நான் கேட்டதெல்லாம் கர்த்தர் எனக்கு கொடுத்தால்…? | என்னை தூக்கி கடலில் போட்டுவிடுங்கள் | அசுத்த ஆவிகளை துரத்தும் அதிகாரம் | பிழைப்பு முக்கியமா, இயேசு முக்கியமா?
======================
நான் கேட்டதெல்லாம் கர்த்தர் எனக்கு கொடுத்தால்…?
======================
======================
அநேகருக்கு மிகவும் பிடித்த வசனம், அவர் உமது மனவிருப்பதின் படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக. (சங்கீதம் 20:4). நாம் விரும்பி கேட்பதையெல்லாம் கர்த்தர் தந்து, நாம் திட்டமிடுகின்ற எல்லாவற்றையும் நிறைவேற்றி கொடுத்தால் எவ்வுளவு நலமாயிருக்கும். நாம் எல்லோருமே இதைத்தான் கர்த்தரிடம் எதிர்பார்க்கின்றோம்.
இதில் ஒன்றும் தவறில்லை. ஜெபிக்கும் போதே கர்த்தர் நான் கேட்பதை தருவார் என்ற நம்பிக்கையில் தான் கேட்கின்றோம். கர்த்தர் நம் பரம தகப்பன் என்ற உரிமையோடு கேட்கிறோம், அதிகாரத்தோடு கேட்கிறோம். இதை நிச்சயம் தர வேண்டும் என்று கட்டளையிட்டுகூட கேட்கிறோம். இதையெல்லாம் நம் ஆண்டவர் ஒரு குற்றமாய் பார்க்கிற தேவன் அல்ல. ஏனென்றால் நாம் அவர் பிள்ளைகள். ஒரு தகப்பனிடம் கேட்காமல் பிள்ளைகள் தங்கள் விருப்பத்தை யாரிடம் போய் கேட்பார்கள்?
ஆனால் இங்கு ஒரு சிக்கல் இருக்கின்றது. 1 யோவான் 5:14 சொல்கின்றது, நாம் எதையாகிலும் அவர் சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்கு செவி கொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். நாம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம், ஆனால் அவர் சித்தத்தின்படி கேட்டால் தான் அவர் நம் ஜெபத்தை கேட்கவே செய்வார். இல்லையென்றால் நம்முடைய ஜெபம் நம் வீட்டு கூரையை கூட தாண்டாது.
இந்த காரியத்தை இன்றைய கர்த்தருடைய பிள்ளைகள் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் 5 வயது மகனோ மகளோ எதை கேட்டாலும் நீங்கள் அவர்களுக்கு வாங்கி கொடுத்து விடுவீர்களா? இல்லையே. அவர்களுக்கு சளி பிடித்திருக்கிற நேரம் அவர்கள் ஐஸ் கேட்டால் வாங்கி கொடுக்க மாட்டோம். எப்படி அடம் பிடித்தாலும், அழுது உருண்டாலும் (நல்ல) பெற்றோர் யாரும் வாங்கி கொடுக்க மாட்டார்கள். ஏனென்றால் அது அப்பொழுது அவர்களுடைய ஆரோக்கித்திற்கு கேடு.
அவர்கள் அழுகிறார்கள் என்று தற்காலிகமாக அவர்களை திருப்திப்படுத்த ஐஸ் வாங்கி கொடுப்பவர்களை நான் நல்ல பெற்றோர் என்று சொல்ல மாட்டேன். பிள்ளையின் ஆரோக்கியத்தின் மேல் கவனமாயிருப்பவர்கள் தான் நல்ல பெற்றோர்.
அவர்கள் அழுகிறார்கள் என்று தற்காலிகமாக அவர்களை திருப்திப்படுத்த ஐஸ் வாங்கி கொடுப்பவர்களை நான் நல்ல பெற்றோர் என்று சொல்ல மாட்டேன். பிள்ளையின் ஆரோக்கியத்தின் மேல் கவனமாயிருப்பவர்கள் தான் நல்ல பெற்றோர்.
