Type Here to Get Search Results !

கர்த்தாவே, என் வழக்கை விசாரியும் | Be careful to do as God has told you | Daily Short Message in Tamil | Bible Study | Jesus Sam

கர்த்தாவே, என் வழக்கை விசாரியும் | தேவன் சொன்னபடியெல்லாம் செய்யும்படி கவனமாயிரு | திறமை அல்ல, உங்கள் குணாதிசியமே உங்கள் உயரத்தைத் தீர்மானிக்கிறது | அவரே பெலன் கொடுக்கிறார் | அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியுங்கள், தயங்காதீர்கள்!
=======================
கர்த்தாவே, என் வழக்கை விசாரியும்
வளமான வாழ்விற்கு வார்த்தை
========================
*என் பிதாவின் தேவனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் பயபக்திக்குரியவரும் என்னோடிராமற்போனால், நீர் இப்பொழுது என்னை வெறுமையாய் அனுப்பிவிட்டிருப்பீர்; தேவன் என் சிறுமையையும் என் கைப்பிரயாசத்தையும் பார்த்து, நேற்று ராத்திரி உம்மைக் கடிந்துகொண்டார் என்று சொன்னான்.*

*ஆதியாகமம் 31:42*
*_யாக்கோபின் மாமனார், ஒவ்வொரு வருடமும் அவனிடம் பொய் சொல்லி, அவனுடைய சம்பள விஷயத்தில், 10 முறை அவனை ஏமாற்றினான். யாக்கோபு விரக்தியடைந்து, கசப்புடன், வெறுப்புடன் தன் வேலையைச் செய்திருக்க முடியும்._*

*ஆனால் குறுகலான சந்துகள் வழியாகச் செல்வதற்குப் பதிலாக, அவன் ஹைவே-ஐ தேர்ந்தெடுத்தான். அவனுடைய ஏமாற்றத்தை மட்டுமே நினைத்துக் கொண்டு, குறுகிய சிந்தையுடையவனாய் அவன் வாழவில்லை.*

*_அவன் தேவனை நம்பி, உயரிய பாதையில் சென்றான். அவன் தன்னால் இயன்ற சிறந்ததைச் செய்தான். முடிவில், தேவனுடைய அசாதாரணமான, விசேஷமான ஆசீர்வாதம் அவன் மேல் வந்தது. லாபானைக் காட்டிலும், மிகவும் அதிக, மிகுதியான மந்தைகளை உடையவனாய் யாக்கோபு உயர்ந்தான்._*

*உங்களுக்குத் தகுதியானது, கிடைக்கவில்லை என்பதற்காக - ஊதிய உயர்வில், நீங்கள் ஏமாற்றப்பட்டீர்கள் என்பதற்காக – வீழ்ச்சியை நோக்கி நீங்கள் தள்ளப்படுகிறீர்கள் என்பதற்காக, ஊக்கமிழக்காதீர்கள். விரக்தியடையாதீர்கள். உங்களுக்கு நியாயமாய் என்ன கிடைக்க வேண்டும், நீங்கள் எதற்குத் தகுதியானவர்கள் என்பது தேவனுக்குத் தெரியும்.*

*_திடீர் ஊதிய உயர்வு, வழக்கத்திற்கு மாறான வளர்ச்சி, அசாதாரணமான ஆசீர்வாதங்களை நீங்கள் காண்பீர்கள்._*

*திறவுகோல், இதுதான்: மனிதர்களைப் பார்க்காதீர்கள். தேவனை நோக்கிப் பாருங்கள். உங்களைக் காயப்படுத்திய மனிதரோ அல்லது உங்களை விட்டு விட்ட கம்பெனியோ, தேவன் உங்களுக்கு ஈடு செய்யக்கூடிய அளவிற்கு பலனைக் கொடுக்கப் போவதில்லை.*

*_மனிதர்களிடமிருந்து கிடைக்கக்கூடிய பலன், குறைவானது. உங்களுக்கு நியாயம் கிடைக்கும்படி, நீங்கள் போராட வேண்டியதில்லை. அது உங்கள் யுத்தமல்ல. மகா உன்னதமான தேவன், உங்கள் கணக்கைத் தீர்ப்பார். அவர் உங்களுக்கு நியாயம், நீதி செய்வார்._*

