உங்கள் ஜாதகம் | யாருக்கு ஐந்தறிவு, யாருக்கு ஆறறிவு? | இறுகிப் போன நிலம் | முட்செடிகள் ஜாக்கிரதை! | பிழைப்பு
=====================
உங்கள் ஜாதகம்
======================
இயேசுதான் மேசியா என்று கண்டு கொண்ட அந்திரேயா தன் சகோதரனாகிய சீமோன் பேதுருவை இயேசுவிடம் அழைத்துக் கொண்டு வந்தான். இயேசு சீமோனை முதன் முறை பார்த்த மாத்திரத்தில், அவனை நோக்கி, “நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய்” என்றார். கேபா என்ற அரமேயு பாஷையின் வார்த்தைக்கு கற்பாறை என்று அர்த்தம். கற்பாறை கிரேக்க மொழியில் Πέτρος (Petros) என்று அழைக்கப்படும். அதைத்தான் ஆங்கிலத்தில் பீட்டர் என்றும் தமிழில் பேதுரு என்றும் அழைக்கின்றோம். சீமோன் இயேசுவை சந்தித்த பின்னர் பேதுரு என்று அழைக்கப்பட்டான்.
முதன் முதல் சந்திப்பிலேயே இயேசு சீமோனின் ஜாதகத்தை கணித்துவிட்டார். நீ ஒரு கற்பாறை என்றார்.* அதன் விளக்கத்தை மத்தேயு 16:18ல் இயேசு கூறியுள்ளார். “மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாயிருக்கிறாய், இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.” நீ கற்பாறையாயிருக்கிறாய், உன் மேல் என் சபையை கட்டுவேன் என்றார் இயேசு. இதற்கு அர்த்தம், பேதுருவின் மூலமாக இயேசு தம் சபையை கட்டப்போகின்றார்.
அதே போல பின் நாட்களில் சீமோன் பேதுரு மூலமாய் முதன் முதல் புதிய ஏற்பாட்டு சபை உருவானது. மிக ஆச்சரியமாயிருக்கின்றது. *ஆண்டவராகிய இயேசு ஒரு மனிதனை பார்த்த மாத்திரத்தில் அவன் மூலமாய் தாம் செய்யப்போகும் காரியங்களை சொல்லிவிட்டார். அவனோடு பழகவில்லை. அவன் நல்லவனா கெட்டவனா, திறமையானவனா இல்லையா, கடின உழைப்பாளியா சோம்பேறியா, நம்பத்தகுந்தவனா இல்லையா என்று அறிவதற்கு முன்னமே கர்த்தர் அவன் மூலமாய் தம் சபையை கட்டப்போவதாக அறிவித்து விட்டார்.
இது எப்படி நடந்தது? கவனியுங்கள், சீமோன் கர்த்தரை சந்திக்கும் முன்னமே, கர்த்தர் சீமோனை நன்கு அறிந்துள்ளார். அவனைக் கொண்டு இந்த உலகத்தில் தேவன் செய்ய விரும்பும் காரியங்களுக்கான ஒரு திட்டத்தை வைத்திருக்கின்றார். சீமோன் என்று கர்த்தரை சந்தித்தானோ, அன்று கர்த்தர் அத்திட்டத்தை அவனுக்கு வெளிப்படுத்தினார்.
சீமோனுக்கு மட்டுமல்ல, நம் ஒவ்வொருவருக்கும் தேவன் ஒரு திட்டம் வைத்துள்ளார். அந்த திட்டத்தின்படிதான் நம்மை அவர் நடத்துகின்றார். அவரை நீங்கள் சந்திக்கும் வேளையில், உங்களைக்குறித்த தேவ திட்டத்தை அவர் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.
இன்று உலகத்தார் தங்கள் பிறந்த நேரத்தைக் கொண்டு தங்களுக்கான ஜாதகத்தை கணிக்கின்றார்கள். அந்த நேரத்தில் கிரகங்களின் நிலையைக் கொண்டு தங்கள் வாழ்க்கையின் போக்கை தீர்மானிக்கின்றார்கள். தங்கள் குழந்தைகளை பெற்றெடுக்க தாங்கள் விரும்பும் நேரத்தையும் அவர்களே தீர்மானித்து, அந்த நேரத்தில் ஆப்ரேசன் மூலம் குழந்தையை பெற்றெடுத்து, அந்த நேரத்தைக் கொண்டு தங்கள் வாழ்க்கையை கணிக்கின்றார்கள். அது எப்படி உண்மையாயிருக்க முடியும்?
