=================
திருச்சபையின் செல்ல மகள்கள்
பண்டித ரமாபாய் (1858-1922)
==================
ரமாபாய் அவர்கள் மகாராஷ்ரா மாநிலத்தில் ஒரு இந்து பிராமண குடும்பத்தில் ஆனந்த் சாஸ்திரி மகளாக 1858 ம் ஆண்டு பிறந்தார்.
இந்துமத பக்திநிறைந்த இவரதுகுடும்த்தினர் பல புண்ணிய ஸ்தலங்கள் சென்று நீராடி அங்கிருந்த ஆலயங்களில் பக்த கோடிகளுக்கு சமஸ்கிருதத்தில் சுலோகங்கள் உபநியாசம் செய்வது வழக்கம்
ரமாபாய் அவர்களின் பெற்றோர்கள், பெண்கள் கல்வி அறிவு பெறமுடியாமலிருந்த சூழ்நிலையில் சிறுவயதிலேயே சமஸ்கிருத மொழியையும், பிற பிறமொழிகளையும் ரமாபாய்க்கு கற்று கொடுத்தார்கள். ஆகவே 12 வயதுக்குள் ரமாபாய் 18,000 த்திற்கும் அதிகமான சமஸ்கிருத மொழியில் மனப்பாடம் செய்திருந்தார்.
ரமாபாய் இந்து கோவில்களில் பழம் புராண பாடல்களை பாடி சொற்பொழிவு ஆற்றுவார்.. மேலும் மராத்தி, பெங்காலி, இந்தி, ஒரியா, கன்னடம், தெலுங்கு, குஜராத்தி உட்பட 8 மொழிகளில் பேசவும், எழுதவும் புலமை பெற்று விழங்கினார். ஆகவே கல்கத்தாவில் சமஸ்கிருதத்தில் சொற்பொழிவு நடத்த ஆரம்பித்தார். ஆகவே ஒரு பெண் கல்வி அறிவுடன், போதனைகளை செய்வதை பார்த்து அவருடைய கூரிய அறிவை பாராட்டி இவருக்கு பண்டிதர் என்ற பட்டத்தை வழங்கி கௌரவபடுத்தியது. இந்தியாவில் பண்டிதர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி ரமாபாய் அவர்களே.
ரமாபாயின் இளமை கால வாழ்க்கை கொடிய வேதனை நிறைந்த ஒன்றாகவே இருந்தது. 1877 ம் ஆண்டு ஏற்பட்ட கொடிய பஞ்சமும், காலரா நோயின் தாக்கத்தினால் ரமாபாயின் தகப்பனார், தாய், சகோதரிமார் யாவரும் ஒருவர்பின் மரித்துப்போனார்கள். இப்போது ரமாபாயும் அவருடைய சகோதரனும் தனித்து விடப்பட்டனர்.
ரமாபாயின் 18 ம் வயதில் திருமணமாகி இரண்டு வருடத்திற்குள் 7 மாத கர்பிணியாய் இருக்கும் போது அவருடைய கணவரும் மரித்துவிட்டார். தமது இளம் வயதிலேயே ரமாபாயின் வாழ்க்கை சூனியமாகிவிட்டது. ஒரு கால கட்டத்தில் சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்த ரமாபாயும் அவரது சகோதரனும் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளமுடிவு செய்தபோது கல்கத்தாவில் இருந்த ஒரு இந்துமத பிராமண சமுதாயத்திலிருந்து ஆண்டவரை ஏற்றுக்கொண்ட நெகேமியா கோரே என்பவர் இயேசு கிறிஸ்துவின் நற்செய்திபணியின் மூலமாய் இயேசு கிறிஸ்துவைப் பற்றி ரமாபாய் அவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்து ஒரு வேதாகமத்தையும் கொடுத்தார். அன்றிலிருந்து ரமாபாய் பரிசுத்த வேதாகமத்தை வாசிக்க ஆரம்பித்தார். கிறிஸ்தவ ஆராதனைகளும் ஊழியங்களும் அவரை அதிகம் கவர்ந்தன. இதன் மூலம் உள்ளத்தில் சமாதானமும் இயேசுவின் அன்பையும் உணர்ந்து கொண்டார்.
