Type Here to Get Search Results !

Biography of Missionaries | Ellen Gould White Life History in Tamil | எல்லன் கோல்ட் ஒயிட் வாழ்க்கை சரி்திரம் தமிழில் | Jesus Sam

=========================
திருச்சபையின் செல்ல மகள்கள்
எல்லன் கோல்ட் ஒயிட் (Ellen Gould White) (1827-1915)
=========================
ஆரம்பகால வாழ்க்கை:
    எல்லன் கோல்ட் ஒயிட் (Ellen Gould White) 1827 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி அமெரிக்காவில் தொப்பி தயாரிப்பாளரான ராபர்ட் ஹார்மன் (Robert Hermon) மற்றும் யூனிஸ் நீ கோல்ட் (Eunice Nee Gould) ஆகியோருக்கு பிறந்த எட்டு குழந்தைகளில் ஏழாவது குழந்தை ஆவார். எல்லன் ஒன்பது வயதாக இருந்தபோது பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது அவருடைய வகுப்பு தோழி ஒருவர் எல்லன் மீது விளையாட்டாக ஒரு கல்லை எறிந்தார், அது எல்லனின் முகத்தை தாக்கியதில் அவளால் கல்வி படிப்பை தொடர முடியயாததினால் ஒரு அறிஞராக (Scholar) வர வேண்டும் என்ற அவருடைய லட்சியம் முடிவுக்கு வந்தது.

ஞானஸ்நானம்:
    19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அமெரிக்க தேசத்தில் திருச்சபையில் ஏற்பட்ட எழுப்புதல் காலத்தில் வில்லியம் மில்லர் (William Miller 1782-1849), என்ற அட்வெண்டிஸ்ட் திருச்சபை நற்செய்தியாளர், வல்லமையாய் போதித்து அநேகரை மனந்திரும்ப செய்து கிறிஸ்துவண்டை வழிநடத்தினார். ஒருமுறை ஒரு மெதடிஸ்ட் திருச்சபையில் வில்லியம் மில்லர் எழுப்புதல் கூட்டம் நடத்திக்கொண்டு இருக்கும்போது எல்லன் தன்னுடைய 12 ஆம் வயதில் பாவத்தை அறிக்கை செய்து, கிறிஸ்துவுக்கு தன்னை அர்ப்பணித்து, ஜூன் 26, 1842 இல், ஞானஸ்நானம் பெற்றுகொண்டார். வில்லியம் மில்லரின் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை பற்றிய போதனைகளை விரும்பி கேட்ட, எல்லன் தன் குடும்பத்தாரோடு அவருடைய தீவிர ஆதரவாளரானார்.

பெரிய ஏமாற்றம்:
    ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரியான வில்லியம் மில்லர் 1831 ஆண்டு முதல் அட்வெண்டிஸ்ட் திருச்சபையின் சுவிசேஷகராக அமெரிக்கா முழுவதும் சென்று பிரசங்கம் பண்ணினார். இந்நிலையில் வில்லியம் மில்லர் தானியேல் 8:14 இன் படி 2,300 நாள் என்பதை 2,300 ஆண்டுகளாக கணக்கிட்டு இது தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்ட 457 ஆம் ஆண்டில் இருந்து 2,300 ஆண்டுகளைக்கூட்டி கிமு 1843-ல் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை இருக்கும் என்றும் ஆகவே இந்த உலகம் அழியப்போகின்றது என்றும் போதித்தார்.

    வில்லியம் மில்லரின் போதனைகள் அமெரிக்க தேச திருச்சபைகளில் அதிகமாக போதிக்கப்பட்டு எல்லோரையும் மனந்திரும்ப அரைகூவல் விடுக்கப்பட்டதில் பலர் மனந்திரும்பி, கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காய் ஆயத்தப் பட்டுக்கொண்டு, அந்த நாளுக்காக ஆவலோடு காத்து இருந்தார்கள்.  இந்நிலையில் 1843 ஆம் ஆண்டு நெருங்குகையில், மார்ச் 21, 1843 மற்றும் மார்ச் 21, 1844 க்கு இடையில் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை இருக்கும் என்று வில்லியம் மில்லர் தீர்க்கதரிசனமாக அறிவித்தார். 

    ஆனால் அன்றைய நாளில் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை நிகழாதபோது, வில்லியம் மில்லர் தனது தவறை ஒப்புக்கொண்டு அந்த இயக்கத்தை விட்டு வெளியேறினார். ஆனால் இவருடைய தீவிர ஆதரவாளரும் மற்றொரு அட்வெண்டிஸ்ட் திருச்சபை போதகருமான சாமுவேல் ஸ்னோ (Samuel Snow) என்பவர் வில்லியம் மில்லரின் கணக்கில் தவறு இருப்பதாககூறி, அதை சரிசெய்து அக்டோபர் 22, 1844 அன்று இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை இருக்கும் என்று தீர்க்கதரிசனம் கூறினார். இந்த நாளிலும் இயேசு கிறிஸ்து திரும்பி வராதபோது, வில்லியம் மில்லரின் பல ஆதரவாளர்கள் ஏமாற்றமடைந்து, அட்வெண்டிஸ்ட் திருச்சபையில் இருந்து விலகி, மற்ற திருச்சபைகளில் சேர்ந்துகொண்டார்கள்.

திருச்சபையில் இந்து நீக்கம்:
    வில்லியம் மில்லரின் தீவிர ஆதராவாளராக இருந்த எல்லன் 1843 மற்றும் 22 அக்டோபர் 1844 இல் மில்லரைட்டுகள் தீர்க்கதரிசனம் உரைத்தபடி இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை நடைபெறாததினால் எமாற்றமடைந்த எல்லன் தொடர்ந்து வில்லியம் மில்லரின் போதனைகளை மெத்தடிஸ்ட் முகாம்களில் போதித்து தன்னுடைய இளமைக்கால நண்பர்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்தினாள். இதன் காரணமாக எல்லன் குடும்பத்தார் மற்றும் வில்லியம் மில்லரின் ஆதரவாளர்கள் மெதடிஸ்ட் திருச்சபையில் இருந்து நீக்கப்பட்டார்கள். 

    முதல் தரிசனம்: எலன் வைட் 17 வயதாக இருக்கும்போது 1844 டிசம்பர் மாதத்தில் கடவுள் இவருக்கு முதல் தரிசனத்தைப் கொடுத்ததாக கூறுகின்றார். இதன்படி எல்லன் தன்னுடைய தோழிகளுடன் ஜெபித்துக்கொண்டு இருந்தபோது இதற்க்கு முன் எப்போதும் உணர்ந்திராத கடவுளின் வல்லமையினால் நிரப்பப்பட்டதாகவும், அப்போது பூமியில் இருந்து வானத்திற்கு சென்று கொண்டு இருக்கும்போது, பரிசுத்த எருசலேம் நகரத்திற்க்கு, ஏராளமான அட்வெண்டிஸ்ட் திருச்சபை மக்கள் பரலோகத்திற்க்கு வந்துகொண்டு இருந்ததையும், இதற்க்கு பின்னர் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை பற்றிய தரிசனங்களையும் கண்டதாகவும் இதற்கு பின்பு எல்லன் பூமிக்கு திரும்பி விட்டதாகவும் குறிப்பிடுகின்றார்.

