அருமையாயிருக்கிற | நிந்தித்தார்கள் | கெஞ்சுகிறேன் | செய்யாதிருங்கள் | மறுரூபம் | TRANSFIGURATION | தங்களுக்குள்ளே | ONE ANOTHER | வேரூன்றி நிற்பான் | DEEP ROOTED | நம்பிக்கையாயிருப்பேன் | I WILL TRUST
======================
வேதபகுதி: ரூத் 4:1-22
"அருமையாயிருக்கிற"
=====================
*" உன்னைச் சிநேகித்து, ஏழு குமாரரைப்பார்க்கிலும் உனக்கு அருமையாயிருக்கிற உன் மருமகள் அவனைப் பெற்றாளே " - ரூத் 4:15*
*இன்றைய தியான வசனம், இக்காலத்திலுள்ள மாமியார் மருமகளுக்கு மிகவும் சவாலான வசனமாகும். உனக்கு அருமையாயிருக்கிற மருமகளாகிய ரூத் என்று நகோமியிடம் கூறப்பட்டதைப் பார்க்கும்போது, ரூத்தின்மேல் நகோமி எவ்வளவு பாசம் வைத்திருந்தாள் என்பதையும், மாமியாருக்கு ஏற்றபடி மருமகளாகிய ரூத் எப்படியெல்லாம் வாழ்ந்திருப்பாள் என்பதையும் நாம் ஓரளவுக்கு யூகிக்கலாம். தன்னுடைய கணவன் மரித்துப்போனாலும், தனக்குக் குழந்தை இல்லாமலிருந்தாலும், இனிமேலும் தனக்குத் திருமணம் நடக்குமா, நடக்காதா என்ற சந்தேகம் இருந்தாலும், தன்னுடைய சொந்த தேசம், ஜனங்கள், தெய்வம் போன்ற எல்லாவற்றையும் விட்டு விட்டு, மாமியார் மட்டும்தான் முக்கியம் என்று கூறி, தன்னுடைய மாமியாரை விடாமல் பற்றிக்கொண்ட மருமகளை எந்த மாமியாருக்குத்தான் பிடிக்காமல் இருக்கும்?*
*தனக்கு வேலைசெய்யவும், தன்னைப் பார்த்துக்கொள்ளவும் ஒருத்தி கிடைத்துவிட்டாள், கடைசிவரைக்கும் அவளை அப்படியே வைத்துக்கொண்டு நம்முடைய காலத்தை ஒட்டிவிடலாம் என்று நினைக்காமல், தன்னுடைய மருமகள் வாழ வேண்டும், எனவே, அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, பிரயாசப்பட்ட மாமியாரை எந்த மருமகளுக்குத்தான் பிடிக்காமல் போகும்? இதுதான் நகோமிக்கும் ரூத்துக்கும் இடையில் இருந்த பந்த பாசத்தின் உறவு.*
*பிரியமானவர்களே! இந்த உலகில் தேவன் நமக்குக் கொடுத்திருக்கும் உறவுகளை நாமும் இவ்வாறே நேசிக்க வேண்டும். நமக்கு இருப்பது ஒரே ஒரு வாழ்க்கைதான். அந்த வாழ்க்கையில் உறவுகளை நேசித்து, எல்லாரிடமும் அன்பாயிருந்து, தேவனுடைய அன்பை வெளிப்படுத்தி, இயேசுவுக்கு சாட்சியாக வாழலாம். அப்பொழுது மட்டுமே தேவனுடைய நாமம் மகிமைப்படும். நாமும் ஆசீர்வாதமாயிருப்போம். கர்த்தர்தாமே இப்படிப்பட்ட கிருபைகளை நமக்குத் தருவாராக. ஆமென்.*
*" கூடுமானால் உங்களாலான மட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள் ” - ரோமர் 12:18*
சிந்தனைக்கு
*! யாவரிடமும் அன்பு - அதுவே தேவன் விரும்பும் பண்பு !*
----------------------------------------------------------
சகோதரர் J. டேனியல்
இயேசுவே ஆதாரம் ஊழியங்கள்
சென்னை - 600 052
Mobil No: 9940018988
===================
வேதபகுதி: 2 இராஜா 2:1-25
"நிந்தித்தார்கள்"
======================
*" பிள்ளைகள் பட்டணத்திலிருந்து வந்து, அவனைப் பார்த்து மொட்டைத்தலையா ஏறிப்போ, மொட்டைத்தலையா ஏறிப்போ என்று சொல்லி நிந்தித்தார்கள் " - 2 இராஜாக்கள் 2:23*