இந்த எளிய உண்மையை அனைத்து ஆண்டவருடைய பிள்ளைகளும், நம்முடைய ஜெப நேரங்களில் நினைவு கூர வேண்டும். பூமிக்குரிய பெற்றோர் பூமிக்குரிய ஆரோக்கியத்திற்கு இவ்வளவு அக்கறை காட்டும் போது, நம் ஆவிக்குரிய தகப்பன் நம் ஆவிக்குரிய ஆரோக்கியத்திற்கு எவ்வுளவு அக்கறை காட்டுவார் என்று யோசித்துப்பாருங்கள்.
பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளை கொடுக்க அறிந்திருக்கும் போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்கிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? (மத்தேயு 7:11). நீங்கள் கேட்பது ஆயிரம் இருக்கலாம் ஆனால் உங்கள் ஆவிக்குரிய வாழ்விற்கு எது நன்மை என்று நம் தகப்பன் நினைக்கிறாரோ அதை மட்டுமே நமக்கு தருவார். அதனால் தான் அவர் நல்ல தகப்பன்.
யோசேப்பு தன் சகோதரர்களால் அடிமையாக விற்கப்படும்போது, கர்த்தர் இறங்கி வந்து அவனை காப்பாற்ற வேண்டும் என்று ஜெபித்திருக்கமாட்டானா? அவனை பொய்யாய் பழி சுமத்தி சிறையில் அடைத்த நேரம் காப்பற்றப்பட ஜெபித்திருக்க மாட்டானா? ஜெயிலிலே பானபாத்திரக்காரன் விடுதலை பெற்ற நேரம் அவன் மூலமாய் வெளியே வரவேண்டும் என்று ஜெபித்திருக்க மாட்டானா? தானியேலை சிங்க கெபியில் இருந்து காப்பாற்றிய தேவன், யோசேப்பின் ஜெபத்தையும் கேட்கவில்லை, அவனை காப்பாற்றவும் வரவில்லை. காரணம் கர்த்தர் அவன் மீது வைத்திருந்த ஆவிக்குரிய அநாதி திட்டம்.
தேவனுடைய முதல் குறிக்கோள் நம்முடைய ஆவிக்குரிய மனிதனின் ஆரோக்கியத்தை பராமரிப்பது. தேவனுடைய இரண்டாம் குறிக்கோள் நம்மேல் தேவன் வைத்திருக்கும் உன்னத திட்டத்தை நிறைவேற்றுவது. ஆக, நம் சுய ஆசைகளை நிறைவேற்றுவது தேவனுக்கு கடைசி குறிக்கோள்தான்.
அநேகர் தாங்கள் உபவாசம் போட்டு ஜெபித்தால் கர்த்தரிடத்தில் இருந்து எதையும் பெற்றுவிடலாம் என்ற மனநிலையில் உள்ளனர். பின்னர் அவர்கள் ஜெபங்கள் கேட்கப்படாமல் போகின்ற நிலையில் ஏமாற்றமடைந்து பின்மாற்றமும் அடைகின்றனர். எனவே ஒவ்வொரு தேவனுடைய பிள்ளையும், இந்த சத்தியத்தை குறித்த சரியான புரிந்து கொள்ளுதலோடு ஜெபிப்பது நல்லது.
நான் கேட்பது எல்லாவற்றையும் கர்த்தர் எனக்கு கொடுக்காமலிருப்பதற்காக கர்த்தருக்கு நன்றி. என் திட்டமல்ல, அவர் திட்டமே என் வாழ்வில் நிறைவேறட்டும்
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
======================
என்னை தூக்கி கடலில் போட்டுவிடுங்கள்
======================
என்னை தூக்கி கடலில் போட்டுவிடுங்கள்
======================
நடுக்கடலில் வீசும் கொடும் புயலில் ஒரு கப்பல் தவித்துக் கொண்டிருக்கின்றது. அனைவரும் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு மனிதன் என்னைத் தூக்கி அந்த கொந்தளிக்கும் கடலில் வீசுங்கள் என்று மற்றவர்களை கேட்டுக் கொண்டான். யாராவது இப்படிக் கேட்டுக் கொள்வார்களா? தன்னுடைய வாழ்க்கையின் மீது எந்த அளவு விரக்தியில் இருந்திருந்தால் அவர் இப்படி சொல்லியிருப்பார்.