பொதுமேடையில் சாட்சி பகிர்தல்:
    தான் பெற்ற தரிசனத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளும்படி எல்லனை கடவுள் அழைப்பதாக உணர்ந்தார். ஆயினும் தன்னம்பிக்கை இல்லாமல் மற்றவர்களின் கேலிக்கு பயந்து முதலில் தயங்கினார். இறுதியில் கடவுள் கொடுத்த தைரியத்தினால் ஒரு பொது மேடையில் கடவுள் கொடுத்த தரிசனத்தை பகிர்ந்துகொண்டார். இவரது தரிசனங்கள் பற்றிய செய்திகள் அமெரிக்காவில் பல இடங்களுக்கு பரவியது. இந்நிலையில் எல்லன் பல இடங்களுக்கு பயணம் செய்து, தன்னுடைய அனுபவத்தை வில்லியம் மில்லர் ஆதரவாளர்களுடன் பகிர்ந்துகொண்டார். எல்லனுக்கு முன்பதாக வில்லியம் மில்லரின் இரண்டு தீவிர ஆதரவாளர்கலான வில்லியம் எல்லிஸ் ஃபோய் (William Ellis Foy 1818–1893), மற்றும் ஹேசன் ஃபோஸ் (Hazen Foss 1818–1893) ஆகியோர் இந்த தீர்க்கதரிசனத்தை கண்டதாகவும், ஆனால் அவர்கள் இதை நிராகரித்ததினால் இப்போது எல்லனுக்கு கடவுள் வெளிபடுத்தியுள்ளார் என்று அட்வேடிஸ்ட் திருச்சபை தலைவர்கள் நம்பினார்கள். ஆகவே அவர்கள் எல்லன் ஒயிட்டை பல திருச்சபைகளுக்கும், நற்செய்தி முகாம்களுக்கும் அழைத்துசென்றது அட்வென்டிஸ்ட் திருச்சபை மக்களுக்கு பெரிய ஊக்கமாக இருந்தது. 

எல்லனின் தரிசனங்கள்:
    1844 முதல் 1863 வரையேயான காலகட்டத்தில் எல்லன் சுமார் 100 முதல் 200 தரிசனங்களை கண்டதாகவும், தன்னுடைய வாழ்நாளில் சுமார் 2000 த்திற்கும் மேலான தரிசனங்களை கடவுள் கொடுத்ததாகவும் எல்லன் குறிப்பிடுகின்றார். இதன் மூலமாக கடவுள் தன்னை ஒரு தீர்க்கதரிசியாக அழைத்து, அவருடைய செய்தியை இந்த உலகத்திற்கு கொடுத்து எல்லோரும் இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாகும்படி கேட்கிறார் என்பதை உறுதியாய் நம்பின எல்லன் பல கூட்டங்களில் தன்னுடைய தரிசனங்களை பகிர்ந்து கொண்டார். இதன் காரணமாக எல்லனின் பெயர் அமெரிக்காவில் பிரபலமடைய ஆரம்பித்தது. 

    இந்நிலையில் மார்ச் மாதம் 14, 1858 இல், அமெரிக்காவின் ஓஹியோவில் உள்ள லவ்ட்ஸ் குரோவில், நடைபெற்ற ஒரு அடக்க ஆராதனையில் கலந்துகொண்டபோது எல்லன் ஒரு தரிசனத்தை பெற்றார். இதை பற்றி எழுதுகையில், அவர் கடவுளிடம் இருந்து அட்வெண்டிஸ்ட் திருச்சபை மக்களுக்கான நடைமுறை அறிவுறுத்தலைப் பெற்றதாகவும், குறிப்பாக இயேசு கிறிஸ்துவுக்கும் அவருடைய தேவதூதர்களுக்கும், சாத்தானுக்கும் அவனுடைய தூதர்களுக்கும் இடையே கடுமையான யுத்தம் நடந்து கொண்டு இருப்பதாகவும் குறிப்பிடுகின்றார்.

திருமண வாழ்க்கை:
    ஒருமுறை ஊழியத்தின் நிமித்தம் 23 வயதான எல்லன் அமெரிக்காவில் ஓரிங்டன் என்ற இடத்திற்கு சென்றபோது அங்கு ஒரு இளம் அட்வென்டிஸ்ட் போதகராக இருந்த, ஜேம்ஸ் வைட் என்பவரை சந்தித்தார். இவர் போர்ட்லேண்ட் பகுதில் அட்வெண்டிஸ்ட் திருச்சபை மக்களுடன் அர்பணிப்புடன், சுறுசுறுப்பாய் ஊழியம் செய்துவந்த எல்லன் பற்றி கேள்விப்பட்டிருந்தார். வில்லியம் மில்லரின் போதனைகளான இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை பற்றிய செய்திகளை ஜேம்ஸும், கடவுள் தனக்கு வெளிபடுத்திய தீர்க்கதரிசனங்களை பற்றி எல்லனும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டார்கள். இவருடைய சிந்தனைகளும் ஒத்துப்போகவே ஆகஸ்ட் 30, 1846 இல் போர்ட்லேண்ட் அட்வெண்டிஸ்ட் திருச்சபையில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களது குடும்ப வாழ்கையின் ஆரம்ப கால ஆண்டுகளில் வறுமை, போராட்டம் மற்றும் மன அழுத்தத்ம் நிறைந்ததாக இருந்தன, ஆனால் எல்லன் எல்லாவறையும் நேர்த்தியாக சமாளித்து தொடர்ந்து பிரசங்கம் செய்து வந்தார். 

    இவர்களுடைய குடும்ப வாழ்கையில் நான்கு பிள்ளைகள் பிறந்தார்கள். இதில் இரண்டு பிள்ளைகள் சிறுவயதிலேய தொற்றுநோய் ஏற்பட்டு மரித்துப் போனார்கள். இது இவர்களுக்கு பெரிய மனச்சோர்வை உண்டாகியது. ஆயினும் கடவுள் கொடுத்த ஆறுதலினாலும் தைரியதினாலும் ஊழியத்தை தொடர்ந்து செய்து வந்தார்கள். பல நேரங்களில் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு ஊழியத்தின் நிமித்தம் பல இடங்களுக்கு சென்று, மாநாடுகளில் கலந்துகொண்டு கடவுள் கொடுத்த தரிசனைத்தை எல்லன் பகிர்ந்துகொண்டார். இது இவருக்கு மனவேதனை கொடுத்தாலும் இவருடைய ஊழியதினால் அட்வெண்டிஸ்ட் திருச்சபைகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்தது. பலர் மனம் திரும்பி இயேசுவை ஏற்றுக்கொண்டு, நீதியின் பாதையிலும் விசுவாச ஓட்டத்திலும் பலப்பட்டார்கள். இதை எண்ணி எல்லன் தன்னை தேற்றிக்கொண்டார். இந்நிலையில் கடவுள் தனக்கு இன்னும் அதிகமான தரிசனங்களை கொடுத்து, சிதறடிக்கப்பட்டுள்ள ஆடுகளை கூட்டிசேர்க்கும்படி கேட்டுக்கொள்வதாக தன் கணவரிடம் எல்லன் தெரிவித்தார். ஆகவே எல்லன் கண்ட தரிசனங்களை எல்லாம் ஒரு புத்தகமாக வெளியிடும்படியாக அவரது கணவர் கேட்டுக்கொண்டதினால் 1849 ஆம் ஆண்டு அவற்றை புத்தகமாக வெளியிட ஆரம்பித்தார்.

