WCF DD (World Christian Fellowship Daily Devotions)
லூக்கா 12:51
"நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."
1) யூதர்களுடைய எண்ணம் / எதிர்பார்ப்பு : மேசியா, இரட்சகர் வந்தால் எங்களுக்கு சமாதானம் கிடைக்கும் என்பது தான். லூக் 2:14 ஏசாயா 9:6. சமாதான பிரபு என்கிற ஒரு பெயர் இருக்கிறது.
2) ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறார்; நான் சமாதானத்தை உண்டாக்க வரவில்லை. என்னுடைய போதனையின் நிமித்தம் உங்களிடம் பிரிவினை தான் உண்டாகும்.
3) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதின் மூலமாக தேவனோடு நித்திய சமாதானம் உண்டாகும். ஆனால், பூமியில் பிரிவினை உண்டாகும். யோவா 7:43. ஜனங்களுக்குள் இயேசு கிறிஸ்துவை குறித்து ஒரு பிரிவினை உண்டாயிற்று.
4) யோவா 9:16. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து செய்த அற்புத அதிசயத்தை பார்ப்பதினால் அவர்கள் எல்லோரும் விசுவாசிகளாகவில்லை, மாறாக அவர்களுக்குள் பிரிவினை உண்டாயிற்று.
5) யோவான் 10 :19 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நிமித்தம் அவருடைய உபதேசத்தின் நிமித்தம் பிரிவினை உண்டாகும் சமாதானம் இல்லை. அவரை விசுவாசிக்கிறவர்களுக்கு தேவனோடு நித்திய சமாதானம் உண்டாகும்-அப்போஸ்தலர் 14:4.
6) மத்தேயு 10 :34 - சமாதானம் இல்லை அங்கு ஒரு பட்டயம் உண்டாகும், அங்கு ஒரு போர் உண்டாகும்.
நம் அன்றாட வாழ்வில் இந்த வசனத்தை எவ்வாறு பயன்படுத்துவது:
1) நம்மில் சிலர் இப்படி நினைக்கலாம்., நான் இயேசு கிறிஸ்துவிடம் வந்தால் எனக்கு எந்த பிரச்சனையும் வராது, நான் பூரண சமாதானத்தில் இருப்பேன் என்று.
2) காரணம்: நமக்கு சொல்லிக் கொடுத்தது அப்படித்தான். நீ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் வந்தால் நம்மை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் போடப்பட்டிருக்கும். கவலைப்பட தேவையில்லை.
3) கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறார் ; நீங்கள் இந்த பூமியில் இருக்கும் பொழுது சமாதானத்தை பார்க்க மாட்டீர்கள் மாறாக, என் நிமித்தமும் என்னுடைய போதனையின் நிமித்தமும் பிரிவினை உண்டாகும் என்று.
4) கிறிஸ்தவர்களாகிய நாம் வேத வசனத்தை / கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை குறித்து நாம் சொல்லும் பொழுது நிச்சயம் நமக்கும் மற்றவர்களுக்கும் இடையில் ஒரு பிரிவினை உண்டாகும். இயேசு கிறிஸ்துவின் நிமித்தமும் அவருடைய போதனையின் நிமித்தமும் மாறுபட்ட காரியங்கள் உண்டாகும்.
5) அதனால், நாம் தெளிவாக ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். இயேசு கிறிஸ்து மூலமாக நாம் தேவனிடத்தில் சமாதானம் பெற்று இருக்கிறோம். பூமியில் இருக்கிறவர்கள், கிறிஸ்தவர்கள் நம் மீது அன்பாக பாசமாக இருப்பர் என்று எதிர்பார்ப்பது மிகவும் தவறு என்பதை புரிந்து கொண்டு தேவ சமாதானம் பெற்றவர்களாய் வாழ கற்றுக் கொள்வோமா..?
ஜெபம்:
மகா கிருபையும் இரக்கமும் நிறைந்த எங்கள் அன்பின் தகப்பனே! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உம்மிடத்தில் சமாதானமும் பெற்றோம். இந்த பூமியிலே பிரிவினையை குறித்து நாங்கள் கவலைப்படாதபடிக்கு உம்மைக் குறித்தும் உம்முடைய வார்த்தைகளை குறித்தும் வெட்கப்பட்டுவிடாதபடி தைரியமாய் வாழ எங்கள் தேவன் கிருபை பாராட்ட வேண்டுமாய் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஆசீர்வதித்து ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள வல்ல பிதாவே! ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
Luke 12:51
"Do you suppose that I came to give peace on earth? I tell you, not at all, but rather division."
1) Jewish expected as: When the Messiah, the savior, comes, we will have peace. Luke 2:14 Isaiah 9:6. There is a name called "Prince of peace".
2) But the Lord Jesus Christ says; I am not here to make peace. Because of my teaching there will be division among you.
3) We receive eternal peace with God through faith in the Lord Jesus Christ. But there will be division on earth. John 7:43. There was a division among the people about Jesus Christ.
4) John 9:16. Not all of them became believers because they saw the miracle of the Lord Jesus Christ, there was a division among them.
5) John 10:19 For the Lord Jesus Christ's sake Therefore there was a division again among the Jews because of these sayings. Those who believe in Him will have eternal peace with God - Acts 14:4.
6) Matthew 10:34 - "Do not think that I came to bring peace on earth. I did not come to bring peace but a sword".
How to apply this verse in our daily life:
1) Some of us may think that if I come to Jesus Christ, I will have no problems, that I will have complete peace.
2) Reason: That's what we were taught. If you come to the Lord Jesus Christ, extra layer of protection will be placed around us. No need to worry.
3) The Lord Jesus Christ says; That you will not see peace while you are here on earth, but division because of Me and My teaching.
4) As Christians, when we talk about the scriptures / Lord Jesus Christ, there is definitely a division between us and others. Different things will happen because of Jesus Christ and because of his teaching.
5) So, we need to be clear about one thing. Through Jesus Christ we have peace with God. Shall we learn to live as people who have God's peace and understand that it is very wrong to expect Christians will always be loved by the people on earth?
Prayer:
Father of love, full of great grace and mercy! Through the Lord Jesus Christ we have received peace from You. Help us to live boldly so that we do not worry about division on this earth and not ashamed of You and Your words, we bless and pray in the sweet name of Jesus Christ our living mighty Father! Amen. May the Lord bless you!
WCF DD (World Christian Fellowship Daily Devotions)
லூக்கா 12:52
"எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள்."
1) கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வீட்டை குறித்து சொல்லுகிறார். அதற்குப் பின்பு அந்த வீட்டில் உள்ள உறவுகளை பற்றி செல்லுகிறார். இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் நிமித்தமும் அவருடைய போதனையின் நிமித்தமும் பிரிவினை என்பது தவிர்க்க முடியாதது.
2) அடையாளமாக ஆண்டவர் சொல்லுவது, ஒரு வீட்டில் ஐந்து பேர் இருப்பார்களேயானால், அந்த ஐந்து பேரில் மூன்று பேர் ஒரு பக்கம் இரண்டு பேர் எதிர்பக்கமாக இருப்பர். இந்த பிரிவினையானது சொத்துக்காக/ கோட்பாட்டுகளுக்காக/ ஆண், பெண் என்கிற பாலினத்திற்காக கிடையாது.
3) கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறார, நான் பூமியில் சமாதானத்தை அல்ல: பிரிவினையை ஏற்படுத்தவே வந்தேன்.
4) ஏனென்றால்; நீங்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவருக்கென்று வாழும் பொழுது, இரட்சிக்கப்படாதவர்களை பார்த்து, நரக வேதனைக்குள் போகாதபடிக்கு இரட்சிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர்களிடம் சென்று இயேசு தான் உண்மையான தெய்வம் அவரை விசுவாசித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லும் பொழுது நிச்சயம் ஒரு பிரிவினை உண்டாகும்.
5) இன்றைக்கு நாம் இந்த செய்தியை கேட்கும் பொழுது நமக்கு ஒரு புரிதல் இருக்கிறது. ஆனால் 2000 வருஷங்களுக்கு முன்பாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இதை சொல்லும் பொழுது அங்கு உள்ள யூதர்களுக்கு மேசியா வரும் பொழுது சமாதானம் இருக்கும் என்று காத்துக் கொண்டிருந்த பொழுது இவர் வந்து அப்படி அல்ல என்று சொல்லுகிறார்-ஏசாயா 66.
நம் அன்றாட வாழ்வில் இந்த வசனத்தை எவ்வாறு பயன்படுத்துவது:
1) இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் நிமித்தமும் அவருடைய போதனைகளின் நிமித்தமும் நிச்சயமாக பிரிவினை உண்டாகும். நீங்கள் இரட்சிக்கப்பட்டு உங்கள் குடும்பத்தில் இரட்சிக்கப்படாதவர்கள் இருந்தால் உங்களை நிச்சயமாக தொந்தரவு செய்வார்கள், உங்களுக்குள் பிரிவினையும் உண்டாகும்.
2) அதற்காக கவலைப்படாதீர்கள். தைரியமாக கர்த்தருக்கென்று வாழ கற்றுக் கொள்ளுங்கள்.
ஜெபம்:
மகா கிருபையும் இரக்கமும் நிறைந்த எங்கள் அன்பின் தகப்பனே!, இந்த செய்தியை கேட்டுக் கொண்டிருக்கிற எனக்கு அருமையான சகோதர சகோதரிகள், இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் நிமித்தம் தங்களுடைய குடும்பத்திலே பிரிவினையில் இருக்கிறார்களோ தேவன் அங்கு அவர்களுக்கு நல தைரியத்தையும் பலத்தையும் கொடுத்து வழிநடத்த வேண்டுமாய், இயேசு கிறிஸ்துவின் உன்னத நாமத்தில் ஆசிர்வதித்து ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள வல்ல பிதாவே! ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
Luke 12:52
"For from now on five in one house will be divided: three against two, and two against three."
1) The Lord Jesus Christ speaks of the house. After that He told them about the relationships in that house. Conflicts are inevitable for the sake of the name of Jesus Christ and His teachings.
2) Symbolically the Lord says that if there are five people in a house, three of the five will be on one side and two on the opposite side. This division is not for property/ doctrines/ gender.
3) Lord Jesus Christ says, I did not come to bring peace on earth: division.
4) Because; When you accept Jesus Christ and live for Him, when you look at the unsaved and go to them with the intention that they also need to be saved, there will definitely be a conflict while you say to them as "Jesus is the true God, they must believe and accept Him".
5) When we hear this message today we have an understanding. But when the Lord Jesus Christ said this 2000 years ago, when the Jews there were waiting for peace when the Messiah would come, Jesus came and said it was not so - Isaiah 66.
How to apply this verse in our daily life:
1) There will surely be division because of the name of Jesus Christ and because of His teachings. If you are saved and unsaved people in your family will definitely trouble you and cause division among you.
2) Don't worry about it. Learn to live boldly for the Lord.
Prayer:
Father of love and full of great grace and mercy!, my dear brothers and sisters who are listening to this message, for the sake of the name of Jesus Christ, those who are separated in their families, may God give them courage and strength to lead them there, we bless and pray in the supreme name of Jesus Christ, our living mighty Father! Amen. May the Lord bless you!
WCF DD (World Christian Fellowship Daily Devotions)
லூக்கா 12:53
"தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார்"
1) தாய் தன்னுடைய பிள்ளையை வெறுக்கமாட்டாள். ஆனால் இங்கு தாய் மகளுக்கு விரோதமாக இருப்பார் என்கிறார். மாமியார்- மருமகள் விரோதம், நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் கர்த்தர் இங்கு தாய்க்கும் மகளுக்கும் பிரிவினை உண்டாகும் என்று சொல்லுகிறார்.
2) இதை, கர்த்தர் பழைய ஏற்பாட்டில் மீகா -7:6 ல் வீட்டில் தான் சத்துரு உண்டாவர். வீட்டில் தான் பிரச்சனை உண்டாகும். மத்தேயு 10: 21, 35- பிரிவினை உண்டாக்க வந்தேன் என்று பார்க்கிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் நிமித்தம் அவர்கள் விரோதித்து கொலையும் செய்யக் கூடிய அளவுக்கு வந்து விடுவர். இரத்த சம்பந்தமான உறவுகளே அப்படி செய்வர்.
3) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் போதகத்தின் நிமித்தம் வெளியில் இருக்கிறவர்களிடத்தில் பிரிவினை வருவது இயற்கை. ஏனென்றால் நீ எப்படி எனக்கு சொல்லலாம் என்று வருவர். ஆனால் சொந்த சகோதரன் சகோதரி தாய் மாமியார் தந்தை இவர்கள் மத்தியில் பிரிவினை உண்டாகும்.
4) இன்றைக்கு அநேக இரட்சிக்கப்பட்டவர்கள், தங்களுடைய பிள்ளைகள், பெற்றோர், கணவன், மனைவி, உறவுகள் இரட்சிக்கப்படாமல் இருப்பதினால் குடும்பத்திற்குள்ளேயே விரோதத்திற்கு உள்ளாக போவதை பார்க்க முடிகிறது.
நம் அன்றாட வாழ்வில் இந்த வசனத்தை எவ்வாறு பயன்படுத்துவது:
1) கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டது நிமித்தம் அனேகர் அவர்களுடைய குடும்பங்களில் பாடுகள் / போராட்டம் / நிந்தனைகள் ஒவ்வொரு நாளும் அவர்களை வார்த்தைகளினால் தங்கள் குடும்பத்தினர் கடிந்து கொள்வது மிகவும் கொடுமையான / கடினமான ஒன்று.
2) ஒவ்வொரு நாளும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் நிமித்தம் எவ்வளவு நிந்தனை துன்பம் பாடுபடுகிறார்கள். ஏனென்றால் ஒரு மனிதனுக்கு சத்துரு அவன் வீட்டார் தானே என்று சொன்னது போல தன் சொந்த வீட்டில் நெருக்கமாக இணக்கமாக இருந்த உறவுகளுக்கு மத்தியில் விரோதமாக பேசி குற்றபடுத்தி கொலை செய்யும் அளவுக்கு போகக் கூடிய காரியத்தை பார்க்கிறோம்.
3) ஒரு குறிப்பிட்ட இடத்தில் தாய் தகப்பன் தங்களுடைய மகன் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டது நிமித்தம் தனியாக ஒரு இடத்தில் அவனை கட்டி வைத்து விட்டு வந்து விட்டனர். ஆனால் இயற்கைக்கு அப்பாற்பட்ட முறையில் அவர் விடுவிக்கப்பட்டு சாட்சி சொன்னதை பார்க்க முடிகிறது.
4) இன்றைக்கும் துன்பங்கள் பிரிவினைகள் நிந்தனைகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. நீங்கள் பாடனுபவிக்கிறவர்களாக துன்பப்படுகிறவர்களாக இருந்தால் இது உங்களுக்கு மட்டும் என்று நீங்கள் நினைக்க வேண்டாம்.
5) உலகம் முழுவதிலும் இப்படிப்பட்ட காரியங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் கர்த்தர் உங்களை பலப்படுத்தி திடப்படுத்தி ஸ்திரப்படுத்தி பரிசுத்த ஆவியின் மூலமாக உங்களை வழிநடத்துவராக.
ஜெபம்:
வல்ல பிதாவே! இந்த செய்தியை கேட்டுக் கொண்டிருக்கிற யாரெல்லாம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் நிமித்தம் தன் சொந்த குடும்பத்தினால் வெறுக்கப்பட்டு விரோதிக்கப்பட்டு கொலையும் செய்ய முற்படுகிற போது அங்கு தேவ கிருபை உண்டாகட்டும் ஆண்டவரே பரிசுத்த ஆவியானவர் தாமே அவர்களுக்கு ஆறுதலையும் தேறுதலையும் கொடுத்த இதை நீங்கள் ஏற்கனவே சொல்லி இருக்கிறீர்கள், அதன் நிறைவேறுதலை தான் நாங்கள் இன்று இங்கு காண்கிறோம் என்பதை புரிந்து கொண்டு இயேசு கிறிஸ்துவின் நிமித்தம் பாடனுபவிப்பதற்கு எங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது நாங்கள் பாக்கியவான்கள் என்று வாழ எங்கள் தேவன் அவர்களுக்கு கிருபை பாராட்ட வேண்டுமாய் இயேசு கிறிஸ்துவின் உன்னத நாமத்தில் ஆசீர்வதித்து ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவன் உள்ள வல்ல பிதாவே ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.!
Luke 12:53
"Father will be divided against son and son against father, mother against daughter and daughter against mother, mother-in-law against her daughter-in-law and daughter-in-law against her mother-in-law"
1) A mother will not forget her child. But here the Lord says that mother will be against her daughter. Mother-in-law and daughter-in-law conflicts are well-known and common. But here Jesus says mother and daughter will be divided.
2) Micah 7:6- "For son dishonors father, daughter rises against her mother, daughter-in-law against her mother-in-law; a man's enemies are the people of his own household."
3) Matthew 10:21- "Now brother will deliver up brother to death, and a father his child; and children will rise up against parents and cause them to be put to death" v 35- "For I have come to set a man against his father, a daughter against her mother, and a daughter-in-law against her mother-in-law"
4) Division will occur in families because of the name of the Lord. They will be hated and even try to be killed by their blood relatives.
5) It is anticipated that preaching the name of Jesus Christ will bring strife with outsiders. But here the Lord says that it will also bring division between very close blood relations like one's own brother, father, mother or in-laws.
6) Many sisters who are saved but have unbelieving husbands have to undergo a lot of trouble. Believing husbands are affected by their unsaved wives. Children are persecuted by their parents who are not saved yet. Saved parents are troubled by their unsaved children.
7) The saying- blood is thicker than water, means family bonds will be stronger than other relationships. But Jesus clearly says that even these close relationships will stand divided because of His name. They will also be opposed and persecuted to the extent of death.
How to apply this verse in our daily life:
1) Even in our church we have families where one member has been saved and the other hasn’t. The trials, tribulation and persecution that they face is quite a lot. They are often criticized verbally with much hatred. Their own family members who were previously very dear and beloved, now oppose them. Some even go to the extent of killing them.
2) I recently heard of a real incident where the parents tied up their son to a chair in an empty house and abandoned him without food and water so that he would die, just because he accepted the Lord Jesus. But he was supernaturally rescued and he shared his witness everywhere.
3) Even today, this kind of division, persecution and suffering does occur. If you are a person undergoing such troubles, know that you are not alone. The Lord will strengthen, build you up and lead you through His Holy Spirit.
Prayer:
Almighty Father! May Your grace abound on everyone who is facing hatred, opposition and persecution, up to death, from their own family, for Your name's sake. May Your Holy Spirit comfort and console them. Let them live with the realization that this is all a fulfillment of what You have already spoken. Grant them the grace to understand that they are blessed ones to face persecution for the name of the Lord. In the sweet name of Jesus, we bless and pray, Our living and Almighty Father. Amen! God bless you all.
*_WCF DD (World Christian Fellowship Daily Devotions)_*
*லூக்கா 12:54* *"பின்பு அவர் ஜனங்களை நோக்கி: மேற்கே மேகம் எழும்புகிறதை நீங்கள் காணும்போது, மழை வருமென்று சொல்லுகிறீர்கள்; அந்தப்படியுமாகும்."*
1) கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இஸ்ரவேல் மக்கள் காலத்தை பார்த்து இன்னும் அறிந்து கொள்ளாமல் இருந்ததற்காக இங்கே இரண்டு உதாரணத்தை சொல்லுகிறார்.
2) ஒன்று.., நீங்கள் மேகத்தை பார்த்தவுடன் மழை வரும் என்றும், கர்த்தரின் படைப்புகளில் உள்ள காரியங்களை பார்க்க தெரிந்த உங்களுக்கு ஆவிக்குரிய முறையில் என்ன நடக்கிறது என்பதை ஏன் உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறார்-மத்தேயு 16:1-3.