கர்த்தர் உங்கள் வாழ்க்கைக்கான ஜாதகத்தை தன் கையில் வைத்துள்ளார். அவரை சந்திக்கிறவர்களுக்கு கர்த்தர் அதை வெளிப்படுத்துகின்றார். மேலும் கர்த்தருக்கு கீழ்ப்படிந்து வாழ அர்ப்பணிக்கின்றவர்கள் வாழ்க்கையில் கர்த்தர் தம் திட்டத்தை நிறைவேற்றுகின்றார். கிரகங்களின் நிலையைக் கொண்டு நம் வாழ்க்கையை அவர் நடத்தவில்லை. நம் வாழ்க்கையை நடத்த, கிரகங்களை கூட மாற்றி அமைக்கும் சர்வ வல்லவர் அவர்.
என்ன செய்ய போகின்றோம்? ஏது செய்ய போகின்றோம்? என்று குழம்பி கொண்டிருக்கும் தேவ பிள்ளையே, கர்த்தரிடம் சென்று உங்கள் ஜாதகத்தை அறிந்து கொள்ளுங்கள். அவர் உங்களைக் கொண்டு என்ன செய்ய விரும்புகின்றார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவருக்கு கீழ்ப்படிந்து அந்த பாதையில் பயணியுங்கள். உங்கள் வாழ்க்கை மிகுந்த ஆசீர்வாதமாயிருக்கும்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
+91 97 9000 2006
===============================
யாருக்கு ஐந்தறிவு, யாருக்கு ஆறறிவு?
===============================
ஒரு குருவி தன் கூட்டை கட்ட சுமார் 2 நாட்களிலிருந்து ஒரு வாரம் வரை எடுத்துக் கொள்கின்றது. முட்டையிட்டு குஞ்சு பொரித்தபின்னர், அந்த கூட்டை சொந்தம் கொண்டாடிக் கொண்டே உட்கார்ந்திருப்பதில்லை. மகிழ்ச்சியுடன் பறந்து மற்ற இடங்களுக்கு சென்று, வேண்டுமென்ற போது மறுபடியும் கூடு கட்டிக் கொள்கின்றது. அவைகள் 10 கூடு, 20 கூடு என்று கட்டி அதன் குஞ்சுகளுக்கு சொத்து சேர்ப்பதில்லை. அந்தந்த குருவி தன்தன் கூட்டை கட்டிக் கொள்ள வேண்டும். ஆனால் மனிதன் தன் வீட்டை கட்ட வருஷங்கள் ஆகின்றது. அந்த வீட்டை கட்டுவதற்காகவே வாழ்க்கை முழுவதும் உழைத்து EMI கட்டுகின்றான். அதற்காக எத்தனை பிரயாசம், கடன் பிரச்சனை, கண்ணீர், வியர்வை... இதிலும் அதிகமான பணம் கிடைத்தால் அதிகமான வீடுகளை கட்டுகின்றான். தான் கட்டின வீட்டை தன் சொத்து என உரிமை கொண்டாடிக் தன் பிள்ளைகளுக்கு கொடுக்கின்றான்.
இதில் யார் புத்திசாலி? இந்த உலகில் எதையும் சொந்தம் கொண்டாடாமல் கிடைத்ததை கொண்டு மகிழ்ச்சியாய் வாழும் குருவியா? இதை சேர்க்க வேண்டும், அதைக் கட்ட வேண்டும் என்று பைத்தியமாய் அலையும் மனிதனா?
யாருக்கு ஆறறிவு, யாருக்கு ஐந்தறிவு? ஆறறிவு உள்ளவன் என்று தன்னைக் குறித்து பெருமிதப்படும் மனிதன் தான் இந்த உலகில் பரிதாபமாக வாழ்கின்றான். ஜந்தறிவு உள்ள பறவைகள் மிருகங்கள் இயற்கையின் ஒழுங்கில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது. அவைகள் சாவை நினைத்து பயந்து கொண்டிருப்பதுமில்லை. வாழ்வதற்காக கவலைப்படுவதுமில்லை.
உலகம் தற்காலிகமானது என்பதை குருவி கூட அறிந்திருக்கின்றது போலும். நிரந்தரமாய் எதையும் கட்டுவதில்லை. நிரந்தரமாய் எதிலும் தங்குவதுமில்லை. ஆனாலும் கர்த்தர் அவைகளை போஷித்து காத்து வருகின்றார்.