பின்னர் ரமாபாய்க்கு அநேக மிஷனெரிகளின் ஐக்கியம் கிடைத்தது. ஆகவே தன் மகள் மனோரமாவுடன் கல்கத்தாவிலிருந்து பூனா சென்றார். அங்கு வாழ்ந்துவந்த மிஷனெரிகள் திரு. ஆலென் மற்றும் திரு. ஹர்போட் கிறிஸ்துவைபற்றி அநேக சத்தியங்களை கற்று கொடுத்தார்கள்.
கிறிஸ்துவையும் அவருடைய நற்செய்தியையும் படித்த ரமாபாய் கிறிஸ்துவைப்பற்றி இன்னும் அறிய விருப்பம் கொண்டார். ஆகவே கிறிஸ்துவை இன்னும் அறிந்துகொள்ள 1883 ம் ஆண்டு இங்கிலாந்துக்கு படிக்க சென்றார். இவரை ஏற்றுக்கொண்ட மிஷனெரிகள் இவரது விசுவாசத்தை பலப்படுத்தினார்கள்.
இங்கிலாந்து தேசத்தில் நடைபெற்ற ஒரு எழுப்புதல் கூட்டத்தில் கலந்துகொண்ட ரமாபாய், இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்.
கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டபின் கிறிஸ்துவுக்காய் வாழவேண்டும், செயல்படவேண்டும் என்று வாஞ்சையோடு ஜெபிபித்துக்கொண்டு இருக்கும் போது இயேசுவானவர் இந்திய தேசத்தின் பெண்களின் நிலையை ரமாபாய்க்கு கான்பித்தார். இதன் மூலம் இயேசு கிறிஸ்து மாத்திரமே பெண்களுக்கு இரட்சகர், அவர் ஒருவர் மாத்திரமே வாழ்க்கையில் நசிந்துபோன இந்திய பெண்களுக்கு வாழ்க்கை கொடுக்கமுடியும் என்பதை உணர்ந்து கொண்டார். ஆகவே தன்னை இயேசு கிறிஸ்வின் சேவைக்கு முழுமையாய் அற்பணித்து, அங்குள்ள ஆலயத்தில் ரமாபாயும் அவருடைய மகள் மனோரமாவும் 1883 ம் ஆண்டு செப்டம்பர் 29 ம் நாள் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
பின்னர் இந்தியாவந்து பெண்களின் முன்னேற்றத்திற்கு என்று பம்பாயில் சாரதா சதன் என்ற அமைப்பை தொடங்கி ஆதரவற்ற பெண்கள், விதவைகள், சரீரத்தில் ஊனமுற்ற பெண்கள் மற்றும் அனாதைகளின் மேம்பாட்டிற்காக செயல்பட்டார்கள். இளம் வயதிலே பல இன்னல்களை வாழ்வில் அனுபவித்தாலும் அவைகளை பொருட்படுத்தாது சமூகதீமைகளை வேருடன் அகற்ற தன்னை அற்பணித்தார்.
சாரதா சதனின் தேவைகளுக்காக ரமாபாய் கர்த்தரை நம்பியே இருந்தார். அவரிடம் கானப்பட்ட தாழ்மை, அன்பு, பொருமை, தன்னலமற்ற செயல்கள் மற்ற பெண்களை கிறிஸ்துவண்டை வழிநடத்திற்று. சாரதா சதன் பெண்களால் நிரம்பி வழிந்தது. முதலில் இரண்டு இளம் விதவைகள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு ஞானஸ்நானம் பெற்றனர்.
இந்நிலையில் 1887 ம் ஆண்டு அமெரிக்கா தேசம் சென்ற ரமாபாய் அங்கு ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு கூட்டத்தில் The High Caste Hindu Woman( உயர்ஜாதி இந்து பெண்) என்ற புத்தகத்தை வெளியிட்டு அதன் மூலம் இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெற்று கொண்டிருந்த சமுதாய கொடுமைகளான *சதி அல்லது உடன்கட்டை ஏறுதல் (கணவன் மரித்தால் மனைவியை உயிரோடு எரித்தல்), தேவதாசி, பெண் குழந்தை நரபலி, இளம்பெண் திருமணம், பெண்களுக்கு கல்வி மறுத்தல், தாழ்ந்த குலபெண்களை இழிவுபடுத்துதல் போன்ற கொடுமைகளை எடுத்துரைத்து அவர்களின் மறுவாழ்வுக்கு உதவும்படி கேட்டுக்கொண்டார்.