*இளம்வாலிபர்கள் தேவனுடைய மனுஷனாகிய எலிசாவை நிந்தித்தார்களாம். அவனுடைய தலை வழுக்கையாய் இருந்தபடியால், அவனைப் பார்த்து, மொட்டைத்தலையா ஏறிப்போ என்று பரியாசம் பண்ணினார்களாம். இதினிமித்தம் கோபங்கொண்ட எலிசா அவர்களைச் சபிக்க, கரடிகள் வந்து, அவர்களில் நாற்பத்தி இரண்டுபேரைக் கொன்று போட்டது. ஒருவரை உருவகேலி செய்வது அவர்களுடைய கோபத்தை எழும்பப்பண்ணும் இதினிமித்தமாக யார் பரியாசம்பண்ணுகிறார்களோ அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு இன்றைய வசனம் உதாரணம் ஆகும்.*
*நாம் நல்லவேளையாக புதிய ஏற்பாட்டுக்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தக் காலத்தில் பழிவாங்கும் வேலையை தேவன் தன்னுடைய கரங்களில் வைத்திருக்கிறார். இல்லையென்றால் இக்காலத்தில் வாலிபர்கள் செய்யும் பரியாசங்களினால் பலர் மரித்துப்போயிருப்பார்கள். பழைய ஏற்பாட்டுக் காலமாயிருந்திருந்தால் நாமும் கூட மரித்துப்போயிருப்போம். அந்த அளவுக்கு பரியாசம் என்பது நம்முடைய இரத்தத்தில் ஊறிப் போய்விட்டது. அதிலும் இக்கால வாலிபர்கள் தேவனுடைய ஊழியர்களைப் பரியாசம்பண்ணுவதில் வல்லுனர்களாக இருக்கிறார்கள். மட்டுமல்லாது பலருடைய உருவத்தை வைத்து பரியாசம்பண்ணுவது என்பது இன்றைய காலத்தில் சாதாரணதொன்றாகிவிட்டது. ஆனால் இதைக் குறித்து வேதம் என்ன கூறுகிறது தெரியுமா?*
*தேவனுடைய பிள்ளைகளுக்குப் பரியாசம் பண்ணுதல் தகாது என்றும், பரியாசம் பண்ணுவதினால், தங்களுக்குக் கேடுண்டாக்கிக்கொள்கிறார்கள் என்றும் வேதம் கூறுகிறது. நாம் ஒருவரைப் பரியாசம்பண்ணும் போது, அவரை உண்டாக்கினவர் எவ்வளவு வேதனைப்படுவார் என்பதை யோசித்துப் பார்த்தால், நாம் நிச்சயம் பரியாசம் செய்யமாட்டோம். இவைகளை உணர்ந்து நாம் பரியாசங்களைத் தவிர்த்து, ஸ்தோத்திரம் செய்வோம். அப்பொழுது தேவன் நம்மோடிருந்து, நம்மை ஆசீர்வதிப்பார். ஆமென்.*
*" என் சிநேகிதர் என்னைப் பரியாசம்பண்ணுகிறார்கள்; என் கண் தேவனை நோக்கிக் கண்ணீர் சொரிகிறது " - யோபு 16:20*
சிந்தனைக்கு
! பரியாசம்பண்ணுதல் தேவ கோபத்தைக் கொண்டுவரும் !*
---------------------------------------------------------
சகோதரர் J. டேனியல்
இயேசுவே ஆதாரம் ஊழியங்கள்
சென்னை - 600 052
Mobil No: 9940018988
=====================
வேதபகுதி: சங்கீதம் 119:49-6
கெஞ்சுகிறேன்
====================
*" முழு இருதயத்தோடும் உம்முடைய தயவுக்காகக் கெஞ்சுகிறேன்; உமது வாக்கின்படி எனக்கு இரங்கும் ” - சங்கீதம் 119:5
*இன்றைய சங்கீதத்தைப் பாடிய பக்தன், தேவனுடைய தயவுக்காக அவரிடம் கெஞ்சுகிறான். தயவு என்றால் நன்மை செய்யும்படி கொண்டிருக்கும் ஆசையாகும். கெஞ்சுவதாகக் கூறி, நம்மை ஆச்சரியப்படுத்துகிறான். தேவனுடைய தயவு ஒருவருக்குக் கிடைத்துவிட்டால், அவருடைய வாழ்க்கை முழுவதுமே செழிப்பாக மாறிவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. இதை அறிந்த பக்தன் தேவனுடைய தயவிற்காக கெஞ்சி நிற்கிறான்