3) நீங்கள் வானத்தின் தோற்றத்தை பார்த்து மழை பெய்யும் செவ்வானமாய், மந்தாரமாய் இருக்கிறது என்று உங்களால் சொல்ல முடிகிறது. ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உலக இரட்சகர் என்று சொல்லக் கூடிய காரியத்தை உங்களால் ஏன் புரிந்து / ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று இயேசு கிறிஸ்து இங்கு சொல்லுகிறார்.
4) இதுதான் நடக்கப் போகிறது என்கிறதை நீங்கள் உலக பிரகாரமாக பார்க்கிறீர்கள். ஆனால் ஆவிக்குரிய கண்கள் மூலமாக பார்க்கக் கூடிய மக்களாக இருக்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக இயேசு கிறிஸ்து என்று சொல்லுகிறார்.
5) இயேசு கிறிஸ்து மதத் தலைவர் / பரிசேயர்களை பார்த்து, வானத்தில் உள்ள அடையாளத்தை இயற்கையான காரியங்களை பார்க்கிற தலைவர்களாக இருக்கிற நீங்கள் ஆவிக்குரிய காரியத்தை பார்க்கவில்லை.
*நம் அன்றாட வாழ்வில் இந்த வசனத்தை எவ்வாறு பயன்படுத்துவது :*
1) இன்றைக்கும் அதே போல் தான் நடக்கிறது. எப்படி அந்த நாட்களில் ஆவிக்குரிய தலைவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கால அவகாசத்தை புரிந்து கொள்ளாமல் உலக பிரகாரமான காரியங்களை போதித்தார்கள்.
2) இன்றைக்கு அநேகர் வேதத்தை வாசிக்கிறார்களோ.. இல்லையோ தினசரி செய்திகளை அதிகமாக வாசிக்கின்றனர். உங்களை உணர்வுபூர்வமாக தூண்டக் கூடிய செய்திகளை சொல்லக் கூடிய ஊழியக்காரர்கள் பெருகிவிட்டனர்.
3) ஆங்காங்கே நடக்கக்கூடிய ஒரு சில காரியங்களை வைத்து மக்களை வேண்டாத வழிகளில் திருப்பக்கூடிய ஊழியர்கள் அதிகம். இப்படிப்பட்ட ஊழியர்களுக்கு உலகம் ஞானம் உண்டு.
4) நமக்கு ஒரு சில செய்திகள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் நமக்கு பிரகாசம் உள்ள ஆவிக்குரிய மனக் கண்கள் வேண்டும். ஏனென்றால் நம்முடைய மனக் கண்கள் திறக்கப்பட்டால் தான் கர்த்தர் என்ன சொல்லுகிறார் அவர் என்ன செய்கிறார் என்பதை புரிந்து கொள்ள அறிந்து கொள்ளக் கூடிய ஒரு வாழ்க்கை வாழ முடியும்.
5) நாம் அதை செய்யாததினால் தவறுதலான காரியங்களில் மூழ்கி அதை விரும்பக் கூடிய மக்களாக மாறிவிடுகிறோம்.இன்றைக்கு நாம் ஒரு தீர்மானம் செய்வோமா ஆண்டவரே! பிரகாசமுள்ள மனக்கண்களை கொடுங்கள். நான் இந்த உலக பிரகாரமான காரியங்களை பார்த்து மதி மயங்கி விடாதபடி வாழ கிருபை பாராட்டுங்கள் என்று ஜெபிப்போமா?.
*ஜெபம்*
மகா கிருபையும் இரக்கமும் நிறைந்த எங்கள் அன்பின் தகப்பனே! இதோ இந்த செய்தியை கேட்டுக் கொண்டிருக்கிற ஒவ்வொருவரும் அவர்களுடைய ஆவிக்குரிய கண்கள் திறக்கப்படட்டும். இந்த உலகப்பிரகாரமான காரியங்களை பார்த்து அடையாளம் காட்டுகிற மக்கள் ஆவிக்குரிய சிந்தையிலும் வேத வசனத்திலும் தேறினவர்களாக இருந்து உமக்கென்று வாழ எங்கள் தேவன் கிருபை பாராட்ட வேண்டுமாய் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் ஆசீர்வதித்து ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள வல்ல பிதாவே ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
*Luke 12:54* *"Then He also said to the multitudes, "Whenever you see a cloud rising out of the west, immediately you say, 'A shower is coming'; and so it is."*
1) Jesus gives two examples when stating that the people are not discerning the time. People predict if it will rain by looking at the clouds.
2) Matthew 16:1-3, Then the Pharisees and Sadducees came, and testing Him asked that He would show them a sign from heaven. 2 He answered and said to them, "When it is evening you say, 'It will be fair weather, for the sky is red'; 3 and in the morning, 'It will be foul weather today, for the sky is red and threatening', Hypocrites! You know how to discern the face of the sky, but you cannot discern the signs of the times".
3) If the people can observe the creations of God and discern the time, Jesus asks why they are not able to discern the spiritual things happening around them. If the appearance of the sky provokes them to think about the weather, how are they not able to understand that Jesus is the Messiah?
4) Just as you see things in the worldly perspective and predict the times, you must be able to see with your spiritual eyes too.
5) Jesus says that the Pharisees and teachers of the law can discern the time by observing various signs in nature. But they do not look out for spiritual things so he urges them to have an understanding of spiritual matters too.
*How to apply this verse in our daily life :*
1) Spiritual leaders of that time could not discern Jesus' presence on Earth and rather they focused on worldly matters. Even today, many people read the newspaper more than the Bible. Preachers who talk about speculative matters have increased these days. They talk about issues that trigger one's emotions such as this war has begun, the world is heading to destruction soon, this event will follow that event, this prime minister said this and that. They keep saying that they predicted it. They say that God will come soon because something happened in Israel, locusts swarmed in UP and Punjab, fishes came out of water in Egypt and so on. They divert the attention of people towards such matters. They have a lot of awareness about such current affairs.
2) It is important to be informed and aware but we need not know everything. The eyes of our heart must be enlightened so that we can discern and understand what the Lord is saying to us and what He is doing.
3) Because our spiritual eyes are not awakened, we end up giving importance to wrong issues. Shall we ask God today that the eyes of our heart may be enlightened and we don't get carried away by the affairs of the world?
*Prayer*
Most gracious and merciful Father! May the spiritual eyes of everyone hearing this message be opened. Just as we discern worldly affairs, may the eyes of our heart be enlightened so that we live with a spiritual perspective and deeper understanding of Your word. Grant us the grace needed for this. In the sweet name of Jesus, we bless and pray, Our living and Almighty Father. Amen! God bless you all.
*_WCF DD (World Christian Fellowship Daily Devotions)_*
*லூக்கா 12:55* *"தென்றல் அடிக்கிறதை நீங்கள் காணும்போது உஷ்ணம் உண்டாகுமென்று சொல்லுகிறீர்கள், அந்தப்படியுமாகும்."*
1) காற்று அடிக்கும் திசையை வைத்து எந்த பக்கம் உஷ்ணம் அதிகமாகும் என்று சொல்ல முடியும். இதையெல்லாம் உங்களால் புரிந்து கொள்ள முடியுமா என்று ஆண்டவர் கேட்கிறார்-யோபு 37: 16 17.
2) சீதோசன நிலையை கணிக்க முடிகிற யூதர்களால்...கர்த்தர் வரப் போகிற இரட்சகர் எப்படி இருப்பார் என்ன செய்வார் என்பதை ஞானமாக எழுதி வைத்திருக்கிறதை உங்களால் ஏன் கணிக்க முடியவில்லை என்கிறார்.
3) உங்களால் வானத்தை பார்க்க முடிகிறது. தென்றலை உணர முடிகிறது, அதனால் என்ன வரும் என்பதை கணிக்க முடிகிறது. இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆவிக்குரிய காரியங்களை ஏன் உங்களால் கணிக்க / புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை கேள்வியாக கேட்பதற்கு இரண்டு காரியத்தை சொல்லுகிறார்.
4) அதிலும் விசேஷமாக இன்று தென்றல் அடிக்கும் பொழுது உஷ்ணம் ஆகும் என்று சொல்லக்கூடியதை கணிக்க முடிகிறது என்கிறதை குறித்து சொல்லுகிறார்.
5) லண்டன் நகரத்தில் அட்லாண்டிக் கடலில் இருந்து வெப்ப காற்று வீசும். தென்பகுதி சைபிரியாவில் இருந்து குளிர்ந்த காற்று வரும். இரண்டு காற்றும் வீசும் அளவை பொறுத்துதான் லண்டன் நகரத்தின் சீதோசன நிலை இருக்கும். இந்த காற்றின் தன்மை எப்ப வேண்டுமானாலும் மாறும்.
*நம் அன்றாட வாழ்வில் இந்த வசனத்தை எவ்வாறு பயன்படுத்துவது :*
1) பிபிசி (BBC)என்னும் தொலைக் காட்சியில் இங்கிலாந்தின் நாள் முழுவதும் என்ன சீதோசன நிலை இருக்கும் என்பதை மிகத் துல்லியமாக கணித்து சொல்லுவார்கள். அதன்படியே இயற்கை இருக்கும். சீதோசன நிலை பார்த்து அதற்கு தகுந்தார் போல உடை உடுத்தி செல்லுவதற்கு வசதியாக இருக்கும். எத்தனை மணிக்கு வெயில் அடிக்கும் மழை பெய்யும் என்கிற அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்து விட்டது.
2) ஆனால் விஞ்ஞானத்தினால் தேவன் யார்? என்ன செய்கிறார்? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. அதற்கு நம்முடைய ஆவிக்குரிய கண்கள் தான் திறக்கப்பட வேண்டும்.
3) தேவனுடைய காரியங்களை தேவனுடைய வார்த்தையின் மூலமாக கற்றுக் கொள்ளலாம். உலகத்தின் காரியங்களை பார்க்கும் போது அதை கற்றுக் கொள்ளலாம். நீங்கள் எதை பார்க்கிறீர்கள்?.
*ஜெபம்*
மகா கிருபையும் இரக்கமும் நிறைந்த எங்கள் அன்பின் தகப்பனே! நாங்கள் உம்முடைய வார்த்தையை கற்றுக் கொண்டு உம்முடைய காரியங்களை அறிந்து கொண்டு உமக்கென்று வாழக்கூடிய மக்களாய் வாழ எங்கள் தேவன் கிருபை பாராட்டுங்கள். உலகத்தையும் உலகத்தின் காரியங்களையும் நாங்கள் அறிந்து கொண்டு எங்களுடைய அழைப்பை விட்டுவிடாதபடிக்கு எங்கள் தேவன் எங்களுக்கு கிருபை பாராட்ட வேண்டுமாய் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஆசிர்வதித்து ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள வல்ல பிதாவே! ஆமென் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
*Luke 12:55* *"And when you see the south wind blow, you say, 'There will be hot weather'; and there is"*
1) So by observing the direction of the wind, the people predicted the weather. In Tamil Nadu, they say that when the strong winds blow in the month of Aadi, it will be really hot weather.
2) Job 37:16- "Do you know how the clouds are balanced, those wondrous works of Him who is perfect in knowledge? 17 Why are your garments hot, when He quiets the earth by the south wind?"
3) The Lord has clearly mentioned how the Messiah would be and what He would do. However, the people are not able to discern that. If they can discern nature by looking at the sky and the wind, Jesus asks them why they are not able to discern supernatural and spiritual things.
4) England, where I live, is an island country, so the direction of the wind determines our weather. If the wind rises from the Atlantic Ocean, we will have hot humid weather. If the wind blows from the North, from Siberia, we will have cold weather. We can have both weather on the same day. In the morning it might be very cold but it becomes warm in the evening and vice versa. So the weather can change quite suddenly as it depends on the speed and direction of the wind.
5) This is what Jesus says, that if we can discern the weather, why can't we discern spiritual matters.
*How to apply this verse in our daily life :*
1) In England, the British Broadcasting Corporation, BBC, releases the daily weather forecast. The British were the first to introduce weather forecasting. Our weather is determined by the wind blowing over the country. It will be cold and misty in the morning, sometimes it might rain and then it becomes warm and dry. All this happens in a single day. By observing the direction and speed of the wind, they predict the weather quite accurately- when it will rain, how long it will last, when the cloud will pass away. Most people have a look at the weather forecast and dress accordingly because it is that accurate.
2) Science has developed to such an extent that we can accurately predict when, how much and how long it will rain. But man has not figured out who God is and what He is doing. For that our spiritual eyes must be opened through the word of God.
3) We can learn worldly things but looking at the world and we can learn about the things relating to God through His word. So what are you looking at?
*Prayer*
Most gracious and merciful Father! Grant us the grace to learn Your word, understand spiritual things and to live our life for You. Grant us Your grace so that we do not forget our calling when we learn about the things of the world. In the sweet name of Jesus, we bless and pray, Our living and Almighty Father. Amen! God bless you all.
*_WCF DD (World Christian Fellowship Daily Devotions)_*
*லூக்கா 12:56* *"மாயக்காரரே, பூமியின் தோற்றத்தையும் வானத்தின் தோற்றத்தையும் நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, இந்தக் காலத்தையோ நிதானியாமற்போகிறதென்ன?"*
1) உங்களால் பூமியின் தோற்றத்தை / வானத்தின் தோற்றத்தை நிதானிக்க முடிகிறது, நான் இருக்கிற இந்த கால அளவை உங்களால் ஏன் நிதானிக்க முடியவில்லை என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கேட்கிறார்.
2) இந்தக் கால அளவை நீங்கள் புரிந்து இருப்பீர்களேயானால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நிராகரிக்க மாட்டீர்கள், அவரை ஏற்றுக் கொண்டிருப்பீர்கள்.
3) உங்களை இரட்சிப்பதற்கு வந்த இரட்சகரை உங்களால் ஏற்றுக் கொண்டிருக்க முடியும். அதை அறிந்து கொள்ள முடியாதபடிக்கு ஏன் உங்கள் கண்கள் குருடாக்கப்பட்டது?
4) கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தன்னுடைய பிரயாணத்தை லூக்கா 9ம் அதிகாரத்தில் தொடங்கி 19 ஆம் அதிகாரத்தில் தான் எருசலேம் போய் சேருவார். லூக்கா 19: 41ல் எருசேலம் பட்டணத்தை பார்த்து அழுது சொல்லுகிறார்...
5) உன்னை சந்திக்கும் காலத்தை நீ அறியாமல் போனபடியினால். உங்களுக்கு இதெல்லாம் மறைவாய் இருக்கிறது என்று. இதற்கு ஒத்த பகுதி மத்தேயுவில் கோழி தன் குஞ்சுகளை சேர்த்துக் கொள்ளும் விதமாக எத்தனையோ முறை நான் உங்களை அழைத்தேன் நீங்களோ அதைக் கேளாமல் போனீர்கள்.
6) இயேசு கிறிஸ்து தான் யார் என்பதை தன்னுடைய போதனைகள் / அற்புத அதிசயங்கள் மூலமாகவும் / உலகத்தை இரட்சிக்க வந்த இரட்சகர் என்பதை சொன்னாலும் மக்கள் அவரை ஏற்றுக் கொள்ளாமல் நிராகரிக்கின்றனர்.
7) கர்த்தர் சொல்லுகிறார் நீங்கள் வானத்தை நிதானிக்கிறீர்கள் பூமியை நிதானிக்கிறீர்கள் இரட்சிப்பு சமீபமாய் இருக்கிறது. இரட்சகராக வந்திருக்கிறேன், அவரை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்ல கேட்டும் பார்த்து விட்டும் பின்வாங்கி போகிறீர்களே என்று சொல்லி அவருடைய இருதயம் பரிதவிப்பதை இங்கு வெளிப்படுத்துகிறார்.
*நம் அன்றாட வாழ்வில் இந்த வசனத்தை எவ்வாறு பயன்படுத்துவது :*
1) இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் அவருடைய வருகையை யூத ஜனங்கள் நிதானிக்காமல் போய்விட்டார்கள். இன்றைக்கு 2000 வருடத்துக்கு பிறகு... நீங்கள் உயிரோடு இருப்பதை நிரூபிப்பது எவ்வளவு எளிதோ... அதைக் காட்டிலும் மிகவும் எளிது,...
2) கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரனாக பூமியில் வந்து, கல்வாரி சிலுவையில் மரித்து, உயிரோடு எழுந்து, தேவனுடைய வலது பாரிசத்தில் இருக்கிறார் என்பது மிகத் தெளிவாக நமக்கு சரித்திர பிரகாரமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
3) ஆவிக்குரிய முறையில் வேத வசனத்தின் மூலமாகவும் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இது எல்லாம் சத்தியம் என்பதை சாட்சிகளின் மூலமாகவும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதில் எந்தவிதமான மாறுபாடான கருத்தும் இல்லை.
4) அப்படி இருந்தும் இன்றைக்கும் கால அளவை பயன்படுத்தாத எத்தனை மக்களை நாம் இந்த நாட்களில் பார்க்கிறோம். எவ்வளவு பேர் தன்னை தேவனிடம் முழுமையாக அர்ப்பணித்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவர் தான் எனக்காக மரித்தார் அவர் மூலமாக இரட்சிக்கப்பட விரும்புகிறேன் என்று சொல்லி அவரை ஏற்றுக் கொண்டவர்கள் வெகு சிலரே.
5) இந்த கால அளவு அவருடைய வருகைக்குப் பின்பாக... உபத்திரவ காலம் தொடங்கும், உபத்திரவ காலத்துக்குப் பின்பாக எல்லா மனுஷனும் தேவனுடைய நியாய தீர்ப்புக்கு போக வேண்டும். தப்பிக்க முடியாத கொடிய நியாய தீர்ப்புக்கு போவதற்கு முன்பாக தங்களைக் காத்துக் கொள்ள கிடைத்திருக்கிற இந்த கால அவகாசத்தை ஏன் உபயோகப்படுத்தாமல் இருக்கிறார்கள்.
6) சிந்தித்துப் பாருங்கள்.2000 வருடத்துக்கு முன்பாக இந்த பூமியில் வந்து தன்னுடைய ராஜ்யத்தை பற்றி சொன்னார்...கேட்கவில்லை. ஆனால் 2000 வருடத்திற்கு பின்னதாக இவ்வளவு நிரூபிக்கப்பட்டும் இவ்வளவு சாட்சிகளோடு சொல்லப்படும் இன்றைக்கும் அந்த காலத்தை அறியாமல் அநேகர் இருக்கிறார்கள்.
7) இந்த செய்தியை கேட்டுக் கொண்டிருக்கிற நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை முழுமையாக விசுவாசித்து, அவரை ஏற்றுக் கொண்டு அவருக்கென்று வாழ்வதற்கு உங்களை ஒப்புக்கொடுப்பீர்களா?
*ஜெபம்*
மகா கிருபையும் இரக்கமும் நிறைந்த எங்கள் அன்பின் தகப்பனே! இதோ இந்த நல்ல நாளுக்காய் நன்றி. 2000 வருடத்துக்கு முன்பாக உம்முடைய கால அளவை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை இன்றைக்கு 2000 வருடங்களுக்கு பின்பாகவும் இவ்வளவு அற்புத அதிசயங்களை நடத்திய பின்பும் உம்மை ஏற்றுக் கொள்ளாத மக்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம். இந்த காலத்தை அவர்கள் பிரயோஜனப்படுத்திக் கொள்ள எங்கள் தேவன் கிருபை பாராட்ட வேண்டுமாய் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஆசிர்வதித்து ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள வல்ல பிதாவே! ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
*Luke 12:56* *"Hypocrites! You can discern the face of the sky and of the earth, but how is it you do not discern this time?"*
1) Jesus asked the people that You know how to interpret the appearance of the earth and the sky. How is it that you don't know how to interpret this present time, the time I (Jesus) come, being with you all? If you would've known, you would have accepted Jesus Christ who has come to save you and wouldn't have refused Him and why your eyes were blinded?