ஏன் அந்த விரக்தி? தேவ சமுகத்தைவிட்டு, தேவ சித்தத்தைவிட்டு விலகி ஓடிக் கொண்டிருந்ததால் தான் யோனா இப்படி விரக்தியான சுழலுக்குள் தள்ளப்பட்டார்.
அப்பொழுது யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய் தர்ஷீசுக்குப் போகிற ஒரு கப்பலைக்கண்டு, கூலிகொடுத்து, தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான்.
யோனா 1:3
யோனா 1:3
கர்த்தருடைய சமுகம் தான் ஒரு தேவபிள்ளைக்கு பாதுகாப்பான, சமாதானமான அடைக்கலம். அதனின்று விலகி ஓடுகிறவனுடைய வாழ்க்கை விரக்தியில் தான் போய் முடியும்.
இன்று நாம் நம்முடைய பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்படி ஜெபித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அந்த பிரச்சனைகளுக்கான காரணம் என்னவென்று யோசிக்கின்றோமா? ஒருவேளை, அந்த காரணம் தேவ சித்தத்திற்கு விலகிச் செல்லும் நம்முடைய கீழ்ப்படியாமையாக இருந்தால், அதனின்று மனந்திரும்பாமல் நமக்கு தீர்வு ஒருக்காலமும் கிடைக்காது.
மனந்திரும்பினால் கண்டிப்பாக மறுவாழ்வு கிடைக்கும். ஆனால் யோனா மனந்திரும்ப மனமில்லாமல் சாக நினைத்தான். என்னை கடலில் எறிந்து விடுங்கள் என்றான். நாமும் அதே தவறைத்தான் செய்கின்றோம். பிரச்சனை வந்த உடன் சாக நினைக்கின்றோம், ஓட நினைக்கின்றோம், புலம்புகிறோம், தவிக்கின்றோம். ஆனால் நம் கீழ்ப்படியாமை எதுவென்று கண்டறிந்து, அதனின்று மனந்திரும்ப மறுக்கின்றோம்.
நம்முடைய சுய சித்தத்தினாலே நாம் செய்கின்ற அநேக காரியங்கள் தான் நம்முடைய வாழ்க்கையில் நமக்கு பிரச்சனைகளாக வந்து முடிகின்றது. செத்துவிடுவது அதற்கு தீர்வு அல்ல. மனந்திரும்புதலே தீர்வு.
தேவ பிள்ளைகளே, நீங்கள் இன்று தேவனுக்கு கீழ்ப்படிந்து, தேவ சமுகத்தில் இருக்கிறீர்களா? அல்லது தேவ சமுகத்தைவிட்டு விலகி ஓடிக் கொண்டிருக்கின்றீர்களா? இந்த கேள்விக்கான பதில் உங்களுக்கு மனதிலே தெரியும். உங்களை நீங்களே ஏமாற்ற முடியாது.
தேவ சமுகம் அல்லது தேவ திட்டத்திலிருந்து விலகிச் சென்று, எந்த எச்சரிப்புகளுக்கும் செவி சாய்க்காமல் துணிகரமாய் அதில் தொடருகின்றவர்கள் வாழ்க்கை விரக்தியில் போய் முடியும். ஆனால் எந்த சூழ்நிலையிலும் தீர்வு ரொம்ப சிம்பிள் - மனந்திரும்புதல்.
யோனா மீனின் வயிற்றில் மனந்திரும்பினான். கர்த்தர் பாதுகாப்பாக அவனை தேவ திட்டத்தின்படியான நினிவே பட்டணத்திற்கு கொண்டுவந்தார். அவனை பயன்படுத்தினார். நினிவே பட்டணம் முழுவதும் இரட்சிக்கப்பட்டது. மனந்திரும்புதலே பெரிய பெரிய ஆசீர்வாதங்கள், உயர்வுகளுக்கு ஆதாரமாக இருக்கின்றது.