*பிரியமானவர்களே! தேவனால் பயன்படுத்தப்பட்ட, ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்தவான்கள் அனைவரையும் நாம் உற்று நோக்கினால் ஒரு ஆச்சரியம் நமக்கு உண்டாகும். அவர்களுடைய நோக்கமும், ஜெபமும் நமக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தை உண்டாக்கும். அவர்களுடைய நோக்கம் முழுவதும் தேவனுடைய துணையும், அவருடைய அருகாமையும், அவருடைய சித்தம் செய்வதுமாயிருந்தது, அவர்களுடைய ஜெபம் முழுவதும் இவைகளைச் சார்ந்தே இருந்தது. தங்களுடைய விருப்பங்களை ஒருபோதும் தேவனிடம் கேட்காமல், தேவன் என்ன எதிர்பார்க்கிறாரோ அதை நிறைவேற்றுவதற்கு என்ன தேவையோ அவைகளையே தேவனிடம் கேட்டுப் போராடியிருக்கிறார்கள். தேவனிடம் கெஞ்சியிருக்கிறார்கள். சுய சித்தத்தை தேவனிடத்தில் திணிக்காமல், தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதில் துடிப்புடனும், முனைப்புடனும் வாழ்ந்திருக்கிறார்கள்
*அவர்களுடைய நோக்கமும் ஜெபமும் இப்படி இருந்ததினால்தான் தேவன் அவர்களை பலமாய் ஆசீர்வதித்திருந்தார். அவர்களை பயன்படுத்தியுமிருந்தார். தேவனுடைய பிள்ளையே! நம்முடைய நோக்கங்கள் எப்படிப்பட்டவைகளாயிருக்கிறது? நம்முடைய ஜெபங்கள் எப்படி இருக்கிறது? இவைகளையெல்லாம் யோசித்துப் பார்ப்போம். நம்முடைய சுயவிருப்பங்களை நிறைவேற்றுவது நம்முடைய நோக்கமாயிருக்காமல், தேவனுடைய சித்தம் செய்வதே நம்முடைய நோக்கமாயிருக்கட்டும். அப்பொழுது, நாம் ஆசீர்வாதமாயிருக்கலாம். ஆமென்
*“ உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக " - லூக்கா 11:
சிந்தனைக்கு
*! தேவ சித்தம் செய்பவர்கள் தேவனுக்குப் பிடித்தவர்கள்
--------------------------------------------------------
சகோதரர் J. டேனியல்
இயேசுவே ஆதாரம் ஊழியங்கள்
சென்னை - 600 052
=======================
ரோமர் 12:1-21
செய்யாதிருங்கள்
=======================
" ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள் " - ரோமர் 12:17*
*வேதம் எவைகளையெல்லாம் செய்யும்படி கட்டளையிடுகிறதோ அவைகளைச் செய்வதும், எவைகளைச் செய்யக்கூடாது என்று கூறுகிறதோ அவைகளைச் செய்யாமலிருப்பதுமே கிறிஸ்தவ வாழ்க்கையாகும். இதற்கு மேல் கிறிஸ்தவ வாழ்க்கையில் எதுவுமில்லை. இந்த வரிசையில் இன்றயை தியான வசனம் தீமைக்குத் தீமை செய்யதிருங்கள் என்று கூறுகிறது. மற்றவர்கள் நமக்குத் தீமை செய்யும்போது, நாமும் அப்படியே அவர்களுக்குத் திரும்பிச் செய்யக்கூடாது என்று வேதம் நமக்குக் கூறினாலும், பல வேளைகளில் நம்முடைய ஜென்ம சுபாவம் தலைதூக்கி, நம்முடைய காரியங்களையெல்லாம் கெடுத்துப்போட்டு, தீமை செய்ய நம்மை உந்தித் தள்ளுகிறது. அவர்கள் இப்படித்தானே எனக்குச் செய்தார்கள் எனவே நானும் அப்படியேச் செய்கிறேன் என்று ஆவிக்குரியவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் பலரும் செய்கிறார்கள்.*
*மனுஷனுடைய சுபாவம் பழிவாங்கும் தன்மையுடையது. தேவனுடைய சுபாவம் மன்னிக்கும் தன்மையுடையது. ஜென்ம சுபாவம் ஒருவருக்குள் இருக்கும் வரைக்கும் அவரால் தீமைக்குப் பதிலாக நன்மை செய்ய முடியவே முடியாது. தேவனுடைய சுபாவத்தால் ஆளப்பட்டிருக்கிறவர்கள் மட்டுமே இப்படிச் செய்ய முடியும். யோசேப்பைக் கவனித்துப் பாருங்கள். தன்னை விற்றுப்போட்ட தன்னுடைய சகோதரர்கள் அனைவருக்கும் நன்மை செய்து, அவர்களையும் அவர்களுடைய பிள்ளைகளையும் உயிரோடே காப்பாற்றினான்.*