2) Jesus Christ has commenced His journey to Jerusalem in Luke chapter 9 and He reaches Jerusalem in Luke chapter 19. As we read it in Luke 19:41-44 "If you, even you, had only known on this day what would bring you peace—but now it is hidden from your eyes". They will not leave one stone on another, because you did not recognize the time of God's coming to you"
3) We could read a similar passage in Matthew 23:37 "…how often I have longed to gather your children together, as a hen gathers her chicks under her wings, and you were not willing". Although Jesus Christ demonstrated through many miracles, wonders, doctrines, and sermons to the people that He is the savior of the world, people rejected and refused Jesus Christ and their eyes were blinded.
*How to apply this verse in our daily life :*
1) In those days, 2000 years before, people couldn't interpret and realize the time Jesus came. But what is the problem for you and me today and what obstructs us? We have lots of evidence that Jesus Christ came to this world, died on the cross, rose again and now He is seated with the Father in Heaven. Its been proved spiritually, historically, through words from scripture and there are many witnesses to attest that these are true. We should not have any doubt or second thoughts about it.
2) But even today, there are many people who couldn't interpret the time, realize the value and importance of Jesus Christ? Many people don't realize that Jesus Christ died for my sins to redeem me from the punishments, judgment and they don't accept Him. After His second coming, the tribulation will begin and all the people will go through judgment. While we have a great opportunity to escape and save ourselves from the wrath and judgment by accepting Jesus Christ, why do so many people refuse this brief moment?
3) 2000 years before, Jesus Christ came down to this earth, took the human form, preached about His kingdom, but people didn't pay any attention and didn't listen. Although we have lots of evidence about Jesus Christ, testified through a multitude of witnesses, many people didn't accept Jesus Christ and refused to make use of their opportunity. How about you? Will you accept Jesus Christ, believe His words, fully commit yourself to live for Him?
*Prayer*
Almighty God, Thank You for this blessed day! As we meditated, the people who lived 2000 years before couldn't interpret the time You come. But even after 2000 years, today there are many people who couldn't interpret and accept You as their personal savior. Please show Your grace upon them and we pray for them to make use of this time. We glorify Your matchless name and pray in the sweet name of Jesus Christ, Almighty Father, Amen.
*_WCF DD (World Christian Fellowship Daily Devotions)_*
*லூக்கா 12:57* *"நியாயம் இன்னதென்று நீங்களே தீர்மானியாமலிருக்கிறதென்ன?"*
1) வானத்தைப் பார்த்து, பூமியை பார்த்து நிதானிக்கிறீர்கள். ஆனால், நியாயமானது என்ன என்பதை உங்களால் நிதானிக்க முடியவில்லை. காரணம் நீங்கள் மாம்ச பிரகாரமாக பார்க்கிறீர்கள்.
2) வேத வசனத்தின் அடிப்படையில் தேவஞானத்தோடு நீங்கள் செய்யவில்லை. யோவான் 7: 24. காண்கிறதை வைத்து தீர்மானம் செய்யாதீர்கள், நீதியின்படி தீர்மானம் செய்யுங்கள். யோ 7:33-நான் கொஞ்ச காலம் தான் உங்களோடு இருப்பேன்.
3) பிறகு, என்னை அனுப்பின பிதாவின் இடத்திற்கு போய் விடுவேன். உங்களால் அங்கு வர முடியாது. மிகத் தெளிவாக அழகாக அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார். நான் பிதாவாகிய தேவனிடத்தில் இருந்து இறங்கி வந்திருக்கிறேன்-யோவான் 6:38,35.
4) இதுதான் உங்களுக்கு ஏற்ற காலம், இந்த காலத்தை நீங்கள் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள். பிறகு நீங்கள் வர முயற்சித்தாலும் உங்களால் முடியாது.
5) கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பூமியில் இருந்து ஊழியம் செய்தது மூன்றரை வருடம் தான். 30 வயது வரைக்கும் தான் யார் என்பதை வெளிப்படுத்தவில்லை. ஞானஸ்நானம் பெறும் பொழுது தான் யார் என்பதை வெளிப்படுத்துகிறார்.
6) யோவான் சுவிஷேசத்தில் என்னுடைய வேளை இன்னும் வரவில்லை என்று திரும்பத் திரும்ப சொல்லி தன்னுடைய வேளை வந்ததும், கல்வாரி சிலுவைக்கு போய் தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்தார். இந்த கால அவகாசத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால்., நான் போகிற இடத்திற்கு உங்களால் வர முடியாது என்றார்.
*நம் அன்றாட வாழ்வில் இந்த வசனத்தை எவ்வாறு பயன்படுத்துவது :*
1) மாம்ச பிரகாரமாக வந்து அவர்களுக்கு வெளிப்படுத்தினார். அவர்கள்அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. இன்றைக்கு, ஆவிக்குரிய முறையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து யார் என்பது நமக்கு வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் நாம் இந்த காலத்தை எந்த அளவுக்கு சரியான முறையில் நிதானித்து நியாயம் தீர்க்கிறோம்.
2) உங்களுடைய தீர்மானம் மிகவும் முக்கியம். ஏனென்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகை எப்பொழுது வேண்டுமானாலும் இருக்கலாம். எப்பொழுது என்று நமக்கு தெரியாது. அதற்கு நாம் ஆயத்தமாக இருக்கிறோமா?
3) ஆயத்தம் என்பது அவரை ஏற்றுக் கொண்டு அவருக்காக வாழ்கிற மக்களாக வாழும்போது நம்முடைய தீர்மானம், சரியான தீர்மானமாக இருக்கும். இயேசு கிறிஸ்து சொன்னார்: நான் பிதாவின் இடத்திற்கு போகிறேன் உங்களால் வர முடியாது.
4) ஆனால் இன்றைக்கு யாரெல்லாம் அவரை தங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்கள் எல்லோருமே அவரோடு போய் சேர முடியும். 2000 வருடங்களுக்கு முன்பு இந்த வசனத்தை கேட்டவர்களை காட்டிலும், நாம் இன்றைக்கு ஒரு உயரிய இடத்தில் இருக்கிறோம்.
5) இதை நாம் சரியான முறையில் தீர்மானித்து தேவனுக்கென்று உண்மையும் உத்தமமுமாய் வாழும் பொழுது அவருடைய வருகையில் நாம் காணப்படுவோம். நித்திய காலத்துக்கும் அவரோடு கூட நாம் பரலோகத்தில் இருக்ககூடிய வாய்ப்பு கொடுக்கப் பட்டிருக்கிறது. இன்னொரு முறை இந்த வாய்ப்பு கிடையாது. மரித்த பின்பு, நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.
6) ஜீவனோடு இருக்கும்பொழுது தான் தீர்மானம் பண்ண முடியும். இந்த செய்தியை கேட்டுக் கொண்டிருக்கிற ஒவ்வொருவரும் இன்றைக்கு நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு என்று வாழ்வேன் என்று தீர்மானம் எடுத்து அவருக்கு என்று வாழ்வீர்களா..
*ஜெபம்*
மகா கிருபையும் இரக்கமும் நிறைந்த எங்கள் அன்பின் தகப்பனே! உம்முடைய வருகைக்கு முன்பாக இருக்கக்கூடிய இந்த காலகட்டத்திலே எல்லோரும் ஏற்றுக் கொண்டு உமக்கென்று வாழ வேண்டும் என்ற முடிவை தீர்மானித்து அந்தத் தீர்மானத்தின்படி வாழக்கூடிய மக்களாய் வாழ கிருபையும் இரக்கமும் பாராட்ட வேண்டுமாய் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் ஆசீர்வதித்து ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள வல்ல பிதாவே ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
*Luke 12:57* *"Yes, and why, even of yourselves, do you not judge what is right?"*
1) Jesus questioned the people that you're able to interpret the appearance of the earth and the sky, but why don't you judge for yourselves what is right?. The reason is you try to interpret and understand things physically, not spiritually. You don't act/work according to the word of God and God's wisdom.
As we read in John 7:24 "Do not judge according to appearance, but judge with righteous judgment". God expects and teaches us not to judge according to the appearance and what we see physically, but judge with righteous judgment.
2) As we read it in John 7:33-34 "Jesus said, "I am with you for only a short time, and then I am going to the one who sent me. 34) You will look for me, but you will not find me; and where I am, you cannot come".
And in John 6:38 "For I have come down from heaven, not to do My own will, but the will of Him who sent Me"
And in John 6:35 "Then Jesus declared, "I am the bread of life…" Jesus teaches them that He has come from the Father and from heaven to this world, to do Father's will, will remain with them for a short time and then He will ascend to heaven.
This is the perfect time to accept Jesus Christ and if you miss this opportunity, even if you wish to come to Jesus Christ, you can't come.
3) While Jesus lived in this world, until His first 30 years He was waiting for the predestined time, then took the baptism at 30 years and He revealed Himself to the people for 3 years. If you read the John gospel you may read repeatedly that Jesus spoke "My time has not yet come" and before the crucifixion Jesus mentioned that "My time has come" and sacrificed Himself. So, Jesus teaches the people to make use of this brief time and if you miss, you can't come where I go.
*How to apply this verse in our daily life :*
1) Jesus Christ revealed Himself to those people physically, but they didn't accept Him and refused Him. But today, God has revealed Himself to us spiritually. How do we interpret this time and judge with righteous judgment? Your decision is very critical, as the second coming of Jesus may happen any time, may be today, tonight or this hour which we may not know.
2) Are we ready to go with Jesus Christ? What's that preparedness? We should accept Jesus Christ, live for Himself; then our decision would be a wise and good decision. When Jesus Christ spoke to those people, He said, I'm going to be with my Father where you can't come. But for us, Jesus promised that whoever accepted Him as their personal savior, they could go to be with Him.
3) The people who live in this era are more privileged than those people who lived 2000 years before. When we make use of this opportunity, wisely judge, live truly according to the word of God and for Him, we may be found in His second coming and be with Him forever and ever. We've received such a great opportunity, but if we happen to miss this chance, we may not get a second chance after we die and we can't do anything; let's make the decision to accept Jesus Christ as our personal savior and live for Him alone today.
*Prayer*
Almighty God, Thank You for this blessed day! We're living in the time, just before your soon coming; Please give us grace to accept You in our life and dedicate ourselves to live for You alone God. We glorify Your matchless name and pray in the sweet name of Jesus Christ, Almighty Father, Amen.
*_WCF DD (World Christian Fellowship Daily Devotions)_*
*லூக்கா 12:58* *"உனக்கு எதிராளியானவன் உன்னை அதிகாரியினிடத்திற்குக் கொண்டுபோகிறபோது, வழியிலேதானே அவனிடத்திலிருந்து விடுதலையாகும்படி பிரயாசப்படு, இல்லாவிட்டால், அவன் உன்னை நியாயாதிபதிக்கு முன்பாகக் கொண்டுபோவான், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடுப்பான், சேவகன் உன்னைச் சிறைச்சாலையில் போடுவான்."*
1) உங்களுக்கும் மற்றவருக்கும் பிரச்சனை வரும் பொழுது நியாயாதிபதியிடம் உங்களை கொண்டு போய் நிறுத்தி, நியாயம் தீர்த்து, சிறைச்சாலையில் கொண்டு போய் போடுவதற்கு முன்னதாக நீங்கள் சமாதானமாய் போய்விடுவது நல்லது.
2) இப்பொழுது சமாதானமாக போவதற்கு ஒரு கால அவகாசம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அந்தக் கால அவகாசத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை உவமானமாக சொல்கிறார்.
3) எப்படியெனில்., உன்னுடைய பாவங்களுக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. அந்த தண்டனை வருவதற்கு முன்னதாக / அவர் நியாயாதிபதியாக வருவதற்கு முன்னதாக அவர் இரட்சகராக இருக்கும் பொழுதே அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
4) இல்லாவிட்டால், நியாய தீர்ப்பை சந்திக்க வேண்டி இருக்கும். நீதி 25 :8. சங்கீதம் 32: 6. இப்பொழுது உங்களுக்கு ஒரு கால அவகாசம் இருக்கிறது. மத்தேயு 5: 25 ல் இது தான் குறிப்பிடப்பட்டுள்ளது. சீக்கிரமாக அவரோடு நல் மனம் பொருந்து. இப்பொழுது கால அவகாசம் இருக்கிறது.
5) இந்த கால அவகாசத்தை விரயம் பண்ண வேண்டாம். நான் இப்பொழுது இரட்சகராக வந்திருக்கிறேன் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நியாயாதிபதியாக வரும் பொழுது நான் கொடுக்கக்கூடிய தண்டனையை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும்.
6) ஏசாயா 55 :6. இது கர்த்தரை கண்டடைய தக்க சமயம். இப்பொழுது அவரை கூப்பிட்டால் நீங்கள் இரட்சிக்கப்பட முடியும். ஆனால் நியாய சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கும் பொழுது உங்களுக்கு இரக்கம் கிடையாது. இரக்கம் நியாய தீர்ப்புக்கு போவதற்கு முன்னதாக உள்ள இந்த கால அவகாசத்தை விரயம் பண்ணாதீர்கள்.
*நம் அன்றாட வாழ்வில் இந்த வசனத்தை எவ்வாறு பயன்படுத்துவது :*
1) மறுபடியும் சொல்லுகிறேன்; நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற இந்த காலம் - சபையின் / கிருபையின் காலம். கிருபையின் காலத்தில் நாம் இருக்கிறோம். இந்த கிருபையை தயவு செய்து விருதாவாக பயன்படுத்தாதீர்கள்.
2) இது போல் இன்னொரு சந்தர்ப்பம் உங்களுக்கு கொடுக்கப்படுவது இல்லை. ஏனென்றால் உங்களுடைய மரணத்துக்கு பின்னதாக சந்தர்ப்பம் கிடையாது அதே போல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும் பொழுது உங்களுக்கு கால அவகாசம் கிடையாது.
3) மனுஷகுமாரன் எப்பொழுது வருவார் என்று நமக்கு தெரியாது. அவர் வருவதற்கு முன்னதாக நாம் அவரை ஏற்றுக் கொண்டோமானால் அவருடைய வருகையில் அவரோடு காணப்படுவோம். கர்த்தரை நோக்கி கூப்பிடுவதற்கு இதுதான் சரியான காலகட்டம்.
4) இந்த செய்தியை கேட்டுக் கொண்டிருக்கிற நீங்கள் யாராக இருந்தாலும் காலத்தை விரயம் பண்ணாமல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே! என்னுடைய பாவங்களுக்காக தேவனுடைய குமாரனாய் இருந்தும் பூமிக்கு வந்து கல்வாரி சிலுவையில் மரித்தீர்...
5) உம்முடைய ரத்தத்தினால் என்னுடைய பாவங்கள் கழுவப்பட்டது நான் உம்முடைய நீதியைப் பெற்று தேவனோடு நிற்பதற்கு தகுதி உள்ளவனாக இருக்கிறேன். ஆண்டவரே!' என்னுடைய பாவங்களை எல்லாம் மன்னித்து என்னை உம்முடைய பிள்ளையாய் மாற்றுங்கள்
6) எனக்கு பரிசுத்த ஆவியை கொடுங்கள் என்று சொல்லி நீங்கள் கூப்பிடும் பொழுது அவருடைய கிருபையையும் இரக்கத்தையும் பெற்று நீங்கள் அவரோடு சேர்ந்து வாழ கூடும். அப்படி இல்லை என்றால்..அதனால் வரக்கூடிய விளைவுகள் மிகவும் கொடுமையானதாக இருக்கும் அதனால் இது ஏற்ற சமயம். ஏற்றுக்கொள்வீர்களா..?
*ஜெபம்*
மகா கிருபையும் இரக்கமும் நிறைந்த எங்கள் அன்பின் தகப்பனே! இதோ அருமையான காலகட்டம். இந்த காலகட்டத்தில் ஒருவரும் விட்டு விடாதபடிக்கு உம்மைப் பற்றிக் கொண்டு வாழக்கூடிய மக்களாய் வாழ எங்கள் தேவன் கிருபையும் இரக்கமும் பாராட்ட வேண்டுமாய் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஆசீர்வதித்து ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள வல்ல பிதாவே! ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
*Luke 12:58* *"When you go with your adversary to the magistrate, make every effort along the way to settle with him, lest he drag you to the judge, the judge deliver you to the officer, and the officer throw you into prison"*
1) Jesus Christ used this as an example to explain God's judgment. God is the one who judges everyone, before He comes as a judge and grants you the punishment, you have a brief time and you accept Him while He remains as a savior. If you miss this chance, you may meet Him in the judgment.
2) As we read in Proverbs 25:8 "Do not go hastily to court; For what will you do in the end, when your neighbor has put you to shame?"
And in Psalms 32:6 "For this cause everyone who is godly shall pray to You in a time when You may be found; Surely in a flood of great waters they shall not come near him"
And in Matthew 5:25 "Agree with your adversary quickly, while you are on the way with him, lest your adversary deliver you to the judge, the judge hand you over to the officer, and you be thrown into prison"
Now you have brief time to decide and act. Quickly reconcile with your neighbor/adversary before you take the case to the court. Now Jesus Christ have come as a savior, if you don't accept Him now, He will come as a judge in His second coming and will judge, punish the people.
3) As we read in Isaiah 55:6 "Seek the LORD while He may be found, call upon Him while He is near" It's a great time to see God and will be saved while He is a savior.
But in His second coming, He will come as a judge, seated on the throne of judgment and you may find no mercy. He will show His mercy until He remains as a savior and before He turns to be a judge. So, let's not waste the time, quickly make our decision to accept Jesus Christ.
*How to apply this verse in our daily life :*
1) This is the Church era and we live in a period of grace and let's not waste His mercy. Later on, we may not have a second chance. After our death, we won't have another chance and can't make any decisions. Likewise, when God returns as a judge, we won't have another chance. As we don't know the second coming of the Lord, if we accept Jesus Christ now while we're alive, we'll be found in His second coming.
2) Whoever reads this message, don't waste the time. If you haven't decided to follow Jesus Christ, you confess and pray to God;
"Lord Jesus Christ, although You're the Son of God, You came down to this earth, died on the Calvary for my sins, by Your blood my sins are washed away. Now I received the righteousness of God and deserved to stand in the presence of God. Lord, please forgive all my sins and change me as Your child and grant me Your Holy spirit".
3) When you confess the above prayer, you will find him; will receive His grace and mercy and you can live along with Him. If not, you may need to face the terrible consequences which you can't escape. Will you accept Jesus Christ as your personal savior today?
*Prayer*
Almighty God, Thank You for this blessed day! We live in a perfect time, a great opportunity for us and should not miss this chance. Please us give Your grace and mercy and let the people accept you as their savior and live for You alone. We glorify Your matchless name and pray in the sweet name of Jesus Christ, Almighty Father, Amen.
*_WCF DD (World Christian Fellowship Daily Devotions)_*
*லூக்கா 12:59* *"நீ கடைசிக்காசைக் கொடுத்துத் தீர்க்குமட்டும், அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்."*
1) யூத மக்கள் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் வழக்கமான ஒரு காரியத்தை சொல்லுகிறார். ஒருவர் கடன் வாங்கி விட்டு அதை திரும்ப கொடுக்கவில்லை என்றால், கொடுத்து தீர்க்கும் மட்டும் நியாயதிபதி சிறையில் அடைப்பார்.
2) கடைசி காசு கொடுத்து தீர்க்கும் மட்டும் அந்த இடத்திலிருந்து போக முடியாது. மத்தேயு 5: 26 -நல்மனம் பொருந்தாவிட்டால் எல்லா பணத்தையும் கொடுத்து தீர்த்தால் மட்டுமே அங்கிருந்து போக முடியும்.
3) கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவர்களை இரட்சிக்க கூடிய இரட்சகராக வந்திருக்கிறார். ஆனால் அவர்களால் அவரை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்களுடைய பாவங்களுக்கு அவர்களால் பலி செலுத்த முடியாது.
4) ஒரு மனிதன் இரட்சிக்கப்படுவதற்கு எவ்வளவு பணம் / தங்கம் / விலை உயர்ந்த முத்துக்கள், பவளங்கள் இப்படி எதையாவது கொடுக்க முடியுமா?