இதை கேள்விபட்ட அமெரிக்க தேசத்திலுள்ள போஸ்டன்( Bosten) நகர மக்கள் இந்தியாவில் சிறுபிள்ளைகளுக்கு என்று ஒரு பாடசாலையையும் மற்றும் பெண்களுக்கு என்று விடுதியையும் கட்டி கொடுப்பதாக வாக்குக்கொடுத்தனர்.
இதினிமித்தம் 1889 ம் ஆண்டு ரமாபாய் அவர்கள் சாரதா சதனில் போதிய இடவசதி இல்லாததால் பூனா பகுதிக்கு இடம்மாறி அங்கு முக்தி மிஷன் என்று பெண்களுக்கான விடுதியை ஏற்படுத்தினார்.
முக்தி மிஷன் ஆதரவற்ற பெண்களின் அடைக்கல பட்டணம். திக்கற்ற பெண்களின் உறைவிடம் மற்றும் தேவதாசிகளின் தெய்வீக நிலையமாக செயல்பட ஆரம்பித்தது.
முக்தி மிஷனில் சிறுவர்களுக்கு கல்வி அறிவும் பெண்களுக்கு, தொழிற்கல்வியான தையற்கலை, துணி நெய்தல், பால் பண்ணை, கயிறு திரித்தல், தோட்ட வேலைகள் செய்தல், ரொட்டி செய்தல் போன்றவற்றை கற்றுக்கொடுத்தார். இதுதான் மகாராஷ்ட்ர மாநிலத்தின் முதல் பெண்கள் விடுதி ஆகும்.
இந்நிலையில் 1895-96 ல் ஏற்பட்ட கடும் பஞ்சம் மற்றும் காலரா போன்ற நோயின் காரணமாக பலர் மரித்துப்போனாலர்கள். இதனால் அநேக சிறு பிள்ளைகள், அநாதைகள், என்று 300 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் தேவதாசிகளிற் பிள்ளைகள் முக்தி மிஷனுக்கு அடைக்கலம் தேடி வந்தார்கள்.
இந்த விடுதியில் ஆயிரத்திற்கும் அதிகமான இளம் விதவைகள், தேவதாசி முறையிலிருந்து வெளியே வந்தவர்கள், ஆதறவற்ற பெண்கள், சரீர ஊணமுற்ற பெண்கள் மற்றும் வாழ்வில் சருக்கி விழுந்த பெண்கள் என்று மூவாயிரத்திற்கும் அதிகமான சிறுவர்கள் மற்றும் பெண்கள் முக்தி மிஷனில் அடைக்கலம் புகுந்தனர்.
கண்ணொளி இழந்தவர்களுக்கு பிரெய்லி எழுத்து முறையை ரமாபாய் அம்மையார் ககற்று கொடுத்தார்கள். விதவை மறுமணத்திற்காக இந்துமத பூசாரிகளின் அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுத்து பத்திரிக்கைககளில் எழுதினார கிறிஸ்தவ நற்செய்திபணியை இன்னும் உத்வேகத்துடன் அறிவித்ததினால் இன்னும் அநேக பெண்கள் கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்கள்.
இதையெல்லாம் பொறுக்கமுடியாத இந்துமத பூசாரிகள் ரமாபாயின் முக்தி மிஷனுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தார்கள். இந்துமத பூசாரிகள் ரமாபாயின் விரோதிகளாக மாறினார்கள். சமூக சீர்தீருத்தவாதியான பண்டித ரமாபாய் அம்மையாரை மிகவும் தரக்குறைவாக பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டியும், பேசியும் அவமானபடுத்தினார்கள். ஆனால் அவற்றையெல்லாம் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் ரமாபாய் சகித்துக்கொண்டார்கள்.
மேலும் இந்துமத பூசாரிகள் முக்தி மிஷனில் கட்டாய மதமாற்று நடைபெறுவதாக குற்றம்சாட்டி அங்கு அடைக்கலம் புகுந்த பெண்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களை மிரட்டி, பயமுருத்தி, வலுக்கட்டாயமாக அநேக பெண்களை வெளியேற்றினார்கள். மேலும் அவர்கள் இந்துமத பெண்கள் தேவதாசியாக இருந்தாலும் பரவாயில்லை; ஆனால் கிறிஸ்தவ மதத்திற்கு போகக்கூடாது என்று எச்சரித்து அடைக்கலம் புகுந்த பெண்களுக்கு எதிராக செயல்பட்டார்கள்.