*நன்றி ஜெபம்:*
*_அன்பின் பரலோகப் பிதாவே, எனக்கு நேரிட்ட எல்லாவற்றையும் நீர் அறிந்திருக்கிறீர். உமக்கு நன்றி. என்னை அநீதியாய் நடத்தினவர்களை நான் சீக்கிரமாய் மன்னிக்கும்படி, எனக்குக் கிருபை தாரும். கசப்பு, எனக்குள் நுழைவதற்கு நான் அனுமதியை மறுக்கிறேன். எனக்கு நேரிட்ட அநியாயங்களை நான் தியானிக்க மாட்டேன். தேவ அன்பு, அவற்றை வெளியேற்றும்படி நான் விட்டுக் கொடுக்கிறேன். என் சிறந்ததை நான் தொடர்ந்து செய்யப் போகிறேன். நீர் என் கணக்கு வழக்குகளைத் தீர்ப்பீர். நீர் எனக்கு நீதி நியாயம் செய்வீர். உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தில், ஆமென்._*

இயேசுவே ஆண்டவர்! வெற்றி உங்களுடையதே!
Bro. JOHN DURAI
WONDER WORD MINISTRY
MADURAI_INDIA.


==================
தேவன் சொன்னபடியெல்லாம் செய்யும்படி கவனமாயிரு
வாழ்வு தரும் வார்த்தை
=================
*"என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்க மாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு. நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்து கொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடது புறம் விலகாதிருப்பாயாக."*

*யோசுவா 1:7*
*_வேதாகமம் செழிப்பைக் குறித்து நிறைய பேசியிருக்கிறது. செழிப்பு என்றால், எதிராய் வருகின்ற எல்லாப் பிரச்சனைகளையும் ஜெயமாய் மேற்கொண்டு, தளராத ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும், எப்பொழுதும் ஆக்கப்பூர்வமான ஆற்றல் நிறைந்தவர்களாய் உயிர் வாழ்வதாகும்._*

*இது ஆர்வமும் ஆற்றலும் நிறைந்த ஒரு நபருடைய படத்தைக் காண்பிக்கிறது. நீங்கள் செழிப்பாய் வாழும்போது, உங்களிடம் மற்றவர்களுக்குக் கொடுக்கத்தக்கதாக போதும் என்பதற்கும் அதிகமாகவே இருக்கும்.அதாவது உங்களிடம் இன்னும் அதிகமான சமாதானம், இன்னும் அதிகமான கிருபை, இன்னும் அதிகமான நம்பிக்கை, இன்னும் அதிகமான அன்பு இருக்கும்.*

*_இந்த எல்லா ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் பெறுவதற்கு திறவுகோல், இன்றைய வசனத்தில் இருக்கிறது._*

*தேவன் கட்டளையிட்டிருக்கிற எல்லாவற்றையும் செய்யும்படி நாம் கவனமாயிருக்கும்போது, நாம் வெற்றிக்கு நேராக அடியெடுத்து வைக்கிறோம். தேவனுடைய வழியில் நாம் காரியங்களைச் செய்யும்போது, தேவன் எதிர்பார்க்கிற வெற்றியை நாமும் அடைகின்றோம்!*

*_தேவன் கட்டளையிட்டிருக்கிறதைச் "செய்யும்படி" இன்று "கவனமாயிருங்கள்". உங்களுடைய இருதயத்தையும், மனதையும் ஆராய்ந்து சோதித்துப் பார்க்கும்படி அவருக்கு அழைப்பு கொடுங்கள். அவருக்குப் பிரியமில்லாதவை ஏதேனும் அங்கு இருந்தால், அதை அகற்றும்படி அவரிடம் ஜெபியுங்கள்._*

*அவருக்கு முதலிடம் கொடுங்கள். நீங்கள் அவருக்கு பிரதானமான முதலிடத்தைக் கொடுக்கும்போது, நீங்கள் எங்கே சென்றாலும், செய்வதெல்லாம் உங்களுக்கு வாய்க்கும்படி, செழிக்கும்படி, உங்களையே நீங்கள் முன் நிறுத்திக் கொள்கிறீர்கள்!*