5) மனுஷனுடைய பாவம் அவ்வளவு பெரிய பாவம். அப்படிப்பட்ட பாவத்திலிருந்து ஒரு மனிதன் மீட்கப்படுவதற்கு அவனால் எந்த ஒரு நஷ்ட ஈடும் கொடுக்கவே முடியாது.
தனிப்பட்ட மனிதனின் நல்ல, நேர்மையான காரியங்கள், சுய முயற்சியின் மூலமாக இரட்சிக்கப்பட முடியாது. தேவனுக்கு எதிராக செய்த பாவக்கடன், கொடுத்து தீர்க்க முடியாத கடன்.
6) அதனால் தான் இப்பொழுது ஒரு கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது இந்த கால அவகாசத்தில் நல்மனம் பொருந்த வேண்டும். இல்லையென்றால் நித்திய காலமும் பாடனுபவிக்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக உவமானமாக கர்த்தர் இங்கு சொல்லிக் கொடுக்கிறார்.
*நம் அன்றாட வாழ்வில் இந்த வசனத்தை எவ்வாறு பயன்படுத்துவது :*
1) இந்த செய்தியை கேட்டுக் கொண்டிருக்கிற நீங்கள் இரட்சிக்கப்படுவதற்கு உங்களால் ஏதாவது செய்ய முடியுமா? என்ன கொடுத்தால் கர்த்தர் சந்தோஷப்பட்டு உங்களை இரட்சிக்க முடியும்?
2) ஆராதனைக்கு சென்றால் கர்த்தர் என் மேல் பிரியமாய் இருப்பார், காணிக்கை செலுத்தினால் கர்த்தர் பிரியமாய் இருப்பார், மிஷனரி ஊழியத்திற்கு காணிக்கை கொடுப்பதால், ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் உதவி செய்வதனால் கர்த்தர் என்னை நல்லவன் என்று சொல்வார் என்று நினைக்கலாம்.... அப்படி இல்லவே இல்லை.
3) நாம் இரட்சிக்கப்படுவதற்கு நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது. இது தேவனால் உண்டான ஈவு. இது மனுஷ கிரியைகளினால் உண்டானது அல்ல. எபேசியர் 2ம் அதிகாரத்தில் மிகத் தெளிவாக நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
4) எந்த மனுஷனும் தன்னுடைய ஆத்மாவை மீட்டுக் கொள்ளும் பொருளாக எதையும் கொடுக்க முடியாது. இப்படி ஒரு நிலை இருக்கும் பொழுது... கால அவகாசம் இருக்கும் பொழுதே கர்த்தரை ஏற்றுக் கொண்டு சமாதானம் பெற்று விட வேண்டும்.
5) இந்த செய்தியை கேட்டுக் கொண்டிருக்கிற நீங்கள் கர்த்தருடைய சத்தத்தை கேட்பீர்களாகில் வனாந்தரத்தில் கோபம் மூட்டினது போல செய்யாதீர்கள் என்று எபிரேயரில் மூன்று முறை சங்கீதம் 95ல் உள்ள வசனத்தை எடுத்து சொல்லுகிறார்.
6) இன்றைக்கு கர்த்தரை நோக்கி கூப்பிடுங்கள் இன்றைக்கு இது உங்கள் இரட்சண்ய நாளாய் மாறட்டும் அல்லேலூயா!
*ஜெபம்*
வல்ல பிதாவே! இந்த அருமையான நல்ல நாளுக்காக நன்றி. இந்த செய்தியை கேட்டுக்கொண்டு இருக்கிற ஒவ்வொருவரும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தங்களுடைய இருதயத்தில் விசுவாசித்து வாயினால் அறிக்கை செய்து இரட்சிக்கப்பட்டவர்களாய் வாழ எங்கள் தேவன் கிருபையும் இரக்கமும் பாராட்ட வேண்டுமாய் இயேசு கிறிஸ்துவின் உன்னத நாமத்தில் ஆசீர்வதித்து ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள வல்ல பிதாவே! ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
*Luke 12:59* *"I tell you, you shall not depart from there till you have paid the very last mite"*
1) He is saying something conventional in a way that the Jewish people could understand. If a person takes a loan and does not pay it back, the judge will put him in jail until he pays and settles the loan.
2) He can't leave the jail without paying the last penny. Matthew 5: 26 Assuredly, I say to you, you will by no means get out of there till you have paid the last penny.
3) The Lord Jesus Christ has come as a savior who can save them. But they could not accept him. They cannot pay for their sins.
4) Can a man give money/gold/expensive pearls, corals etc. to be saved?
5) Man's sin is such a great sin. For a man to be redeemed from such a sin he cannot pay any compensation. The individual man cannot be saved through good and righteous deeds or self-effort. A debt of sin against God is an unpayable debt.
6) That is why we have been given a time period to match the goodwill else it has been clearly taught by the Lord that we will suffer eternally.
*How to apply this verse in our daily life :*
1) Is there anything you can do to be saved? What will make the Lord happy and save you?
2) You may think that if I go to worship, if I give an offering, if I give an offering to missionary work, if I help the poor and orphans then the Lord will be pleased and will call me a good person.... That is not so.
3) There is nothing we can do to be saved. This is God's mercy/grace.. It is not man's work. Ephesians 2 tells us very clearly.
4) No man can give anything in return for his soul. We should accept the Lord and get peace while there is time.
5) Today, if you will hear His voice, Do not harden your hearts as in the rebellion, On the day of trial in the wilderness, Where your fathers tested Me, tried Me.
6) Cry out to the Lord today and let this be your day of salvation Hallelujah!
*Prayer*
Almighty Father! Thank you for this wonderful day. We pray in the name of Jesus Christ that everyone who is listening to this message will believe in the Lord Jesus Christ in their hearts and confess with their mouths and live as saved people. Amen. May the Lord bless you!
*_WCF DD (World Christian Fellowship Daily Devotions)_*
*லூக்கா 13:1* *"பிலாத்து சில கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடே கலந்திருந்தான்; அந்த வேளையிலே அங்கே இருந்தவர்களில் சிலர் அந்தச் செய்தியை அவருக்கு அறிவித்தார்கள். "*
1) இது ஒரு தொடர்ச்சியாக நடைபெறக்கூடிய ஒரு காரியம் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் லூக்கா 12:47லிருந்து சொல்லக் கூடிய காரியம் என்னவெனில்.. நியாயத்தீர்ப்பு நடைபெறப்போகிறது, அதிலும் விசேஷமாக 57-59 வரை சொல்லும் பொழுது ஒருத்தருக்கு கடன் கொடுத்திருந்தால் கடனை தீர்த்து விடு, இல்லையென்றால் சமாதானமாக போய்விடு.
2) உனக்கு கால அவகாசம் இருக்கும் பொழுதே ஒப்புரவாகி விடு என்பதை தான் சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது.. பிலாத்து, பலிகளை கலந்திருப்பதை பற்றி அவரிடம் சொல்லப்படுகிறது.
3) அதாவது ராணுவ முறையில் ரோமாபுரி அரசுக்கு எதிராக போராடக்கூடிய மக்கள் கானானியர்கள். மத்தேயு 10:4 இவர்கள் போராளிகள்.
4) யூதர்கள், தேவாலயத்தில் பஸ்கா பண்டிகையில் மாத்திரம் தான் இரத்த பலிகளை செலுத்துவார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஊழியம் செய்த பொழுது நடந்த பஸ்கா பண்டிகையில் நடந்த உள்ளூர் செய்தி தான் இது.
5) அது என்னவெனில்.. பிலாத்து தேவனுக்கு செலுத்தும் ரத்தபலியோடு பன்றியின் ரத்தத்தை கலந்ததாக சொல்லப்படுகிறது. இது ஒரு தீட்டான காரியம். தேவனுக்கு எதிராக, யூத மக்களுக்கு ஒரு வெறுப்பு உண்டாகும்படி ஒரு காரியத்தை பிலாத்து செய்கிறார்.
6) தேவனை மகிமைப்படுத்தாமல் அவமதிக்கக் கூடியதாக தேவன் கொடுத்த ஒரு நடைமுறையை மாற்றி.. பரிசுத்தமாய் நடைபெற வேண்டியதை அவமானமாக மாற்றியதை இங்கு கர்த்தரிடத்தில் சொல்லுகின்றனர்.
*நம் அன்றாட வாழ்வில் இந்த வசனத்தை எவ்வாறு பயன்படுத்துவது :*
1) நல்லது கெட்டது என்று சொல்லக்கூடிய ஒரு காரியத்தை இங்கு பார்க்கிறோம். நல்லவனுக்கு நல்லது நடக்கும் : கெட்டவனுக்கு கெட்டது நடக்கும். இது நம் எல்லாருடைய எண்ணங்களிலும் இருக்கக்கூடிய ஒரு காரியம். ஒரு கெட்டது நடந்தால் உடனே அவர்களிடம் ஏதோ பாவம் இருக்கிறது என்று நினைக்கிறார்கள்.
2) யோபு புத்தகத்தின் மொத்த பொருள்- நண்பர்கள் வந்து உட்கார்ந்து, யோபு பாடுபடும் பொழுது அவருடைய நண்பர்கள் யோபுவை பார்த்து உன்னிடம் ஏதோ பாவம் இருக்கிறது. அதனால் தான் உனக்கு இவ்வளவு பிரச்சனை, நீ நல்லவனாக இருந்தால் உனக்கு துன்பம் வராது என்றனர்.
3) நாம் எல்லோரும் பாவிகள். நரக வேதனை அனுபவிப்பதற்காக நியமிக்கப்பட்டவர்கள். இதிலிருந்து நாம் தப்பித்துக் கொள்வதற்கு கால அவகாசம் இருக்கும் பொழுதே மனம் திரும்ப வேண்டும் என்கிற காரியத்தை அங்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
4) இந்த செய்தியை கேட்டுக் கொண்டிருக்கிற நீங்கள் ஒரு வேளை யாருக்காவது ஒரு மோசமான /துக்கமான சம்பவம் நடைபெறுகிறது என்றால் அவர்களுக்கு பாவம் அவர்களுடைய வாழ்க்கையில் ஏதோ பாவம் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா...?
5) அல்லது ஒரு வேளை உங்களுக்கு ஏதாவது துக்கமான காரியம் நேரிடும் பொழுது உடனே உங்களுக்குள் ஏதோ பாவம் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா அப்படி இல்லை : நல்லதும் கெட்டதும் எல்லோருக்கும் நடைபெறும்.
6) நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நம்முடன் கர்த்தர் இருக்கிறார். நாம் கர்த்தரோடு இருக்கிறோம். அதனால், துக்கப்படுகின்ற துயரப்படுகின்ற இந்த காலங்களில் நாம் இன்னும் கர்த்தரோடு சேர்ந்து இருக்க கொடுக்கப்பட்ட சந்தர்ப்பம் என்று எடுத்துக் கொள்ளும்படிக்கு தான் இந்த உவமானத்தை சொல்லுகிறார்.
*ஜெபம்*
வல்ல பிதாவே! இந்த அருமையான நல்ல நாளுக்காய் நன்றி.நல்லதும் கெட்டதும் எல்லோருக்கும் நடக்கும். நாங்கள் உம்மோடு ஐக்கியத்திலும் மனம் திரும்புதலிலும் வாழ எங்கள் தேவன் எங்களுக்கு கிருபை பாராட்ட வேண்டுமாய் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஆசிர்வதித்து ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள வல்ல பிதாவே! ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
*Luke 13:1* *"There were present at that season some who told Him about the Galileans whose blood Pilate had mingled with their sacrifices"*
1) We need to know that this is a continuous thing. From Luke 12:47, we can understand that judgment is going to happen, especially when it says from 57-59, if you have lent money to someone, pay off the debt, if not, make peace with them.
2) He is telling you to reconcile while you still have time. Then the people told about Pilate mixed the blood in the sacrifices.
3) The Canaanites were the people who fought against the Roman government militarily- Matthew 10:4 Those are warriors.
4) Jews offer blood sacrifices only on Passover in the church. This is the local news that happened during the Passover festival during the ministry of the Lord Jesus Christ.
5) It is said that Pilate mixed pig's blood with the offering to God. It is a dirty thing. Pilate does something to create hatred for the Jewish people and against God.
6) Here they are telling the Lord that he has changed a practice given by God to be dishonorable without glorifying God.
*How to apply this verse in our daily life :*
1) Here we see something that can be called good or bad. Good things happen to good people; bad things happen to bad people. It's something we all have on our minds. When something bad happens, they immediately think that there is some sin with them.
2) The whole meaning of the book of Job- friends come and sit, when Job is struggling, his friends look at Job and say there is something wrong/sin with you. They said that is why you have so much trouble, if you are good you will not suffer.
3) We are all sinners and destined to suffer the torments of hell. He is telling us that we should repent while there is time to escape from this.
4) Maybe you are listening to this message and if something bad/sad happens to someone, do you feel that there is something wrong in their life...?
5) Or maybe when something sad happens to you, you immediately think that there is something wrong with you. Not so: good and bad things happen to everyone.
6) We must understand one thing. The Lord is with us. We are with the Lord. Therefore, He explained in this parable so that we can take it as an opportunity to be with the Lord in these times of grief and sorrow.
*Prayer*
Almighty Father! Thank you for this wonderful day. Good and bad things happen to everyone. We pray in the sweet name of Jesus Christ that our God will provide us the grace to live in unity with you and repentance, our living mighty Father! Amen. May the Lord bless you.
*_WCF DD (World Christian Fellowship Daily Devotions)_*
*லூக்கா 13:2* *" இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அந்தக் கலிலேயருக்கு அப்படிப்பட்டவைகள் சம்பவித்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயரைப் பார்க்கிலும் அவர்கள் பாவிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ? "*
1) யூதர்களுடைய எண்ணங்களை புரிந்து கொண்ட ஆண்டவர், அவர்களையே கேள்வி கேட்கிறார். யோவான் 2:23,24. ஆண்டவருக்கு ஒருவரும் சாட்சி கொடுக்க தேவையில்லை எல்லா மனிதருடைய இருதயங்களையும் யோசனைகளையும் அறிந்த தேவன். கலிலேயாவிலிருந்து எருசலேமுக்கு பலி செலுத்த வந்த யூதர்கள் தேவனுக்கு நல்ல காரியம் செய்ய வேண்டும் என்று வந்திருக்கின்றனர்.
2) அங்கு பிலாத்து, அசுத்தமான இரத்தத்தை கலந்து கர்த்தருடைய பலியை அவமதிக்கக் கூடிய ஒரு காரியத்தை செய்கிறார். காரணம் : பிலாத்துவுக்கு யூதர்கள் ரோமர்களுக்கு விரோதமாகbஎழும்பி விடக் கூடாது என்று அடக்குமுறை செய்யக்கூடிய ஒரு காரியம்.
3) அந்த காலகட்டங்களில் வாழ்ந்த யூதர்களுடைய மனநிலையை எடுத்துக்காட்ட கூடியதாக ஆண்டவர் இங்கே கேள்வி கேட்கிறார். அவர்களுக்கு கெட்டது நடந்து விட்டது அதனால் அவர்கள் மிகவும் மோசமானவர்கள்,
4) யோபு-4:7, தவறு செய்தவனுக்கு கெட்டது நடக்காமல் இருந்தது உண்டா? அதே போல் நல்லவர்களுக்கு கெட்டது நடந்து இருக்கிறதா...?. இது அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களுடைய சூழ்நிலை. அங்கிருந்த யூதர்களுக்கு மாத்திரமல்ல: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பின்தொடர்ந்து வந்த அப்போஸ்தலர் 12 பேருடைய மனநிலைமையும் அப்படித்தான்.
5) யோவான் 9:1,2. குருடனாக பிறந்த ஒருவனை இயேசு கிறிஸ்துவிடம் கொண்டு வந்து, இது இவன் செய்த பாவமா? இவனை பெற்றவர்கள் செய்த பாவமா? என்று கேட்கின்றனர்.
வயிற்றுக்குள் இருக்கும் அந்த பிள்ளை எப்படி பாவம் செய்திருக்க முடியும்? வாய்ப்பே கிடையாது.
6) இரண்டாவது, பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளுக்கு வரும், நல்லவர்களுக்கு எந்த தீங்கும் நடைபெறாது, இது தான் அந்த கால சூழ்நிலை அதனால் கலிலேயாவில் இருந்து கர்த்தருக்கு பலி செலுத்த வந்த மக்களின் மனநிலை:
7) பலியானது மற்ற ரத்தத்தோடு கலந்ததினால் மீதி இருக்கிற கலிலேயரை காட்டிலும் இவர்கள் அதிகம் பாவம் செய்துள்ளனர் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்று கர்த்தராகிய ஆண்டவர் கேள்வி கேட்கிறார்.
*நம் அன்றாட வாழ்வில் இந்த வசனத்தை எவ்வாறு பயன்படுத்துவது :*
1) நம்மிடத்திலும் இன்றைக்கு இதே மனநிலை இருப்பதை பார்க்க முடிகிறது. உலகத்தாரிடமும் கிறிஸ்தவர்களிடம் இருப்பதும் ஒரே மனநிலை தான். யாராவது ஒருவருடைய குடும்பத்தில் பிரச்சனை என்றதும் நன்றாக ஜெபிக்கின்றனர்.
2) ஆனால் சொல்லும் பொழுது எனக்கு அன்றைக்கே தெரியும் இவர்கள் அப்படி நடந்து கொள்ளும் போது.. ஏதோ இவர்களிடம் இருக்கிறது என்று சொல்வர். யாருக்காவது ஒருவருக்கு கொடிய சூழ்நிலை வரும் பொழுது.. உடனே அவர்களிடம் ஏதோ பாவம் இருக்கிறது என்று நினைக்கிறார்கள்.
3) நல்ல மனிதர் ஒருவருக்கு ஏதோ கெட்டது நடந்து விட்டால் உடனே அவர் நல்ல மனுஷன் அவருக்கு இப்படி நடந்து விட்டது நினைக்கிறோம். எல்லோருக்கும் நல்லதும் கெட்டதும் இரண்டுமே நடக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.
4) நாம் எல்லோருமே கர்த்தருடைய நீடிய பொறுமையினால் தான் இந்த பூமியில் இருக்கிறோம். இந்த காலங்களில் எவ்வளவு கொடிய சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. உலகெங்கும் நடைபெற்ற போரினால் அனேகர் தங்களுடைய சொந்த இடங்களை விட்டு, துரத்தப்பட்டு, அழிக்கப்பட்டு, வீடு இழந்தவர்களாக இருக்கின்றனர்.
5) நிறைய நேரங்களில் நல்லவர்கள் மரிக்கின்றனர். வல்லமையாக ஊழியம் செய்கிறவர்கள் விபத்திலும் கொடூர வியாதியிலும் மரித்து விட்டால் பாவம் செய்தார்கள் என்பது அர்த்தமில்லை. கர்த்தருடைய நீடிய பொறுமையினால் தான் நாம் ஜீவனோடு இருக்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது.
*ஜெபம்*
வல்ல பிதாவே! எங்களுடைய எண்ணங்களில் ஒரு பெரிய மாறுதல் உண்டாகட்டும். ஆம் ஆண்டவரே நாங்கள் மற்றவர்களை குற்றவாளிகள் என்று தீர்மானிக்காதபடிக்கு எல்லோருக்கும் எல்லாமே நடக்கிறது, நான் கர்த்தருடன் சரியாக இருக்கிறேனா..? என்று ஒவ்வொரு நாளும் எங்களை சரி பார்த்து உம்மோடு சரியாக வாழக் கூடிய கிருபையில் வழிநடத்த வேண்டுமாய், இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஆசீர்வதித்து ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள வல்ல பிதாவே! ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
*Luke 13:2* *"And Jesus answered and said to them, "Do you suppose that these Galileans were worse sinners than all other Galileans, because they suffered such things?"*
1) The Lord knew the thoughts of the Jews, and questioned them. John 2:23,24 Jesus knew all men. The Jews who came from Galilee to Jerusalem to offer sacrifices have come for God.