பண்டித ரமாபாய் அவர்களின் நற்செய்தி மூலம் முக்தி மிஷனில் 1905 ம் ஆண்டு ஜுன் மாதம் 29 ம் நாள் பரிசுத்த ஆவியானவரின் வல்லமை அப்போஸ்தலர் இரண்டாம் அதிகாரத்தில் சொல்லப்பட்டபடி பரிசுத்த ஆவியானவரின் அருள்மாரி வெளிப்பட்டது
முக்தி மிஷனில் அநேக பெண்கள் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு தங்கள் பாவங்களுக்காக மனம் கசந்து அழுது பாவமன்னிப்பை பெற்றுக்கொண்டு பரிசுத்தமாய் வாழ அற்பணித்தார்கள். பலர் அந்நிய பாஷைகளில் ஒருவர் பின் ஒருவர் பேசவும் அதை முறையாக எல்லோருக்கும் புரியும்படி மற்றவர்கள் மொழிபெயர்க்கவும் செய்தார்கள். அநேகர் சொப்பனங்களையும் தரிசனங்களையும் கண்டார்கள். அநேகர் பாவ கட்டுகளில் இருந்து விடுதலை பெற்றார்கள்.
ஆகவே முக்தி மிஷனில் ஒவ்வொருவரும் அனுதினமும் வேதவாசிப்பு, ஜெப ஜீவியம், வேததியானம் மற்றும் நற்செய்திபணியை அனேக பெண்கள் குழுவாக சேர்ந்து செய்ய ஆரம்பித்தார்கள். பல பெண்கள் சேர்ந்து மாட்டுவண்டியில் பயணம்செய்து சுற்றியுள்ள கிராமங்களில் நற்செய்தியை பரப்பினார்கள். இப்டியாக முக்தி மிஷனில் ஒரு பெரிய எழுப்புதல் உண்டாயிற்று.
ரமாபாய் அம்மையாரின் முக்தி மிஷனில் இருந்து அநேக பெண்கள் நற்செய்தி பணியை மராத்திய மக்களிடம் செய்ய ஆரம்பித்தார்கள். ஆனால் வேதாகமம் மராத்திய மொழியில் மொழிபெயர்க்க படாத காரணத்தால் பண்டித ரமாபாய் அம்மையார் எபிரேய மொழியையும், கிரேக்க மொழியையும் நன்கு கற்று பரிசுத்த வேதாகமத்தை மராத்திய மொழியில் மொழிபெயர்த்து மராத்திய வேதாகமம் அச்சடிக்கப்பட்டு வெளியிட்டார்கள். ஆகவே நற்செய்திபணி இன்னும் அநேக மராத்திய மக்கள் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்கள்.
இதற்கு இடையில் ரமாபாய் அம்மையாரின் சரீரம் மிகவும் பலவீனப்பட்டது. ஆகவே முக்தி மிஷனின் பொறுப்பை 1920 ம் ஆண்டு அவருடைய மகள் மனோரமாவிடம் கொடுத்து ஓய்வுபெற்றார். ஆனால் கடவுளின் திட்டம் வேறுமாதிரியாய் இருந்தது.
1921 ம் ஆண்டு மகாராஷ்ராவில் உள்ள அகமத்நகருக்கு ஊழியத்திற்கு சென்ற மனோரமா எதிர்பாராதவிதத்தில் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார். ரமாபாய் அம்மையாரின் சரீரம் மிகவும் பலவீனமாய் கானப்பட்டபடியால் மகள் மனோரமாவின் அடக்க ஆராதனையில்கூட பங்குபெறமுடியாமல் போயிற்று.
ரமாபாய் அவர்கள் எழுதிய ஒரு புத்தகத்தில் மகள் மனோரமாவை குறித்து எழுதும்போது கர்த்தரின் சித்தத்தின்படி மனோரமா இயேசுவானரின் சமூகத்தில் இருக்கின்றாள் என்றும் நானும் சீக்கிரத்தில் பரலோகத்தில் இயேசுவின் சமூகத்தில் இருக்கின்ற என் மகளை கான்பேன். ஆகவே இதைக்குறித்து தான் வருத்தப்படுவதில்லை என்று எழுதியுள்ளார்கள்.