*தன்னைப் பிடித்து சிலுவையில் அறையும்படி வந்த மனிதனுடைய வெட்டப்பட்ட காதை மீண்டும் ஒட்டி அவனை சுகமாக்கினது மட்டுமல்லாமல், தன்னை சிலுவையில் அறைந்தவர்களையும் மன்னிக்கும்படி ஜெபித்த இயேசுதான் நம்முடைய முன்மாதிரி. அவர்தான் நமக்குள் வாசமாயிருக்கிறார். நாம் அனைவரும் அவரைத்தான் பின்பற்றுகிறோம். இப்படியிருக்க, நாம் தீமைக்கு தீமை செய்யலாமா? கூடாதே. தேவப்பிள்ளையே! நாம் இன்ன ஆவி உடையவர்கள் என்பதை அறிந்து, தீமைக்குப் பதிலாக நன்மையைச் செய்வோம். அப்பொழுது இயேசுவின் நாமம் மகிமைப்படும் தேவனும் நம்மோடிருந்து நம்மை ஆசீர்வதிப்பார். அல்லேலூயா!*
*" தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல் ..... ஆசீர்வதியுங்கள் ” - 1 பேதுரு 3:9*
சிந்தனைக்கு
! தீமைக்கு நன்மை செய்வதே - கர்த்தருடைய பண்பு !*
----------------------------------------------------------
சகோதரர் J. டேனியல்
இயேசுவே ஆதாரம் ஊழியங்கள்
சென்னை - 600 052
Mobil No: 9940018988
============================
வேதபகுதி: 2 கொரி 3:1-18
மறுரூபம்
==========================
*“ நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம் " - 2 கொரிந்தியர் 3:18*
*பரிசுத்த ஆவியானவர் நமக்குச் செய்யும் பலகாரியங்களுக்குள் இன்றைய தியான வசனம் கூறும் காரியம் மிகவும் முக்கியமானது ஆகும். ஆவியாயிருக்கிற கர்த்தரால் மறுரூபப்படுகிறோம் என்பதைக் கவனிக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் நம்மை வேறொரு சாயலுக்குள் இழுத்துச் செல்வதைக் காணலாம். யாருடைய சாயலுக்கு ஒப்பாக நம்மை மாற்றுகிறார் தெரியுமா? இயேசுவின் சாயலைப்போலவே நம்மை அவர் மாற்றுகிறார். நம்முடைய சுபாவங்கள் அனைத்தையும் இயேசுவின் சுபாவங்களைப்போலவே மாற்றுவதற்காக அவர் கிரியை செய்து கொண்டிருக்கிறார், மேலும் நமக்குள்ளும் கிரியை செய்து கொண்டிருக்கிறார். ஆவியானவருடைய செயலுக்கு யாரெல்லாம் தங்களை விட்டுக்கொடுக்கிறார்களோ அவர்கள் அத்தனைபேரும் இயேசுவின் சாயலாக மாற்றப்படுவது நிச்சயம்.*
*நமக்குள்ளாக வாசம்பண்ணும் ஆவியானவர் நம்முடைய ஆவியன் சில காரியங்களைச் செய்கிறார். நாம் தவறுகள் செய்யும்போது, நம்மை கண்டித்து உணர்த்தி, நாம் தேவனுடைய பிள்ளை என்ற உணர்வை நமக்கு தந்து, நம்மை மீண்டும் கர்த்தருக்குப் பிரியமானவைகளைச் செய்யும்படி நிறுத்துகிறார். நம்முடைய ஜென்ம சுபாவங்கள் எழும்பி, மனுஷமார்க்கமாய் நடக்க முற்படும்போது, ஆவிக்குரிய சுபாவங்களை நமக்குத் தந்து, நம்மை ஆவிக்குரியவர்களாக மாற்றுகிறார். இவ்வாறு ஆவியானவர் நமக்குள்ளே பல விதமான காரியங்களைச் செய்கிறார்.*
*நம்முடைய இருதயம் உணர்வோடு இருக்குமானால் ஆவியானவருடைய கிரியைகளை உணர்ந்துகொள்ளும், ஆவியானவருடைய கிரியைளுக்கு நாமும் விட்டுக்கொடுப்போம். தேவனுக்கு இவைகள் பிடிக்காது, எனவே நான் இவைகளைச் செய்யக்கூடாது என்று நினைத்து, பொல்லாப்பை விட்டு விலகுவோம். எனவே, ஆவியானவருடைய கிரியைகளுக்கு விட்டுக்கொடுத்து மறுரூபமடைவோம், பரலோக ராஜ்யத்தை சுதந்தரிப்போம். அல்லேலூயா !*
*" அவர் வெளிப்படும்போது..... அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம் " - 1 யோவான் 3:2*
சிந்தனைக்கு
! ஆவியானவருடைய செயல் மறுரூபம் என்னும் அதிசயம் !