2) There Pilate does something that desecrates the Lord's sacrifice by mixing impure blood. Reason: Pilate thought to oppress so that the Jews would not rise up against the Romans.
3) The Lord asks a question here that can illustrate the mentality of the Jews who lived in those times. Bad things have happened to them so they are very bad.
4) Job-4:7, "Remember now, who ever perished being innocent? Or where was the upright ever cut off?". whether bad things happen to good people...? This is the situation of people living in those times. Not only the Jews there: the 12 apostles who followed the Lord Jesus Christ had the same mentality.
5) John 9:1,2. "Rabbi, who sinned, this man or his parents, that he was born blind?" They ask that. How could that child in the womb have sinned? No chance.
6) Second, the sin of the parents comes to the children, no harm befalls the good, this was the situation of that duration and hence the attitude of the people who came from Galilee to sacrifice to the Lord:
7) Do you think they sinned more than the Galilean remnant because the sacrifice was mixed with other blood? asks the Lord God.
*How to apply this verse in our daily life :*
1) The world and the Christians have the same mindset today. When someone has a problem in their family then they are praying.
2) But while saying, I know that day when they behave like that.. They say that there is something in them. When a fatal situation comes to someone, they immediately think that there is something wrong with them.
3) If something bad happens to a good person, we immediately think that he is a good person. Don't forget that good and bad things happen to everyone.
4) All of us are on this earth because of God's grace and patience. How many terrible things are happening in these times. Many are displaced, driven, destroyed, and homeless by war around the world.
5) Most of the time good people die. It does not mean that those who serve mightily have sinned if they die in accidents or cruel diseases. We must not forget that we are alive because of God's patience.
*Prayer*
Almighty Father! Let there be a great change in our thoughts. Good or bad happens to everyone so help us to not judge others. Help us to retrospect every day whether Am I right with Lord..? and guide us in the grace to live rightly with You, we pray in the sweet name of Jesus Christ, our living mighty Father! Amen. May the Lord bless you!
*_WCF DD (World Christian Fellowship Daily Devotions)_*
*லூக்கா 13:3* *"அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்"*
1) இன்னொருவருக்கு தீங்கு / பிரச்சனை என்று நினைக்கும் பொழுது... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, நீ மனம் திரும்ப வேண்டும். இல்லை என்றால் நீயும் அப்படியே அழிந்து போய் விடுவாய் என்று இயேசு கிறிஸ்து சொல்லுகிறார்.
2) நாம் எல்லோரும் பாவிகள், நரக வேதனைக்கு நியமிக்கப்பட்டதை உணர்ந்து மனம் திரும்பவில்லை என்றால் நமக்கும் இது தான் சம்பவிக்கும் என்கிறதை கர்த்தர் சொல்லுகிறார்.
3) லூக்கா 12 :57- 59 மிகவும் முக்கியமான வசனங்கள். ஏனென்றால் நம் எல்லோருக்கும் கால அவகாசத்தை கொடுத்து இருக்கிறார். அந்த கால அவகாசத்தில் கர்த்தரோடு இணைந்து வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்-நீதி 24: 16.
4) ஒரு கல் மேல் இன்னொரு கல் இராதபடிக்கு நியாயத்தீர்ப்பு வரப்போகிறது. மத்தேயு 23 :36ல் இந்த சந்ததி பார்க்கக்கூடியதாக எல்லாமே தரைமட்டமாக்கப்படும். இது தான் நீங்கள் மனம் திரும்புவதற்கு ஏற்ற சமயம்.
5) நீதிபதியிடம் உங்களை ஒப்புக்கொடுத்து கடைசி கடன் தீரும் மட்டும் காவலில் போடப்பட்டு துன்புறுத்தப்படுவீர்கள். அதனால் காலம் இருக்கும் பொழுதே நீங்கள் போய் ஒப்புரவாகி விடுங்கள் என்பதை சொல்லி விட்டு தான் இதைச் சொல்லுகிறார்.
6) II கொரிந்தியர்,6:2. இன்றைக்கு மனம் திரும்பி ஒப்புரவாகும் இந்த சந்தர்ப்பத்தை நீங்கள் தவறவிட்டால் இன்னொரு சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைக்காமல் போய் விடும். அதனால் இப்பொழுதே நீங்கள் மனம் திரும்ப வேண்டும் என்கிற கட்டாயத்தை அங்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வலியுறுத்துகிறார்.
*நம் அன்றாட வாழ்வில் இந்த வசனத்தை எவ்வாறு பயன்படுத்துவது :*
1) தேவாலயத்தில் பலியில் அசுத்த ரத்தம் கலந்ததினால் பலி -பரிசுத்தம் கெட்டுப் போய்விட்டது என்றும் அவர்கள் பாவிகள் அதனால் தான் அவர்கள் இறந்து விட்டார்கள் என்று சொல்கிறீர்கள்.
2) நீங்கள் மனம் திரும்பவில்லை என்றால் ஒன்றுமில்லாமல் இந்த பட்டணம் அழிக்கப்படும். தேவாலயம் இடிக்கப்படும் என்பதை மிக வலியுறுத்தி அழகாக தெளிவாக நேர்த்தியாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிரசங்கித்தார்.
3) ஆனால் அவர்கள் கேட்கவில்லை. கர்த்தர் சொன்னார் : இந்த சந்ததியின் மேல் வரும் என்று, அது அப்படியே சம்பவித்தது. கிறிஸ்துவுக்கு பின் எழுபதாவது வருடம் தீத்து வாஸ்பியன் என்பவர் மொத்த நகரத்தையும் அழித்துவிட்டார்.
4) சாலமோன் ராஜா தேவாலயத்தை பொன்னினால் கட்டினார். அது தீக்கிரையாக்கப்பட்ட போது அந்த பொன் உருகி கல்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டதனால் தங்கத்தை எடுப்பதற்காக ஒவ்வொரு கல்லாக பிரித்து எடுத்து ( கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்னது போல ) ஒரு கல் மேல் இன்னொரு கல்லிராதபடிக்கு எல்லாவற்றையும் பிரித்து போட்டனர்
5) ஏறக்குறைய 1100 பட்டணங்களை அழித்து எருசலேம் ஒன்றும் இல்லாமல் போகக் கூடியதாக நிறைவேற்றப்பட்டது. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசத்தை அவர்கள் பயன்படுத்தவில்லை.
6) நமக்கு இதுதான் அனுக்கிரக / இரட்சண்ய காலம். அருமையான சகோதர சகோதரிகளே! உங்களை நீதிமான் என்று எண்ணாதபடிக்கும் மற்றவர்களுக்கு நல்லது / கெட்டது நடக்கும் பொழுது நீங்கள் உங்களை ஒப்பிட்டு பார்க்காமலும் கர்த்தர் ஒரு தவணை காலத்தை கொடுத்து இருக்கிறார் என்று மனம் திரும்பி கர்த்தருடன் ஒப்புரவாகி விடுவீர்களா?.
*ஜெபம்*
மகா கிருபையும் இரக்கமும் நிறைந்த எங்கள் அன்பின் தகப்பனே! இந்த செய்தியை கேட்டுக் கொண்டிருக்கிற ஒவ்வொரு சகோதரனும் சகோதரியும் தவணையின் காலத்தில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து உம்மோடு ஒப்புரவாகி வாழ எங்கள் தேவன் கிருபையும் இரக்கமும் பாராட்ட வேண்டுமாய், இயேசு கிறிஸ்துவின் உன்னத நாமத்தில் ஆசிர்வதித்து ஜெபிக்கிறோம், எங்கள் ஜீவனுள்ள வல்ல பிதாவே! ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
*Luke 13:3* *"I tell you, no; but unless you repent you will all likewise perish. "*
1) When harm/problems come to other people... you need to know, you need to repent. Jesus Christ says that if you don't, you too will perish.
2) The Lord says that if we do not repent and realize that we are all sinners, destined for the torment of hell, this will also happen to us.
3) Luke 12:57-59 are very important verses. Because He has given time to all of us. We are supposed to live with the Lord in harmony during that time - Proverbs 24:16.
4) Judgment is coming -"not one stone shall be left here upon another"- Matthew 23:36. This is the perfect time for you to repent.
5) Surrender yourself to the judge and if not you will be jailed until the last debt settlement. So He says this by saying that while there is still time, you should reconcile.
6) II Corinthians 6:2-"For He says: "In an acceptable time I have heard you,
And in the day of salvation I have helped you."
Behold, now is the accepted time; behold, now is the day of salvation".
If you miss this chance today, you will not get another chance. That is why the Lord Jesus Christ is insisting that you should repent right now.
*How to apply this verse in our daily life :*
1) You are saying that the sacrifices were corrupted because the impure blood got mixed in the holy sacrifice church because of that they became sinners and that is why they died.
2) If you do not repent, this city will be destroyed and become nothing. The Lord Jesus Christ preached very clearly and beautifully that the church will be destroyed.
3) But they did not listen. The Lord said: It will come upon this generation, and so it happened. In the 70 AD , Titus Vesalius destroyed the whole city.
4) King Solomon built the temple with gold. When it was set on fire, the gold melted and got stuck between the stones, so they took each stone apart to get the gold (as the Lord Jesus Christ said) so that there was not one stone on top of another.
5) Approximately 1100 cities were destroyed and Jerusalem was left empty. They did not use the time provided to them.
6) For us this is the grace /salvation period. Dear brothers and sisters! When good/bad things happen to others and you don't compare yourself, will you repent and be reconciled with the Lord, saying that the Lord has given you a period of borrowed time and does not consider you as righteous.
*Prayer*
Father of our love, full of great grace and mercy! May every brother and sister listening to this message realize that we are in borrowed time and we seek Your grace and mercy to live in harmony with You, we bless and pray in the great name of Jesus Christ, our living mighty Father! Amen. May the Lord bless you.
*_WCF DD (World Christian Fellowship Daily Devotions)_*
*லூக்கா 13:4* *"சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே; எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ? "*
1) கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உள்ளூரில் நடந்த ஒரு செய்தியை சொல்லி அவர்கள் மோசமானவர்கள் என்று நினைக்கிறீர்களா என்று கேள்வியை கேட்கிறார். முதலாவதாக ஆராதனை செய்த இடத்திலே ஒரு சம்பவம் நேரிட்டது. அதைப் பாவம் என்று நினைக்கிறீர்கள். இப்பொழுதோ நல்லதை செய்கிறார்கள்.
2) சீலோவாம் என்ற ஒரு குளம் எருசலேம் நகரத்திற்கு சிறிது தூரம் வெளியே இருக்கிறது. எசேக்கியா ராஜாவின் காலத்தில் ஒரு குகையின் வழியாக தண்ணீரை எருசலேமுக்குள் கொண்டு வந்தார்.
3) பிலாத்து இரண்டு பக்கமும் தண்ணீர் கிடைக்கக் கூடியதாக அதற்கான காரியங்களை செய்கிறார். கட்டட வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது கட்டிடம் இடிந்தோ அல்லது ஏதோ தவறு நடந்து 18 பேர் மரித்துப் போய் விட்டனர். இது உள்ளூரில் நடந்த ஒரு செய்தி. இறந்து போனவர்கள் எருசலேமில் உள்ளவர்களை காட்டிலும் மோசமானவர்களா..?
4) யோவான் 9வது அதிகாரத்தில் பிறவிக்குருடன் குணமாகிறான். யோ 9:7 சீலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தம். யோவான் 9 :11- இந்த சீலோவாம் குளம் கால்வாய் கட்டும் பொழுது அங்கு 18 பேர் இறந்து போகின்றனர்.
5) நல்ல காரியம் செய்யும் பொழுது கெட்ட சம்பவம் நடக்கிறது. மக்களுக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு நல்ல வேலை செய்யும் பொழுது 18 பேர் மரித்து போய் விடுகின்றனர்.
6) அந்த இறந்து போனவர்கள் எல்லாம் மிகவும் பாவிகள் என்று நீங்கள் நினைக்க கூடாது. மாறாக நீங்கள் மனம் திரும்ப வேண்டும்.
*நம் அன்றாட வாழ்வில் இந்த வசனத்தை எவ்வாறு பயன்படுத்துவது :*
1) நீங்கள் ஒரு நல்ல காரியம் செய்யும் பொழுது உங்களுக்கு கெட்டது ஏதாவது நடக்கிறதா? நிச்சயமாக நடக்கும். நீங்கள் நல்லது செய்தாலும் கெட்டது செய்தாலும்.., நல்லதும் கெட்டதும் நடக்கத்தான் செய்கிறது.
2) ஒரு கெட்ட சம்பவம் நடக்கும் பொழுது அதை எப்படி கையாள கூடியவர்களாக இருக்கிறீர்கள்?அவர்கள் மோசமானவர்கள் அதனால் தான் அப்படி நடந்து விட்டது அல்லது அந்த காரியத்தில் சிக்கிக்கொண்டான் என்று நாம் நினைக்கக் கூடாது.
3) அநேகர் வந்து உங்களிடத்தில் பாவம் இருக்கிறது, பரம்பரை சாபம் இருக்கிறது, உங்களை ஏதோ ஒரு சக்தி ஆண்டு கொண்டு இருக்கிறது அதனால் தான் உங்களுக்கு இப்படி நடக்கிறது என்று சொல்லக் கூடும்., தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள், அப்படி இல்லை.
4) வியாதி எல்லோருக்கும் வருகிறது. வல்லமையாக ஊழியம் செய்கிற ஊழியக்காரர்களுக்கும் பிரச்சனை வருகிறது. நாம் எல்லோருமே பாவிகள்.பாவம் செய்தவர்கள் தான். நாம் எல்லோருமே கர்த்தர் கொடுக்கிற தயவு இரக்கத்தின் கீழ் இருக்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது.
5) அதே சமயத்தில் நாம் மற்றவர்களை பாவிகள் என்று குற்றம் தீர்க்காதபடிக்கு, மாறாக நான் பாவி மன்னியுங்கள் ஆண்டவரே என்னை காப்பாற்றினீர் உமக்கு நன்றி என்று சொல்லி கர்த்தரிடத்தில் மனம் திரும்புகிறவர்களாக இருக்க வேண்டும்.
*ஜெபம்*
மகா கிருபையும் இரக்கமும் நிறைந்த எங்கள் அன்பின் தகப்பனே! இதோ ஒரு நல்ல காரியம் நடக்கும் பொழுது, கெட்டது நடந்து விட்டால் அவர்கள் கெட்டவர்கள் என்று நாங்கள் நியாயம் தீர்க்காதபடிக்கு எங்களை கிருபையாய் மன்னித்து வழிநடத்தினீர் என்பதை நாங்கள் அறிக்கையிட்டு வாழக் கூடியவர்களாய் வாழ, எங்கள் தேவன் கிருபையும் இரக்கமும் பாராட்ட வேண்டுமாய், இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஆசீர்வதித்து ஜெபிக்கிறோம், எங்கள் ஜீவனுள்ள வல்ல பிதாவே! ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!.
*Luke 13:4* *"Or those eighteen on whom the tower in Siloam fell and killed them, do you think that they were worse sinners than all other men who dwelt in Jerusalem?"*
1) Lord Jesus quotes current local news and asks if those affected were the worst sinners. The first event is when Pilate defiled the sacrifice of the Galileans by mixing impure blood in it. Secondly, Jesus mentioned the incident of the tower of Siloam.
2) Siloam is a pool just outside Jerusalem. Its origin dates back to the time of king Hezekiah who made the pool and an aqueduct to bring water into the city of Jerusalem. Now Pilate gave orders to construct a two-way aqueduct to ensure the city has good water supply. But during the construction, one of the towers fell and eighteen people, who could be workers or by-standers, were killed.
3) In John 9, the man born blind was healed when he washed at Siloam. v 7- And He said to him, "Go, wash in the pool of Siloam" (which means Sent). So he went and washed, and came back seeing. The born blind man answered the people in v 11 - "A Man called Jesus made clay and anointed my eyes and said to me, 'Go to the pool of Siloam and wash'. So I went and washed, and I received sight". This is the same pool of Siloam where the tower collapsed.
4) Here a bad event occurred although the intention was to do good for the people, eighteen died in the accident.
6) Jesus intends to say that just because these eighteen died, it does not mean that they were the worst sinners among the people or that God gathered them at one place and had them killed. We must not think like that.
*How to apply this verse in our daily life :*
1) When you intend to do something good, sometimes bad events can occur. Whether you do good or bad, good and bad will happen to all people. But how do you respond to bad events? Do you judge them that they might have done something wrong to deserve the bad event?
2) I recently met a family whose child was run over and killed by a drunken driver. The parents asked- why did this happen to our child? What sin have we committed? Is this because of the sins committed by our ancestors? Is this because we were originally from a vegetarian community? Others comment that you have some sin, or generational curse or some demonic possession and that is why all this happened to you. But it is not so.
3) Cancer or kidney failure does not affect sinners only. Many people who do the Lord's ministry wonderfully are also affected by difficult and bad circumstances.
4) We must remember that we were all sinners and we live only by the grace of God. We must not condemn others as sinners instead we must remind ourselves that we are sinners and that we must repent. Something ill might have happened to someone, then you must thank God because He has protected you from such a bad event. You must repent and turn to God for forgiveness.
*Prayer*
Most gracious and merciful Father! When something ill happens to someone intending good, may we never condemn them as evil. Instead, may we remind ourselves that You forgave us out of Your grace and mercy. Grant us the grace to lead our life with this realization. In the sweet name of Jesus, we bless and pray, Our living and Almighty Father. Amen! God bless you all.
*_WCF DD (World Christian Fellowship Daily Devotions)_*
*லூக்கா 13:5* *" அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் என்றார்."*
1) கர்த்தராகிய ஆண்டவர், மூன்றாவது வசனத்தை திரும்ப சொல்லுகிறார். முதல் இரண்டு வசனத்தில், ஆண்டவரை ஆராதிக்க வந்த போது தீட்டுபட்டு விட்டது. கலிலேயே மக்களில் இறந்து போனார்கள் அதனால் அவர்கள் மோசமானவர்களாக? என்று கேட்டுவிட்டு...
2) இரண்டாவதாக எருசலேமில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்லி எருசலேமில் இருக்கிறவர்களை காட்டிலும் மேலே சொன்னவர்கள் பாவிகளா..? என்று கேட்டுவிட்டு நீங்கள் மனம் திரும்புங்கள் என்கிறார்.
3) எருசலேமில் இருக்கிறவர்கள் தாங்கள் உயர்ந்தவர்கள்: தேவனுடைய பட்டணம் என்று சொல்லக்கூடிய எருசலேமில் இருக்கிறோம் : தேவனுடைய நகரம் என்று சொல்லக்கூடிய நகரத்தில் இருக்கிறோம். அது மாத்திரமல்ல இங்கு தான் தேவாலயம் இருக்கிறது என்று பெருமை பாராட்டக்கூடியவர்களாக அவர்கள் இருந்தனர்.
4) நீங்கள் மனம் திரும்புங்கள் அப்படி இல்லை என்றால் உங்கள் மேல் அழிவு வரும். மத்தேயு 23 :36,37. லூக்கா எழுதும் பொழுது இயேசு கிறிஸ்து எருசலேமை பார்த்து கண்ணீர் விட்டு அழுகிறார் என்று எழுதுகிறார்.
5) பருந்து வரும் பொழுது கோழி தன் குஞ்சுகளை காப்பாற்றுகிறதோ.. அதுபோல அழிவு வருவதற்கு முன்னதாக நீங்கள் மனம் திரும்புங்கள் என்றும் அற்புத அடையாளங்களின் மூலம் தான் தேவன் என்று காட்டுவதற்காக எத்தனையோ முறை உங்களை நான் அழைத்தேன் உங்களுக்கோ மனதில்லாமல் போய்விட்டது.