சனிக்கிழமையான ஓய்வுநாள்:
    ஏப்ரல் 3, 1847 அன்று, எல்லன் ஒரு தரிசனத்தை பெற்றதாகவும் அதில் கடவுளின் பத்து கற்பனைகளில் நான்காவது கட்டளை பற்றிய ஓய்வுநாளை வேதத்தின் அடிப்படையில் சனிகிழமை ஆசரிக்கும்படியாகவும், திருச்சபை மக்களுக்கு கடவுள் அநேக ஆலோசனைகளை கொடுத்ததாகவும் குறிப்பிடுகின்றார். ஜேம்ஸ் மற்றும் எல்லன் இருவருமே இந்த தரிசனம் வேதப்பூர்வமானது என்று நம்பி, சனிக்கிழமையை ஓய்வுநாளாகக் கொண்டாடத் தொடங்கினர். இந்த தரிசனமே செவன்த்-டே அட்வெண்டிஸ்ட் திருச்சபை கோட்பாடுகளுக்கு அடிப்படையாக அமைந்தது.

    ஏழாவது நாள் அட்வென்டிஸ்ட் திருச்சபை உதயம்: நவம்பர், 1855 இல், 28 வயதான எலன், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து மிச்சிகன் மாகாணத்திற்கு குடியேறினார். 1855-63 காலகட்டங்களில் அட்வென்டிஸ்டு திருச்சபையானது ஒரு கட்டுகோப்பாக இல்லாமல் ஒழுங்கமைக்கப்படாத விசுவாசிகளின் கூட்டமாக இருந்து வந்தது. இந்நிலையில் Ellan White, Joseph Bates, J.N. Andrew, எல்லனின் கணவர் James White ஆகியோர் வில்லியம் மில்லரின் ஆதரவாளர்களுடன் சேர்ந்து, சனிக்கிழமையை ஓய்வுநாளாக கொண்ட செவன்த்-டேஅட்வென்டிஸ்ட் திருச்சபை என்ற சிறிய அமைப்பை 21, மே மாதம் 1863 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மிக்சிகனில் உறுவாக்கினார்கள். எல்லனின் தரிசனங்கள், போதகங்கள், எழுத்துக்கள் ஏழாவது நாள் அட்வென்டிஸ்ட் திருச்சபை வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தன. 

    அமெரிக்காவில் 1863-85 காலகட்டத்தில் எல்லன் தன்னுடைய கணவருடன் பல இடங்களுக்கு பயணம் செய்து, மாநாடுகளையும் எழுப்புதல் கூடுகையையும் நடத்தி செவன்த்-டே அட்வென்டிஸ்ட் திருச்சபை வளர்ச்சி அடைவதர்க்கு முக்கிய பங்கு வகித்தார். இந்நிலையில் ஏழாவது நாள் அட்வென்டிஸ்ட் திருச்சபைகளை ஐரோப்பாவில் பரப்புவதற்காக 1885-88 ஆண்டுகளில் ஐரோப்பாவின் பல நாடுகளுக்கும், 1892-1901 காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவிற்க்கும் பயணம் செய்து ஏழாவது நாள் அட்வென்டிஸ்ட் திருச்சபையை கட்டி எழுப்பினார். எல்லனில் தரிசனங்களை கடவுளின் வார்த்தையாக இவர்கள் ஏற்றுகொண்டார்கள்.

அமெரிக்க ஊழியம்:
    1863 முதல் 1885 ஆண்டு கால கட்டத்தில் எல்லன் வைட்டின் தீர்க்கதரிசன ஊழியமானது அமெரிக்க மக்களிடையே அதிகமாக அங்கீகரிக்கப்பட்டது. எல்லன் ஏழாவது நாள் அட்வென்டிஸ்ட் திருச்சபை சார்பாக பயணம் செய்து, பல முகாம்கள், எழுப்புதல் கூட்டங்கள், மாநாடுகள் சிறைச்சாலைகள், என்று சிறிய பட்டணம் முதல் பெரிய பட்டணம் வரை சென்று நற்செய்திபணியும் சுவிசேஷ பணியும் செய்தார். இவருடைய போதகத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் மனந்திரும்பி, திருச்சபையில் அங்கத்தினர்களாக சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். இவருடைய அயராத உழைப்பினால் அமெரிக்க தேசமெங்கும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை பற்றிய போதனைகளை எல்லா திருச்சபைகளிலும் போதிக்கப்பட்டது.

எல்லன் எழுதிய புத்தகங்கள்:
    கடவுள் தனக்கு கொடுத்த தரிசனங்களையும் வெளிப்பாடுகளையும் எலன் ஒயிட் தொடர்ச்சியாக புத்தகங்களாக வெளியிட்டார். இதில் முக்கியமானது The Great Controversy ) between Christ and His Angels and Satan and His Angels (1888) Patriarchs and Prophets (1890), Steps to Christ (1892), Prophets and Kings (1917), The Desire of Ages (1898), The Acts of the Apostles (1911), Testimonies for the Church, 37 vols. 1855–1909, A Call to Medical Evangelism and Health Education 1900. எல்லன் இறக்கும் போது, 26 புத்தகங்களை எழுதி முடித்திருந்தார் மேலும் 5000 திற்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருந்தார்.

சைவ உணவு பிரச்சாரம்:
    எல்லன் ஒயிட் சைவ உணவு வகைகளுக்கு ஆதரவாளராக இருந்தார். இதையும் கடவுள் தரிசனமாக வெளிபடுத்தினார் என்று குறிப்பிட்டு, அவைகளை புத்தகமாக வெளியிட்டார். விலங்குகளை கண்ணியமாக நடத்துவதுடன், உணவிற்காக மிருகங்களை கொல்வதையும் எதிர்த்து எல்லன் எழுப்பினார். சைவ உணவானது கிறிஸ்தவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சியில் வளர உதவும் என்று நம்பினார்.