----------------------------------------------------------
சகோதரர் J. டேனியல்
இயேசுவே ஆதாரம் ஊழியங்கள்
சென்னை - 600 052
====================
Bible Reading:- 2 Corin 3:1-18
TRANSFIGURATION
==========================
*“And we all, who with unveiled faces contemplate the Lord’s glory, are being transformed into his image with ever-increasing glory, which comes from the Lord, who is the Spirit..” - 2 Corin.3:18*
*Among the many things that the Holy Spirit does for us, the one mentioned in today's meditation verse is the most important. When we notice that we are being molded by the Lord who is the Spirit, we can see the Holy Spirit drawing us into another image. Do you know whose likeness He transforms us into? He transforms us into the image of Jesus. He is at work, working in us, to change all our natures to be like the natures of Jesus. All who surrender themselves to the work of the Spirit are sure to be transformed into the likeness of Jesus.*
*The indwelling Spirit does certain things in our spirit. When we make mistakes, He rebukes us, makes us feel that we are God's children, and stops us from doing things that are pleasing to the Lord. When our natural natures arise and we seek to walk humanly, He gives us spiritual natures and makes us spiritual. Thus the Spirit does many things within us.*
*If our heart is conscious, we will perceive the works of the Spirit, and we will yield to the works of the Spirit. Let us turn away from evil, thinking that God does not like these things, so I should not do these things. So let us yield to the workings of the Spirit, be regenerated, and inherit the kingdom of heaven. Hallelujah!*
*“But we know that when Christ appears, we shall be like him, for we shall see him as he is” - 1 John 3:2*
For Thought
THE SPIRIT’S WORK IS THE MIRACLE OF TRANSFIGURATION.*
Brother J. Daniel
Yesuveh Aatharam Ministries
Chennai – 600 052
Mobile: +919940018988
=======================
வேதபகுதி: மாற்கு 8:1-21
தங்களுக்குள்ளே
=========================
*" அதற்கு அவர்கள் நம்மிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று தங்களுக்குள்ளே யோசனை பண்ணிக்கொண்டார்கள் " - மாற்கு 8:16*
*ஆண்டவராகிய இயேசு ஊழியம் செய்த நாட்களில் சில காரியங்களை நேரிடையாகவும், சில காரியங்களை உவமைகளாகவும் சில காரியங்களை சிலேடையாகவும் பேசியிருக்கிறார். இவைகளை அறிந்துகொள்வதற்கு பல வேளைகளில் நமக்குக் கடினமாயிருக்கிறது. அப்படியே அன்றைய நாட்களில் அவரோடுகூட இருந்த சீஷர்களுக்கும் கடினமாயிருந்தது. அப்பொழுது அவர்கள் அவைகளைக் குறித்து, தங்களுக்குள்ளே விவாதித்துக் கொண்டார்கள். எவைகளைக் குறித்து இயேசு பேசுகிறார் என்று, இவைகளைக் குறித்துத்தான் இப்படிப் பேசுகிறார் என்றும், தங்களுக்குத் தெரிந்தவைகளைக் கொண்டு நிதானித்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவர்களுடைய சிந்தனைகளையெல்லாம் இயேசு அறிந்து, தாம் எதற்காக பேசினாரோ, அந்தக் காரியங்களை வெளிப்படையாக அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.*
*தங்களுக்குள்ளே பேசிக்கொள்வதினாலே என்ன கிடைக்கப்போகிறது? ஒன்றுமில்லை. சம்பந்தப்பட்ட நபரிடம் அவைகளைக் குறித்து விவரித்து, கேட்டறிந்தால் மட்டுமே உண்மையான காரியங்கள் வெளிப்படும். இன்றைய நாட்களிலும் பெரும்பாலான மனிதர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் தாங்கள் கேட்டவைகளையும், பார்த்தவைகளையும் குறித்து, சம்பந்தப்பட்ட நபர்களிடம் நேரிடையாக விசாரிக்காமல், இவர்களுக்கு என்னவெல்லாம் தோன்றுகிறதோ, அவைகளையெல்லாம் பேசி, இப்படித்தான் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். பொய்யான தகவலை வேகமாகப் பரவச் செய்கிறார்கள். இதனால் இவர்களுக்கு என்ன கிடைக்கப்போகிறதோ தெரியவில்லை.*