கர்த்தர் உங்களோடு இடைபடுவாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
கர்த்தர் உங்களோடு இடைபடுவாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
=======================
அசுத்த ஆவிகளை துரத்தும் அதிகாரம்
=======================
இயேசு ஜெப ஆலயத்திலே ஒரு அசுத்த ஆவியுள்ள மனிதனை குணப்படுத்திய போது, “எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன? *இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது? இவர் அதிகாரத்தோடே அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்,* அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று தங்களுக்குள்ளே ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.”
மாற்கு 1:27
நம்ம ஊர் கலாச்சாரத்தின்படி, கெடுதல் செய்யும் பொல்லாத ஆவிகளை மக்கள் வணங்க ஆரம்பித்துவிடுவார்கள். அகால மரணமடைந்த மனிதர்கள் ஆவியாய் வந்து மற்றவர்களை துன்புறுத்துவார்கள் என்று அவர்களுக்கெல்லாம் கோயில் கட்டி கும்பிட ஆரம்பிப்பார்கள். இப்படித்தான் தெய்வங்கள் பெருகிப் போயின.
நம்ம ஊர் கலாச்சாரத்தின்படி, கெடுதல் செய்யும் பொல்லாத ஆவிகளை மக்கள் வணங்க ஆரம்பித்துவிடுவார்கள். அகால மரணமடைந்த மனிதர்கள் ஆவியாய் வந்து மற்றவர்களை துன்புறுத்துவார்கள் என்று அவர்களுக்கெல்லாம் கோயில் கட்டி கும்பிட ஆரம்பிப்பார்கள். இப்படித்தான் தெய்வங்கள் பெருகிப் போயின.
யூதர்களும் அசுத்த ஆவிகளுக்கு பயந்தார்களோ இல்லையோ தெரியவில்லை. பழைய ஏற்பாட்டில் தாவீது மாத்திரம் தன் இசையால் சவுலுக்குள்ளிருந்த பொல்லாத ஆவியை துரத்தினான். மற்ற யாரும் பொல்லாத ஆவியை துரத்தினதாக எழுதப்படவில்லை. ஒரு முறை இயேசு பிசாசு பிடித்த ஊமையான ஒரு மனிதனுக்குள்ளிருந்த பிசாசை துரத்தி, அவனை குணமாக்கிய போது, “இஸ்ரவேலில் இப்படி ஒருக்காலும் காணப்படவில்லை” என்று மக்கள் சொன்னார்கள்
மத்தேயு 9:33
ஆனால் இயேசு அதிகாரத்தோடு, அசுத்த ஆவிகளை துரத்த ஆரம்பித்தார். அதைக்கண்ட மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
இன்றும் கெடுதல் செய்யும் ஆவிகளுக்கு பயந்து கும்பிடும் மக்கள் மத்தியில், அந்த ஆவிகளை துரத்தி, ஜனங்களை விடுதலையாக்கும் அதிகாரத்தை தேவன் நமக்கு கொடுத்திருக்கின்றார்ஃ
பிசாசுகள் துரத்தப்படுவது தேவ ராஜ்யம் அல்லது தேவனுடைய ஆளுகை அந்த மனிதர்கள் மத்தியில் வருவதை வெளிப்படுத்துகின்றது. (மத்தேயு 12:28) தேவனுடைய ஆளுகை இருக்கும் இடத்தில் அசுத்த ஆவிகளால் இருக்க முடியாது. தேவ ராஜ்யத்தை ஸ்தாபிக்க வந்த இயேசுவைப் பார்த்த அசுத்த ஆவிகள் கதறி ஓடுவதை நாம் பல முறை வேதத்தில் வாசிக்கின்றோமே!
