தும்படி பல "தீர்வுகளைத்" தருகின்றது._*

*ஆனால் உண்மையில், நாம் மெய்யாகவே உருமாற்றப்படுவதற்கான ஒரே வழி, நிரந்தரமாய் மறுரூபமடைவதற்கான ஒரே வழி, தேவனுடைய வார்த்தையினால் உங்களுடைய மனம் புதிதாகுதலின் மூலமாகத்தான்.*

*_இவ்வுலகத்தின் மாதிரியை நாம் பின்பற்றக்கூடாது என்று வேதவசனம் நமக்குச் சொல்கிறது. எது இவ்வுலகத்தின் மாதிரி? இன்னும் அதிகமாய்ச் செய்ய வேண்டும், இன்னும் அதிகமாய் சேகரிக்க வேண்டும் என்ற தொடர்ச்சியான உந்துதல்தான் அது. அது முடிவில் மனச்சோர்வுக்கும், வெறுமைக்கும், விரக்திக்கும் இட்டுச் செல்லும்._*

*ஆனால் இது தேவனுடைய திட்டமல்ல. மாறாக, உங்களுடைய சிந்தையை தேவனுடைய வார்த்தையின் மீது பதியுங்கள். காரணம், நீங்கள் தேவனுடைய வார்த்தைக்கு முதலிடம் கொடுக்கும்போது, இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட ஒரு அற்புதம் அங்கே நிகழ்கின்றது.*

*_நீங்கள்தான் உங்களுடைய மனதின் எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியும். வேறு ஒருவரும் இதை உங்களுக்குச் செய்ய முடியாது. நீங்கள் எதைத் தியானிக்க வேண்டும், எது உங்களுடைய கண்களுக்கு முன்பாக இருக்க வேண்டும் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்._*

*தாக்குதலுக்கு நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று நான் உங்களை உற்சாகப்படுத்துகிறேன். ஜாக்கிரதையாய் உங்களுடைய மனதையும், இருதயத்தையும் காத்துக் கொள்ளுங்கள்.*

*_காரணம், நீங்கள் தேவனுடைய வழியில் காரியங்களைச் செய்யும்போது, தேவரகமான நன்மைகளை, அதாவது ஜீவனை, சமாதானத்தை, சந்தோஷத்தை அதன் பலனாகப் பெறுவீர்கள்!_*

நன்றி ஜெபம்:
    பரலோகப் பிதாவே, தேவனே, என்னை உமக்கும், உம்முடைய வார்த்தைக்கும் அர்ப்பணிக்கிறேன். உம்முடைய சாயலாக என்னை உருமாற்றும். ஞானமான தீர்மானங்களை எடுக்க எனக்கு உதவி செய்யும். என்னை உமக்கு நெருக்கமாக வைத்துக் கொள்ளும். உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தில், ஆமென்

இயேசுவே ஆண்டவர்! வெற்றி உங்களுடையதே!
Bro. JOHN DURAI
WONDER WORD MINISTRY
MADURAI_INDIA.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.