நன்றி ஜெபம்:
*"பரலோகப் பிதாவே, உம்முடைய வார்த்தை என் கால்களுக்கு விளக்காய், என் பாதைக்கு வெளிச்சமாய் இருக்கிறது. உமக்கு நன்றி. என் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும், நான் உமக்கு முதலிடம் கொடுக்கின்றேன். உம்முடைய வார்த்தைக்கு என்னை அர்ப்பணிக்கிறேன். உம்மைப் பின்பற்றும்படி நான் தீர்மானிக்கிறேன். ஆகையால் இயேசுவின் நாமத்தில், நான் செய்கிற எல்லாவற்றிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன். உமக்கு நன்றி. ஆமென்."*

இயேசுவே ஆண்டவர்! வெற்றி உங்களுடையதே!
Bro. JOHN DURAI
WONDER WORD MINISTRY
MADURAI_INDIA


============================
திறமை அல்ல, உங்கள் குணாதிசியமே உங்கள் உயரத்தைத் தீர்மானிக்கிறது
வளமான வாழ்விற்கு வார்த்தை
============================
*கர்த்தர் அவனவனுக்கு அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் தக்கதாகப் பலன் அளிப்பாராக; இன்று கர்த்தர் உம்மை என் கையில் ஒப்புக் கொடுத்திருந்தும், கர்த்தர் அபிஷேகம் பண்ணினவர் மேல், என் கையை நீட்ட மனதில்லாதிருந்தேன்.*

*1 சாமுவேல் 26:23*
*_தாவீது, சவுல் ராஜாவிடம் உண்மையாக வேலை செய்திருந்தான். ஆனால் சவுல், தாவீதின் மீது பொறாமை கொண்டு, அவனைக் கொல்ல முயற்சித்தான். தாவீது, தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடி ஒளிய வேண்டியிருந்தது. வனாந்திரத்திலும், குகைகளிலும் அவன் மறைந்து வாழ்ந்தான். சவுல், தாவீதின் வாழ்க்கையை பரிதாபமாக்கியிருந்தான்._*

*ஒரு குறிப்பிட்ட தருணத்தில், தாவீதினால் சவுலை ஈஸியாகக் கொன்றிருக்க முடியும். இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம், தாவீது முற்றுப்புள்ளி வைத்திருக்க முடியும். ஆனால் அது தவறு என்பதை தாவீது அறிந்திருந்தான். சவுல் செய்தது தவறாகவே இருந்தாலும், தாவீது அதைத் தனக்கு சாதகமாக்கிக் கொள்ளவில்லை. அவன் சவுலைக் கொல்லவுமில்லை.*

*_உண்மையும், நம்பகத்தன்மையும் தாவீதிடம் இருந்தது. கொஞ்ச நாட்களில், சவுல், யுத்தத்தில் கொல்லப்பட்டான். தாவீது சிங்காசனத்தில் அமர்ந்தான். சிங்காசனத்தை நோக்கிய வழியில், தாவீதுக்கு நேரிட்ட இந்தச் சோதனையிலும், இன்னும் மற்ற அநேக சோதனைகளிலும் தாவீது தேர்ச்சியடைந்திருக்கவில்லை என்றால், இது நடந்திருக்குமா என்பது கேள்விதான்._*

*அந்தரங்கத்தில் நீங்கள் என்ன செய்கிறீர்களோ, அதுதான் பொதுவெளியில் நீங்கள் எவ்வளவு உயரே செல்வீர்கள் என்பது தீர்மானிக்கிறது. எது ஈஸியோ, அதைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் வலிமையடையவோ, வெற்றியடையவோ முடியாது.*

*_நீங்கள் எவ்வளவு உயரம் செல்வீர்கள் என்பதை உங்கள் திறமையோ, போட்டியிடும் திறனோ தீர்மானிப்பதில்லை. மாறாக, உங்கள் குணாதிசியமே, நீங்கள் அடையவிருக்கிற உயரத்தைத் தீர்மானிக்கிறது._*

*திறமை, உங்களை உயரத்திற்குக் கொண்டு செல்லலாம். ஆனால் குணாதிசியம் தான், உங்கள் நிலையை அங்கே தக்க வைக்கிறது.*

நன்றி ஜெபம்:
*அன்பின் பரலோகப் பிதாவே, சவால்களின் அழுத்தங்கள் மூலம், நீர் என்னை மேலும் வலிமையானவனாக்குகிறீர். நீர் என் குணாதிசியத்தை மேம்படுத்தி, கூர்மையாக்குகிறீர். நீர் என்னை உயரே நோக்கி நடத்துகிறீர். என் விசுவாசத்தின் ஒவ்வொரு சோதனையும், என்னை மேற்கொள்கிறவனாக்குகிறது. நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய திராணியுள்ளவனாய், அது என்னை உருவாக்குகிறது. அது என்னை பெருக்கத்திற்கென்று ஆயத்தப்படுத்துகிறது. உமக்கு நன்றி. நான் மேம்பட்டவனாய் வெளியே வருகிறேன் என்று நான் விசுவாசிக்கிறேன். உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தில், ஆமென்.*

இயேசுவே ஆண்டவர்! வெற்றி உங்களுடையதே
Bro. JOHN DURAI
WONDER WORD MINISTRY
MADURAI_INDIA.