*சிலர் அசுத்த ஆவிகள் இருப்பதை நம்ப மறுக்கின்றனர். ஆனால் ஊழியத்தில் மக்கள் அசுத்த ஆவிகளால் பீடிக்கப்பட்டு துன்புறுவதை கண்கூடாக பார்க்கின்றோம். நாங்கள் ஜெபிக்கும் போது, அவைகள் மக்களை விட்டு ஓடுவதையும், அதன் பின்பு மக்கள் விடுதலைபெற்று தேவனுடைய பிள்ளைகளாய் வாழ்வதையும் பார்க்கின்றோம்.
நம் தேசத்தில் பல விதமான அசுத்த ஆவிகள், பொல்லாத ஆவிகள் உண்டு. ஜனங்கள் அவைகளையே தெய்வமாக்கி வணங்கியும் வருகின்றனர். பலர் அவைகளால் ஆட்கொள்ளப்பட்டு, வேதனையோடு வாழ்ந்து வருகின்றனர். மனிதன் அசுத்த வாழ்க்கை வாழும்படியாகவும், சாபத்தின் வாழ்க்கை வாழும்படியாகவும், அழிவின் பாதைக்கு செல்லும் படியாகவும் அசுத்த ஆவிகள் பிசாசின் ஆயுதங்களாக இருந்து, மனிதனை பொல்லாத வழியில் நடத்துகின்றது.
அப்படிப்பட்ட அசுத்த ஆவிகளை துரத்துவது என்பது சிலருக்கு மட்டுமே கிடைக்கும் விசேஷ வரமல்ல. ஆவிகளை துரத்தும் அதிகாரத்தை தேவனுடைய பிள்ளைகள் ஒவ்வொருவரின் கையிலும் கர்த்தர் கொடுத்துள்ளார். இயேசுவை விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களில் முதலாவதாக, “என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்” என்று இயேசு சொல்லியிருப்பதை கவனியுங்கள்.
மாற்கு 16:17
கெட்ட ஆவிகளுக்கு பயப்படாதீர்கள்! இருளுக்கு பயப்படாதீர்கள்! அசுத்த ஆவிகளை துரத்தும் அதிகாரம் உங்கள் கையில் இருக்கின்றது. அசுத்த ஆவிகள் தான் உங்களைக் கண்டு பயப்படும். (மாற்கு 1:24). நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தின் அதிகாரத்தை பெற்ற அதிகாரிகள். உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி, மக்களை விடுவியுங்கள்.
தேசத்தின் இருள் நீங்கட்டும்! வெளிச்சம் பிரகாசிக்கட்டும்!!
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
======================
பிழைப்பு முக்கியமா, இயேசு முக்கியமா?
=======================
செய்யும் தொழிலே தெய்வம் என்று தங்கள் தொழில் சம்பந்தப்பட்ட அனைத்தையும் வணங்கும் கலாச்சாரமுள்ள தேசத்தில் வாழ்ந்து வருகின்றோம். ஆதிகால முதல் மக்கள் தங்களுக்கு உணவளிக்கின்ற விவசாயக் கருவிகளையும், பால் தரும் பசு மற்றும் விளைச்சலுக்கு உதவி செய்யும் சூரியன் ஆகியவற்றை வணங்கி வருகின்றனர். இப்போதும் வெவ்வொறு தொழில் செய்யும் அனைவரும் தங்கள் இயந்திரங்களை மாலையிட்டு ஆராதிக்கின்றனர்.
ஆனால் இயேசு அழைத்தார் என்ற ஒரே காரணத்திற்காக தங்களுக்கு பிழைப்பை அளித்த படவுகளை விட்டு இயேசுவை பின் சென்றார்கள் பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் போன்ற சீஷர்கள்!
பிழைப்பு முக்கியமா கடவுளை தேடுவது முக்கியமா?
ஆதியிலே மனிதனுக்கு வேலை செய்து சாப்பிட வேண்டும் என்று கட்டளை கொடுத்தவர் தேவன்தான். ஆதாம் காலம் தொடங்கியே தோட்டத்தை பராமரித்து அதன் கனியை புசிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். வேலை செய்யாதவன் சாப்பிடாதிருக்ககடவன் என்று பவுலும் வலியுறுத்துகின்றார்.