இதைத் தான் நம் ஆண்டவராகிய இயேசு சொன்னார், “ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்;
அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?” (மத்தேயு 6:26)
மனிதன் மகிழ்ச்சியாகவும், சமாதானமாகவும் வாழ்ந்து கடவுளை தேடுவது தான் மனிதனுக்கு கடவுள் வைத்திருக்கும் நோக்கம். ஆனால் அது இல்லாமல், செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் அனுப்பி என்ன பயன்? அதனால் நமக்கு என்ன கிடைக்கப் போகின்றது? அறிவியல், விஞ்ஞானம் வளர்ந்து வானத்தை எட்டி நாம் என்ன சாதிக்கப்போகின்றோம்? கட்டுக் கட்டாக பணமும், அடுக்கடுக்கான மாடியும் கட்டி என்ன செய்ய போகின்றோம்.
இவை எதுவுமே இல்லாமல் காடுகளில் மகிழ்ச்சியாய் வாழும் பறவைகள், மிருகங்களைப் பாருங்கள். அவைகளை விட நாம் விசேஷித்தவர்கள் என்றால், அவைகளை விட நாம் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டுமல்லவா?
ஆனால் நாம் அப்படியில்லையே!
உலகப்பொருள், ஆஸ்தி, அந்தஸ்து, சொத்து, சுகம் என்று தேட தேட, நாம் வருத்தத்தையும் பிரச்சனைகளையும் நம் மேல் வருவித்துக் கொள்கின்றோம். கவலை, கவலை, கவலை! கவலை நம் வாழ்க்கையை ஆக்கிரமித்துக் கொண்டது. வசதியை தேடி தேடி, வாழ்க்கையை தொலைத்து நிற்கின்றோம். தேவனை தேடுவோம், மகிழ்ச்சியை திரும்ப பெறுவோம்.
உலகப்பொருள், ஆஸ்தி, அந்தஸ்து, சொத்து, சுகம் என்று தேட தேட, நாம் வருத்தத்தையும் பிரச்சனைகளையும் நம் மேல் வருவித்துக் கொள்கின்றோம். கவலை, கவலை, கவலை! கவலை நம் வாழ்க்கையை ஆக்கிரமித்துக் கொண்டது. வசதியை தேடி தேடி, வாழ்க்கையை தொலைத்து நிற்கின்றோம். தேவனை தேடுவோம், மகிழ்ச்சியை திரும்ப பெறுவோம்.
தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது. புத்திசாலியாயிருங்கள்!
கர்த்தர் உங்களுக்கு கற்றுக் கொடுப்பாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
கர்த்தர் உங்களுக்கு கற்றுக் கொடுப்பாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
======================
இறுகிப் போன நிலம்
======================
ஒரு விவசாயி விதைக்கும் போது அவன் விதைகள் வெவ்வேறு இடத்தில் விழுந்து வெவ்வேறு விதத்தில் பலன் கொடுத்தது. இதனைக் கொண்டு இயேசு ஒரு சத்தியத்தை போதித்தார்.அநேகர் வசனத்தை கேட்கின்றார்கள். ஆனால் வெகு சிலரே பலன் தருகின்றார்கள். சிலருக்கு எத்தனை வருடம் சபையில் வசனத்தை கேட்டும், அவர்கள் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இருப்பதில்லை. இதன் காரணம் என்ன?
விதைகள் விழும் அவர்களின் மனம் தான் காரணம்! வசனம் ஒன்றுதான் ஆனால் அவரவரின் மனதின் பண்பைக் கொண்டு சிலர் பலன் கொடுக்கின்றார்கள், சிலர் பலன் கொடுப்பதில்லை.
அதிலே முதல் நிலம் வழியருகே உள்ள நிலம்! முற்றிலும் பலன் தராத நிலம். பயிரை முளைப்பிக்க கூட முடியாத நிலம் இது!
விதைக்கின்றவர் கவனமில்லாமல் மனிதர்கள் நடக்கும் பாதையில் விதைக்கவில்லை. நிலத்தில் தான் விதைக்கின்றார். ஆனால் சில விதைகள் அந்த பாதைக்கு அருகில் இருக்கும் இடத்தில் போய் விழுகின்றது.
பாதைக்கு மிக அருகில் இருப்பதனால் இந்நிலம் உழப்பட்டிருக்காது. இறுகிப் போன நிலமாக, சமதளமாக காணப்படும். இப்படி இறுகிப் போன இடத்தில் விழும் விதைகள் எப்படி முளைக்கும்? அவை நிலத்தின் மேற்பரப்பில் காணப்படுகின்றபடியினால், அவைகளை பொறுக்கும்படி ஆயத்தமாய் காத்திருக்கும் பறவைகள் வந்து அவைகளை பொறுக்கிக்கொண்டு சென்று விடும்.