அடைக்கலமற்றோரின் அன்னையாய் பண்டித ரமாபாய் அம்மையார் தன்னுடைய 64 ம் வயதில் ஏப்ரல் 5, 1922 ம் ஆண்டு நித்திய அடைக்கலத்திற்குள் பிரவேசித்தார்.
பண்டித ரமாபாய் அம்மையாரின் சேவையை பாராட்டி இங்கிலாந்து தேசம் உயர்ந்த விருதினை வழங்கி கௌரவபடுத்தியது. அது போல Church of England ம் இந்தியாவில் பெண்களுக்கு செய்த சேவையை கனம்பண்ணி ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 5 ம் நாள் திருச்சபைகளில் நினைவுகூர்ந்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துகின்றது.
இந்திய அரசாங்கமும் பண்டித ரமாபாய் பெண்களுக்கெதிரான சமுதான கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்து, பெண்களுக்கு செய்த சேவையை நினைவுகூர்ந்து 1989 ம் ஆண்டு சிறப்பு தபால்தலையை வெளியிட்டு மரியாதை செய்தது.
பெண்களின் விடுதலைக்காய், மேம்பாட்டிற்காய், பெண்ணுரிமை போராளியாக உழைத்த, சமூக சீர்திருத்தவாதியாக, எழுத்தறிவு இயக்கத்தின் முன்னோடியாக விளங்கிய பண்டித ரமாபாய் அம்மையார் நவீன இந்தியாவின் சிற்பி ஆவார்.
அடிக்கடி ரமாபாய் அம்மையார் கூறிய வாசகம்: என்னைப் பயன்படுத்தியவர், உங்களையும் பயன்படுத்த வல்லவர் என்பதே.
இந்த பண்டித ரமாபாய் அம்மையாரைப்போல நம்முடைய திருச்சபைகளில் இருந்து அநேக பெண்கள் எழும்பிட ஜெபிப்போம்.
இதை வாசிக்கிற அன்பு சகோதரிகளே, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கிக்கொண்டு இருந்தபோது, எல்லா ஆண்களும் அவரைவிட்டுவிட்டு ஓடிப்போனார்கள். ஆகவே உயித்தெழுந்த இயேசு கிறிஸ்து முதன் முதலில் ஆண்களுக்கு தன்னை வெளிப்படுத்தாமல், ஒரு பெண்ணுக்கு தம்மை வெளிப்படுத்தி, அவள் மூலமாக கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் செய்தி ஆண்களுக்கும் மற்ற எல்லோருக்கும் அறிவிக்கப்பட்டது. இயேசுவானவர் தன்னை முதன் முதலில் மேசியா என்று ஒரு பெண்ணுக்குத்தான் வெளிப்படுத்தினார். ஆதி திருச்சபையில் முதல் 500 ஆண்டுகளுக்குள் பல பெண்கள் இறையியலாளர்களாக (Theologians), சுவிசேஷகர்களாக (Evangelists), அப்போஸ்தலர்களாக (Apostles), தீர்க்கதரிசிகளாக (Prophetess), உதவி ஆயர்களாக (Deaconess), ஆயர்களாக (Presbyters) மற்றும் பேராயர்களாக (Bishops) கிறிஸ்துவுக்கு சிறந்த சேனாதிபதிகளாக தங்களை அற்பணித்து எங்கோ ஒரு மூலையில் எருசலேமுக்குள் இருந்த கிறிஸ்தவத்தை உலக மதமாக மாற்றினார்கள். இதில் பெண்களின் பங்கு மகத்தானது, அளவிடப்பபட முடியாது.
பிற்காலத்தில் கிபி 5 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவம், ரோமானிய மதமாக அங்கிகரிக்கப்பட்டதால், ஆணாதிக்கம் நிறைந்த ரோம கலாச்சாரம் கிறிஸ் தவத்தில் ஊடுருவி, 1 கொரி 14:34-36, 1 தீமோ 2:11-15, 1 கொரி 11:3, எபே 5: 22-24 ஆகிய வசனங்களுக்கு தவறான வியாக்கியானங்களை கொடுத்து திருச்சபையில் 50% இருக்கும் பெண்களையும், பெண்களின் திறமைகளையும் வெளியே கொண்டுவரவிடாமல், பெண்களின் வாயை கடந்த 1500 ஆண்டுகளாக அடைத்துவிட்டது.
