Type Here to Get Search Results !

A faithful speller | உண்மையுள்ள உக்கிராணக்காரர் | Jesus Sam

ஊழியர் கூட்டத்தில் பயன்படுத்தலாமே....!

"உண்மையுள்ள உக்கிராணக்காரர்"

இப்படியாக, எந்த மனுஷனும் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியக்காரரென்றும், தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரனென்றும் எண்ணிக்கொள்ளக்கடவன்.
    1 கொரிந்தியர் 4:1

கிறிஸ்துவின் ஊழியக்காரர்!

தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரர்!

கிறிஸ்துவின் ஊழியக்காரர்
தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரராக இருக்கவேண்டும்.

தேவனுடைய இரகசியங்கள்? 

தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்கள்
    லூக்கா 8:10

1. தேவன் ஒருவரே ஞானமுள்ளவர்!
    ரோமர் 16:25-27

நம்மை ஸ்திரப்படுத்த வல்லவர்!
    ரோமர் 16:25,26

2. சிலுவையில் அறையப்பட்ட இயேசுகிறிஸ்து மகிமையின் கர்த்தர்!
    1 கொரிந்தியர் 2:7-9

தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்
    1 தீமோத்தேயு 3:16

3. கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக நமக்குள் இருக்கிறார்
    கொலோசெயர் 1:25-27

முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயுமிருந்த நம்மை பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்ச சரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்.
    கொலோசெயர் 1:21-23

4. கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு, முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் தேவனுடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம்.
    எபேசியர் 1:11,12

இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி தேவன் நம்மை முன்குறித்திருக்கிறார்
    எபேசியர் 1:6

புறஜாதிகள் சுவிசேஷத்தினால் (யூதருக்கு) உடன் சுதந்தரருமாய், (யூதருடன்) ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் தேவன் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு (யூதருக்கு) உடன்பங்காளிகளுமாயிருக்கிறார்கள்.
    எபேசியர் 3:3,6
    எபேசியர் 2:13-18

கிறிஸ்துவை பற்றும் விசவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது
    எபேசியர் 3:9-12

5. சபை கிறிஸ்துவினால் சுத்திகரிக்கப்பட்டு, போஷிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டுவரும் அவருடைய மணவாட்டி!
    எபேசியர் 5:23-27,29,30,32

6. நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்
    1 கொரிந்தியர் 15:51-53

காலங்கள் நிறைவேறும்போது பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டும்
    எபேசியர் 1:9,10

கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவஎக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். 
பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்
    1 தெசலோனிக்கேயர் 4:16,17

தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரர்!

உக்கிராணக்காரர்
உண்மையுள்ளவர்களாய் இருக்கவேண்டும்.
    1 கொரிந்தியர் 4:2

1. விசுவாசத்தின் இரகசியத்தைச் சுத்த மனச்சாட்சியிலே காத்துக்கொள்ளுகிறதில்
    1 தீமோத்தேயு 3:9

2. விசுவாசிகள் பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்று மன்றாடுகிறதில்.
    கொலோசெயர் 2:1,2

பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியம்
    கொலோசெயர் 2:12-15

3. தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் மறைத்துவைக்காமல், எல்லாவற்றையும் சபைக்கு அறிவிக்கிறதில்
    அப்போஸ்தலர் 20:26,27

4. மனுஷரை நாடிப் போதியாமல், தேவனை நாடி போதிக்கிறதில், மனுஷரை பிரியப்படுத்தப்பார்க்காமல், தேவனை
பிரியப்படுத்தப்பார்க்கிறதில்
    கலாத்தியர் 1:10

வஞ்சகத்தோடும் துராசையோடும் கபடத்தோடும் போதியாமல்,
சுவிசேஷத்தை தங்களிடத்தில் ஒப்புவிக்கத்தக்கதாய், தேவன் தங்களை உத்தமரென்றெண்ணினபடியே, மனுஷருக்கு அல்ல, தங்கள் இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறதில்
    1 தெசலோனிக்கேயர் 2:3,4

ஒருக்காலும் இச்சகமான வசனங்களைச் சொல்லாமல், பொருளாசையுள்ளவர்களாய் மாயம்பண்ணாமல் இருக்கிறதில்
    1 தெசலோனிக்கேயர் 2:5

அநேகரைப்போல, தேவவசனத்தைக் கலப்பாய்ப் பேசாமல், துப்புரவாகவும், தேவனால் அருளப்பட்டபிரகாரமாகவும், கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் பேசுகிறதில்
    2 கொரிந்தியர் 2:17

5. கிறிஸ்துவினுடைய இரகசியத்தினிமித்தம் கட்டப்பட்டிருந்தாலும் அந்த இரகசியத்தைக்குறித்துப் பேசவேண்டியபிரகாரமாகப் பேசி, அதை வெளிப்படுத்துகிறதில்.
    கொலோசெயர் 4:4
    கொலோசெயர் 1:23,24
    எபேசியர் 6:18,19
    2 தீமோத்தேயு 2:8,9

6. கிறிஸ்துவின் இரகசியத்தைக்குறித்த அறிவில் தேறுகிறதில்
    எபேசியர் 3:4,5

க. காட்சன் வின்சென்ட்.
             8946050920

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.