முளைத்து ஆயிரம் பயிர்களை பலனாய் கொடுக்கவேண்டிய விதை பறவைக்கு உணவாகி அழிந்து போகும்.
விதை முளைக்க வேண்டுமென்றால், நிலம் உழப்பட்டிருக்க வேண்டும். வசனம் கிரியை செய்ய வேண்டுமானால், *மனம் உழப்பட்டிருக்க வேண்டும்.
உழப்பட்ட மனம் என்பது முக்கியமாக இரண்டு காரியங்களை குறிக்கின்றது
1. வாஞ்சையுள்ள மனம் 2. தாழ்மையுள்ள மனம்.
1. வாஞ்சையுள்ள மனம்:
1. வாஞ்சையுள்ள மனம்:
வசனத்தைக் கேட்க தாகமுள்ள மனம் வேண்டும். இன்று கர்த்தர் என்னோடு என்ன பேசப் போகின்றார் என்று கேட்கும்படி ஆர்வத்துடன் அமர்ந்திருக்க வேண்டும். ஒரு உயர் அதிகாரி நம்மிடம் பேசினால் நாம் எப்படி கவனமாய் கேட்போமோ, அது போல மிக கவனமாய் கேட்க வேண்டும்.
பிரசங்கிக்கப்படும் போது ஏனோ தானோ என்று அமர்ந்திருந்தால், வசனம் நம் செவிக்குள் கூட செல்லாது. இப்படிப்பட்டவர்கள் பிரசங்கம் எப்போது முடியும் என்று காத்திருப்பார்கள். நேரத்தைக் கடத்த வேதாகமத்தின் பின் அட்டையில் படம் வரைந்து கொண்டிருப்பார்கள். பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசி விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
2. தாழ்மையுள்ள மனம்:
வசனம் பிரசங்கிக்கப்படும் போது, சொல்லும் கர்த்தாவே அடியேன் கேட்கிறேன் என்று ஒரு வேலைக்காரன் சொல்வதைப் போல, மனதில் தாழ்மையுடன் அமர்ந்திருக்க வேண்டும். பிரசங்கிப்பவர் சிறிய ஊழியர் தானே! அவர் என்ன பேசிவிடப் போகின்றார் என்ற எண்ணத்தோடு, அவைகளை ஏற்றுக் கொள்ளும் மனமில்லாமல் இருந்தால் வசனம் பிசாசினால் பொறுக்கிச் செல்லப்படும். நஷ்டம் உங்களுக்குத்தான்.
எனக்கு எல்லாம் தெரியும், இதையெல்லாம் நான் 100 முறை கேட்டிருக்கின்றேன் என்ற பெருமையுள்ள மனதோடு சிலர் அமர்ந்திருப்பர். சிலர் இந்த பிரசங்கம் அந்த நபருக்குத்தான், பாஸ்டர் அவரை குறிவைத்து தாக்குகின்றார் என்று உணர்வில்லாமல் அமர்ந்திருப்பார்கள். பிரசங்கத்திற்கு மதிப்பெண்கள் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். இது இறுகிப் போன நிலம்.
என்னுடைய வேதாகம கல்லூரி பேராசியர்களில் ஒருவரான, டியட்டர் கெம்லர் 80 வயதான தேவ மனிதர், சுவிட்சர்லாந்தை சார்ந்தவர். அவர் வேதத்தில் மிகவும் புலமை வாய்ந்தவர். கிரேக்க எபிரெய மொழிகளை கரைத்து குடித்தவர். ஆனால் எந்த மாணவர் பிரசங்கிக்க மேடை ஏறினாலும், தாழ்மையாய் உட்கார்ந்து வசனத்தை கவனிப்பார், குறிப்பெடுப்பார், பின்பு கருத்தோடு வசனத்திற்கு அர்ப்பணிப்பார். அது தான் உழப்பட்ட நிலம்.
எனக்கு எல்லாம் தெரியும், இதையெல்லாம் நான் 100 முறை கேட்டிருக்கின்றேன் என்ற பெருமையுள்ள மனதோடு சிலர் அமர்ந்திருப்பர். சிலர் இந்த பிரசங்கம் அந்த நபருக்குத்தான், பாஸ்டர் அவரை குறிவைத்து தாக்குகின்றார் என்று உணர்வில்லாமல் அமர்ந்திருப்பார்கள். பிரசங்கத்திற்கு மதிப்பெண்கள் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். இது இறுகிப் போன நிலம்.