    உடல்நலம் சம்பந்தமாக கடவுளிடம் இருந்து பெற்ற தரிசனகளை Healthful Living’' “Laws Of Health and Testimonies,” The Health Food Ministry’ and ‘Counsels on Diet and Foods’. போன்ற புத்தகங்களாக வெளியிட்டார். எல்லன் எழுதிய சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் போன்ற தீர்க்கதரிசனங்கள் கடவுளை மகிமைப்படுத்த ஏழாம்நாள் அட்வெண்டிஸ்ட் திருச்சபை கோட்பாடுகளாக இருக்கின்றன. ஆனால் இவை ஒருமனிதனின் இரட்சிப்புக்கு தேவை என்பதை வலியுறுத்தவில்லை. இவருடைய போதகமானது அமெரிக்காவில் சைவ உணவுகள் தயாரிப்பு நிறுவனங்களின் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதில் Granola, Kellogg's corn flakes, Post cereals, Soyalac, Soymilk, Worthington Foods, and Morningstar Farms குறிப்பிடத்தக்கவை ஆகும்.

எலனின் சமூகப் பணி:
    எலன் ஒயிட் தனது வாழ்நாள் முழுவதும் கடவுளிடமிருந்து 2,000 க்கும் மேற்பட்ட தரிசனங்களை பெற்றதாகக் குறிப்பிடுகின்றார். ஏழாம்நாள் அட்வெண்டிஸ்ட் திருச்சபையானது இவற்றை கடவுளின் தீக்கதரிசனமாக கருதி, வேதாகமத்திற்க்கு இணையாக அங்கிகரிகின்றது. எல்லன் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா கண்டங்களில் பல பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வேதாகம கல்லூரிகள் நிறுவுவதில் எல்லன் முக்கிய பங்கு வகித்துள்ளார். 

    1865 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று, எல்லன் ஒயிட் நோயுற்றவர்களைக் கவனிப்பதற்காக ஒரு மருத்துவமனையை நிறுவ கடவுளின் தரிசனத்தை பெற்றதாக குறிப்பிடுகின்றார். இதன் அடிப்படையில் Western Health Reform Institute ஒன்று செப்டம்பர் 1866 இல் கலிபோர்னியாவின் ஓக்லாந்தில் திறக்கப்பட்டது. இங்கு சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கான போதனைகள் கற்பிக்கப்பட்டது. 1874 ஆம் ஆண்டில் செவன்த்-டே அட்வெண்டிஸ்ட் கல்வி நிறுவனத்தை Battle Creek College, Michkan னில் நிறுவினார். 1903 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் செவன்த்-டே அட்வெண்டிஸ்ட் திருச்சபை மூலம் நடத்தப்படும் மருத்துவமனைகளுக்கு தேவைக்கான மருத்துவர்களை பயிற்றுவிப்பதற்காக மருத்துவப் பள்ளிகளையும் எல்லன் நிறுவினார். 1909 ஆம் ஆண்டில், ஊழியர்களை உருவாக்குவதற்கு College of Medical Evangelists at Loma Linda, Otsego, Michigan என்ற இடத்தில் வேதாகம கல்லூரியை நிறுவினார். இந்த நிறுவனகள் அனைத்தும் கடவுள் கொடுத்த தரிசனத்தின் மூலமாக உன்டாகப்பட்டதாக எல்லன் குறிப்பிடுகின்றார்.

எல்லெனின் இறையியல்:
    எலன் ஒயிட் நற்செய்தி பணியாளராக இருந்து, வேதாகமத்திர்க்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார். இவருடைய போதனைகள் எல்லாம் சிலுவையை மையமாகவே கொண்டிருந்தது. இவரது ஆரம்பகால தரிசனங்களில் திரித்துவக் கோட்பாடு பற்றி எதுவும் குறிப்பிடவில்லை, ஆனால் பிற்காலத்தில் திரித்துவ கோட்பாடுகளை பற்றி குறிப்பிட்டுள்ளார். மரணத்திற்கு பிறகு ஒருமனிதனின் ஆத்துமா இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை வரைக்கும் பூமியில் தூங்கிகொண்டு இருப்பதாக குறிப்பிடுகின்றார். எல்லன் ஒரு வேதாகம கல்வியியல் இறையியலாளராக இல்லாமல் போதகராக, சொற்பொழிவாளராக இருந்ததால் வேதாகம கோட்பாடுகளை அதிகம் போதிக்கவில்லை. 

எலன் மீதான விமர்சனங்கள்:
    எலன் ஒயிட் வாழ்ந்த காலகட்டத்தில் அவரது விமர்சகர்களால் ஒரு சர்ச்சைக்குரிய நபராகக் கருதப்பட்டார், மேலும் இந்த சர்ச்சையின் பெரும்பகுதி எல்லனின் தரிசனங்கள், போதனைகள், எழுத்துக்கள் ளை பற்றியதாகும். பல விமர்சகர்கள், எலனின் தீர்க்கதரிசனங்களின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்பினார்கள். பலர், எல்லனின் தரிசனங்கள் எல்லாம் ஹிப்னாடிசத்தின்(Hypnotism) விளைவு என்று விமர்சனம் செய்தார்கள். மற்றவர்கள் எல்லன் ஹிஸ்டீரியா(Hysteria) அல்லது பிற மனநலக் கோளாறால் (Mental Disorder) பாதிக்கப்பட்டிருப்பதாக விமர்சனம் செய்தார்கள். பல வேதாகம அறிஞர்கள் எல்லன் ஒயிடின் "தீர்க்கதரிசன கூற்றுக்களை" நிராகரித்தனர், ஆனால் எல்லன் ஒரு "உண்மையான கிறிஸ்தவ விசுவாசி" என்று மட்டுமே அங்கீகரித்தார்கள். மருத்துவம், சுகாதாரம், மற்றும் உடல்நலம் போன்ற எல்லனின் எழுத்துக்கள் எல்லாம் பல தலைப்புகளில் பல மருத்துவர்களால் கட்டுரைகளாக வெளியிட்ட கருத்துக்களை உள்வாங்கி, தன்னுடைய புத்தகத்தில் எழுதியுள்ளதாக குற்றஞ்சாட்டினார்கள்.

    பல Main-Line திருச்சபைகள், எல்லனின் போதனைகளை வேதாகமத்திற்கு புறம்பான வெளிப்பாடுகள் என்றும் அவை துர்உபதேசங்கள் (Heritic) என்றும் கண்டிகின்றன. ஆனால் செவன்த்-டே அட்வெண்டிஸ்ட் திருச்சபை, எல்லனின் தரிசனங்களை கடவுளின் வார்த்தையாக கருதுகின்றார்கள். ஆகவே எல்லனின் தரிசனங்களையும், எழுத்துக்களையும் வேதாகமத்திற்கு நிகராகவே அதிகாரம் (Authority) கொண்டது என்று கருதுகின்றார்கள். எல்லன் எந்த விமர்ச்சனத்திற்க்கும் பதில் கொடுக்காமல் தனக்கு கிடைக்கப்பெற்ற தரிசனத்தை போதகத்திலும், அதை எழுதி புத்தகமாக வெளியிடுவதிலும் கவனம் செலுத்தினார்.