21 ம் நூற்றாண்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகம் எவ்வளவோ மாறிக்கொண்டு இருக்கிறது. ஆனால் ஆணாதிக்கம் நிறைந்த இன்றைய கிறிஸ்தவ திருச்சபை தலைமைத்துவம் பெண்களை உதவி ஆயர்களாக, ஆயர்களாக மற்றும் பேராயர்களாக அங்கிகரிக்க மறுக்கிறது. கடவுளின் சாயலில் சமமாக படைக்கப்பட்ட பெண்களை ஏற்றுக்கொள்வை மறுக்கிறது. இது கடவுளுக்கு எதிர்த்து நிற்பதற்கு சமம் என்பதை உணராமல் இருக்கிறது.
ஆகவே பெண்களே, ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் கட்டிடமாகிய திருச்சபை உங்களை அங்கிகரிக்க மறுக்கலாம். ஆனால் திருச்சபை என்பது கட்டிடம் அல்ல, இது விசுவாசிகளின் கூடுகை என்பதை மறந்து போகாதேயுங்கள். இதற்கு என்று தனி கட்டிடம் தேவையில்லை. ஆகவே உங்கள் வீடுகளே திருச்சபையாக மாறட்டும். நீங்கள் படிக்கிற பள்ளிகள் மற்றும் கல்லூரி நண்பர்களின் ஐக்கியமே திருச்சபையாக மாறட்டும். நீங்கள் வேலைசெய்யும் இடங்களில் இருக்கும் நண்பர்களின் ஐக்கியமே திருச்சபையாக மாறட்டும்.
இந்தியாவில் சுமார் 6,75,982 கிராமங்கள் உண்டு. இதில் சுமார் 1,12,345 கிராமங்களில் மாத்திரம் ஆலயங்கள் இருக்கிறது. தெபோராளாகிய நீ எழும்புமளவும், இந்திய கிராமங்கள் பாழாய் போய்க்கொண்டுதான் இருக்கபோகிறது (நியா 5:7) . ஆகவே பெண்களின் வாழ்கையை ஒளியேற்றுவதற்காக தன்னையே கொடுத்த இயேசு கிறிஸ்துவுக்கு ஏதாவது வகையில் நற்செய்திபணி செய். உன் மூலமாக இயேசு கிறிஸ்துவின் இராஜியம் நீ இருக்கும் இடத்தில் கட்டப்படுவதாக. ஆமென்.
==================
The Daughters of the Church
Pandita Ramabai (1858-1922)
=====================
Ramabai Life: Ramabai was born on April 23, 1858 in Karnataka. By the age of twelve Pandita had memorized 18,000 verses of Sanskrit, and had acquired an understanding of eight other languages. In 1878, Calcutta University conferred on her the title of Pandita, as well as the highest title of Saraswati in recognition of her interpretations of various Sanskrit works. Her childhood was full of hardships, she lost her parents early and her husband expired within two years of marriage. She had also to educate her only daughter, Manorama Bai.
Ramabai’s encounter with Christ: In Poona, Ramabai also came across Rev. Nehemiah Goreh, who helped guide her in her continued study of the New Testament. Like Ramabai, Goreh was also a Brahman and a Sanskrit scholar. In 1883 Ramabai received a scholarship to train as a teacher in England. She landed in England in 1883 and was first taken in by the Sisters of Wantage. During her wanderings Pandita attended revival meetings, and there she learned of Christ. The love that these sisters showed toward suffering women at a rescue home they ran left a deep impression on Ramabai. She realized that "Christ was truly the Divine Savior He claimed to be, and no one but He could transform and uplift the downtrodden womanhood of India and of every land” and she and her daughter were baptized in the Wantage Parish Church on September 29, 1883.
Ramabai’s America Visit: In 1887, she went to America also lectured for three years on the plight of women and child widows in India; and she published an influential book, The High Caste Hindu. In that, Ramabai sought to expose the oppression of women in Hindu-dominated India. She "showed" the darkest aspects of the life of Hindu women, including child brides and child widows, sought to expose the oppression of women in Hindu-dominated British India. A group in Boston people came forward to run a school for child-widows in India.
Mukti Mission/Social Reformation: By April 1889 she had started a home-cum-school in Bombay, which she named as 'Sharda Sadan', which also provided housing, education, vocational training and medical services for many needy groups including widows, orphans and the blind. This was the first home for widows in Maharashtra, as Ramabai was a Christian and the school was funded by missionaries, local citizens viewed it with extreme caution and wariness. Ramabai moved to Poona, name changed to Mukti Sadan.