என்னுடைய வேதாகம கல்லூரி பேராசியர்களில் ஒருவரான, டியட்டர் கெம்லர் 80 வயதான தேவ மனிதர், சுவிட்சர்லாந்தை சார்ந்தவர். அவர் வேதத்தில் மிகவும் புலமை வாய்ந்தவர். கிரேக்க எபிரெய மொழிகளை கரைத்து குடித்தவர். ஆனால் எந்த மாணவர் பிரசங்கிக்க மேடை ஏறினாலும், தாழ்மையாய் உட்கார்ந்து வசனத்தை கவனிப்பார், குறிப்பெடுப்பார், பின்பு கருத்தோடு வசனத்திற்கு அர்ப்பணிப்பார். அது தான் உழப்பட்ட நிலம்.
நீங்கள் இறுகிப் போன நிலமா?
தேவனுடைய வார்த்தை விலையேறப்பெற்றது. அதை மனதிற்குள் உள் வாங்கக்கூட செய்யாமல் வீணடிப்பது என்பது துணிகரமான செயல். நீங்கள் ஆர்மில்லாதவர்களாய், பெருமையான மனதோடு வசனத்தைக் கேட்பீர்களென்றால், நீங்கள் தேவனுடைய வல்லமையுள்ள வார்த்தையை துணிகரமாய் வீணடிக்கின்றீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கேட்கிறதற்கு காது இல்லாதவனித்திலிருந்து, உள்ளதும் எடுத்துக் கொள்ளப்படும் என்ற எச்சரிப்பு வார்தையை மனதில் கொள்ளுங்கள்.
யார் பேசினாலும், எந்த இடத்திலும் தேவ வார்த்தையை மிகுந்த ஆர்வத்துடனும், பயங்கலந்த தாழ்மையுடனும் கேளுங்கள். அதற்கு ஒப்புக் கொடுங்கள்.
யார் பேசினாலும், எந்த இடத்திலும் தேவ வார்த்தையை மிகுந்த ஆர்வத்துடனும், பயங்கலந்த தாழ்மையுடனும் கேளுங்கள். அதற்கு ஒப்புக் கொடுங்கள்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
======================
முட்செடிகள் ஜாக்கிரதை!
======================
வசனத்தின் எதிரி எது? வசனத்தின் எதிரி முட்செடிகள்தான். எது முட்செடி? உலகக்கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், சரீர இச்சைகளுமே முட்செடிகள் ஆகும்.விதைக்கிறவனின் உவமையில் இயேசு சொல்கின்றார்: “வசனத்தைக் கேட்டும், உலகக்கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற இச்சைகளும் உட்பிரவேசித்து, வசனத்தை நெருக்கிப் போட, அதினால் பலனற்றுப்போகிறார்கள்; இவர்களே முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள்” (மாற்கு 18-19)
எவ்வளவு வேதம் வாசித்தாலும், எத்தனை பிரசங்கம் கேட்டாலும் அந்த தேவ வார்த்தை நமக்குள் சென்று முளைத்து பலன் கொடுக்காதபடி, அந்த வசனச் செடியை நெருக்கி அழிக்கின்றது முட்செடிகள். வசனச்செடி சிறியதாகவும், முட்செடிகள் பலத்த தாகவும் இருப்பதால் வசனச்செடியால் தாக்குபிடிக்க முடியவில்லை.
உலகக்கவலை, ஐசுவரியத்தின் மயக்கம், மற்றும் சரீர இச்சைகளுமாகிய இப்படிப்பட்ட முட்செடிகள் உங்களுடைய மனதில் இருந்தால் நிச்சயம் எந்த வசனமும் உங்கள் வாழ்க்கையில் கிரியை செய்ய முடியாது.
1. உலகக்கவலை:
உலக வாழ்க்கையைக்குறித்த ஆசைகள் அதிகம் இருப்பவர்களுக்கு உலக க்கவலைகள் அதிகம் இருக்கும். அதிக நாள் வாழ வேண்டும், வீடு கட்ட வேண்டும், சொத்து சேர்க்க வேண்டும், அது வேண்டும், இது வேண்டும் என்று ஆசைப் பட ஆசைப்பட அதைக் குறித்த கவலைகள் மனதில் சேர்ந்து கொண்டே இருக்கும். இல்லாதவர்களுக்கு அதை அடையமுடியவில்லையே என்ற கவலை இருக்கும். இருப்பவர்களுக்கு அதை கட்டிக் காப்பதைக் குறித்த கவலைகள் அதிகம் இருக்கும்.