*நம்முடைய கண்களால் காண்பவைகளானாலும், காதுகளால் கேட்பவைகளானாலும், அவைகளைக் குறித்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் நேரில் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு தெரிந்துகொள்ள முடியாவிட்டால், அமைதியாய் இருக்கவேண்டும். நாம் யூகிக்கிறவைகளையெல்லாம் பேசக்கூடாது. இவ்வாறு நாம் இருந்தால், நாமும் சமாதானமாயிருக்கலாம் மற்றவர்களும் சமாதானமாயிருப்பார்கள்.*
*" தோற்றத்தின்படி தீர்ப்புச் செய்யாமல், நீதியின்படி தீர்ப்புச் செய்யுங்கள் " - யோவான் 7: 24*
சிந்தனைக்கு
*! எதையும் விசாரித்துப் பார்ப்பவர்கள் விசாரமில்லாமல் இருப்பார்கள் !*
----------------------------------------------------------
சகோதரர் J. டேனியல்
இயேசுவே ஆதாரம் ஊழியங்கள்
சென்னை - 600 052
Mobil No: 9940018988
======================
Bible Reading: Mark 8:1-21
ONE ANOTHER
=======================
*“They discussed this with one another and said, ‘It is because we have no bread.” - Mark 8:16*
*During the days of His ministry, the Lord Jesus spoke some things directly, some things in parables, and some things in puns. It is difficult for us in many jobs to know these things. Similarly, it was difficult for the disciples who were with him in those days. Then they debated among themselves about them. They were judging by what they knew about what Jesus was talking about and what he was talking about in this way. Then Jesus knew all their thoughts, and taught them plainly the things of which he had spoken.*
*What is going to be gained by talking to each other? Nothing. The real facts will come out only if the concerned person is questioned about them. Even today most people are like this. Without directly inquiring about what they have heard and seen from the people involved, they talk about whatever they think and come to the conclusion that this is the case. They spread false information fast. Don't know what they are going to get from this?*
*Whether it is what we see with our eyes or what we hear with our ears, we should ask and know about them in person from the relevant people. If one cannot know thus, one should remain silent. We shouldn't talk about guesswork. If we are like this, we can be at peace and others will be at peace.*
*“Stop judging by mere appearances, but instead judge correctly.” - John 7:24*
For Thought
` THOSE WHO INQUIRE INTO ANYTHING ARE IGNORANT
Brother J. Daniel
Yesuveh Aatharam Ministries
Chennai – 600 052
Mobile: +919940018988
========================
வேதபகுதி: ஓசியா 14:1-9
வேரூன்றி நிற்பான்
=========================
*" நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப்பேன்; அவன் லீலிப் புஷ்பத்தைப்போல் மலருவான்; லீபனோனைப்போல வேரூன்றி நிற்பான் ” - ஓசியா 14:5*
*தேவனுடைய கோபம் நீங்கி, அவருடைய தயவும், காருணியமும் வெளிப்படும்போது மனிதர்கள் செழிப்பார்கள். அவர்களுடைய வாழ்க்கை தொழில், ஊழியம் என அவர்கள் செய்யும் அனைத்துக் காரியங்களும் செழிக்கும். இவ்வாறு அவர்கள் செழித்திருக்கும்படி, அவர்கள் வேரூன்றி நிற்பார்கள் என்று கர்த்தர் கூறுகிறார். ஒரு மரம் நிலைத்திருக்க வேண்டுமென்றாலும், செழித்திருக்க வேண்டுமென்றாலும் அது ஆழமாய் வேர்கொண்டிருக்க வேண்டியது அவசியம். வேரில்லாத மரங்களால் நிலைத்து நிற்கவும் முடியாது, செழிப்பாக இருக்கவும் முடியாது. இப்படியிருக்க, தேவனுடைய ஆசீர்வாதமும், அனுக்கிரகமும் ஒருவருக்கு உண்டாகும்போது அவர்கள் வேரூன்றுவார்கள் என்று கர்த்தர் கூறுகிறார்.*