6) இப்பொழுது ஒரு கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது, வந்து சேர்ந்து விடுங்கள். இல்லையெனில் உங்களுக்கும் அதே சம்பவம் நடைபெறும் அன்றைக்கு கர்த்தர் சொன்னார். அவர்கள் மனம் திரும்பவில்லை. எருசலேம் அழிக்கப்பட்டது
7) இன்றைக்கு சரித்திரத்துக்கு இந்த பக்கம் இருக்கிற உங்களுக்கும் எனக்கும் அது ஒரு சாட்சியாக வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த செய்தியை கேட்டுக் கொண்டிருக்கிற நாம் ஒவ்வொருவரும் மனம் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது.
*நம் அன்றாட வாழ்வில் இந்த வசனத்தை எவ்வாறு பயன்படுத்துவது :*
1) ஆண்டவரை அறியாத மக்களிடம் போய் இயேசு கிறிஸ்துவை பற்றி சொன்னால், நான் நல்லவன் நான் யாருக்கும் எந்த தீமையும் செய்யவில்லை என்னால் இயன்ற உதவியை செய்கிறேன் என்று சொல்லக்கூடும்.
2) நாம் எல்லோரும் பாவிகள். கர்த்தர் கடனாக கொடுத்த கால அவகாச நேரத்தில் இருக்கிறோம். மனம் திரும்ப வேண்டும். எருசலேமில் உள்ள அத்தனை பேரிலும் 18 பேர் இறந்து போய் விட்டார்கள்.
3) உங்களுடைய சபையில் யாரோ ஒருவருக்கு மட்டும் துன்பம் / பாடு / போராட்டம் வந்து கொண்டே இருந்தால்...
உடனே அவர்கள் வாழ்க்கையில் பாவம் இருக்கிறது ஏதோ பரம்பரை சாபம் இருக்கிறது அல்லது மோசமான செயல்கள் அதனால் இப்படி ஆகிவிட்டது என்று நியாயம் தீர்த்து விடக்கூடாது.
5) உம்முடைய இரட்சணிய காலத்தில் / அனுக்கிரக காலத்தில் எங்களுடைய ஜெபத்தை கேட்டு எங்களை பாதுகாத்து இருக்கிறீர் எனவே உம்மோடு ஒப்புரவாகி விடுகிறேன் என்று சொல்லி ஜெபிக்க வேண்டும்.
6) இன்றைக்கு ஜீவனோடு எழும்பி இருப்பதே கர்த்தருடைய கிருபை. ஒரு புதிய நாளை காண்பதற்கு நீங்களும் நானும் என்ன செய்தோம்? நமக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த கால அவகாசத்தில் கர்த்தரோடு வாழ கற்றுக்கொள்வோமா..?
*ஜெபம்*
மகா கிருபையும் இரக்கமும் நிறைந்த எங்கள் அன்பின் தகப்பனே! நாங்கள் மனம் திரும்பவில்லை என்றால் அழிந்து விடுவோம் என்று எழுதி இருக்கிறது. ஆண்டவரே அதனால் இன்றைக்கு நாங்கள் எல்லோரும் மனம் திரும்பி உம்மோடு ஒப்புரவாகி உமக்குள் வாழக் கூடிய ஒரு கிருபையில் வாழ, எங்கள் தேவன் எங்களுக்கு கிருபையும் இரக்கமும் பாராட்ட வேண்டுமாய், இயேசு கிறிஸ்துவின் உன்னத நாமத்தில் ஆசீர்வதித்து ஜெபிக்கிறோம், எங்கள் ஜீவனுள்ள வல்ல பிதாவே! ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
*Luke 13:5* *"I tell you, no; but unless you repent you will all likewise perish"*
1) This is a repetition of verse 3. Lord Jesus quotes two current local news and asked if those affected were the worst sinners. The first incident is when Pilate defiled the sacrifice of the Galileans by mixing impure blood in it. The second incident is the fall of the tower of Siloam which killed eighteen people from Jerusalem.
2) The people of Jerusalem took pride in the fact that they lived in the city of God, where the temple of the Lord was situated and considered themselves superior. Jesus tells them to repent otherwise they will also perish.
3) Matthew 23:36- Assuredly, I say to you, all these things will come upon this generation. 37 "O Jerusalem, Jerusalem, the one who kills the prophets and stones those who are sent to her! How often I wanted to gather your children together, as a hen gathers her chicks under her wings, but you were not willing! 38 See! Your house is left to you desolate; 39 for I say to you, you shall see Me no more till you say, 'Blessed is He who comes in the name of the Lord!'" This is the lamentation of Jesus over Jerusalem.
4) Just like how a hen frantically gathers her chicks under her wings to protect them from eagles and kites, similarly Jesus weeps over Jerusalem to bring them under His refuge and save them from impending destruction. He revealed Himself as Lord several times through signs and wonders but the people did not regard it. He warns them that if they do not repent in the time that remains, they will also perish like the rest.
5) This is history for us. Just as Jesus warned, Jerusalem was destroyed because the people did not repent from their evil ways. This is a witness for you and me. Everyone hearing this message must understand why repentance is essential.
*How to apply this verse in our daily life :*
1) You might be thinking that you are a good person. If you talk to any unbeliever, they will say that they will make it to heaven because they have been good people, they helped whoever they could and did not do any evil to anyone.
2) But that's not true. We are all sinners. We are living in borrowed time that the Lord has graciously lent to us. We must repent this time.
3) Out of the many people in Jerusalem, eighteen of them died because the tower of Siloam fell. Similarly, there might be a brother or sister in your church, who is going through consecutive trials and difficult circumstances. That does not mean they are living a sinful life, or it is a generational curse or the consequence of their evil deeds. We must not judge them.
4) Instead we must be reconciled to God because the Lord has heard our prayer in the acceptable time and has protected us from such a bad event. You have woken up this morning because of the grace of God. Just recently, one of the sisters from Dubai, who transcribes the devotions, lost her husband due to a heart attack. Is this because of sin? No.
5) We have been allowed some time to repent and be reconciled. Shall we use it and learn to live with the Lord?
*Prayer*
Most gracious and merciful loving Father! As it is written that we will perish if we do not repent. Hence, today itself, we repent and want to be reconciled with You, to live with You. Grant us the grace needed for this. In the sweet name of Jesus, we bless and pray, Our living and Almighty Father. Amen! God bless you all.
*_WCF DD (World Christian Fellowship Daily Devotions)_*
*லூக்கா 13:6* *"அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை"*
1) கர்த்தராகிய இயேசு கிறிஸ்து லூக்கா 12 57-59 உள்ள வசனத்தில் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது, இந்த நேரத்திற்குள் நீங்கள் போய் கர்த்தரிடம் திரும்பி தண்டனையில் இருந்து உங்களை காத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிக் கொடுத்துவிட்டு அதற்கு இரண்டு உதாரணத்தையும் சொல்லுகிறார்.
2) ஒன்று பிலாத்து பலி செலுத்தும் போது அசுத்தமான ரத்தத்தை கலந்தது, இரண்டாவதாக சீலோவாம் குளம் கட்டும் பொழுது சிலர் மரித்ததை சொல்லிவிட்டு இதை விளக்குவதற்கு இன்னொரு உவமையை கர்த்தர் சொல்லிக் கொடுக்கிறார்.
3) எவ்வளவு ஒரு அருமையான ஆண்டவர். அத்தி மரத்தை உவமையாக சொல்லுகிறார். திராட்சை தோட்டத்திற்குள் அத்திமரம் என்பது இஸ்ரவேல் மக்களையும் தேசத்தையும் குறிக்கக் கூடியது.
4) ஏசாயா 5 :1 -7 வசனங்களை மிக அழகாக சொல்லுகிறார். 1,2 வசனம் இது ஒரு தனிப்பட்ட மனிதனை மாத்திரமல்ல : முழு தேசத்தையும் குறிக்கக் கூடியது. அத்தி மரத்தை நட்டி அதன் கனியை தேடும் போது அதில் ஒன்றும் இல்லை.
5) மத்தேயு 21:18. அத்தி மரத்தில் கனி இல்லாமல் இருக்கிறது- மனம் திரும்பியதோடு கனி உள்ள வாழ்க்கையாக இருக்க வேண்டும். அதுதான் நீங்கள் மனம் திரும்பினதற்கு அடையாளம் என்று காட்டிக் கொடுக்கிறார்.
*நம் அன்றாட வாழ்வில் இந்த வசனத்தை எவ்வாறு பயன்படுத்துவது :*
1) எப்படி அத்தி மரத்தை நட்டு, பாதுகாத்து, பராமரித்தாரோ.., அதேபோல உங்களையும் என்னையும் இந்த பூமியிலே உருவாக்கி, நம்மை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ரத்தத்தினால் கழுவி, மீட்டு வைத்திருக்கிறார்.
2) அதனால் நீங்களும் நானும் இரட்சிக்கப்பட்ட மக்கள் என்பதற்கு அடையாளம் - கனியுள்ள வாழ்க்கை. நியாயத்தீர்ப்பு நாளிலோ அல்லது கர்த்தருடைய வருகையிலோ நாம் கனியற்றவர்களாய் இருந்தால் மிகவும் பரிதபிக்ககூடியவர்களாக இருப்போம்.
3) மனம் திரும்புகிறேன் என்று சொல்லுவது மாத்திரமல்ல மனம் திரும்புதலுக்கான கனிகளை கொடுக்கக்கூடிய மக்களாகஇருக்க வேண்டும். மத்தேயு 3 :7 லிருந்து யோவான்ஸ்நானகன் ஞானஸ்நானம் கொடுக்கும் பொழுது பரிசேயர்கள்/ வேதபாரகர்களை பார்த்து, வரும் கோபத்துக்கு தப்பித்துக் கொள்ள உங்களுக்கு வகை தேடினவன் யார் மனம் திரும்பு என்கிறார்.
4) நல்ல கனிகொடாத மரம் எல்லாம் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும். மனம் திரும்பினதிற்கு அடையாளம் வாழ்க்கையில் கனி இருக்க வேண்டும். கனியில்லாத வாழ்க்கை மனம் திரும்பின வாழ்க்கை அல்ல.
5) கர்த்தர் நியாயத்தீர்ப்புக்கு வரும் போது மனந்திரும்பினதற்கு ஏற்ற கனிகளை வைத்திருக்கிறீர்களா? என்பதை பொருத்து தான் அந்த மரம் நியாயம் தீர்க்கப்படும்.
6) தனிப்பட்ட மனிதனாக இருந்தாலும் தேசமாக இருந்தாலும் அப்படித்தான் நியாயம் தீர்க்கப்படும்.
*ஜெபம்*
மகா கிருபையும் இரக்கமும் நிறைந்த எங்கள் அன்பின் தகப்பனே! இந்த செய்தியை கேட்டுக் கொண்டிருக்கிற எனக்கு அருமையான சகோதர சகோதரிகள் ஒவ்வொருவரும் கனியுள்ள வாழ்க்கை / கனி தரும் வாழ்க்கை வாழக்கூடியவர்களாக, ஆவியின் கனிகளான அன்பு, சந்தோஷம், சமாதானம், இச்சை அடக்கம், மனத் தாழ்மை என்று சொல்லக் கூடிய ஒன்பது கனி சுவைகளையும் உடையவர்களாக வாழ எங்கள் தேவன் இவர்களுக்கு கிருபை பாராட்ட வேண்டுமாய் இயேசு கிறிஸ்துவின் உன்னத நாமத்தில் ஆசிர்வதித்து ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள வல்ல பிதாவே! ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!.
*Luke 13:6* *"He also spoke this parable: "A certain man had a fig tree planted in his vineyard, and he came seeking fruit on it and found none."*
1) In Luke 12:57-59, Jesus says that while we have a borrowed time we should repent and be reconciled to God so that we will be saved from destruction. He gave two examples, one where Pilate mixed impure blood in the sacrifices offered by the Galileans. Secondly, He spoke about eighteen people who were killed when the tower of Siloam fell. To reinforce His message, Jesus, our good God, tells another parable.
2) The people of Israel are very familiar with the imagery of a fig tree in a vineyard because it relates to them and their country. Isaiah 5: 1-3, Now let me sing to my Well-beloved, a song of my Beloved regarding His vineyard: My Well-beloved has a vineyard on a very fruitful hill. 2 He dug it up and cleared out its stones, and planted it with the choicest vine. He built a tower in its midst, and also made a winepress in it; so He expected it to bring forth good grapes, But it brought forth wild grapes. 3 "And now, O inhabitants of Jerusalem and men of Judah, judge, please, between Me and My vineyard".
3) A fig tree in a vineyard is created by the Lord and it signifies Israel, both as an individual and a nation.
4) When God searched for fruit in the fig tree He planted, He found none. Matthew 21:18- Now in the morning, as He returned to the city, He was hungry. 19 And seeing a fig tree by the road, He came to it and found nothing on it but leaves, and said to it, "Let no fruit grow on you ever again". Immediately the fig tree withered away.
5) After you repent, your life must bear fruit. That is evidence of your repentance.
*How to apply this verse in our daily life :*
1) Just as the Lord planted, protected and preserved the fig tree, God created you and me, He planted us on earth and redeemed us with the blood of Christ. The evidence of being saved is a life that bears fruit. It would be very pitiable when the Lord returns and finds us without fruit. Just saying that you repent is not enough. We must bear fruits worthy of repentance.
2) When the Pharisees and Sadducees came to take baptism, John the Baptist said, Matthew 3:7- "Brood of vipers! Who warned you to flee from the wrath to come? 8 Therefore bear fruits worthy of repentance, 10 And even now the ax is laid to the root of the trees. Therefore every tree which does not bear good fruit is cut down and thrown into the fire.
3) We must not consider ourselves as good but we must learn to repent. And then we must live bearing fruits worthy of repentance. So when the Lord sees us on Judgement day, He will judge us according to our fruits of repentance. This applies for an individual as well as a nation.
*Prayer*
Most gracious and merciful loving Father! Let every dear brother and sister hearing this message, live their lives bearing the nine fruits of the Spirit- love, joy, peace, longsuffering, kindness, goodness, faithfulness, gentleness, self-control. Grant them the grace needed for this. In the sweet name of Jesus, we bless and pray, Our living and Almighty Father. Amen! God bless you all.
*_WCF DD (World Christian Fellowship Daily Devotions)_*
*லூக்கா 13:7* *" அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடிவருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான்."*
1) அத்தி மரத்தை நட்டு, தோட்டக்காரனை வைத்து பராமரிக்கிறார். ஏசாயா 5வது அதிகாரத்தில்.. கல்லை எடுத்துப் போட்டு வேலி அடைத்து நற்குல திராட்சை செடியை வைத்திருக்கிறார். ஒரு ஆலையை கட்டி வைக்கிறார். பாதுகாப்பதற்கு ஒரு தோட்டக்காரனையும் வைத்திருக்கிறார்.
2) அப்படி இருந்தும் அந்த அத்திமரம் கனி கொடுக்கவில்லை. மூன்று வருட காலமாக இந்த அத்தி மரத்தில் கனியை தேடுகிறேன் என்பதாக ஆண்டவர் சொல்லுகிறார்.
3) கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூன்று வருடமாக இஸ்ரவேலிலே ஊழியம் செய்கிறார். அவருடைய மூன்று வருட காலங்கள் இஸ்ரவேலுக்கு தான் யார் என்று சொல்கிறார்.
4) மூன்று வருட காலமாக அத்திமரத்தில் கனியை தேடுகிறேன் ஒன்றுமே இல்லை. அதனால் இதை வெட்டி போடு. அத்திமரம் நிலத்தில் உள்ள சத்துக்களை / தண்ணீரை எடுத்துக் கொள்கிறது. இடத்தை அடைக்கிறது, பூமியை கெடுக்கிறது.
5) பஸ்கா பண்டிகைக்கு வந்து மரணம் அடையும் அந்த வாரத்தில் எருசலேமுக்கு வருகிறார். பெத்தானியாவில் தங்கி விட்டு காலையில் எருசலேமுக்கு வரும்பொழுது தான் வழியில் அத்தி மரத்தை பார்த்து அதை சபிக்கிறார். மத்தேயு -21.
6) கர்த்தர் அத்திமரத்தை ஒரு உவமானமாக சொல்லுகிறார். இஸ்ரவேல் மக்களுக்கு நான் மூன்று வருட காலமாக பிரசங்கம் செய்கிறேன். இவர்கள் மனம் திரும்பி அதற்கான கனிகளை கொடுக்கவில்லை. அவர்களை நான் அழிக்கப் போகிறேன் என்கிறார்.
*நம் அன்றாட வாழ்வில் இந்த வசனத்தை எவ்வாறு பயன்படுத்துவது :*
1) இஸ்ரவேல் தேச மக்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மாம்ச பிரகாரமாக மூன்று வருட காலம் ஊழியம் பார்த்தார். அதற்குப் பிறகு இஸ்ரவேல் தேசத்தின் மீது ஒரு நியாய தீர்ப்பு வருவதை பார்க்கிறோம்.
2) ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இன்றைக்கு ஆவியானவராக, அனேக ஊழியர்களின் மூலமாகவும் நம்முடைய இந்த ஊழியத்தின் மூலமாகவும் நாம் மனம் திரும்பினதற்கு ஏற்ற கனிகளை கொடுக்க கூடியவர்களாக இருக்க வேண்டும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
3) சபையின் காலம் என்று சொல்லப்படும் இந்த காலம் கிட்டத்தட்ட 2000 வருடங்களாக கதவு திறக்கப்பட்டு இருக்கிறது. கதவு எப்பொழுது அடைக்கப்படும் என்பது தெரியாது. உங்களுடைய கதவு உங்களுக்கு எப்பொழுது அடைக்கப்படும் என்று தெரியாது.
3) நாம் எல்லோரும் மரணம் அடைவதும் நியாயத் தீர்ப்பை சந்திப்பதும் நியமிக்கப் பட்டிருக்கிறது-எபிரேயர் 9 27.
4) ஒன்று கர்த்தர் வரும் பொழுது நம்முடைய கதவு அடைக்கப்படும், அல்லது நாம் இந்த பூமியில் மரணிக்கும் பொழுது அந்த கதவு அடைக்கப்படும். எது முதலில் நடக்கும் என்பது நமக்கு தெரியாது.
5) நாளைக்கு ஜீவனோடு இருப்போமா என்பது யாருக்கும் உறுதி கிடையாது. நாளைய தினத்தை காண்பது நிச்சயம் இல்லை. அதனால் இன்றைக்கு தேவனுடைய சத்தத்தை கேட்கும் பொழுது மனம் திரும்பி அதற்கு ஏற்ற கனிகளை கொடுக்க கூடியவர்களாக வரும்போது...
6) அவர் வரும்போது அவரோடு இருக்கிற மக்களாக காணப்பட வேண்டும். உங்களுடைய முடிவு எப்பொழுது என்று உங்களுக்கு தெரியாது ஆனால் முடிவை நிர்ணயிக்க கூடிய பொறுப்பு உங்களிடம் இருக்கிறது. நீங்கள் மனம் திரும்பி கனி கொடுக்கக் கூடியவர்களாக மாறுவீர்களா?
*ஜெபம்*
மகா கிருபையும் இரக்கமும் நிறைந்த எங்கள் அன்பின் தகப்பனே, நிலையற்ற வாழ்க்கையில் இருக்கிறோம். எங்களுடைய மரணம் எப்பொழுது என்று எங்களுக்கு தெரியாது. எங்களுக்கு மரணம் நியமிக்கப்பட்டிருக்கிறது என்பது மாத்திரம் தெரியும். அதனால் நாங்கள் மனம் திரும்பி அதற்கு ஏற்ற கனிகளை கொடுக்க கூடிய மக்களாய் வாழ, எங்கள் தேவன் கிருபையும் இர க்கமும் பாராட்ட வேண்டுமாய், இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஆசிர்வதித்து ஜெபிக்கிறோம், எங்கள் ஜீவனுள்ள வல்ல பிதாவே! ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!.
*Luke 13:7* *"Then he said to the keeper of his vineyard, 'Look, for three years I have come seeking fruit on this fig tree and find none. Cut it down; why does it use up the ground?'"*
1) The fig tree was planted and maintained by a gardener.