பேராசையினால் கடனில் அகப்பட்டு, சிக்கி மீளமுடியாமல் கவலைப்பட்டு கவலைப்பட்டு தங்கள் வாழ்க்கையை போக்கடிப்பார்கள். இப்படி கவலைப்படுகின்றவர்களால் வசனத்தை கேட்டு, அதை வாழ்க்கையில் கடைபிடித்து தேவ பக்தியாய் வாழவே முடியாது. பிரசங்கம் கேட்டு எழுப்புதலடைந்து வீடு திரும்புமுன், கவலைகள் அவர்களை அழுத்தி கீழே தள்ளிவிடும்.
உலக வாழ்க்கையைக்குறித்த ஆசைகள் அதிகம் இருப்பவர்களுக்கு உலக க்கவலைகள் அதிகம் இருக்கும். அதிக நாள் வாழ வேண்டும், வீடு கட்ட வேண்டும், சொத்து சேர்க்க வேண்டும், அது வேண்டும், இது வேண்டும் என்று ஆசைப் பட ஆசைப்பட அதைக் குறித்த கவலைகள் மனதில் சேர்ந்து கொண்டே இருக்கும். இல்லாதவர்களுக்கு அதை அடையமுடியவில்லையே என்ற கவலை இருக்கும். இருப்பவர்களுக்கு அதை கட்டிக் காப்பதைக் குறித்த கவலைகள் அதிகம் இருக்கும்.
பேராசையினால் கடனில் அகப்பட்டு, சிக்கி மீளமுடியாமல் கவலைப்பட்டு கவலைப்பட்டு தங்கள் வாழ்க்கையை போக்கடிப்பார்கள். இப்படி கவலைப்படுகின்றவர்களால் வசனத்தை கேட்டு, அதை வாழ்க்கையில் கடைபிடித்து தேவ பக்தியாய் வாழவே முடியாது. பிரசங்கம் கேட்டு எழுப்புதலடைந்து வீடு திரும்புமுன், கவலைகள் அவர்களை அழுத்தி கீழே தள்ளிவிடும்.
2. ஐசுவரியத்தின் மயக்கம்:
பணம் பணம் பணம்! இன்றைய உலகில் எல்லாமே பணம் தான்! பணம் மனிதனை உண்மையாவே மயக்கிவிடுகின்றது. பணம் இருப்பவர்கள் தான் எங்கும் மதிக்கப்படுகின்றனர். எனவே பணத்தின் மயக்கத்தினால் ஆட்கொள்ளப்பட்டு, வேலை வேலை என அலைந்து திரிகின்றவர்களால் வசனத்தை கேட்டு வாழ்க்கையில் அப்பியாசப்படுத்த முடியவே முடியாது.
தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியம் செய்ய உங்களால் கூடாது என்று இயேசு சொல்கின்றார். தேவனும் பணமும் மனிதனை வெவ்வேறு திசையில் இழுக்கும் இருவேறு சக்திகள். ஆசீர்வாதம் ஆசீர்வாதம் என்றுறு பணத்தைக் குறித்து அதிகம் பேசி மக்களுக்கு பண ஆசையை உண்டுபண்ணும் ஊழியர்கள் மக்களை நரகத்தின் திசையில் கொண்டு செல்கின்றார்கள். ஏனென்றால் பணத்தின் மயக்கம், மனிதனை எவ்வளவு பெரிய தீமையையும் செய்ய தூண்டும்.
3. சரீர இச்சைகள்:
மூன்றாவது, நம் பாவ சரீரத்திலிருந்து எழும்பும் மாம்ச இச்சைகள். நம் சரீரம் பல காரியங்களை நம்மிடம் கேட்டுக்கொண்டே இருக்கும். அசுத்தமானவைகளை காண விரும்பும், கெட்டவைகளை கேட்க விரும்பும், தேவையில்லாதவைகளை உணர விரும்பும். சரீர இச்சைகளை உடனுக்குடன் நிறைவேற்றி நிறைவேற்றி உங்கள் சரீரத்தை பழக்கினீர்களென்றால், ஒரு நிலையில் அவைகளை கட்டுப்படுத்தவே முடியாத நிலை ஏற்படும். அது உங்களை ஆபத்தில் கொண்டு செல்லும்.