    கணவரின் மரணம்: 1865 ஆம் ஆண்டில் எல்லன் கணவர் ஜேம்ஸ் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார், ஆனால் அதிசயமாக குணமடைந்து மீண்டும் கடவுளின் ஊழியத்தை செய்ய ஆரம்பித்தார். ஆனால் சில ஆண்டுகளில் அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைய ஆரம்பித்ததினால் 60 வயது கடந்த நிலையில் ஆகஸ்ட் 6, 1881 அன்று அமெரிகாவின் மிக்சிகன் மாகாணத்தில் மரித்தார். இவருடைய அடக்க ஆராதனையில், அவருடைய கல்லறை அருகே நின்று கணவனை இழந்த நேரத்திலும், கடவுள் தன்னை நம்பி கொடுத்த ஊழியத்தை தொடர்ந்து செய்யப்போவதாகவும் எல்லன் அம்மையார் கூறினார்.

ஐரோப்பாவில் ஊழியம்(1885-1888):
    எல்லன் அம்மையார் ஏப்ரல் 1, 1874 இல் மீண்டும் ஒரு தரிசனத்தை கடவுள் கொடுத்ததாக குறிப்பிடுகின்றார்கள். இதில் செவன்த்-டே அட்வெண்டிஸ்ட் திருச்சபையை ஐரோப்பாவிற்கு கொண்டுசெல்ல எல்லன் அம்மையார், தன்னை ஒரு மிஷனெரியாக ஒப்புகொடுத்து, கடவுளின் வார்த்தைக்கு கீழ்படிந்து, தன்னுடைய மகனோடு ஐரோப்பா பயணமானார்கள். ஐரோப்பாவில் சுமார் மூன்று ஆண்டுகள் தங்கியிருந்து இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பாசல், சுவிட்சர்லாந்து, டென்மார்க், நார்வே மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளுக்குப் பயணங்களை மேற்கொண்டு, கடவுள் தனக்கு கொடுத்த தரிசனங்களை பகிர்ந்து கொண்டு, செவன்த்-டே அட்வெண்டிஸ்ட் திருச்சபைகளை ஸ்தாபித்து, பல பள்ளிகளையும், கல்லூரிகளையும், மருத்துவ மனைகளையும் நிறுவினார். ஐரோப்பாவில் பாசெல், சுவிட்சர்லாந்து மற்றும் நார்வேயில் இருந்தபோது அமெரிக்காவிற்கு வெளியே பல அச்சகங்கள் இயங்குவதை ஜனவரி 3, 1875 அன்று கடவுள் தன்னுடைய தரிசனங்களில் வெளிபடுத்தியதாக குறிப்பிட்டுள்ளதை நினைவுகூறுகின்றார்.

ஆஸ்திரேலியாவில் ஊழியம் (1891-1900):
    கடவுள் மீண்டும் எல்லன் அம்மையாருக்கு தரிசனம் கொடுத்து ஆஸ்திரேலியாவிற்கு மிஷனெரியாக போக கூறியதினால் தன்னுடைய வாத நோயின் பலவீனத்தின் மத்தியிலும் 1891 ஆம் ஆண்டு எல்லன் அம்மையார் செவன்த்-டே அட்வென்டிஸ்ட் திருச்சபை மிஷனரியாக ஆஸ்திரேலியா சென்றார். ஆஸ்திரேலியாவில் சுமார் 9 ஆண்டுகள் இருந்து தன்னுடைய போதகத்தினாலும், எழுதுக்களினாலும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்களை கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு ஆயத்தம் பண்ணினார்கள். இதன் காரணமாக ஆஸ்திரேலியாவிலும் ஏராளமான செவன்த்-டே அட்வெண்டிஸ்ட் திருச்சபைகள் ஸ்தாபிக்கப்பட்டது. அங்கு 1892 இல் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஒரு வேதாக கல்லூரியை நிறுவி, அநேக செவன்த்-டே அட்வெண்டிஸ்ட் திருச்சபை ஊழியர்களை உருவாக்கினார். அப்படியே டாஸ்மேனியா, விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து மற்றும் நியூசிலாந்து முழுவதும் பயணம் செய்து, பல மாநாடுகளை நடத்தி ஆயிரகணக்கான மக்களை ஆத்துமா ஆதாயம் செய்து, அமெரிக்கா திரும்பினார்.

எல்லன் அம்மையாரின் மரணம்:
    71 வயதில் அமெரிக்காவுக்குத் திரும்பி வந்த எல்லன் அம்மையார், வடக்கு கலிபோர்னியாவிற்க்கு குடிபெயர்ந்து, தன்னுடைய வாழ்நாளின் எஞ்சிய ஆண்டுகளில், செவன்த்-டே அட்வெண்டிஸ்ட் திருச்சபை பணிகளில் அதிக ஆர்வத்தையும் நேரத்தையும் செலவழித்து கடவுள் தனக்கு கொடுத்த தரிசனங்களை புத்தகம் வெளியிடுவதிலும் செலவிட்டார். 

    எல்லன் அம்மையார், தன்னுடைய இறுதிகாலம் நெருங்கிவிட்டத்தை உணர்ந்ததால் தொலைதூர பயணம் எதுவும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் பிப்ரவரி 1915 இல், நாற்காலியில் இருந்து ஜெபித்துக்கொண்டு இருந்து எழுந்த வேளையில் தடுமாறி விழுந்ததில் அவரது இடுப்பு எலும்பு நகர்ந்துவிட்டது. ஆகவே சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்து பல ஆலோசனைகளை கொடுத்துக்கொண்டு இருந்த வேளைகளில் எலன் ஒயிட் அம்மையார் தன்னுடைய 87 வயதில் 1915 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி, இவ்வுலக ஓட்டத்தை நிறைவு செய்தார்கள். அம்மையாரின் சரீரம், அமெரிக்காவின் மிக்சிகன் மாகணத்தில் அவரது கணவனார் அடக்கம் செய்யப்பட்டிருந்த கல்லறைக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டார்.

புகழும் பெருமையும்:
    எலன் ஜி. வைட் (Ellen Gould White) அம்மையார், கிறித்தவ உலகத்திற்கு கடவுள் பரிசளித்த பெண் ஊழியக்காரி ஆவார். கடவுள் இவருக்கு கொடுத்த தரிசனங்களை மையமாக கொண்டு செய்த போதனைகள் மற்றும் எழுத்துக்கள் மூலமாக கோடிகணக்கான மக்களின் விசுவாச வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவர் எழுதிய புத்தகங்கள் சுமார் 320 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, அவை அனைத்தும் இன்றும் செவன்த்-டே அட்வென்டிஸ்ட் திருச்சபையில் வேதாகமத்திற்கு இணையாக அங்கீகரிக்கப்படுகின்றது. 