In Isaiah 5th chapter, He dug it up and cleared out its stones, And planted it with the choicest vine. He built a tower in its midst, And also made a winepress in it; So He expected it to bring forth good grapes, But it brought forth wild grapes.
2) Even so, the fig tree did not bear fruit. The Lord says that I have been looking for fruit on this fig tree for three years.
3) The Lord Jesus Christ has been ministering in Israel for three years. In that three-year He showed and proved to Israel who He is.
4) He have been looking for fruit on the fig tree for three years and there is none. So cut this out. The fig tree absorbs nutrients/water from the soil. Clogs space, spoils the earth.
5) He came to Jerusalem during the week of Passover for His death. After staying in Bethany and coming to Jerusalem in the morning, He saw a fig tree on the way and cursed it- Matthew -21.
6) The Lord speaks of the fig tree as a parable. I have been preaching to the people of Israel for three years. They did not repent and did not bear the fruits for it. He said I am going to destroy them.
*How to apply this verse in our daily life :*
1) The Lord Jesus Christ ministered to the nation of Israel for three years in the flesh. After that we saw a righteous judgment came upon Israel.
2) But the Lord Jesus Christ today as a Spirit, through many servants and through this ministry of ours saying that, we should be the give fruits for our repentance.
3) The door has been open for almost 2000 years in this period called the church age. We don't know when the door will be closed.
4) We are all appointed to death and judgment - Hebrews 9:27.
5) Door will be closed when the Lord comes or when we die on this earth. We do not know which will happen first.
6) No one is sure whether we will be alive tomorrow. Seeing tomorrow is not certain. So today when we listen to God's voice, we turn our hearts and bear the fruits for repentance.
7) We need to be the people who will be with Him when He comes. You don't know your end but you can choose how that end will be whether it is eternity or hell and you have the responsibility to take the decision. Will you repent and become fruitful?
*Prayer*
Our loving Father of great grace and mercy, we are in a transient life. We do not know when our death will be. We only know that death is appointed for us. Help us to repent and live as people who will bear fruit for You, We bless and pray in the sweet name of Jesus Christ, our living mighty Father! Amen. May the Lord bless you!
*_WCF DD (World Christian Fellowship Daily Devotions)_*
*லூக்கா 13:8* *"அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன், "*
1) ஒரு உண்மையான ஊழியக்காரனின் அடையாளத்தை பாருங்கள். எஜமான் சொல்லுகிறார் கனி கொடாத மரத்தை வெட்டிப் போட்டு விடுவோம், இதில் கனி ஒன்றும் இல்லை என்கிறார்.
அந்த உண்மையான ஊழியகாரனோ., ஐயா, இன்னும் ஒரு வருடம் இருக்கட்டும் இதை சுற்றிலும் கொத்தி எரு போடுகிறேன்.அதாவது நான் இன்னும் வேத வசனங்களை ஆண்டவருடைய காரியங்களை அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறேன் என்கிறார்.
2) நினிவே பட்டணத்தில் உள்ள மக்களுடைய அக்கிரமம் பெருகிற்று. ஆனால் கர்த்தர் அவர்களை அழிக்க விரும்பவில்லை. நம் தேவன் மனதுருக்கமும், நீடிய பொறுமை உள்ள தேவன்.
3) யாத்திராகமம் 20, எண்ணாகமம் ஆகிய புத்தகங்களில் அவருடைய கிருபை, இரக்கம், நீடிய பொறுமை ஆகியவற்றுக்கு முடிவு/அளவு இல்லை, அவைகள் நாள்தோறும் புதிதாகின்றன என்பதை திரும்பத் திரும்ப பார்க்க முடிகிறது.
4) யோனாவை ஆண்டவர் நினிவே பட்டணத்திற்கு போக சொல்லுகிறார். ஆனால் யோனா எதிர் திசையில் உள்ள தர்ஷீசு பட்டினத்துக்கு போகும் போது கடலில் தூக்கி போடப்பட்டு மறுபடியும் நினிவே பட்டிணத்திற்கு வந்து கர்த்தர் இந்த பட்டணத்தை அழிக்க போகிறார் என்று பிரசங்கம் செய்கிறார்.
5) அங்குள்ள மக்கள் 40 நாள் உபவாசம் இருந்து மனம் திரும்புகின்றனர். ஆனால் யோனாவோ நினிவேயின் அழிவுக்காக காத்திருக்கிறார். ஆண்டவர் அங்கு காட்டத்தி செடியை நிழலுக்காக யோனாவுக்கு கொடுத்து அடுத்த நாள் அந்த செடி பட்டு போன உடன் மிகவும் வேதனைப்படுகிறார்.
6) அப்பொழுது ஆண்டவர் யோனாவை பார்த்து, ஒரு அத்தி செடிக்காக இவ்வளவு கவலைப்படும் பொழுது, வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் தெரியாத இந்த மக்களுக்காக நான் கவலைப்பட மாட்டேனோ என்றவுடன் யோனா, ஆண்டவரே! நீர் இரக்கத்தில் ஐஸ்வர்யாவான், மனதுருக்கம் உள்ளவர் என்கிறார்.
7) எனவே அவரை வெளிப்படுத்தக்கூடிய மக்களாக வாழ்கிற நாம், அவருக்கு ஊழியம் செய்யக்கூடிய மக்களாக இருக்கிற நாம், கர்த்தர் மூலமாக வந்து சேருங்கள் என்று சொல்லக்கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும். எபிரேயர் 7: 25 கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாக ஆண்டவரிடம் வந்து சேரக்கூடிய மக்களாக இருக்க ஆண்டவர் நம்மை அழைக்கிறார்.
*நம் அன்றாட வாழ்வில் இந்த வசனத்தை எவ்வாறு பயன்படுத்துவது :*
1) ஒரு சிலர் யோனா போல ஊழியம் செய்கிற மக்களாக இருக்கலாம். ஆண்டவர் இவர்களை நியாயம் தீர்க்க போகிறார், அழிக்கப் போகிறார் என்ற சொல்கிற மக்களாக இருக்கலாம். நம்மை மன்னித்தார் நமக்கு ஒப்புரவாகுதலை கொடுத்தார் என்பதை மறந்து விடக்கூடாது Iகொரி 5.
2) நாம் மற்றவர்களுக்காக கெஞ்ச கூடியவர்களாக, அவர்கள் தேவனோடு ஒப்புரவாகுங்கள் என்று கேட்கக்கூடிய மக்களாக என்று சொல்வதை தான் ஆண்டவர் விரும்புகிறார்.
3) நீங்களும் நானும் கனியில்லாத மக்களை பார்த்து, ஆண்டவரோடு சேர்ந்து வாழுங்கள், கனி கொடுக்கக்கூடிய மக்களாக வாழுங்கள் என்று மற்றவர்களுக்கு பிரசங்கிக்கிறவர்களாய் போதிக்கிறவர்களாய் வரும் பொழுது கர்த்தருக்கேற்ற காரியங்களை கிரியைகளை நடத்துகிறவர்களாக வருகிறோம்.
4) உங்களுக்கும் எனக்கும் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு முதலில் நாம் ஒப்புரவாக வேண்டும். மற்றவர்களை தேவனோடு ஒப்புரவாக்கும் ஊழியத்தை செய்ய வேண்டும். அதற்குத் தான் தேவன் நம்மை தெரிந்து கொண்டிருக்கிறார்.
5) அதனால் ஆண்டவரே! உம்மோடு நாங்கள் ஒப்புரவாகிவிட்டோம். கனிக்கொடாத மற்ற மக்களையும் உம்மோடு ஒப்புரவாக்கி அவர்களும் உமக்கு பிரயோஜனம் உள்ள மக்களாக வாழ வேண்டும் என்று சொல்லி, மற்றவர்களுக்காக ஜெபிக்க கூடியவர்களாய் / போதிக்க கூடியவர்களாய் வாழ்வோம்.
*ஜெபம்*
மகா கிருபையும் இரக்கமும் உள்ள தகப்பனே!. எங்களை இரட்சித்தீர். எங்களுக்கு கிருபை பாராட்டினீர். அந்த கிருபையையும் இரக்கத்தையும் நாங்கள் மற்றவர்களுக்கு காட்ட எங்கள் தேவன் எங்களுக்கு கிருபையும் இரக்கமும் பாராட்டுங்கள். ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை உண்மையும் உத்தமமுமாய் செய்யக் கூடிய ஒரு கிருபையில் தேவன், எங்களை வழி நடத்த வேண்டுமாய் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஆசிர்வதித்து ஜெபிக்கிறோம், எங்கள் ஜீவனுள்ள வல்ல பிதாவே! ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
*Luke 13:8* *"But he answered and said to him, 'Sir, let it alone this year also, until I dig around it and fertilize it"*
1) We can see the sincerity of the gardener. The Master says to cut down the fruitless tree as there is no fruit in it.
Then that true servant, Sir, let it be one more year and I will fertilize. That is, I will still teach them the scriptures and the things of the Lord.
2) The wickedness of the people in the city of Nineveh has increased. But the Lord did not want to destroy them. Our God is a merciful and long-suffering God.
3) In Exodus 20 and Numbers we see again and again that His grace, mercy and longsuffering have no end/measure and are renewed daily.
4) The Lord told Jonah to go to the city of Nineveh. But when Jonah goes to Tarshish which was in the opposite direction, he was thrown into the sea and comes back to Nineveh and preaches that the Lord is going to destroy this city if they will not repent.
5) People repented and fasted for 40 days. But Jonah awaits the destruction of Nineveh. The Lord showed Jonah a plant for shade and the next day the plant died and he was very distressed.
6) Then the Lord looked at Jonah and said, "You have had pity on the plant for which you have not labored, nor made it grow, which came up in a night and perished in a night. And should I not pity Nineveh, that great city, in which there are more than one hundred and twenty thousand persons who cannot discern between their right hand and their left—and much livestock?". Jonah says that You are rich in mercy and compassion.
7) So we who live as people who can reveal Him, we who are people who serve Him, we must be those who can say, Reconcile with God through the Lord Jesus Christ. Hebrews 7:25 The Lord calls us to be a people who can come to Him through the Lord Jesus Christ.
*How to apply this verse in our daily life :*
1) A few may be ministering nowadays like Jonah. They may be people who say that the Lord is going to judge them and destroy them. Let us not forget that He forgave us and gave us reconciliation I Cor 5.
2) The Lord wants us to be people who can plead for others and ask them to be reconciled to God.
3) While we come across the unfruitful people, we need to teach them that they should live with the Lord and live as fruit-bearing people, then we will become as those who do things for the Lord.
4) First thing we need to reconcile with God. We should do the ministry of reconciliation for others to God. For that only God chose us.
5) Lord! We are reconciled with You. Help us to bring others to You and help them to reconcile with You. Help us to live as people who pray for others and teach.
*Prayer*
Father of great grace and mercy! You saved us. You provided grace for us. Help us to show that grace and mercy to others. We pray in the sweet name of Jesus Christ that God will guide us in a grace that we can do the ministry of reconciliation faithfully and perfectly, our living mighty Father! Amen. May the Lord bless you.
*_WCF DD (World Christian Fellowship Daily Devotions)_*
*லூக்கா 13:9* *"கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார். "*
1) கர்த்தர் கொடுத்த இந்த கால அவகாசத்திற்குள் மனம் திரும்பி உங்கள் வாழ்க்கை கனி கொடுக்கக்கூடிய வாழ்க்கையாக இருந்தால் நீங்கள் தேவனுடைய பிரசன்னத்தில் எப்பொழுதும் வாழலாம். இல்லையென்றால் நித்திய நரகத்தில் வேதனையை அனுபவிப்பீர்கள் என்ற என்பதைத் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்று சொல்லிக் கொடுக்கிறார்.
2) மத்தேயு 3:8 மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகள் இல்லை என்றால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். நல்ல மரம் கெட்ட கனியை கொடுக்காது; கெட்ட மரம் நல்ல கனியை கொடுக்காது என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மலைப் பிரசங்கத்தில் சொல்லிக் கொடுக்கிறார்.
3) கனிகளினால் மரத்தை அறிவீர்கள்.
யோவான் 15 :2. என்னில் நிலைத்திருங்கள், அப்பொழுது கனிகள் கொடுப்பீர்கள்.
யோவான் 15 :6. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒரு திராட்சை செடி, அவருக்குள் நீங்கள் நிலைத்திருக்கும் பொழுது கனி கொடுப்பீர்கள்.
4) அவருக்குள் நிலைத்திருக்கவில்லையென்றால் உலர்ந்து போய் விடுவீர்கள். உலர்ந்து போனவைகளை எல்லாம் சேர்த்து வைத்து அக்கினியில் தீயிட்டு கொளுத்துவர். நியாய தீர்ப்பு நாளில் நியாயம் தீர்க்கப்பட்டு நரக வேதனையை அனுபவிக்க அனுப்பப்படுவீர்கள் என்பதைத் தான் சொல்லுகிறார்.
5) எனவே இஸ்ரவேல் தேச மக்களே, இப்பொழுது உங்களுக்கு அனுக்கிரக காலம் / இரட்சணிய காலம். இந்த காலகட்டத்திற்குள் நீங்கள் மனம் திரும்பி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளுங்கள் அப்படி ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நீங்கள் நித்திய நரக அக்கினிக்குள் போய்விடுவீர்கள்.
*நம் அன்றாட வாழ்வில் இந்த வசனத்தை எவ்வாறு பயன்படுத்துவது :*
1) நமக்கும் இதே எச்சரிப்பு தான். இந்த எச்சரிப்பை நாம் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக எடுத்துக் கொள்வதில்லை. காரணம் என்னவெனில், நம் தலைமுறையில் கர்த்தர் வருவாரா என்பது நமக்கு தெரியாது, அடுத்த தலைமுறையில் வருவாரா என்பதும் தெரியாது.
2) பேதுரு எழுதும்போது அவர் தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறார்கள். 2000 வருடமானதினால் இன்றைக்கும் அநேகர் கேலியாக, உங்கள் கர்த்தர் வருவாரா வரமாட்டாரா என்று சொல்லுகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
3) ஆனால் அதற்கு முன்பாக மரணம் நிச்சயிக்கப்பட்டு விட்டால் என்ன செய்வீர்கள்?. நம் எல்லோருடைய சரீரமும் அழிவை நோக்கி போய்க் கொண்டு இருக்கிறது. இந்த செய்தியை சொல்லுகிற நானும் கேட்கிற நீங்களும் மரணத்தை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறோம்.
4) மரணம் / வியாதி / கொடுமையான காரியம் எப்பொழுது என்பது நமக்கு தெரியாது. மரணம் என்பது நிச்சயம். மரணத்திற்கு பின்பாக என்ன நடக்கப் போகிறது, நீங்கள் எப்படி நியாயம் தீர்க்கப்பட போகிறீர்கள். நீங்கள் எப்படி கர்த்தர் முன்னால் போய் நிற்க போகிறீர்கள். அதைத்தான் ஆண்டவர் சொல்லிக் கொடுக்கிறார்.
5) மரணத்திற்கு பின்பு நீங்கள் எதையும் செய்ய முடியாது. ஜீவனோடு இருக்கும்nபோதே கால அவகாசம் இருக்கும் பொழுது கர்த்தரை ஏற்றுக் கொண்டு மனம் திரும்பி, ஒப்புரவாகும் பொழுது, நீங்கள் கனி கொடுக்கக் கூடிய மக்களாக மாறுவீர்கள். அது கர்த்தருக்கு பிரியம் உள்ள காரியமாக மாறும்.
6) எபிரேயர் 3ம் அதிகாரத்தில் திரும்பத் திரும்ப சொல்லுகிறார். இன்றைக்கு அவருடைய சத்தத்தை கேட்பீர்களாகில் உங்கள் இருதயத்தை கடினப்படுத்தாதீர்கள். உங்கள் இருதயத்தை கடினப்படுத்தாமல் கர்த்தரை ஏற்றுக் கொண்டு மனம் திரும்பி கனி கொடுத்து சந்தோசமாக வாழ்வீர்களா?.
*ஜெபம்*
மகா கிருபையும் இரக்கமும் நிறைந்த எங்கள் அன்பின் தகப்பனே! கர்த்தாவே இந்த அருமையான நல்ல நாளுக்காக நன்றி. இந்த செய்தியை கேட்டுக் கொண்டிருக்கிற எனக்கு அருமையான சகோதர சகோதரிகள் ஒவ்வொருவரும் இந்த காலகட்டத்தில் உம்மை ஏற்றுக்கொண்டு மனம் திரும்புதலுக்கான கனிகளை கொடுக்கக் கூடியவர்களாய் வாழ வளர எங்கள் தேவன் கிருபையும் இரக்கமும் பாராட்ட வேண்டுமாய் இயேசு கிறிஸ்துவின் உன்னத நாமத்தில் ஆசிர்வதித்து ஜெபிக்கிறோம், எங்கள் ஜீவனுள்ள வல்ல பிதாவே!, ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!.
*Luke 13:9* *"And if it bears fruit, well. But if not, after that you can cut it down"*
1) The Lord Jesus Christ explained that, If you repent and live fruitful life within this borrowed time given by the Lord then you will always live in the presence of God. Otherwise you will suffer in eternal torment hell.
2) Matthew 3:8 Therefore bear fruits worthy of repentance -"even now the ax is laid to the root of the trees. Therefore every tree which does not bear good fruit is cut down and thrown into the fire".
In the Sermon on the Mount, Lord Jesus Christ mentioned, A good tree does not bear bad fruit; a bad tree does not bear good fruit.
3) You know a tree by its fruits.
John 15:2- Every branch in Me that does not bear fruit He takes away; and every branch that bears fruit He prunes, that it may bear more fruit..
John 15:6-If anyone does not abide in Me, he is cast out as a branch and is withered; and they gather them and throw them into the fire, and they are burned.
4) So now is a good time / a time of salvation for you people of the land of Israel. If you do not repent and accept the Lord Jesus Christ within this period, you will end up in eternal hell fire.
*How to apply this verse in our daily life :*
1) We also have the same warning. We do not take this warning too seriously. The reason is that we do not know whether the Lord will come in our generation or in the next generation.
2) 2 Peter 3:9 -The Lord is not slack concerning His promise, as some count slackness, but is longsuffering toward us, not willing that any should perish but that all should come to repentance.
2000 years later, even today there are many people who mockingly say that your Lord will come or not.
3) But what will you do if death is certain before that?. All our bodies are going towards destruction. You and I are going towards death.
4) We don't know when death / illness / terrible things will happen. Death is certain. What is going to happen after death and how are you going to be judged? How are you going to stand before the Lord? That is what the Lord teaches.
5) After death you cannot do anything. While still alive, when there is time, when you accept the Lord and repent, when you repent and reconcile with God then you will become a fruitful person.
6) He repeats it in Hebrews chapter 3-"Today, if you will hear His voice, Do not harden your hearts as in the rebellion". Shall we not harden our heart, and accept the Lord and repent and bear fruit and live happily?.
*Prayer*
Father of our love, full of great grace and mercy!. Lord, thank you for this wonderful good day. My dear brothers and sisters who are listening to this message, Help us to accept You in this period and grow up, to live as people who can bear the fruits of repentance, We seek Your grace and mercy, we bless and pray in the mighty name of Jesus Christ, our living mighty Father!, Amen. May the Lord bless you!
*_WCF DD (World Christian Fellowship Daily Devotions)_*
*லூக்கா 13:10* *" ஒரு ஓய்வுநாளில் அவர் ஜெபஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார். "*
1) யூதர்கள் ஏழாவது நாள் ஓய்ந்து இருந்து ஜெப ஆலயத்தில் கூடியிருப்பார்கள்.
2) வெள்ளி கிழமை பிற்பகல் 6 மணி முதல் சனி கிழமை பிற்பகல் 6 மணி வரை ஓய்ந்து இருப்பார்கள்.