ஆதியிலே மனிதனுக்கு வேலை செய்து சாப்பிட வேண்டும் என்று கட்டளை கொடுத்தவர் தேவன்தான். ஆதாம் காலம் தொடங்கியே தோட்டத்தை பராமரித்து அதன் கனியை புசிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். வேலை செய்யாதவன் சாப்பிடாதிருக்ககடவன் என்று பவுலும் வலியுறுத்துகின்றார்.
ஆனால் வெறும் பிழைப்பிற்காக மாத்திரம் நாம் மனிதர்களாய் தேவனால் படைக்கப்படவில்லை. மிருகங்கள் கூட உணவை வேட்டையாடி சம்பாதித்து உண்டு வாழ்கின்றது. அவைகளுக்கு உணவிற்கு அப்பாற்பட்டு வாழ்க்கையில் வேறு எதுவும் முக்கியமில்லை.
ஆனால் மனிதர்களாகிய நாம் படைக்கப்பட்டது தேவனுடைய ஐக்கியத்திற்காக மற்றும் அவருடைய சித்தம் செய்வதற்காக! அதனால் தான் இயேசு சொன்னார், “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்” (மத்தேயு 6:33). தேவ ராஜ்யத்தையும் அதற்கடுத்த காரியங்களையும் தேடுவதே நமக்கு முதன்மையான காரியம்.
இதனால் தான், இயேசு அழைத்த உடன் தங்களின் பிழைப்பைக் கூட அப்படியே விட்டு விட்டு இயேசுவை பின்பற்றினார்கள். இயேசுவிற்கு பின்செல்வது, அவருக்கு ஊழியம் செய்வது என்பது தேவனுடைய மகா உன்னதமான இரட்சண்ய பணியில் ஒரு பங்காற்றுவது ஆகும்.
இதனால் தான், இயேசு அழைத்த உடன் தங்களின் பிழைப்பைக் கூட அப்படியே விட்டு விட்டு இயேசுவை பின்பற்றினார்கள். இயேசுவிற்கு பின்செல்வது, அவருக்கு ஊழியம் செய்வது என்பது தேவனுடைய மகா உன்னதமான இரட்சண்ய பணியில் ஒரு பங்காற்றுவது ஆகும்.
உலகமனைத்தையும் படைத்த சர்வ வல்லவரின் பணியில் நாம் இணைவது என்பது எத்தனை பாக்கியமான செயல்!*
இதனை உணர்ந்த சீஷர்கள் தங்கள் வலைகள் படவுகளை அப்படியே விட்டுவிட்டு இயேசுவை பின்தொடர்ந்தார்கள். அந்த சீஷர்கள் மூலமாக தேவன் இந்த உலகத்தில் பெரிய காரியங்களை செய்தார்.
இன்று அநேகர் வேலை வேலை என்று இயேசுவை மறந்து பொருள் ஈட்டுவதிலேயே நேரமனைத்தையும் செலவிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்! ஞாயிற்று கிழமை கூட ஆராதனைக்கு முழு மனதாய் வர முடியாதபடி வேலை பாரம் அநேகரை அழுத்திக் கொண்டிருக்கின்றது.
இயேசுவா வேலையா என்று ஒப்பிடும்போது, உங்களுக்கு எது முக்கியமானதாய் தோன்றுகின்றது என்பதை சிந்தித்துப் பாருங்கள்
நீங்கள் அனைவரும் அப்படியே வேலையை ராஜினாமா செய்து விட்டு, வியாபாரம் தொழிலை கைவிட்டுவிட்டு வாருங்கள் என்று சொல்லவில்லை. பவுல் அப்போஸ்தலன் கூடாரம் செய்யும் தொழில் செய்து கொண்டே எத்தனை மகா ஊழியத்தை நிறைவேற்றினார் என்பதை நாம் அறிந்திருக்கின்றோம்.