    இலக்கிய வரலாற்றில் உலக அளவில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட எழுத்தாளர்களில் எல்லன் அம்மையார் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. செவன்த்-டே அட்வென்டிஸ்ட் திருச்சபையானது கடந்த காலங்களில் பல Main-Line திருச்சபைகளால் துர்உபதேச பிரிவாக (Heretic) கருதப்பட்டு வந்த நிலையில் இன்று எல்லா திருச்சபை பிரிவுகளாலும் அங்கீகரிக்கப்படுகின்றது. ஒரு சில ஆயிரங்களில் அங்கத்தினர்களாக கொண்ட அட்வெண்டிஸ்ட் திருச்சபையானது, எல்லன் அம்மையாரின் கடுமையான உழைப்பினாலும், நற்செய்தி பரப்புரை செய்ததினாலும் அவருடைய காலத்தில் 136,879 என்ற எண்ணிகையில் இருந்த உறுப்பினர்கள் இன்று உலக அளவில் சுமார் 200 க்கும் அதிகமான நாடுகளில் 15 மில்லியன் அங்கத்தினர்களை கொண்டு இயங்கி வருகின்றது. எல்லன் ஜி. ஒயிட் அம்மையாரின் வாழ்க்கைக்காக கடவுளுக்கு நன்றி செலுத்துவோம். இந்த அம்மையாரைப்போலவே அநேக பெண்கள் எழும்பி கடவுளின் இராஜியத்தை கட்டுவார்களாக. ஆமென்.

    இதை வாசிக்கிற அன்பு சகோதரிகளே, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கிக்கொண்டு இருந்தபோது, எல்லா ஆண்களும் அவரைவிட்டுவிட்டு ஓடிப்போனார்கள். ஆகவே உயித்தெழுந்த இயேசு கிறிஸ்து முதன் முதலில் ஆண்களுக்கு தன்னை வெளிப்படுத்தாமல், ஒரு பெண்ணுக்கு தம்மை வெளிப்படுத்தி, அவள் மூலமாக கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் செய்தி ஆண்களுக்கும் மற்ற எல்லோருக்கும் அறிவிக்கப்பட்டது. இயேசுவானவர் தன்னை முதன் முதலில் மேசியா என்று ஒரு பெண்ணுக்குத்தான் வெளிப்படுத்தினார். ஆதி திருச்சபையில் முதல் 500 ஆண்டுகளுக்குள் பல பெண்கள் இறையியலாளர்களாக (Theologians), சுவிசேஷகர்களாக (Evangelists), அப்போஸ்தலர்களாக (Apostles), தீர்க்கதரிசிகளாக (Prophetess), உதவி ஆயர்களாக (Deaconess), ஆயர்களாக (Presbyters) மற்றும் பேராயர்களாக (Bishops) கிறிஸ்துவுக்கு சிறந்த சேனாதிபதிகளாக தங்களை அற்பணித்து எங்கோ ஒரு மூலையில் எருசலேமுக்குள் இருந்த கிறிஸ்தவத்தை உலக மதமாக மாற்றினார்கள். இதில் பெண்களின் பங்கு மகத்தானது, அளவிடப்பபட முடியாது. 

    பிற்காலத்தில் கிபி 5 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவம், ரோமானிய மதமாக அங்கிகரிக்கப்பட்டதால், ஆணாதிக்கம் நிறைந்த ரோம கலாச்சாரம் கிறிஸ் தவத்தில் ஊடுருவி, 1 கொரி 14:34-36, 1 தீமோ 2:11-15, 1 கொரி 11:3, எபே 5: 22-24 ஆகிய வசனங்களுக்கு தவறான வியாக்கியானங்களை கொடுத்து திருச்சபையில் 50% இருக்கும் பெண்களையும், பெண்களின் திறமைகளையும் வெளியே கொண்டுவரவிடாமல், பெண்களின் வாயை கடந்த 1500 ஆண்டுகளாக அடைத்துவிட்டது.

    21 ம் நூற்றாண்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகம் எவ்வளவோ மாறிக்கொண்டு இருக்கிறது. ஆனால் ஆணாதிக்கம் நிறைந்த இன்றைய கிறிஸ்தவ திருச்சபை தலைமைத்துவம் பெண்களை உதவி ஆயர்களாக, ஆயர்களாக மற்றும் பேராயர்களாக அங்கிகரிக்க மறுக்கிறது. கடவுளின் சாயலில் சமமாக படைக்கப்பட்ட பெண்களை ஏற்றுக்கொள்வை மறுக்கிறது. இது கடவுளுக்கு எதிர்த்து நிற்பதற்கு சமம் என்பதை உணராமல் இருக்கிறது.

    ஆகவே பெண்களே, ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் கட்டிடமாகிய திருச்சபை உங்களை அங்கிகரிக்க மறுக்கலாம். ஆனால் திருச்சபை என்பது கட்டிடம் அல்ல, இது விசுவாசிகளின் கூடுகை என்பதை மறந்து போகாதேயுங்கள். இதற்கு என்று தனி கட்டிடம் தேவையில்லை. ஆகவே உங்கள் வீடுகளே திருச்சபையாக மாறட்டும். நீங்கள் படிக்கிற பள்ளிகள் மற்றும் கல்லூரி நண்பர்களின் ஐக்கியமே திருச்சபையாக மாறட்டும். நீங்கள் வேலைசெய்யும் இடங்களில் இருக்கும் நண்பர்களின் ஐக்கியமே திருச்சபையாக மாறட்டும். 

    இந்தியாவில் சுமார் 6,75,982 கிராமங்கள் உண்டு. இதில் சுமார் 1,12,345 கிராமங்களில் மாத்திரம் ஆலயங்கள் இருக்கிறது. தெபோராளாகிய நீ எழும்புமளவும், இந்திய கிராமங்கள் பாழாய் போய்க்கொண்டுதான் இருக்கபோகிறது (நியா 5:7) . ஆகவே பெண்களின் வாழ்கையை ஒளியேற்றுவதற்காக தன்னையே கொடுத்த இயேசு கிறிஸ்துவுக்கு ஏதாவது வகையில் நற்செய்திபணி செய். உன் மூலமாக இயேசு கிறிஸ்துவின் இராஜியம் நீ இருக்கும் இடத்தில் கட்டப்படுவதாக. ஆமென்.


====================
The Daughters of the Church
Ellen Gould White (1827-1915)
======================
Early Life:
    Ellen Gould White was born on 26 November 1827 in the, United States of America. She was the seventh of eight children of a hat-maker Robert Harmon, and wife Eunice née Gould. An unfortunate incident occurred when White was nine years old. While walking home from school, a classmate threw a rock at White, hitting her in the face and knocking her unconscious for three weeks. Her health was so impaired that she could not continue her education, and was forced to give up her ambitions of becoming a scholar.

Baptism of Ellen White:
    It was during the religious revival that swept the American frontier in the early 19th century that William Miller (1782–1849), known for his powerful appeals to sinners to come to Christ, caused Ellen White to recognize her sinfulness, began to seek the Savior in a Methodist camp meeting at the age of 12, obtaining the sweet assurance that her sins were forgiven. On June 26, 1842, she was baptized. In 1842, at age 15, Ellen followed her family in becoming a follower of William Miller. In the Methodist "class meetings", Ellen was an earnest missionary worker, seeking to win her youthful friends and doing her part in heralding the Advent message.