*நம்முடைய வாழ்க்கையில் ஜெபம், வேத வாசிப்பு மற்றும் வேத தியானம், உபவாசம், பரிசுத்த ஐக்கியம் போன்றவைகளே அஸ்திபாரமாக எண்ணப்படுகிறது. அஸ்திபாரமாகிய இவைகள் அனைத்தும் பலமாக இருக்கும் போது மட்டுமே நம்முடைய வாழ்க்கை செழிக்கும், நிலைத்து நிற்கும். வேரைப்போன்று இருக்கும் இந்தக் காரியங்களை ஒருவரும் தங்களுடைய சுய பெலத்தினாலும் சுய முயற்சியினாலும் செய்ய முடியாது. தேவனுடைய ஆசீர்வாதமும் அநுக்கிரகமும் ஒருவருக்கு உண்டாகும்போது மட்டுமே இவைகளை ஒருவரால் செய்ய முடியும்.*
*பிரியமானவர்களே! இவைகளை நாம் அறிந்து, தேவனே ! என்னையும் ஆசீர்வதியும் என்று நாம் மன்றாடி, தேவனுடைய ஆசீர்வாதங்களையும், அவருடைய அநுக்கிரகத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும். தேவனையல்லாமல் நம்மால் எதையுமே செய்ய முடியாது என்ற தெளிவோடு, எல்லாவற்றிற்காகவும் அவருடைய உதவியை நாடி நிற்க வேண்டும். இவ்வாறு எல்லாவற்றிற்காகவும் நாம் அவரை சார்ந்து நிற்கும்போது, தேவன் நமக்கு உதவி செய்வார். அப்பொழுது நாமும் வேரூன்றி நிற்போம். அதிகமான பலன்களைக் கொடுப்போம், ஆசீர்வாதமாய் இருப்போம். அல்லேலூயா !*
*" நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய், கர்த்தரோ எனக்கு உதவி செய்தார் " - சங் 118 : 13*
சிந்தனைக்கு
! கர்த்தருடைய உதவி - நம்மை வாழவைக்கும் கருவி !
----------------------------------------------------------
சகோதரர் J. டேனியல்
இயேசுவே ஆதாரம் ஊழியங்கள்
சென்னை - 600 052
Mobil No: 9940018988
======================
Bible Reading: Hosea 14:1-9
DEEP ROOTED
======================
*“I will be like the dew to Israel; he will blossom like a lily. Like a cedar of Lebanon he will send down his roots” - Hosea 14:5*
*Men will prosper when God's wrath is turned away and His kindness and mercy are revealed. Everything they do in life, business, ministry will be successful. Thus saith the Lord, that they shall take root, that they may prosper. For a tree to survive and thrive, it must be deeply rooted. No other trees can survive and thrive. Thus when God's blessing and favor are upon one, they will take root, says the Lord.*
*In our life, prayer, scripture reading , meditation, fasting and holy fellowship are considered as foundations. Only when all these foundations are strong can our life flourish and sustain. No one can do these root-like things by their own strength and self-effort. One can do these things only when one has God's blessings and favour.*
*Beloved, knowing these things, we should ask God to bless me and receive God's blessings and favor. We must seek His help for everything with the clarity that we can do nothing. Thus God will help us when we depend on Him for everything. Then we will also be rooted. May we bear more fruit and be blessed. Hallelujah!*
*“I was pushed back and about to fall, but the Lord helped me.” - Psalm 118:13*
For Thought
GOD’S HELP - THE TOOL THAT KEEPS US ALIVE
Brother J. Daniel
Yesuveh Aatharam Ministries
Chennai – 600 052
Mobile: +919940018988
======================
வேதபகுதி: ஏசாயா 12:1-6
நம்பிக்கையாயிருப்பேன்
===========================
*" இதோ, தேவனே என் இரட்சிப்பு: நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர் " - ஏசாயா 12:2*