தேவனை தேட வேண்டிய நேரத்தில் பிழைப்படுக்கடுத்த காரியங்களில் ஈடுபடுவதை விட்டு விடுங்கள். கர்த்தருக்கு ஊழியம் செய்ய வேண்டிய நேரத்தில் உங்கள் வலைகளையும் படவுகளையும் விட்டு விட்டு ஊழியம் செய்ய வாருங்கள். கர்த்தருக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் இதிலே வெளிப்படும்!
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
===========================
தேவனை தேடுகின்ற உணர்வுள்ளவர் உண்டோ?
=============================
கர்த்தர் ஆதாமையும் ஏவாளையும் பூமியில் பலுகி பெருகச் செய்த போது, மக்கள் கோடிக்கணக்கில் பெருகினார்கள். ஆனால் தேவன் அவர்களை அழித்தார். வசனம் சொல்கின்றது, ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள் வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள். மத்தேயு 24:38-39
என்ன உணராதிருந்தார்கள்? எதற்காக அவர்களை ஜலப்பிரளயம் வாரிக்கொண்டு சென்றது? பெண் கொள்வதும், பெண் கொடுப்பதும் தவறா? அல்லது புசித்து குடிப்பது தவறா?
கவனியுங்கள், புசிப்பது, குடிப்பது தவறல்ல. பெண் கொடுத்து, பெண் கொள்வதும் தவறல்ல. லை செய்து சம்பாதிப்பதும், வியாபாரம் செய்து பணம் ஈட்டுவதும், பொருட்கள் வாங்குவதும், வீடுகள் கட்டுவதும், மகிழ்ச்சியாய் வாழ்வதும் தவறல்ல. இவை எல்லாவற்றிலும் பிசியாய் இருந்துவிட்டு, தேவனைப்பற்றிய எண்ணமில்லாமல் வாழ்வது தான் மிகப்பெரிய தவறு.
தேவன் இல்லாத எதுவும் அக்கிரமமே! கர்த்தரைப் பற்றிய எண்ணமில்லாமல் வாழும் உலக வாழ்க்கைதான் துன்மார்க்கமான வாழ்க்கை. அந்த வாழ்க்கை மற்ற எல்லா தீமைகளையும் படிப்படியாக கொண்டுவந்துவிடும். அதற்காகத்தான் கர்த்தர் அன்று முழு உலகத்தையும் வெள்ளத்தினால் அழித்தார். ஆனால் அதன் மத்தியிலும் கர்த்தரை தேடின ஒரு மனிதன், நோவாவை மட்டும் கர்த்தர் காப்பாற்றினார்.
தேவன் இல்லாத எதுவும் அக்கிரமமே! கர்த்தரைப் பற்றிய எண்ணமில்லாமல் வாழும் உலக வாழ்க்கைதான் துன்மார்க்கமான வாழ்க்கை. அந்த வாழ்க்கை மற்ற எல்லா தீமைகளையும் படிப்படியாக கொண்டுவந்துவிடும். அதற்காகத்தான் கர்த்தர் அன்று முழு உலகத்தையும் வெள்ளத்தினால் அழித்தார். ஆனால் அதன் மத்தியிலும் கர்த்தரை தேடின ஒரு மனிதன், நோவாவை மட்டும் கர்த்தர் காப்பாற்றினார்.
ஆதியாகமம் 6:9-ல் நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான். என்று வேதம் சொல்கின்றது.
இயேசு சொன்னார், “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்” (மத்தேயு 24:37). அதே போல இன்று நோவாவின் நாட்களில் நடந்தது போல உலகம் தேவனை தேடுவதை தவிர மற்ற எல்லாவற்றையும் தீவிரமாக செய்கின்றது. பணம், பொருள், ஆஸ்தி, திருமணம், குடும்பம், ஆசாபாசங்கள், அறிவியல், முன்னேற்றம் என்று கர்த்தரை மறந்து வாழ்கின்றது.