இப்படிப்பட்ட இச்சைகளுக்கு அடிமைப்பட்டவர்கள் எந்த செய்தியை கேட்டு உணர்ந்தாலும், அவர்களால் அந்த வசனங்களை கடைபிடிக்க முடியாது. மாம்ச இச்சைகள் அவர்கள் ஆவிக்குரிய ஆசைகளை மேற்கொண்டுவிடும். ஜெபிக்க விரும்பினால் தூக்கமாய் வரும். வேத்தை தியானிக்க விரும்பினால், டிவி, போன் கவர்ந்து இழுத்துவிடும். மேலும் பரிசுத்தமாய் வாழ விரும்பினால், சங்கிலியால் கழுத்தை கட்டி இழுத்துச் செல்வது போல் இச்சைகளால் பாவத்திற்கு நேராய் இழுத்துச் செல்லப்படுவீர்கள்.
மூன்றாவது, நம் பாவ சரீரத்திலிருந்து எழும்பும் மாம்ச இச்சைகள். நம் சரீரம் பல காரியங்களை நம்மிடம் கேட்டுக்கொண்டே இருக்கும். அசுத்தமானவைகளை காண விரும்பும், கெட்டவைகளை கேட்க விரும்பும், தேவையில்லாதவைகளை உணர விரும்பும். சரீர இச்சைகளை உடனுக்குடன் நிறைவேற்றி நிறைவேற்றி உங்கள் சரீரத்தை பழக்கினீர்களென்றால், ஒரு நிலையில் அவைகளை கட்டுப்படுத்தவே முடியாத நிலை ஏற்படும். அது உங்களை ஆபத்தில் கொண்டு செல்லும்.
இப்படிப்பட்ட இச்சைகளுக்கு அடிமைப்பட்டவர்கள் எந்த செய்தியை கேட்டு உணர்ந்தாலும், அவர்களால் அந்த வசனங்களை கடைபிடிக்க முடியாது. மாம்ச இச்சைகள் அவர்கள் ஆவிக்குரிய ஆசைகளை மேற்கொண்டுவிடும். ஜெபிக்க விரும்பினால் தூக்கமாய் வரும். வேத்தை தியானிக்க விரும்பினால், டிவி, போன் கவர்ந்து இழுத்துவிடும். மேலும் பரிசுத்தமாய் வாழ விரும்பினால், சங்கிலியால் கழுத்தை கட்டி இழுத்துச் செல்வது போல் இச்சைகளால் பாவத்திற்கு நேராய் இழுத்துச் செல்லப்படுவீர்கள்.
இப்படிப்பட்ட முட்செடிகளால் உங்கள் மனம் நிறைந்திருக்கின்றதா என்பதை நீங்கள் உங்களையே சுய பரிசோதனை செய்து பாருங்கள்.
உலகக்கவலை, ஐசுவரியத்தின் மயக்கம், மற்றும் சரீர இச்சைகளாகிய இம்மூன்று முட்செடிகள் உங்கள் மனதில் வளராமல் இருக்க வேண்டுமானால், அவைகளைக் குறித்த காரியங்களில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும்.
உலகக்கவலை, ஐசுவரியத்தின் மயக்கம், மற்றும் சரீர இச்சைகளாகிய இம்மூன்று முட்செடிகள் உங்கள் மனதில் வளராமல் இருக்க வேண்டுமானால், அவைகளைக் குறித்த காரியங்களில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும்.
சினிமா போன்ற உலக இச்சையை தூண்டும் காரியங்கள் அறவே தவிர்த்து விடுங்கள். பண ஆசையை தூண்டும் செய்திகள் மற்றும் நண்பர்களை தவிர்த்து விடுங்கள். சமூக வலை தளங்கள் மற்றும் உலக ஆசையை தூண்டு எல்லா மீடியாக்களில் செலவிடும் நேரங்களை மிகவும் குறைத்துவிடுங்கள். இன்றைய காலங்களில் உங்களுக்குள்ளே முட்செடியின் விதைகளை விதைப்பவைகள் இவைகளே!
வாழ்வளிக்கும் வசனத்தை அழிக்கும் முள் செடிகள் மீது ஜாக்கிரதையாயிருங்கள்!
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
=============
பிழைப்பு
=============
பிழைப்பு என்ற வார்த்தையை பல்வேறு அர்த்தங்களில் உபயோகிப்போம். ஒரு மனிதன் நோய்வாய்ப்பட்டு சாகக்கிடந்தால், அவன் சுகமடைந்து உயிர்பெறுவதை பிழைத்துக் கொண்டான் என்போம். ஒரு மிகுந்த வயதான பாட்டி, தன் தள்ளாத வயதிலும் தெருவில் இட்லி விற்று பிழைத்தால், அதையும் வயிற்று பிழைப்பு என்போம். ஒரு மனிதன் சாமர்த்தியமாக வியாபாரம் செய்து பொருளீட்டி உயர்ந்தால், அவரையும் பிழைக்கத் தெரிந்தவன் என்று பாராட்டி பேசுவோம்.