Great Disappointment:
    After years of Bible study William Miller began to preach in 1831 that the present world would end “about the year 1843”. Primarily on the basis of his interpretation of Daniel 8:14, which spoke of 2,300 days, William Miller concluded that 457 BC was the beginning of the 2,300 day/year prophecy which meant that it would end about 1843–1844. As the year 1843 approached, Miller predicted more specifically that Christ would return between March 21, 1843, and March 21, 1844. 

    As the time approached when Christ was expected to return, ministers of different denominations in Portland united their efforts to call sinners to repentance and to prepare for Christ's return. When the predicted Second Coming did not occur, Miller confessed his error and left the movement, his follower Samuel Snow suggested a new date, October 22, 1844. . When Christ did not return at that time either, many followers of Miller joined with the orthodox churches and many Adventists to waver in their faith. The Great Disappointment is a point of ridicule of the Adventists.

Conflict with Methodist Church:
    Ellen was deeply disappointed when Jesus did not return in 1843 and again in 22 October 1844 as predicted by Millerites. The conflict between the Methodist and Millerite beliefs resulted in the Harmon family's removal from the Methodist Church because of their sympathies with the Millerite movement and its Adventist views. Ellen White remained earnest and tried to make sense of the failed prediction.

The First Vision:
    Ellen White received the first vision at the age of 17 after the Millerite Great Disappointment in December 1844. Ellen says that while praying, the power of God came upon me as she never had felt it before, and she was wrapped up in a vision of God's glory, and seemed to be rising higher and higher from the earth and was shown something of the travels of the Advent people to the Holy City. The vision continued with a portrayal of Christ's second coming, following which the Advent people entered the New Jerusalem; and ended with her returning to earth feeling lonely, desolate and longing for that "better world." 

Public Testimony:
    God called Ellen to travel and share this vision, but she feared that she might become self-exalted. Lacking self-confidence and fearful of ridicule, she hesitated, but she eventually went forward in faith. News of her visions spread and White was soon traveling and speaking to groups of Millerite followers in Maine and the surrounding area. Two Millerites claimed to have had visions prior to White – William Ellis Foy (1818–1893), and Hazen Foss (1818?–1893), White's brother-in-law. Adventists believe the prophetic gift offered to these two men was passed on to White when they rejected it. When White revealed her vision to others, they accepted it as a gift from God. She traveled to churches and camp meetings, where she was accepted as a messenger of God. This vision was a great encouragement to the Advent believers, for it affirmed their belief in the imminent return of Christ.

Visions of Ellen:
    From 1844 to 1863 White allegedly experienced between 100 and 200 visions, typically in public places and meeting halls. She believed that God had selected her as a prophet through whom God would communicate to the world and prepare for Christ's second coming. March 14, 1858, in Lovett's Grove, Ohio in USA, Ellen White received a vision while attending a funeral service. In writing about the vision, she stated that she received practical instruction for church members, and more significantly, a cosmic sweep of the conflict "between Christ and His angels, and Satan and his angels."

Marriage Life:
    On a trip to Orrington, Maine, Ellen met a young Adventist preacher, James White, then 23 years of age. He had heard of Ellen and her reputation as a devoted and active Christian among the Portland Adventists. In 1846 Ellen met James White, a fellow Millerite, and together they consolidated the group of Millerites and were married in Portland, Maine, on August 30, 1846. The early years of their union were poverty-filled and stressful but Ellen continued to preach along with trying to manage her family. 

The Whites had four sons:
    Henry Nichols, James Edson, William Clarence and John Herbert. Only Edson and William lived to adulthood. John Herbert died of erysipelas at the age of two months, and Henry died of pneumonia at the age of 16. Sickness and bereavement played their part in bringing distress and discouragement. The next few years she wrote extensively, traveled widely to visit the “scattered flock,” and attended conferences. Being separated from her children distressed White, but she felt God was calling her to preach. James White encouraged his wife to write down the messages received in visions and in 1849 the couple began publishing her teachings.

Sabbath on Saturday:
    On April 3, 1847, Ellen White was shown in vision, the law of God in the heavenly sanctuary, with a halo of light around the fourth commandment. In writing about the vision, she stated that she received practical instruction for church members. This view brought a clearer understanding of the importance of the Sabbath doctrine, and confirmed the confidence of the Adventists in it. Both James and Ellen convinced that her vision were scriptural and began to keep Saturday as the Sabbath.

Seventh-day Adventist Church:
    In In November, 1855, Ellen moved from rented quarters in Rochester, New York, to the newly erected building in Battle Creek, Michigan. Up until this time, the Adventists were a scattered, unorganized group of believers. Along with other Adventist leaders such as Joseph Bates and her husband James White, she was instrumental within a small group of early Adventists who formed what became known as the Seventh-day Adventist Church. The spoken and written versions of her visions played a significant part in establishing and shaping the organizational structure of the emerging Sabbatarian Adventist Church. Ellen played a key role in forming the Seventh-Day Adventist Church in the 1870s, developing its evangelistic outreach, working for the movement in the U.S.A. and in Europe in 1885-88 and Australia (1892-1901).

Ministry in USA:
    From 1861 to 1881, Ellen White's prophetic ministry became increasingly recognized among Sabbatarian Adventists. She traveled extensively on behalf of the Seventh - day Adventist church and spoke at camp meetings, churches, conferences, in town squares, and even prisons. She addressed many large audiences, the largest being the Sunday afternoon congregation at Groveland, Massachusetts, late in August, 1877, at which time 20,000 people heard her speak on the broad aspect of Christian temperance in Groveland, Massachusetts. The Seventh-Day Church's membership increased five-fold between 1863 and 1880.

Writings of Ellen:
    Ellen White was inspired to write a series of books include: Patriarchs and Prophets (1890), describing Biblical History from creation to Israel's King David. Prophets and Kings (1917), describing Biblical History from King Solomon until Israel returned from exile. The Desire of Ages (1898), comprehensive volume on the life of Jesus Christ. The Acts of the Apostles (1911) detailing the rise of the early Christian church in the first century. The Great Controversy (1888) between Christ and His Angels and Satan and His Angels, described the war between good and evil and the second coming of Christ. At the time of her death, she wrote 26 books based on her visions, led a health reform movement, and established schools and sanitariums.

Vegetarianism:
    As an advocate of vegetarianism, Ellen stressed on the importance of treating animals with respect and believed that vegetarianism would help human beings grow spiritually. Her views on health, especially her opposition to the use of coffee, tea, meat, and drugs, were incorporated into Seventh-day Adventist practice. Some of her works on health and nutrition include ‘Healthful Living’, ‘Important Facts Of Faith: Laws Of Health, And Testimonies’, ‘The Health Food Ministry’ and ‘Counsels on Diet and Foods’. The health reform prophecies she delivered have become church doctrines to glorify God but does not make vegetarianism a requirement for salvation. White had a major influence on the development of vegetarian foods and vegetarian food product companies. These included granola, Kellogg's corn flakes, Post cereals, Soyalac soymilk, Worthington Foods, and Morningstar Farms.