இயேசு சொன்னார், “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்” (மத்தேயு 24:37). அதே போல இன்று நோவாவின் நாட்களில் நடந்தது போல உலகம் தேவனை தேடுவதை தவிர மற்ற எல்லாவற்றையும் தீவிரமாக செய்கின்றது. பணம், பொருள், ஆஸ்தி, திருமணம், குடும்பம், ஆசாபாசங்கள், அறிவியல், முன்னேற்றம் என்று கர்த்தரை மறந்து வாழ்கின்றது.
தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார் என்று சங்கீதக்காரன் சொல்வது போல கர்த்தர் இன்று பெருமூச்சோடு உலகத்தைப் பார்க்கின்றார். ஆனால் சபையில் உள்ள ஜனங்கள் கூட கர்த்தரை முழு இருதயத்தோடு தேடாமல், வேலை, வியாபாரம், குடும்பம் என்று ஓடிக் கொண்டே இருக்கின்றார்கள்.
நல்ல சம்பாதிக்க வேண்டும், வசதியாய் வாழ வேண்டும், புகழ் பெற வேண்டும், அதிகாரத்தில் உயர வேண்டும் என்பது தான் ஊழியர்கள் தொடங்கி அனைவரின் கனவாகவும் உள்ளது. அந்த கனவை நனவாக்கத்தான் தேவனைகூட தேடுகிறார்கள். தேவனில்லாமல் அந்த கனவு நிறைவேறுமென்றால் தேவனை விட்டுவிடவும் ஆயத்தமாய் உள்ளார்கள்.
அதற்கு உதாரணம், ஞாயிற்றுக்கிழமை கம்பெனியில் வேலை வைத்து சம்பளம் கொடுத்தால், தேவனைத் தேட சபைக்கு வராமல், கம்பனிக்கு வேலைக்குச் சென்று சம்பாதிக்க சென்று விடுகின்றார்கள். அதிக வேலை செய்து அதிகம் சம்பாதிப்பதற்காக, ஜெபம், வேத வாசிப்பை மறந்து விடுகின்றார்கள். தாங்கள் ஆசைப்பட்டவரை திருமணம் செய்ய, தேவனையே மறுதலித்தும் செல்கின்றார்கள்.
அதற்கு உதாரணம், ஞாயிற்றுக்கிழமை கம்பெனியில் வேலை வைத்து சம்பளம் கொடுத்தால், தேவனைத் தேட சபைக்கு வராமல், கம்பனிக்கு வேலைக்குச் சென்று சம்பாதிக்க சென்று விடுகின்றார்கள். அதிக வேலை செய்து அதிகம் சம்பாதிப்பதற்காக, ஜெபம், வேத வாசிப்பை மறந்து விடுகின்றார்கள். தாங்கள் ஆசைப்பட்டவரை திருமணம் செய்ய, தேவனையே மறுதலித்தும் செல்கின்றார்கள்.
தேவன் நம்மைப்படைத்த ஆண்டவர், அவர் சர்வ வல்லவர், அவர் நமக்காய் மரித்தார், நம் பாவங்களை மன்னிக்கின்றார், அவருடைய பிள்ளையாய் மாற்றி நித்திய ஜீவனை அளிக்கின்றார் என்ற எண்ணத்தோடு ஒரு பிள்ளை தகப்பனை தேடுவது போல விசுவாசிகள் தேவனைத் தேட வேண்டும்.
நீங்கள் வாழும் ஒவ்வொரு மணித்துளியும் தேவனைத் தேடும் ஏக்கம் வேண்டும். நீங்கள் விடும் ஒவ்வொரு மூச்சும் கர்த்தர் பெயர் சொல்ல வேண்டும். நீங்கள் செய்யும் அத்தனை செயல்களும், அவிசுவாசிகள் மத்தியில் தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்த வேண்டும். கர்த்தர் இல்லாத எந்த ஒரு கிரியையும், எந்த ஒரு எண்ணமும் நம் வாழ்வில் இருக்கவே கூடாது.
தேவனை தேடுகின்ற உணர்வுள்ளவர்கள் உண்டோ!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
Thanks for using my website. Post your comments on this