==================
அவரே பெலன் கொடுக்கிறார்
வாழ்வு தரும் வார்த்தை
===================
*"சோர்ந்து போகிறவனுக்கு அவர் (தேவன்) பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்கு சத்துவத்தைப் (பெலவீனனுக்கு வல்லமையைப்) பெருகப் பண்ணுகிறார்."*

*ஏசாயா 40:29*
*_பெரும்பாலான நேரங்களில், நாம் ஒரு கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது, நம்முடைய மனதிலும், உணர்வுகளிலும் சோர்வடைவதென்பது மிகவும் எளிதாக நடக்கிறது._*

*நம்முடைய சொந்த பெலத்தில் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள வேண்டும் என்று முயற்சிப்பது, நம்முடைய பெலன் முழுவதையும் உறிஞ்சி விடும்.*

*_ஆனால் நாமே எல்லாவற்றையும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் நாம் உருவாக்கப்படவில்லை. நாம் தேவனை நம்பி வாழும்படி உருவாக்கப்பட்டிருக்கிறோம்.*

*_நாம் அவரை நோக்கி கூப்பிடும்படியே உருவாக்கப்பட்டிருக்கிறோம். நம்முடைய பிரச்சனைகளின் மத்தியில் நமக்கு ஜெயம் கொடுக்கிற அவரே ஹீரோவாக இருக்கட்டும்!_*

*உதவிக்காக நீங்கள் தேவனை நோக்கி கூப்பிடும்போது, அதைக் கேட்ட உடனே, அவர் உங்களுக்கு பதில் கொடுப்பார் என்று ஏசாயாவில் வேதாகமம் சொல்கிறது! நீங்கள் களைப்படையும்போது, அவர் உங்களுக்கு பெலத்தைக் கொடுப்பார். நீங்கள் பெலவீனமாய் உணரும்போது, அவர் உங்களுடைய வல்லமையைப் பெருகச் செய்வார்.*

*_இன்று உங்களுடைய வாழ்க்கையில் என்ன நடந்தாலும், அது ஒரு பொருட்டல்ல. நீங்கள் எதிர்கொள்கிற எந்த ஒரு பிரச்சனையை அல்லது கஷ்டம் அல்லது தடையைக் காட்டிலும் தேவன் மிகவும் பெரியவராய் இருக்கிறார்._*

*உங்களுடைய வாழ்க்கையில் வரும் ஒரு சவாலை எதிர்கொள்வதற்கு உங்களுக்கு பெலன் தேவையா? ஒரு சூறாவளியின் மத்தியில் உறுதியாக நிற்பதற்கு உங்களுக்கு வல்லமை தேவையா? இப்பொழுதே அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.*

*_அவர் உங்களுக்குச் செவி கொடுப்பார். உங்களுடைய இருதயத்தை திறந்து வையுங்கள். விசுவாசத்தினால், அவருடைய வல்லமையையும், பெலத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய வாழ்க்கையின் எல்லா நாட்களிலும் நீங்கள் வெற்றியாய், எல்லாவற்றையும் மேற்கொண்டு வாழும்படி அவரே உங்களை பெலப்படுத்தட்டும்!_*

*நன்றி ஜெபம்:*
*_"பரலோகப் பிதாவே, என்னுடைய ஜெபங்களைக் கேட்டு, அவற்றிற்கு பதில் கொடுக்கிறீர். உமக்கு நன்றி. இன்று உம்முடைய வல்லமையினாலும், பெலத்தினாலும் என்னை நிரப்பும். என்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் உம்மிடம் அர்ப்பணிக்கின்றேன். நீர் எல்லாவற்றையும் என்னுடைய நன்மைக்கு ஏதுவாக முடியச் செய்வீர் என்று நான் நம்புகிறேன். உமக்கு நன்றி. ஆமென்."_*

இயேசுவே ஆண்டவர்! வெற்றி உங்களுடையதே!
Bro. JOHN DURAI
WONDER WORD MINISTRY
MADURAI_INDIA.