Mukti Mission: In 1889, Ramabai established the Mukti Mission in Pune, as a refuge and a Gospel witness for young widows deserted and abused by their families; she also established Krupa Sadan, a home for "fallen” women, who had been cast out of society. Ramabai founded Arya Mahila Samaj, and the purpose of the society was to promote the cause of women's education and deliverance from the oppression of child marriage.
Opposition in Ministey: The detractors charged that Ramabai was using the school as a means to convert the girls to Christianity. Even one Hindu reformer pronounced that it was better for a girl to be a Devadasi (a Hindu temple prostitute) than to become a Christian. In 1894, heavy persecution and "Anonymous threats to her life reached Ramabai, News papers abused her and even scurrilous words were used but she never frightened.
The Revival at Mukti: In the history of the church, there are times when the Holy Spirit moves with extraordinary power among God's people. Pandita and 550 women prayed for such a movement to come to Mukti. On the evening of June 29, 1906, Ramabai walked into one of the prayer meetings and found a roomful of women on their knees weeping, praying, confessing their sins and calling upon God to empower them with the Holy Spirit. Some saw visions and experienced the power of God and things that are too deep to be described. There were daily Bible studies, prayer meetings, and evangelistic services held at Mukti during this time of revival.
Ramabai’s Last Work: She had for a long time been dissatisfied with the available Marathi translation of the Bible. In the last 15 years of her life, she mastered Greek and Hebrew to translate the Bible into Marathi. She began the work of translating the Bible in 1904 and completed the whole Bible only a few months before her death in 1922.
Final days of Ramabai: In 1920 Ramabai’s body began to flag and she designated her daughter as the one who would take over the ministry of Mukti Mission but God had other plans. On July 24, 1921, God called Manoramabai home to glory at the age of forty though the loss was heavy, Ramabai was too ill to attend her daughter’s funeral. She firmly believed she would soon see her daughter. Nine months later, Ramabai, who had been suffering from septic bronchitis, went to be with her Lord… and her daughter. She died on April 5, 1922, a few weeks before her 64th birthday.
The Earthly reward for Ramabai: Pandita Ramabai was honored by British Government for community service. She is honored with a feast day on the liturgical calendar of the Episcopal Church (USA) on April 5. On 26 October 1989, in recognition of her contribution to the advancement of Indian women, the Government of India issued a commemorative stamp.
Legend: The woman who began reforming India's attitude towards women was Pandita Ramabai Sarswati--a builder of modem India. Pandita Ramabai is the Indian woman of the Millennium. Let us continue to pray that God will raise more women social reformers, evangelists, preachers, and priests in India.
Dear beloved readers, as you know that when Jesus was hanging on the Cross, all the male disciples left Him alone and only the women were under the Cross. Because of this the resurrected Jesus Christ, revealed Himself first to the woman and through her the mesaage of resurrected Christ passed on to men and others. Jesus first revealed Himself as Messiah to the woman. In the early church for a first 500 years of the history of Christianity, many women served as theologians, evangelists, apostles, prophetess, deaconess, presbyters and Bishops. The women made the local Christianity into an international level. So the role of women is highly regarded in the early church.
When Christianity become the official religion of the Roman empire in the 5th century, the male dominated Roman culture influenced Christianity. Through the misinterpretations of 1 Cor 14:34-36, 1 Tim 2:11-15, 1 Cor 11:3, Eph 5:22-24, the male dominated Church leaders silenced the voices of women in the Church for the past 1500 years.
We are living in the 21st Century and the things are rapidly changing, but the church leaders stereotyped women and hesitated to ordain them as Deacons, Presbyters and Bishops. God created men and women in His own Image and the Church leaders fail to accept this reality and it is totally against God's plan in salvation History.
As we are living in India, we have 1,12,345 churches out of 6,75,982 villeges. Until and unless you rise as Deborah, as a mother of India, the villagers will be ceased. Jesus gave His life for the empowerment of women. So take this as a challege and do some thing for the extension of His Kingdom wherever you are. The Church may not recognize you but remember that the building is not the church but it is the fellowship of believers. So let your home be a place for your church, you can share about Jesus among your friends in schools, colleges and universities. You can share about Jesus in your work places among your friends. It is my prayer that you can be a channel of blessings to many others for His Glory. Amen.
Thanks for using my website. Post your comments on this