3) ஒய்வு நாளில் தேவனுடைய வார்த்தையை போதிப்பது கர்த்தருடைய வழக்கம் -மாற்கு 1:21 , 2:28 & 3: 1 மற்றும் மத்தேயு 12:2-10
*நம் அன்றாட வாழ்வில் இந்த வசனத்தை எவ்வாறு பயன்படுத்துவது :*
1) நாம் வாரத்தின் முதலாம் நாள் தேவனை ஆராதிக்கிறோம், இயேசு உயிர்த்தெழுந்த நாளில் அவரை தொழுது கொள்கிறோம்.
2) போதகம் பண்ண வேண்டும் (கற்பிப்பது அல்ல) - தேவனுடைய வசனம் என்ன சொல்கிறது, அதை நாம் எப்படி அறிந்து / புரிந்து கொள்ள வேண்டும் , அதை எப்படி நம் வாழ்வில் அப்பியாசப்படுத்தி கொள்ள வேண்டும் என்பதை சொல்லி கொடுக்க கூடிய காரியம்.
*ஜெபம்*
மகா கிருபையும் இரக்கமும் நிறைந்த எங்கள் அன்பின் தகப்பனே!.இந்த அருமையான நல்ல நாளுக்காய் நன்றி ஆண்டவரே.வாரத்தின் முதலாம் நாள் நாங்கள் உயிரோடு எழுந்த எங்கள் ரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை ஆராதிக்க / கொண்டாட நாங்கள் கூடி வருகிறோம் என்பதை நாங்கள் புரிந்து, நாங்கள் கருத்தோடும் ஆவியோடும் உண்மையோடும் உம்மை ஆராதிக்க
எங்கள் தேவன் கிருபை பாராட்ட வேண்டுமாய் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஆசீர்வதித்து ஜெபிக்கிறோம், ஜீவனுள்ள வல்ல பிதாவே! ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
*Luke 13:10* *"Now He was teaching in one of the synagogues on the Sabbath"*
1) On the seventh day, Jews people rest and gather in the synagogue.
2) They rest from Friday 6 PM to Saturday 6 PM .
3) Our Lord Jesus Christ has the habit to teach God's word on the Sabbath - Mark 1:21, 2:28 & 3:1 and Matthew 12:2-10
*How to apply this verse in our daily life :*
1) We worship God on the first day of the week and we pray to Him on the day of our Lord Jesus rose from the dead.
2) To preach (not teach) - To preach what God's Word says, how we should know/understand it, and how we should apply it in our lives.
*Prayer*
Father of love and full of great grace and mercy!, Thank you Lord for this wonderful day. On the first day of the week we gather to worship/celebrate our risen Savior Jesus Christ, we worship You in spirit and truth.
We pray in the sweet name of Jesus Christ, our living mighty Father! Amen. May the Lord bless you.
*_WCF DD (World Christian Fellowship Daily Devotions)_*
*லூக்கா 13:11* *"அப்பொழுது பதினெட்டுவருஷமாய்ப் பலவீனப்படுத்தும் ஆவியைக்கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள். "*
1) ஒரு மனுஷனை நிமிர்ந்து பார்க்க முடியாதபடி, கூனியாக மாற்ற கூடிய ஒரு பிசாசுவினுடைய காரியம். அந்த ஸ்திரி பார்த்ததெல்லாம் மண்ணுக்கடுத்த காரியம்.
2) தேவனுடைய காரியங்களை அறிந்து கொள்ள முடியாதபடி, நம்மை பலவீனப்படுத்த / கட்டி வைக்க கூடியவன் இந்த பிரபஞ்சத்தை ஆளுகிற சாத்தான்.
3) 2 கொரி 4:4 -தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.
4) ஆவிக்குரிய முறையில், ஆண்டவரை அறியாத மக்கள் ஆண்டவரை காண முடியாதபடி உலக பிரகாரமான காரியங்களில் சாத்தான் அமுக்க கூடிய கிரியை இன்றைக்கும் நடக்கிறது.
*நம் அன்றாட வாழ்வில் இந்த வசனத்தை எவ்வாறு பயன்படுத்துவது :*
1) கொலோசெயர் 3:2 பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்
2) நம்மில் எத்தனை பேர் மேலானவைகளை நோக்குகிறோம்?. பூமிக்கடுத்த காரியங்களுக்காக வாழ கூடிய கிறிஸ்தவர்கள் அநேகர் உண்டு.
3) உங்கள் வாழ்க்கையின் முக்கிய நோக்கம் பூமியில் பெரிய வீடு அல்லது பெரிய கார் வாங்குவதா? அல்லது தேவனை அறிந்து கொள்வதில் மக்கள் வளர வேண்டும் / என்னுடைய பார்வையெல்லாம் பரலோக பார்வையாக இருக்க வேண்டும் / நான் தேடுவதெல்லாம் தேவனுடைய ராஜ்யமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வாழுகிறீர்களா?
4) நீங்கள் பிசாசினால் அமுக்கபட்டிருக்கிறீர்களா அல்லது விடுதலை செய்யப்பட்டிருக்கிறீர்களா என்பதை நீங்களே உங்களை சோதித்து பாருங்கள்.
*ஜெபம்*
மகா கிருபையும் இரக்கமும் நிறைந்த எங்கள் அன்பின் தகப்பனே! இதோ இந்த செய்தியை கேட்டுக் கொண்டிருக்கிற ஒவ்வொருவரும் பூமிக்கடுத்தவளையல்ல மேலானவைகளை நோக்குகிறவர்களாய் வாழ எங்கள் தேவன் கிருபை பாராட்ட வேண்டுமாய் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஆசீர்வதித்து ஜெபிக்கிறோம், ஜீவனுள்ள வல்ல பிதாவே! ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
*Luke 13:11* *"And behold, there was a woman who had a spirit of infirmity eighteen years, and was bent over and could in no way raise herself up"*
1) Devil spirit weakens a man into a crooked person so that he cannot look up. This woman saw only floor and sand only.
2) Satan, the one who rules this universe, weakens/binds people so that we cannot know the things of God.
3) 2 Cor 4:4 - "whose minds the god of this age has blinded, who do not believe, lest the light of the gospel of the glory of Christ, who is the image of God, should shine on them".
4) The spiritual meaning is that Satan still blind fold the people who do not know the Lord so that they cannot see the Lord.
*How to apply this verse in our daily life :*
1) Colossians 3:2 "Set your mind on things above, not on things on the earth"
2) How many of us set our mind on things above?. There are many Christians who focus only on earthly things.
3) What is your main purpose in life? Buying the biggest house on earth or the biggest car? Or do you live with the intention that people should grow in knowing God / All my vision should be heavenly vision / All I seek should be the kingdom of God?
4) Examine yourself whether you are oppressed by the devil or set free?.
*Prayer*
Father of our love, full of great grace and mercy! We pray in the sweet name of Jesus Christ that everyone who is listening to this message will live as people who look to things for above and not to the world, Almighty Father!. Amen. God bless you.
*_WCF DD (World Christian Fellowship Daily Devotions)_*
*லூக்கா 13:12* *" இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: ஸ்திரீயே, உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி,"*
1) பதினெட்டு வருடமாக பொல்லாத ஆவியினால் பிடிக்கப்பட்டிருந்த, நிமிரக்கூடாத கூன் விழுந்த ஸ்திரீயை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கண்ணோக்கி பார்த்து அவளை தன்னிடம் அழைத்து ஸ்திரீயே உன் பலவீனத்தில் இருந்து விடுதலையாக்கப்பட்டாய் என்று விடுவிப்பதை நாம் பார்க்கிறோம்.
2) இதில் எந்த போராட்டமோ / திட்டங்களோ எதுவும் இல்லை. இயேசு கிறிஸ்து ஒரு வார்த்தையை சொல்லி சொஸ்தமாக்கினார்.
3) லூக் 7:21 / 8:1,2 பிசாசு பிடித்தவர்களை பார்த்து ஒரு வார்த்தை சொன்னார், அவர்கள் குணமானார்கள். இயேசு கிறிஸ்து நமக்கும் தெளிவுபடுத்தும் காரியம், பிசாசு பிடித்திருந்தால் (அவர் நாமத்தினாலே) இயேசுவின் நாமத்தினாலே போ வெளியே என்று சொல்வது தான் அதை விட்டு அந்நிய பாஷை பேசியோ போராடியோ அவ்வளவு பிரயத்தனம் தேவையில்லை.
4) உன் பெலவீனத்தில் இருந்து நீ விடுதலையாக்கப்பட்டாய் என்று கர்த்தர் அந்த ஸ்திரீயை நோக்கி பார்த்து சொல்கிறார். ஒருவனை பிதா தன்னிடத்தில் இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்.
5) இங்கே மாம்ச பிரகாரமாகவும் ஆவிக்குரிய பிரகாரமாகவும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒரு வார்த்தை சொல்லி விடுவிப்பதை பார்க்க முடிகிறது.
*நம் அன்றாட வாழ்வில் இந்த வசனத்தை எவ்வாறு பயன்படுத்துவது :*
1) இன்றைக்கு நாம் யாராக இருந்தாலும் விசுவாசத்தோடு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீ குணமாகு என்றால் அவர்களுக்கு குணமாகும், இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
2) மாற்கு 16:17 பிசாசுகளை துரத்தும் அதிகாரத்தை நமக்கு நம் ஆண்டவர் கொடுத்திருக்கிறார். அவைகளை கட்டும் அதிகாரம் அல்ல துரத்தும் அதிகாரத்தை கொடுத்திருக்கிறார்.
3) இயேசு கிறிஸ்து நீ விடுதலையாக்கப்பட்டாய் என்று சொன்னமாத்திரமே அங்கே ஒரு விடுதலை உண்டானது. இதில் மாமசத்தில் மட்டும் அல்ல ஆவிக்குரிய விடுதலையும் சேர்ந்தது தான்.
4) கர்த்தர் கண்களில் தயவு உண்டாகிறது அப்போது நமக்கு ஒரு விடுதலை. நாம் கர்த்தரை காண முடியாதபடி நாம் பூமிக்கடுத்த காரியங்களை நோக்கி பார்த்துக் கொண்டு இருந்தோம்.
5) என்றைக்கு கர்த்தருடைய பார்வை நம் மேல் விழுந்ததோ அவர் நம்மை இழுத்துக்கொண்டார். நாம் சாத்தானுடைய பிடியிலிருந்து மீட்டெடுக்கப்பட்டு கர்த்தருக்கு சொந்தமான ஜனங்களாக மாறிவிட்டோம்.
6) கர்த்தருக்கென்று என்று பிரித்தெடுக்கப்பட்ட பிள்ளைகளாக வந்துவிட்டோம் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம்.
*ஜெபம்*
மகா கிருபையும் இரக்கமும் நிறைந்த எங்கள் அன்பின் தகப்பனே, இதோ பாவியாய் ஆண்டவரே பூலோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த எங்களை நோக்கி பார்த்தீர், சாத்தானுடைய பிடியிலிருந்து விடுதலை பெற்று நாங்கள் உம்முடைய பிள்ளைகளாய் வாழக்கூடிய ஒரு அதிகாரத்தை கொடுத்திருக்கிறீர். என்ன ஒரு ஆனந்தம் அதற்காக உம்மை நன்றியோடு துதிக்கிறோம். உமக்கென்று வாழக் கூடிய சந்ததியாய் வாழ எங்களை தத்தம் செய்கிறோம், இயேசு கிறிஸ்துவின் மூலம் பிதாவே, ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
*Luke 13:12* *"But when Jesus saw her, He called her to Him and said to her, "Woman, you are loosed from your infirmity"*
1) We see that the Lord Jesus Christ looked at the woman who had been possessed by an evil spirit for eighteen years and could not look upright, called her to Himself and freed her saying, Woman, you are freed from your infirmity.
2) There are not many struggles / activities / plans in it. Jesus Christ spoke a word and healed.
3) Luke 7:21 / 8:1,2 He looked at the demon-possessed and spoke a word, and they were healed. What Jesus Christ also makes clear to us is that if the devil has possessed someone (in His name) , if we say, come out in the name of Jesus then they will be freed and it does not require so much effort to speak in tongues or fight.
4) The Lord looks at the woman and says that you have been freed from your weakness. Unless the Father draws a man to Himself, he does not come to Me.
5) Here we can see that the Lord Jesus Christ speaks a word and delivers her both physically and spiritually.
*How to apply this verse in our daily life :*
1) If you say to someone who is sick, get healed in the name of Jesus Christ by faith, then they will be healed. There is no different opinion on this.
2) Mark 16:17 Our Lord has given us the power to cast out, not to bind it.
3) When Jesus Christ said you are set free, there was healing. This includes not only physical infirmity healing but also spiritual infirmity healing too.
4) When there is favor in the Lord's eyes then we have salvation. We were looking to earthly things because of that we could not see the Lord.
5) Whenever God's eyes look upon us, He draws us near to Him. We have been redeemed from Satan's clutches and become God's people.
6) Let us not forget that we have become as children of God and set apart for the Lord.
*Prayer*
Father of our love, full of great grace and mercy. Lord, you looked at us while we were living as sinners as the earthly life, and You freed us from the clutches of Satan and lived as Your children. We praise You with gratitude for the joy. We surrender ourselves to live as living offspring for You, through Jesus Christ, we pray, Almighty Father, Amen. May the Lord bless you.
*_WCF DD (World Christian Fellowship Daily Devotions)_*
*லூக்கா 13:13* *" அவள்மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்"*
1) சாத்தானால் பதினெட்டு வருடங்களாக கட்டப்பட்டு நிமிர முடியாமல் கூன் விழுந்த நிலையில் இருந்த ஒரு ஸ்திரீயை, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அழைத்து அவள் மேல் தன் கைகளை வைக்கிறார். அவருடைய வல்லமை அந்த ஸ்திரீயை சொஸ்தமாக்கியது. அவள் தேவனை மகிமைப்படுத்தினாள்.
2) கைகளை வைத்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அனேகரை சொஸ்தமாக்கியதை இதற்கு முன்பாகவும் பின்பாகவும் வேதத்தில் நம்மால் பார்க்க முடிகிறது. இயேசு கிறிஸ்து மரித்து உயிர்தெழுந்த பின் தன்னை விசுவாசித்து வாழ்கிறவர்களால் நடக்கக்கூடிய அடையாளம் அற்புதங்கள் (மாற்கு16:17,18)
3) அப் 9:17 - அப்போஸ்தலர் பவுல், சவுலாக இருந்த போது. தமஸ்குவில் குருடானவன் போல அமர்ந்திருந்த போது.அனனியா போய் அவர் மேல் கைகளை வைத்தவுடன் அப்போது அவன் பார்வையடைந்தான். வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைக்கும் போது அவர்கள் குணமானார்கள்.
4) அதே போல் இந்த ஸ்திரீயும் தான் சொஸ்தமானவுடன் நிமிர்ந்து தேவனை மகிமைப்படுத்தினாள் என்பதை பார்க்கிறோம்.
5) தேவன் எவ்வளவு நல்லவர் அவர் எவ்வளவு கிருபையுள்ளவர்.எந்த மனிதனும் சாத்தானின் பிடியிலிருந்தும்/ வியாதியின் பிடியிலிருந்தும் விடுவித்த தேவனாகிய கர்த்தருக்கு நன்றி செலுத்தி தேவனை மகிமைப்படுத்தும் காரியங்களை வேதத்தில் அனேக இடங்களில் பார்க்க முடிகிறது. அதே போல இந்த ஸ்திரீயும் மகிமைப்படுத்தினாள்.
*நம் அன்றாட வாழ்வில் இந்த வசனத்தை எவ்வாறு பயன்படுத்துவது :*
1) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நீங்கள் விசுவாசிப்பீர்களானால் தைரியமாக எந்த ஒரு வியாதியஸ்தர் மேலும் கை வைத்து ஜெபிக்கலாம்.
2) தீமோத்தேயுவில் அவசரப்பட்டு ஒருவர் தலை மேல் கை வைத்து ஜெபிக்க கூடாது என்று இருக்கிறதே என்ற கேள்வி நமக்குள் வரும். அதன் விளக்கம் நம் யூடியூப் சானலில் உள்ளது. அவசரப்பட்டு ஒருவனை தலைவனாக்காதே அப்படி செய்வதால் அவன் பாவத்திற்கு நீ உடந்தையாகி விடுவாய் என்கிற கண்ணோட்டத்தில் இப்படி சொல்லப்பட்டு இருக்கிறது.
3) கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்ன வார்த்தையின்படி நாம் இப்படிப்பட்டவர்கள் மேல் கைகளை வைத்து ஜெபித்தால் அவர்களுக்கு விடுதலை உண்டாவதை நாம் பார்க்க முடியும்.
4) அப்படி விடுதலை பெற்றுக் கொண்ட ஒவ்வொருவரும் தேவனை மகிமைப்படுத்த வேண்டுமே தவிர யார் தன் தலையில் கை வைத்து ஜெபித்தார்களோ அவர்கள் நாமத்தை நாம் சொல்லி புகழாதபடிக்கு மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
5) கர்த்தர் நம்மை விடுவிக்க யார் மூலமாகவும் செயல்படலாம் ஆனால் யார் நம் தலையில் கை வைத்து ஜெபித்தார்களோ அவர்களை அல்ல, அந்த வல்லமையை அவர்களுக்கு அளித்து நம்மை விடுவித்த கர்த்தராகிய ஆண்டவரையே நாம் மகிமைப்படுத்த கவனமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
*ஜெபம்*
வல்ல பிதாவே இந்த அருமையான நல்ல நாளுக்காக நன்றி. இந்த செய்தியை படிக்கும் ஒவ்வொருவரும் ஆம் ஆண்டவரே தைரியமாக வியாதிகளை உம் நாமத்தினாலே சொஸ்தமாக்கக் கூடியவர்களாகவும் சொஸ்தமாக்கப்பட்டவர்கள் கர்த்தராகிய உம்மை மகிமைப்படுத்துகிறவர்களாகவும் வாழ, எங்கள் தேவன் கிருபை பாராட்ட வேண்டுமென்று இயேசு கிறிஸ்துவின் உன்னத நாமத்தினால் ஆசீர்வதிக்கிறோம், வல்ல பிதாவே ஆமென்! கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
*Luke 13:13* *"And He laid His hands on her, and immediately she was made straight, and glorified God"*
1) The Lord Jesus Christ called a woman and laid His hands who was bound by Satan for eighteen years and was unable to stand upright. His power made the woman healed. She glorified God.
2) We can see in the scriptures before and after this that the Lord Jesus Christ healed many by laying on His hands. Signs and miracles that can be performed by those who believe in Jesus Christ ( Mark 16:17,18 )
3) Acts 9:17 - Apostle Paul, when he was Saul. As he sat blind in Damascus, Ananias went and laid his hands on him, and he received his sight. Laying hands on the sick healed them.
4) Similarly we see that this woman also stood up and glorified God.
5) How good is our God and how gracious He is. We can see in many places in the scriptures that people glorify God by thanking the Lord God after got healed from the grip of Satan / disease. Similarly this woman glorified.
*How to apply this verse in our daily life :*
1) If you believe in the Lord Jesus Christ, you can lay hands on any sick person and pray boldly.
2) The question that comes to mind is that in I Tim 5:22 "Do not lay hands on anyone hastily". Detailed explanation is available on our YouTube channel. This is said from the point of view that you should not be in a hurry to make someone a leader, as by doing so you will become an accomplice in his sin.
3) If we lay our hands on sick people and pray according to the word of the Lord Jesus Christ, we can see their deliverance.
4) Everyone who has been freed should glorify God only. We should be very careful not to glorify the name of those who prayed and laid their hands on their heads.
5) The Lord can work through anyone to deliver us but we must be careful to glorify the Lord who gave that power and delivered us, not those who put their hands on our heads and prayed.
*Prayer*
Almighty Father!!!, thank you for this wonderful day. We bless in the mighty name of Jesus Christ that every one who hears this message may be boldly able to heal diseases in Your name and those who are healed may glorify You Lord, we seek Your the grace Lord, amen! May the Lord bless you.
Thanks for using my website. Post your comments on this