Social Work of Ellen:
    Ellen White claimed to have received over 2,000 visions and dreams from God in public and private meetings throughout her life. She verbally described the content of each vision and published it for public consumption. The Adventist pioneers viewed these experiences as the Biblical gift of prophecy. Ellen has been instrumental in the establishment of schools Colleges, and medical centers all over the world. On Christmas Day 1865, Mrs. White received divine instruction to establish an institution to care for the sick, while teaching the patients the principles of healthful living. In obedience to this instruction, the Western Health Reform Institute, later known as the Battle Creek Sanatorium, was opened in September 1866 in Okland, California. In 1874 Ellen White helped found Battle Creek College, an Adventist educational institution. In 1903, she also established medical schools to train doctors for the church's health facilities in Washington D.C. In 1909, she founded the College of Medical Evangelists at Loma Linda, Otsego, Michigan.

Theology of Ellen:
    Ellen White was evangelical, in that she had high regard for the Bible, saw the cross as central, supported righteousness by faith, believed in Christian activism, and sought to restore New Testament Christianity. Her theology did not include a doctrine of the Trinity (generally speaking, she lacked doctrine, since she was a preacher/orator rather than an academic theologian). Her earlier visions and writings do not clearly reveal the Three Persons of the Godhead, her later works strongly bring them out.

Critics on Ellen:
    Ellen White was considered a controversial figure by her critics, and much of the controversy centered on her reports of visionary experiences and on the use of other sources in her writings. Critics have voiced doubts as to the reliability of Ellen G. White as a prophetess and the authenticity of her visions. Some believed they were the result of hypnotism. Others thought she suffered from hysteria or other mental disorder. Many Bible scholars rejected White's “prophetic claims", yet saw her as a “genuine Christian believer". The health reform ideas were readily available in publications and some people suggested that Ellen White took her ideas from medical doctors who had previously published articles on the topic. Today, there are in Main-Line Christian churches, who continue to regard her as a hero. But the followers of Ellen G. White regard her as a modern-day prophet who received messages from God.

Death of Husband:
    James suffered a paralyzing stroke in 1865, but miraculously recovered and began to labor for the cause of God again. But again his health deteriorated in the late 1870s and his long years of mental and physical overwork had diminished his life forces, and he died in Battle Creek on August 6, 1881. He was 60 years old. Standing at the side of her husband's casket at the funeral service, she re-determined herself to continue on in the mission that had been entrusted to her, despite the loss of her husband.

Mission to Europe (1885-1888):
    An important vision was given to Ellen White on April 1, 1874, while in the West, at which time there was opened up to her the marvelous way in which the denomination's work was to broaden and develop not only in the western States but overseas. In obedience to her God’s call and through her visions, she made trips to England, Germany, France, Italy, Basel, Switzerland, Denmark, Norway, and Sweden where she visited places she had seen in vision in connection with the Dark Ages and the Reformation. Both in Basel, Switzerland, and Christiana (now Oslo), Norway, Ellen White recognized the printing presses as those shown her in the vision of January 3, 1875, when she saw many presses operating in lands outside North America.

Mission to Australia (1891-1900):
    In 1891, Ellen went to Australia as a Seventh - day Adventist missionary. Her presence in Australia was much appreciated by the new believers, and her messages of counsel regarding the developing work contributed much, firmly establishing denominational interests in the southern continent. In response to her many strong appeals, a Bible school was opened in the city of Melbourne, Australia, in 1892. Despite severe attacks of rheumatism, she travelled throughout Tasmania, Victoria, South Australia, New South Wales, Queensland and New Zealand, attending Church meetings and giving public lectures to audiences sometimes numbering thousands. She lived in Australia for nine years and then returned to USA.

Death of Ellen:
    When she returned to the United States at the age of 71, she moved to Elmshaven, a rural town in northern California. Throughout the remaining years of her life, she maintained a deep interest and concern for the church work and spent the 15 remaining years of her life in book preparation, writing, personal labor, and travel. During her final years she traveled less frequently as she concentrated upon writing her last works for the church. In February 1915, White broke her hip in a fall. She was confined to a wheelchair. Ellen White died at the age of 87 years on 16 July 1915 at St Helena, California, and was buried beside her husband in Oak Hill cemetery, Battle Creek, Michigan.

Legacy:
    Ellen G. White was a God gifted woman who inspired millions through her religious writings. Ellen White's books are still considered a major source of inspiration in the Seventh-day Adventist Church on a par with the Bible and they've been translated into 320 languages. She is also one of the most translated authors in the history of literature. Ellen Gould White firmly established herself as one of the Church's most influential members. The Seventh Day Adventist Church is considered by a number of mainline churches to be a heretical sect, though it has gained respect and acceptance with time. Ellen White lived to see the Advent movement grow from a handful of believers to a world-wide membership of 136,879 that, by 2017, had exceeded 14 million congregations in more than 200 countries. Ellen White is believed to have been a woman of remarkable spiritual gifts whose religious efforts made an impact on millions of people around the world. Let us thank God for the Life of Ellen G. White…Amen.

    Dear beloved readers, as you know that when Jesus was hanging on the Cross, all the male disciples left Him alone and only the women were under the Cross. Because of this the resurrected Jesus Christ, revealed Himself first to the woman and through her the mesaage of resurrected Christ passed on to men and others. Jesus first revealed Himself as Messiah to the woman. In the early church for a first 500 years of the history of Christianity, many women served as theologians, evangelists, apostles, prophetess, deaconess, presbyters and Bishops. The women made the local Christianity into an international level. So the role of women is highly regarded in the early church.

    When Christianity become the official religion of the Roman empire in the 5th century, the male dominated Roman culture influenced Christianity. Through the misinterpretations of 1 Cor 14:34-36, 1 Tim 2:11-15, 1 Cor 11:3, Eph 5:22-24, the male dominated Church leaders silenced the voices of women in the Church for the past 1500 years.

    We are living in the 21st Century and the things are rapidly changing, but the church leaders stereotyped women and hesitated to ordain them as Deacons, Presbyters and Bishops. God created men and women in His own Image and the Church leaders fail to accept this reality and it is totally against God's plan in salvation History.

    As we are living in India, we have 1,12,345 churches out of 6,75,982 villages. Until and unless you rise as Deborah, as a mother of India, the villagers will be ceased. Jesus gave His life for the empowerment of women. So take this as a challenge and do something for the extension of His Kingdom wherever you are. The Church may not recognize you but remember that the building is not the church but it is the fellowship of believers. So let your home be a place for your church, you can share about Jesus among your friends in schools, colleges and universities. You can share about Jesus in your work places among your friends. It is my prayer that you can be a channel of blessings to many others for His Glory. Amen.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.