=============================
அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியுங்கள், தயங்காதீர்கள்!
வளமான வாழ்விற்கு வார்த்தை
==========================
*இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள்.*

*யோவான் 2:7*
*_ஒரு திருமண வீட்டில் நிகழ்ந்த அற்புதத்தைக் குறித்து யோவான் 2-ல் வாசிக்கின்றோம். அங்கே அந்த வீட்டில், நல்ல திராட்சை ரசம் தீர்ந்து விட்டது. 6 பெரிய ஜாடிகளில், தண்ணீரை நிரப்பும்படி, இயேசு அங்கிருந்த பணியாளர்களிடம் சொன்னார்._*

*இது விநோதமாகத் தெரிந்திருக்கும். அவர்களுக்குத் தேவை, தண்ணீர் அல்ல, திராட்சை இரசமே. உங்களுக்குப் புரியாத காரியங்களைச் செய்யும்படி, சில நேரங்களில், தேவன் உங்களிடம் சொல்வார். சிறந்த திராட்சை இரசத்தை அவர் ஆயத்தமாக வைத்திருக்கிறார்.*

*_ஆனால் அது அவருடைய வார்த்தைக்கு நீங்கள் கீழ்ப்படிவதைச் சார்ந்திருக்கிறது. என்ன செய்ய வேண்டுமென்று அவர் உங்களிடம் சொல்கிறாரோ, அதை நீங்கள் செய்வீர்களா?_*

*உங்களைக் காயப்படுத்திய மனிதனை மன்னிக்கும்படி அவர் உங்களிடம் சொல்லியிருக்கலாம். அந்த மனிதன் மீதான உங்கள் கோபம், நியாயமானது என்று நீங்கள் நினைக்கலாம்._*

*ஆனால் அது சிறந்த திராட்சை இரசத்தை நீங்கள் அனுபவிக்காதபடி தடுக்கிறது. தகுதியடைந்ததாக நீங்கள் இன்னும் உணரவில்லை. இந்த நிலையில், விசுவாச அடி எடுத்து வைத்து, ஒரு வகுப்பில் பாடம் நடத்தும்படி, ஒரு தொழிலை ஆரம்பிக்கும்படி, ஒரு வாலிபனை நடத்தும்படி அவர் உங்களிடம் சொல்லலாம்.*

*_நீங்கள் அநீதியாய் நடத்தப்படுகிற நிலையிலும், நல்ல சிந்தையைக் காத்துக் கொள்ளும்படி, அவர் உங்களிடம் சொல்லலாம். தேவனே உங்களுக்கு நீதி செய்கிறவராயிருக்கிறார். நீங்கள் செய்வதைக் காட்டிலும், சிறந்த விதத்தில், அவர் உங்களுக்கு நீதி செய்வார்._*

*தேவன் உங்களிடம் என்ன சொன்னாரோ, அதைத் தொடர்ந்து செய்யுங்கள். மற்றவர்களுக்கு நன்மை செய்யுங்கள். கொடுங்கள். பணி செய்யுங்கள். எதிர்பாருங்கள். சிறந்த திராட்சை ரசம் வருகின்றது.*

நன்றி ஜெபம்:
*அன்பின் பரலோகப் பிதாவே, என்ன செய்ய வேண்டுமென்று நீர் சொல்கிறீரோ, அதை நான் புரிந்து கொள்ள வேண்டியதில்லை. நான் உமக்குக் கீழ்ப்படிந்தால், அது போதும். உமக்கு நன்றி. நான் கசப்படையாமல், மற்றவர்களை துரிதமாய் நான் மன்னிக்க முடியும். நீர் எனக்கு நீதி செய்கிறவராயிருக்கிறீர். உமக்கு நன்றி. நான் தொடர்ந்து நன்மை செய்யப் போகிறேன். சிறந்ததை எதிர்பார்க்கின்றேன். உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தில், ஆமென்.*

இயேசுவே ஆண்டவர்! வெற்றி உங்களுடையதே!
Bro. JOHN DURAI
WONDER WORD MINISTRY
MADURAI_INDIA.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.