பிழைப்பு என்பது நாம் உயிர் பிழைப்பதிலிருந்து, நாம் உண்டு வாழ்ந்து, உயருவது வரை அத்தனையையும் குறிக்கின்றது. பிழைப்பதற்காக மனிதன் எதையும் செய்வான் என்பதை நான் உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை.
ஆனால் தேவ பிள்ளைகளுக்கு கர்த்தர் பிழைப்பிற்கு ஒரு இரகசியத்தை கொடுத்திருக்கின்றார். அது தான் மத்தேயு 4:4, "மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்."
அப்பம் என்பது உலகத்தில் மனிதன் தான் பிழைக்க நம்பியிருக்கும் உணவு, பணம், மருந்து இன்னும் அனேக உலக காரியங்களை குறிக்கின்றது. தான் பிழைக்கும்படி அவைகளின் பின்னாக மனிதன் அலைந்து திரிகின்றான். அவைகளை அண்டி பிழைக்கின்றான். இவை இல்லாவிட்டால் உலகத்தில் ஒன்றுமில்லை என்ற மாயையையில் சிக்கிக் கொண்டுள்ளான்.
ஆனால் தேவ பிள்ளைகளின் பிழைப்பு வெறும் உலக காரியத்தை சார்ந்துமட்டும் இருக்கவில்லை. கர்த்தருடைய வாயிலிருந்து வந்து, நம் கையிலே இருக்கும் ஒவ்வொரு வேத வசனத்தினாலும் நாம் பிழைக்க முடியும். இந்த வேத வசனங்கள் உலகங்களை உண்டாக்கினவை! இந்த வேத வசனங்கள் ஜீவனுள்ளவை! இந்த வேத வசனங்கள் இல்லாதவைகளை இருக்கின்றவைகளாய் அழைக்கின்றவை!
எனவே உங்களுக்கு இல்லாத காரியங்களை எண்ணி கவலைப்பட்டு கலங்காதீர்கள். உங்கள் குறைவுகளை எண்ணி புலம்பாதீர்கள். கர்த்தர் உங்களுக்கு அருளியிருக்கும் வார்த்தைகளை தியானியுங்கள். அது உங்களை பிழைப்பூட்ட போதுமானவை.
உங்கள் பெலவீன நேரங்களில் மருந்து தேவைதான், வைத்தியர் தேவைதான். ஆனால் அந்த மருந்தினாலும், அந்த வைத்தியரினாலும் மாத்திரம் நீங்கள் பிழைக்கவில்லை. உங்களை சுகமாக்குபவர் நம் பரம வைத்தியர். எத்தனை உயரிய மருந்து கொடுத்த போதும், எத்தனை பிரபல மருத்துவமனைகள் சிகிச்சையளித்தும், பிழைக்க முடியாத மனிதர்களை நாம் நம் கண்ணிற்கு முன்பாக பார்க்கின்றோமே!
உங்கள் பொருளாதாரத்திற்கும், உங்கள் உயர்விற்கும் அதே போல தேவனுடைய வார்த்தையையே நம்பியிருங்கள். மனிதர்களையோ, சூழ்நிலையையோ சார்ந்து கொள்ளாதீர்கள். எதிர்காலத்தை நினைத்து கவலைப்பட்டு கலங்கிக் கொண்டிருக்காதீர்கள். உங்களை பிழைப்பூட்டுகின்றவர் நம் ஆண்டவராகிய தேவன். "இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்" மத்தேயு 6:32.
உங்கள் பிழைப்பு உங்கள் கண்ணிற்கு தெரிகின்ற ஆதாரங்களில் இருந்து மாத்திரம் வரவில்லை. அந்த ஆதாரங்கள் பொய்க்கும் போது கூட, அதன் பின் இருக்கின்ற தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தையிலிருந்து வருகின்றது.
எனவே தேவனுடைய வார்த்தையாகிய வேதத்தை நேசியுங்கள், வாசியுங்கள், தியானியுங்கள். பின் அதிலிருந்து தேவன் உங்களோடு பேசுகின்ற வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து வாழுங்கள். இப்படி செய்வீர்களானால் உங்கள் பிழைப்பைக் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. கர்த்தர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்.
கர்த்தர் உங்களை பிழைப்பூட்டுவாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
Thanks for using my website. Post your comments on this