*தேவனை தன்னுடைய இரட்சிப்பாக வைத்திருக்கும் ஒருவரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. அவர்கள் அனைவரும் மிகப்பெரிய நம்பிக்கையோடு இருக்கலாம். காரணம், எப்படிப்பட்ட சூழ்நிலையாய் இருந்தாலும், அடிமைத்தனமாய் இருந்தாலும் தேவன் எப்படியும் அவர்களை இரட்சிப்பார். தேவனாலே விடுவிக்கப்பட முடியாத நபர்கள் ஒருவருமில்லை தேவனுடைய கையிலிருந்து நம்மைப் பறித்துக்கொள்ளும் அளவுக்கு தேவனை விடவும் பெரியவர் ஒருவருமில்லை. நம்மை விடுவிக்கும்படி வரும் தேவனைத், தடுத்து நிறுத்துவதற்கு தேவனை விடவும் பெலவான் ஒருவருமில்லை. நாம் தேவனுடையவர்களாயிருப்பது உண்மையென்றால் எதற்கும் கவலைப்படாமல், எப்பொழுதும் தைரியமாயிருக்கலாம்.*
*தன்னுடைய மாமனார் வீட்டில் பல வருஷங்களாகத் தங்கியிருந்த யாக்கோபை தேவன் அங்கிருந்து விடுதலையாக்கி, அவனுடைய சொந்த தேசத்திற்குக் கொண்டு வந்தார். நானூற்று முப்பது வருஷங்களாக அடிமைப்பட்டிருந்த இஸ்ரவேல் ஜனங்களை தேவன் மீட்டு, அவர்களைக் கானான் தேசத்தில் பிரவேசிக்கப்பண்ணினார். சிங்கக்கெபியில் போடப்பட்ட தானியேலை அதிலிருந்து இரட்சித்து, உயர்த்தினார். சிறைச்சாலைக்குள் போடப்பட்டிருந்த பேதுருவை, தம்முடைய தூதனை அனுப்பி இரட்சித்தார். தம்முடைய சித்தத்தை நிறைவேற்றினார்.*
*பிரியமானவர்களே! இவர்களையெல்லாம் இரட்சித்து உயர்த்தினவர் நம்மை இரட்சிக்கமாட்டாரா? நிச்சயம் இரட்சிப்பார். எனவே, சூழ்நிலைகளைப் பார்த்து, இதுதான் நம்முடைய நிலைமை, கடைசிவரைக்கும் இப்படித்தான் இருக்கப்போகிறோம் என்று முடிவு செய்யக்கூடாது. அதற்குப் பதிலாக, தேவனே என்னுடைய இரட்சிப்பு, அவர் என்னை இரட்சிப்பார் என்ற விசுவாசத்தோடு அறிக்கை செய்ய வேண்டும். அப்பொழுது நம்மை இரட்சிக்கும்படி தேவனுடைய வல்லமை வெளிப்படும். நாமும் விடுதலையாக்கப்பட்டு, சுகமாயிருப்போம். அல்லேலூயா !*
*" என் இரட்சிப்பாகிய ஆண்டவரே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும் " - சங் 38 : 22*
சிந்தனைக்கு
! கர்த்தருடைய வல்லமை சங்கிலிகளை உடைக்கும் !
----------------------------------------------------------
சகோதரர் J. டேனியல்
இயேசுவே ஆதாரம் ஊழியங்கள்
சென்னை - 600 052
Mobil No: 9940018988
=====================
Bible Reading: Isaiah 12:1-6
I WILL TRUST
=====================
“Surely God is my salvation; I will trust and not be afraid. The Lord, the Lord himself, is my strength and my defence; he has become my salvation.” - Isaiah 12:2*
*No one who has God for his salvation need fear. All of them can be very optimistic. Whatever the reason, whatever the situation, whatever the slavery, God will save them anyway. There is no person who cannot be delivered by God. There is no one greater than God to snatch us from God's hand. No one is stronger than God to stop God from coming to deliver us. If it is true that we are God's people, we can always be courageous, without worrying about anything.*
*God freed Jacob who had been staying in his father-in-law's house for many years and brought him to his own land. God rescued the people of Israel who had been enslaved for 430 years and made them enter the land of Canaan. The lion rescued and raised Daniel from the grave. He sent his angel and rescued Peter who was in prison. He fulfilled his will.*
*Beloved, will not He who saved and exalted them all save us? He will definitely save. Therefore, looking at the circumstances, we should not conclude that this is our situation and that we are going to be like this till the end. Instead, declare with faith, "God is my salvation, and he will save me." Then the power of God will be revealed to save us. We too will be set free and be at peace Hallelujah!*
*“Come quickly to help me, my Lord and my Saviour.” - Psa.38:22*
For Thought
THE LORD’S POWER BREAKS CHAINS.
Brother J. Daniel
Yesuveh Aatharam Ministries
Chennai – 600 052
Mobile: +919940018988
Thanks for using my website. Post your comments on this